தேவில் திருமால் எனச் சிறந்தது என்பவே பாவிற்கு வள்ளுவர் வெண்பா. பூக்களில் சிறந்தது தாமரையும், தங்கத்தில் சிறந்தது சாம்புனதப் பொன் , பசுக்களில் சிறந்தது வசிஷ்ட முனிவரிடம் இருந்த காமதேனுவும், யானையில் தேவர் தலைவர் இந்திரனின் ஐராவதமும், தேவர்களுள் சிறந்தவர் திருமாலும், தமிழ் நூல்களில் சிறந்தது திருவள்ளுவர் இயற்றிய குறள் வெண்பா ஆகும்.
திருவள்ளுவமாலை-37:மதுரைப் பெருமருதனார்– Madurai Perumarudhanar அறம் முப்பத்து எட்டுப் பொருள் எழுபது இன்பத் திறம் இருபத்து ஐந்தால் எளிய - முறைமையால் வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார் ஓத வழுக்கு அற்றது உலகு.
உலகு வழுக்குஅற்றது- உலகம் குற்றத்திலிருந்து தப்பியது.
அறத்துப் பாலில் 38 அதிகாரங்களையும் பொருட் பால் 70 அதிகாரங்களையும் இன்பத்து ப்பால் 25 அதிகாரங்களையும் ஆக வகுத்து, நான்கு வேதங்கள் கூறும் வாழ்விற்கான பொருளைக் குறள் வெண்பாவாற் திருவள்ளுவர், ஒரு சேரக் கூறியதை உலகம் ஓதி பின்பற்றினால் தீயொழுக்கஇங்கள் இல்லாது போகும்
திருவள்ளுவமாலை - 38:கோவூர் கிழார் - Koovur kizaar அறம்முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம் திறமுறத் தேர்ந்து தெளியக் – குறள்வெண்பாப் பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே முன்னை முதுவோர் மொழி மனித வாழ்வின் உறுதிப் பொருட்களான அறம், பொருள், இன்பம் மற்றும் மோட்சம் எனும் நாற்பொருளையும் மக்கள் ஆய்ந்து தெளிவடைய திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளிற்கு இணையாக ஒரே நூலாக முந்துநூல் ஒன்றும் நிகராகாது.
தேவிற் சிறந்த திருவள்ளுவர் குறள் வெண் பாவில் சிறந்திடும் முப்பால் பகரார்- நாவிற்கு உயல் இல்லை சொற்சுவை ஓர்வில்லை மற்றும் செயல் இல்லை என்னும் திரு. (பொ-ரை.) தெய்வத் தன்மை வாய்ந்த திருவள்ளுவரின் திருக்குறள் வெண்பாக்களில் "அறம், பொருள், இன்பம்" என்ற முப்பாலினைப் படிக்காதவர் நாக்கினில் இன்சொல் சொல்லவில்லை; உடம்பிற்கு நல்வினை இல்லை என்று கருதித் லட்சுமி தேவி சேராது விலகிடுவாள்
திருவள்ளுவமாலை - 40:இழிகட் பெருங்கண்ணனார் – Izlikat Perungkananaar இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும் செம்மை நெறியில் றெளிவுபெற - மும்மையின் வீடவற்றின் நான்கின் விதிவழங்க வள்ளுவனார் பாடினஆர் இன்குறள் வெண்பா. மனிதனின் இந்தப் பிறப்பிற்கும் மீண்டும் பிறக்கும் மறுமை பிறப்பிற்கும், மீண்டும் மீண்டும் எழும் பிறப்பினில் எல்லாம் பயன்படவும் முப்பால் அறம், பொருள், இன்பம் இவர்ரீள் நான்காம்பொருளாம் மோட்சம் எனும் வீடோடு அடைய வழி காட்ட திருவள்ளுவர் திருக்குறள் இயற்றினர்.
(கு-உ) இம்மை மறுமை இரண்டும்- இம்மை மறுமை இரண்டின் பயனையும். எழுமைக்கும்- ஏழுபிறப்பினும். செம்மை நெறியில்- நல்ல முறையிலே. தெளிவு பெற- அறிந்து தெளியும்படி. மும்மையின்- முப்பால்களில். வீடு அவற்றின் நான்கின் விதிவழங்க - வீடோடு கூடிய அவைகள் நான்கின் விதிகளையும் கூற; ‘வள்ளுவர் இக்குறள் வெண்பா பாடினர்.”