தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முல்லைப்பாட்டில்‌ சமயச்‌ செய்திகள்‌


Guru

Status: Offline
Posts: 1049
Date:
முல்லைப்பாட்டில்‌ சமயச்‌ செய்திகள்‌
Permalink  
 


முல்லைப்பாட்டில்சமயச்செய்திகள்நான்கு காணப்படுகின்றன. நெல்லும்மலரும்தூவி நற்சொல்லாகிய விரிச்சி கேட்கும்வழக்கம்இங்கு உரைக்கப்பெறுகின்றது.?6 ஊர்க்கு வெளியே சென்று இச்செொல்லேலோர்தல்நிகழுமென்று அறியப்படுகிறது. இஃது இனக்குழு மக்கள்வழக்கமாயிருந்தது பின்னாளில்சமயக்கூறாகியிருக்கிறது. இவ்விரிச்சி நல்லோர்வாய்ப்புள்‌”? எனப்படும்‌.5! முக்கோலந்தணன்காலிக்கல்லில்தோய்த்துடுத்த உடையினன்‌; அவ்வுடையை அவன்முக்கோலில்இட்டு வைப்பான்என்னும்செய்தியும்உணர்த்தப்படுகின்றது. இவனைப்‌ *படிவப்பார்ப்பான்‌! என்று குறிப்பிடுகின்றனர்‌.5: படிவம்என்பது தோன்பு எனப்பொருள்தரும்சொல்லாகும்‌.  192



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

முல்லைப்பாட்டு
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை
அரும் கடி மூதூர் மருங்கில் போகி
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது 10
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச்
சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி ஆய்_மகள்
பெரிய மழையைப் பெய்த சிறு(பொழுதாகிய) துன்பமூட்டும் மாலைக் காலத்து
அரிய காவலையுடைய பழைய ஊரின் எல்லையில் போய்,
யாழின் ஓசையினையுடைய கூட்டமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி, நெல்லுடன்
உழக்கில் கொண்டுபோன நறிய பூக்களையுடைய முல்லையின்

அரும்புகள் அவிழ்ந்த பூவைத் தூவி, கைகூப்பி வணங்கி, 10
பெரிய முதிர்ந்த பெண்டிர் நற்சொல் கேட்டு நிற்க -
சிறிய தாம்புக்கயிற்றால் (காலில்)கட்டப்பட்ட பச்சிளம் கன் றின்
மிக்க துயரால் மனம் கலங்கிநின்ற நிலையைப் பார்த்து, இடைமகள்


கொடும் கோல் கோவலர் பின் நின்று உய்த்தர 15
இன்னே வருகுவர் தாயர் என்போள்
நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
கடுமையான கோல் (உடைய)இடையர் பின்னே நின்று செலுத்துதலைச் செய்ய 15
“இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவர் (உம்)தாயர்” என்று கூறுகின்றோளுடைய
நன்மையான நற்சொல் (நாங்கள்)கேட்டோம், அதனால்
நல்லதே, நல்லவர் நற்சொல், பகைவர்
மண்ணை வெற்றிகொண்டு பெற்ற திறையினையுடையோராய், (தமது)வினையை முடித்து
வருவது (நம்)தலைவர்க்கு நேர்வது (உறுதி), நீ நின் 20

கல்லா இளைஞர் கவளம் கைப்பக்
கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர்
ஓடா வல் வில் தூணி நாற்றிக்
கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கைப் 40
பூத் தலைக் குந்தம் குத்திக் கிடுகு நிரைத்து
(வேறொரு தொழிலைக்)கல்லாத இளைஞர் கவளத்தை ஊட்டிவிட -
(ஆடையைக்)காவிக்கல்லைத் தோய்த்து உடுத்திய, விரதங்களையுடைய அந்தணன்
(தன்)முக்கோலில் (அந்த உடையினை)இட்டுவைத்த தன்மையை ஒக்க, (அறத்தால் பொருகின்ற)நல்ல போரில்
நழுவி விழாத வலிய (ஊன்றப்பட்ட)வில்லில் அம்புக்கூடுகளைத் தூக்கி

கூடமாக(க் கால்களை) நட்டுக் கயிற்றை வலித்துக்கட்டின (கூடாரங்களான)இருப்பின்கண் 40
பூத்தொழிலைத் தலையிலேயுடைய எறியீட்டிகளை ஊன்றி, கேடயங்களை வரிசையாக வைத்து,


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard