(கு-உ) “அறிவுடையார் யாவரும் எடுத்து இயம்ப வல்லார்”, “பொருவில் ஒழுக்கம் பூண்டார் தேவர் திருவள்ளுவர் தாம் செப்பியவே செய்வார்”. அறிவுள்ளவர்கள் திருக்குறளிலிருந்தே செய்யக்கூடியன இவை, செய்யக்கூடாதன இவை என்பதை எடுத்துக்கூற வல்லவர் ஆவார்- ஒழுக்கம் உள்ளவர் திருவள்ளுவர் கூறியபடியே நடப்பார்கள். தேவர் திருவள்ளுவர்- தேவராகிய திருவள்ளுவர்.
திருவள்ளுவமாலை - 42: செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார் - Seyaloor Kodum Senkannanaar வேதப் பொருளை விரகால் விரித்து உலகோய் ஓதத் தமிழால் உரைசெய்தார் - அதலால் உள்ளுநர் உள்ளும் பொருள் எல்லாம் உண்டு என்ப வள்ளுவர் வாய்மொழி மாட்டு. தமிழர் மெய்யியல் வேதங்கள் வடமொழியின் பொருளைத் தான் கற்று தமிழுலகம் அறிந்திட திருவள்ளுவர் தமிழில் விரித்து உரைத்தார். ஆதலால், திருக்குறளில் மக்கள் நினைக்கும் வாழ்க்கையின் கருதும பொருள்கள் எல்லாம் உள்ளது என அறிஞர்கள் கூறுவர்
(கு-உ) விரகால் விரித்து - அறிந்துகொள்ளும் உபாயத்தால் விரிவாக. உள்ளுநர் - நினைக்கின்றவர். “வள்ளுவர் வாய்மொழி மாட்டு உள்ளுநர் உள்ளும் பொருள் எல்லாம் உண்டு என்ப” என்று பொருள் கொள்க.
ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனின் இது சீரியது என்று ஒன்றைச் செப்பரிது- ஆரியம் வேதம் உடைத்து தமிழ் திருவள்ளுவனார் ஓது குறட்பா உடைத்து. இந்தியா முழுவதும் பரவி உள்ள வடமொழியையும் செந்தமைழ் மொழியையும் ஒப்பு நோக்கி இது சிறந்தது என்று ஒன்றைச் சொல்ல முடியாது. வடமொழியில் வேதம் உள்ளது; தமைழ் மொழியில் திருக்குறள் உள்ளது. ஆதலால், இரண்டும் சிறந்ததே.
திருவள்ளுவமாலை - 44:களத்தூர்க் கிழார் - Kalathoor Kilar ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும் தருமம் முதல் நான்கும் சாலும் - அருமறைகள் ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார் புந்தி மொழிந்த பொருள். தமிழர் மெய்யியல் நூல்களான ரிக்,யஜுர், சாம,அதர்வண மற்றும் மகா பாரதம் என்ன வேதங்கள் ஐந்தும் வேதவழிப்பட்ட சாத்திரங்கள் ஆறும், திருவள்ளுவர் நூலில் அடங்கும்; ஆதலால் ஒருவர் உய்வதற்கு ஈரடியில் ஓரெதுகை &ஈரெதுகை அமைந்த குறளால் அமைந்த முப்பாலில் சொல்லப்பட்ட அறம், பொருள், இன்பம் மோட்சம் எனும் நாற்பொருளையும் அறிந்தால் போதும்.
எழுத்து அசை சீர் அடி சொல் பொருள் யாப்பு வழுக்கு இல் வனப்பு அணி வண்ணம்- இழுக்கு இன்றி என்று எவர் செய்தன எல்லாம் இயம்பின இன்று இவர் இன்குறள் வெண்பா. எழுத்து முதல் வண்ணம் ஈறாகச் சொல்லப்பட்ட எல்லாம் அழகாக எந்தக் காலத்தில் எவரால் சொல்லப்பட்டனவோ, அவையெல்லாம் இக்காலத்து இத்திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இனிய குறள் வெண்பாக்களிற் சொல்லப்பட்டுள்ளன. எழுத்து அசை சீர் சொல் அடி சொல் பொருள் யாப்பு வழக்கு வனப்பு அணி வண்ணம் எனச் செய்யுள் இலக்கணத்தில் பிழை இல்லாது வெவ்வேறு புலவர்கள் தனித் தனி நூல் செய்தனர்; இவர் குறள் வெண்பாவில் எல்லா இலக்கணக் கூறுகளும் பின்பற்றி அமைந்து எல்லா குணங்களிலும் சிறந்த குறள் வெண்பாக்களில் அமைத்து சொல்லப் பட்டு உள்ளது. (வனப்பு அம்மை அழகு தொன்மை தோல் விருந்து இயல்பு புலன் இளைப்பு அணி சொல்ல அணி பொருள் அணி ஒலியணி வண்ணம் குறில் அகவல் தூங்கிசை வண்ணம் முதல் என ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு புலவர் ஒவ்வொரு குணத்தாலே சிறந்து விளங்க நூல் செய்தனர்) பாட்டுத் தொகை நூல்களில் தொடை அமைப்பு பெரும்பாலான நூல்களில் இல்லை. பரிபாடல், கலித்தொகை மற்றும் திருமுருகாற்றுப் படை நூல்கள் பிற்காலத்தை சார்ந்தவை அவற்றில் சில தொடை அமைப்பு வந்தது. குறள் வெண்பா யாப்பு இலக்கணம் நன்கு நெக்ழ்ச்சி அடைந்த இடைக்காலத்தில் எழுந்த நூல் ஆகும்
(கு-உ) எழுத்துமுதல் வண்ணம்வரை உள்ளவை செய்யுளின் இயல்பு. இழுக்குஇன்றி - குற்றம் இல்லாமல் குறள் வெண்பாவில் எழுத்து முதல் வண்ணம் வரையுள்ள இயல்புகள் அமைந்துள்ளன.