பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படை நேரான சமயக் குறிப்பூடையது. அரசரைப்பாடும் வழக்கே நிலவிய சமூக அமைப்பில் புறப்பாடலொன்று, அதுவும் நெடும்பாடல் தெய்வத் தைப் பற்றியதாக அமைந்துள்ளது புதுமையேயாகும். மூவேந்தரையும் குறுநில மன்னரையும் பாடிப்பாடி மனம் வெறுத்து இனிமானுடம் பாடுவதில்லையென உறுதி பூண்டாரா? தோலா நல்லிசை நால்வரையும் நெடுவேள் மார்பையும் முன்பே பாடிய புலவர், முருகனின் தலைமைத் தன்மையை முருகாற்றுப்படையிற் பாடுகின்றார். நக்கீரர் சங்க நெறியில் தோய்ந்தவராதலின் , முருகனைக் குறித்த சமயப்பாடலாகப் பாடாமல் ஆற்றுப்படை நெறியமைந்த சங்கப்பாடலாகப் பாடுகின்றார். அகநானூற்றில் நக்கீரர் தாம் பாடிய பதினேழு பாடல்களில் பதினைந்தில் வரலாற்றுக்குறிப்புகள் இயையுமாறு பாடியுள்ளார். வரலாறு பாடிய நக்கீரர் முருகாற்றுப்படையில் புராணத்தை வரலாறு போலப் பாடுகின்றார்.
மண்டமர்க் கடந்தநின் வென்றா டகலத்துப்
பரிசிலர்த் தாங்கு முருகெழு தெடு$வ௭ள் 54
என்று வீரமும் கொடையுமுடைய ஓர் அரசனைப் பாடுவது போன்றே பாடாண் திணைப் பண்பு பொருந்தப்பாடுவர்-ஃ திருமுருகாற்றுப்படை இருவேறு சமயதெறிகளைக் காட்டுகின்றது, மால்வரை நிவந்த சேணுயர் பரங்குன்றில் கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்புடைய சூரரமகளிர் கோழியோங்கிய வென்றடுவிறற் கொடி வாழிய பெரிதென்றேத்தி வழிபடுகின்றனர்,
திருவாவினன்குடியில் காமமொடு கடுஞ்சினங் கடிந்த முனிவரும் யாழிசைவல்ல கந்தருவரும், உருத்திரனும் திருமாலும் இந்திரனும் ஏனைத் : தலைமைத் தேவரும் வந்து வழிபடுகின்றனர், திருவேரகத்.தில் மாணவ நிலையினரான இருபிறப்டிடை அந்தணர் ஆறெழுத்து மந்திர மோதி வழிபடுகின்றனர். இவ்வாறு தெய்வமும், நேதவரும்; முனிவரும், அந்தணரும் இப்படை வீடுகளில் * வழிபாடு செய்ய, எஞ்சிய இரண்டு படைவீடுகளான குன்றுதோறாடலிலும், பழமுதிர்சோலையிலும் வேறுவகை வழிபாடு நிகழ்கின்றது. பரங்குன்றும், அலைவாயும் ஆவினன்குடியும், ஏரகமும் ககாயிலைமந்த இடங்கள். குன்றுதோறாடலும், பழமுதிர்சோலையும் குறிப்பிட்ட தலங்கள் அல்ல. குன்றுகளிலும் சோலைகளிலும் எளிய குறவர் மக்கள் தமக்கு வேண்டியாங்கு வழிபாட்டுக்களம் அைமத்துக் கொண்டு வழிபடுவர். முருகு மெய்ந்நிறீஇய வேலன் வெறியாட்டுக் களங்களில் குறவரோடு சேர்ந்து குரவையாடுவான். குறவர் மதியறுப்பர்; கிடாய்க்குருதியில் தோய்ந்த வெள்ளரிசியும் தினையும் பரப்புவர்; மஞ்சளும் சந்தனமும் தெளிப்பர். மாலை தாற்றுவர்; நறும் புகையெடுத்துக் குறிஞ்சி பாடுவர், முருகனை வேண்டுநர் வேண்டியாங்கெய்தி வழிபடத் தடையில்லை. எவ்வாறு வழிபடினும் அவன் அருள் செய்வான் என்பது நக்கீரர் வற்புறுத்திக் கூறும் கருத்தாகும்.
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வல ரேத்த மேவரு நிலையினும்
வேலன் ஹைஇய வெறியயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் ,கந்துடை நிலையினும்! * ?9
யாண்டாண்டாயினும். வழிபாடு நிகழ்த்த ற்குசியன் முருகன் என்ற செய்தியை நக்கீரர் உரைப்பர். வைதீக நெறிக்கும், பண்டைத் தமிழ்” நெறிக்குமாக ஒரு: பொதுமையை இப்பாட்டில் நக்கீரர் 'உருவாக்கியுள்ளார். கோயிற்றெய்வமாகவும் , சந்தித் தெய்வமாகவும் முருகன்: விளங்குதலைக் காட்டுகிறார், குற மகளிர்க்கும் அரமகளிர்க்கும் முருகன் அருள் செயலை விளக்குகின்றார். வழிபர்ட்டு' ஜெறிகளாலும் இடங்களாலும். பிள ந்து போகாத ஒரு “சமூக. ஒருமையை அவர் ,அவாவியுள்ளார். வழிபாட்டு நெறியில் எதுவும் மேலது கீழது இல்லை: என்பது அவர் முடிவு. இருவேறு வகையில் இயலும் வழிபாடு இருடவறு நாகரிகத்தின் அடையாள மாகும். இதனை மேலும் தெளிவாகப் பெரியபுராணத்தில் அமைந்த கண்ணப்பர் வரலாற்றில் காணலாம்.