அந்தணர் , பார்ப்பார் , ஐயர் ஆகிய சொற்கள் இக்காலத்தில் பிராமண சமூகத்தினரைச் சுட்டும் சொற்கள் எனப் பொதுவாகக் கருதப்படுகின்றன . ஆனால் , சங்க நூல்களில் பிராமணர் என்னும் சொல் வழக்கில் இல்லை . அந்தணர் , பார்ப்பார், ஐயர் என்னும் சொற்களால் சுட்டப்பட்டோர் அக்காலத்தில் எவ்வாறு வாழ்ந்து வந்தனர் என்பது இப்பகுதியில் விளக்கப் படுகிறது . பண்டைத்தமிழ் மக்களுள் ஒழுக்கத்தாலும் பண்பாட்டாலும் சிறப்புற்று விளங்கியவரை அந்தணர் என்று அழைத்தனர் . அவர்கள் எத்தகையவர் என்பது திருக்குறளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது . எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான நிலம்போல ஈர நெஞ்சம் ( அன்பு ) உடையவர்களாய் வாழ்ந்த அந்தணரை அறவோர் என்கிறோம். 350
இன்மையே 351 அறம் ஆகும் . அது இல்வாழ்க்கை , 35 : துறவு என்னும் இருவகையான வாழ்க்கைப் பகுப்பைக் கொண்டது . இந்த நெறியில் வாழ்ந்தோர் அந்தணர் எனப் மனமாசு பூணல் 353
346 கலி .. 98 : 2-5 ; சிலப் . 14 : 126
347 ஷ 69 : 12-13
348 நற். 170 : 2-4
349 குறள் . அதி . 92
B50 குறள் . 30
351 ஷ 34
352 ஷ 49
353 க்ஷ 23
பட்டனர் . இவர்கள் ஐம்புலன்களை வகைதெரிந்து ஆள்பவர்கள் ; பண்புக் குன்றின்மேல் ஏறி நிற்பவர்கள் ; நிறை மொழி மாந்தர் என்போரும் இவர்களே .354 நூல் , கரகம், முக்கோல், மணை ஆகியவை அந்தணர்களுக்கு உரியவை .355 ( அரசர்களுக்கும் இவை உரியனவாய் அமை தல் உண்டு . ) 356 புறத்திணைகளில் வரும் பாடாண் டிணைத் துறைகளில் இவர்கள் உரிமைப் பெயரால் குறிப்பிடப்படுதலோ, நெடுந்தகை, செம்மல் என்னும் சிறப்புகளைப் பெறுதலோ இல்லை .357 ஊரின் பெயர் , பொதுப்பெயர் , தொழிலாற்றும் கருவியின் பெயர் முதலானவற்றைச் சார்த்தியே இவர்களது பெயர் குறிப்பிடப்பெறும் .358 பண்புச் சொற்களாலும் இவர்கள் குறிப்பிடப் பெறுவர் .359 போர்ப்படையில் இவர்கள் இடம்பெறுதல் இல்லை . 360
மதுரை , 361 புகார் , 36 ஆமூர் 363 முதலான நகரங்களில் அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர் . அவர்களுக்கு அரண்மனையின் கதவு எப்பொழுதும் திறந்திருந்தது . 364 வேள்வித் தூண் நட்டு இவர்கள் தங்களது கடமைகளைச் செய்தனர் .365 குன்றுகளைக் குடைந்தாற்போன்ற பெரிய வீடுகளில் இவர்களுள் சிலர் வாழ்ந்தனர் . மாலையில்ல் பொருள் விளங்கும்படியும் , காலையில் வண்டுகள் ஒலிப்பது போலவும் தங்களது மறை நூல்களை இவர்கள் ஓதினர் .366 பொழுது போன பின் வளமனையில் வாழ்ந்த தம் மனைவியர் விளக்கு ஏற்றி வைக்க , இவர்கள் தமது வீட்டில் இருந்துகொண்டே மாலைக்காலத்தில் வழிபாடு செய்தனர் .367 இமய மலைச்சாரலில் வாழ்ந்துவந்த அந்தணர் மாலைக்காலத்தில் முத்தீ வளர்த்து வழிபாடு செய்தனர் .368 வேள்விசெய்யும் அந்தணர்களுக்குப் பெறுதற்குரிய பொருளை , அவர்கள் ஏந்தும் கையில் நீர் ஊற்றும் சடங்கோடு கொடுப்பது உண்டு .369 சிலர் புலன் அழுக்கு அற்றவர்களாயும் , பரிசில் பெற்று வாழும் புலவர்களாயும் வாழ்ந்தனர் .370 உண்டு .373
ஓதல், பிறரை ஓதும்படி செய்தல், வேள்வி செய்தல், பிறரை வேள்வி செய்யும்படி செய்தல் , பிறருக்கு ஈதல் , பிறரிடமிருந்து தாம் ஏற்றல் ஆகிய ஆறு வாழ்க்கை நெறிகளை உடையவர் களாய் அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர் . 371 மாலைக் காலத்து ஒளிக்கு ஏற்ப இவர்கள் செந்தீ மூட்டி வழிபட்டனர் .372 முக்கோலை வைத்திருக்கும் இவர்கள் இந்த வழி பாட்டில் தமது முதுமொழியை நினைத்த வண்ணம் அசையாமல் அமர்ந்திருப்பது இவர்கள் வேள்வி செய்யும்போது புகை மிகு தியாகத் தோன்றும் .374
திருமணம் செய்து கொள்வதற்காகத் தான் விரும்பிய ஒருவனுடன் தன் தாய் , தந்தையர் அறியாமல் தனி வழி பில் செல்லும் ஒருத்தி , தான் இவ்வாறு செல்லுவதைத் தன் பெற்றோரிடம் தெரிவிக்குமாறு வழியில் நடந்து வரும் அந்தணர்களிடம் கேட்டுக்கொள்வதும் , 315 கேட்டுக்கொண்ட வண்ணம் இவர்கள் செய்தியைச் சொல்லுவதும் 378 உண்டு . இதுபோன்ற செய்தியைக் கூறும் அந்தணர்கள் நிழலுக்காகக் குடைபிடித்துச் செல்வதும் , உறியில் தொங்கும் கரகத்தையும் , உரைசான்ற முக்கோலையும் தோளில் சுமந்து செல்வதும் , உள்ளத்தில் ஒரே குறிப்போடு செல்வதும் 377 உண்டு . மறைபாடும் நாவினையுடைய இவர்களில் சிலர்திறமை மிக்க செயல்களைச் செய்யும் கோட்பாடு உடையவராக விளங்கினர் . 378
தமிழ்நாட்டில் கள் உண்பவர், கள் உண்ணாதவர் என இருதிறப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர்; அந்த இருதிறத்தாரும் அவரவர்களுக்கு ஏற்றாற்போல் கடைப்பிடித்து வந்த இருவேறு வகை றச்செயல்கள் இருந்தன . அந்த இரண்டு வகையான அறச் செயல்களையும் வர்களுக்கு எடுத்துரைத்து வாழ்ந்தவர்கள் இருவேறு அந்தணர் ஆவர் . இவர்களுக்கு உரிய நூல்களும் இருவேறு வழியை எடுத்துரைப்பனவாய் இருந்தன . இவர்கள் அவரவர்களது நூல் நெறியிலிருந்து வழுவாது வாழ்ந்து வந்தனர் ; இவர்கள் இவ்வாறு வாழ்ந்ததால் மழை பொழிந்தது என்றுகூட நம்பப்பட்டது. 379
வகை பூணூல் மார்பும் , கணிச்சியும் மழுவும் ஏந்திய கையும் , புரிசடையும் உடைய கடவுளான சிவபெருமான் ஓர் அந்தணன்
371 பதிற் . 24 : 6-7
372 கலி . 119 : 12-13
373 க்ஷ 126 : 4
374 ஷ 36:26
375 ஐங்குறு . 384 : 1-2
316 ஷ 387 : 4-5
377 கலி . 9 : 1.4
378 ஐங்குறு . 387 : 1-2
379 கலி . 99 : 1.5
று , 389 என்று குறிப்பிடப்படுகிறார் . 380 அந்தணர்கள் வினவிய விடைகளுக்காக இந்தச் சிவபெருமான் மறைகளைச் சொன்னார் .381 இதனால் போலும் மறை ஓதும் அந்தணர்கள் இவரைப் பெருமையாகப் பேசினார்கள் . 38 பனைக் கொடிக் கடவுள் லராமனும் அந்தணரது அருமறையில் போற்றப்படுகிறார் . திருமால் , பிரமன் , முருகன் ஆகியோர் அந்தணர் ளின் மறையில் தெய்வங்களாக விளங்குகின்றனர் .383 வியாழன் என்னும் மீன் , சிவபெருமான் , பிரமன் ஆகியோர் அந்தணர் என்னும் சொல்லாலேயே குறிப்பிடப்படுகின்றனர் .314 அந்தணர்கள் திருமாலுக்குச் சமமானவர்கள் .385 திருமாலின் வலப்பக்கமாக இருந்து கொண்டு அந்தணர்கள் அவனை வணங்கினர் ; 386 முருகக் கடவுள் விரும்பி ஏற்கும் அறத்தைச் செய்வார்கள் .387 நீராடும் மக்கள் உண்டு உகுத்த சாறு , 388 நெய் முதலானவையும் , சூடி எறிந்த பூக்களும் கலந்து ஆற்றில் வரக்கண்டு , அந்தணர்கள் அந்த நீரில் நீராடாது நிற்கும் அளவுக்குத் தூய்மை உடையவர் களாக விளங்கினர் . 390 அந்தணர்களில் ஒருபாலாரும் வாணிகர்களில் சிலரும் வடமொழியை அறிந்திருந்தனர் .391
விதலைப் பருவம் எனப்படும் முன்பனிப் பருவத்தில் 392 பிற்குளம் என்னும் நாள்களோடு 393 தொடர்புடைய தாய்த் திருவாதிரை என்னும் நாள்மீனுக்கு உரிய நாள் வரும்போது விரி நூல் அந்தணர் விழாத் தொடங்கினர் . அந்த விழாவில் புரிநூல் அந்தணர் பொற்கலன்களை ( விரி நூல் அந்தணர் நல்க ) ஏற்றனர் .394 அந்தணர்களில் ஒருவன் நாய்க்கறி தின்றதாகக் 395 குறிப்புக் காணப்படுகிறது .
அந்தணர் ஒன்றுபுரி கொள்கை உடையவர் ; இரு பிறப்பாளர் ; முத்தீ வளர்ப்பவர் ; நான்மறை அறிவு உடையவர் ; ஐம்பெரும் வேள்வி செய்பவர் ; ஆறு தொழில் புரிபவர் .396 393 உ
தலைவன் தலைவியரின் வாழ்வு நெறியில் அமைய உதவும் வாயில்களாய் அமைந் தவர்சளுள் பார்ப்பாரும் இவர்கள் தலைவன் , தலைவியரின் களவு வாழ்க்கை நெறியை அறிந்து அவர்களுக்கு உதவுவது உண்டு . 398 தலைவனும் தலைவி யும் திருமணம் செய்துகொண்டு வாழும் காலத்திலும் அவர்களுக்கு உதவியாக இருப்பர் . ( அறிவரும் இவ்வாறு வாழ்ந்தனர் . ) 399 தலைவன் தன் தலைவியைப் போர் காரணமாகப் பிரிந்திருக்கும்போது இன்ப நிலையால் ஏங்கி வருந்துவதைத் தலைவனிடம் எடுத்துக் கூறுதல் , இந்த நிலையில் தலைவன் தெளிய வேண்டிய உண்மை நிலை இது என்று அவனிடம் உரைத்தல் , அவன் குறிப்பினை அறிந்து வந்து தலைவனிடம் கூறுதல் , ஆனிரைகள் மீளுதல் முதலான நன்னிமித்தங்களை அறிந்து தலைவியிடம் கூறுதல் , தலைவன் பிரிந்து சென்றான் என்னும் செய்தியினைத் தலைவியிடம் கூறுதல் , தலைவியைவிட்டுப் பிரிந்து செல்லுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தலைவனிடம் கூறுதல், தலைவன் தலைவியரிடையே தூது சென்று இவை போன்ற பிறவும் கூறுதல் முதலானவை பார்ப்பாருக்கு உரிய செயல்களாகும் .400 இவ்வாறு தலைவன் தலைவியரோடு அன்றி, அவர்கள் இணைந்து வாழத் துணைபுரியும் பிறரோடும் பார்ப்பார் உரையாடுவர் . ( அறிவரும் இவ்வாறு உரையாடுவர் . ) 401 பார்ப்பாருக்கு உரிய தொழில் , ஆறு வகையில் அமைந்திருந்தது . 102 பிறர் , வேந்தனுக்காகத் தூது செல்வதைப் போலவே பார்ப்பாரும் தூது செல்வர் . 403
சடைமுடி அணிந்த சிவபெருமானை வழிபட்டவர்களும் அறம் , பொருள் ,இன்பம் , வீடு என்னும் நான்கு நெறிகளைக்கூறும் முதுநூலின் துறை இருபத்தொன்றையும் தெளிவாகக் கற்றவர் களும் , இந்த முது நூலில் மாறுபட்ட கருத்தை உடையவரின் வலிமையைச் சாய்ப்பதற்காக அந் நூலிலுள்ள உண்மையையும் பொய்யையும் வேறுபடுத்திக் கொண்டவர்களுமாகிய உரவோரின் வழிவந்தவர் பார்ப்பார் . இவர்கள் மான்தோலும் பூணூலும் அணிந்திருந்தனர் ; நெய்யை ஊற்றிப் பல வேள்விகள் செய்தனர் ; பல துணைவியருடன் புகழோடு வாழ்ந்து வந்தனர் .404
397 தொல் . பொருள் . கற்பு . 191 : 1
398 ஷை செய் . 490 : 1
399 ஷை 491 : 2-3
400 ஷைகற்பு . 175
401 ஷை செய் . 498 புறத் . 74 : 1 ( தொல் . பொருள் - கற்பு . 175 - ல் கூறப் பட்டுள்ள ஆறு செயல்கள் என்று கொள்ள இடம் உண்டு )
402 ஷை
403 கள . 37 ( சங்க காலத்துப் பிற் பகுதியைச் சேர்ந்த இலக்கண் நூல் )
404 புறம் . 166 : 17
படிவ நோன்பு கொண்டிருக்கும் பார்ப்பார் காவிக்கல் கரைத்த நீரில் தமது ஆடையைத் தோய்த்து அணிவது வழக்கம் . கையில் முக்கோலை வைத்துக்கொண்டிருப்பதும் உண்டு 405 வேள்வி செய்யாத பார்ப்பார் சங்குகளை அறுத்து வளையல்கள் செய்து வாழ்ந்து வந்தனர் .406 போர்க்காலத்தில் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொள்ளும்படி பார்ப்பன மக்கள் முன்பே அறிவிக்கப் பட்டனர் .407 பார்ப்பாரைத் துன்புறுத்தல் கொடுமையாகும் எனக் கருதப்பட்டது . 48 பொதுவாக , மன்னர்கள் பார்ப்பார் நோகும்படியான யல்களைச் செய்யவில்லை .409 வாடிய வயிற்றோடு பட்டினி நோன்பு இருக்கும் படிவப் பார்ப்பார் இரவோடு இரவாக மன்னனுக்கு அறிவுரை கூறியதும் உண்டு . அவர்களது அறிவுரையைக் கேட்ட மன்னன் போர் செய்வதைக் கைவிட்டதும் உண்டு . இரவோடு இரவாக நடந்த இதுபோன்ற நிகழ்ச்சிகளை வேளாசான் எனும் புலவர் அறிந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார் .410 வேள்வியில் பார்ப்பார் கையேந்தி நின்றனர் . அவர்களது கையில் பூ , பொன் முதலானவை நீரோடு சொரியப்பட்டன ; ஒன்று புரிந்து அடங்கிய இரு பிறப்பாளர் முத்தீ வளர்த்தனர் .411
பார்ப்பன மகளிர் மாலைப் பொழுதில் காட்டு முல்லைப் பூவை அணிந்து கொள்வது வழக்கம்.12 நோன்பு இருந்து உண்ணக் கூடிய பார்ப்பன மகன் , நாரை உரித்து விட்டு எஞ்சிய முருக்க மரத்தின் தண்டையும் கமண்டலத்தையும் கையில் வைத்திருப்பது உண்டு . எழுதாது கற்கப்பட்ட இவனது வேதத்தில் , பிரிந்தாரைக் கூட்டிவைக்கும் மருந்து பற்றிய செய்தியில்லை .413
405 முல்லைப் . 37-38
408 அகம் . 24 : 1-2 வளையல் விற்றல் , தலைவன் தலைவியரி டையே தூது செல்ல வாய்ப் பாய் அமைந்தது ( மறை நூல் ஒழுக்கத்திலிருந்து வழுவி வந்த பூணூல் அணிந்த மார்பினை உடையவர் மதுரை நகருக்குப் புறத்தே இருந்தபுறஞ்சேரியில் வாழ்ந்து வந்தனர். சிலப். 13 : 38-39 )
407 புறம் . 9 : 1
406 ஷ 34:20
409 ஷை 43:14
410 மதுரை வேளாசான் - புலவர் புறம் . 305 : 2-5
411 ஷ 367 : 4-13
412 நற் . 321 : 3-4
413 குறுந் . 156 : 2-7 ( அன்பின் ஐந்திணை பற்றிய விளக்கம் இல்லை )
நான்மறை முனிவர்கள் மன்னரிடம் கையேந்தி நிற்கும் போது மன்னன் தலை தாழ்த்தி அவர்களுக்கு வணக்கம் செலுத்துதல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டான் .414 மன்னன் வேள்வி செய்தபோது ஆன்ற கேள்வியும் அடங்கிய கொள்கையும் உடைய நான்மறை முதல்வர் அவனுக்குச் சுற்றத்தாராக அமைந்தனர் .415 அறம்புரி கொள்கை நான்மறை முதல்வரின் பசும்புல்லைப் பரப்பி அதன் மீது நோய்வாய்ப்பட்டு இறந்தவரின் உடலைக் கிடத்தி , விழுப்புண்ணின் அடையாளமாக அந்த உடலில் வாளால் வடுச்செய்து அடக்கம் செய்வது வழக்கம் .416
சில மன்னர்கள் பார்ப்பாருக்குப் பணிதல் உண்டு .417 பசுவும் ஊரும் பார்ப்பாருக்குக் கொடையாக வழங்கப்பட்டன.418 பார்ப்பாரிற் பெரியோரைக் கொண்டு மன்னன் பத்து வேள்வி செய்தலும் , வேள்வியின் முடிவில் பார்ப்பனப் புலவன் தன் மனைவியுடன் துறக்கம் புகுவதாக நம்புவதும் உண்டு .419 பார்ப்பார் காதில் கடுக்கன் அணிந்து கொண்டனர். தண்டு, குண்டிகை, வெண்குடை , காட்டம் 20 முதலானவற்றை வைத்திருந்தனர் ; 411 காலணி அணிந்திருந்தனர் . 422 வேதம் ஓதும் சிறுவர்களுக்குப் பரிசுகள் தந்து ஊக்கமளித்தனர் .423 மன்னனை மறைவழியில் வேள்வி செய்யத் தூண்டினர் .424 பார்ப்பனச் சிறுவர்கள் குடுமித் தலையுடன் காணப்பட்டனர் ;445 பூணூல்
கடகம் . தோடு முதலானவற்றை அணிந்திருந்தனர் எனலாம் .426 பார்ப்பனக் கோலத்தில் தோன்றுவோர் யாராய் இருந்தாலும் அவர்களை யாரும் துன்புறுத்துவது இல்லை .427 கற்புநெறி தவறாது வாழ்ந்து வந்த பார்ப்பன மகளிர் வரலாறுகளும் , 448 நெறி என்னும் தவறி வாழ்ந்த பார்ப்பன மகளிர் வரலாறு களும் 429 இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன
414 புறம் . 6 : 17-20
415 ஷை 26:13
416 க்ஷ 93 : 7-11
417 பதிற் . 63 : 1 (நறவு என்னும் பட்டினத்தில் இருந்த அரசவையே கபில் அந்தணப் புலவரைப் பணிந்து வர வேற்றதை இதனோடு ஒப்பிடலாம். பதிற் . 85: 8-13 )
பண்டைக்காலத்தில் ஐயர் என்னும் சொல் உயர்ந்தவர் , சால்புடையவர் என்னும் பொருள்களில் வழங்கப்பட்டுள்ளது . ஐயர் எனும் சொல் , சமுதாயப் பாகுபாட்டில் குறிப்பிட்ட ஒரு சாதியினரை , அக்காலத்தில் சமுதாயத் தலைவர்களைச் சுட்டியதாகவே கொள்ளலாம் . சுட்டியதாகக் கூறுவதற்குச் சான்றில்லை . ஒருவனும் ஒருத்தியும் தாமே கூடி என்றும் நெறி பிறழாது வாழ்ந்துவரும் காலத்தில் சில பொய்மை உரைகளும் நெறி தவ றல்களும் நிகழவே அவற்றைக் களையும் முகத்தான் ஐயர் திருமணச் சடங்கினை வகுத்தளித்தனர் .430 குழந்தை யைப் பெற்றெடுத்துப் புனிறு தீர்ந்தபின் நீராடிய தாயின் நலனை நோக்கி அமரர்களை வழிபடக் கருதித் தலைவன் ‘ ஐயர் களுக்குப் பெருஞ் சிறப்புச் செய்தல் உண்டு .431
சங்ககாலத்தின் முற்பகுதியில் தோன்றிய அகநானூறு , புறநானூறு முதலான நூல்களில் ஐயர் என்னும் சொல் அகவையில் மூத்த அண்ணன் , தந்தை ஆகியோரையே எல்லா
இடங்களிலும் உணர்த்துகிறது குறிஞ்சிப்பாட்டு சான்றாண்மையும் , வியத்தகு பண்பும் , இயல்புமாறா நன்னடத்தை யும் உடையவர் ஐயர் என்று குறிப்பிடுகிறது .433
432 ஐயர் மகிழுமாறு மன்னன் செயலாற்றுவது உண்டு .434 மாலை யில் ஐயர் அழல் எடுப்பர் .135 ஐயர்கள் அமைத்துத் தந்த கல்லின்மீது சாரணர் வந்து இருந்தனர் என்று லப்பதிாரத்தில் குறிப்பிடப்படுகிறது .436 இவற்றிலிருந்து சமுதாயத்தில் உயர்ந்தோராக ஐயர் கருதப்பட்டனர் என்பது புலனாகின்றது . பிற்காலத்தில் ( விசயநகரப் பேரரசர் காலத்தில் ) குறிப்பிட்ட ஒரு சமுகத்தினரைக் குறிக்கும் சொல்லாக ஐயர் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது .
431 அந்தணர் , சான்றோர் முதலான சிறந்தவர்களின் ஒழுங்கு நெறியைத் தலைவன் தலைவிக்கு எடுத்துக்கூறும் பாங்கோடு இதனை ஒப்பிட்டு நோக்கலாம். தொல் . பொருள் . கற்பு . 144 : 15.18