தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருமுருகாற்றுப்படை


Guru

Status: Offline
Posts: 1049
Date:
திருமுருகாற்றுப்படை
Permalink  
 


பத்துப்பாட்டுள்திருமுருகாற்றுப்படை நேரான சமயக்குறிப்பூடையது. அரசரைப்பாடும்வழக்கே நிலவிய சமூக அமைப்பில்புறப்பாடலொன்று, அதுவும்நெடும்பாடல்தெய்வத்தைப்பற்றியதாக அமைந்துள்ளது புதுமையேயாகும்‌. மூவேந்தரையும்குறுநில மன்னரையும்பாடிப்பாடி மனம்வெறுத்து இனிமானுடம்பாடுவதில்லையென உறுதி பூண்டாரா? தோலா நல்லிசை நால்வரையும்நெடுவேள்மார்பையும்முன்பே பாடிய புலவர்‌, முருகனின்தலைமைத்தன்மையை முருகாற்றுப்படையிற்பாடுகின்றார்‌. நக்கீரர்சங்க நெறியில்தோய்ந்தவராதலின்‌ , முருகனைக்குறித்த சமயப்பாடலாகப்பாடாமல்ஆற்றுப்படை நெறியமைந்த சங்கப்பாடலாகப்பாடுகின்றார்‌. அகநானூற்றில்நக்கீரர்தாம்பாடிய பதினேழு பாடல்களில்பதினைந்தில்வரலாற்றுக்குறிப்புகள்இயையுமாறு பாடியுள்ளார்‌. வரலாறு பாடிய நக்கீரர்முருகாற்றுப்படையில்புராணத்தை வரலாறு போலப்பாடுகின்றார்‌.

மண்டமர்க்கடந்தநின்வென்றா டகலத்துப்

பரிசிலர்த்தாங்கு முருகெழு தெடு$வ௭ள்‌ 54

என்று வீரமும்கொடையுமுடைய ஓர்அரசனைப்பாடுவது போன்றே பாடாண்திணைப்பண்பு பொருந்தப்பாடுவர்‌-ஃ திருமுருகாற்றுப்படை இருவேறு சமயதெறிகளைக்காட்டுகின்றது, மால்வரை நிவந்த சேணுயர்பரங்குன்றில்கைபுனைந்தியற்றாக்கவின்பெறு வனப்புடைய சூரரமகளிர்கோழியோங்கிய வென்றடுவிறற்கொடி வாழிய பெரிதென்றேத்தி வழிபடுகின்றனர்‌,

திருவாவினன்குடியில்காமமொடு கடுஞ்சினங்கடிந்த முனிவரும்யாழிசைவல்ல கந்தருவரும்‌, உருத்திரனும்திருமாலும்இந்திரனும்ஏனைத்‌ : தலைமைத்தேவரும்வந்து வழிபடுகின்றனர்‌, திருவேரகத்‌.தில்மாணவ நிலையினரான இருபிறப்டிடை அந்தணர்ஆறெழுத்து மந்திர மோதி வழிபடுகின்றனர்‌. இவ்வாறு தெய்வமும்‌, நேதவரும்‌; முனிவரும்‌, அந்தணரும்இப்படை வீடுகளில்‌ * வழிபாடு செய்ய, எஞ்சிய இரண்டு படைவீடுகளான குன்றுதோறாடலிலும்‌, பழமுதிர்சோலையிலும்வேறுவகை வழிபாடு நிகழ்கின்றது. பரங்குன்றும்‌, அலைவாயும்ஆவினன்குடியும்‌, ஏரகமும்ககாயிலைமந்த இடங்கள்‌. குன்றுதோறாடலும்‌, பழமுதிர்சோலையும்குறிப்பிட்ட தலங்கள்அல்ல. குன்றுகளிலும்சோலைகளிலும்எளிய குறவர்மக்கள்தமக்கு வேண்டியாங்கு வழிபாட்டுக்களம்அைமத்துக்கொண்டு வழிபடுவர்‌. முருகு மெய்ந்நிறீஇய வேலன்வெறியாட்டுக்களங்களில்குறவரோடு சேர்ந்து குரவையாடுவான்‌. குறவர்மதியறுப்பர்‌; கிடாய்க்குருதியில்தோய்ந்த வெள்ளரிசியும்தினையும்பரப்புவர்‌; மஞ்சளும்சந்தனமும்தெளிப்பர்‌. மாலை தாற்றுவர்‌; நறும்புகையெடுத்துக்குறிஞ்சி பாடுவர்‌, முருகனை வேண்டுநர்வேண்டியாங்கெய்தி வழிபடத்தடையில்லை. எவ்வாறு வழிபடினும்அவன்அருள்செய்வான்என்பது நக்கீரர்வற்புறுத்திக்கூறும்கருத்தாகும்‌.

ஊரூர்கொண்ட சீர்கெழு விழவினும்

ஆர்வல ரேத்த மேவரு நிலையினும்

வேலன்ஹைஇய வெறியயர்களனும்

காடும்காவும்கவின்பெறு துருத்தியும்

யாறும்குளனும்வேறுபல்வைப்பும்

சதுக்கமும்சந்தியும்புதுப்பூங்கடம்பும்

மன்றமும்பொதியிலும்‌ ,கந்துடை நிலையினும்‌! * ?9

 யாண்டாண்டாயினும்‌. வழிபாடு நிகழ்த்த ற்குசியன்முருகன்என்ற செய்தியை நக்கீரர்உரைப்பர்‌. வைதீக நெறிக்கும்‌, பண்டைத்தமிழ்‌” நெறிக்குமாக ஒரு: பொதுமையை இப்பாட்டில்நக்கீரர்‌ 'உருவாக்கியுள்ளார்‌. கோயிற்றெய்வமாகவும்‌ , சந்தித்தெய்வமாகவும்முருகன்‌: விளங்குதலைக்காட்டுகிறார்‌, குற மகளிர்க்கும்அரமகளிர்க்கும்முருகன்அருள்செயலை விளக்குகின்றார்‌. வழிபர்ட்டு' ஜெறிகளாலும்இடங்களாலும்‌. பிள ந்து போகாத ஒரு சமூக. ஒருமையை அவர்‌ ,அவாவியுள்ளார்‌. வழிபாட்டு நெறியில்எதுவும்மேலது கீழது இல்லை: என்பது அவர்முடிவு. இருவேறு வகையில்இயலும்வழிபாடு இருடவறு நாகரிகத்தின்அடையாள மாகும்‌. இதனை மேலும்தெளிவாகப்பெரியபுராணத்தில்அமைந்த கண்ணப்பர்வரலாற்றில்காணலாம்‌. 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard