தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவமாலை 36 -40


Guru

Status: Offline
Posts: 1049
Date:
திருவள்ளுவமாலை 36 -40
Permalink  
 


 திருவள்ளுவமாலை -36: கவிசாகரப் பெருந்தேவனார் – Kavisagara Perundevanar

பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனதம்
ஆவிற்
கு அருமுனி யானைக்கு- அமரர் உம்பல்

தேவில் திருமால் எனச் சிறந்தது என்பவே
பாவிற்கு வள்ளுவர் வெண்பா.
பூக்களில் சிறந்தது தாமரையும், தங்கத்தில் சிறந்தது சாம்புனதப் பொன் , பசுக்களில் சிறந்தது வசிஷ்ட முனிவரிடம் இருந்த காமதேனுவும், யானையில் தேவர் தலைவர் இந்திரனின் ஐராவதமும், தேவர்களுள் சிறந்தவர் திருமாலும், தமிழ் நூல்களில் சிறந்தது திருவள்ளுவர் இயற்றிய குறள் வெண்பா ஆகும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை-37:மதுரைப் பெருமருதனார்– Madurai Perumarudhanar
அறம் முப்பத்து எட்டுப் பொருள் எழுபது இன்பத்
திறம் இருபத்து ஐந்தால் எளிய - முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓத வழு
க்கு ற்றது உலகு.

உலகு வழுக்குஅற்றது- உலகம் குற்றத்திலிருந்து தப்பியது. 

அறத்துப் பாலில் 38 அதிகாரங்களையும் பொருட் பால் 70 அதிகாரங்களையும் இன்பத்து ப்பால் 25 அதிகாரங்களையும் ஆக வகுத்து, நான்கு வேதங்கள் கூறும் வாழ்விற்கான பொருளைக் குறள் வெண்பாவாற் திருவள்ளுவர், ஒரு சேரக் கூறியதை உலகம் ஓதி பின்பற்றினால் தீயொழுக்கஇங்கள் இல்லாது போகும்



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை - 38:கோவூர் கிழார் - Koovur kizaar
அறம்முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்
திறமுறத் தேர்ந்து தெளியக் – குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே
முன்னை முதுவோர் மொழி
மனித வாழ்வின் உறுதிப் பொருட்களான அறம், பொருள், இன்பம் மற்றும் மோட்சம் எனும் நாற்பொருளையும் மக்கள் ஆய்ந்து தெளிவடைய திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளிற்கு இணையாக ஒரே நூலாக முந்துநூல் ஒன்றும் நிகராகாது.

-ள். அறமுதல் நான்கும் அக லிடத்தோர் எல்லாம் திறம் உறத் தேர்ந்து தெளியக் குறள் வெண்பாப் பன்னிய வள்ளுவனார் பான் முறை - அறம் முதலிய நான்கு பொருள்களையும் மண்ணுலகத் துள்ளோ ரெல்லாம் வகைப்பட ஆராய்ந்து தெளியும் பொருட்டுக் குறள் வெண்பாக்களாலே சொல்லப்பட்ட திருவள்ளுவ நாயனாரது முப் பால்களை யுடைய புத்தகத்தின் கண்ணே, முன்னை முதுவோர் மொழி நேர் ஒவ்வாது-முற் காலத்துள்ள பெரியோரது நூல்களுக்கு நேர்தல் பொருந்தாது.

'மொழி' ஆகுபெயர். பெரியோ ராவார்---வட மொழியிலும், தென் மொழியிலும், பிற மொழிகளிலும், நூல் செய்த முனிவரும், புலவரும், பிறரும். அந் நூல்களாவன-மனு முதலியோராலே செயப்பட்ட அற நூன் முதலியன. இதன் புத்தகத்தில் முன் னூல்களி லொன்றும் சேர்க்கப்படுதற்குத் தகுவ தன் றென்று சொல்லிய படி.(௩௰௮)

கு-உ) அகல் இடத்தோர்- பெரிய இவ்வுலகில் உள்ளோர். திறம்உற-வகைப்பட. வள்ளுவனார் பால் முறை நேர்- வள்ளுவரின் முப்பால் நீதிக்கு எதிரில். முன்னை முதுவோர் மொழி ஒவ்வாதுஏ- பழம்புலவர்கள் மொழிந்த நூல்களும் ஒப்பாகாது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 திருவள்ளுவமாலை -39:உறையூர் முதுகூற்றனார் – Uraiyoor Mudhukoottranaar

தேவிற் சிறந்த திருவள்ளுவர் குறள் வெண்
பாவில் சிறந்திடும் முப்பால் பகரார்- நாவிற்கு
உயல் இல்லை சொற்சுவை ஓர்வில்லை மற்றும்
செயல் இல்லை என்னும் திரு.
(பொ-ரை.) தெய்வத் தன்மை வாய்ந்த திருவள்ளுவரின் திருக்குறள் வெண்பாக்களில் "அறம், பொருள், இன்பம்" என்ற முப்பாலினைப் படிக்காதவர் நாக்கினில் இன்சொல் சொல்லவில்லை; உடம்பிற்கு நல்வினை இல்லை என்று கருதித் லட்சுமி தேவி சேராது விலகிடுவாள்

-ள். தேவிற் சிறந்த திருவள்ளுவர் குறள் வெண்பாவிற் சிறந்திடு முப் பால் பகரார் - தெய்வத் தன்மையாற் சிறந்த திருவள்ளுவரது குறள் வெண்பாக்களோடு கூடிச் சிறந்து தோன்றாநின்ற முப் பால்களையும் ஓதாரது, நாவிற்கு உயல் இல்லை - வாக்கிற்கு இன் சொற் சொல்லி வாழ்தல் உண்டாகாது; சொற்சுவை யோர் வில்லை - மனத்திற்குச் சொற்களின் சுவையை அறிதல் உண்டாகாது; மற்றும் செயல் இல்லை - இவையன்றியும் காயத்துக்கு நல்ல செய லுண்டாகாது; என்னும் திரு - என்று நினைத்துத் திருமகள் அவரிடத்துச் சேராள்.

சுவை யோர்தற்கும் செயலுக்கும் உரிய மனமும், காயமும் வருவிக்கப்பட்டன. திருமகள் சேராமை யாகிய காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஓதார்க்கு உளவாகாமை கூறவே, ஓதுவோர்க்கு இவை உள. ஆகலின், வாக்கிற்குக் கடுஞ்சொல், பொய், கோள், புறங்கூறல்களும், மனத்திற்குப் பிறனில் விழைதல், பிறன் பொருள் விழைதல், பிறன் பொருட்குக் கேடெண்ணல், பிற வயிர்க் கிறுதி யெண்ணல்களும், காயத்திற்குப் பிறன்மனை புணர்தல், உயிர்க் கொலை செய்தல், பழி யூ ணுணல், பிறர் பொருள் வௌவல்களும், ஆகிய குற்றங்க ளெல்லாம் நீங்கு மென்பது பெறப்பட்டது. அற வின்பங் கட்குக் காரண மாதற் சிறப்புடைய பொருட் பேறு இஃ தோதலின் உளதா மென்ற படி.(௩௰௯)

(கு-உ) திருவள்ளுவர்- திருவள்ளுவரது. குறள் வெண்பாவில் சிறந்திடும்- குறள் வெண்பாக்களால் அமைந்து சிறந்திருக்கின்ற. முப்பால்- முப்பால் நூலை. பகரார்- சொல்லாதவர்களின். உயல் இல்லை- வாழ்வில்லை. ஓர்வு- உணர்ச்சி. என்னும் திரு- என்று நினைத்து இலக்குமி சேரமாட்டாள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை - 40:இழிகட் பெருங்கண்ணனார் – Izlikat Perungkananaar
இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும்
செம்மை நெறியில் றெளிவுபெற - மும்மையின்
வீடவற்றின் நான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடினஆர் இன்குறள் வெண்பா.
மனிதனின் இந்தப் பிறப்பிற்கும் மீண்டும் பிறக்கும் மறுமை பிறப்பிற்கும், மீண்டும் மீண்டும் எழும் பிறப்பினில் எல்லாம் பயன்படவும் முப்பால் அறம், பொருள், இன்பம் இவர்ரீள் நான்காம்பொருளாம் மோட்சம் எனும் வீடோடு அடைய வழி காட்ட திருவள்ளுவர் திருக்குறள் இயற்றினர்.

-ள். இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும் செம்மை நெறியின் தெளிவு பெற-இக பரங்கட் காவன விரண்டையும் வினைப் பயன் றொடர்தற் குரிய எழு பிறப்பிற்குமாகச் செவ்வையான வழியால் யாவரும் தெளிதல் பெறவும், மும்மையின் அவற்றின் வீடு நான்கின் விதி வழங்க - அறம் பொருள் இன்ப மென்னும் முப்பால்களுள் அம் முப்பாற் பொருள்களோடு வீடுமாகிய நாற் பொருள்களது விதிகளும் வழங்கவும், வள்ளுவனார் இன் குறள் வெண்பாப் பாடினர் - திருவள்ளுவ நாயனார் இனிய குறள் வெண்பாவைப் பாடினர்.

செவ்வையான வழி, விதியும் பத்தியும் ஞானமும், நோயாளிக்கு மருந்தும் அனுபானமும் பத்தியமும் போல், ஒன்றற் கொன்று முரணாது கூடி நிற்கும் வழி. வீட்டு விதி துறவறத்திற் காண்க. இம்மை மறுமை வீடு மூன்றும் பயக்குமாறு சொல்லிய படி.(௪௰)

(கு-உ) இம்மை மறுமை இரண்டும்- இம்மை மறுமை இரண்டின் பயனையும். எழுமைக்கும்- ஏழுபிறப்பினும். செம்மை நெறியில்- நல்ல முறையிலே. தெளிவு பெற- அறிந்து தெளியும்படி. மும்மையின்- முப்பால்களில். வீடு அவற்றின் நான்கின் விதிவழங்க - வீடோடு கூடிய அவைகள் நான்கின் விதிகளையும் கூற; ‘வள்ளுவர் இக்குறள் வெண்பா பாடினர்.”



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard