முல்லைப்பாட்டு பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை அரும் கடி மூதூர் மருங்கில் போகி யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது 10 பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச் சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறு துயர் அலமரல் நோக்கி ஆய்_மகள் பெரிய மழையைப் பெய்த சிறு(பொழுதாகிய) துன்பமூட்டும் மாலைக் காலத்து அரிய காவலையுடைய பழைய ஊரின் எல்லையில் போய், யாழின் ஓசையினையுடைய கூட்டமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி, நெல்லுடன் உழக்கில் கொண்டுபோன நறிய பூக்களையுடைய முல்லையின்
அரும்புகள் அவிழ்ந்த பூவைத் தூவி, கைகூப்பி வணங்கி, 10 பெரிய முதிர்ந்த பெண்டிர் நற்சொல் கேட்டு நிற்க - சிறிய தாம்புக்கயிற்றால் (காலில்)கட்டப்பட்ட பச்சிளம் கன் றின் மிக்க துயரால் மனம் கலங்கிநின்ற நிலையைப் பார்த்து, இடைமகள்
கொடும் கோல் கோவலர் பின் நின்று உய்த்தர 15 இன்னே வருகுவர் தாயர் என்போள் நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால் நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர் முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து கடுமையான கோல் (உடைய)இடையர் பின்னே நின்று செலுத்துதலைச் செய்ய 15 “இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவர் (உம்)தாயர்” என்று கூறுகின்றோளுடைய நன்மையான நற்சொல் (நாங்கள்)கேட்டோம், அதனால் நல்லதே, நல்லவர் நற்சொல், பகைவர் மண்ணை வெற்றிகொண்டு பெற்ற திறையினையுடையோராய், (தமது)வினையை முடித்து வருவது (நம்)தலைவர்க்கு நேர்வது (உறுதி), நீ நின் 20
கல்லா இளைஞர் கவளம் கைப்பக் கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர் ஓடா வல் வில் தூணி நாற்றிக் கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கைப் 40 பூத் தலைக் குந்தம் குத்திக் கிடுகு நிரைத்து (வேறொரு தொழிலைக்)கல்லாத இளைஞர் கவளத்தை ஊட்டிவிட - (ஆடையைக்)காவிக்கல்லைத் தோய்த்து உடுத்திய, விரதங்களையுடைய அந்தணன் (தன்)முக்கோலில் (அந்த உடையினை)இட்டுவைத்த தன்மையை ஒக்க, (அறத்தால் பொருகின்ற)நல்ல போரில் நழுவி விழாத வலிய (ஊன்றப்பட்ட)வில்லில் அம்புக்கூடுகளைத் தூக்கி