தமிழகத்தில் பண்டைய இலக்கியங்கள் பற்றிய ஆய்வு உண்மைகளைக் கூறாமல் தொன்மக் கதைகள் போலே சங்க இலக்கியம் - திருக்குறள் இயற்றப்பட்ட காலங்கள் ஒரு சிறு குழுவினரால் பரப்பப் பட்டுது தொடர்கிறது.
உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடான - தஞ்சாவூர் பல்கலைக் கழக தமிழ் பேராசிரியர் ச்.அகத்தியலிங்கம் தொகுத்த 5 நூல் அடங்கிய சங்கத் தமிழ்: 1 - 5 என்ற தொகுப்பு தமிழின் மிகத் தொன்மையான இலக்கியஙக்ள் என்ற அடிப்படையில் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் மற்றும் மணீமேகலை என 21 நூல்களில் உள்ள அனைத்து சொற்களையும் தொகுத்து, மாற்றம் அடிப்படையில் பரிபாடல், கலித்தொகை மற்றும் திருமுருகாற்றுப்படி பிற்காலத்தவை. திருக்குறள் இவற்றிற்குப் பின்னர்; சிலப்பதிகாரம் மணிமேகலை குறளிற்குப் பின்னர் எனத் தெளிவாக புள்ளீயல் ஆதாரம் அடிப்படையில் உறுதி செய்துள்ளது.
திருக்குறள் என்பது தமிழ் நன்கு நெகிழ்ச்சி அடைந்து யாப்பு வளர்ச்சி அடைந்த இடைக் காலத்தில் குறள் வெண்பாவில் இயற்றப்பட்டது ஆகும். சங்க இலக்கியத்தில் பக்தி இலக்கிய காலம் சார்ந்த பரிபாடல், கலித்தொகை மற்றும் திருமுருகாற்றுப்படை தவிர மீதமுள்ள நூல்களில் வெண்பா இல்லை.
சங்க இலக்கியத்தின் காலத்தை தொல்லியல் அடிப்படையில் வரலாற்றுப் பூர்வமாக குறிப்பதை தஞ்சாவூர் தமிழ் பல்கலிக் கழக துணை வேந்தர் கூறுவது
//சங்க இலக்கியங்கள் ஒரு தொகுப்பு, அவை யாவும் ஒரே காலத்தில் படைக்கப்பட்டவையல்ல. குறிப்பாக எட்டுத்தொகை நூல்களில் இடம்பெறும் பரிபாடல், கலித்தொகை ஆகியனவும், பத்துப் பாட்டிலுள்ள திருமுருகாற்றுப்படையும் காலத்தால் பிற்பட்டவை என்பது அறிஞர்கள் கருத்து. பேரா கா.சிவத்தம்பி அவர்கள் தனது நூலான `சங்ககாலக் கவிதையும் கருத்தும்` என்ற நூலிலும்; 2009ம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையான `பரிபாடல் கிளப்பும் பிரச்சனைகள்` என்ற கட்டுரையிலும் இது பற்றித் தெளிவாகக் கூறியுள்ளார். கமில் ஸ்வெலபில் போன்ற வெளிநாட்டு ஆய்வாளர்களும், சுபவீ போன்ற தமிழ்நாட்டு அறிஞர்களும் கூட இதே கருத்தினைக் கொண்டுள்ளார்கள். இவர்கள் பரிபாடலினை (கலித்தொகை, திருமுருகாற்றுப்படை என்பவற்றையும்) பக்தி இயக்க காலத்தின் தொடக்க காலப் படைப்பாகவே கொள்வார்கள். எது எவ்வாறாயினும் பரிபாடல் சஙக இலக்கியமாகத் தொகுக்கப்பட்ட ஒரு நூல் என்பது தெளிவானது.//
சங்க இலக்கியத்தில் பத்துப் பாட்டு பாடல்கள் எல்லாம் சேரன் செங்குட்டுவன் - பதிற்றுப் பத்து 5ம் பத்திற்குப் பின் வாழ்ந்த தலைவர்களைப் பாடியது என சங்கத் தமிழ் - 1 கூறுகிறது. சிறுபாணாற்றுப் படை மூவேந்தர் மறைவிற்குப் பின் வாழ்ந்த சிற்றரசன் நல்லியக் கோடன் மேல் பாடப்பட்டது
செய்தி : யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்னும் துறவிக்குச் சேரமன்னர் செல்லிரும்பொறை மகனான பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ இளவரசர் ஆவதை முன்னிட்டு வழங்கப்பட்ட கொடை.
இதிலுள்ள அரசர்கள் பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்திற்குரிய தலைவர்களாக அடையாளப்படுத்தப் பெற்றுள்ளனர்.
புகழூர் கல்வெட்டு அடிப்படையில் சேரன் செங்குட்டுவன் காலம் பொஆ 188 - 243 எனக் குறிக்கப் பட்டு உள்ளது
சேரன் செங்குட்டுவன் காலம் 243 முடிகிறது என்றால் அதற்குப் பிறகு 10-11 தலைமுறைகள் ஆட்சி செய்தனர் எனில் மேலும் 250 ஆண்டுகள் வருகிறது அதாவது 5ம் நூற்றாண்டு இறுதிவரை செய்த சேர அரசர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. இதற்கு பிறகான சில அரசர்களைப் பற்றியும் மற்ற பாடல்களில் உள்ளது என்று அறிஞர்கள் கருத்து, எனில் சங்க காலம் 6ம் நூற்றாண்டு தாண்டி தொடர்ந்தது.
செங்குட்டுவர் பிறகு 11 தலைமுறை என "சங்க கால மன்னர்கள் காலநிலை வரலாறு" வி.பி.புருஷோத்தமன் & பத்மஜா ரமேஷ் நூல்- உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூல் கூறுவதும் - இந்த சேரர் காசுகளும் உறுதி செய்யும்
திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல் சங்க இலக்கியத்தில் உள்ள யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்று இலக்கிய செறிவு அதிகமாகி பல புதிய சொற்கள் பயன்படுத்திம் இலக்கண மாற்றங்கள் அடைந்த பின்பு இடைக்காலத்தில் குறள் வெண்பாவின் இயற்றப்பட்ட நூல் திருக்குறள் ஆகும்
திருக்குறளும் கடவுள் நம்பிக்கையும்
ஆதி பகவன் முதற்றே உலகு; இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்ட இறைவனிடம் இருந்து தொடங்குகிறது என்று வள்ளுவர் ஆரம்பிக்கிறார். அதற்கு உவமையாக அகரமுதல, அகரத்தை எழுதி தொடங்கி அறிவு உலகத்தில் நுழைகிறான் அதுபோல இந்த உலகம் கல்வி கற்பதின் உச்சம் என்பதை கற்றதனால் ஆயபயன் இறைவன் திருவடிகளை தொழுவதற்கு என்கிறார்.
கடவுள் வணக்கத்தின் ஆல் என்ன பயன் என்று இந்த அதிகாரம் முழுமையாக கூறுகையில் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் பிறவி பெருங்கடலை கடப்பது இறைவன் திருவடியை பற்றினால் என்று முடிக்கிறார் இந்த அதிகாரம் முழுக்க இறைவனை ஒருமையில் கூறுவதால் இது பிரம்மம் - இறைமை - பரம்பொருளைக் குறிக்கிறது என்பது மரபு தமிழர் மரபு ஆகும்
திருக்குறளும் தமிழர் மெய்யியல் மரபும்
திருவள்ளுவர் கல்வி அதிகாரத்தில் கற்க என்றவுடனேயே கசடற கற்க பின் அந்த கற்ற கல்வி மெய்மையில் நிற்க வேண்டும் என்று மிகத் தெளிவாக கூறுவார்.
திருவள்ளுவர் கல்வி-அறிவு முன்னேற்றத்தை முழுமையாக வலியுறுத்துவார் இந்த அறிவின் பயன்பாடு என்ன என்பதை
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு என்பார்
கல்வி கற்பதன் பயன் இறைவனின் திருவடியைப் பற்ற என்று கூறியது மட்டுமின்றி அந்த அதிகாரம் முழுவதுமாக இறைவன் திருவடி பற்றுதல் என்பதை வள்ளுவர் தெளிவாக எடுத்துக் காட்டி இருப்பார்.
இதற்கு அடுத்த அதிகாரத்தில் அவர் சிறப்புடன் பூஜை என்னும் பொழுது இறைவனை உருவ வழிபாடாக பூஜை செல்வதை போற்றி வலியுறுத்துகிறார்.
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். 720
வள்ளுவர் அவையறிதல் அதிகாரத்தில் கூறியுள்ள அங்கணத்துள் அமிர்தம் என்ற என்ற உவமையில் இறைவன் திருமேனி அபிஷேக நீரை முற்றத்தில் வீண் செய்வது என கோவில் அபிஷேக வழிபாட்டை கூறுகிறது என அறிஞர்கள் கூறுகின்றனர்