தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும்


Guru

Status: Offline
Posts: 1049
Date:
திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும்
Permalink  
 


திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும்

தமிழ் மக்கள து வாழ்வியற் கூறுகளாகிய ஒழுக்கநெறி, கலை, நாகரிகம், பண்பாடு, மெய்ந்நூற்கொள்கை என்பன பிற மொழியாளரிடமிருந்து பிரித்துணர்தற்குரிய தனிச்சிறப்பு வாய்ந்தன என்பது, தொல்காப்பியம், பத்துப்பாட்டுப்பாடல்,எட்டுத்தொகை முதலிய தொன்னூல்களால் நன்குணரப்படும். ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திலும் அவர்க்குப் பின் கடைச்சங்க காலத்திலும் தமிழகத்திற் குடியேறிய வடமொழியாளர் தொடர்பினால் அன்னோர் தம் வேதநெறியானது, தமிழ்வேந்தர்களது ஆதரவுடன் தமிழ்நாட்டில் வேரூன்றித் தமிழர் சமுதாயத்திலும் இடம்பெற்று வளர்வதாயிற்று என்பதற்குரிய குறிப்புகளும் தமிழ்த் தொன்னூல்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. வடநாட்டில் வடமொழியாளர் மேற்கொண்ட வேத வேள்வி பற்றிய வைதிகநெறியினை யெகிர்த்து அந்நாட்டில் தோன்றிய புத்த சமண சமயங்களின் தாக்குதலால் வைதிகநெறியின் வளர்ச்சி தடைப்பட் டமையாலும் வேதத்தையே பற்றுக்கோடாகக் கொண்டுள்ள அந்நெறியானது தமிழகத்தில் மக்களது ஆதரவின்றித் தனித்துப் படர்தற்குரிய பற்றுக் கோடில்லாமை யாலும் தமிழ்மக்களால்போற்றப்பெறும் தொன்மைவாய்ந்த கடவுட் கொள்கையாகிய சிவநெறியின் சார்பினைப் பெற்றுத் - தமிழகத்தில் நன்கு வேரூன்றி நிலைபெறுவதாயிற்று. இந்நிலையில் வைஇக நெறிக்கு மாறாக வேதவேள்விகளை எதிர்க்கும் நோக்குடன் வடநாட்டில் தோன்றி வளர்ந்த சமண பெளத்த சமயங்களும் சங்ககாலத்தில் தமிழகத்தில் நுழைந்து தமிழ்மக்களின் நன்மதுிப்பினைப் பெற்றுத் தமிழகத்தில் நிலைகொள்வனவாயின. இவ்வாறு ஒன்றோடொன்று முரண்பாடுடையனவாகிய பல்வேறு சமயங்களும் தமிழகத்தில் இடம்பெற்றுப் பரவிவரும் சூழ்நிலையிலேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் தமிழகத்தில் தோன்றினார். தமிழ்நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத அயலவர் நுழைவினாற் பரவி வளரும் பல்வேறு சமயக்கொள்கைகளும் தம்முள் முரண்பட்டு மோகடுத் தமிழகத்தின் பொதுவாழ்விலே பல்வேறு குழப்பங்களை உண்டுபண்ணாதபடி பல்வேறு சயங்களின் :' தாக்குதல்களால் விளையும் முரண்பாடுகளை முன்னுணர்ந்து விலக்கக்கருதிய இருவள்ளுவர் எல்லாச் சமயத்தாரும் நன்றென விரும்பியேற்றுக்கொள்ளும் வண்ணம் உலகமக்கள் அனைவரும் அன்பினால் ஒன்று பட்டு வாழ்தற்கு இன்றியமையாத மெய்ம்மையான ஒழுக்கநெறியினை அறிவுறுத்தும் முறையில் வாழ்வியல் நூலாகிய திருக்குறளை இயற்றியருளினார் என்பது திருக்குறளைப்பற்றிய வரலாறாகும்.

மக்களது நல்வாழ்வுக்கு உறுதியளிப்பனவாக உயர்ந்தோரால் உணர்த்தப் பெற்றவை அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றுமேயாகும். மக்கட்குலத்தார் தமது வாழ்க்கைக் கடமைகளில் ஈடுபட்டு உழைக்கும்போது தம்மாற் பிறர்க்கு எத்தகைய தீங்கும் நேராதபடி தம்முடைய மனம் மொழிமெய் என்னும் முக்கரணங்களையும் ஒரு நெறிப்பட செலுத்தும் நல்லொழுக்க நெறியே “அறம்” எனப்படும். இத்தகைய அறநெறியில் நின்று பொருளைச் சேர்த்து அப்பொருளைக்கொண்டு இன்பம் நுகர்தலே நன்றுந்தீ தும் பகுத்துணரும் மனவுணர்வுடைய நன்மக்களின் வாழ்க்கை முறையாகும். இம்முறையினை “மூன்றன்பகுகு'் என்ற பெயராற் குறிப்பிடுவர் தொல்காப்பியர். தொல்காப்பியனார் குறித்தவண்ணம் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று பகுதிகளாக அமைந்த மக்களது நல்வாழ்க்கை முறையினை மூன்று பால்களாக விளக்கும் நோக்குடன் திருவள்ளுவர் அருளிச்செய்த அறநூல் இருக்குறள். அறிவுநலம் வாய்ந்த புலவர் பெரு மக்களால் இயற்றப்பெறும் இலக்கியங்கள் யாவும் வாழ்க்கைக்கு அடி.ப்படை யாகிய அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப்பொருள்கள் மூன்றனையும்தம்மகத்தே கொண்டு அமைதல் வேண்டும் என்பது தமிழ் இலக்கிய ர [॥ ரூம். எல்லாவுயிர்களாலும் விரும்பி நுகரப்படுவது இன்பம். இன்ப நுகர்ச்சிக்குச் சாதனமாக மக்களால் ஈட்டப்படுவது பொருள். அவ்வாறு பொருளை யீட்டுங்கால் பிறவுயிர்க்குத் தங்கு நேராதவாறு மாசற்ற மனத்தாலும் $மையில்லாத சொல்லாலும் செயலாலும்பொருள் செய்தொழுகும் நெறிமுறையே உயர்ந்தோரால் அறம் எனச் இறப்பித் துரைக்கப்படும். ஏனைய பொருளும் இன்பமும் போல் இவ்வுலக வாழ்வில் மட்டும் பயன்தருமளவில் நின்று விடாமல் பிறப்புத்தோறும் உயிரொடு தொடர்ந்து சென்று இம்மை மறுமை வீடு என்னும் மும்மை நலங்களையும் ஒருங்கே தருதற்குரிய ஆற்றல் வாய்ந்தது அறம் ஒன்றேயாகும். எனவே பொருள் இன்பம் என்னும் இரண்டினும் அறமே வலியுடையது என்பதனைத் திருக்குறளில் அறன்வலியுறுத்தல் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் தெளிவாக வலியுறுத்தியுள்ளார். தமிழ் மூவேந்தருள் சோழன் நலங்கிள்ளியின் வெண்கொற்றக்குடையானது சேரன் பாண்டி யன் என்னும் ஏனையிருவர் குடைகளினும் முற்பட்டு . உயர்ந்து விளங்கும் தோற்றத்திற்கு, அறம் பொருள் இன்பம் என்னும் உறுதஇப்பொருள் மூன்றனுள் ஏனைப்பொருளும் இன்பமும் பிற்பட அறம் ஒன்றே முற்பட்டு விளக்குந் இறத்தினை உவமையாக எடுத்துக்காட்டும் முறையில் அமைந்தது,
“சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படுஉந் தோற்றம் போல
இருகுடை பிற்பட ஓங்கிய வொருகுடை
உருகெழுமதியின் நிவந்து சேண் விளங்க” (புறம். 31) எனவரும் புறப்பாடலாகும். அறமுதலாக எண்ணப்படும் இறுதிப்பொருள் மூன்றனுள் மன்னுயிர்களுக்கு நிலைபெற்ற ஆக்கத்தை வழங்கவல்ல வன்மையுடையது அறம் ஒன் றுமே என்பதும் ஏனைய பொருளும் இனபமும் முற்கூறிய அறத்தின் துணையினைக்கொண்டு பயளளித்தற் குரியன என்பதும் மேற்குறித்த கோவூர்கிழார் வாய்மொழியால் நன்கு புலனாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
RE: திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும்
Permalink  
 


மக்களது மனத்திற்படிந்துள்ள அழுக்காறு, அவா, வெகுளி என்னும் குற்றங்களையும் இன்னாச்சொல் முதலிய மொழிக்குற்றங்களையும் அகற்றிய நிலையில் நிகழ்வதே மெய்ம்மையான அறம் எனப்படும். நல்லறங்கட் கெல்லாம் நிலைக்களமாகத் திகழ்பவன் அறத்தின்கடலாகவும் அருளாளனாகவும் விளங்கும் இறைவன் ஒருவனே. அம்முதல்வனது தஇிருவருள்நெறியாகிய ஒழுக்க நெறியின் வழுவாது ஒழுகுவோரே அறவோர் எனப்போற்றப்பெறும் சிறப்புடையோராவார் என்பன அறத்தின் தொடர்பாகத் திருவள்ளுவர் அறிவுறுத்திய கருத்துக்களாகும். அறத்திற்குப் பற்றுக்கோடாகிய இறைவனது அருள்வழி யடங்கிநின்று . மாசற்றமனமும் தமையில்லாத சொல்லும் உடையராய்ச் செய்யும் நற்செயல்களே அறமெனப்படும் என்பது திருவள்ளுவர் அறிவுறுத்திய அறத்தின் இலக்கணமாகும்.

அறத்தைப்பற்றிய நல்லுணர்வு, மக்களினத்தாரில் தனியொருவடைய கல்வி அறிவு செல்வம் செயல்திறன் முதலியவற்றால் மட்டும் உலகியல் வாழ்வில் நிலை பெறுதற்குரிய சுருங்கிய எல்லையுட் பட்டு அடங்குவதன்று; மக்கள் ஒவ்வொருவரும் தாம்தாம் வழிபட்டுப்போற்றும் இறைவனது அருளால் ஒன்றுகூடிப் பெறுதற்குரிய விரிந்த பரப்பினையுடையது அறமாகும். சுருங்கக்கூறின் உலக முதல்வனாகிய இறைவனது பேரருளும் அவ்வருளால் மக்கள் மனத்தகத்தே ஊற்றெடுத்துப் பெருகும் பேரன்பும் ஒருங்கு இணைந்த சமுதாய அமைப்பிற் கருக்கொண்டு நிலை பெறுவதே அறம் எனக்கூறுதல் மிகவும் பொருத்த முடையதாகும்.
ஆசிரியர் திருவள்ளுவனார், “அறமுதலாகியமும். முதற்பொருள்” எனத் தொல்காப்பியனார் குறித்தவண்ணம் மூன்றன்பகுகியாக (முப்பால்களாக)த் தம் நூலை இயற்றி யுள்ளார். தொல்காப்பியனார் வாழ்ந்த காலத்கிற்கும் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கும் பிறப்பட்ட. காலத்தில் வாழ்ந்த பெருமக்கள் அறமுதலாக முன்னோர் எண்ணிய உறுதிப்பொருள் மூன்றனுள் இன்பத்இனைச் சிற்றின்பம் எனவும், பேரின்பம் எனவும் இரண்டாகப் பகுத்தனர்.
இப்பகுப்பு சிற்றின்பம் மற்றின்பம் (பேரின்பம்) எனத் 
திருவள்ளுவர் பகுத்த முறையினை அடியொற்றியதாகும். சிற்றின்பம் என்றது ஐம்புவன்களால் இவ்வுலகில். நுகர்தற்குரிய இம்மையின்பத்தினை; மற்றின்பம் (பேரின்பம்) என்றது பிறப்பற்ற நிலையிற் பெறுவதற்குரிய வீடுபேற்றினை. இவற்றுள் முன்னதனை' இன்பம் என்றும் பின்னதனை வீடு என்றும் பெயரிட்டு அறம் பொருள் இன்பம் வீடு என உறுதுப்பொருள்கள் நான்கெனக் கொண்டனர் பின்: வந்தோர். இங்ஙனம் பிற்காலத்தில் நான்காவதாகப் பிரித்துரைக்கப்படும் . பேரின்பமாகிய வீடுபேறு தொல்காப்பியனார் முதலிய முன்னைத் தமிழ்ச் சான்றோரால் மூன்றவதாகச் சுட்டப்பட்ட. இன்பத்துள்ளேயே அடங்கும் என்பது,
“சிற்றின்பம் வேண்டி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டுபவர்” (திருக். 175) எனவும், 6 ௪ ச ய் க ன் ச க
இன்பம் இடையறாது, ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துட்டுன்பங் கெடின்” (திருக். 369) எனவும் வரும் திருவள்ளுவர் வாய்மொழிகளால் இனிது
விளங்கும். எனவே வையத்து வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை நெறியினை அறிவுறுத்த எண்ணிய திருவள்ளுவர் தாம்கூற எடுத்துக்கொண்ட அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப்பொருள்களை அறிவுறுத்தும் முப்பாலிலே பிற்காலத்தில் நான்காவதாகப் பகுத்துரைக்கப்படும் வீடுபேற்றின்பமும் அடங்கவே திருக்குறளை இயற்றியுள்ளார் என்பது ஆன்றோர் துணிபாகும். இது பற்றியே “முப்பாலில்: நாற்பால் மொழிந்தவர்்? (இருவள்ளுவமாலை 19) எனவும், “அறம் பொருள் இன்பம் வீடென்னும் இந்நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவு” (இருவள்ளுவமாலை 8) எனவும் திருவள்ளுவரைப் புலவர் பெருமக்கள் பலரும் உளமுவந்து போற்றியுள்ளார்கள். எனவே திருக்குறளின் அறம் பொருள் இன்பம் என்னும் மும்முதற் பொருள்களே விரித்துரைக்கப் படினும் அம்முப்பொருள்களின் வாயிலாக முடிந்த பேரின்ப நிலையாகிய வீடுபேற்றியல்பும் தெரிவிக்கப்பெற்றுள்ளமை பெறப்படும். இந்நுட் பம்,
“அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்
திறனளித்தேம் வீடு தெளிந்தேம்” ப (திருவள்ளுவமாலை 50)
எனவரும் திருவள்ளுவமாலையால் இனிது புலனாதல் காணலாம்.

மேற்குறித்த உறுதிப்பொருள் நான்கனுள் இறுதிக் கண்ணதாகிய வீடுபேற்றுநிலை, திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்றப்பு, நீத்தார் பெருமை, அறன்வலியுறுத்தல் என்னும் நான்கதிகாரங்களிலும் துறவற இயலில் அருளுடைமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவுறுத்தல் என்னும் ஐந்து அதிகாரங்களிலும் தெளிவாக உணர்த்தப் பெற்றுள்ளன. இந்நுட்பத்தினைத் தெளிய வுணர்ந்த சைவசமய சந்தான ஆசிரியர் நால்வருள் ஒருவராகிய உமாபதி சிவாசாரிய சுவாமிகள், தெய்வப் புலமைத் திருவள்ளுவர் அருளிய திருக்குறளின் மெய்வைத்த சொற்பொருள் நுட்பங்களை விரித்து விளக்கும் நோக்குடன் வீட்டு நெறிப்பாலாகத் திருவருட் பயன் என்னும் சைவ சித்தாந்த நூலை அருளிச் செய்துள்ளார். தொல்காப்பியம் முதலிய பண்டைத் தமிழ் நூல்களால் அறிவுறுத்தப்பெறும் தெய்வங்கொள்கையில் உறுதியான நம்பிக்கையுடைய புலமைச்செல்வர் இருவள்ளுவர் என்பதும் அவர் இயற்றியருளிய திருக்குறள் மெய்யுணர்வினால் உணர்ந்துரைத்த - பேருண்மைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் தமிழ் மறையென்பதும், ப
“தனியறிவை - முன்னந்
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவ ரென்று - நிலைத்தமிழின்
தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த
மெய்வைத்த சொல்”
(நெஞ்சு விடுதூது, கண்ணி 23 - 25) எனவரும் உமாபதி சிவாச்சாரியார் வாய்மொழியால் நன்கு
தெளியப்படும்.




__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

கடவுள் உயிர் உலகம் என்னும் முப்பொருளுண்மையினை வற்புறுத்தும் சைவ இத்தாந்தத் தத்துவக் கொள்கை செசந்தமிழ் நாட்டில் வாழ்ந்த திருமூலர்; மெய்கண்டார் முதலிய அருளாிரியர்களால் அறிவுறுத்தப் பெற்றதென்பதும், தமிழ்நாட்_டிற்கே சிறப்புரிமையுடையதாக உருவாகி வளர்ந்துள்ள இத்தத்துவக். கொள்கைக்குரிய வேர்கள் தொல்காப்பியம் சங்க இலக்கியம் இருக்குறள் "முதலிய தமிழ்த் தென்னூல்களில் ஆங்காங்கே ஆழ்ந்து ஊன்றிப்பரவி இடம் பெற்றுள்ளன என்பதும் தொல்காப்பியம் திருக்குறள் முதலிய பண்டைத் தமிழ் நூல்களையும் ' சைவத் திருமுறைகளையும் அவற்றின் பயனாகத் தோன்றிய சைவசித்தாந்த சாத்திரங்களாகிய மெய்கண்ட நூல்கள் பதினான்களையும் ஒப்பிட்டு ஆராய்வார்க்கு இனிது விளங்கும். மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள் ஒன்றாகிய திருவருட்பயன் என்பது, சைவசமய சந்தான ஆசிரியர் நால்வருள் ஒருவராகிய உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட எட்டு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளின தமிழ் மறையாகிய திருக்குறளை , அடியொற்றி இயற்றப்பெற்றதென்பது இதன்கண் உள்ள குறள் வெண்பாக்களின் சொற்பொருளமைப்பாலும், பத்துக்குறள் கொண்டது ஓர் அதிகாரமாக அமைந்த அஇகாரத்தொடர்பாலும் இந்நூலின் முதற்கண் உள்ள பதிமுதுநிலை என்னும் அதிகாரம் திருக்குறளின் முதலதிகாரமாகிய கடவுள் வாழ்த்தினைச் சொற்பொருட் கூறுகளால் அவ்வாறே அடியொற்றி யமைந்திருத்தலாலும் திருவள்ளுவர் “அகரமுதல: எனத் திருக்குறளைத் தொடங்கியது போலவே இந்நூலாசிரியரும் “அகர வுயிர்போல்? என இந்நூலைத் தொடங்கியிருத்ததலாலும் நன்கு துணியப்படும்.

இருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளில் வீடு பேறடைவார் உணர்ந்து கொள்ளுதற்குரிய மெய்யுணர் வுண்மைகளை ஆங்காங்கே குறித்துள்ளமையுணர்ந்த உமாபகு இவாச்சாரியார், சைவூத்தாந்தத் தத்துவத்திற்கு அடிப்படையாக அமைந்த அவ்வுண்மைகளை விரித்து விளக்கும் நோக்குடன் திருவருட் பயன் என்னும் சைவ
சித்தாந்த மெய்ந்நெறிப்பயனை இயற்றியுள்ளமை இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும். மெய்கண்டடார் அருளிய சிவசித்தாந்தத் தனிமுதல் . நூலாகிய சவஞானபோதத்தின் சார்புநூலாக உமாபதி சிவாசாரியாரால் இயற்றப்பெற்ற து சிவப்பிரகாசம் என்பதாகும். அந்நூலில் விரித்துரைக்கப் பெறும் சைவ சித்தாந்த வுண்மைகளைக் கற்றுணர விரும்புவோர் அப்பொருளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் முதற்கண் புரிந்து கொள்ளும் முறையில் உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பெற்றது திருவருட். பயன் என்பதாகும். இறைவனது திருவருள் ஞானம் பெற்ற திருமுறையாசிரியர்களால் அருளிச் செய்யப்பெற்ற மெய்ப் பொருளியல்பாகிய நற்பொருட்பயன்களைச் சறப்புமுறையில் விளக்க எழுந்த திருவருட்பயன் என்னும் இந்நூலானது உலகு உயிர் கடவுள் என்னும் முப்பொருளுண்மையினை வற்புறுத்தும் பொதுநிலையில் உலகப் பொதுமறையாகிய . திருக்குறளின் யாப்பினையும் சொற்பொருளமைப்பினையும் அவ்வாறே அடியொற்றிச் செல்கின்றது. இவ்வுண்மை,
“எழிலீரைந்தும் வழுவறப்புணர்த்தித்
தெள்ளுசீர்ப்புலமை வள்ளுவன் தனக்கோர்
நற்றுணையுடைத்தெனக்கற்றவர் களிப்ப
அருட்பயனென்னா அதற்கொருநாமந்
தெருட்படப்புனைந்து செந்தமிழ்யாப்பிற்
குறளடி வெள்ளை ஒரு நூறியம்பினன்”” எனவரும் நிரம்பவழகிய தேசிகர் உரைப்பாயிரத்தால் இனிது புலனாதல் காணலாம். ப

“யாதானும் நாடாமல் ஊராமல்” (இருக். 397) என்றபடி உலக மக்கள் அனைவரும் ஒருநாட்டார் ஒரூரார்
ஒரு குடும்பத்தார் என்னும் ஒருமையுணர்வுடன் அன்பினால் அளவளாவி இனிது வாழ்தல். வேண்டும் என்னும் உயர்ந்த ஒழுகலாற்றினை வற்புறுத்தும் முறையில் வாழ்வியல் நூலாகத் திகழ்வது திருக்குறள். உலகத்தில் எல்லா மக்களும் இன்பமாக வாழ்தல் வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோளையுடைய திருவள்ளுவர், உல$ஒல் மன்னுயிர்களின் வாழ்வுக்கு அடிப்படையாகவுள்ள பொருள்களின் தன்மைகுறித்துத் தம்முள் வெ திருவள்ளுவர் கூறும் 'வாழ்கீகை நெறிமுறைகளும் . . . 479

மாறுகோளுரை பகரும் சமயவாதிகளின் கருத்தின் வழியே சார்ந்து நின்று அவர்களுள் ஒருதிறத்தார்க்குரிய கொள்கை யினை மட்டும் வற்புறுத்தும் நிலையில் ஒருபாற் சாயாமல், உலகமக்கள் எல்லோர்க்கும் உரிய இவ்வுலக வாழ்வினை . அடிப்படையாகக் கொண்டு உயிர்கட்குச் சார்பாக எக்காலத்தும் மாறாதுள்ள செம்பொருளுண்மையினை உள்ளத்திற்கொண்டு உலகத்தார் உய்துபெறும் வண்ணம் வையத்து வாழ்வாங்கு வாழ்தற்குரிய நெறிமுறைகளை அறிவுறுத்தும் நிலையில் வாழ்வியல் நூலாகிய திருக்குறளை இயற்றியுள்ளார், இச்செய்தி,
“சமயக்கணக்கர் மதிவழி கூறாது
_ உலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவன்” (கல்லாடம் 14) எனவும்,
“ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றென
எப்பாலவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி” ( திருவள்ளுவமாலை-9) எனவும் வரும் ஆன்றோர் வாய் ட வணன் இனிது
புலனாகும்.

பல சமயத்தவரும் தத்தமக்குரிய மறைநூலாக மதித்துப்போற்றும் நிலையில் உலக வாழ்க்கையில் அனைவர்க்கும் பயன் தரும் நல்லறங்கள் எல்லாவற்றையும் நடுநிலையில் .நின்று அறிவுறுத்தும் பொதுநூலாக விளங்குவது திருக்குறள் என்னும் உண்மையினைச் சமயவேறுபாடின்றி எல்லோரும்ஏற்றுக்கொள்கின்றனர். எனினும் இப்பொதுமையுணர்வொன்றினையுமே கருது ஒன்றோடொன்று முரண்பட்ட சமயக்கொள்கைகள் யாவும் திருக்குறள் ' நூலாசிரியராகிய திருவள்ளுவர்க்கு உடன் பாடாவனவே எனக் கூறத்துணிவார் எவரும் இலர். சமயவாதிகளுள் கடவுள் உண்டு என்னும் கொள்கை யுடைவர்களும் கடவுள் இல்லை என்னும் கொள்கையாளர்களும், உயிர்கள் உள என்பாரும் இல என்பாரும்,
220 ௮௦சவகசித்தாந்த சரத்திர வரலாறு

காணப்படும் உலகம் மெய் என்பாரும் வெறும் பொய்த் தோற்றமே என்பாரும், உயிர்கட் கு மறுபிறப்பும் இருவினைப் பயன்களும் உள என்பாரும் இல்லை என்பாரும் எனத் தம்முள் முரண்பட்ட கொள்கைகளை யுடையராதலை அவரவர் சமய நூல்களால் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு பலசமயத்தாரும் தம்முள் மாறுகொண்டு கூறும் பல்வேறு முடிவுகளுக்கும் இடந்தரும் நிலையில் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியிருத்தல் இயலாது. இங்ஙனம் பலதுறத்தாலும் முரண்பட்ட கொள்கையினவாகிய சமயங்கள் பலவற்றுள் ஏதேனும் ஒரு சமயத்தினைச் சார்பாகக் கொண்டு தமது நூலை இயற்றாமல் உலகமக்கள் அனைவரது வாழ்க்கையிலும் காணப்படும் இன்பத் துன்பங்களாகிய நுகர்ச்சிகளையும் அவற்றுக்குக் காரணமாய் மக்கள் செய்யும் நல்வினை: த்வினைகளையும் : அடிப்படை யாய்க் கொண்டு நல்லதன் நலனும் தயதன் ஒமையும் இவையெனப் பகுத்துணர்ந்து வினையைத் தவிர்த்து நல்லனவே செய்தொழுகுதலாகிய அறநெறியினை உலக மக்கள் மேற்கொள்ளும்படி அறநூலாகிய திருக்குறளைத் திருவள்ளுவர் இயற்றியுள்ளார் என்பதும், நல்லதன் நலனும் தயதன் தமையும். ஆகிய இருவினைப்பயனும், அவை காரணமாக வரும் மறுபிறப்பும் இல்லையெனச் சாதிக்கும் இன்மைக் கொள்கைக்குத் தஇருக்குறளிற் சிறிதும் இடமில்லையென்பதும் இந்நூலைக் கற்போர் உளங்கொளத்தக்கனவாம்.

திருவள்ளுவர் திருக்குறளிலே ஐயத்திற்கிடனின்றி அறிவுறுத்திய கருத்துக்களிற் பெரும்பாலன அவர்க்குமுன் நெடுங்காலமாகத் தமிழகத்தே வாழ்ந்த சான்றோர்கள் தமது வாழ்க்கை நுகர்ச்சியிற் கண்டு அறிவுறுத்திய தொன்மை யுடையனவே. தமிழ்நாட்டில் இடைக்காலத்திற் குடியேறிய அயலவர் கூட்டுறவால் பரவிய புதிய கொள்கைகளை
"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்,
மெய்ப்பொருள் காண்பதறிவு: (இருக். 423) எனத்தெளிந்த சிந்தனையுடன் நடுவுநிலையில் நின்று ஆராய்ந்து அவற்றுள் நல்லனவற்றை உ.ட.ன்பட்.டு ஏற்றுக்கொண்டும், இந்நாட்..பு.ல் நெடுங்காலம் நிலைத்துள்ள பழைமையுடையனவாயினும் தமையுடை யனவற்றைக் கண்டுத்து அறவே விலக்கியும் மக்களுக்கு நற்பயன்தரும் ஒழுக்கநெறியினை அறிவுறுத்தும் - முறையினைத் திருவள்ளுவர் தம்நூலில் மேற் கொண்டுள்ளார். எனவே இிருக்குறள் உலகப்பொதுமறை எனப் போற்றப்பெறுவதாயிற்று. உலகமக்கள் அனைவர்க்கும் பயன்படும் வகையில் பொதுநூலியற்றத் திருவுளங்கொண்ட திருவள்ளுவர், தாம் ஒரு நாட்்டிற்கோ ஒரு மொழிக்கோ ஒரு சமயத்திற்கோ ஓரினத்திற்கோ உரியவர் என்ற நிலையில் தம்முடைய உள்ளத்தை ஒரு குறிப்பிட்_ட சிறிய எல்லைக்குள் சுருக்கக்கொள்ளாமல் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்'
என்றாங்கு உலகிற் பலதுறப்பட்.ட கொள்கையாளர்களின் கருத் துக்களுக்கும் விரிந்து இடங்கொடுக்கும் விசும்புதோய் உள்ளத்துனராய், உலகத்தார் உள்ளியதெல்லாம் நுனித் துணர்ந்து அறிவுறுத்தும் முறையில் திருக்குறளை இயற்றியுள்ளார். இதுபற்றியே “எல்லாப் பொருளும் இதன் பாலுள இதன்பால், இல்லாத எப்பொருளும் இல்லையால் (திருவள்ளுவமாலை) எனப் புலவர் பெருமக்கள் இருக்குறளைப் பாராட்டிப் போற்றியுள்ளார்கள். .

உலகப்பொது மறையாகத் திகழும் திருக்குறளில் தமிழ்நாட்.டில் தொன்மைக் காலத்தே தோன்றி நிலைபெற்று வளர்ந்துள்ள சைவம் வைணவம் முதலிய தெய்வ வழிபாட்டு மரபுகளையும் தமிழர் கண்ட தத்துவவுண்மைகளையும் புலப்படுத்தும் குறிப்புக்களும் வடநாட்டில் தோன்றியனவாய் இடைக்காலத்தே தமிழகத்தில் வந்து பரவிய வைதிகம் சமணம் பெளத்தம் முதலிய சமயங்களுக்குரிய கருத்துக் களையும் கொள்கைகளையும் புலப்படுத்தும் குறிப்புக்களும் இடம் பெற்றிருத்தல் காணலாம். பன்னெடுங்காலமாகத் தமிழகத்தில் வாழும் சைவர் வைணவர் சமணர் பெளத்தர் முதலிய பல சமயச் சான்றோர்களும் இருவள்ளுவர் அருளிய இருக்குறளைத் தத்தம் சமயத்திற்கு அரண்செய்யும் பொதுமறையாகவே மகஇித்துப் போற்றி வந்துள்ளார்கள். இச்செய்தி இதுவரை தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் தோன்றி வழங்கும் பல்வேறு சமய நூல்களால் நன்கு புலனாகும்.

இவ்வாறு திருக்குறளானது பல்வேறு சமயத்தவ ராலும் பல்வேறினத்தவர்களாலும் மூத்துப் போற்றப்பெறும்
பொதுநூலாகக் கருதப்படினும் பன்னெடுங்காலமாகத் தமிழ் மக்கள் தம் வாழ்க்கையிற் கடைப்பிடித்தொழுகும் தெய்வக் கொள்கையினையும் அதனொடு தொடர்புடைய மெய்யுணர்வுக் கொள்கையினையும் ஐயத்திற் கிடனின்றித் தெளிவு படுத்தும் முறையில் இந்நூல் அமைந்துள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாகும். தமிழ்நாட் டின் தொன்மைச் சமயங்களாகிய சைவ வைணவ சமயங்கட்குச் சிறப்புரிமை யுடையனவாகவுள்ள நம்பிக்கைக்கும் தொன்மைச் செய்திகட் கும் வழிபாட்டு நெறிக்கும் தத்துவ வுண்மைக்கும் ஆதாரமாகிய பொருட் குறிப்புக்கள் பல திருக்குறளில் இடம் பெற்றுள்ளன.

கடவுள் உயிர் உலகு என்னும் முப்பொருள்களும் தோற்றமில் காலமாக (அநாதியே) உள்ள பொருள்கள்
என்பது சைவ சித்தாந்தத் தத்துவநெறியின் அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கைக்கு நிலைக்களமாகத் திருக்குறள் அமைந்துள்ளது. இறைவன் மன்னுயிர், உலகு எனத் திருக்குறளில் வழங்கும்சொல்லாட்_சியினைக் கூர்ந்து நோக்குங்கால் இம்மூன்று பொருள்களும் தோற்றமில் காலமாகவுள்ள உள்பொருள்களே யென்பது ஆசிரியர் திருவள்ளுவர் கோட்பாடாதல் நன்கு தெளியப்படும். திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்னும் முதலதஇிகாரத்தில் இறைவனாகிய பதியின் உண்மையும், வான்௫ிறப்பு என்னும் இரண்டாம் அதிகாரத்தில் உலகமாகிய பாசத்தின் உண்மையும் நீத்தார்பெருமை என்னும் மூன்றாம் அதிகாரத்தில் உயிர்களாகிய பசுவின் உண்மையும் முறையே உணர்த்தப்பெற்றன.

திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறளும் நான்மறைமுடிபாகிய உபநிடதங்களும் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் என்னும் மூவர் அருளிய தேவாரமும் திருவாதவூர் முனிவர் அருளிய கோவை இிருவாசகமும் திருமூலர் அருளிய திருமந்திரமும் மேற்குறித்த முப்பொரு ளுண்மையினை அறிவுறுத்தும் திறத்தில் ஒத்த கருத்துடைய மெய்ந் நூல்களாகும். இவ்வுண்மையினை, 6 ச ச ௪ &

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர்தமிழும் முனிமொழியுங் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்” எனவரும் பாடலில் ஒளவையார் விளக்கியுள்ளமை காணலாம். பன்னிரு திருமுறைகளிலும் திருக்குறள் பலவிடங்களிலும் எடுத்தாளப்பெற்றுள்ள . திருமுறைகளின் பயனாகவமைந்த சைவ இித்தாந்தத் தத்துவ வுண்மைகளை விளக்கத் தோன்றிய திருவுந்தியார் தஇருக்களிற்றுப்படியார்
சிவஞானபோதம் முதலிய மெய்கண்ட நூல்களிலும் திருக்குறளின் பாடல்களும் தொடர்களும், சொற்களும் கருத்துக்களும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. இவ்வாறு தமிழ்மறையாகிய திருக்குறளோடு சைவத் 'இருமுறைகள் பன்னிரண்டும் சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கும் நெருங்கிய தொடர்புடையனவாக அமைந்திருத்தலை உற்று நோக்குங்கால் மேற்குறித்த சைவத் தஇருமுறைகளாலும் மெய்கண்ட நூல்களாலும் அறிவுறுத்தப்பெறும் சைவ சித்தாந்தத் தத்துவங்கள் பலவற்றுக்கும் ஆதாரமாகத் திகழ்வது திருவள்ளுவர் அருளிய உலகப் பொதுமறையாகிய திருக்குறளே என்னும் உண்மை நன்கு புலனாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 



இவ்வுலக நிகழ்ச்சியைக் கூர்ந்து நோக்குங்கால் காணப்படும் உலகம் ஓர் ஒழுங்கு நிலையாகிய ஆணைக்கு உட் பட்டு நின்று செயற்படுதல் நன்கு புலனாகும். இத்தகைய நியதியொடு பொருந்திய உலகின் இயக்கத்திற்கு வினை முதலாய் உடனின்று இயக்கி நிற்கும் பேரறிவும் பேராற்றலும் பேரருளும் வாய்ந்த முழுமுதற் பொருள் ஒன்று உலகுயிர் கட்குச் சார்பாய் இருத்தல் வேண்டும் என்பது அறிஞர் பலர்க்கும் ஒப்பமுடிந்த உண்மையாகும். இங்ஙனம் எல்லார்க்கும் புலனாகும் நிலையிற் காணப்படும் உலக
நிகழ்ச்சியாகிய காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இக்காரியத்திற்குரிய வினை முதலாய் உலகுயிர்களை உடனின்று இயக்கியருளும் முழுமுதற் பொருளாகிய கடவுளது உண்மையினை உணர்த்தக் கருதிய திருவள்ளுவர்,
“அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு' (திருக். 1) எனக் காண்டற்கரிய கடவுளின் உண்மையினைக் கருத லளவையால் நிறுவிப்போந்தார். “எழுத்துக்கள் எல்லாம் தம்மை உடனிருந்து செலுத்தும் அகரவொலியிளைத் தமக்கு முதலாகவுடையன. அதுபோல உலகமும் தன்னை உடலிருந்து இயக்கி நிற்கும் ஆதி பகவனாகிய இறைவனைத் தனக்கு முதலாகவுடையது” என்பது இதன்பொருள்.

இங்கு உலகு என்றது, உடம்பொடு காணப்படும் உயிர்த்தொகுதியினை. ஓர் வரையறையுடன் காணப்படும் இவ்வுலக இயக்கமாகிய காரியத்தினைக் கொண்டு இதற்கு நிமித்த காரணமாகிய பொருள் ஒன்று உண்டு எனத் துணிய வேண்டியிருத்தலால் “உலகு ஆதி பகவனை முதலாக வுடையது': என உலகின் மேல் வைத்துக் கடவுளது உண்மையினைப் புலப்படுத்தினார் ஆசிரியர். ஆயினும் தனக்கு முதல்வனாக ஆகஇுபகவனைகத் தேர்ந்து கொள்ளும் உணர்வுரிமையும் உடைமைத் தன்மையும் உலகிற்கு இன்மையால், “உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பதே இத்திருக்குறளின் கருத்தாகக் கொள்ளுதல் வேண்டும்' என விளக்கம் கூறினார் பரிமேலழகர். ஆசிரியர் தொல்காப்பியனாரும்,
“எழுத்தெனப் படுப, அகர முதல” நூன்மரபு 1) எனவும்,
“மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்' (மொழி. 13) எனவும்
வரும் நூற்பாக்களில் எழுத்துக்கள் எல்லாவற்றின் இயக்கத்திற்கும் காரணமாய் நிற்கும் அகரம் முதன்மை
யுடையதாதலைத் தெளிவாகக் குறித்துள்ளார். “அகரம் தனியே நிற்றலானும் பல மெய்க்கண்நின்று அவ்வம்
மெய்கட்.கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலாலும் வேறுபட்டதாக ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையுடைத்து என்று கோடும் (கொள்ளு தும்), இறைவன் ஒன்றேயாய் நிற்குந்தன்மையும் பல்லுயிர்க்குந்தானேயாய் நிற்குந்தன்மை போல” எனவும் “இறைவன் இயங்குதணைக் கண்ணும் நிலைத்தினைக் கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப
முடிந்தாற் போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தது. “அகர முதல” என்னுங் குறளால் “அகரமாகிய முதலையுடைய எழுத்துக்க ளெல்லாம், அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து - உலகம்? என வள்ளுவர் உவமை கூறியவாற்றானும், கண்ணன் “எழுத்துக்களில் அகர மாகின்றேன் யானே எனக் கூறிய வாற்றானும் பிற நூல்களானும் உணர்க” எனவும் தொல்காப்பிய . முதற்சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர் அகரத்தைப் பற்றிக்கூறிய கருத்துக்கள் திருக்குறள் முதலதிகாரத்தின் முதற்குறளில் விளக்கமாக அமைந்திருத்தல் காணலாம். ப

இத்திருக்குறளைத் திருமூலர் முதலிய திருமுறை யாசிரியர்களும் மெய்கண்டார் முதலிய சைவ சித்தாந்த நூலாசிரியர்களும் தாம் வழிபடும் சிவபரம் பொருளுக்குரிய சிறப்பியல்பினை அறிவுறுத்தும் நிலையில் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்கள். திருவள்ளுவர் அருளிய திருக்குறளில் கடவுள் உயிர் உலகம் என்னும் முப்பொருள் களைப் பற்றிக் கூறப்பெற்றுள்ள தத்துவவுண்மைகளை அடியொற்றிச் சைவூத்தாந்த மெய்ந் நூற்பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய திருவருட்பயன் என்னும் நூல் என்பது முன்னர்க் கூறப்பெற்றது. இந்நூல் இருக்குறளைப் போன்று பத்துக் குறளைத் தன்னகத்தே கொண்டது ஓர் அதிகாரமாகப் பதிமுது நிலைமுதல் அணைந்தோர் தன்மையீறாகப் பத்து திகாரங்களை யுடையது. திருவள்ளுவர் : அகரமுதல” எனத் தொடங்கியது போலவே இந்நூலாசிரியரும்,

“அகரவுயிர் போல் அறிவாகி எங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து'” என இந்நூலைத் தொடங்கியுள்ளார். அகரம் நாத மாத்திரையாய் எத்தகைய விகாரமுமின்றி இயற்கையில் தோன்றுவதாய் எழுத்துக்கள் தோறும் நிறைந்து முதன்மை யுற்று நிற்ப, ஏனைய எழுத்துக்களெல்லாம் அவ்வகரத்தின் "இயக்கத்தால் வெவ்வேறு முயற்சியிற்றோன்றித் திரிபுடைய வாய் நிலவுதல்போல, ஆதுபகவனாகிய இறைவன் இயற்கை யுணர்வினாய் முற்றுணர்ந்துயாண்டும் நீக்கமற நிறைந்து முழுமுதல்வனாக விளங்கி உலக வுயிர்கள் யாவும் அவனது ஆணைக்குள் அடங்கி வினைக்கடாக உலக உடல் கருவி நுகர்வினைப் பெற்றுத் திரிபுடையனவாய் நிலவா நின்றன என்பதாம். எழுத்துக்கள் எல்லாவற்றினும் நிறைந்து அவற்றிற்கெல்லாம் முதலாய் நிற்கும் பொதுவியல்புபற்றி அகரத்தை இறைவனுக்கு உவமையாகக் கூறினும் அப் பரம்பொருள் அறிவேயுருவாய் உலகப்பொருளனைத்தும் தனக்கு உடைமையாகக் கொண்ட தன்னேரில்லாத் தலைவனும் ஆதலால், உண்மையாக ஆராய்ந்து பார்க்குங்கால் அம்முதல்வன் தன் உடைமைப் .பொருள்களாகிய பசுபாசங்கள் ஒன்றினோடும் உவமிக்கப்படுபவனல்லன் என்பதே திருவள்ளுவர் கருத்தென்பது அறிவுறுத்துவார், “அறிவாகி எங்கும்நிகிரிலிறை நிற்கும் நிறைந்து? என்றார். “அகரவுயிர்போல்” “அகர முதல: என்னும் முதற் குறளையும் “அறிவாகி: என்பது “வாலறிவன்” என்னும் இரண்டாம் குறளின் தொடரையும், “நிகரிலிறை” என்பது “தனக்குவமையில்லாதான்”? (இருக். 7) என்னும் தொடரையும் “எங்கும் நிறைந்து நிற்கும்” என்பது, “இறைவன்? (இருக். 5, 10) பெயர்க் காரணத்தையும் விளக்கும் முறையில் அமைந்திருத்தல் ஒப்புநோக்கியுணரத்தகுவதாகும்.




__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

எழுத்துக்கள் உயிர், மெய் என இருகிறத்தனவாய் அகரமுதல ஆதல் போன்று, உலகமும் உணர்வுடைய வுயிர்கள் உணர்வில்லாத உயிரல் பொருள்கள் என இரு திறத்தினதாய் ஆதிபகவனை முதலாகவுடையது என்று அறிவுறுத்துவது திருக்குறளின் முதற்குறளாகும். - உயிரெழுத்து ஆன்மாவுக்கும் மெய்யெழுத்து தத்துவப் பிரபஞ்சத்திற்கும் அகரம் ஆதிபகவானாகிய இறைவனுக்கும் உவமை. ஆதிபகவன் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர் பரிமேலழகர். அவர் கருத்துப்படி இத்தொடர் “ஆதியாய பகவன்” என விரியும்; முதற்கடவுள் என்பது இதன்பொருளாகும். இனி, ஆதிபகவன் என்னும் இத்தொடர்க்கு “ஆதியொடு கூடியபகவன்” எனப் பொருள் கொள்வர் ஆளுடையபிள்ளையார். இங்கு ஆதி என்றது, எப்பொருள்களையும்தோற்றுவிக்கும் அன்னையாகிய சக்தியை. உலகத்தோற்றத்திற்குக் காரணமானவள் என்ற பொருளில் ஆது என்னும் சொல் சக்தியாகிய அன்னையைக் குறிக்கும் காரணப் பெயராயிற்று. ஆதி என்ற சத்தியை ஒருபாகத்திற்கொண்டவன் இறைவன் என்பார் “ஆதிபகவன்” என்றார் திருவள்ளுவர். “சத்தியுள் ஆகியோர் தையல் பங்கன்” (1-115-4) எனவரும் திருஞான சம்பந்தர் தேவாரத்தொடர் “ஆஇுபகவன்” என்னும் திருக்குறள் தொடரின் விளக்கமாக அமைந்துள்ளமை அரியத்தகுவதாகும். எல்லாம் வல்ல இறைவனை அம்மையுடன் அமர்ந்த அப்பனாகப் பெண்ணொரு பாகளாகக் கருகுப்போற்றும் முறை தமிழ்நாட்டில் தொன்று தொட்டு நிலவி வரும் தெய்வ வழிபாட்டு மரபாகும். இம்மரபு
“நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” (ஐங்குறுநூறு,கடவுள் வாழ்த்து) எனவும்,
“பெண்ணுருவொரு திறனாகின்று அவ்வுரு
தன்னுளடக்கிக் கரக்கினும் கரக்கும்” (புறநானூறு, கடவுள் வாழ்த்து) எனவும்,
“ஊர்ந்தது ஏறே, சேர்ந்தோள் உமையே” (அகநானூறு, கடவுள் வாழ்த்து) எனவும் வரும் சங்கச் செய்யுட் களிலும் இடம்பெற்றுள்ளமை காணலாம். இயல்பாகவே பாசங்களின் நீங்கிய முற்றுணர்வினனாகிய இறைவன் உலகப்பொருள்களில் தோய்வின்றித் தானே திகழொளியாய்த் தனித்துநிற்கும்நிலையில் சிவம்
(அப்பன்) எனவும் உலகெலாமாகி வேறாய் உடனுமாய் இவ்வாறு உலக உயிர்களொடு கலந்து நிற்கும் நிலையில் சத்தி (அம்மை) எனவும் ஒருமையின் இருமையினாய (தாதான்மிய சம்பந்தத்தால் இருதிறப்பட்_டு) உலகினை இயக்கி நிற்றல் பற்றி அம்முதல்வனை ஆகுபகவன் (அம்மையப்பன்) எனத் திருவள்ளுவர் குறித்துள்ளார் எனக் கொள்ளுதல் பெரிதும் ஏற்புடையதாகும். இறைவன் அம்மையப்பனாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக்காத்து அழித்து மறைத்து அருள் புரிகின்றான் என்பது
“தன்னிற்பிரிவிலா எங்கோமான்'' (திருவெம்பாவை) எனவும்,
“எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்”” (சிவஞான சித்தியார் சுபக். 165) எனவும்,
“சிவனெனும் பொருளும் ஆதிசத்தியொடு
சேரில் எத்தொழிலும் வல்லதாம்”” (செளந்தரியலகிரி) எனவும் வரும் ஆன்றோருரைகளால் இனிதுணரப்படும்.


இறைவன் தனது அருவாகிய ற்சத்தியுடன் வேறாதலும் (பேதமாதலும்) ஒன்றாதலும் (அபேதமாதலும்) இன்றி அவ்விரண்டற்கும் பொதுவாய் (தாதான்மிய சம்பந்தத்தால்) நீக்கமின்றி எங்கும் விரிந்து. நிற்பன் என்பார் “ஆணையின் நீக்கமின்றி நிற்பன்” (சவஞானபோதம், இரண்டாம் சூத்திரம்) என்றார் மெய்கண்டார். எந்த எந்தப் பொருள்.யாண்டும் விரிந்து நிற்கின்றதோ அந்த அந்தப் பொருள் ஒன்றாதலும் இரண்டாதலும் இன்றி அவ்விரண்டற்கும் பொதுமையில் நிற்கும், தன் எல்லை யளவும் விரிந்து பரவிநிற்கும் ஞாயிறு தன்னொளிக்கதிரோடு நீக்கமின்றி நிற்றல் போலும் என்னும் ஏதுவால் இறைவன் தானும் தன்சத்தியும் என இருகிறப்பட்டுத்தனது ஆணையாகிய ிற்சத்தியுடன் நீக்கமின்றி நிற்றலை வலியுறுத்தும் நிலையில் அமைந்தது “ஆதிபகவன்” என்னும் இத்திருப்பெயர் என்பதும் இது மாதொருகூறாகிய அம்மை யப்பரைக் குறித்த பெயரென்பதும் நன்கு துணியப்படும்.
“அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்பர் என்றறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர்
எல்லா வுலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்” (திருக்களிற்.1) எனவரும் திருக்களிற்றுப்படியார் முதற்பாடல், “ஆதிபகவன் முதற்றேயுலகு” என்னும் திருக்குறள் தொடருக்குரிய விளக்கவுரையாக அமைந்துள்ளது.

உலகமெலாம் ஒடுங்கிய ஊழிக்காலத்தே, “பெண்ணுரு ஒரு இறனாடின்று அவ்வுருத் தன்னுளடக்கிக்
கரக்கினுங் கரக்கும்” (புறநானூறு, கடவுள் வாழ்த்து) என்றபடி அம்மையின் வடிவினைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொண்டு ஒருவனாக நின்ற இறைவன், உலகத்தை மீளத்தோற்றுவிக்கும் படைப்புக் காலத்தே உயிர்களின் வினைப்பயன்களை நுகர்வித்துக் கழித்தற்பொருட்டும், உயிர்களைத் தோற்றமில் காலமாகப் பிணித்துள்ள அக விருளாகிய ஆணவமலம் கழலும் பக்குவத்தை யடைதற் பொருட்டும் தன்னுள் அடக்கிய சத்தியினை மீண்டும் தன்னுருவில் வெளிப்படச்செய்து அம்மையப்ட ஈஈகவிருந்து ஒடுங்கிக்கிடந்த மன்னுயிர்களை உலகுஉடல் கருவி நுகர் பொருள்களுடன் மீளவும் தோற்றுவித்தருள்வன் என்பார், “ அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக” என்றார். இதனால் எல்லாவற்றையும் ஒடுக்குதற் கருத்தாவாகிய இறைவனே மீளவும் படைத்தற்குரியவன் என்பதனையும் புலப்படுத்தியவாறு. பல்லுயிர்க்கும் தாயுந் தந்தையுமாகிய இறைவர் மன்னுயிர்த்தொகுஇகளின் இயல்புக்குத் தக்கவாறு தன்மைக் கண்ணும் முன்னிலைக் கண்ணும் படர்க்கைக் '
கண்ணும் எழுந்தருளிவந்து நற்பொருளையறிவுறுத்தி ஆட்.கொண்டு அருள்புரிவார் என்பார் “அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர்” என்றார். இங்ஙனம் உயிர்கட்கு அருள்புரிதல் வேண்டி இவ்வுலகத்துத் திருமேனி கொண்டு எளிவந்து அருள்புரிவாராயினும் நிலமுதல் நாதமுடிவாக வுள்ள தத்துவங்களைக் கடந்து அப்பாற்பட்டு விளங்கும் அவ்விறைவர து உண்மையியல்பு யாவராலும் உணரவியலாத அருமையுடையது என்பார் 'எல்லாவுலகுக்கும் அப்புறத்தார்' என்றார். இவ்வாறு அண்டங்கடந்து அப்புறத்தாராயினும் தம்மின் வேறல்லாத அருள் என்னும் சத்தியாலே எல்லா வுலகங்களும் தொழிற்பட்டு இயங்கும் வண்ணம் உலகுயிர் களிற் பிரிவறக் கூடியிருந்தே அவற்றின் தன்மை தம்மைப் பற்றாதவாறு அவற்றுள் சிறிதும் தோய்வின்றி நிலைத் துள்ளார் என்பார், “இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர்: என்றார்.

அம்மையப்பராகிய இறைவர், தன்னிற்பிரிவிலா அருளாகிய சத்தியால் உலகுயிர்களோடு இரண்டறக்கலந்து நின்று ஐந்தொழில் நிகழ்த்தியருளுதலாகிய பொ துவியல்பும், இவ்வாறு உலகுயிர்களோடு பிரிவறக்கலந்து நிற்பினும் அவற்றின் தன்மை தான்எய்தலின்றி இவை யெல்லாவற்றையுங் கடந்து சந்தனைக்குரிய சவமாகித்தனித்து மேற்பட்டு விளங்கும் தன்னுண்மையாகிய இறப்பியல்பும் ஒருங்குணர்த்துவது இருக்களிற்றுப்படியார் முதற்பாடலாகும். இது திருக்குறள் முதற்பாடலிலமைந்த “ஆதிபகவன் 'முதற்றே யலகு்' என்னுந் தொடரால் உணர்த்தப்படும். இறைவன து பொதுவும் சிறப்புமாகிய இருவகை இலக்கணங் களையும் நன்கு புலப்படுத்தும் நிலையில் அமைந்துள்ளமை இங்கு ஊன்றி நினைக்கத் தகுவதாகும்.

திருக்குறளின் முதலஇிகாரமாகிய கடவுள் வாழ்த்தில் ஆதுபகவன், வாலறிவன், மலர்மிசையேகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறிவாழியந்தணன், எண்குணத்தான் என்பன எல்லாம்வல்ல கடவுளுக்குரிய திருப்பெயர்களாகக் குறிக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் எண்குணத்தான் என்ற பெயர் இறைவனுக்கே சிறப்புரிமை
யுடைய குணங்கள் எட்டு என்பதனைப் புலப்படுத் துவதாகும். “எண்குணங்களாவன தன்வயத்தனாதல், தூயவுடம்பின னாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்ட து” எனப் பரிமேலழகர் தரும் முதல் விளக்கம் எண்குணத்தான் என்ற திருப்பெயர் சிவபெருமானுக்குச் சறப்புரிமையுடையது என்பதனை நன்கு வலியுறுத் துவதாகும்.

எல்லா நூல்களையுங் கற்றவர்க்கு அக்கல்வி யறிவினாலாய பயன் ஞானமேயுருவாகிய இறைவன் திருவடிகளைத் தொழுது போற்றுதலேயாகும் எனவும், மெய்ந் நூல்கள் பல கற்றுணர்ந்தும் கடவுள் திருவடியினைத் தொழாதார்க்கு அவர்கற்ற கல்வியறிவினாற் சிறிதும் பயனில்லை எனவும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தது,
““கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்” (திருக். கட. வா. 2) எனவரும் திருக்குறளாகும். எல்லாவற்றையும் இருந்தாங்கே உணரவல்ல முற்றுணர்வு ஞானமே திருமேனியாகவுடைய இறைவளனொருவனுக்கேயுரிய தனிப்பண்பு என்பதனை “வாலறிவன்” என்ற தொடராலும் உலகத்து உடம்பொடு கூடி. வாழும் மக்கள் முதலிய உயிர்கள் யாவும் பிறர் அறிவித்தால் அறியும் சிற்றறிவுடையனவாதலின் மக்கள் தாம் பெற்ற கல்வியறிவாற்பயன் பேரறிவுப் பொருளாகிய இறைவன். இருவடிகளை வணங்கி அறிவினால் நிறைவு பெறுதலே என்பதனை “இறைவன் நற்றாள் தொழாஅரெனின் கற்ற தனாலாய பயன் என்கொல்” என்ற தொடராலும் இருவள்ளுவர் புலப்படுத்திய திறம் உய்த்துணரத் தகுவதாகும்.

அன்பினாற் க௫ந்துருகிப் போற்றும் அடியார்களின் நெஞ்சத்தாமரையிலே சோடஇுப்பொருளாய்ச் சுடர்விட்டுத் தோன்றுதல் இறைவனது அருளின் நீர்மையாதலின் எல்லாம் வல்ல முதல்வனுக்கு “மலர்மிசையேகினான்” என்பது ஒரு இருப்பெயராயிற்று. நினைப்பவர் நெஞ்சத்தினைக் கோயிலாக் கொண்டெழுந்தருளிய இறைவனது நல்ல திருவடிகளை இடைவிடாது நினைந்து போற்றுவார் எல்லாவுலகிற்கும் மேலாகிய வீட்டுலசன்கண்ணே எக்காலத்தும் அழிவின்றி வாழ்வார் என அறிவுறுத்துவது,
“மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்'”' (திருக். கட. வா. 3) எனவரும் இருக்குறளாகும். உயிர்க்குயிராய்ப் பிரிவின்றி (இரண்டறக்கலந்து) நிற்றல் இறைவன து இயல்பு என்பதனை “மலர்மிசை யேட௫னான்' என்னும் இத்தொடரால் இருவள்ளுவர் உய்த்துணர வைத்துள்ளமை உணர்தற் குரியதாகும். இறைவன் உலகுயிர்களோடு இரண்டறக்கலந்து நிற்கும் இப்பெற்றியை அத்துவிதம் என்ற சொல்லால்
வழங்குதல் சைவசித்தாந்த மரபாகும்.
422 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு

குறைவிலா நிறைவாகிய முதல்வனுக்கு ஒன்றை விரும்புதலும் வெறுத்தலும் ஆகிய குற்றங்கள் இல்லை. வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவனாகிய இறைவன் திருவடியைச் சேர்ந்தார்க்கும் விருப்புவெறுப்பு என்னும் அவ்விருகுற்றங்களும் இல்லாதொழிதலால் அவை காரணமாக வரும் பிறவித்துன்பங்களும் அவர்கட்கு எக்காலத்தும் உளவாகா என்பர்,
.. “வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்
கியாண்டும் இடும்பை யில” (திருக். கட. வா. 4) என்றார் இருவள்ளுவர்.

இறைவனது பொருள் சேர்ந்த புகழ்த்திறங்களை எக்காலத்தும் விரும்பிப் போற்றுவார்க்கு அகவிருளாகிய ஆணவத்தைப் பற்றிவரும் நன்றும் தீதும் ஆகிய இருவினைகளும் உண்டாக மாட்டா என அறிவுறுத்துவது, “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (திருக். கட. வா. 5) எனவரும் இருக்குறளாகும். இதன்கண் “இருள்” என்றது அவிச்சையாகிய மயக்கத்தை எனவும் “பொருள்: என்றது மெய்ம்மையை எனவும் கொண்டு, “மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை &வினையென்னும் இரண்டு வினையும் உளவாகா, இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து” எனப் பரிமேலழகர் உரை வரைந்துள்ளார்.
“இன்ன தன்மைத்தென ஒருவராலுங் கூறப்படாமையின் அவிச்சையை “இருள்: என்றும் நல்வினையும் பிறத்தற்கு துவாகலான் “இருவினையுஞ்சேரா' என்றும் கூறினார். இறைமைக்குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின் அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழெனப்பட்ட து. புரிதல் - எப்பொழுதுஞ் சொல்லுதல்” என்பது மேற்குறித்த குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய விளக்கவுரையாகும்.
திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை தெறிமுறைகளும் . . . 434

உலகப்பொருள்கள் கட்புலனாகாதவாறு கண்ணொளியைத் தடைசெய்து நிற்கும் புறவிருளும் அது போலவே நுண்பொருள்களை உள்ளம் உணராதவாறு உயிரின் அறவினைத் தடைசெய்து நிற்கும் அகவிருளும் என இருளை இருவகையாகப் பகுத்துரைப்பர் பண்டைத் தமிழ்ச்சான்றோர். “இருள் தூங்கு விசும்பு”(நற்றிணை 261) எனப் புறவிருளும் “இருள்நீங்கியின்பம் பயக்கும் (இருக்குறள்
52) “இருள்தர்காட்சி” (பெரும்பாண். 443) என அகவிருளும்<br style="max-height: 1e+06px; overflow-wrap: break-word; fon



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard