சங்க இலக்கியங்களில் வடமொழி வேதங்களைப் போற்றும் பாடல்கள் உள்ளன, இதிகாச, புராண நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன. அத்தோடு சில சங்கப் புலவர்களின் பெயர் வடமொழியில் அமைந்துள்ளன. அவற்றுள் சில ரிஷி கோத்திரங்கள்.
கீழ்க்காணும் பெயர்களில் ஒருபகுதி உறுதியாக வடமொழி என்று கூறலாம்.
- ஆரியன் பெருங்கண்ணன்
- ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்
- ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
- இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
- உக்கிரப் பெருவழுதி
- உருத்திரனார்
- உலோச்சனார்
- உறையூர்ச் சல்லியங் குமரனார்
- உறையூர் மருத்துவன் தாமோதரனார்
- ஓதஞானி
- ஓரிற்பிச்சையார்
- கடம்பனூர்ச் சாண்டில்யன்
- கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- கோவர்த்தனர்
- சத்திநாதனார்
- சல்லியங்குமரனார்
- செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
- சோழன் நல்லுருத்திரன்
- தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
- தாமோதரனார்
- தேவகுலத்தார்
- தேவனார்
- நல்லச்சுதனார்
- நல்லுருத்திரனார்
- நெய்தற் கார்க்கியார்
- பதுமனார்
- கணக்காயன் தத்தனார்
- கருவூர் பவுத்திரனார்
- கள்ளில் ஆத்திரையனார்
- காசிபன் கீரன்
- கேசவனார்
- பரூஉமோவாய்ப் பதுமனார்
- பாண்டரங்கண்ணனார்
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
- பாலைக் கௌதமனார்
- பிரமசாரி
- பிரமனார்
- பெருங்கௌசிகனார்
- பெருந்தேவனார்
- பெரும் பதுமனார்
- மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
- மதுரை இனங்கௌசிகனார்
- மாதீர்த்தன்
- மார்க்கண்டேயனார்
- வடவண்ணக்கன் தாமோதரன்
- வருமுலையாரித்தி
- வான்மீகியார்
பூதம் என்ற சம்ஸ்கிருதச் சொல் என்ற அடிப்படையில் கீழ்க்காணும் பெயர்கள் வடமொழியாகின்றன
- இளம்பூதனார்
- ஈழத்துப் பூதந்தேவனார்
- ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
- செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
- சேந்தம்பூதனார்
- கரும்பிள்ளைப் பூதனார்
- கருவூர் பூதஞ்சாத்தனார்
- கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
- கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
- காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
- குன்றம் பூதனார்
- கோடைபாடிய பெரும்பூதன்
- பூதங்கண்ணனார்
- பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
- பூதம்புல்லனார்
- பூதனார்
- பூதந்தேவனார்
- மதுரைக் கவுணியன் பூதத்தனார்
- வெண்பூதன்
நாகம் என்ற சம்ஸ்கிருதச் சொல் என்ற அடிப்படையில் கீழ்க்காணும் பெயர்கள் வடமொழியாகின்றன.
- அஞ்சியத்தை மகள் நாகையார்
- அம்மெய்நாகனார்
- இளநாகனார்
- இனிசந்த நாகனார்
- எழூப்பன்றி நாகன் குமரனார்
- தீன்மதிநாகனார்
- நன்னாகனார்
- நன்னாகையார்
- நாகம்போத்தன்
- பொன்னாகன்
- மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
- மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
- மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
- மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
- மதுரைப் பூதனிள நாகனார்
- மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
- மதுரைப் பெருமருதிளநாகனார்
- மருதனிளநாகனார்
- முப்பேர் நாகனார்
- முரஞ்சியயூர் முடிநாகராயர்
- விரிச்சியூர் நன்னாகனார்
- விரியூர் நன்னாகனார்
- வெள்ளைக்குடி நாகனார்
- தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
இது வரை உள்ள பெயர்கள் உறுதியாக வடமொழியே. பிறகு வருபவை அனுமானங்களே.
கீரன் என்பது க்ஷீரன் (பாற்கடலுக்குரியவன்) என்ற சொல்லில் இருந்து வந்திருக்கலாம் என்ற அடிப்படையில் கீழ்க்காணும் பெயர்கள் வடமொழியாகின்றன.
- அதி இளங்கீரனார்
- அல்லங்கீரனார்
- ஆவூர் மூலங்கீரனார்
- இடையன் நெடுங்கீரனார்
- இம்மென்கீரனார்
- இளங்கீரந்தையார்
- இளங்கீரனார்
- உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
- ஐயூர் மூலங்கீரனார்
- சேந்தங்கீரனார்
- தும்பிசேர்கீரனார்
- நக்கீரர்
- படுமரத்து மோசிகீரனார்
- கழார்க் கீரனெயிற்றியார்
- கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
- கீரங்கீரனார்
- கீரந்தையார்
- குடவாயிற் கீரத்தனார்
- குட்டுவன் கீரனார்
- குறுங்கீரனார்
- பொதுக்கயத்துக் கீரந்தை
- பொருந்தில் இளங்கீரனார்
- மடல் பாடிய மாதங்கீரனார்
- முலங்கீரனார்
- வினைத் தொழில் சோகீரனார்
இவற்றைத் தவிர கீழ்க்காணும் சில பெயர்கள் வடமொழியாக இருக்க வாய்புள்ளதாக்க கருதலாம். சாத்தன் (சாத்திரன் - சாஸ்தா), குமரன் (குமர - முருகன்).
- ஆடுதுறை மாசாத்தனார்
- ஆதிமந்தி
- ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
- ஆலியார்
- இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
- இளந்தேவனார்
- இளம்போதியார்
- உறையூர்ச் சிறுகந்தனார்
- கங்குல் வெள்ளத்தார்
- கச்சிப்பேடு இளந்தச்சன்
- கச்சிப்பேடு பெருந்தச்சனார்
- கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
- சங்கவருணர் என்னும் நாகரியர்
- சாகலாசனார்
- செம்பியனார்
- தேரதரன்
- தொல்கபிலர்
- நற்சேந்தனார்
- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
- நொச்சி நியமங்கிழார்
- கண்ணனார்
- கதப்பிள்ளையார்
- கந்தரத்தனார்
- கபிலர்
- கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
- கருவூர் கலிங்கத்தார்
- கருவூர் கோசனார்
- காப்பியஞ்சேந்தனார்
- காப்பியாற்றுக் காப்பியனார்
- காலெறி கடிகையார்
- காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
- கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
- கிள்ளிமங்கலங்கிழார்
- கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
- குண்டுகட் பாலியாதனார்
- குளம்பாதாயனார்
- குறுங்குடி மருதனார்
- கூற்றங்குமரனார்
- கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
- பராயனார்
- பிரான் சாத்தனார்
- பெருஞ்சித்திரனார்
- போதனார்
- மதுரைக் கண்டராதித்தனார்
- மதுரைச் சுள்ளம் போதனார்
- மதுரைத் தத்தங்கண்ணனார்
- மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
- மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
- மதுரைப் பெருமருதனார்
- மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
- மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
- மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
- மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
- மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
- மாங்குடிமருதனார்
- மாமூலனார்
- மிளைக் கந்தன்
- மிளைப் பெருங்கந்தன்
- முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
- மோசிதாசனார்
- வடநெடுந்தத்தனார்
- வண்ணக்கன் சோருமருங்குமரனார்
- வண்ணப்புறக் கந்தரத்தனார்
- வாயிலான் தேவன்
- விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
- வெண்பூதியார்
- வெண்மணிப்பூதி
- வேம்பற்றுக் குமரன்
இது தவிர கண்ணனின் பெயர் வைத்த புலவர்களின் பெயர் பட்டியல் கீழே
1) ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் - அகநானூறு (64)
2) ஆவூர் கிழார் மகனார் கண்ணனார் - அகநானூறு (202)
3) சேந்தங் கண்ணனார் - அகநானூறு (350), நற்றிணை (54)
4) எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் - அகநானூறு (149, 319, 357), புறநானூறு (397)
5) இளங்கண்ணனார் - அகநானூறு (264)
6) இருங்கோன் ஒல்லையான் செங்கண்ணனார் - அகநானூறு (279)
7) விழிகட்பேதைப் பெருங்கண்ணனார் - நற்றிணை (242)
8) கண்ணகனார் - நற்றிணை (79), புறநானூறு (218)
9) கண்ணகாரன் கொற்றனார் - நற்றிணை (143)
11) கண்ணனார் - குறுந்தொகை (244)
12) கண்ணங் கொற்றனார் - நற்றிணை (156)
13) கந்தக்கண்ணனார் - குறுந்தொகை (94)
14) காரிக்கண்ணனார் - நற்றிணை (237)
15) காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் - அகநானூறு (103, 271), நற்றிணை (389)
16) காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங்கண்ணனார் - குறுந்தொகை (347)
17) காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் - அகநானூறு (107, 123, 285), குறுந்தொகை (297), புறநானூறு (57, 58, 169, 171, 353)
18) கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் - நற்றிணை (218)
19) கிடங்கில் குலபதி நக்கண்ணனார் - குறுந்தொகை (252)
20) கொல்லிக் கண்ணனார் - குறுந்தொகை (34)
21) கூடலூர்ப் பல்கண்ணனார் - நற்றிணை (200, 380)
22) குமட்டூர் கண்ணனார் - பதிற்றுப்பத்து (11–20)
23) குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் - நற்றிணை (332)
24) குட்டுவன் கண்ணனார் - குறுந்தொகை (179)
25) மதுரை செங்கண்ணனார் - அகநானூறு (39)
26) மதுரை இளங்கண்ணிக் கோசிகனார் - புறநானூறு (309)
27) மதுரைக் கண்ணனார் - குறுந்தொகை (107)
28) மதுரைக் கண்ணத்தனார் - அகநானூறு (360), நற்றிணை (351)
29) மதுரைக் கதக்கண்ணனார் - குறுந்தொகை (88)
30) மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார் - அகநானூறு (247, 364), நற்றிணை (388)
31) மதுரைப் புல்லங்கண்ணனார் - அகநானூறு (161)
32) மதுரைத் தத்தங்கண்ணனார் - அகநானூறு (335)
33) மருங்கூர் கிழார் பெருங்கண்ணணார் - அகநானூறு (80)
34) மோசி கண்ணத்தனார் - நற்றிணை (124)
35) முதுவெங்கண்ணனார் - நற்றிணை (232)
36) நக்கண்ணையார் (பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணையார்) - அகநானூறு (252), நற்றிணை (19, 87), புறநானூறு (83, 84, 85)
37) நாமலார் மகனார் இளங்கண்ணனார் - குறுந்தொகை (250)
38) ஒல்லையாயன் செங்கண்ணனார் - அகநானூறு (279)
39) பாண்டரங்கண்ணனார் - புறநானூறு (16)
40) பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் - அகநானூறு (373), குறுந்தொகை (156)
41) பெருங்கண்ணனார் - குறுந்தொகை (289, 310), நற்றிணை (137)
42) பெருங்கோழி நாய்கன் மகள் -நக்கண்ணையார் புறநானூறு (83, 84, 85)
43) பூங்கண்ணனார் - குறுந்தொகை (253) நற்றிணை (140)
44) பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் - அகநானூறு (192)
45) செல்லூர் கோசிகன் கண்ணனார் - அகநானூறு (66)
46) செங்கண்ணனார் - நற்றிணை (122)
47) தாமற்பல் கண்ணனார் - புறநானூறு (43)
48) தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் - நற்றிணை (386)
49) தாயங்கண்ணனார் - அகநானூறு (105, 132, 213, 237), குறுந்தொகை (319), நற்றிணை (219)
50) உம்பற்காட்டு இளங்கண்ணனார் - அகநானூறு (264)
51) உறையூர் முதுகண்ணன் சாத்தனார் - குறுந்தொகை (133), புறநானூறு (27, 28, 29, 30,
52) வாயிலிளங் கண்ணனார் - குறுந்தொகை (346)
53) வெள்ளைக் கண்ணத்தனார் - அகநானூறு (64)
54) வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார் - குறுந்தொகை (362)
55) வெண்கண்ணனார் - அகநானூறு (130)
56) வேட்டகண்ணனார் - குறுந்தொகை (389)