இந்திய ஞான மரபின் வழியில் தொன்று தொட்டு உள்ள போதனைகளை கற்று உணர்ந்தால் மனதிற்கும் கேட்டால் செவிக்கும் ஓதினால் நாவிற்கும் இன்பம் தரும்படியாக இனிய குறள் வெண்பாக்களால், நாம் இந்த பூவுலகில் இருவினைத் தொடர பிறந்து-இறந்து மீண்டும் பிறந்து எனும் பிறவி பெருங்கடலில் இருந்து மீள வரும் மாமருந்து என வள்ளுவத்தை ஞானத்தை போதிக்கும் சொல்வன்மை உடைய திருவள்ளுவர் நாயனார் அருளி உள்ளார்.
திருவள்ளுவமாலை - 52:மதுரைப் பாலாசிரியனார் - Madurai Paalaasiriyanaar வெள்ளி வியாழம் விளங்குஇரவி வெண்திங்கள் பொள்என நீக்கும் புறஇருளைத்-தெள்ளிய வள்ளுவரின் குறள் வெண்பா அகிலத்தோர் உள்இருள் நீக்கும் ஓளி.
இரவி- சூரியன் வியாழம்-சுக்கிரன் (சுக்ர நீதி தந்த அசுர குரு) . பொள்என- விரைவில். உள் இருள்-மன இருள். வெள்ளி முதலியன மனத்திருளை நீக்கமாட்டா. வெள்ளி, வியாழம் இரண்டும் பிரகாசம் உள்ள நட்சத்திரங்கள்.
விளக்கம்(பொ-ரை.) சுக்கிரன் (சுக்ர நீதி தந்த அசுர குரு) வெள்ளி, சூரியன் மற்றும் சந்திரன் மூன்றும் பூமியில் உள்ள புற இருளை நீக்கும் ஒளிகளாம். தொன்மையான ஞானமரபை முற்று உணர்ந்த திருவள்ளுவரின் இனிய குறள் வெண்பா நம் உள்ளத்து அக இருள் நீக்கும் ஒளியாம்.
வள்ளுவர் பாட்டின் வளம் உரைக்கின் வாய்மடுக்கும் தென் அமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால்-தெள்ளமுதம் உண்டு அறிவார் தேவர் உலகடைய உண்ணுமால் வண் தமிழின் முப்பால் மகிழ்ந்து. வாய்மடுக்கும்- உண்ணப்படுகின்ற. தீம் சுவையும்-இனிய சுவையும். “வண்தமிழின் முப்பால் மகிழ்ந்த உலகு அடைய உண்ணும் ஆல்”. முப்பால்- திருக்குறளாகிய அமுதத்தை. மகிழ்ந்து- மகிழ்ச்சியுடன். உலகுஅடைய- உலகம் முழுவதும்.
திருவள்ளுவர் மனித வாழ்வின் மேன்மை அடைய அறம்-பொருள்-இன்பம் என முப்பாலை அருளினார்; மேல் உலகத்தில் உள்ள தேவர்கள் வளம் பொருந்திய தமிழ் மொழி நெகிழ்ச்சி பெற்று வெண்பா யாப்பில் திருக்குறளின் பாட்டின் தீஞ்சுவைக்குத் தேவர்கள் உலக அமிர்தம் ஒப்பு ஆகாது எனவும் வள்ளுவம் எல்லா உலகத்தாரும் மகிழ்ந்து உண்டு தீஞ்சுவை உடையது என எற்பர்.
திருவள்ளுவ நாயனாரது குறள் நூலின் 1330 குறள் வெண்பாக்களும், கடுகைத் நடுவில் துளை போட்டு ஏழு கடல்களின் நீரை உள்ளே திணித்தது போலே மனித வாழ்வின் அனைத்திற்கும் வழிகாட்டும் வழி கொண்டது.
(கடுகு என்பது மிகச் சிறியபொருள் என உவமைக்காய் புலவர் காட்டினார்)
திருவள்ளுவமாலை - 55:ஒளவையார் - Avvaiyar அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள். திருவள்ளுவ நாயனாரது குறள் நூலின் 1330 குறள் வெண்பாக்களும், அணுவை நடுவில் துளை போட்டு ஏழு கடல்களீன் நீரை உள்ளே திணித்தது போலே திணித்தது போல மனித வாழ்வின் அனைத்திற்கும் வழிகாட்டும் வழி கொண்டது.