நாள், நட்சத்திரம், மாதம், வருடம், இவைகளின் பெயர்கள் அனைத்தும் வடமொழியில் உள்ளது.
ஆனால் இதன் செயல்முறை விளக்கமும் கணிதமும் தமிழில் உள்ளது.
சங்க இலக்கியம் புறநானூறு பாடல் ஒன்றில்
ஒரு நாள் கணிக்கப்படுகிறது. ஏறக்குறைய 12 இராசிகளும் 27 நட்சத்திரங்களும் அடங்கிய ஒரு ஜாதகக் கட்டம் இப்பாடலில் சொல்லப்படுகிறது. அனைத்துமே தமிழ் சொற்கள்தான்.
சங்ப்புலவர் : கூடலூர் கிழார். ஒரு வானியல் கணியர்.
ஒருநாள் வானத்திலிருந்து எரி நட்சத்திரம் ஒன்று விழுந்தது. அதனைப் பார்த்த புலவர் அப்போது வானத்து நட்சத்திரம் மற்றும் இராசிகளின் நிலையை அறிந்து தன்நாட்டு அரசன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலின் பிறந்த நாளில் இருந்த ஜாதக அமைப்பை ஒப்பிட்டு கணித்துப் பார்த்தார்.
அரசன் அன்றைக்கு ஏழாம் நாள் இறந்துபடுவான் என்பதைக் கணித்தார். தான் கணித்தபடி அரசன் இறக்கும் நாள் வந்தது. தான் கணித்த அந்த நாளிலேயே அரசன் இறந்தான். அப்போது கையறு நிலையாக இப்பாடலை பாடினார் கூடலூர் கிழார். பாடலுக்கான உரை இது...
பங்குனி மாதத்தினது முதற் பதினைந்தின்கண் உச்சமாகிய உத்தரம் நட்சத்திரம் உச்சியினின்றும் சாய,
அதற்கு எட்டாம் நட்சத்திரம் மூலம் அதற்கு எதிரே எழாநிற்க, அந்த உத்தரத்துக்கு முன் செல்லப்பட்ட எட்டாம் மீனாகிய மிருகசீரிடமாகிய நட்சத்திரம் துறையிடத்தே தாழக்,
Puranānūru 229, Poet Koodalur Kizhār sang for Kocheraman Yānaikatchēy Māntharancheral Irumporai, Thinai: Pothuviyal, Thurai: Ānantha Paiyul At the pitch darkness of midnight when the flame constellation Kārthikai was there with the goat constellation mēdam, in the first half of Panguni month when Venus appeared at the foot of Anudam shaped like that of a bent palmyra tree, to being at the end of glittering Punarpūsam which has the shape of a pond, when Uthiram which was at the zenith, descended, and Moolam that is the eighth constellation rose opposite to it, and, Mirukaseeridam constellation that does not go before Uthiram goes down toward the shore, not going north or south, like a light to this earth surrounded by water, a star fell roaring and fiery, moved by heavy winds.
On seeing that, I like many others who had come to him in need, felt despair in our hearts, and hoped that the lord of a country where waterfalls roar down like parai drums should live without disease. The seventh day has come. As mighty elephants sleep on their trunks, the royal drum tightly tied has burst its eye and rolls on the ground, the protective white umbrella has snapped at the base, horses as swift as the wind stay still, he has gone to the upper world.
He was a great partner to women with bright bangles. Did he forget his companions? He bound up his enemies and gave unlimited charity to those who liked him, the dark man who was like a sapphire mountain!
Notes: This is the only poem written by this poet. Also, this is the only poem written for this king. He is different from King Cheraman Yānaikatchēy Māntharancheral Irumporai for whom poems 17, 20 and 22 were written. This Sangam poem has the most astrological information. புறநானூறு 126 – பறை இசை அருவி முள்ளூர்ப் பொருநர், புறநானூறு 229 – பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன், புறநானூறு 398 – பறை இசை அருவிப் பாயல் கோவே, பதிற்றுப்பத்து 70 – இழும் என இழிதரும் பறைக் குரல் அருவி. அழற்குட்டம் (1) – ஒளவை துரைசாமி உரை – அழல் சேர் குட்டம் என்பது கார்த்திகை நாள். உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).
Meanings: ஆடு இயல் – goat shaped, mēdam constellation, அழல் குட்டத்து – with the flame constellation, Kārthikai, ஆர் இருள் அரை இரவில் – in the pitch darkness at midnight, முடப் பனையத்து – in the Anudam constellation which is in the shape of a bent palmyra tree, Borassus flabellifer, வேர் முதலா – Venus appeared at the foot, கடைக் குளத்துக் கயம் காய – glittering pond shaped constellation as the limit, Punarpoosam (‘கயம் குளத்துக் கடை காய’ எனக் கொள்ளவும்), பங்குனி உயர் அழுவத்து – during the first half of Pankuni, தலை நாள் மீன் நிலை திரிய – the northern constellation Uthiram was descending, நிலை நாள் மீன் அதன் எதிர் ஏர்தர – the eighth constellation Moolam was rising, தொல் நாள்மீன் துறை படிய – the eighth star before Moolam (Mirukaseeridam) going down, பாசிச் செல்லாது – not going toward the east, ஊசி முன்னாது – not going toward the north, அளக்கர்த் திணை விளக்காக – as a lamp for the earth surrounded by water, கனை எரி பரப்ப – spreading fire, கால் எதிர்பு பொங்கி – scattered by the winds, ஒரு மீன் விழுந்தன்றால் விசும்பினானே – a star fell from the sky (விழுந்தன்றால் – ஆல் அசைநிலை), அது கண்டு யாமும் பிறரும் – on seeing that us and others, பல் வேறு இரவலர் – others who came in need, பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன் – lord of the country where waterfalls roar like parai drums, நோயிலன் ஆயின் நன்று மன் தில் என- that it would be good if he lives without disease (மன் தில் – அசைநிலைகள், expletives), அழிந்த நெஞ்சம் மடி உளம் – distressed heart and ruined mind (உளம் – உள்ளம் என்பதன் இடைக்குறை), பரப்ப அஞ்சினம் – fear spread among us, எழு நாள் வந்தன்று இன்றே – since the seventh day came today (இன்றே – ஏகாரம் அசைநிலை, an expletive), மைந்துடை யானை கை வைத்து உறங்கவும் – mighty elephant sleeps on its trunk, திண் பிணி முரசும் – drum tied with straps, கண் கிழிந்து உருளவும் – eye is torn and it rolls, காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும் – protective white umbrella is broken off at the base, கால் இயல் கலி மாக் கதி இன்றி வைகவும் – proud horses that are as swift as the wind stand still without trotting, மேலோர் உலகம் எய்தினன் ஆகலின் – since he has reached the upper world, ஒண்தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி – he was a great partner to women with bright bangles (உறு – பெரிய), தன் துணை ஆயம் மறந்தனன் கொல்லோ – has he forgotten his group of women (ஓகாரம் அசைநிலை, an expletive), பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் – he had strength to bind up his enemies, நசைவர்க்கு அளந்து கொடை அறியா ஈகை – he did not know limited charity to those who came with desire, he was a generous man of unlimited charity to those who came with desire, மணி வரை அன்ன மாஅயோனே – the dark colored man who was like a sapphire mountain (மாஅயோனே – அளபெடை, ஏகாரம் அசைநிலை, an expletive)
அருஞ்சொற்பொருள்: 1. ஆடு இயல் = ஆடு போன்ற உருவமுடைய மேட இராசி; அழல் = நெருப்பு, தீ; குட்டம் = கூட்டம்; அழல் குட்டம் = நெருப்புப் போன்ற நிறமுடைய ஆறு நட்சத்திரங்களின் கூட்டமாகிய கார்த்திகை என்னும் நட்சத்திரம். 3. ஆர் = நிறைந்த; அரை = பாதி; அரையிரவு = நடு இரவு. 3. முடம் = நொண்டி; முடப்பனை = வளைந்த பனைமரம் போன்ற தோற்றமுடைய அனுடம் என்னும் நட்சத்திரம் (அனுடம் என்னும் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டம்; ஒரு தனி நட்சத்திரம் அல்ல.); முடப்பனையத்து வேர்முதல் = வளைந்த பனைமரம்போல் தோற்றமளிக்கும் அனுட ம் என்னும் நட்சத்திரக் கூட்டத்தின் அடிப்பகுதிக்கு முந்திய நட்சத்திரம் (கேட்டை). 4. கடைக்குளத்துக் கயம் காய = கயம் குளத்து கடை காய = கயமாகிய குளத்தைப்போல் தோற்றமளிக்கும் புனர்பூச நட்சத்திரத்தின் முடிவிலே உள்ள நட்சத்திரமாகிய திருவாதிரை (புனர்பூசம் என்பது ஒரு சில நட்சத்திரங்களின் கூட்டம்) எல்லையாக உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் (திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுடம், கேட்டை) விளங்கிக் காய. 5. உயர் அழுவம் = முதல் பதினைந்து நாட்கள். 6. தலைநாள் மீன் = உத்தரம் என்னும் நட்சத்திரம். 7. நிலைநாள் மீன் = எட்டாம் மீன் (உத்தரம் என்னும் நட்சத்திரத்திலிருந்து நட்சத்திர வரிசையில் உள்ள எட்டாம் நட்சத்திரமாகிய மூலம்) ; ஏர்தல் = எழுதல். 8. தொல்நாள் = உத்தரத்திற்கு முன்னதாக நட்சத்திர வரிசையில் உள்ள எட்டாம் நட்சத்திரமாகிய மிருகசீரிடம். 9. பாசி = கிழக்கு; தூசி = வடக்கு; முன்னுதல் = படர்ந்து செல்லுதல். 10. அளக்கர் = கடல்; திணை = பூமி. 11. கனை = ஒலி; கால் = காற்று; எதிர்பு பொங்கி = கிளர்ந்து எழுந்து. 16. மடிதல் = வாடுதல்; பரத்தல் = அலமருதல் (கலங்குதல்). 20 பரிதல் = ஒடிதல்; உலறுதல் = சிதைதல் (முறிதல்). 21. கதி = குதிரை நடை; வைகல் = தங்கல். 24. ஆயம் = கூட்டம். 25. பிணிதல் = சாதல். 27. மணி = நீலமணி; மாயோன் = திருமால்.
உரை: ஒரு பங்குனி மாதத்து முதற் பதினைந்து நாட்களுள், மேட இராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்தில், இருள் நிறைந்த நடு இரவில், வளைந்த பனைமரம்போல் தோற்றமளிக்கும் அனுட ம் என்னும் நட்சத்திரக் கூட்டத்தின் அடிப்பகுதிக்கு முந்திய நட்சத்திரமாகிய கேட்டை முதலாக, கயமாகிய குளத்தைப்போல் தோற்றமளிக்கும் புனர்பூச நட்சத்திரத்தின் முடிவிலே உள்ள நட்சத்திரமாகிய திருவாதிரை நட்சத்திரம் எல்லையாக உள்ள நட்சத்திரங்கள் பதின்மூன்றும் (கேட்டை, அனுடம், விசாகம், சுவாதி, சித்திரை, அத்தம், உத்தரம், பூரம், மகம், ஆயில்யம், பூசம், புனர்பூசம் திருவாதிரை) விளங்கிக் காய்ந்தன. அப்பொழுது உத்தரம் என்னும் நட்சத்திரம் உச்சத்தில் (வானின் நடுவில்) இருந்தது. அந்த உத்தர நட்சத்திரம் அவ்வுச்சியிலிருந்து சாய்ந்தது. அந்த உத்தர நட்சத்திரத்திற்கு எட்டம் நட்சத்திரமாகிய மூலம் அதற்கு எதிராக எழுந்தது. அந்த உத்தரத்திற்கு எட்டாம் நட்சத்திரமாகிய மிருகசீரிடம் மேற்கே சாய்ந்து மறையும் நேரத்தில், கடல் சூழந்த உலகுக்கு விளக்குப்போல் வானில் ஒரு நட்சத்திரம் கிழக்கும் போகாமல், வடக்கும் போகாமல், வடகிழக்காக, பெருமுழக்கத்தோடு காற்றில் கிளர்ந்து எழுந்து தீப்பரந்து சிதறி வீழ்ந்தது. அதைக் கண்டு, நாம் பலரும் பல்வேறு இரவலரும், “பறை ஓசைபோல் ஒலிக்கும்அருவிகள் நிறைந்த நல்ல மலைநாட்டின் தலைவனாகிய சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை நோயின்றி இருப்பது நல்லது” என்று வருந்திய நெஞ்சத்துடன் வாடிக் கலங்கி அஞ்சினோம். அந்த நட்சத்திரம் விழுந்து இன்று ஏழாம் நாள். இன்று, வலிய யானை தன் தும்பிக்கையை நிலத்தில் வைத்து உறங்கியது. வாரால் பிணிக்கப்பட்ட முரசு கிழிந்து உருண்டது. காவலுக்கு அடையாளமாக இருக்கும் கொற்றக்குடையின் காம்பு ஒடிந்து சிதைந்தது. காற்றைப்போல் விரைந்து செல்லும் குதிரைகள் நிலைகலங்கி நின்றன. இந்நிலையில், பகைவரைக் கொல்லும் வலிமையும், தன்னை நாடி வந்தவர்களுக்கு அளவற்ற பொருட்களை அளித்த கொடைவள்ளலும், நீலநிறமுடைய திருமால் போன்றவனுமாகிய சேரன் விண்ணுலகம் அடைந்தான். தன் மனைவியர்க்கு உறுதுணையாக இருந்தவன் அவர்களை மறந்தனனோ?
இங்கு பாடப்பட்ட சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தொண்டி என்னும் ஊரைத் தலநகராகக்கொண்டு கி. பி. 200 - 225 காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது (சுப்பிரமனியன், பக்கம் 45). பாடலின் பின்னணி: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் இறுதி நாட்களில், பங்குனி மாதத்தில் வானிலிருந்து ஒரு விண்மீன் (நட்சத்திரம்) தீப்பிழம்புபோல் ஒளியுடன் எரிந்து விழுந்தது. பங்குனி மாதத்தில் விண்மீன் எரிந்து விழுந்தால் அரசனுக்கு கேடுவரும் என்பதை கூடலூர் கிழார் நன்கு அறிந்திருந்தார். அந்த விண்மீன் எரிந்து விழுந்ததையும், மற்றும் சில விண்மீன்களின் நிலையினையும் ஆராய்ந்த கூடலூர் கிழார், சேரன் இன்னும் ஏழு நாட்களில் இறப்பான் என்பதை உணர்ந்தார். அவர் எண்ணியதுபோல் ஏழாம் நாளில், சேரன் இறந்தான். அன்று, வேறு சில தீய நிமித்தங்களும் நிகழ்ந்தன. விண்மீன் எரிந்து விழுந்ததையும், மற்றும் அப்பொழுது நிகழ்ந்த தீய நிமித்தங்களையும், சேரன் இறந்ததையும் இப்பாடலில் கூடலூர் கிழார் வருத்தத்துடன் கூறுகிறார்.