தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவமாலை 21-25


Guru

Status: Offline
Posts: 898
Date:
திருவள்ளுவமாலை 21-25
Permalink  
 


திருவள்ளுவமாலை -21: நன்பலூர் சிறு மேதாவியார் - 21 Nalkoor Velviyaar
உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சென்ப – இப்பக்கம்
மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்கு அச்சு

உப்பக்கம் நோக்கி- வடக்கு நோக்கி. உபகேசி-நப்பின்னைப் பிராட்டி. தோள் மணந்தான்- தோளைத் தழுவிய கண்ணன். உத்தர மாமதுரை- வட மதுரை. அச்சு- ஆதரவு. மாதாநு பங்கி, செந்நாப் போதார்; வள்ளுவர் பெயர்கள். மறுஇல் புலம்- குற்றமற்ற அறிவினையுடைய. கூடல்- மதுரை.

நப்பின்னைப் தேவியினது தோளை மணந்த வடக்கு நோக்கி சென்ற kaNNan (திருமால்) வடமதுரைக்கு ஆதாரமாவார்; இப்பக்கம் அந்த அனுபங்கி மாதாவிற்கு நிகராகக் கொண்டு நடக்கின்ற குற்றமற்ற புலமையால் தேனைச் சொரிவது போன்ற செவ்விய நாவாகிய மலரை உடைய திருவ்வள்ளுவர் தென் மதுரைக்கு ஆதார மாவர்.

 

Lord Kirshna (Upakesi= Vishnu avatar) who went north and married the shoulder of goddess Nappinai is the source of North Madura; Thiruvvalluvar, who has a heavenly tongue flower that drips honey with ierrorless knowledge, is the source of South Madurai.

 



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை -22:தொடித்தலை விழுத்தண்டினார் -Thoditthalai Viluthandinar

அறம்நான்கு அறிபொருள் ஏழ் ஒன்று காமம்

திறம்மூன்று எனப்பகுதி செய்து – பெறல்அறிய

நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்கு உணர்வார்

போலும் ஒழிந்த பொருள்

பெறலரிய நாலும் மொழிந்த பெரு நாவலரே- பெறுதற்கு அரிய அறம் பொருள் இன்பம் வீடு எனப் படுகிற நான்கு பொருளையும் சொல்லிய பெரு நாவலரே, ஒழிந்த பொருள் நன்கு உணர்வார் போலும்- அவற்றுள் அடங்காது ஒழிந்த பொருள் உளதாயின், அதனை நன்றாக அறிய வல்லவர் போலும்

திருக்குறள் அமைப்பைக் விளக்கும் வெண்பா-- அறத்துப் பாலை பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என நான்கு இயலாகாகவும், பொருட்பாலை அரசு. அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி ஏழா இயலாகாகவும், இன்பத்தை ஆண்பாற் கூற்று, பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று என மூன்றாகவும் வகுத்து, முப்ப்பால் அமைபினிலே - பிறந்து இறந்து மீண்டும் பிறந்து எனும் பிறவிப் பெருங்கடலை நீந்தி கடக்கும் வீடு எனும் மோட்சம் உட்பட நாற்பொருளையுங் கூறிய பெரும் புலவராகிய திருவள்ளுவரே வேறுபொருள் இருப்பினும் அதையும் அறிவார் போலும்!

This Venba explains the Thirukkural internal divisions-  Virtue-has four divisions, Weatlth has 7 divisions and Pleasure has 3 divisions; Thiruvalluva, the great poet who ha said all four definte things of life with in this 3 division work and knows everything beyond also. 

 



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

 திருவள்ளுவமாலை -23: வெள்ளிவீதியார் - Velliveedhiyar

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே – செய்யா
அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல்

செய்யாமொழி- வேதம். பொய்யாமொழி- திருக்குறள். செய்யா அதற்கு- வேதத்துக்கு. வேதம் அந்தணர்க்கு உரியது; குறள் எல்லோர்க்கும் பொது. 

இயற்கையால் பெறப்பட்ட ஒருவரால் இயற்றப் படாததான வேதங்கள் (எழுதாக் கற்பு என்று நற்றிணைப் பாடல் கூறும்) மற்றும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் கூறுவதும் பொருள் ஒன்றே. இவற்றுள் வேதங்கள் சொல் உச்சரிப்பு முறை, பொருள் குரு முகமாக என்பதால் அந்தணர்க்கே யுரியது; திருக்குறள் ஒருவர் விடாமல் அனைவரும் படித்த அறிவதற்கு உரியதாம்

The Vedas, which were not composed by any men  (Many sangam Literature says this and the Naritana song calls Vedas as Unwritten Scripture) and Thirukkural composed by Thriuvalluar tells the same things. Vedas, the way of pronouncing the word,  and the commentary are thaught by Teacher face of face and hence belongs to Brahmins; Thirukkural deserves to be read and understood by everyone



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை -24:மாங்குடி மருதனார் - Mangudi Marudhanar

ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி

வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்

உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளம் உருக்குமே

வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

ஓதற்கு-படிப்பதற்கு. அரிது ஆகி- அரிய பொருள்களை உடையதாகி. உள்ளுதொறும்- நினைக்குந் தோறும்.

திருவள்ளுவரின் இயற்றிய திருக்குறள் படிப்பதற்கு எளிதாகவும் பொருள் உணர்வதற்கு அரிதாகவும்; நான்கு வேதங்கள் கூறும் பொருளாக விளங்கி, நன்மை நோக்கி தீமையை விலக்குவோர் நினைக்கும் தோறும் அவர் உள்ளத்தை உருக்கும்.

Tirukkural composed by Thiruvalluvar is easy to read and has rare things to understand the meaning; Being the meaning of the four Vedas, he melts his soul whenever he thinks of those who turn away from evil towards good.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை -25: எறிச்சலூர் மலாடனார் - Ericchalur Malaadanar
பாயிரம் நான்கு இல்லறம் இருபான் பன்மூன்றே
தூயதுறவறம் ஒன்று ஊழாக – ஆய
அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து
மனித வாழ்வின் உறுதிப் பொருட்களை ஆராய்ந்து எழுதிய திருவள்ளுவர் அறத்துப்பால் இயல் பிரிப்பை புலவர் கூறுகிறார்- பாயிரம் என 4 அதிகாரமும் இல்லறவியல் என 20 அதிகாரமும், சிறப்பான துறவறவியல் 13 அதிகாரமும்; ஊழ் 1 அதிகாரம் என அறத்துப்பாலை நான்காக படிப்போருக்கு எளிமையாக அமைய இயல்களாக பிரித்து உரைத்தார்.

Thiruvalluvar studied and wrote Kural as Muppal about the essentials of human life, made the division of Virtue as- 4 chapters in Introduction; 20 Chapters in Family Domestic Life, 13 Chapters in Noble Asceticism;  to make it easy for the readers.

 



-- Edited by Admin on Saturday 20th of May 2023 06:50:55 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard