சீந்தி நீர்- சீந்தி என்னும் கொடியின் சாற்றில் எடுத்த சர்க்கரை. கண்டம் தெரிசுக்கு- துண்டாடிப் பொடிசெய்த சுக்கு. தேன் அளாய்- தேன் கலந்து. தலைக் குத்து- தலைவலி. காந்தி-சினந்து. மால் யானை- பெரிய யானையை உடையவனே. சாத்தற்கு தலைக்குத்து தீர்வு. சாத்தன்- சீத்தலைச் சாத்தனார். தீர்வு- தீர்ந்தது.
தன் எதிரி எனக் கோபித்து வெகு்ண்டு, மலையைக் குத்துகின்ற பெரிய யானை போலுள்ள மன்னனே! சீந்தி நீர்ச் சர்க்கரையையும் உடைத்த சுக்கையும், தேனோடு கலந்து முகர்ந்தால் தலைக்குத்து அதாவது தலைவலி உடையோர் யாராயினும் அவர்க்குத் தலைவலி தீர்ந்து போகும். திருவள்ளுவர் அருளிய திருக்குறளினாலே சீத்தலைச் (தான் கேட்கும் பாடலில் சொல்,பொருள் குற்றம் கேட்டல் தலையைக் சாத்தனார் குட்டி கொள்வதால் தலை வலி எபோதும் கொண்டவர் என்பது தொன்மக் கதை) சாத்தனார்க்குத் தலைக்குத்து/ தலைவலி இல்லாமல் போயிற்று.
A king whose enemies fear like a big elephant who is angry with his enemy and stabs the mountain! Siindi plant's sweet taken along with Dry Ginger powder mixed with honey and sniffed will relieve headaches for those who suffer from headache. Due to Thiruvalluvar's Kural on Seethalai (a mythological story is that a person always has a headache because of the words and meaning of the song he listens to, because Satan bites his head) Satanar got rid of his headache.
தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை வேளாது ஒழிதல் வியப்பன்று – வாளாதாம் அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார் முப்பால் மொழிமூழ்கு வார் தூய்மையான தாமரை மலர்கள் பூத்திருக்க நாளம் எனப்படும் தண்டு நிறைந்த குளத்தில் மூழ்கி நீராடுவார் வேறு தண்ணீரை விரும்ப மாட்டார்கள் ; அதுபோல வள்ளுவனாரின் முப்பால் எனும் திருக்குறள் நூலைக் கற்று ஆழ்ந்ந்தவர்கள் அதற்கு பிறகு வேறு பாக்கள் கொண்ட நூலை விரும்ப மாட்டார்கள்.
(கு-உ) தாள் ஆர்- கொடி அமைந்த. தண்ணீரை- வேறு தண்ணீரை. வேளாது ஒழிதல்- விரும்பாமை. வாளா- வீணாக. “வள்ளுவனார் முப்பால் மொழி மூழ்குவார் வாளாதாம் அப்பால் ஒருபாவை ஆய்பவோ” முப்பால் மொழி- திருக்குறள். அப்பால்- அதன்பின்.
இ-ள். தாள் ஆர் மலர்ப் பொய்கை குடைவார் தண்ணீரை வேளா தொழிதல் வியப்பு அன்று- நாளத்தோடு பொருந்திய தாமரை மலர்களை யுடைய ஒரு குளத்து நீரின்கண்ணே மூழ்குவோர் வேறு தண்ணீரை விரும்பா தொழிதல் வியப்பைச் செய்வதன்று; வள்ளுவனார் முப்பால் மொழி மூழ்குவார் தாம் வாளா அப்பால் ஒரு பாவை ஆய்பவோ- திருவள்ளுவரது முப்பால்களையுடைய நூலின் கண்ணே மூழ்குவார் தாம் வீணாக அப்பால் ஒரு நூலை விரும்புவரோ?
பரந்த பொருள் எல்லாம் பாரறிய வேறு தெரிந்து திறந்தொறும் சேரச் – சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல் வல்லார்ஆர் வள்ளுவர் அல்லால் உலக வாழ்வில் விரிவு பட்டு பல்வேறு பொருள் எல்லாம் உலக அனைத்து மக்களும் புரிந்து கொள்ள எளிதான சொற்களால் படிப்போர் விரித்து அறிந்த்டு கொள்ளுமாறு எளிமையாக் தந்த வல்லவர் வள்ளுவர் மட்டுமே ஆகும்
(கு-உ) பார் அறிய- உலகில் உள்ளோர் அறியும்படி. வேறு தெரிந்து- வெவ்வேறாக ஆராய்ந்து. திறந்தொறும் சேர- வகை வகையாகத் தொகுத்து. “வள்ளுவர் அல்லால் வல்லார் ஆர்” வல்லார்- வல்லவர்.
இ-ள். பரந்த பொருளெல்லாம் பார் அறிய வேறு தெரிந்து-வேதத்திலே ஒன்றோ டொன்று மயங்கி நின்ற நால் வகைப் பொருள்களையும் இப் பூமியி லுள்ளோர் அறிதற் பொருட்டு வேறாகப் பிரித்து,
திறந்தொறுஞ் சேரச் சுருங்கிய சொல்லால் பொருள் விளங்க விரித்துச் சொல்லுதல் வல்லார் - அது அது தனது தனது வகையோடு சேரும் படி சுருங்கிய சொல்லால் பொருள் விளங்க விரியும்படி வைத்துச் சொல்லுதல் வல்லார், வள்ளுவரல்லால் ஆர் - வள்ளுவ ரல்லது ஒருவருமில்லை.
'பார்' ஆகு பெயர். திறம்- அறம் முதலியவற்றின் கூறுபாடு. சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய அழகுகள் எப்படி இவரால் அமைக்கப்பட்டனவோ அப்படிப் பிறரால் அமைக்கப்படுதல் கூடாமை காட்டியதாயிற்று. நூலுக்கும் நாயனார்க்கும் தகுதி சொல்லியபடி,(௰௩)
கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன் கூநின்று அளந்த குறளென்ப – நூல்முறையான் வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார் தாம்நின்று அளந்த குறள் மணம் நிறைந்து தொங்கும் மாலை அணிந்த அரசே! முன்பு காசியப முனிவர் மகனாக பிறந்து குறுகிய சிறுவனாக மண்ணில் நின்று உலகத்தை அளந்தார் விஷ்ணு பெருமான்; இன்று திருவள்ளுவர் இயற்றித் தந்த குறள் கருதுக்கள் ஒருவனை மண்ணில் நல்ல வாழ்வினையும் விண்ணுலக வாழ்வு தரும் அளஅவில் அமைந்தது. (கு-உ) கான் நின்ற- மணம்பொருந்திய. தொங்கல்- மாலை. காசிபனார்- காசிப முனிவர். கூநின்று - பூமியில் நின்று. கு- பூமி. குறள்- வாமனம்.
திருவள்ளுவமாலை -15:கோதமனார் - Kothamanaar ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப் போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் – ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று அந்தணர் நான்கு வேதங்களையும் ஏட்டில் எழுதுவதில்லை, குரு முகமாக கேட்காது எழுத்தில் (பாணினி இலக்கணத்துள் அடங்காமையால் சரியாக புரிவது கடினம் என) எழுதினால் அவற்றின் வலிமை கெடுமென்று வாய்ப் பாடமாகவே சொல்லிக் காத்து வருவர்; திருவள்ளுவரின் திருக்குறளையோ ஏட்டில் எழுதினாலும் எவர் படித்தாலும் அதன் வலிமை குறையாத தன்மை கொண்டது . வேதங்கள் சொல்- உச்சரிப்பு என்ற ஒழுங்கினால் நிறைந்தது, குருகாமாகக் கற்றால் மட்டுமே முழுமையாக மேன்மை பெறலாம்; வள்ளுவரது திருக்குறள் கூறும் பொருளால் மேன்ம்னை உடையது அனைவரும் படித்து நன்மை பெறலாம்