தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்


Guru

Status: Offline
Posts: 1049
Date:
தமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்
Permalink  
 


 

தமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்   இராம் பொன்னு டிசம்பர் 26, 2017 

‘வேற்றுமையுள் ஒற்றுமை’ என்ற பாரதப் பண்பாட்டின் தனித்துவமிக்க தன்மைக்கு வலிமை சேர்ப்பவை இராமாயணம்மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள் எனும் நெடுங்கதைகளாகும். ஒரு கதையாக- இலக்கியமாக நின்றுவிடாமல், இன்றுவரை பாரதமக்களின் நினைவுகளில் நீங்காது நின்றிலங்கி, நாள்தோறும் அவை ஊடாடிக் கொண்டிருக்கின்றன. இதிகாசங்கள் சித்தரிக்கும் மாந்தர்கள் மற்றும் நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்திப் பேசுவதில் பெருமைகொண்டு, தத்தம் கிராமங்களை-திருக்கோயில்களை-நீர்நிலைகளை- குன்றுகளை  முன்னிலைப்படுத்திட முயற்சிக்கும் நிலைப்பாடு பாரதம் முழுவதும் பரந்து காணப்படுகிறது.

    வால்மீகி முனிவர் கூறுவது போன்று, மலைகளும் நதிகளும் இவ்வுலகில் இருக்கும்வரை இராமாயண  கதையும் நிலைத்திருக்கும். தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்டிட மனிதனாக அவதாரம் எடுத்த மாலவனின் ஏழாவது அவதாரமாக-சிறந்த லட்சியவாதியாக-உத்தமசீலனாக காப்பியத்தில் படைக்கப்பட்ட இராமன் எளிதில் தெய்வத்தன்மையை பெற நேர்ந்தது. மேலும், இராமனை தங்கள் மனோபாவத்தால் புனைந்துபுனைந்து அத்தெய்வத்தன்மை புலப்படும் செய்திகளை பாரத நாட்டவர்கள் தங்கள் கற்பனைக்கேற்றவாறு உருவாக்கி கற்பிக்கலாயினர். அதுமட்டுமன்றி, ஆங்காங்கே வழக்காற்றிலிருந்த செய்திகளை இராம கதையுடன் இணைத்துப் பார்ப்பதில் இன்பூறு எய்தினர். இராமன் தான் பாரதத்தின் அடையாளம். பாரத பண்பாட்டின் திருக்கோலம். பாரதம் புகட்டும் ஒழுக்கநெறியின் சிகரம். இராமன் நேபாளம் முதல் இலங்கை வரை நடந்ததால் மொத்த இந்தியாவே புண்ணிய பூமியாக பாரத நாட்டவர்களால் போற்றப்படுகிறது. ராமனின் வரலாற்றை மனித குலம் உள்ளவரை மறைக்கவோ மாற்றவோ மறுக்கவோ முடியாதபடி அவன் திருப்பாதம் பட்ட புண்ணிய தலங்கள் இந்தியா முழுவதும் வரலாற்றுச் சின்னங்களாக பரவிக் கிடக்கின்றன.

    இராமாயணக் கதை தமிழ் நாட்டில் சங்க காலத்திலேயே அறியப்பட்டிருந்தது என்பதை புறநானுறு 378ஆம் பாடலும்அகநானுறு 70ஆம் பாடலும் நினைவூட்டுகின்றன.. பல்லவர்கால பக்தி இயக்கத்தினபோது மாலடியார்கள் மாலவன் மீதான பக்தியைப் பரப்ப இராமகதையினை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். திருவாய்மொழியில் நம்மாழ்வார் கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோஎன்று இராமனுக்கு வைணவ மரபில் மிக உயரிய இடத்தை அளிக்கின்றார். பிற்காலச் சோழர் காலத்தில் இராமசரிதப் பகுதிகளை சமய ஆன்றோர்கள் எடுத்து, சாங்கோபங்கமாக வியாக்கியானம் செய்தனர். தமிழ்மண்ணில் வேரூன்றிய இராமபக்தி இராம கதையின் தேவையை உணரச் செய்தது. அத்தேவையை நிறைவு செய்யும் விதமாக, வால்மீகியின் இராமாயணக் கதையைத் தழுவித் தமிழ் மரபிற்கேற்ற கவிச்சக்கரவர்த்தி கம்பன் சுமார் 22,000பாடல்களில் இராமாயணத்தை எழுதினார். கம்பர் தான் பாடிய இராமாயணத்திற்கு இராமகாதை என்றே பெயரிட்டார். இது, நேர்மறையாக அறத்தை விளக்கும் ஓர் ஒப்பற்ற நூலாகத் திகழ்கிறது. இராமகாதையில் சித்தரிக்கப்பட்ட நிகழ்வுகள் தமிழ்மக்களின் நினைவுகளில் ரீங்காரமிட்டு, அவர்கள்தம் ஊர்களின் பெயர்களில்- இறை வடிவங்களில்- இறை நாமங்களில்- அவர்கள் காணும் இயற்கை வடிவங்களில் நாள்தோறும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அந்த எதிரொலியின் நாதமே இக்கட்டுரையில் உணரப்படுகிறது.

திருவான்மியூர்: இராமாயணத்தை வரித்துக் கொடுத்தவர் வால்மீகி. அவர் தவம் செய்கையில் அவர் மீது புற்று உருவாகியதனால் ‘வால்மீகி என்று பெயர் பெற்றார். அப்படி அவர் தவம் புரிந்த- அவருக்கு இறைவன் காட்சியளித்த தலமே வான்மிகியூர் என்று வழங்கப்பெற்று,  திருவான்மியூர் என்று இன்று பேசப்படுகிறது.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
RE: தமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்
Permalink  
 


தாடகை

தாடகைமலை: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் தெரிசனம்கோப்பு என்ற ஊரின் அருகில் ஒரு நீண்ட பாறையொன்றுள்ளது. இது,  செங்குருதி தோய பேருருவம் கொண்ட ஒரு பெண் தலைவிரி கோலத்துடன் படுத்துக் கிடப்பது போன்று காணப்படும். பூதாகாரமான தலையும்மார்பும்வயிறும்கால்களும் இருப்பது போலத் தோன்றும். இராம அவதார காலத்தில் அரக்கியான தாடகை வாழ்ந்துவந்த மலையே தாடகைமலை என்று கூறப்படுகிறது.

தெரிசனம்கோப்பு: நாகர்கோவிலில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. விசுவாமித்திர முனிவர் யாகம் நடத்துவதை தடுத்துநிறுத்தும்முகமாக அரக்கியான தாடகை பொருட்களை எடுத்து யாகக் குண்டங்களில் எறிந்தாள். அவற்றைத் த்டுக்கும்பொருட்டு .இராமன் தன் அம்புகளைக் கொண்டு யாகக் குண்டத்தின்மீது விதானம் அமைத்து கொடுத்த இடமே தெரிசனம்கொப்பு என்று இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. இராமாயண காலத்து நிகழ்ச்சியின் நினைவாக திருச்சர(ன)ம் கோப்பி என்ற பெயர் பெற்று, பின்னாளில் திருச்சனம் கோப்பு ஆகி, இன்று தெரிசனம் கோப்பு என்று இவ்வூர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

வில்லுக்கீறி: இவ்வூர் நாகர்கோயில்-திருவனந்தபுரம் சாலையில் தக்கலைக்கு தெற்காக நான்கு மைல் தூரத்தில் உள்ளது. தாடகையை கண்ட இராமன், பெண் என்று கருதி தயக்கமுற்று நிற்கவே, அவளை அரக்கி என்று கூறி தயக்கம் கொள்ளாமல் அம்பு எய்துமாறு விசுவாமித்திர முனிவர் கூறவே, அதுகாறும் தரையில் ஊன்றியிருந்த வில்லை கையில் எடுத்து நாணேற்றித் தாடகையைக் கொன்றான். இராமன் தன் வில்லை தரையில் ஊன்றி இருந்த, அதாவது, தரையில் வில் கீறிய இடமே வில்லுக்கீறி என்ற பெயர் பெற்றது.

விஜயாபதி: கூடங்குளத்தில் இருந்து தெற்காக கடலோரத்தில் ஐந்து கி.மீ. தொலைவில்  இக்கிராமம். அமைந்துள்ளது.  இராம, இலட்சுமணர்கள்    தாடகையைக்  கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி பாவம் (ஒரு உயிருக்கு தீங்கு விளைவித்தாலோபாதிப்பை ஏற்படுத்தினாலோ ,உயிரை எடுத்தாலோ உருவாகும் தோசம்) நீங்கிடயாகம் செய்த இடமே விஜயாபதி ஆகும். விசுவாமித்திர முனிவரால் ஹோமகுண்ட கணபதி கோயிலும், மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் இங்கு உருவாக்கப்பட்டதெனவும்,.இன்றும் சூட்சுமமாக விசுவாமித்திரர் இங்கு வாழ்ந்து வருவதாகவும் நம்பப்படுகிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

கானகத்தில்

குகன் பாறை: கழுகுமலையில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் வழியில் 50மீ உயரமுடைய பாறை oஓன்று அமைந்துள்ளது. இப்பாறையும் இதையொட்டியுள்ள கிராமமும் குகன்பாறை என்றே அழைக்கப்படுகிறது. ராமன் வருகைக்காக இப்பாறையில் தான் குகன் காத்திருந்ததாக  கூறப்படுகிறது..

திருமலை: சிவகங்கை அருகேயுள்ள திருமலை கிராமத்தில் உள்ள சிறிய மலையில் இராமனும் சீதையும் தங்கள் வனவாசத்தின்போது, தங்கி ஒய்வு எடுத்ததாகவும், இங்கு சீதை மஞ்சள் உரசி குளித்த இடம் மஞ்சள் நிறமாக உள்ளதாகவும், சீதை தண்ணீரை கையினால் தள்ளிவிட்ட இடத்தில அவரது விரல் பதிந்த இடம் இன்றும் காணப்படுவதாகவும் இப்பகுதி மக்களால் சொல்லப்பட்டுவருகிறது.

கூந்தலூர்: கும்பகோணம்-பூந்தோட்டம் சாலையில் நாச்சியார்கோயிலுக்கு கிழக்காக பத்து கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் அமைந்துள்ள கிராமம். இங்குள்ள ஜம்புகாரண்யேஸ்வரர் கோயிலின் குளத்தில், சீதா தேவி நீராடியபோது ஏழு முடிகள் உதிர்ந்தது எனவும், ஆகவே கூந்தல் உதிர்ந்த ஊர் என்ற பெயர் ஏற்பட்டு, அதுவே பின்னர் கூந்தலூராக மருவிற்று என்றும் கூறப்படுகிறது. கோயிலின் வடகிழக்கு முலையில் உள்ள  தீர்த்தம்  சீதா தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.(தினத்தந்தி, மதுரை, 25 செப்’ 2005, ப.14)

வனவாசி: சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில் அமைந்துள்ள கிராமம். இராமன் வனவாசியாக அலைந்து திரிந்த இடமாதலால்  இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

கொங்கரத்தி: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கண்டரமாணிக்கத்திலிருந்து 2கி.மீ. தொலைவில்  உள்ள கிராமம். சூர்ப்பனகையின் கொங்கைகளை இலக்குவன் அறுத்த இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது என்று கூறப்படுகிறது.

வளையுமாபுரம்: மாரீசனாகிய பொன்மானை இராமன் துரத்தி வர, அம்மான் ஓடி வளைந்து சென்ற இடமாதலால் ‘வளையும் மான் புரம’என வழங்கப்பெற்று, பின்னர் வளையுமாபுரம் என்று மருவியுள்ளதாக கூறப்படுகிறது.

பொய்மான்கரடு: சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கிராமம். பொய்மான் வடிவெடுத்த மாரீசன் இம்மலைப் பக்கம் ஓடியதால் இவ்விடம் பொய்மான்கரடு என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

வலங்கைமான்: கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கி.மீ. தொலைவில் tகுடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஊர். மாரீசன் பொன்மானாக வடிவெடுத்துவர, சீதையின் வேண்டுதலின்படி,  இராமன் அதனை துரத்திச் செல்ல, நெடுந்தொலைவு சென்ற மான் இவ்வூரின் வலப்புறமாக திரும்பி வளைந்து ஓடியதால் வலங்கைமான் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

வீரட்டிக்குப்பம்: விருத்தாசலம்-பண்ருட்டி சாலையில் வீரட்டிக்குப்பம் அமைந்துள்ளது மாரீசன் பொன்மானாக வந்ததை சீதை கண்ட இடமே விருத்தாச்சலத்தை அடுத்துள்ள காணாது கண்டான் எனவும்அதை விரட்டிப் பிடித்து சீதையிடம் கொடுப்பேன் என இராமன் கிளம்பிய இடமே வீரட்டிக்குப்பம் எனவும் அழைக்கப் பெறுகின்றன. வனவாசத்தின் போது இராமன் வழிபட்ட சிவலிங்கம் இன்றும் வீரட்டிக்குப்பம் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ளது என்று அப்பகுதி மக்கள் சொல்கின்றனர்.

துடையூர்: திருச்சி-நாமக்கல் சாலையில் கொள்ளிடக்கரையில் அமைந்துள்ளது.மாரீசன் எனும் மாயமானை, இராமன் இவ்வூரில் தான் அதனின் தொடைப்பகுதியில் அம்பு தொடுத்துச் சாய்த்தார். எனவே இவ்வூர் தொடையூர் என்று பெயர் பெற்று, பின்னாளில் அதுவே துடையூர் என்றாயிற்று என்பர்.(சக்திவிகடன்,1-4-2014,ப.21)

நல்லாண்டார் கோவில் திருச்சியை அடுத்துள்ள மணப்பாறையில் ஆண்டவர் கோவில் என்றழைக்கப்படும்  நல்லாண்டார் கோவில் உள்ளது. மாயமானைப் பிடித்துத் தரும்படி சீதை இராமனிடம் கேட்க, இராமன் பின்தொடர, ஒரு கட்டத்தில் இராமன் அம்பினால் அதனை வீழ்த்த நேர்ந்தது. மான் விழுந்த பகுதி மானாங்குன்றம் எனவும்மானின் கொம்பு விழுந்த பகுதி பன்னாங்கொம்பு என்றும்மானின் கால்கள் விழுந்த பகுதி காவல்காரன் பட்டி என்றும்ரத்தம் தெறித்த பகுதி பத்தானந்தம் என்றும் வழங்கப்பட்டுவருகிறது. மாய மானை வீழ்த்தி மண்டியிட்டு நின்ற இடமே மான்பூண்டி நல்லாண்டார் கோவிலாகும் என்று கூறுகின்றனர்.(ஜி.கிருஷ்ணரத்னம்,இராமாயணத்துடன் தொடர்புடைய தமிழகசிவத்தலங்கள்அம்மன் தரிசனம், தீபாவளி மலர், 2011)

பாடகச்சேரி: கும்பகோணம் அருகே உள்ளது பாடகச்சேரி. சீதை இராவணனால் கவர்ந்து செல்லப்பட்டபோது தன்னை தூக்கிச் சென்றுள்ள இடம் தெரியவேண்டும் என்பதற்காக தன் அணிகலன்களை ஒவ்வொன்றாக கழற்றி வீசியதாகவும், அங்ஙனம் வீசப்பெற்ற அணிகலன்களுள் பாடகம்(கொலுசு) என்னும் அணிகலன் வீழ்ந்த இடமே பாடகச்சேரி என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

 

வனவாசி மலை கொப்பு கொண்டை ராயன்: (கொப்பை- பழங்கால காதணி) கொண்டை என்றால் மலைமுடி. கொப்பு போன்ற பழங்கால காதணி போன்ற மலை. இராவணன் சீதா தேவியை சிறை எடுத்துச் செல்கையில் சீதா தேவி தமது கணவருக்கு அடையாளம் செய்யும் பொருட்டு வான்மார்க்கத்தில் இராவணனது விண் ஓடத்தில் செல்லும்போது தன்னைத் தூக்கிச் செல்லும் வழித்தடம் தமது மணாளனுக்கு எளிதாக தெரியட்டும் என்பதற்காக தம்மிடம் உள்ள வளையல், காதணி போன்ற பொருள்களை ஒவ்வொன்றாக  கீழே போட்டுக் கொண்டே சென்றதாகவும், அங்ஙனம் கீழே போடுகையில் இவ்விடத்தில் கொப்பு விழுந்ததால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இங்குள்ள பெருமாள் கொப்புகண்டு கொண்ட ராயன் திருமால் என பெயர் பெற்றுள்ளான்.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 

 

 

சடாயு

பெருந்தோட்டம்: வைத்தீஸ்வரன் கோயிலுள் உள்ள இறைவனை சடாயு வழிபடவேண்டி, மலர் கொய்வதற்காக பூந்தோட்டம் ஒன்றிற்கு சென்றுவந்ததாக கூறப்படுகிறது. இது வைத்தீஸ்வரன் கோயிலுக்கு கிழக்காக 16 கி.மீ. தொலைவில் சீர்காழி அருகே உள்ளது. இப்பூந்தோட்டமே பின்னாளில் பெருந்தோட்டம் என்று பெயர் பெற்றது.

திருப்பள்ளியின் முக்கூடல்: திருவாருரிலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம். இறைவனை நோக்கி தவம புரிந்த சடாயு, ‘தனக்கு இறுதி எப்போது? என்று கேட்க, இறைவன், சீதையை இராவணன் கடத்திச் செல்கையில் நீ தடுப்பாய்; அப்போது அவன் உன் சிறகுகளை வெட்டவே நீ வீழ்ந்து இறப்பாய்’ என்று கூறினார். அது கேட்ட சடாயு, பெருமானே! அப்படியானால் நான் காசி இராமேஸ்வரம், சேது முதலான தீர்த்தங்களில் மூழ்கி தீர்த்தப்பயனை அடையமுடியாமல் போய்விடுமே, நான் என் செய்வேன்!’ என்று கேட்க, இறைவன், முக்கூடல் தீர்த்தம் உருவாக்கி அதில் மூழ்குமாறு பணித்திட, சடாயு முக்கூடல் தீர்த்தமுண்டாக்கி அதில் மூழ்கிப் பயன் பெற்றனன். இதனையொட்டியே இத்தலம் குருவி இராமேஸ்வரம் என்று பெயர் பெற்றது.

இறகுசேரி: தேவகோட்டை அருகில் உள்ள கிராமம்.,இராவணன் சீதையை தூக்கி செல்லும் போது சடாயு அவனை தடுத்து சண்டையிட்ட போது அதன் சிறகின் ஒரு பகுதி இங்கு விழுந்ததாக கூறப்படுகிறது. சடாயுவின் இறகு வீழ்ந்த இடம் இறகுசேரி என்றாயிற்று.

வெள்ளைக்கரடு: சேலத்திலிருந்து ஆறு கி.மீ. தொலைவிலுள்ள வெள்ளைக்கரடு என்ற  தலத்தில் தான் சடாயு இராவணனுடன் போரிட்டு வீழ்ந்து கிடந்ததென்றும், அது உயிர் துறந்தபின் இராமன் அதனை அங்கு தகனம் செய்தனன் எனவும் கூறப்படுகிறது. சடாயுவின் எலும்பே தற்போது வெள்ளைக்கல்லாக தோண்ட தோண்ட கிடைப்பதாகவும் இப்பகுதிமக்கள் கருதுகின்றனர். இக்கரடுக்கு அருகில் உள்ள மாமாங்கம் என்னுமிடத்தில் இராமர் பாதம் பதியப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருப்புள்ள பூதங்குடி: சுவாமிமலையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் 4 கி.மீ.தொலைவில் திருப்புள்ள பூதங்குடி உள்ளது. சீதையை இராவணன் கவர்ந்து சென்றபோது சடாயு அவனிடம் போரிட, இராவணனின் வாளால் வெட்டப்பட்டு குற்றுயிராக கிடக்கவே, அவ்வழியாக வந்த இராம, இலக்குவர்களிடம் இராவணன் சீதையை கவர்ந்து சென்ற விவரத்தை கூறிவிட்டு உயிர் துறந்தது. இதைக்கண்டு வருந்திய இராமன் சடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார். உடனே இராமனுக்கு உதவிபுரிவதற்காக லெட்சுமியின் இன்னொரு வடிவமாகிய பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு இணைந்து சடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை இராமன் செய்து முடித்தார். சடாயுவாகிய புள்ளிற்கு இராமன் மோட்சம் கொடுத்து ஈமக்கிரியை செய்த நிகழ்வை குறிக்கும் தலமாதலால் இத்தலம் திருப்புள்ள பூதங்குடி ஆனது. தந்தை தசரதருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்ய முடியாவிட்டாலும்சடாயுவிற்கு செய்ததை நினைத்து மகிழ்ந்ததால் இத்தல இராமன் வல்வில் இராமன் என அழைக்கப்படுகிறார். இந்நிகழ்வை நினைவு கூறும் வகையிலேயே இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.

கழுகத்தூர்: மன்னார்குடி-பெருகவாழ்ந்தான் சாலையில் 15 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தில்தான், சடாயுவின் இறகுகளை இராவணன் வெட்டி வீழ்த்தியதாகவும், அது உயிர் துறக்கும் நிலை ஏற்படவே இராமன் வருவதுவரை அதன் உயிர் இருக்க வேண்டும் என்று சீதை வேண்டியதாகவும் அவ்வண்ணமே இராமன் அவ்விடம் வந்ததும் சடாயு நடந்தவற்றை கூறி உயிர் துறந்தது. பின்னர் சடாயுவின் இறுதிச்சடங்குகளை இராமன் மேற்கொண்டனன். சடாயு முக்தி பெற்ற தலமாதலால் கழுகத்தூர் என்று பெயர் பெற்றது. சடாயுக்கு கல் நாட்டப்பெற்ற இடம் களப்பாள் என்றும், உத்திரகிரியை நடைபெற்ற இடம் திருக்களார்  என்றும் வழங்கப்படுவதாக கூறப்டுகிறது.

சடாயுபுரம்: பழையாற்றங்கரையில் உள்ள தலம் சடாயுபுரம். இராவணனால் வெட்டப்பட்ட சடாயுவின் இறக்கை விழுந்த பூமி. இங்குசடாயுக்கு மோட்சம் அளித்த இராமபிரான்ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். இந்த சிவலிங்கத் திருமேனிக்கு ‘இராமலிங்க சுவாமி‘ என்பது திருநாமமே வழங்குகிறது..

சடாயு குண்டம்: வைத்தீஸ்வரன் கோயிலில்  சடாயு குண்டம் உள்ளது. சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோதுஅதனைத் தடுத்த டாயுவின் சிறகுகளை இராவணன் வெட்டி வீழ்த்தினான். பின்னர் இராமன் அவ்வழியில் சீதையைத் தேடி வந்த நேரத்தில்நடந்தவற்றைச் சொல்லிய டாயு இராமனது காலடியில் உயிர்ததுறந்தது. சடாயுவின் வேண்டுகோளையேற்று, இராமபிரான் சிதையடுக்கி சடாயுவின்  உடலைத் தகனம் செய்த இடம் ‘சடாயு குண்டம்’ என்று அழைக்கப் பெறுகின்றது. இன்றும் இக்குண்டத்தில் உள்ள திருநீற்றினை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் எனும் நம்பிக்கை உண்டு. சடாயு குண்டத்திற்கு அருகில் சடாயு மோட்சத்தைச் சிலை வடிவில் காணலாம். சடாயு உற்சவ மூர்த்தியாகவும் இருக்கின்றார். இத்தலத்துக்கு சடாயுபுரி என்ற பெயரும் உண்டு.

செதலப்பதி: சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு எதிர்த்து போரிட அதன் இறக்கைகளை இராவணன் வெட்டி வீழ்த்தினான். இராமனிடம் ஜடாயு செய்தி சொல்லி இறந்தார். ராமனின் வனவாசகாலத்தில் அவர் தந்தை தசரதரும் இறந்துவிட்டார். அதற்காக சிரார்த்தம் செய்ய எண்ணி இந்த தலத்திற்கு வந்து, அரசலாற்றில் நீராடி சிவபூஜை செய்து தசரதருக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார். அப்போது தனக்காக போராடி உயிர்விட்ட ஜடாயுவிற்கும் மரியாதை செய்யும் விதத்தில் இங்கு பிதுர் தர்ப்பணம் செய்தார். இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி என்றும் வழங்கப்படுகிறது. ராமர் தர்ப்பணம் செய்யும் போது பிடித்த நான்கு பிண்டங்கள் லிங்கங்களாக மாறியதாக சொல்லப்படுகிறது. கருவறைக்குப் பின்புறம் இந்த லிங்கங்களை இன்றும் காணலாம். இந்த லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். இராமரின் இத்தகைய கோலம் வேறெங்கும் காணக் கிடைக்காது.  கோயிலுக்கு வெளியே அழகநாதர் சன்னதியில் இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் உள்ளது.

சடாயு தீர்த்தம்: திருநெல்வேலியில்  தாமிரபரணி ஆற்றங்கரையில் வெள்ளைக் கோவில் என்ற மயானம் உள்ளது. இதனருகில் உள்ள நதியின் தீர்த்தக் கட்டத்திற்கு சடாயு தீர்த்தம் என்பது பெயர். இவ்விடத்தில் சீதையைத் தூக்கிச் சென்ற இராவணனைத் தடுத்துச் சீதையை மீட்க சடாயு போர் புரிந்ததாகவும், இராவணன் தனது வாளால் அதன் இறகுகளை வெட்டியெறிந்ததாகவும்,  சடாயு மரணவேதனையில் கிடக்கும்போது சீதையைத் தேடி அங்குவந்த இராமனிடம் நிகழ்ந்ததை சொல்லி சடாயு உயிர் விட்டது எனவும், இராமன் அதற்கு மகன் முறையாக ஈமக்கடன்கள் செய்ததாகவும் சடாயுவைத் தகனம் செய்த இடமே சடாயு தீர்த்தமாகியது எனவும் கூறப்படுகிறது.

கழுகுமலை:  மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில்கோவில்பட்டியில் இருந்து20 கி.மீ.தூரத்தில் உள்ளது. இராவணனால் சடாயு கொல்லப்பட்டதையும்இராமனால் சடாயுவுக்கு சகல காரியங்களும் செய்யப்பட்டுசடாயு மோட்சம் பெற்றதையும் அனுமனின் மூலம் அறிந்த சடாயுவின் சகோதரன் சம்பாதிஇராமனை வணங்கி, ‘உடன் பிறந்தானுக்கு ஈமக்கிரியைகளைச் செய்யாத பாவியாகிவிட்டேன்;இந்தப் பாவத்தில் இருந்து விடுபடநான் என்ன செய்யவேண்டும்?’ என்று வேண்டினான். யானை முகம் கொண்ட மலையில்மயில் மீது அமர்ந்திருக்கும் முருகக் கடவுளைஆம்பல் நதியில் நீராடிவழிபட்டு வர, உன் பாவங்கள் நீங்கிமோட்சம் பெறுவாய்’ என அருளினார் இராமபிரான். அதன்படிசம்பாதிஆம்பல் நதியில் நீராடிமுருகப்பெருமானை வழிபட்டு மோட்சம் அடைந்ததாகவும், அதனால் இந்தத் தலம் கழுகுமலை என்று  அழைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

திருப்புட்குழி: காஞ்சியிலிருந்து தென்மேற்காக ஏழு கல் தொலைவில் அமைந்துள்ளது. இராமபிரான் சடாயுக்கு முக்திபேறு அளித்த தலம். இராவணனால் இறகுகள் வெட்டப்பட்டு, வீழ்ந்த சடாயு, சீதை கடத்தப்பட்ட செய்தியை இராமனிடம் கூறிவிட்டு உயிர் நீத்தது. இராம, இலக்குவர்கள் சடாயுவை ஒரு குழியில் இட்டு தகனம் செய்து ஈமக் கடன்களை செய்தனர். இங்கு பெருமாள் சடாயுவை தகனம் செய்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

திருவியலூர்: திருவிடைமருதூர்-வேப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள இத்தலத்து இறைவனை சடாயு வழிபட்டதாக கூறப்படுகிறது. இதனால், இத்தலத் தீர்த்தம்ஜடாயு தீர்த்தம் என வழங்குகிறது.

கண்டதேவி: தேவகோட்டை அருகிலுள்ள கண்டதேவி  கோயிலில் சுவாமி சிறகிழிநாதர் என்றழைக்கப்படுகிறார். சீதையை தூக்கி சென்ற இராவணனை வழிமறித்து சடாயு போரிட்டபோது சிறகை இழந்ததால் சிறகிழிநாதர் என பெயர் பெற்றதாக வரலாறு கூறுகிறது. கோயிலின் பின்புறம் சடாயு தீர்த்தம் உள்ளது.   

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

இலங்கை செல்லும் வழியில்

முன்சிறை: குமரி மாவட்டம் அதங்கோட்டிலிருந்து தென்மேற்காக 5 கி.மீ. தொலைவில் முன்சிறை உள்ளது. இலங்கை அசோகவனத்தில் சீதையை இராவணன் சிறை வைத்ததற்கு முன்பாக இவ்விடத்தில் சிறை வைத்ததால் ‘முன்சிறை’ என்று பெயர் பெற்றதாம்.

வானரமுட்டி: கழுகுமலைக்கு அருகில் வானரமுட்டி என்ற ஊர் இருக்கிறது. iஇராமன் இந்த வழியாக இலங்கைக்கு தன் படைகளுடன் சென்றபோதுபடை வீரர்களான வானரங்கள் இங்கு தங்கியதால் இந்த ஊருக்கு வானரமுட்டி என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

மானாமதுரை: மதுரை-இராமநாதபுரம் சாலையில் மதுரையிலிருந்து 50கி.மீ.தொலைவில் அமைந்துள்ள தலம் மானாமதுரை. சீதையை தேடிய வானர வீரர்கள் இங்குள்ள பிருந்தாவன் என்ற இடத்திலிருந்த மரத்தின் சுவை மிக்க கனிகளை உண்டதால் மயக்கம் ஏற்பட்டதாகவும், இராமன் வந்து அவர்களை ஊக்கப்படுத்தி வீரர்களாக்கியதாகவும் எனவே தான் இத்தலம் வானரவீர மதுரை என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. பின் அதுவே மரூவி மானாமதுரை ஆனது. மறுபடியும் ஒரு இராவணன் தோன்றி விடக்கூடாது என்பதற்காக இத்தல ஆஞ்சநேயர் தெற்கு முகமாக அருள்பாலிக்கிறார் என்று கூறப்படுகிறது.( இராமநாதபுரம் விவரச் சுவடிப.1155)

நரிமணம்: நாகூரிலிருந்து எட்டு கி.மீ. தூரத்தில் நரிமணம் என்ற கிராமம் உள்ளது. இராமன் இலங்கை செல்லும் வழியில் இங்கு தங்கி சென்றனன். எனவே இவ்விடம் ஹரிவனம் என்ற பெயரைப் பெற்றது எனவும்  கால ஓட்டத்தில் ஹரிவனம் என்பது நரிமணம் என்றாயிற்று என்று கூறப்படுகிறது.

இராமரோடை: திருவிடைமருதூர் அருகேயுள்ள திருலோக்கிதைலிக்கி என்ற ஊரில் பாயும் ஓடைக்கு இராமரோடை என்று பெயர் உள்ளது. இலங்கை செல்லும் வழியில் இராமன் முகம் மழித்து குளிக்க தண்ணீர் இல்லாததால், தனது கையால் கிழித்து இவ்வோடையை உருவாக்கினார் என்று இப்பகுதி மக்கள் கருதுகின்றனர். எனவே தான் இவ்வோடைக்கு இராமரோடை என்று பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திருசாத்தானம்: தஞ்சை மாவட்டம் முத்துப்பேட்டைக்கு வடக்காக காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள தலம் கோவிலூர் என்ற திருஉசாத்தானம்இராமன் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் பெற்றதாகவும், இதனாலேயேஇறைவன் மந்திரபுரீஸ்வரர் என்று பெயரில் அழைக்கப்பெற்று வருகிறார். இக்காரணம் பற்றியே இத்தல இறைவனின் பாணம் சற்றுச் சாய்ந்து காணப்படுகிறது. மேலும்கடலில் அணைகட்டுவதற்கான வழிமுறைகளை இராமன் இத்தலத்துப் பெருமானிடம் உசாவிய (கேட்டறிந்ததால்) காரணத்தால்இத்தலத்திற்கு திருஉசாத்தானம் என்ற பெயர் வழங்குவதாயிற்று. இராமாயணத்துடனும்இராமாயண காலத்துடனும் இத்தலத்துக்கு உள்ள தொடர்பை உறுதி செய்வது போல்இவ்வூருக்கு அருகில்இராமன் கோவில்ஜாம்பவான் ஓடைஅனுமான் காடுசுக்ரீவன் பேட்டைதம்பிக்கு நல்லான் பட்டினம்முதலிய ஊர்கள் உள்ளன.

இராமர் பாதம்:  வேதாரண்யmம்-கோடியக்கரை சாலையில்  மூன்றாவது கிலோமீட்டரில் இராமர் பாதம் உள்ளது. சீதாதேவியை இராவணன் கடத்திச் சென்றுவிட்டான் என்று தெரிய வந்ததும்சீதையை மீட்டு வருவதற்காக இராமன் வேதாரண்யம் வருகிறார். பிறகு எங்கே போவதென்று தெரியவில்லையாம். இங்குள்ள பிள்ளையாரிடம் கேட்கிறார். அவர், “தென்கிழக்காகப் போனால் ஒரு மணல்மேடு வரும். அங்கிருந்து பார்த்தால் இராவணன் கோட்டை தெரியும்‘ என்று விரல் காட்டுகிறார். இராமன் நடந்து சென்ற சாலை இன்றளவும் சேது ரஸ்தா என்றழைக்கப்படுகிறது. இராமனுக்கு வழி காட்டிய பிள்ளையார்சேது ரஸ்தாவில் அமர்ந்தகோலத்தில் ஆட்காட்டிவிரலை நீட்டியபடி இப்போதும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். சுமார் இருபத்தைந்து அடி உயரத்தில் இராமர் பாதம் உள்ளது. இங்கிருந்து பார்க்கையில் இராவணன் கோட்டையின் பின்புறம் தெரிந்ததாம். ஒரு வீரன் பின்புறமாகச் சென்று தாக்குவது அழகல்ல என்பதால், இராமேஸ்வரம் சென்று கோட்டையின் முன்புறமாகத் தாக்கினாராம்.

போரூர்: சென்னை போரூர் பகுதியில் அமைந்துள்ள இராமபிரான் வழிபட்ட இராமநாத ஈசுவரர் திருக்கோயில் ‘உத்திர ராமேசுவரம்‘ எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. இராமபிரான் சீதாபிராட்டியைத் தேடி வரும்பொழுது போரூர் காட்டுப்பகுதிக்கு வந்தபோது,. ஓரிடத்தில் நெல்லிமரத்தின் வேர் அவர் காலை இடறிவிட்டது. வேருக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதை உணர்ந்தார். தன் கால்பட்டதற்கு வருந்திநெல்லிக்கனியை மட்டும் உணவாகக் கொண்டு தவமிருந்தார். 48 நாட்கள் கழித்து, அமிர்தலிங்கமாக இறைவன் தோன்றி அவரது தவத்தைப் பாராட்டினார். அன்பின் மிகுதியால் இராமபிரான் சிவபெருமானை ஆலிங்கனம் செய்து கொண்டார். அந்த இடத்தில் சீதை இருக்குமிடம் பற்றி விசாரித்தபொழுது தெற்கே செல்லக் கூறினார். சிவபெருமான் குருவாக இருந்து வழிகாட்டியதால் இத்தலம் குருஸ்தலமாகவும்அன்பர்களின் குறைகளைப் போக்கும் உத்திர இராமேசுவரம் எனவும் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. இராமர் வழிபட்ட அமிர்தலிங்கமாகிய சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தமாகவும்பக்தர்களுக்கு சடாரியும் அளிக்கப்படுவது இத்தலத்தின் சிறப்பாகும். கோயில் திருச்சுற்றினுள் அமைந்துள்ள நெல்லி மரத்தின் கீழ் இராமபிரான் தவமியற்றியதற்கு அடையாளமாக இரு பாதங்கள் பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது. (தினமணி20 மார்ச் 2014)

ஜலகண்டபுரம்: ஓமலூர் வட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்தில் குடிப்பதற்கு நீரில்லாததால், இராமன் தன் வில்லை நிலத்தில் ஊன்றி நீர் எடுத்ததாகவும், இராமன் ஜலம் கண்டதால் ஜலகண்டபுரம் என்று வழங்கப்படலாயிற்று.

ஆத்தூர்(சேலம்): சீதையை தேடி தென்திசை நோக்கி சென்ற இராமர் இவ்வழியாக வந்ததாகவும், இத்தலத்திற்கு அருகில் இருக்கும் மலை மீது ஏறி பார்த்ததாகவும், சீதையை காணாததால் வருத்தத்துடன் சிறிது நேரம் அமர்ந்ததாகவும், தன் தலைவன் இராமன் சோகமாக இருப்பதைக் கண்ட அனுமன், “இராமருக்கு எவ்வகையில் உதவி செய்வது” என வசிஷ்ட நதியின் கரையில் அமர்ந்து சிந்தனை செய்ததாகவும் அவ்விடத்திலேயே அவர்கோயில் கொண்டுள்ளார் எனவும் நம்பப்புகிறது.. இராமர் அமர்ந்து சென்றதாக கருதப்படும் மலை இத்தலத்திற்கு அருகில் உள்ளது.

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின்  முக்கிய வாழிடமாகும். இராமன் தங்குவதற்கு தேவர்கள் எழுப்பிய கோட்டையாதலால் இப்பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடலைடைத்தப் பெருமாள்: தேவிப்பட்டிணத்தில் இராமர் தனது சனிப்பிரீத்திக்காக கடலின் மையப்பகுதியில் ஒன்பது பிடி மணலை எடுத்து நவக்கிரககங்களை உருவாக்கிய நேரத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதாகவும், உடனே இராமர் தனது கையை உயர்த்தி கடலின் கொந்தளிப்பை நிறுத்தியதாகவும் அந்த நிகழ்வை நினைவு கூர்ந்திடும்விதமாக இங்குறையும் பெருமாள் கடலைடைத்தப் பெருமாள் என்ற பெயருடன் அருட்காட்சி தருகிறார்.

கோதண்ட இராம ஈஸ்வரர்: இராவணனை வதம செய்ய இராமன் இலங்கை நோக்கி சென்றபோது கோவில்பட்டி-திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள கயத்தாறு தளத்தில் உள்ள ஈஸ்வரனை வழிபட்டதாகவவும் அங்கு தனது கோதண்டத்தை ஊன்றி ஒரு தீர்த்தத்தை உருவாக்கியதாகவும் அத்தீர்த்தம் ஆறாகப் பெருகி ஓடியதாகவும் கூறப்படுகிறது. அருகில் இராமர் பாதம் உள்ளது. கோதண்ட இராமன் வழிபட்டமையால் இங்குள்ள இறைவன்  கோதண்ட இராம ஈஸ்வரர் என்ற திருநாமத்தில் வழங்கப்பட்டு வருகிறார்.(குமுதம் பக்தி, மார்ச் 16-31, 2007, ப.82)

கோதண்டராமர் கோயில்: விபீசணன் தன் சகோதரன் இராவணனிடம்சீதாதேவியைக் கவர்ந்து வந்தது தவறு என்றும்தேவியை  இராமனிடமே ஒப்படைக்கும்படியும் அறிவுரை கூறினான். இராவணன் அதை ஏற்க மறுக்கவேஅவன் இராமனுக்கு உதவி செய்வதற்காக இராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட இராமன்இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவேஇலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில் தான், இராமனுக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு “கோதண்டராமர்‘ என்று பெயர். அவரது அருகில் விபீஷணன் வணங்கிய கோலத்திலும், அவனை இராமனிடம் சேர்க்க பரிந்துரை செய்த அனுமனும் இருக்கிறார். இராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ.தூரத்தில்வங்காளவிரிகுடாமன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது. (இராமநாதபுரம் விவரச் சுவடிப.1147)

களக்காடு: நெல்லை மாவட்டம் நாங்குநேரியிலிருந்து மேற்கே 12கி.மீ. தொலைவில் உள்ளது. களக்காடு. இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் “சோரகாடவி” என்று அழைக்கப்படுகிறது. சீதையின் பிரிவால் வருந்திய இராமனும்இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபடஅப்போது இறைவன் அவர்களுக்கு “சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம்” என்று சத்திய வாக்கினை தந்தார். பின்னர் சீதையை மீட்டு வந்த இராமன்இத்தலத்திற்கு சீதைஇலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ்சூட்டி வணங்கிச் சென்றனர் என்று கூறப்படுகிறது.

இராமநாதபுரம்: இராமநாதபுரத்தின் பழமையான பெயர் முகவை. முகவை என்பதற்கு வாயில் என்று பொருள். சேதுவின் வாயிலில் ஒரு நகர் அமைக்குமாறு இராமபிரான் குகனுக்கு கட்டளையிட, குகனால் அமைக்கப்பட்ட நகரம் இது என்று கூறப்பட்டு வருகிறது. (இராமநாதபுரம் விவரச் சுவடிப.1189) இராமன் இங்கு வந்து இறைவனை வழிபட்டதாலும்இங்குள்ள பல இடங்களில் சிவபிரானை ஆராதித்ததாலும்இந்த ஊரின் பெயர்மற்றும் மாவட்டத்தின் பெயர் இராமநாதபுரம் ஆயிற்று.

உப்பூர்: இராமநாதபுரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது உப்பூர். இராமபிரான் இலங்கைக்கு செல்வதற்க்கு முன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த இடம்தான் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில். இங்கு சீதா தேவியை  மீட்க இலங்கை செல்லும்போது முதலில் இங்குள்ள விநாயகரை வணங்கித்தான் சென்றார். இராமபிரானின் வெற்றிக்கு உப்பூர் விநாயகரும் காரணம் என்று கூறப்படுகிறது.(தினமணி21 ஆகஸ்ட் 2014)

தீர்த்தாண்ட தானம்: தொண்டி அருகே உள்ளது தீர்த்தாண்ட தானம். இங்கு இராமபிரான் சீதையை தேடி இலங்கைக்கு சென்றபோது அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி வர்ண தீர்த்தம் எனப்படும் இந்த கடலில் புனித நீராடி விட்டு தசரத மன்னனுக்கு தில தர்ப்பணம் செய்து வழிபட்டதாகவும்அப்போது இராமபிரானுக்கு காட்சி அளித்த சிவபெருமான் இராவணனை வெல்ல வரம் அளித்ததாகவும் நம்பப்படுகிறது. இராமன் இங்கு நீராடியதால் இப்பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இன்றும், ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடுவது வழக்கமாக உள்ளது.

கெந்த மாதன பர்வதம்: இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் இருந்து வடக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இம்மணல் குன்றே இராமேஸ்வரம் தீவில் உயரமான பகுதியாகும். சீதையை தேடிவந்த இராமன் இக்குன்றின்மேல் நின்று இலங்கையை நோக்கினான் என்று கருதப்படுகிறது. இங்குள்ள இரண்டடுக்கு மண்டபத்தில் இராமர் பாதமானது ஒரு சக்கரத்தில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.

தேவிப்பட்டினம் நவபாஷனம்: “இராமநாதபுரத்திலிருந்து வடகிழக்காக 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கடற்கரை கிராமம். சீதாபிராட்டியை இராவணன் தூக்கிச் செல்வதற்கு நவக்கிரக தோஷம்தான் காரணம் எனவும், அதனை நீக்ககடல் நடுவே மணலால் நவக்கிரகம் உருவாக்கி வழிபட வேண்டும்!‘ என்றது அசரீரி. இராமரும் இலங்கை செல்ல பாலம் அமைப்பதற்குமுன், நவபாசாணாத்தால் உருவாக்கப்பட்ட நவக்கிரகங்களை கடலில் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்குகிறார். அப்போதுதான் பெருமாளிடம் வேண்டிக் கொள்ள. கடல் அலைகளும் அந்த இடத்தில் ஓய்ந்து போகின்றன. தேவிப்பட்டினம் நவபாஷனம் என்பதும்கடலுக்குள் நவக்கிரக சன்னிதி என்பதும் இதுவே. சீதா தேவியை தேடி இராமன் இவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றமையால் தேவிப்பட்டினம் என்று பெயர் பெறலாயிற்று.(இராமநாதபுரம் விவரச் சுவடி, ப. 1117)

ஏகாந்த இராமர் கோயில்: பாம்பன் அருகில் உள்ள தங்கச்சிமடம் எனும் ஊரில் ஏகாந்த இராமர் கோயில் உள்ளது.இங்கு இராமபிரான் ஏகாந்தமாக அமர்ந்து சீதையைப் பற்றி சிந்தனை செய்ததாக கூறப்படுகிறது. எனவே இக்கோயில் ஏகாந்த இராமர் கோயில் எனப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

இராமர் பால நினைவுகள்



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 

 

சஞ்சீவி மலை நினைவுகள்

குருத்தமலை: கோவை மாவட்டம் காரமடை-அந்திக்கடவு சாலையில் குருத்தமலையில் அனுமன் சுணையும், அருகே அனுமன் கோயிலும்  உள்ளது. இம்மலையில் அனுமனின் ஒரு பாதமும் அருகிலுள்ள சஞ்சீவி மலையில் ஒரு பாதமும் வைத்து மூலிகை தேடியதாக கூறப்படுகிறது.

மலை வையாவூர்(காஞ்சி): சஞ்சீவி மலையை தனது கைகளில் எடுத்துவரும்போது அனுமன் இந்த இடத்தில் சற்று இளைப்பாற எண்ணிமலையை கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறுகைக்கு மலையை மாற்றிக் கொண்டாராம். எனவேமலையை கீழே வைக்காத ஊர் என்பதே மருவி மலை வையாவூரானது என்று கூறப்படுகிறது.

புதுப்பாக்கம்: சென்னையில் உள்ளது புதுப்பாக்கம்.  சஞ்சீவி மலையை தூக்கி வருகையில்வங்காளக் கடலின் ஓரத்தில்மாலை மயங்கும் நேரத்தில் சந்தியா வந்தனம்(சூரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று. பகலும் இரவும் சந்திக்கும் நேரங்களிலும் நடுப்பகலிலும் இது செய்யப்படுகிறது) எனப்படும் நித்ய கர்மாவைச் செய்வதற்காக அனுமன் இறங்கிய இடம்.

ஒலகடம்: ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து சுமார் 16 கி.மீட்டர் தொலைவில் வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் ஒலகடம் உள்ளது இங்குள்ள உலகேஸ்வரர் கோவில் வழியாக சஞ்சீவி மலையுடன் அனுமன் பறந்து வந்த போதுஇவ்வூரில் விளங்கும் உலகவிடங்கர் எழுந்தருளி இருப்பதைக் கண்டுஅனுமன் சஞ்சீவி மலையுடன் மூன்று முறை வலம் வந்ததாக கூறப்படுகிறது.

மருந்துவாழ் மலை: இம்மலையானது  மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்முனையில், கன்னியாகுமரியில் இருந்து 7 கி.மீ தொலைவில் பொற்றையடி கிராமத்திற்கு வடக்கே அமைந்துள்ளது.. இராம-இராவண போரின்போது மயக்க நிலையிலிருந்த இராமஇலக்குவர்களை எழுப்ப அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்கையில்அதிலிருந்து விழுந்த சிறிய பகுதிதான் இந்த மருந்துவாழ் மலை என்று கூறப்படுகிறது. இம்மலை நோய்களை குணப்படுத்தும் அற்புத மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் சஞ்சீவி மலை எனவும் அழைக்கப்படுகிறது.( சஞ்சீவியான… மருந்துவாழ் மலை…,நக்கீரன், 01-05-2009) “நல்லதவம் செய்வதற்குத் தேடும் வடவாசம் சீவிவளர் மலை என்று இம்மலையின் பெருமையை  அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது.

சஞ்சீவி மலை: இராஜபாளையத்திற்கு கிழக்கே உள்ள மலையின் பெயர் சஞ்சீவி மலை. இராவனாதியருடன் நடைப்பெற்ற போரில் இலக்குவனுக்கு ஏற்பட்ட காயத்தைக் குணப்படுத்த, சஞ்சீவி மூலிகைகளைக் கொண்ட ஒரு மலையை அனுமன் கொண்டுவந்ததாகவும், மூலிகையைப் பயன்படுத்தியப் பிறகு அனுமன் அதனை வீசி எறிந்ததாகவும் அதில் ஒரு பகுதி இங்கே விழுந்து சஞ்சீவி மலையாக வளர்ச்சியடைந்ததாகவும் இப்பகுதிவாழ் மக்களால் பேசப்பட்டு வருகிறது. (இராமநாதபுரம் விவரச் சுவடிப.1185)

    சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு அனுமன் பறந்து சென்றபோது சதுரகிரி சித்தர்கள் பிரார்த்தனைப்படி ஒரு துண்டு உடைந்து சதுரகிரி அருகே விழுந்தது. அதுவே சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலை‘ என்றும் கூறப்படுகிறது.

    திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிறுமலை. அனுமன் தூக்கிச் சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதியே இம்மலை என்று கூறப்படுகிறது.

    அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்த போதுஅதன் ஒரு பகுதி கொங்குநாட்டில் விழுந்தது. அதுவே காங்கயம் அருகிலுள்ள பொன்னூதிமாமலையாம். சஞ்சீவி மலை என்றும் ஊதியூர் மலை என்றும் இது  அழைக்கப்படுகிறது.

    ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ ஆதிவராகநல்லூரிலும் சஞ்சீவி மலை உள்ளது.

ஔஷதகிரி: தாம்பரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள ஆப்பூர் கிராமம் அருகே உள்ளது ஔஷதகிரி.சஞ்சீவிமலையை தூக்கிகொண்டு அனுமன்  வரும்போது அம்மலையிளிருந்து விழுந்த சிறு பாகம் என்று கருதப்படுகிறது. மருத்துவக் குணமிக்க மூலிகைகள் இங்கு ஏராளமாக மண்டிக்கிடப்பதால் மக்கள் நம்பிக்கையை மெய்ப்பிக்கும்படியாக உள்ளது.(சக்திவிகடன், 2-4-2007, பப.6-7)

சிங்கம்புணரி: மதுரையிளிருந்து வடமேற்காக 45 மைல் தொளைவில் அமைந்துள்ளது சிங்கம்புனரி.இராம-இராவணப் போரில் காயமுற்ற இலக்குவனை குணப்படுத்த அனுமன் தூக்கிச் சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதி சிதறி விழுந்த பாறையின் மீது இத்தலம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. (இராமநாதபுரம் விவரச் சுவடிப.1208)

சுருளி மலை: அனுமன் முதலான வாணர சேனையினரை இராமன் சந்தித்த மலை சுருளி மலை என்றும், அனுமன்  எடுத்துச்சென்ற சஞ்சீவி மலை இதுதான் என்றும் அவர் திரும்ப கொண்டு வந்து மீண்டும் வைக்கும்போது, நின்ற இடமே அனுமந்தன்பட்டி என்றும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  அல்லாமலும் சுருளி மலையில் நீண்ட நாட்கள் தவம் செய்து மறைந்து போன பாட்டையா சித்தர் வாழ்ந்த குகைக்கருகில் ஒரு குகையும் அதில் அனுமன்  சிலையும் அவரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது இது அனுமன்  தங்கிய குகையாகவும்  கருதப்படுகிறது.

பர்வதமலை: திருவண்ணாமலையில் இருந்து 30கி.மீ தொலைவிலும், திருவண்ணாமலை-வேலூர் சாலையில் போளூர் அருகில் தென்பாதிமங்கலம் என்ற கிராமத்தின் எல்லைக்குள் அமைந்துள்ளது பர்வதமலை. அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து விழுந்த ஒரு பகுதிதான் பர்வதமலை என்றும் கூறப்படுகின்றது.

நார்த்தாமலை: அனுமன் இலங்கைக்கு தூக்கிச் சென்ற சஞ்சீவி மலையின் சிறிய சிதறல்களே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை என்றும்அதன் காரணமாகவே இக்குன்றுகளில் அதிக அளவில் மூலிகைகள் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. (அருண், ‘நார்த்தாமலை- சஞ்சீவி மலையின் சிதறல்கள்’, Native Planet10 பிப்ரவரி 2014)

மருங்கப்பள்ளம்: புதுக்கோட்டை- பேராவூரணி-குருவிக்கரம்பை வழியிலுள்ள மருந்துப்பள்ளம் என்றழைக்கப் பெற்ற தலமே  நாளடைவில் திரிந்து மருங்கப்பள்ளம்  என்றானது. அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து  எடுத்துச் செல்லும்போது அதிலிருந்து சில சிதறல்கள் இங்கு விழுந்ததாகச் சொல்லப்படுகிறது.

தலைமலை: திருச்சி – நாமக்கல் சாலைக்கு கிழக்கே உள்ளது தலைமலை. அனுமன்  பெயர்த்தெடுத்து வந்த சஞ்சீவி மலையின் மூலிகையின் மணம் பெற்றவுடன் அனைவரும் மயக்க நிலை நீங்க பெற்றனர். ஜாம்பவானின் வேண்டுகோளுக்கிணங்க  அனுமன் மீண்டும் சஞ்சீவி மலையை பலம் கொண்ட மட்டும் வீசி எறிந்தார். சஞ்சீவி மலையின் சிதறுண்டு விழுந்த தலைப்பகுதியே தலைமலை என்றும் அழைக்கப்படுகிறது.(தலைமலை வேங்கடாஜலபதி திருக் கோயில் தல வரலாறு}

அரகோண்டா: ஆந்திர- தமிழக எல்லையில்சித்தூர் மாவட்டத்தில் உள்ளது அர்த்தகிரி. சஞ்சீவி மலையினைப் பெயர்த்தெடுத்துபோர்க்களமான இலங்கை நோக்கி எடுத்து வானவீதியில் வந்தபோதுஅந்த மலையின் ஒரு பகுதி இங்கு விழுந்தது. இதனாலேயே இந்தப் பகுதிக்கு அரகோண்டா என்று பெயரேற்பட்டது. அர என்றால் துண்டுகோண்டா என்றால் மலை. அரகோண்டா என்றால் மலையின் ஒரு பாகம் என்று பொருள்.(மனத்துக்கினியான், ‘தீராத நோய்களும் தீரும் அர்த்தகிரி ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில், தினமணி, 26 டிசம்பர் 2013)



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 

 

அயோத்தி செல்லும் வழியில்

தனுஷ்கோடி: இராமேஸ்வரம் தீவு ஒரு வில்லின் வடிவத்தில் அமைந்துள்ளது. இராமபிரானின் வில்லாக இதனைக் கருதுவர். தீவின் முனை ஒவ்வொன்றும் அவ்வில்லின் கோடி என்பதாகவே கருதப்படுகிறது. தனுஷ் என்பது வில் மற்றும் கோடி என்பது முனையைக் குறிக்கும். எனவே தனுஷ்கோடி என்பது வில்லின் முனையைக் குறிப்பதாக கூறுவர். சேது என்றும் இதனை அழைப்பதுண்டு. சேது என்றால் பாலம் என்பதாகும். இலங்கைக்குச் செல்ல தான் அமைத்த பாலத்தை இராவண வதம முடிந்து திரும்புகையில் இராவணனின் தம்பியான விபீஷணர் உடைத்துவிடுமாறு கேட்டுக்கொண்டதாகவும், அந்த வேண்டுகோளுக்கிணங்க இராமபிரான் தன் வில்லால் அழித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தியப் பெருங்கடலும் வங்கக் கடலும் இரண்டாகக் கலக்கும் இடமாக இது இருப்பதால் இங்கு நீராடுவது சிறந்த புண்ணியமாக கருதப்படுகிறது. இதனை இராமபிரான் சீதாதேவிக்கு விளக்கிகூறியதாக வால்மீகி இராமாயணம் பதிவு செய்துள்ளது. இராமபிரான் தன் வில்லிலிருந்து அம்பை எய்தி அவ்விடத்தை அடையாளம் காட்டியதாக நம்பப்பட்டுவருகிறது.( இராமநாதபுரம் விவரச் சுவடிப.1118)

ஜடாமகுட தீர்த்தம்: இராவணனை வதம் செய்து சீதா தேவியை மீட்டு இராமேஸ்வரத்தில் இராமன் தங்கினார். அப்போது யுத்தத்தில் தனது சடைமுடியில் தோய்ந்திருந்த அரக்கர்களின் இரத்தத் துளிகளை சுத்தம் செய்து நீராடிபிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற நீர்த்தடாகமே ஜடாமகுட தீர்த்தம் என்று  அழைக்கப்பெற்று வருகிறது.

வில்லூன்றி: இராமேஸ்வரம் செல்லும் முன்பு அக்கா மடம்தங்கச்சி மடத்துக்கு இடதுபுறம் 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது சீதா தேவியின் தாகம் தீர்க்க இராமபிரான் தனது வில்லை ஊன்றி ஏற்படுத்திய நன்னீர் ஊற்றினை உடையமையால் இப்பதி வில்லூன்றி எனப் பெயர் பெற்றது. வில்லூன்றித் தீர்த்தத்தைச் சுற்றிலும் கடல்நீர் சூழ்ந்திருக்கஅந்தச் சுனையின் தண்ணீர் மட்டும் நன்றாக இருக்கிறது. இன்று வில்லூண்டி என்று மருவியிருக்கிறது.

திருஆதனூர்: கும்பகோணத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திரு ஆதனூர். இலங்கையிலிருந்து அயோத்தி செல்லுகையில் அனுமன் இவ்வூரில் இரண்டு நாட்கள் தங்கி இளைப்பாறி சந்தியாவதனம் செய்தார். பின்னர் இராமன் இங்குவந்து தனது பக்தன் வந்தனனா என்று கேட்டு தன் திருவடியை பதித்ததாக கூறப்படுகிறது.

செம்பொன் செய் கோயில்: சீதையை மீட்ட இராமன், இலங்கையிலிருந்து அயோத்தி செல்லும் வழியில் திருநாங்கூரில் த்ருடநேத்திரர் என்ற முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். அப்போது முனிவர் இராமனிடம் பக்தர் ஒருவர் திருமாலுக்கு கோயில் கட்ட விரும்புவதாகவும், அதற்காக தங்கத்தாலான ஒரு பசுவை தானமாக வழங்குமாறு வேண்டினார். இராமனும் பசுவை வழங்க, மாலவனின் பக்தர் அதனை விற்று அங்கு கோயில் எழுப்பினார். எனவே அக்கோயில் செம்பொன் செய் கோயில் என்றும் கோயிலுள் காட்சிதரும் மாலவன் செம்பொன் செய் ரங்கன் என்றும் அழைக்கப்பட்டார்.(தினமலர், செப்26, 2008)

ஜோதிர்லிங்கம்: இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர்லிங்க தலம் இராமேஸ்வரம். விபீஷணன்ராமனுக்கு உதவி செய்ததன் மூலம் இராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்த பாவம் நீங்கஇங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன்அவனது பாவத்தை போக்கியதோடுஜோதி வடிவமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவேஜோதிர்லிங்கம்‘ ஆயிற்று. இந்த லிங்கம் இராமேஸ்வரம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் தெற்கு முகமாக  உள்ளது.

மஞ்சக்கம்பை(நீலகிரி): இராமர் அயோத்திக்கு திரும்பிப் போகும்போது நீலகிரி மாவட்டம் மஞ்சக்கம்பை மானிஹடா வழியாக சென்றதாக இங்குவாழ் மக்கள் கூறுகின்றனர்.. இங்குள்ள இராமர் பாதம் மிகப் புனிதமாக பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது

ஏரி காத்த இராமர்: செங்கல்பட்டிற்கு தெற்காக அமைந்துள்ள மதுராந்தகத்திலுள்ள கோயிலில்சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் இராமன் அருள் பாலிக்கிறார்.. இராமர் விபண்டக முனிவருக்கு காட்சி தந்தபோதுசீதையின் மீதான அன்பினை வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறு திருக்காட்சி அளித்ததாகச் கூறப்படுகிறது. இராமர் கோயிலுக்குப் பின்புறம் உள்ள ஏரி முன்பு அடிக்கடி நீர் நிறைந்து கரை உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் பாதிப்பிற்குள்ளாகினர். அப்போது, மாவட்ட ஆளுநராக இருந்த ஆங்கிலேயர் கர்னல் லயோனல் பிளேஸ்  ஏரிக்கரையை பலப்படுத்த எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. ஒருசமயம் அவர் இக்கோயிலுக்கு வந்தபோதுஅர்ச்சகர்கள் தாயார் சன்னதியை திருப்பணி செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர். “உங்கள் தெய்வத்துக்கு சக்தியிருந்தால்இவ்வருடம் பெய்யும் மழையில் ஏரி உடைப்பெடுக்காமல் இருக்கட்டும். அப்படியிருந்தால்நான் அப்பணியை செய்து தருகிறேன்,” என்றாராம். மழைக்காலம் துவங்கவே வழக்கம்போல் ஏரி நிரம்பியது. எந்த நேரத்திலும் உடையலாம் என்ற நிலையில்ஏரியைப் பார்வையிட அவர் சென்றார். அப்போதுஅங்கே இரண்டு இளைஞர்கள் கையிலிருந்த வில்லில் அம்பு பூட்டி நின்றனர். அந்த அம்பில் இருந்து மின்னல் போல் ஒளி கிளம்பியது. அதன் பின்னர் ஏரிக்கரை உடையவில்லை. மகிழ்ந்த பிளேஸ், இராம இலக்குவரே  இளைஞர்களாக வந்ததை அறிந்து மகிழ்ந்து, தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்தார். இச்சம்பவம் குறித்த கல்வெட்டு தாயார் சன்னதியில் உள்ளது. ஏரி உடையாமல் காத்தருளியதால் சுவாமிக்கு, “ஏரி காத்த இராமர்‘ என்ற பெயரும் ஏற்பட்டது.

இராமநாதசுவாமி: பிரம்மஹத்தி தோஷம் நீங்க இராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பிய இராமன், சிவலிங்கம் கொண்டு வருமாறு  அனுமனை அனுப்பினார். அவர் வர தாமதமாகவேசீதை கடற்கரை மணலில் லிங்கம்அமைத்தாள். அந்த லிங்கத்தை இராமர் பூஜித்ததால் “இராமநாதசுவாமி‘ என்ற திருநாமம் அமைந்தது.

வாலாந்தரை: அவசரபட்டு மணலால்  லிங்கம் செய்ததற்கு  வருத்தபட்ட சீதா தேவி, அனுமனை நோக்கி, சரி நீ கொண்டு வந்த லிங்கத்தயே வணகுங்கிறேன். நீ இந்த மண் லிங்கத்தை எடுத்து எறிந்து வீடு” எனக் கூற, அனுமன்  தன் பலம் கொண்ட வாலால் சுற்றி பிடுங்க முயற்சிக்கையில் வால் அரூந்து  சுமார் 37 கி.மீட்டர் தூரத்தில் மேற்கே போய் விழுந்ததாகவும், அந்த இடமேவாலருந்ததரவை என்று பெயர் பெற்று பின்னாளில் வாலாந்தரை ஆயிற்று என்று கூறப்படுகிறது.

லட்சுமண லிங்கம்: இராவணனைக் கொன்ற பாவம் நீங்க இராமபிரான் இராமேஸ்வரத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டது போன்று, இலக்குவனும் இராவணனின் மைந்தன் இந்திரஜீத்தைக் கொன்ற பாவம் களைய இராஜபாளையம்-சங்கரன்கோயில் இடையே அமைந்துள்ள கரிவலம்வந்தநல்லூரில் உள்ள சிவாலயத்தில் ஈஸ்வரனை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக்கொண்டதாகவும், ஆதலால் அங்கு அருள் பாலிக்கும் இறைவன் லட்சுமண லிங்கம் என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.(ஞான ஆலயம், சென்னை, ஏப்ரல் 2007,ப.59)

திலதைப்பதி: மயிலாடுதுறை – திருவாரூர்ச் சாலையில் உள்ள பூந்தோட்டம் அருகே அமைந்துள்ள தலம். இராம-இலட்சுமணர்கள் தம் தந்தையாகிய தசரதனுக்கும் சடாயுவுக்கும் தில தர்ப்பணம் (திலம் – எள்) அதாவது, எள்ளும் தண்ணீரும் இறைத்த தலமென்று கூறப்படுகிறது.. இராமன் தர்ப்பணம் செய்தபோது தாய்தந்தைகுருதெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து வழிபட்டதாகவும், இந்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. கருவறைக்குப் பின்புறத்தில் இந்த லிங்கங்களையும்,. இராமஇலட்சுமணர் இவ்வாறு தர்ப்பணம் செய்யும் நிலையுலுள்ள சிற்பத்தையும் காணலாம். திலதர்ப்பணபுரி என்னும் பெயரே திலதைப்பதி என்றாகி, இன்று மக்கள் வழக்கில் உருச்சிதைந்து “செதலபதி” என்று வழங்குகிறது.

கொறுக்கை: மயிலாடுதுறைக்கு அருகில் அமைந்திருக்கிறதுஇராமன் வனவாசம் இருந்த காலங்களில் வருடந்தோறும் தந்தைக்கு திவசம் செய்து பித்ரு கடன் நிறைவேற்றி வழிபட்ட பல தலங்களில் கொறுக்கையும் ஒன்று.

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 

 

 

அனுமன்

கண்டதேவி: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு அருகில் உள்ள கிராமம். இலங்கையில்  சீதையை  சந்தித்துத் திரும்பிய அனுமன் ராமனிடம் ‘கண்டேன் தேவியை என்று கூறியதால்  இவ்விடம் கண்டதேவி என்று அழைக்கப்படுகிறது.

    கேரளாவில் திருச்சூருக்கு தென்மேற்காக மைல் தொலைவில் உள்ள தலம் திருப்ரையார். இத்தலத்தில் தான் ‘கண்டேன் சீதையை என்று அனுமன் இராமபிரானிடம் கூறியதாக அப்பகுதி மக்களால் கூறப்பட்டு வருகிறது..

அனுமன் தீர்த்தம்: தர்மபுரி மாவட்டத்தில் ஊத்தங்கரை என்ற சிறு நகரின் அருகே ஒரு வற்றா ஊற்றிலிருந்து நீர் வெளிப்படுகிறது.. இதற்கு அனுமன் தீர்த்தம் என்று பெயர். இராவணனை வதம் செய்து விட்டு அயோத்தி திரும்புகையில் இராமபிரான், வழியில் தீர்த்தமலையில் உள்ள சிவனை வழிபட எண்ணியதாகவும், அதற்காககாசியில் இருந்து தீர்த்தமும் பூவும் எடுத்து வரும்படி அனுமனை அனுப்பியதாகவும், ஆனால் அனுமன் வந்து சேருவதற்கு தாமதம் ஏற்பட்டதால், தனது வில்லை எடுத்து மலையின் மீது எய்தார். அதில் இருந்து தோன்றிய தீர்த்தத்தை வைத்து சிவலிங்க பூஜை செய்தார். அந்த தீர்த்தம் இராமர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தாமதமாக வந்த அனுமன், இராமர் ஏற்கனவே ஒரு தீர்த்தத்தை உண்டாக்கிசிவலிங்க பூஜையை முடித்து விட்டதால்தான் கொண்டு வந்திருந்த தீர்த்தத்தை வீசி எறிந்தார். அது அங்கிருந்து 12 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் விழுந்தது. இந்த தீர்த்தமே அனுமந்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அனுமந்த தீர்த்தத்தில் நீராடி விட்டுஅதன்பின்னர் இராமர் தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.

அனுமகுண்டம்: திருக்குறுங்குடி மலையில் மகேந்திரகிரி என்று பெயரிடப்பட்ட சிகரம் ஒன்றுள்ளது. இதன் மேல் பெரிய கால்சுவடு ஒன்று 4 அடி ஆழத்தில் வெட்டப்பட்டுள்ளது. இங்கு மழை காலத்தில் நீர் தேங்கி நிற்கும். இது குறித்து அனுமனோடு தொடர்புடைய புனைகதை ஒன்றுள்ளது. இம்மலைமீது ஏறியே அனுமன் இலங்கைக்குத் தாவினான். தாவும் பொழுது விசுவரூபம் கொண்டான். சிற்றுருவில் இருந்த அனுமன் பேருருவம் கொண்டு, தனது பாதத்தால் உந்தி தாவுகையில், அனுமனின்  கால் சுவடு பதிந்து ஊற்றுத் தோன்றியதாகவும், அது  அவனது பாதங்களை நனைத்தது எனவும் கூறப்படுகிறது. அவ்வூற்றே அனுமகுண்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது..

அனுமன் வால்: தாமிரபரணி ஆற்றங்கரை வெள்ளைக் கோவில் மயானத்தின் அருகில் ஒரு வளைந்த புடைப்புக்கோடு செதுக்கிய நீண்ட கல் ஒன்று கிடக்கிறது. இதனருகில் ஒரு மாந்தோப்பு இருந்தது. நீத்தாரை தூக்கிச் செல்லுபவர்கள் அதைத் தாண்டாமல்சுற்றிச் செல்வது வழக்கம். இக்கல் அனுமார் வால் என்று கருதப்படுகிறது. மகாபாரதத்தில், திரௌபதியின் வேண்டுகோளை ஏற்று, பாரிஜாத மலரைப் பறிப்பதற்காக சென்ற பீமனின் வழியை மறித்த அனுமனது வாலை நிமிர்த்த முடியாமல் தோற்றுப்போனதாக கூறப்படுவதுண்டு. அந்த வாலே நீண்ட இக்கல்லாகும் என்று இப்பகுதி மக்கள் நம்பி வருகின்றனர்.

பஞ்சமுக அனுமார் கோயில்: இராமேஸ்வரத்திலுள்ள இராமநாதசுவாமி கோவிலுகுப் பின்புறம புகழ் பெற்ற பஞ்சமுக அனுமார் கோயில் உள்ளது.. இராமர் பாலம் கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு கல் இங்கு உள்ளதாக கூறப்படுகிறது. இராவணனின் தம்பி மயில் இராவணன் ஒரு சமயம் இராம, இலக்குவரைக் கவர்ந்து சென்று அடைத்தான். மயில் இராவணனின் உயிர் ஐந்து வண்டுகளிடம் குடி கொண்டு இருந்தது .அந்த ஐந்து வண்டுகளையும் ஒரே நேரத்தில் அழித்தால் மட்டுமே அவனுக்கு அழிவு ஏற்படும். எனவே மயில் இராவணனை அளிப்பதற்காக ,அனுமன் ஒரே நேரத்தில் ஐந்து முகங்களையும் பெற்றுஐந்து வண்டுகளையும் பிடித்துக் கொன்றார். இவ்வாறு மயில் இராவணனைக் கொன்று இராமனை காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

அனந்தமங்கலம்: நாகை மாவட்டம்பொறையாறு அருகே உள்ள தலம் அனந்தமங்கலம். இலங்கையில் இராம-இராவணப் போர்  முடிந்த பிறகு, இராமபிரான் தனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றிட கடலுக்கடியில் தவமிருந்த இரக்த பிந்து, இரக்த ராட்சசன் ஆகிய அசுரர்களை வெல்ல, பல்வேறு தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களுடன்  சென்று அழித்து விட்டு அனுமன் அயோத்தி திரும்பினார். திரும்பும் வழியில் தான் கொண்டு சென்ற ஆயுதங்களுடன் இராமபிரான் இட்ட கட்டளையை வெற்றியுடன் முடித்த மகிழ்ச்சியுடன் ஆனந்தமயமாக இத்தலத்தில் தங்கி இளைப்பாறியதால் “ஆனந்தமங்கலம்‘ என பெயர் பெற்று,நாளைடைவில் அனந்த மங்கலம் ஆனது.(கரு.முத்து, ‘ஆனந்தம் தருகிறார் ஆஞ்சநேயர்சக்தி விகடன், சென்னை, 2-6-2004,பப.64-65)

அனுமன் நதி: திருநெல்வேலி மாவட்டத்தில் சிற்றாற்றின் துணை ஆறாக,  குற்றால மலைக்கு மேல் உருவாகும் நதி ஆகும். இராம- இலட்சுமணர் வானர சேனையுடன் இலங்கையை நோக்கி இப்பகுதி வழியாக வந்தபோதுநீர் வேட்கையால் மிகவும் களைப்புற்றனர். அப்போது அனுமன் அங்கிருந்த ஒரு பாறையை ஓங்கி அடித்தான். அதிலிருந்து ஆகாய கங்கை பொங்கியெழுந்து பிரவகித்துஅவர்களின் தாகத்தைத் தீர்த்தது. இதன் காரணமாக அனுமன் நதி என்னும் பெயர் பெற்றது.

பாலாற்றின் கரை(கோயம்புத்தூர்): இலங்கையில் சீதாதேவியை சந்தித்துவிட்டு, அனுமன் பாலாற்றின் வழியாக திரும்பியதாகவும், அவர் பறந்து சென்ற வழியின் கீழே பாலாற்றங்கரையில் உள்ள பாறையில் தங்கி ஓய்வெடுத்ததாகவும் கூறப்படுகிறது. அப்பாறையில், அனுமன் சுயம்புவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

கபிஸ்தலம்: கும்பகோணம்-திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். வாலியும் சுக்ரீவனும் இங்கு பெருமாளை வழிபட்டதாலும், இவ்வூரில் உறையும் இறைவன் அனுமனுக்கு திருக்காட்சி புரிந்ததால் இவ்வூர் கபிஸ்தலம் (கபி = வானரம்) என்ற பெயர் பெற்று, பின்னர் கபிஸ்தலம் என மரூஉ ஆயிற்று.

அனுவாலி சுப்பிரமணியர் கோயில்: கோவைக்கு அருகில் உள்ள பெரிய தடாகம் கிராமத்தை ஒட்டிய மலைப்பகுதியில் மூலிகை தேடிவந்த அனுமனின் தாகம் தீர்த்து அருள்பாலித்த சுப்பிரமணியர் கோயில் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மருதமலை சுப்பிரமணியர் கோயிலின் பின்பக்கம் மூன்று மைல் தூரத்தில் அனுவாலி சுப்பிரமணியர் கோயிலும் அனுமன் தீர்த்தமும் உள்ளது.

சேந்தமங்கலம்: நாமக்கல்லில் இருந்து 11 கி.மீ.வட கிழக்காக உள்ள கிராமம். இலங்கையில் இராவணனுடன் போர் செய்து வென்று, பிரிந்திருந்த சீதா தேவியை இராமன் மீண்டும் சேர்ந்த இடம். எனவே இவ்விடம் சேர்ந்த மங்கலம் என்று பெயர் பெற்று, பின்னாளில் சேந்தமங்கலம் என்று மருஉ ஆயிற்று.

 

சிவன் மலை: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் சிவன் மலை அமைந்துள்ளது.. இறைவனான நஞ்சுண்டேஸ்வரரை அனுமன் வழிபட்டுள்ளார். எனவே, அனுமனுக்கு இங்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 திருக்குரக்குக்கா: தஞ்சை மாவட்டத்தில் தலைஞாயிறு என்று வழங்கப்பெறும் திருக்கருப்பறியலூருக்கு வடக்கே சுமார் 1.5 கி.மீ. தொலைவில் உள்ளது. அnனுமன் வழிபட்டமையால் இததலம் திருக்குரக்குக்கா எனப் பெயர் பெற்றது.

மானந்த குடி: இராமபிரான் தல தர்ப்பணம் செய்வதற்காக அனுமன் தர்ப்பைப் பறிப்பதற்காக ஆண்டார்பந்தி என்ற ஊருக்குச் செல்லும் வழியில் இந்த ஊரில் தங்கியதாகவும், அதனால் அனுமன் வந்த குடி என்ற பெயர் ஏற்பட்டதாகவும், அதுவே பின்னர் மானத்த குடியாகி மருவிற்று என்றும் கூறப்படுகிறது. மருந்து மூலிகைகளுக்காக வந்த அனுமனுக்கேற்பட்ட தாகம் தீர்ந்திட, இங்குள்ள முருகப்பெருமான் தன் வேலாயுதத்தால தீர்த்தம் உண்டாக்கி அருளினார். தாகம் நீக்கியதற்கு நன்றி தெரிவிப்பதான அடிப்படையில் இக்கோயிலின் முன்மண்டபத்தில் வடக்கு நோக்கிய நிலையில் அனுமன் அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது.(சூர்ய காந்தன்,கோவை மாவட்டக் கோயில்கள், விஜய படிப்பகம், கோயம்புத்தூர், 1993, பப.106-107

    திருவாரூரில்-மயிலாடுதுறை வழியில் 20கி.மீ.தூரத்திலுள்ள பூந்தோட்டத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. கார்த்தவீரியன் எனும் சிவபக்தன் அதீத பக்தியுடன், ஒருசமயம் சிவ வழிபாடு செய்து கொண்டிருந்தபோதுஅனுமன் அவனது பூஜைக்கு இடையூறு  செய்ததாகவும், இதனால் கோபமடைந்த கார்த்தவீரியன்அனுமனை சபித்து விடவே, தவறை உணர்ந்த அனுமன்விமோசனம் வேண்டி இத்தலத்திற்கு வந்து, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவன் அவருக்கு அம்பிகையுடன் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தருளினார். அந்த மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினார் ஆஞ்சநேயர். எனவே இத்தலம் “அனுமன் ஆனந்த குடி‘ என்றழைக்கப்பட்டுபிற்காலத்தில் மானந்தகுடி‘ என்று மருவியது என்றும் கூறப்படுகிறது.

நெடுங்குன்றம்: இது திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலங்கையில் இராவணனோடு போர் செய்துவிட்டு, இராமர் அயோத்தி திரும்புகையில் இவ்விடத்தில் தவம் செய்துகொண்டிருந்த  சுகபிரம்ம முனிவரின் தவக்குடிலுக்கு வந்ததாகவும்,. இராமனைக் கண்ட முனிவர்  மகிழ்ச்சியில் திளைத்து, தாம் சேமித்து வைத்திருந்த அரிய ஓலைச் சுவடிகளை  இராமனிடம் கொடுக்க, அதை பணிவுடன் பெற்றுக் கொண்ட இராமன், அவற்றைப் படிக்குமாறு அனுமனிடம் கொடுக்க, அனுமனும் பத்மாசனத்தில் அமர்ந்து படிக்கலானார். இந்நிகழ்ச்சியை நினைவுகூரும்விதமாக குன்றத்து கோயிலில் சுவடிகளை கையில் வைத்துக்கொண்டு தரையில் அமர்ந்த கோலத்தில் இராமனின் எதிரே அனுமன் காட்சி அளிக்கின்றார்.

    முனிவர் தன்னோடு ஒருநாள் தங்கி உணவருந்திவிட்டுச் செல்லுமாறு இராமனை வற்புறுத்தினார். ஆனாலும் சீதையை அழைத்துக்கொண்டு அயோத்தி வருவதற்கு இராமன் குறிப்பிட்ட 14 ஆண்டுகள் முடியப்போகும் நிலையில் பரதன் அக்னி வளர்த்து யாக குண்டத்தில் விழ வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இராமன் முனிவரின் பேச்சை தவிர்க்க முடியாமல், தனது கணையாழியை அனுமனிடம் தந்து பரதனிடம் தான் அயோத்தி வருவதான செய்தியை கூறி சமாதானம் செய்து வரும்படி கூறினாராம். அவ்வண்ணமே, பரதனை அனுமன் சமாதானம் செய்துவிட்டு திரும்பி வந்தாராம். பின்னர் இராமனும் அனுமனும் அமர்ந்து ஒரே வாழை இலையில் சாப்பிட்டனராம்..அதற்கு வசதியாக இராமன் இலையின் மையத்தில் கோடு இழுத்தாராம். இராமன் இழுத்த இந்த கோடுதான் வாழை இலையின் மையத்தில் அமைந்துவிட்ட கோடு என்பது இத்தலத்தில் வழங்கிவரும் செவிவழி செய்தியாகும்.(தினமலர், மதுரை, ஏப்ரல் 2003, ப. 9) வில்அம்பு இல்லாமல், அமர்ந்த நிலையில் இராமன் இத்தலத்தில் மட்டுமே உள்ளார் என்பது சிறப்பியல்பாகும். .அனுமன் கருவறைக்குள்ளேயே இருப்பது மேலும் சிறப்பாம்.

அரங்கநாதர்: இராமபிரானின் முடிசூட்டு விழாவிற்கு பின் சீதையை மீட்கும் முயற்சியில் உதவிய விபிஷணன், தசரதர் வழிபட்ட ஸ்ரீரங்கவிமானத்தையும்பெருமாளையும் இராமபிரானிடம் பரிசாகக் கேட்டுப்பெற்று இலங்கைக்கு எடுத்துச் சென்றார். செல்லும் வழியில், காவிரியில் நீராடும் எண்ணத்தில் விமானத்தை ஆற்றின்கரையில் வைத்துவிட்டு நீராடினார். அத்தருணத்தில் அங்கு வந்த பிரம்மச்சாரி உருவிலிருந்த விநாயகர்தான் அந்த விமானத்தைத் தாங்கிக் கொள்வதாகச் சொல்லிவிபீஷணன் திரும்பி வருமுன்காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து விட்டார். விபீஷணன் எவ்வளவு முயன்றும் அவனால் அந்த விமானத்தை தூக்கமுடியாமல் போகவே, அரங்கநாதர் அவர்முன் தோன்றி தான் இந்த இடத்தில் இருக்க விரும்புவதாக தெரிவித்தார். எனினும் விபீசனனின் விருப்பத்தை நிறைவேற்றும்விதமாக, தன் பார்வை விபீஷணன் ஆட்சி செய்யும் தென் இலங்கை நோக்கியே இருக்கும் என அருள் செய்தார்.(தி.செல்லப்பா, ‘ரங்கநாதாதினமலர் வாரமலர், டிசம்பர், 24, 2006பப. 2-3) பிரம்மச்சாரி உருவிலிருந்து விநாயகரைத் துரத்தி வந்தபோதுஅவர் மலை உச்சியில் உச்சிப் பிள்ளையாராக அமர்ந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.   

வடுவூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது வடுவூர். வனவாசம் முடிந்து இராமபிரான் அயோத்திக்கு திரும்ப தயாரானார். அப்போது வனத்தில் அவருடன் இருந்த முனிவர்கள், அவரைத் தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர். அவர்களது கோரிக்கையை ஏற்ற இராமர்மறுநாள் அவர்களைச் சந்திப்பதாக சொன்னார். தனது உருவத்தை சிலையாக செய்துதான் தங்கியிருந்த இடத்தின் வாசலில் வைத்து விட்டார். முனிவர்கள் அந்த சிலையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிஇராமபிரானிடம்“அதை நாங்கள் வைத்துக் கொள்ள விரும்புகிறோம்,” என்றனர். இராமர் ஒன்றும் தெரியாதவர் போல, “அப்படியா! அப்படியானால் உங்களுடன் நான் இருப்பதைவிட அந்தச் சிலை இருப்பதைத்தான் விரும்புகிறீர்கள் போலும்!” என்றார். சிலையில் அழகில் மயங்கியிருந்த முனிவர்கள்தாங்கள் வழிபட அச்சிலையை தரும்படி கேட்டனர். அதன்படி இராமர் அவர்களிடம் சிலையை கொடுத்துவிட்டுஅயோத்தி திரும்பினார் என்று கூறப்படுகிறது.

முடிகொண்டான்: மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் நடுவில் முடிகொண்டான் அமைந்துள்ளது. 16 வருடம் முடியப்போவதால் தமக்காக காத்திருக்கும் தம்பி பரதன் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வான் என்று கருதி அனுமனை அயோத்திக்கு அவசரமாக அனுப்பி தாம் வந்து கொண்டிருக்கும் தகவலைத் தெரிவித்துவிட்டு வரும்படி இராமர் உத்தரவிட்டார். அனுமனும் அயோத்தி சென்று பரதனிடம் இராமர் கூறியவற்றை தெரிவித்துவிட்டு இங்கு திரும்பினார். அப்போது இராமர் தான் வருவதற்கு முன்பே விருந்து சாப்பிட்ட செய்தி அறிந்ததும் ஆசிரமத்திற்குள் வராமல் கோபித்துக் கொண்டு வெளியிலேயே உட்கார்ந்து கொண்டாராம். இராமரும் தனக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பாதியை அனுமனுக்கு அளித்து சாந்தப்படுத்தினார். ஆகவே தான், வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் இல்லாது, இராமர் எழுந்தருளியிருக்கும் மூலஸ்தானம் இங்குள்ளது. கோபித்துக் கொண்ட அனுமனுக்கு கோயிலுக்கு நேர் எதிரில் தனியாக சன்னதி இருப்பதையும் காணலாம்.

    இராமர் இராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும்முன் இத்தலத்திலுள்ள பரத்வாஜ முனிவர் ஆசிரமத்திற்கு வருகை தந்தார். அப்போது முனிவர் இராமருக்கு  விருந்தளிக்க விரும்பினார். ஆனால் இராமரோ இராவணனை வதம் செய்து விட்டு திரும்பும்போது இங்கு விருந்து சாப்பிடுகிறேன் என்று வாக்குறுதி தந்தார். அதேபோல் இராவணனை வதம் செய்து விட்டு திரும்புகையில் பரத்வாஜ முனிவரது ஆசிரமத்திற்கு வந்தார். விருந்து உண்ட இராமர் பரத்வாஜ முனிவருக்கு பட்டாபிஷேகத்திற்கு முன்பே முடி(மகுடம்)யுடன் இத்தலத்தில் காட்சி தந்தார். எனவே இங்குள்ள கோதண்ட ராமர் முடிகொண்டான் இராமர் என்றழைக்கப்படுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 

வாலி

குரங்கணில்முட்டம்: குரங்காகிய வாலியும்அணிலும்காகமும் வழிபட்டதால் இப்பெயர் பெற்றது. முட்டம் – காகம். இறைவன் திருநாமம் வாலி வழிபட்டதைக் காட்டும்.இறைவன் திருநாமம் வாலீசுவரர்.

வாலிகண்டபுரம்: பெரம்பலூர்க்கு வடகிழக்கே 15 கி.மீ. தொலைவில் கோனேரி ஆற்றங்கரையில் உள்ளது. வாலி இத்தலத்து இறைவனைப் வழிபட்டதால் இவ்வூர் வாலி கண்ட புரம் என்றும், மூலவர் வாலீஸ்வரர் என்றும் பெயர்பெற நேர்ந்தது.

அரசூர்:: திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரிக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. தன் ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க வாலி இங்குவந்து வந்து வழிபட்டதால் வாலீசர் கோவில் என்று அறியப்படுகிறது.

தாரமங்கலம்: சேலம் நகரிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வாலியின் மனைவி தாரை இங்கு எழுந்தருளியுள்ள கைலாசநாதரை வழிபட்டதால் இவ்வூர் தாரைமங்கலம் என்று பெயர் பெற்று பின்னர் தாரமங்கலம் என்று வழங்கப்பட்டுவருகிறது.

தென்குரங்காடுதுறை(ஆடுதுறை): கும்பகோணத்தில் இருந்து 12 கி.மி. தொலைவிலும்மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும் ஆடுதுறை என்ற தலம் உள்ளது. வாலிஅனுமன் வழிபட்டதால்இத்தலம் இப்பெயர் பெற்றது. வாலியால்துரத்தப்பட்ட சுக்ரீவன்இத்தல இறைவனை வேண்டஇராமரின் அருள் கிடைக்கப்பெற்றுதான் இழந்த செல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானரமாகிய சுக்ரீவனால் வழிபடபட்டமையால், இத்தலம் தென்குரங்காடுதுறை என்றானது. வெளிப்பிரகார மண்டபத்தின் மேல் மாடப்பத்தியில் சுக்ரீவன் ஆபத்சகாயேசுரரை வணங்கும் காட்சியும்சுக்ரீவனை இறைவன் அன்னப்பறவையாகவும் அவன் தேவியை பாரிஜாத (பவளமல்லிகை) மரமாகவும் உருமாற்றியருளிய தல வரலாற்றுக் காட்சி சுதை வேலைப்பாட்டில் அமைந்துள்ளதைக் காணலாம்.

வடகுரங்காடுதுறை: கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும்திருவையாறில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. வாலி இராவணனுடன் போரிட்ட சமயத்தில் அறுந்த வால் வளர இத்தலத்து இறைவனை வழிபட்டதாகவும்,. வாலி வழிபட்டதால் இறைவனுக்கு வாலிபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. ஆலய விமானத்தில் வாலி இறைவனை வழிபடும் சிற்பம் உள்ளது.

மயிலை வாலீஸ்வரர் கோவில்: இங்கு பெரிய நாயகி அம்மன் உடனுறை வாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. வாலி தனது ஆன்ம பலத்திற்காக இத்தலத்து இறைவனை வழிபட்ட தலம்.. இறைவன் சந்நிதியிலே கைகூப்பி வனங்கியபடி வாலி காட்சி தருகிறார்.

காஞ்சி வாலீஸ்வரர் கோவில்: காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுள்திருக்கச்சி மயானத்திற்குப் பின்புறம் உள்ளது. இங்கு சுயம்புவாய் தோன்றிய லிங்கத்தை வாலி வழிபட்டு, தன்னிடம் எதிரில் நின்று போரிடுவோரின் பாதிபலத்தைப் பெறும் தன்மையும்தோல்வியில்லா வெற்றி பெறும் நிலையையும் பெற்றார். வரம் பெற்றதும் ஆவல் அடங்காத வாலி, அந்த லிங்கத்தை தன் அரண்மனையிலேயே வைத்து வழிபட ஏதுவாகதன் வாலினால் கட்டிப் பெயர்தெடுக்க முயற்சிக்கவே, இறைவர் அசரீரியாய், யாம் இங்கேயே இருப்போம் என்று கூறவேவாலி வழிபட்டு சென்றார் என்று கூறப்படுகிறது.. இன்றும் பாண லிங்கத்தின் அடிப்பகுதி வாலில் கட்டி இழுத்ததால் ஏற்பட்ட தழும்பு (அடையாளம் போல் அடிப்பகுதி சிறுத்து) தெரிவதைக் காணலாம்.

சேவூர்: அவிநாசிக்கு வடக்கே 8 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூர் சிவன் கோவில் மூலவர் வாலீஸ்வரர். இங்கு வாலி வழிபட்டதை உணர்த்தும் வகையில் கருங்கற் கொடி மரத்தில் வாலியின் உருவம் செதுக்க்பபட்டுள்ளது.

வாலிநோக்கம்: இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரிலிருந்து தென்கிழக்காக 26 மைல் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இராமபிரானால் கொல்லப் பட்ட குரங்கினத் தலைவரான வாலியின் முகம் என்ற பொருளில் வாலிமுகம் என்ற பெயர் பெற்ற இவ்வூர் பின்னாளில் வாலிநோக்கம் என்று மருவியதாக கூறப்படுகிறது.(.இராமநாதபுரம் விவரச் சுவடி, ப.1244) பாம்பன் பகுதிக்கு (தற்போது பாம்பன் புகைவண்டி நிலையதிற்கு) தெற்கே உள்ள பகுதியில் அனுமன்  குந்துக்கால்செய்து தனது உருவத்தை விஸ்வரூபம் எடுத்துள்ளார். அப்போதுஅவரது வால் நோக்கி இருந்த இடமே வாலிநோக்கம் என்பதாகும் என்றும் பிறிதுபட கூறப்படுகிறது

சர்க்கார் பெரியபாளையம்: திருப்பூர் – ஊத்துக்குளி பாதையில் திருப்பூரிலிருந்து 8வது கி.மீ. தொலைவில் உள்ளது. சுக்ரீவன் வந்து வழிபட்டதால்இதற்கு குரக்குத்தளி என்ற பெயரும். இத்தல இறைவனுக்கு சுக்ரீஸ்வரர் என்ற பெயரும் வழங்குகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 

 

இராமன் வழிபட்ட தலங்கள்

இராமேஸ்வரம்; இராமேஸ்வரம் என்பது இராமன் வழிபட்ட ஈஸ்வரம் என்பதாகும். இராவணனைக் கொன்ற பிரம்மஹஸ்தி பாவம் நீங்க இவ்வூரில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று இராமபிரானுக்கு முனிவர்கள் அறிவுரை வழங்கினர். எனவே இராமபிரான் ஒரு நல்ல நாளையும் நல்ல நேரத்தையும் குறிப்பிட்டு அதற்குள் ஒரு லிங்கத்தைக் கொண்டு வருமாறு அனுமனை கைலாயத்திற்கு அனுப்பிவைத்தார். அனால உரிய நேரத்தில் அனுமன் வந்தடையவில்லையாதலால் சீதா தேவியைக் கொண்டு மணலால் லிங்கம் செய்து அதனை இராமபிரான் பிரதிஷ்டை செய்தார். நேரம் கடந்து வந்த அனுமன் சீதாதேவி உருவாக்கிய லிங்கத்தை அகற்ற முயற்சிக்க அவனது கைகள் சிவக்க நேரிட்டது. இந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக இராமேஸ்வரம் கோயில் வாயிலிலுள்ள அனுமனின் உருவம் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கின்றது. தன் பக்தனான அனுமனை அமைதிப்படுத்த விரும்பிய இராமபிரான் சீதாதேவி அமைத்த லிங்கத்திற்கு வடக்காக அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை  பிரதிஷ்டை செய்தார். அதுவே அனுமலிங்கம் அல்லது காசிலிங்கம் என்று பெயருடன் விளங்குகின்றது.  முதலில் விசுவநாதருக்கு வழிபாடு நடத்தப்பட்டபின்பேசீதாவால் உருவாக்கப்பட்ட இராமநாதருக்கு நடைபெறும் என்று இராமபிரானே அறிவித்ததாக கூறப்படுகிறது.  (இராமநாதபுரம் விவரச் சுவடிபப.1192-93)

திருமறைக்காடு: நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. தற்போது வேதாரண்யம் என்று வழங்கப்படுகிறது.. இராமர் இவ்விடத்தில் கடலில் புனித நீராடி இராவணனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்றார் என்று கூறப்படுகிறது. இராமன் வழிபட்ட இராமநாதர் சந்நிதி இங்குள்ளது. இராமர் தனது பாவத்தைப் போக்கிக் கொள்ள வேண்டி வழிபட்ட விநாயகர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார்.

திருக்கண்ணபுரம்: நன்னிலத்திலிருந்து கிழக்கே 11 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.  இராவணனைக் கொன்றப் பாவம்நீங்க, இராமன் இறைவனை வழிபட்டத் தலம். இராமர் இத்தலத்திற்கு வந்தபோது நந்தி தடுக்க முயன்றதாகவும், அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்துகாட்சித் தந்ததாகவும் பின்பு இராமன் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இராம நந்தீஸ்வரம் என்ற பெயர் பெற்று பின்னர்இராமநாதீச்சரம் ஆயிற்று என்பர். இதற்குச் சான்றாக இத்தலத்திற்குரிய சோமாஸ்கந்த மூர்த்தத்தில் நந்திதேவர் (அம்பிகை கரத்தில்) உள்ளார்.

திருஇராமேஸ்வரம்: திருவாரூர்-மன்னார்குடி வழியில் உள்ளது. இக்கோவிலில் இராமன் வழிபட்ட காரணத்தால்இராமேஸ்வரம் என்று பெயர் பெற்றது. ஜோதிர்லிங்கத்தலமான இராமேஸ்வரம் மற்றும் திருக்கண்ணபுரத்தில் இருக்கும் இராமனாதீஸ்வரம் ஆகிய தலங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும்விதமாகஇத்தலம் திருஇராமேஸ்வரம் என்று  அழைக்கப்பட்டு வருகிறது.

குருவிராமேஸ்வரம்:  திருப்பள்ளிமுக்கூடல் என்றும் அழைக்கப்படும் இத்தலம் திருவாரூர் அருகில் உள்ளது. இராமர்தசரதர் மற்றும் சடாயுவுக்குத் திதி செய்து வழிபட்ட இடம். சிவ பெருமான்சடாயுவுக்குகாசிகங்கைசேது ஸ்நான பலனை அருளிய தலம்.

ஸ்ரீரங்கம்: இராமன் வழிபட்ட காரணத்தால்அரங்கன் ஸ்ரீரங்கநாதன் பெரிய பெருமாள்‘ என்றும் வணங்கப் பெறுகிறான்.

பட்டீஸ்வரம்:  கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 8 கி.மி. தொலைவில் வாலியைக் கொன்ற பாவம் நீங்க இராமன் இங்கு தன் வில்லின் முனனயால் கோடிதீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு போக்கிக் கொன்டார். இத்தலத்தில் இராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் இராமலிங்கம் என்று வழங்கப்படுகிறது.

பாவநாசம்: தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள தலம்கர, தூசணர்களைக் கொன்ற பாவம் நீங்க, இராமன் இத்தலத்தில் 108 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டைச் செய்து வழிபட்டு தன் பாவத்தை நாசம் செய்த இடம் பாவநாசம் என்று வழங்குவதாயிற்று. இராமன் வழிபட்டமையால் இத்தலத்து இறைவன் இராமலிங்கேஸ்வரர் என்று பெயர் பெற்றனன். சிவ பூஜை செய்வதற்காகஇராமன் அனுமனிடம் சிவலிங்கம் ஒன்று கொண்டு வருமாறு கூறவே, அனுமனும்இமய மலை சென்று அங்கிருந்து சிவலிங்கம் ஒன்றை எடுத்து வந்தார். அதற்குள் சீதை ஆற்று மணலில் சிறுசிறு லிங்கங்களாய்ப் பிடித்து வைத்தாள். அனுமான் வருவதற்கு  கால தாமதமானதால்இராமன்சீதை பிடித்து வைத்த லிங்கங்களில் ஒன்றை எடுத்து வைத்துப் பிரதிஷ்டை செய்து பூஜையை ஆரம்பித்து விட்டார். திரும்பி வந்த அனுமன் தான் கொண்டு வந்த லிங்கம் இராமனால் பயன்படுத்தாதபடியால், கோபத்தோடு இராமன் வழிபட்டுக் கொண்டிருந்த சிவலிங்கத்தைத் தன் வாலில் கட்டிப் பெயர்க்க முயன்று, வால் அறுந்து, கீழே விழுந்தான். இராமன் அவனிடம்சிவ அபராதத்தை மன்னிக்கச் சிவ பூஜை செய்யச் சொன்னார். அனுமன் தான் கொணர்ந்த லிங்கத்தை நிறுவிதன் தவற்றை உணர்ந்து இறைவனிடம் மன்னிக்க வேண்டினான். இந்த லிங்கம் அனுமத் லிங்கம் என வழங்கப் படுகிறது. இதனையும்மூலவரையும் சேர்த்து இத் தலத்தில்108 சிவ லிங்கங்கள் தனித்தனியே உள்ளன. இத்தலம் கீழை இராமேஸ்வரம் என அழைக்கப்படுகிறது. காரணம் இராமபிரானால் தோஷம் நீங்க செய்யப்பட்ட லிங்கம் இத்தலத்தில் உள்ளது. மேலும் இராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 106 இலிங்கங்களும் அனுமன் காசியிலிருந்து கொண்டுவந்த அனுமந்த லிங்கமும் கோயிலின் வெளிப்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு தலப் பெருமைகளைக் கொண்ட இத்தலம் 108 சிவாலயம் எனவும் இராமலிங்க சுவாமி திருக்கோயில் எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

யோகலிங்கேஸ்வரர் சிவபக்தனான ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும்தந்தையான தசரதருக்கு செய்ய வேண்டிய பிதுர்கடன் நிறைவேற்றாததால் ஏற்பட்ட சிரமங்கள் நீங்கவும்காஞ்சிபுரத்தில் இந்திரனால் உருவாக்கப்பட்ட சர்வதீர்த்தக் குளக்கரையில்பிதுர்க்கடனாக தசரதருக்கு தர்ப்பணம் செய்தார். சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவருக்கு “ராமநாத சுவாமி‘ என்ற பெயர் ஏற்பட்டது. ராமனோடு வந்த சீதாதேவிலட்சுமணர்ஆஞ்சேநயர் ஆகியோரும் ஆளுக்கு ஒரு சிவலிங்கத்தை காஞ்சியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சீதாதீஸ்வரர்லட்சுமணீஸ்வரர்அனுமந்தீஸ்வரர் என பெயர் சூட்டப்பட்டது. இதன் பின் சிவன் அவர்களுக்கு யோகவடிவில் காட்சியளித்தார். அவரே “யோகலிங்கேஸ்வரர்‘ என்ற பெயர் பெற்றார்.

பார்ப்பான் குளம்: நெல்லை மாவட்டம்ஆழ்வார் குறிச்சியிலிருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் கருணையாற்றின் கரையில் உள்ளது. இராமன் இத்தலத்து இறைவனாகிய கருத்தீஸ்வரரை வணங்கியதாய் அறியப்படுகிறது.

புதுவயல்: காரைக்குடிக்கு வடகிழக்கே எட்டு மைல் தொலைவில் அமைந்துள்ள சாக்கோட்டை(எ)புதுவயல் என்ற இடத்தில அமையப்பெற்றுள்ள வீரசேகர உமையாம்பிகை கோயிலில் உள்ள லிங்கத்தை இராமபிரான் வழிபட்டதாக சொல்லப்படுகிறது. (ஏ.இராமசாமி, ப.1199)

தீர்த்தகிரி: அரூர்-திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ளது தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில். இராவணனை கொன்று அயோத்தி  திரும்புகையில், இராமபிரான் தனது  முதல் கால பூஜையை இராமேஸ்வரத்திலும்இரண்டாம் கால பூஜையை தீர்த்தகிரிமலையிலும் செய்ததாக கூறப்படுகிறது. தீர்த்தகிரிமலைமீது அம்பு எய்தி தீர்த்தம் உண்டாகி அந்த தீர்த்தத்தை கொண்டு  இராமபிரான் பூஜைகளை முடித்தார் என்பது நம்பிக்கையாகும்.

நந்தம்பாக்கம்: சென்னைக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில் உள்ள நந்தம்பாக்கம் இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட தலமாகும். எனவே தான் இத்தலத்து இறைவன் இராமலிங்கேஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

திருவாமாத்தூர்: விழுப்புரத்திலிருந்து வடமேற்கில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனை இராமன் தொழுது அருள் பெற்றமையால்இறைவனுக்கு அபிராமேஸ்வரர் என்ற பெயர்.

திருவான்மியூர்: சென்னைக்குத் தெற்கே 8 கி.மீ. தொலைவில் திருவான்மியூரில் உள்ள இறைவன்  மருந்தீசரை இராமன் வழிபட்டதாக கூறப்படுகிறது.

காஞ்சி: வீரராகவேச்சுரம் கோவில் பூத்தேரித் தெருவில் உள்ள முருகன் கோவில் அருகில் இருக்கும் வயல்வெளியின் நடுவே உள்ள சிவ.லிங்கத்தை இராமன் ஸ்தாபித்துவழிபட்டு பாசுபதாஸ்திரம்பிரம்மாஸ்திரம் முதலியனவற்றைப் பெற்று இராவணனை அழித்தாக கூறப்படுகிறது.

இராமீசுரம்: காஞ்சிபுரம் அக்ரகாரக் கோடியில் அமைந்துள்ள தலம் இராமீசுரம். தன் பாவம் நீங்கிட இராமன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டமையால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

கும்பகோணம்; இங்குள்ள மகாமகக் குள வடகரையில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதரை இராமர் வழிபட்டுதன் உடலில் ருத்ராம்சம் ஆரோகணிக்கச் செய்தார். அதனால் இத்தலத்துக்குக் காயாரோகணம் என்று பெயர்.

பிட்சாண்டார் கோவில் என்னும் உத்தமர் கோவில்: திருச்சிக்கு அருகில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனை இராமன் தொழுது அருள் பெற்றமையால்இறைவனுக்கு அபிராமேஸ்வரர் என்ற பெயர்.

மயிலாப்பூர்: இராமர் வழிபட்டு பகைவரை வென்று மனைவியை அடைந்ததால் தானே திருவிழா நடத்திய தலம் என்று கூறப்படுகிறது.

இராம நதி: சம்புகன் என்ற கொடியவனை இராமன் கொன்ற பாவம்  நீங்கிட, திருநெல்வேலி மாவட்டம் கடையம் பகுதியில் தத்துவசாரா நதியில் நீராடிவில்வ வனநாதரையும்அவரது தேவியான நித்ய கல்யாணி அம்பாளையும் வணங்கினார். இராமன் நீராடியதால்இந்த நதிக்கு இராம நதி என்ற பெயர் ஏற்பட்டு, இப்போதும்இந்தப் பெயரிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது.

திருநரையூர்: கும்பகோணம் நாச்சியார் கோவில் பாதையில் கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலுள்ளது இத்தலம்.  தசரதன் தன் நோய் தீரஇத்தலத்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி சனிபகவானை வழிபட்டிருக்கிறார். iராமபிரான் ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்புகையில் தந்தை வழிபட்ட இத்தலத்திற்கு வந்து புண்ணிய நீராடிமண்ணால் லிங்கம் செய்து வழிபட்டிருக்கிறார். கூடவே இவ்வாலய சிறப்புணர்ந்து அனுமனும் சிவ வழிபாடு செய்திருக்கிறார். அதற்கு சான்றாக இவ்வாலயத்தின் பிரகாரத்தில் அமைந்திருக்கிறது அனுமந்த லிங்கம்.

கல்படி: கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலையின் மேற்கு அடிவாரத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. இராவணனை வென்று சீதையுடன் திரும்பிய இராமன் தன தேவியை அக்னிப பிரவேசம் செய்தார். அதன்மூலம் தேவி தன் புனிதத் தன்மையை நிருபித்தார். தேவியை இராமபிரான் கைப்பிடித்தார். அங்ஙனம் கைப்பிடித்த இடமே கைப்பிடி கல்யாணபுரம் என்று பெயர் பெற்றது. பின்னாளில் அது கைப்பிடி எனச் சுருங்கி, தற்போது கல்படி என வழங்கப்பட்டு வருகிறது.

பஞ்சலிங்க தலங்கள்: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு- சத்யவாகீசர்;பத்தை – குலசேகரநாதம்பத்மனேரி – நெல்லையப்பர், தேவநல்லூர் – சோமநாதம், சிங்கிகுளம் – கைலாசநாதம் ஆகிய லிங்கங்கள் இராமரால் வழிபடப்பட்டதாக அறியப்படுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 

 

 

லவன், குசன்

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இராமபிரானின் மைந்தர்கள் லவ, குசர்கள் அவதரித்த தலம் என்று இவ்வூரைக் கருதுகின்றனர். சீதா தேவி நீராடியதாக கருதப்படும் இங்குள்ள திருக்குளம் சீதேவி சீதலி என்று இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது. (ஞான ஆலயம், சென்னை, ஏப்ரல் 2007,ப.58)

கோயம்பேடு: வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்த இராமனின் அஸ்வமேத யாக குதிரையை லவன்குசன் இருவரும் சேர்ந்து கட்டிப் போட்ட இடமே கோயம்பேடு என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. (கோ- அரசன்அயம்- குதிரைபேடு- கட்டுதல் என்று பொருள்). இதை அறிந்து வெகுண்டடெழுந்த இராமனுடன், சிறுவாபுரி எனுமிடத்தில் லவன்குசன் இருவரும் போரிட்டதாகவும், தந்தையுடன் போரிட்ட பாவம் நீங்க லவன்குசன் இருவரும் குதிரையை கட்டிப் போட்ட இடத்தில் சிவலிங்கம் ஒன்றை தங்கள் உயரத்துக்கு ஏற்ப நிறுவி வழிபட்டனர். அவர்கள் வழிபட்ட லிங்கத்துக்கு “குசலவபுரீஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில் அது குறுங்காலீஸ்வரர் என்ற பெயரை பெற்றது. அஸ்வமேத யாகக்குதிரையை மீட்க இராமனே இந்தத் தலத்துக்கு வந்ததால் இவ்வூர் இராகவபுரம் என்றும்ஆற்றின் கரையில் அமர்ந்ததால் அமர்ந்தகரை, (இப்போது அமைந்தகரை – அமிஞ்சிக்கரை) மறு பகுதியாக விளங்குகிறது என்று கூறுவர்.

விலாங்காடுபாக்கம்: சென்னைக்கு வடக்கே 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. லவ குசர்களில்லவன் இத்தலத்தில் தங்கி வணங்கியதால் இத்தல இறைவனுக்கு லவபுரீஸ்வரர் என்று பெயர்.

சின்னம்பேடு: சிறுவாபுரி என்றழைக்கப்படும் தலம். பொன்னேரிக்கு மேற்கே 10 கி.மீ. தொலவில் உள்ளது. இங்கு லவன்குசன் இருவரும் இராமனோடு போர் செய்து இராமனை வெற்றி கொண்டனர். அதலால் இவ்வூர்சிறுவர்புரிசிறுவாபுரி என்று ஆனது. இராமனின் பாதங்கள் பட்டுப் புனிதமடைந்த தலம். சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடு ஆனது. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும்.

 

அவதார முடிவில்

ஆழ்வார் திருநகரி: திருநெல்வேலி– திருச்செந்தூர் வழிப்பாதையில் தென்கிழக்காக 30 கி.மீ. தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி அமைந்துள்ளது. இராமவதாரம் முடிவுற மூன்று நாளே இருக்கையில் இராமபிரானைப் பார்க்க எமதர்மராஜன் வந்தான். அப்போது இராமர் இலக்குவனை நோக்கி தம்பி‘யாரையும் இனிமேல் உள்ளே அனுமதியாதே என்றார். சில நாழிகை கழித்து கடைசியாக ஒரு முறை இராமனைக் கண்குளிரக் கண்டுவிடுவோமென துர்வாச முனிவர் வந்தார். இவரைத் தடுத்தால் முனிவரின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்றெண்ணி இலக்குவன் தடுக்கவில்லை. துர்வாசரை உபசரித்து அனுப்பிவைத்த இராமன் ‘என் ஆணையை மீறி மரமாக நின்றமையால் நீ மரமாக இருக்கக் கடவாய் என்றார். இலக்குவன் இராமனின் இரண்டு கால்களையும் பற்றிக்கொண்டு நான் நின்னைவிட்டு பிரிந்திருப்பது இயல்போஇது உமக்கே தெரியாதோ! என்று மண்டியிட்டு நின்றான். இலக்குவனை எடுத்து ஆரத்தழுவிய இராமன் ‘நான் இந்த இராமவதாரத்தில் சீதையை காட்டில் வாழச்செய்த பாவத்தை போக்க 16ஆண்டுகள் அசையா பிம்பமாய் பிறக்க வேண்டியுள்ளது. அப்போதும் நான் உன் மடி மீது அமர்ந்துகொள்ள ஆசைப்பட்டுத்தான் உன்னை மரமாக நிற்கச்சொன்னேன். அந்த மரப்பொந்தில் நான் வந்து அமர்வேன் என்றார். இங்கிருந்து நீ புறப்பட்டு தாமிரபரணியின் தென்கரையில் உள்ள வராக தலத்தை அடைந்து ஒரு புளியமரமாக மாறப்போகிறாய் என்று சொல்லி தனது விரலில் இருந்த கணையாழியைக் கழற்றிக் கொடுத்து இது எந்த இடத்தில் உனது கையைவிட்டு நழுவுகிறதோ அந்த இடத்தில் புளியமரமாக நில் என்று ஆசீர்வதித்து அனுப்பினார். ஆதிசேடனான இலக்குவனே இங்கு புளியமரமாக எழுந்தருளியிருப்பதால் இதற்கு சேச சேத்திரம் என்றும் பெயர். வானுலகத்திற்கு கற்பக விருட்சம் போல் பூலோகத்திற்கு இந்த உறங்காப்புளி மரம் அமைந்துள்ளது. இதன் இலைகள் இரவிலும் மூடாது. உறங்காமல் இவ்வுலகைக் காக்கும் இந்த உறங்காப் புளியமரம்இலக்குவனின் அவதாரமாகவே காட்சி அளிக்கிறது. இந்தப் புளிய மரம் பூக்கும்காய்க்கும்ஆனால் ஒருபோதும் பழுத்ததில்லை. ஆண்டுகளைக் கடந்து, இன்றும் நமக்கு திருக்காட்சி அளிக்கின்றது.

    முடிவாக, இந்துக்களின் இறைகாவியமாகப் போற்றப்படும் நூல் இராமாயணம் அது தமிழ் மக்களை மிகவும் கவர்ந்ததுடன்,  அவர்களின் இறை நம்பிக்கையையும் பக்தியையும் வலுபடுத்தியது. இந்தியாவின் பிற மாநிலங்களைவிட தமிழகம் இராமாயணத்தை மிகுதியாக தன்னுள்ளே உள்வாங்கி கொண்டது. தமிழ்நாட்டில் இராமன் சீதையை தேடி வருவது முதல் இராம-இராவணப் போர் முடிந்து தேவியுடன் அயோத்தி திரும்பி முடிசூட்டுவிழா நடைபெறும் நிகழ்வு வரையிலான  இராமாயணம் சித்தரிக்கும் நிகழ்ச்சிகளை நினைவூட்டும் வகையில் மக்கள், மலைகள், நீரோடைகள் மட்டுமன்றி கடவுளர்கள் அவர்களின் திருவுருவங்கள், திருநாமங்கள் என பல்வேறு நிலைகளில் இராமாயண கதை மண்ணையும் மக்களையும் அரவணைத்துள்ளது. இராமாயனத்தில் இடம் பெற்ற கதை மாந்தர்கள், தங்கள் ஊரில் அல்லது பகுதியில் தான் பயணித்தார்கள்; இராமாயணத்தில் நடைபெறும் நிகழ்வுகளை தங்கள் பகுதியில்தான் நடைபெற்றது என்ற எண்ணத்தில், தாங்கள் நேரில் பார்த்தது போன்று பதிவுகளை விட்டு சென்றுள்ளனர்.  இராமனை அவதாரமாக-ஒழுக்கசீலனாக–‘ஒருவனுக்கு ஒருத்தியெனும் உயரிய நெறி போற்றுபவனாக-ஒப்புமையில்லாதவனாக-கடவுளாக தமிழ்மக்கள் கண்டனர்; களித்தனர்; போற்றினர்; வணங்கினர்; வழிபட்டனர். இராமகதை நிகழ்வுகள் தமிழ் மக்களின்  நினைவுகளில் இரண்டற கலந்ததின் விளைவாக. இராமாயணத்தை நாடகமாக- திரைப்படமாக- தொலைகாட்சி தொடராக மீண்டும் மீண்டும் பார்த்து, நினைவுகளில் நீங்காது நிறுத்திக் கொள்வதான நிலை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வரலாறு மனித இனம் கொண்டுள்ள நம்பிக்கைகளில் பொதிந்துள்ளது. ஒருவரது நம்பிக்கை மற்றோருக்கு மூடநம்பிக்கையாக கூட இருக்கலாம். ஆனால் பழக்கம் காலப்போக்கில் வழக்கமாவதைப போன்று நம்பிக்கைகள் பெரும்பாலும் எழுதப்படாத வரலாறாகவே மனித இனத்தால் காலம் காலமாக அசைப்போடப்பட்டு வருகிறது என்பதே உண்மையாம்.   



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

தமிழ்இலக்கியங்களில்ராமபிரான்

தொல்காப்பியம் காட்டும் முதல் தெய்வம்  மாயோனாகிய திருமாலே ஆவார்.

மாயோன் மேய காடுறை உலகமும் 
சேயோன் மேய மைவரை உலகமும் 
வேந்தன் மேய தீம்புனல் உலகமும் 
வருணன் மேய பெருமணல் உலகமும் 
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் 
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே 
 -  தொல்காப்பியம் பொருள்.அகத் 5

தமிழரின் முதல் தெய்வமான மாயோனின் அவதாரமான ஸ்ரீ ராமபிரான் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகளைக் காண்போம்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

அகநானூறு

நெய்தல் நில நகரம் எவ்வாறு அமைதியடைந்தது என்பதைக் கூற வந்த சங்கப்புலவர்  அதற்கு தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த இராமாயணத்தில் இருந்து ஒரு காட்சியை உவமிக்கிறார் .

வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே

 (அகநானூறு 70: 13-17).

அதாவது பாண்டியர்களுக்குரிய சேதுக்கரையில் அமர்ந்து ஸ்ரீராமன் இலங்கை மீது படையெடுப்பது குறித்த போர் யூகங்களைத் தன் வானர சேனைகளுடன் ஆலமரத்திற்கு அடியில் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தான்அப்போது அங்கு ஒலி எழுப்பித் தொல்லை செய்த பறவைகளைத் தம் கை ஒலி செய்து அமைதிப்படுத்தினான்அதைப் போன்ற அமைதியை நகரம் அடைந்தது என்கிறான்... இங்கே வெல்போர் ராமன் என்று கூறி ராமன் எல்லா போரில் வெற்றி பெறக்கூடிய பெரிய வீரன் என்று புகழ்கிறார்இதன்மூலம் ஸ்ரீராமன் வாழந்ததையும்வானர சேனையோடு தனுஷ்கோடி வந்ததையும்இலங்கை மீது படை எடுத்ததையும் உண்மையில் நடந்த வரலாறே என சங்கப்புலவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்!

புறநானூறு

இராவணன் தமிழனாஅசுரனா?

இராமர் கம்பரால் தமிழருக்கு அறிமுகமானவரல்லர்.
ஸ்ரீராம்பிரானின் வரலாற்றை சங்கத்தமிழர் நன்று அறிந்திருந்தனர்எந்த அளவு என்றால் வெகு சாதாரணமாக உவமையாகப் பயன்படுத்தும் அளவு.

ஆதாரம்-

இளஞ்சேட்சென்னி என்ற சோழ மன்னனைப் பாணர்கள் பாடி அணிகலன்களும் செல்வமும் பரிசில் பெறுகின்றனர்.இதுவரை இதுபோன்ற விலை உயர்ந்த அணிகளை அவர்கள் பார்த்ததில்லை போலும்.அதனால்  தாங்கள் பெற்ற அணிகளுள் விரலுக்குரிய மோதிரத்தைக் காதுக்கும்காதுக்குரியதை விரலுக்கும்இடையில் அணிவதைக் கழுத்துக்கும்கழுத்துக்குரியதை இடைக்குமாக இப்படி மாறி மாறி அணிந்து கொண்டனராம்இச்செய்யகை வேடிக்கை ஆகவும்நகைப்புக்கு இடமாகவும் இருந்ததாம்... எப்படி?

கடுந்தெறல் இராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே

புறநானூறு ( 378: 18-22)


கடுமையான போர்திறன் உடையபவன் ராமன்அவனது பத்தினியான சீதையை அரக்கன் ராவணன் கவர்ந்து கொண்டு வந்தான்அப்பொழுது தான் சென்ற பாதையைத் தன் கணவன் கண்டுகொள்ள வேண்டுமென்று சீதை தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாகக் கீழே போட்டாள்அவை குரங்குக் கூட்டங்களின் கையில் கிடைத்தனஅக்குரங்குகளுக்கு நகைகளை எப்படி எங்கு அணிவது எனத் தெரியவில்லைஎனவே அவை மாறி மாறி அணிந்து கொண்டனஅதுபோலச் ‘சோழன் கோயிலில்’ பரிசில் பெற்ற பாணர்கள் கூட்டமும் செய்தது எனப் புறநானூறு இராமாயணத்தில் வரும் நிகழ்வுக் குறிப்புகளை உவமையாகக் காட்டுகின்றது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் இதுதான்மிகத் தெளிவாக புறநானூற்றுத் தமிழன் இராவணனை  அரக்கன் என்றுள்ளான்.தமிழனென்று குறிப்பிடவில்லைஅதே போல வெல்போர் ராமன் என்று ராமனைப் போரால் வெல்ல முடியாது அதனால் தான் இராவணன் கோழைத்தனமாக அவன் மனைவியான சீதையைக் கடத்தினான் என்று சங்கப் புலவர் குறிப்பால் உணர்த்துகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், புறஞ்சேரியிறுத்த காதையில்

அரசே தஞ்சம்என்று அருங்கான் அடைந்த

அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்

பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்

என்று கோவலன் இல்லாத காவிரிப் பூம்பட்டிணத்தை

காட்டிற்கு சென்ற ராமன் இல்லாத அயோத்தியுடன் ஒப்பிடுகிறார் இளங்கோவடிகள்.

சரி ராமர் திருமாலின் அவதாரம் என்று தமிழ்ப் புலவர்கள் பாடியுள்ளார்களா என்று பாப்போம் . ஏன் என்றால் இன்று சிலர் திருமால் மாயோன் தமிழர் முப்பாட்டன் ...ஆனால் ராமர் வடநாட்டுத் தெய்வம் என்கின்றனர். அதற்கு மறுப்பு இதோ...

 

ஸ்ரீராமனைப் போற்றும் சிலப்பதிகாரம்

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்

தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து

சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த

சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே

திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;

இரண்டு அடிகளால் மூவுலகும் அளந்தவன்- (வாமன அவதாரம்). அதே அடிகளுடன் லக்ஷ்மணனோடு வனவாசம் சென்றவன், தொன்மை மிக்க இலங்கையை வென்றவன் (இராவணனை வென்ற ஸ்ரீராமன்)... இத்தகைய சிறப்புடையோன் ஸ்ரீராமன் பெருமைகளைக் கேட்காத காதுகளும் காதுகள் தானா? திருமால் புகழ் கேட்காத செவிகளும் செவிகளா என்று சிலப்பதிகாரம் கேட்கின்றது.

இது  ஆய்ச்சியர் குரவையில் வரும் பாடல்களுள் ஒன்று. திருமாலின் பெருமைகளை முல்லை நிலத் தமிழ் மக்களான ஆயர்கள் பாடி வணங்கினர்.

அதேபோல சோழ நாட்டை விட்டு மதுரைக்கு வந்த கோவலன் மற்றும் கண்ணகி தம்பதியர் மிகுந்த வேதனையில் இருந்தனர் அவர்களுக்கு ஆறுதல் கூற வந்த கவுந்தி அடிகள் எனும் சமணப் பெண்துறவி இவ்வாறு கூறுகிறார்.

தாதை ஏவலின் மாதுடன் போகிக் 

காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் 

வேத முதல்வற் பயந்தோன் என்பது

நீஅறிந் திலையோ நெடுமொழி அன்றோ?

மதுரைக் காண்டம் ஊர் காண் காதை வரிகள் 45 -49

அதாவது தனது தந்தையான தசரதரின் ஆணையை ஏற்றுக்கொண்டு தன் மனைவியுடன் கானகம் சென்று அங்கே தனது மனைவியை இராவணன் கடத்திச் செல்ல அதனால் பெரும் துயரை அடைந்த ராமன் யார் வேத முதல்வனான ப்ரம்மதேவரையே படைத்த திருமால் தானே? அது உனக்குத் தெரியதோ? இது (ராமாயணம்) நீண்டகாலமாக மக்களால் அறியப்பட்ட விஷயம் தானே? அதாவது என்ன தான் முழுமுதல் தெய்வமான திருமலாக இருந்தாலும் மனிதனாகப் பிறந்தால் துன்பம் என்பது இயல்புதானே என்று கோவலனைத் தேற்றுகிறார்! இதன் மூலம் ஸ்ரீராமனைத்  திருமாலின் ஆவதரமாகவே பழந்தமிழர் போற்றினர் என்பதைத்  தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரமே உறுதி செய்துவிடுகிறது. அதோடு நெடுமொழி என்று சொல்லி ராமாயணத்தின் பழமையையும் கூறுகிறது.

சிலப்பதிகாரம்,அகநானூறு, புறநாநூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் தோன்றும் முன்னரே ராமாயணம் தமிழ் மக்களிடையே பிரபலமாக இருந்துள்ளது என்பதை அறிவுடையோர் ஏற்பர்.

அதேபோல ராமாயணத்தின் படி ஸ்ரீராமபிரான் கட்டியதே ராமர் பாலம் ஆகும்! இதை தமிழின் இரண்டாவது காவியமான மணிமேகலை உரைக்கிறது!



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

மணிமேகலை
நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்   (உலக அறவி புக்க காதை, 10-20)

பூமியில் பிறந்த நெடியோனின் (திருமாலின்) அவதாரம் (இராமன்), அவர் இலங்கை சென்று ராவணனை வெல்ல பாலம் காட்டினார். அப்போது
கடலை வழிமறிக்க வானரங்கள் கொண்டுவந்து போட்ட மலைகள் எல்லாம் கடலில் அமிழ்ந்து மறைந்ததுபோல என்று உவமை கூறப்பட்டுள்ளது  .


ஆகவே ராமசேது என்பது உண்மையில் ராமரால் கட்டப்பட்டதே என்பதைப் பண்டைய தமிழரே பதிவு செய்து வைத்துள்ளனர்!


இதே மணிமேகலையில் வேறொரு இடத்தில்

மீட்சி என்பது இராமன் வென்றான் என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்

(
சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)
என்று வருகிறது.
அதாவது இராமன் வென்றான் எனில் இராவணன் தோற்றான் என்றுதானே பொருள் என்று வினவுவது போல் உள்ளது.

சீவக சிந்தாமணி

அதே போல் சீவக சிந்தாமணியில் சீவகனது வில்திறனை ராமனது திறனோடு ஒப்பிடுகிறான் விஜயன் எனும் அரசன்.

பாடல்

மராமரம் ஏழும் எய்த
           
வாங்குவில் தடக்கை வல்வில் இராமனை வல்லன் என்பது       
           
இசையலால் கண்டதில்லை

 
சீவகனின் வில் திறமையைக் கண்ட விசயன் அவனைப் புகழ்கிறான். கிஷ்கிந்தையில் மராமரங்கள் எழினையும் ஒரே அம்பால் வீழ்த்திய இராமனின் திறமையை கேள்விப்பட்டிருக்கிறோம் , இன்று உன் மூலம் அதனைக் கண்டோம் என்கிறான்.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

பழமொழிநானூறு
 257
வது பாடல்

பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
போந்(து) இறை யாயதூஉம் பெற்றான் பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்.

பொருள் -
இலங்கைக் கிழவற்கு இளையான் - இலங்கையரசனுக்கு இளவலாகிய வீடணன், பொலர் தார் இராமன் துணையாக - பொன்மயமான மாலையினையுடைய இராமனுக்குத் துணையாக, தான் போந்து - தான் சென்று (அவனது சார்பைப் பெற்று), இலங்கைக்கே போந்து இறையாயதும் பெற்றான் - இலங்கைக்கே தலைவனாய அரசபதவியை அடைந்தான், (ஆதலால்) பெரியாரைச் சார்ந்து - பெரியோர்களைச் சார்பாகப் பெற்று, கெழீஇ இலார் இல் - (அங்ஙனம் சார்பாகப் பெற்ற தன்மையால்)பயன் அடையாதார் இல்லை.

ஆகவே ராமாயணம் என்பது காலம்காலமாக தமிழரால் அறியப்பட்ட காவியமே! என்று ஆணித்தரமாக நிறுவலாம்!

இன்று முதல் கந்தர் சஷ்டி விரதம் ஆரம்பம்! சரியாக நரகாசுரனை மாயோன் கண்ணன் வென்ற நாளான தீபாவளி முடிந்து ஆறாவது நாளில் சேயோன் முருகன் சூரனை வதம் செய்கிறார்! ராமாயணமும் கந்தபுராணமும் பல ஒற்றுமைகள் உடையவை!

 

 

 

ஆனால் பாருங்கள் ராவணனை முப்பாட்ன் என்று கூறிய எவனாவது சூரனை முப்பாட்டன் என்றானா? இமயத்தில் பிறந்த முருகன் தமிழ்க் கடவுளாகும் போது அயோத்தியில் பிறந்த ராமர் ஆரியரானது எப்படி? முருகன் சிவந்தவர்... ராமர் தான் தமிழரது கருமை நிறத்தவர்! சங்க இலக்கியங்கள் சேயோனை விட மாயோனை அதிகமாகக் கொண்டாடுகின்றன!

 

நாம் என்ன தான் சொன்னாலும் சரி இங்கே ராமரையும், கிருஷ்ணரையுமே எதிர்ப்பர் ... காரணம் அவர்களே இந்தியாவை இணைக்கிறார்கள்! முருக வழிபாடு வடக்கிலும் உண்டு இருந்தாலும் கூட வெகுஜனத் தன்மை பெற்றோர் ராமரும் கிருஷ்ணருமே! தமிழ்நாட்டில் கூட கந்தபுராணம் தெரிந்தவர்களை விட ராமாயணம் தெரிந்தவர்களே அதிகம்! இப்படி எல்லாம் எதிர்ப்பர் என்று அறிந்தோ என்னவோ அருணகிரிநாதர் அன்றே முருகனுக்குரிய பாடலில் ராமரையும் பாடி வடக்கு தெற்கு சைவம் வைணவம் எல்லாவற்றையும் இணைத்துவிட்டார்!



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

" ஜெய் ஸ்ரீராம்."
தமிழகத்தில் ராமர் கோவில்கள் என்ற தலைப்பில் குடந்தை சேதுராமன் அவர்களின் கட்டுரை ஒன்று. வாசித்ததில் பெரும் பிரம்மிப்பு.
தமிழகத்தில் உள்ள ஸ்ரீராமர் கோவில்களின் பட்டியலை கல்வெட்டில் உள்ளதுபடி பதிவு செய்துள்ளார்.
பொதுவாகவே..
திருமால் வழிபாடு என்பது தமிழகத்தின் வாழ்வியல் நடைமுறையில் இணைக்கப்பட்ட ஒன்று.
ஏரிகாத்த ராமர், சொன்னவண்ணம் செய்த பெருமாள்.. இதுமாதிரியான பெயர் தமிழகத்தில் மட்டுமே உண்டு. பெருமாளுக்கும் தமிழர்களுக்கும் அப்படியொரு அன்னியோன்னியத் தொடர்பு.
ஆழ்வார் பாசுரங்கள் அனைத்தும் தீந்தமிழ் சொற்களால் பெருமாளைச் சிறப்பிக்கும்.
திருமழிசை ஆழ்வார் சொல்கிற அனைத்தையும் பெருமாள் கேட்கிறார். அதனால்தான் அவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள். ஆழ்வார் பெருமாளைப் பார்த்து எழுந்திரு என்கிறார். பெருமாள் தனது பாம்பு பாயைச் சுருட்டி எழுகிறார். படு என்று ஆழ்வார் கட்டளையிட்டால் பெருமாள் படுக்கிறார்.
கட்டளைகள் அனைத்தும் தமிழ் பாசுரம்.
தமிழுக்கும்..
பெருமாளுக்கும் ..
அப்படியொறு இணக்கம்.
இனி..
தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளில் ஸ்ரீராமர் கோவில்கள்..
திரு அயோத்தி பெருமாள். இராகவச் சக்கரவர்த்தி. குருசேத்திரத் தேவர்.
இராகவபெருமாள்..
இப்பெயர்கள் எல்லாம் தமிழகத்தில் மட்டுமே உண்டு.
தசாவதாரங்களின் பெயர்களில் குடியிருப்புகள். ஆழ்வார் பாசுரங்களை விண்ணப்பஞ் செய்தல்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளின் பெயரில் திருநந்தவனம்.
ஸ்ரீராமருக்கு பிறந்தநாள்.
ஸ்ரீராமருக்கு சீதாதேவியை திருமணம் செய்து வைத்து சீதனமாக நிலம் கொடுத்தல்..
கோவில்களில் இராமாயணம் படிக்க நிவந்தம்.
பட்டியலின் சுருக்கம்..
கல்வெட்டுகள் படி தமிழக ஸ்ரீராமர் கோவில்கள்.
திருநெல்வேலி மாவட்டம். நாங்குநேரி மனோன்மனீஸ்வரர் ஆலயம். பாண்டியன் மாறஞ்சடையனின் இரண்டாம் ஆட்சியாண்டு. கி.பி.863.
S.i.i.vol 14 No 17
நிலதானம் பற்றியக் கல்வெட்டில் ...
" ஸ்ரீராகவேந்திர பெருமாளுக்கு வைத்த பத்து மா நிலம் "
காஞ்சிபுரம்.புள்ளலூர்.கைலாசநாதர் கோவிலில் உள்ள காமாட்சியம்மன் கோவில் கல்வெட்டு.
முதலாம் பராந்தகனின் 34 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி. 941.
Ins 46/ 1923.
" திரு அயோத்தி நின்று அருளுகின்ற ஸ்ரீராகவபெருமாளுக்கு"
நந்தா விளக்கெரிக்க அரசியார் 10 கழஞ்சு பொன் தானமளித்துள்ளார்.
திருநெல்வேலி.
பாளையங்கோட்டை . வட்டெழுத்துக்
கல்வெட்டு. முதலாம் ராஜராஜனின் 10 ஆம் ஆட்சியாண்டு. கி.பி.995.
கோபால சாமி கோவிலில் மகாபாரதம் மற்றும் இராமாயணம் படிப்போர்க்கு நிலதானம் வழங்கப்பட்டது.
" " ஸ்ரீ கோவிலில் ஸ்ரீபாரதம் வாசிப்பார்க்கு பாரத விருத்தியாகவும் ஸ்ரீராமாயணம் வாசிப்போருக்கு விருத்தியாகவும் "
உத்ரமேரூர் .. பார்த்திபேந்திரனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு.
S.i.i.vol 3 .no 160.
" குருசேத்திர தேவர் என்றொரு கோவிலை குறிப்பிடுகிறது."
தஞ்சை. ஆலங்குடி.
முதலாம் இராஜராஜனின் 9 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.994.
Ins 498 / 1920.
" ஸ்ரீராகவப்பெருமாள் கோவிலுக்கு நிவந்தம் "
புள்ளலூர். கைலாசநாதர் கோவில்.
இரண்டாம் இராஜேந்திரனின்
9 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி. 1061.
Ins 48/ 1923
" திரு அயோத்தி பெருமாள் கோலில் பாரதம், இராமாயணம் படிக்க இறையிலியாக நிலம் வழங்குதல்."
தஞ்சை. திருமெய்ஞானம். ஞானபரமேஸ்வரர் கோவில். இராஜராஜனின் 24 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.1009.
Ins 322 / 1910.
" ஸ்ரீ நாராயண விண்ணகரத்து லஷ்மி ராகவப்பெருமாள் "
உத்ரமேரூர்.
பராந்தகனின் 15 ஆம் ஆண்டு.
S.i.i. vol 6 no 297.
" " கோவிந்தச்சேரியைச் சேர்ந்த ஒருவர் திரு அயோத்திப் பெருமாளுக்கு நிலதானம் வழங்கியுள்ளார். "
திருநெல்வேலி.
சேரமாதேவி.
முதலாம் இராஜேந்திரன்.
8 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.1020.
S.i.i.vol 5. No 747.
" இவ்வூரில் இருக்கும் இராகவச்சக்கரவர்த்தி கோவிலுக்கு நிவந்தம்."
மதுராந்தகம். முதலாம் குலோத்துங்கனின் மூத்த மகன் பராந்தகத் தேவன் 7 ஆம் ஆட்சியாண்டு.
S.i.i. vol 5 no 991.
" திரு அயோத்திப் பெருமாள் கோவிலுக்கு திருவிடையாட்டமாக நிலம் அளித்தல்."
மதுராந்தகம்.
விக்ரமச்சோழன் 9 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.1127.
S.i.i. vol 7 no 479
" பெண் ஒருவர் திரு அயோத்தி பெருமாள் கோவில் திருவிழாவுக்கு நிலம் வழங்குதல் "
தஞ்சை.அம்மங்குடி.
இராஜராஜனின் 9 ஆம் ஆட்சியாண்டு. கி.பி.994.
Ins 238/ 1927.
" ஸ்ரீராமதேவ பெருமாள் கோவிலுக்கு நிவந்தம் "
சிறுதாவூர்.
முதலாம் இராஜராஜன்.
9 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.995.
" பரசுராம விண்ணகர் ஆழ்வார் கோவிலில் திருப்பள்ளி எழுச்சி நிவந்தம் "
உத்ரமேரூர் வைகுந்த பெருமாள் மற்றும் சுந்தரவரதப்பெருமாள் கோவில் கல்வெட்டு.
பல்லவ, கன்னரத்தேவ, சோழர் கால கல்வெட்டுகள்.
இவ்வூரில் உள்ள குடியிருப்புகள் திருமாலின் அவதாரப் பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டது.
S.i.i.vol 6. 283 -325,
332 - 377.
" வாமனச்சேரி, கேசவச்சேரி, நாரயணச்சேரி, கோவிந்தசேரி , திரிவிக்ரமச்சேரி, பத்மனாபச்சேரி, மாதவச்சேரி, விஷ்ணுசேரி "
நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி .. தமிழ் வேதம் என்றழைக்கப்படுகிறது.
கேசவன் தமர் என்ற
7 வது பதிகத்தில் திருமாலின் 12 பெயர்கள் அந்தாதி பாடலாக இருக்கிறது.
இந்த 12 பெயர்களும் கல்வெட்டிலும் இடம் பெற்றுள்ளது. பாண்டிச்சேரி. திரிபுவணம். கல்வெட்டுகளில் நிவந்த தானம் பெறுபவர்களாக இந்த 12 பெயருடையவர்கள் இருந்துள்ளார்.
" கேசவா, நாரயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்ரமா, வாமனா, ரிஷிகேசவா, ஸ்ரீதரா, பத்மநாபா, தாமோதரா "
நம்மாழ்வாரின் திருவாய்மொழி சோழர் காலத்தில் பெரும்பாலான பெருமாள் கோவில்களில் பாடப்பட்டது. கங்கை கொண்ட சோழனாம் இராஜேந்திரனின் கல்வெட்டுகளில் சிறப்பாகக் கூறப்படுகிறது.
முதலாம் இராஜேந்திரனின் எண்ணாயிரம் கல்வெட்டு.
Ep.in. vol 39 no 34.
" திருச்சென்னடைக்கும் திருவாய்மொழி விண்ணப்பஞ் செய்ய வேண்டும் நிபந்தங்களுக்கும் "
உத்ரமேரூர்.
இராஜேந்திரனின்
19 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி. 1031.
Ins 176/ 1923.
" ஸ்ரீராகவத்தேவர்க்கு திருச்சென்னடைக்கும் திருவாய்மொழி பாடுவதற்கும் "
சிறுதாவூர்.
இரண்டாம் இராஜேந்திரன் கல்வெட்டு.
" பரசுராம விண்ணகர் ஆழ்வார் கோவிலில் வெண்ணை கூத்தாழ்வார் ( பாலகிருஷ்ணன்) படிமம் பிரதிட்டை செய்யப்பட்டது.
திருக்கோவிலூர்.
சோழக்கேரளின் மூன்றாம் ஆட்சியாண்டு.
S.i.i.vol 7.no 139
" திருமங்கை ஆழ்வாரின் திருநடுந்தாண்டகம் விண்ணப்பம் செய்தல் "
ஸ்ரீரங்கம்.
முதலாம் குலோத்துங்கன்.
18 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.1088.
S.i.i. vol 3 no 70
" திருவரங்கப் பெருமாள் முன்பு குலசேகர ஆழ்வாரின் தேட்டந்திறல் திருப்பதிகம் விண்ணப்பம் செய்தல் "
திருக்கோவிலூர்.
முதலாம் குலோத்துங்கனின்
25 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி. 1095.
Ins 354/ 1921.
" ஆண்டாள் திருப்பாவை பதிகங்கள் வீண்ணப்பம் செய்தல் "
ஸ்ரீரங்கம்.
இரண்டாம் குலோத்துங்கன்.
9 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி. 1142.
S.i.i.vol 24 No 138.
" சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் பெயரில் திருநந்தவனம் அமைக்கப்பட்டு திருவரங்கப் பெருமாளுக்கு திருப்பள்ளித் தாமம் எடுத்து விண்ணப்பம் செய்யவேண்டும் "
இரண்டாம் குலோத்துங்கனின் 2 ஆம் ஆட்சியாண்டு.
S.i.i.vol.7 no 477
" திரு அயோத்தி கருணாகரப் பெருமாளுக்கு நந்தா விளக்கெரிக்க நிவந்தம்."
சேரமாதேவி.
மாறவர்மன் விக்ரமபாண்டியன்.
8 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.1189.
" ஸ்ரீவல்லப விண்ணகர் ஆழ்வார் கோவிலில் ஸ்ரீராமன், சீதா, இலக்குவன் திருமேனிகளை எடுத்து நிவந்தம் "
எண்ணாயிரம்.
இராஜேந்திரன்.
30 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.1042.
Ins 341/ 1917.
ஸ்ரீராமரின் பிறந்த நட்சத்திரமான புணர்பூசம் நட்சத்திர திருநாள் கொண்டாடப்படுகிறது.
" ஸ்ரீகோவிலில் எழுந்தருளி நின்று திரு ஆராதணை கொண்டு அருளுகின்ற ஸ்ரீராகவச்
சக்கரவர்த்திகள் மாசி திருபுணர்பூசமும் "
வடமதுரை.
திருநல்லம்.
இராஜேந்தின்.
25 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி. 1037.
Ins 262. / 1953.
ஸ்ரீராமர், சீதா தேவிக்கு திருக்கல்யாணம் நடத்தி, சீதாதேவிக்கு திருமணச்சீராக இராஜேந்திரனே நிலதானம் செய்கிறார்.
ஒரு தந்தை ஸ்தானத்தில் இந்த சீரை வழங்குகிறார்.
" உடையார் இராஜேந்திர சோழதேவர்க்கு யாண்டு 25 ஆவது ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பையூரிளங் கோட்டத்து ஜெயங்கொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்து திரு அயோத்திச் சக்கரவர்த்திக்கு நம்பிராட்டியாரை எழுந்தருள்வித்து திருக்கல்யாணம் செய்து ஸ்ரீதனம் வைத்த நிலம். "
இன்னும்.. இன்னும்...
ஸ்ரீராமர் கோவில் பட்டியல் தொடர்கிறது.
பதிவின் நீளம் கருதி முடித்துக் கொள்வோம்.
அன்புடன்.
மா.மாரிராஜன்.
Refrence ..
தமிழகத்தில் ராமர் கோவில்கள்.
குடந்தை சேதுராமன்.


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 

தமிழர் திருமகன் இராமன்

இராமசேது பற்றிய விவாதத்தின் மத்தியில், இராமகாதையையும், இராமனையும் பற்றிய தமிழக முதல்வரது இழிமொழிகளுக்கு நாடு தழுவிய எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. தமிழகத்திலும் மிக உறுதியான எதிர்ப்பு பதிவு செய்யப் பட்டிருக்கின்றது. பல ஆங்கில, தமிழ் இதழ்களும், ஊடகங்களும் முதல்வரின் பேச்சை வன்மையாகக் கண்டித்திருக்கின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அஇஅதிமுக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது. ஊட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தலைமையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில்புண்படுத்தாதே புண்படுத்தாதே, இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தாதே”, “மமதை பிடித்த கருணாநிதியே, மன்னிப்புக் கேள், மன்னிப்புக் கேள்என்ற கோஷங்கள் எழுந்து விண்ணை முட்டின. பாஜக, மதிமுக, தேமுதிக, சரத்குமாருடைய புதிய கட்சி இவையும் முதல்வரின் அருவருக்கத் தக்க பேச்சைக் கண்டிருத்திருக்கின்றன. ஆளும் கூட்டணியில் உள்ள, இந்து உணர்வுகளை ஓரளவு மதிப்பவை என்று எண்ணப் பட்ட பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள், கூட்டணி ()தர்மம் கருதியோ என்னவோ, முதல்வரின் இந்த அப்பட்டமான இந்து விரோதப் போக்கைக் கண்டிக்காமல் இருந்து பெரும் தவறிழைக்கின்றன.

இந்த சூழலில், அறிவுலகத்தால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு விட்ட, வெறுப்பியலில் திளைத்த பழைய ஆரிய-திராவிட இனவாதத்தை உயிர்ப்பித்து, இந்தப் பிரசினையை விமரிசிக்கும் விஷமத் தனமான போக்கும் ஊடாகத் தென்படுகிறது. “ராமர் வழிபாடு என்பது தமிழ் நாட்டில் இல்லாத ஒன்று. தெற்கே ராமரை ஆரிய மன்னர் என்று தான் தமிழர்கள் பார்த்து வந்திருக்கிறார்கள்என்ற அப்பட்டமான பொய்யை என்.டி.டி.வி, சி.என்.என் ஆங்கிலத் தொலைக்காட்சிகளின் சென்னை நிருபர்கள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு என்.டி.டி.வி கலந்துரையாடலில் இந்த அபாண்டத்தைக் கேட்கச் சகியாத பேராசிரியர் நந்திதா கிருஷ்ணா நடுவில் பாய்ந்து, “என்ன கதைக்கிறார் உங்க நிருபர், தமிழ் நாட்டில் ஊருக்கு ஊர் ராமர், அனுமார் கோயில்கள் இருக்கிறதே கண்ணுக்குத் தெரியவில்லையா?” என்று வெடிக்கும் நிலைமை ஏற்பட்டது

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (வன்னிய சத்திரியர் என்று தமிழக மக்களில் பெரும்பாலர் கருதும்) இராமர்பிராமணர் அல்லாதவர்களான, தமிழர்களின் பார்வையில்மிக எதிர்மறையாகவே எப்போதும் கருதப் படுவதாக, பழைய திராவிட இயக்க அபத்தங்களை ஆங்கில இதழ்களில் மறுசுழற்சி செய்யத் தொடங்கியிருக்கிறார் [1]. இவற்றுக்குச் சிகரம் வைத்தாற்போல இந்த வார ஜூனியர் விகடனில் திருமாவளவன் 'சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இராவணனைபோற்றுவதாகத் தெரிவிக்கிறார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த தமிழின் ஒப்புயர்வற்ற இலக்கியமான கம்பராமாயணம் ஒன்று போதாதா, இராமன் தமிழர் போற்றும் தெய்வம் என்று நிறுவுவதற்கு? தமிழர் சமயத்தின் இரு கண்கள் சைவமும், வைணவமும். அதில் ஒன்றான வைணவத்தின் பன்னிரு ஆழ்வார்களும் தெய்வமாக இராமனைப் போற்றுகிறார்களே, அது போதாதா? ஆனால் விதி வலியது. ஈவேரா காலத்திலிருந்து, அப்பேர்ப்பட்ட கம்பனுக்கே ஆரியஅடிவருடி, மனுவாதி போன்ற முத்திரைகள் இந்த அறிவீனர்களால் குத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆழ்வார்கள் எம்மாத்திரம்?



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 



ஆதாரமில்லாத இத்தகைய உளறல்கள் ஊடகங்களின் மூலம் தொடர்ந்து பரப்பப் படுவதால், உண்மையை உரக்க உரைப்பது மிக அவசியமாகிறது, ‘’புலிநகக் கொன்றைஆசிரியரும், மார்க்சிய சார்புடையவராகக் கருதப் படும் அறிஞருமான பி..கிருஷ்ணன்பயனியர்இதழில் எழுதியுள்ள “Karunanidhi wrong, Ram an ancient Tamil icon” என்ற அருமையான ஆங்கிலக் கட்டுரையில் [2] சங்க இலக்கியம் தொட்டு பண்டைத் தமிழரின் போற்றுதலுக்குரிய தெய்வமாக இராமன் இருந்து வந்ததற்கான ஆதாரங்களை அளிக்கிறார். அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ளசிலப்பதிகாரம் தெரியாத கருணாநிதிஎன்ற பதிவில் [3] “கடுந்தெறல் இராமன்”, “வெல்போர் இராமன்என்று இராமன் சங்கப் பாடல்களில் போற்றப் படுவதையும், சமண முனிவரான இளங்கோவடிகள் தனது காப்பியத்தில் திருமாலின் அவதாரமாக இராமனைப் பாடுவதையும் மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்

சங்ககால பாமர மக்களின் வழக்கிலே கூட இராமாயணம் என்ற இதிகாசம் போற்றுதலுக்குரிய காவியமாக மட்டுமன்றி, உவமைகளைச் சுட்டும்போது கூட பண்டு நிகழ்ந்த சான்றுகளாய்க் கையாளும் வண்ணம் அமைந்திருப்பதை இந்த இரு கட்டுரைகளும் குறிப்பிடுகின்றன. வேறு சிலவற்றைப் பார்ப்போம்

மணிமேகலையில்இராமாயணம்:


கம்பராமாயணத்திற்கு 6-7 நூற்றாண்டுகள் முற்பட்ட பௌத்த காவியமான மணிமேகலையில் ராமாயணச் செய்திகள் சான்றுகளாகவே அளிக்கப் பட்டிருக்கின்றன.

'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்  (உலக அறவி புக்க காதை, 10-20) 

காயசண்டிகை கூறினாள் - “நெடியோனாகிய திருமால் இராமனாக மண்ணில் அவதாரம் புரிந்து, அவன் அடங்காத பெரிய கடலை அடைத்த போது, குரங்குகள் பெயர்த்துக் கொண்டு வந்து எறிந்த பெரிய பெரிய மலைகள் எல்லாம் கடலின் வயிற்றில் சென்று மறைந்தது போல, இந்த அடங்காப் பசியை நிரப்ப இடும் மலை மலையான உணவு எல்லாம் என் வயிற்றின் ஆழத்தில் சென்று மறைந்து விடுகிறது”. 

இந்த வரிகளில் பல செய்திகள் அடங்கியுள்ளன - ராமன் திருமாலின் அவதாரம். அவனது ஆணையில் வானரர்கள் கடலை அடைத்து அணை கட்டியது. மேலும், இந்த வரலாறு உவமையாகக் கூறப் படும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருந்தது

இதே காப்பியத்தில் பிறிதோரிடத்தில், வாத விவாதத்தில், “ராமன் வென்றால் என்றால் மாண்பில்லாத ராவணன் தோற்றான் என்று தானே அர்த்தம்?” என்று அடிப்படையான தர்க்கமாகவே இராமகாதைச் சான்று வைக்கப்படுகிறது, அதுவும் ஒரு புத்தமதம் சார்ந்த புலவரால் என்றால் அது பண்டைத் தமிழகத்தில் எவ்வளவு அறியப் பட்ட விஷயமாக இருக்க வேண்டும்

"மீட்சி என்பது "இராமன் வென்றான்" என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல்(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)

இந்த வரிகளில்மாட்சி இல் இராவணன்என்று இராவணன் உரைக்கப் படுவதையும் காண்க.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

சைவத் திருமுறைகளில் இராமாயணம்:

சைவம் தழைக்கப் பாடிய சமயக் குரவர்களது பாடல்களிலும் இராமாயணம் இருக்கிறது.


ALY8t1v91R7BDPdTR4Xhrjsugy2BGWO3FdKxy-lgKvuG0awOufjRRg_dzcXwTl1Io4zc9Gs3Jc7MYCsyU5hEYL0V5HMS2SzUxTLM3JV-=s0-d


திருநாவுக்கரசர் இராமன் கட்டிய சேதுபந்தனத்தைக் குறிப்பிடும் பாடல் -

"செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ”

(திருநாவுக்கரசர் தேவாரம், திருவலம்புறப்பதிகம்)

திருஇராமேச்சுரம் என்று வழங்கும் ராமேஸ்வரம் திருத்தலத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் பாடிய பதிகங்களில் சில பாடல்கள் -

"பலவுநாள் தீமை செய்து பார்தன் மேல் குழுமி வந்து
கொலைவிலார் கொடியராய அரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்

தலையினால் வணங்குவார்கள் தாழ்வராம் தவம் அதாமே

[சிலையினான் - வில்லை உடைய இராமன்]

வன்கண்ணர் வாளரக்கர் வாழ்வினை ஒன்றறியார்
புன்கண்ணர் ஆகிநின்று போர்கள் செய்தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே"

(திருநாவுக்கரசர் தேவாரம், திருவிராமேச்சுரப் பதிகம்)

தேவியை வவ்விய தென்னிலங்கை யரையன் திறல் வாட்டி
ஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச் சுரத்தாரை

[தேவியை வவ்விய - சீதையைக் கவர்ந்து சென்ற]

(திருஞானசம்பந்தர் தேவாரம், 3ம் திருமுறை, 101-10)

இந்த அனைத்துப் பாடல்களும், தருமத்தின் நாயகனான இராமனைத் திருமாலின் அவதாரமாகவே போற்றுகின்றன. சிவபக்தன் ஆயினும் அதர்ம வழியில் சென்ற இராவணனையும், அவன் கூட்டத்தாரையும் கொடிய அரக்கர் என்றே பல்வேறு அடைமொழிகளுடன் குறிப்பிடுகின்றன.

இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில், சிவபிரான் தம் கால் விரலால் அதை அழுத்தியதைக் கூறுகையில்,

“அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே”


(திருஞானசம்பந்தர் தேவாரம், திருமறைக்காட்டுப் பதிகம்)

என்றே சம்பந்தர் பாடுவார்.

மேலும், இடர்கள் களையப் பாடிய கோளறு பதிகத்தில் ‘ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா’ என்கையில் இராவணனை தீய சக்தியின் குறியீடாகவும், இடராகவும் உருவகித்து, அத்தகைய தீமைகளும் அணுகாதிருக்கும் என்று சம்பந்தர் உரைக்கிறார்.

சைவத் திருமுறைகள் இப்படி இருக்கையில், தங்களை சைவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் சிலர், நாத்திகவாத, தமிழ்ப் பண்பாட்டையே இழித்துரைக்கின்ற ஈவேராத் தனமான திராவிட சித்தரிப்புக்களின் வழியே இராமாயணத்தை நோக்க முற்படுவதை காலத்தின் கோலம் என்றும் நகைமுரண் என்றும் தான் கூறவேண்டும்.

திருப்புகழில் ராமாயணம்:

முருக பக்தி மரபில் முதன்மை பெறும் திருப்புகழ் உள்ளிட்ட அருணகிரிநாதரின் எல்லா நூல்களிலும் இராமபிரானைப் பற்றி நூற்றுக் கணக்கான குறிப்புகள் உள்ளன. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தனது பல இராமாயணத் தொடர் சொற்பொழிவுகளில் இவற்றை எடுத்துக் காட்டியிருக்கின்றார்.

கம்பனும், வால்மீகியும், ஏனையோரும் குறிப்பிடாதவற்றையும் அருணகிரியார் தமது பாடல்களில் சொல்லியுள்ளார். உதாரணமாக, கோசலை ராமனைக் கொஞ்சும் அழகு -

“எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பா¢வி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்”

(“தொந்தி சரிய” என்று தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)

இதற்கு வாரியார் சுவாமிகள் விளக்கம் கூறுகையில் “குடும்பத்தை வாழ்விப்பவன் மகன். தன் சுற்றம், குலம், நாடு எல்லாவற்றையும் வாழ்விப்பன் மைந்தன், அதனால் இந்த இரண்டு பெயர்களையுமே கூறி கோசலை இராமரை அழைக்கிறாள்” என்று அழகாகக் குறிப்பிடுவார். இன்னொரு பாடலில், சானகியை அபகரித்துச் சென்ற இராவணனை “திருட்டு ராக்கதன்” என்றே குறிப்பிடுகிறார்.

“சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு ...... மருமகப் பரிவோனே”

(‘பழிப்பர் வாழ்த்துவர்’ எனத் தொடங்கும் மதுரைத் திருப்புகழ்)

இராமபக்திக்கு உரமூட்டிய தமிழகம்:

“வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்று புகழ்பெற்ற நம்மாழ்வார் திருவாய்மொழியில் “கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ? என்று இராமபிரானுக்கு வைணவ மரபில் மிக உயர்ந்த இடத்தை அளித்திருக்கின்றார்.


ALY8t1uLaqIdak-JiOgk8chewfq-wfmIzJtlGhCFBbT1QuX8g-rFTLpE1Se28BRhIx2qi5eJOlMyUJXTz8VigDzT7lixr_xofgq6uXgGBY8xR3_qav8hTtguM66sPeDD=s0-d


கண்ணனைக் குழந்தையாக வரித்து வழிபடும் மரபு பிரசித்தமானது. இராமனைக் குழந்தையாகப் பாவித்துத் தாலாட்டுப் பாடிய முதல் பக்தர் குலசேகராழ்வார் தான்.

“மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!”

என்று தொடங்கி ராமாயணம் முழுவதையும் சொல்லித் தாலாட்டுகிறார் ஆழ்வார். இதன் நீட்சியாகவே நந்தலாலா போன்று “ராம லாலா” என்று குழந்தை ராமனின் உருவமும், வழிபாடும் உருவாயிற்று. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இஷ்டதெய்வமாகக் குழந்தை ராமனை ஆராதித்திருக்கிறார். அயோத்தி ராமஜன்மஸ்தானம் கோயிலில் இருப்பதும் இந்தக் குழந்தைத் திருவுருவம் தான்.

தென் தமிழ் நாட்டிலிருந்து காசிக்குச் சென்று அங்கே சைவ மடம் அமைத்த குமரகுருபரர் கம்பனின் ராமாயணத்தை அங்கே பிரசாரம் செய்ததாகவும், துளசிதாசர் அதைக் கேள்வியுற்றதனாலேயே தமது ராமசரித்மானஸ் என்ற புகழ்பெற்ற ஹிந்தி ராமாயண நூலில் கம்பனின் ராமகாதைப் படி சில இடங்களை அமைத்திருப்பதாகவும் ஒரு வழக்கு உள்ளதாக காசி மடத்துடன் தொடர்புடைய நண்பர் ஒருவர் தெரிவிக்கிறார்.

இன்று பாரதம் முழுவதும் வழங்கும் எல்லா ராமாயணக் கதையாடல்களிலும் சிறப்பிடம் பெறும் ‘அணில் இராமருக்கு பாலம் கட்ட உதவிய” பிரசங்கம், தமிழகத்தில் உயிர்த்ததே ஆகும் என்றும் இது பற்றிய முதல் இலக்கியக் குறிப்பு கீழ்க்கண்ட திவ்வியப் பிரபந்த பாசுரம் தான் என்றும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ஒரு ஆங்கிலப் பதிவு [4] குறிப்பிடுகிறது -

“குரங்குகள் மலையைத் தூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டோடி
தரங்க நீரடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்”


(தொண்டரடிப் பொடியாழ்வார், திருமாலை 27)

ராமனுடைய முதன்மையான பெயராகிய புருஷோத்தமன் (புருஷ+உத்தமன்) என்பதன் தமிழ் வடிவமே பெருமாள் (பெரும்+ஆள்). வைணவர்கள் அனைவரும் கடவுளைக் குறிக்கையில் சொல்லும் முதன்மையான திருநாமம் ‘பெருமாள்’ என்பது தான்!

தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக-ஆன்மிக விடுதலைக் குரலாக எழுந்த அவதார புருஷர் அய்யா வைகுண்டர் இராமாயண வாசிப்பை தம்முடைய பக்தர்களுக்கு கட்டாயமாக்கினார். அதற்காகவே அருள் நூலில் இராம சரிதை இடம் பெற செய்து இரண்டாம் நாள் திருஏடு வாசிப்பு இராவண வதமாக அமைத்தார். கலிகால சாதியம், வெள்ளையர் காலனியாதிக்கம் மற்றும் மதமாற்ற கொடுமைகளாக உருவாகி வந்திருக்கும் இராவணன் என்ற தீய சக்தி அய்யாவின் அன்பு வழி இயக்கத்தால் அழிக்கப்படும் என்பதும் அதற்காக அனுமனைப் போன்ற தொண்டர்கள் தோன்றி தெய்வீகப் பணி செய்வார்கள் என்பதும் இன்றுவரை அய்யா வழி பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இப்படி இராமகாதை மற்றும் இராமபக்தியின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் தமிழகம் பெரும் பங்கு ஆற்றி வந்திருக்கிறது.

கலைகள் போற்றும் காகுத்தன்:

10-ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்த இராமன், இலட்சுமணன், சீதை, அனுமன் ஆகிய மூர்த்திகளின் அழகு கொஞ்சும் செப்புத் திருமேனிகள் திருவாரூருக்கு அருகில் உள்ள பருத்தியூர் என்னும் ஊரில் கண்டெடுக்கப் பட்டவை.
ஒய்யாரமாக வில்லைப் பிடித்திருக்கும் ராமனின் கம்பீர வடிவமானது நடராஜ வடிவம் புகழ்பெறத் தொடங்கியிருந்த காலம் முதலே தமிழக சிற்பிகளின் உள்ளத்தை ஆட்கொண்டது இவை என்று உணர்த்துகின்றன.


Vaduvur_Raman_Sirippu.jpg


தஞ்சைத் தரணியில் பிறந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், இன்றளவும் பல கச்சேரி மேடைகளிலும் இடம் பெறும் இராமநாடகக் கீர்த்தனைகளை இயற்றிய அருணாசலக் கவிராயர் ஆகியோர் தென்னகத்தின் தலைசிறந்த ராமபக்தர்களில் அடங்குவர்.

தெருக்கூத்து, பாவைக்கூத்து, வில்லுப் பாட்டு முதலிய கலைவடிவங்கள் உருவாகும்போது அவற்றின் முதல் கூறுபொருளாக அமைந்தவை ராமாயண, மகாபாரத கதைகள் தான்.

எனவே, செவ்வியல் இலக்கியம் மட்டுமின்றி, சிற்பம், நடனம், இசை, நாடகம், நாட்டுப் புறக் கலைகள் ஆகிய பல்வேறு தமிழகக் கலைகளிலும் இராமனும், சீதையும் அவர்கள் சரிதமும் வெகுகாலம் தொட்டு நீக்கமற நிறைந்திருக்கின்றன.

தமிழர் திருமகன் இராமன்:

திராவிட இயக்கம் சார்ந்த சில தமிழ் ஆர்வலர்களாலும் மதிக்கப் படும் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் ராம காதையை ஆரிய-திராவிட நோக்கில் பார்த்தது என்பது ஒரு குறுகிய காலத்திற்கு தமிழ்ச் சமுதாயத்தில் உண்டான, துரதிர்ஷ்டவசமான போக்கு என்றும் இது அந்த மாபெரும் இதிகாசத்தின் அடிப்படைகள் பற்றிய தவறான புரிதல் ஆகும் என்றும் குறிப்பிடுகிறார். [5]

“..I find it very sad that anyone would want to burn Kamban's Ramayana. Kamban was, simply, the greatest poet India has produced and one greatest poets of the world. He is demonstrably greater than Kalidasa. Unfortunately, for a short period it became fashionable to read his epic in cultural terms -- Aryan vs. Dravidian. This, in my view, is a misreading of the fundamental premise of the epic: the opposition between two views of life, one epitomized by Rama, the other by Ravana. What makes Kamban so great is that he presents both views in extremely convincing and beautiful terms -- Ravana is the greatest of all kings and symbolizes this world, Rama symbolizes another dimension. And don't forget, Ravana is a Brahmin.”

திராவிட இயக்கத்தினர் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்ற தொனியில் வெறியூட்டி வந்தபோது, தென் தமிழகத்தில் அதை முன்னின்று எதிர்த்தவர் இஸ்லாமியரான சதாவதானி செய்குத் தம்பி பாவலர். கம்பர் அடிப்பொடி சா.கணேசன் இராமாயணம் என்ற மாபெரும் பொக்கிஷத்தைக் காக்க கம்பன் கழகம் தொடங்கியதன் பின் வந்த காலகட்டங்களில் இராமகாதையில் தோய்ந்து அதைப் பற்றியே தன் வாழ்நாளின் இறுதிவரை பேசியும் எழுதியும் வந்தவர் நீதிபதி மு.மு.இஸ்மாயில்.

எனவே சங்ககாலத் தமிழர் தொடங்கி, சைவ, வைணவ, சமண, பௌத்த தமிழர் வரை அனைவரும் இராமனைத் “தலைவன், திருமகன், திருமால், பெருமாள், தெய்வம்” என்றே கூறி வந்திருக்கின்றனர். இராவணனை “அரக்கன், திருட்டு ராக்கதன்” என்று அழைத்திருக்கின்றனரே அன்றி திராவிட மன்னன் என்றோ, வீரன் என்றோ, மதிப்பிற்குரியவன் என்றோ கூட எந்த மானமுள்ள தமிழனும் குறிப்பிடவில்லை.

'செக்குலர்' சங்கப்புலவனும், தமிழின் அனைத்து சமயப் பெருந்தகைகளும் ஏற்றுக் கொள்ளாத ஓர் அரக்கனை இங்கே தமிழ்ப் பாதுகாவலர்களாகக் கூறிக் கொள்ளும் பொய்ப்பிண்டங்கள் தங்கள் பிரதிநிதியாகச் சித்தரிப்பதும், இராமபிரானை இழித்துரைப்பதும் காலத்தின் கொடுமையன்றி வேறென்ன!

(பி.கு: இதில் கூறப்பட்டுள்ள சில தகவல்களை அளித்த திரு, ஹரி கிருஷ்ணன் மற்றும் பெயர் குறிப்பிடப் பட விரும்பாத இன்னொரு தமிழறிஞர் இவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றிகள்).

இந்தக் கட்டுரையை வெளியிட்ட திண்ணை இதழுக்கு நன்றிகள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard