தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவமாலை 6 -10


Guru

Status: Offline
Posts: 898
Date:
திருவள்ளுவமாலை 6 -10
Permalink  
 


திருவள்ளுவமாலை -6: பரணர் - Paranar
மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண் அடியால்
ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் - வால் அறிவின்
வள்ளுவரும் தம் குறள் வெண்பா அடியால் வையத்தார்
உள்ளுவ எல்லாம் அளந்தார் ஓர்ந்து

மாலும்- திருமாலும். குறளாய்- வாமனனாய் வந்து. வளர்ந்து- திரிவிக்கிரமனாய் வளர்ந்து. வால் அறிவின்- மெய்யறி வையுடைய. உள்ளுவ எல்லாம்- நினைப்பவைகளை எல்லாம்.

திருமால் (மாயோன்) எனும் விஷ்ணு பெருமான் வாமன அவதாரத்தில் தன்னை சிறு இளைய்வராக குறுக்கி காட்சி தந்து பின்னர் திரு விக்கிரமராக  இரண்டு பெரிய அடிகளால் உலகமனைத்தையும் விரும்பி அளந்தார்; முழுமையான மெய்யறிவு பெற்ற வள்ளுவரும் தன் இரண்டு அடி குறளால் உலகத்தில் வாழும் மக்கள் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் ஆராய்ந்து தெளிவான மெய்வழி தந்து அருளினார்.

வள்ளுவர் குறள் - 610ல் விஷ்ணுவின் இந்த வாமன அவதாரத்தை அடியளந்தன் என கூறி உள்ளார்

Lord Vishnu (Thirumal, Mayon) appeared as a small boy in Vamana avatar and then appeared as Lord Vikrama and measured the Whole World with two big feet; Valluvar, who has complete Knowledge of Truth and life, examined everything necessary for the life of the people living in the world with gave his two line kurals and gave clear path.

 

Valluvar in Kural- 610 used Lord Vishnu's Vamana Avatara by calling him Adiyalanthan 

 



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை-7 : நக்கீரர் - Nakkeerar
தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறம்முதலா அந்நான்கும் - ஏனோர்க்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என்ஆற்றும் மற்று

முழுது உணர்ந்து- எல்லா நூற்பொருள்களையும் அறிந்து. ஆனா- அழியாத அறம், பொருள், இன்பம், வீடு என்பன நான்கு. ஏனோருக்கு- மற்றவர்களுக்கு. ஊழின்- முறைப்படி. மேகமும் வள்ளுவரும் ஒப்பாவர். ‘

தானே எல்லா நூற்பொருள் அனைத்தையும் கற்று அறிந்து, இனிமையான தமிழில் குறள் வெண்பாவினால் வாழ்வின் உறூதிப் பொருள்களான அறம் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கினையும்- அதனை அறியாதார்க்கு முறையாக உரைத்த நம் ஆசிரியராகிய வள்ளுவருக்கும், உலகத்து உயிர்களைக் காக்கும் நீரை மழையாகப் தரும் மேகத்திற்கும் இந்த உலகம் நன்றியாக என கைம்மாறு எதுவும் செய்ய முடியாது. ஆகையால், வள்ளுவரையும் மேகங்களையும் இந்த உலகோர் வாழ்த்தி வணங்குவோம்!

The world can do nothing but thanks to Valluvar, who has learned all the scirpture himself, and in Cool Tamil presented as Kural Venba, the four things of life,Virtue, Wealth, Pleasure, Salvation; as similar the cloud that gives water as rain that protects the lives of the world. Therefore, let us salute and worship Valluvar and the clouds!



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

 திருவள்ளுவமாலை -8: மாமூலனார் - Mamulanar

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அந்நான்கின்
திறம் தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன் வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடையார்

திறம் தெரிந்து- வகைகளை அறிந்து. தேவை-தேவரை (திருவள்ளுவர்);  வள்ளுவன் என்பான்- வள்ளுவன்தானே என்று இகழ்ந்து பேசுவோன்.

மனித வாழ்வின் உறுதிப்பொருள்களான அறம்,பொருள், இன்பம் &மோட்சம் என்ற நான்கின் தன்மையைத் தெரிந்து தெளிவாகச் சொல்லி அருளிய திருவள்ளுவ தேவரை, மறந்து கூட குறள் அருளியா ஆசிரியரை வள்ளுவ மனிதன் என்று கூறிபவனை ஒரு முட்டாள் என அறிவுடைய சான்றோர் கூறி அவன் சொல்லும் எதையும் ஏற்க மாட்டார்கள்.

(வள்ளுவர் என்பது தமிழில் ஒரு ஜாதியைக் குறிக்கும் சொல்லும் ஆகும்)

Thiruvalluvar who learnt every scripture and gave us all Four essentials of human life, namely Virtue, Wealth, Pleasure and Moksha, and if anyone calling him Kural author Valluva man would be said as fool and  Knowledgeable witnesses will not accept anything

(Valluvar is a Tamil word for a caste)



-- Edited by Admin on Saturday 20th of May 2023 12:17:12 AM

__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை -9: கல்லாடர் - Kalladar

ஒன்றே பொருள் எனின் வேறு என்ப வேறு எனின்
நன்று என்ப ஆறு சமயத்தார் - நன்று என
எப்பாலவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் பொழிந்த மொழி. (09)

அறுவகைச் சமயம்- .1.சாங்கியம், 2. யோகம், 3. நியாயம், 4. வைசேஷிகம், 5. உத்தரமீமாம்சை, 6. பூர்வமீமாம்சை: என்பன. எப்பாலவரும்- எவ்வகைப் பிரிவினரும். இயைபவே-ஒத்துக்கொள்ளுவார்கள்.

இம்மண்ணின் உள்ள ஆறு (தத்துவ தரிசன அடைப்படையில் 1. சாங்கியம், 2. யோகம், 3. நியாயம், 4. வைசேஷிகம், 5. உத்தரமீமாம்சை, 6. பூர்வமீமாம்சை: அல்லது பரம்பொருள் என தான் வழிபடும் வரிசையில் 1. சைவம்; 2. வைஷ்ணவம்; 3. சாக்தம்; 4. கௌமாரம்; 5.காணபத்யம் & . சௌரம் ) சமயங்கள்.- அந்த சமயத்தார் ஒவ்வொரு மத்தினரும் ஒரு பொருளைக் கூறினால், மற்ற மதத்தவர் அதனை மறுத்து,வேறு கூறுவார்கள். பிறிதொருவர் வேறு என்று கூறினால், இல்லை அதுவன்று என்பார்கள்! இவ்வாறு தாம் கூறும் கருத்தில் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு நிற்பர் ஆறுவகைச்சமயத்தார். ஆனால், எல்லா சமயத்தாரும் வள்ளுவனார் முப்பாலில் மொழிந்தவற்றை, முரண்படாமல், நன்று என மனமிசைந்து ஒத்துக்கொள்ளும் சிறப்புடையது.

(முதலில் அறு சமயம் என்ற புலவர் கல்லாடனார் - பிற்பகுதியில் எப்பாலரும் என்றதால் - உலகைப் படைத்த பரம்பொருளை ஏற்காத சமண, பௌத்தரும் ஏற்கும்படி என அறிஞர்கள் விரிப்பர்)

We have six religions by Philosophy 1. Sangyam, 2. Yoga, 3. Nyayam, 4. Vaiseshikam, 5. Uttaramimamsa, 6. Purvamimamsa: (or in the order in which it is worshiped as God Almighty 1. Saivism; 2. Vaishnavism; 3. Saktam; 4 .Kaumaram; 5.Ganapadyam & .Sauram) ) - If each religion says one thing, the other religion will deny it and say something else. If someone else says it's different, they say it's not! In this way, the opinions he expressed contradicted each other and divided them into six categories. But it is special that people of all religions agree with Valluvanar Mupalil as good without contradicting them.

(Firstly the poet mentioned Six Religionist  - later as Eppalar -all - the poet here says  the Jains and Buddhists who does not accept the Creator God of the world also accept Kural)

 



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

 திருவள்ளுவமாலை -10 சீத்தலைச் சாத்தனார் - Seethalai Saathanaar

மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்

மும் முரசும் முத் தமிழும் முக் கொடியும் - மும்மாவும்

தாம் உடைய மன்னர் தட முடி மேல் தார் அன்றோ

பா முறை தேர் வள்ளுவர் முப் பால்

(கு-உ) மும்மலை- கொல்லிமலை, நேரிமலை, பொதிய மலை. முந்நாடு- சேர, சோழ, பாண்டியநாடு. முந்நதி- தாமிர பரணி, காவிரி, வையை. முப்பதி- வஞ்சி, புகார் மதுரை. மும்முரசு- மங்கலமுரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு. முத்தமிழ்-இயல், இசை, நாடகம். முக்கொடி- வில், புலி, மீன். மும்மா-கனவட்டம், பாடலம், கோரம் என்னும் குதிரைகள். மன்னர்-மூவேந்தர்கள். தார்- மாலை.

தமிழக மூவேந்தர் சேர, சோழ, பாண்டியர்கள் மூன்று மலைகளைக் கொண்டவர்கள். (சேரர் கொல்லிமலை, சோழன் நேரிமலை, பாண்டியன் பொதிகை மலை); மூன்று நாடு உடையவர்கள். (சேரநாடு, சோழநாடு, பாண்டிநாடு); மூன்று ஆறு உடையவர்கள்.(சேரர் ஆன்பொருநை, சோழர் காவிரி, பாண்டியர் வையை); மூன்று தலைநகரங்கள் கொண்டவர்கள்(சேரர் வஞ்சி, சோழர்- உறையூர், பாண்டியர் மதுரை); மூன்று முரசுகளை உடையவர்கள்.( மங்கல முரசு, வெற்றி முரசு, கொடை முரசு); மூன்று தமிழ் உடையவர்கள். ( இயல் இசை நாடகம்) அவர்கள் முக்கொடி உடையவர்கள் (சேரர் விற்கொடி, சோழர் புலிக்கொடி, பாண்டியர் மீன் கொடி); அவர்கள் மூன்று குதிரைகள் கொண்டவர்கள். (சேரர்- கனவட்டம், சோழர்- பாடலம், பாண்டியர்- கோரம் என்பன). இத்தகைய சிறப்புகளைக் கொண்ட(மும்மலை, முந்நாடு, முந்நதி, முப்பதி, மும்முரசு, முத்தமிழ், முக்கொடி, மும்மா) சேர சோழ பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் பெருமை மிக்கமுடிமேல் அணிகின்ற மாலை மூன்று பால்களையுடைய(அறம், பொருள், காமம்) திருக்குறள் எனும் தமிழ்ப் பாமாலை.

 Tamil Nadu 3 big kings (Movender-Chera, Chola and Pandyas)

 have three different hills. (Cherar Kollimalai, Cholan Nerimalai, Pandian Potikaimalai); have 3 countries. (Chera Nadu, Chola Nadu, Pandi Nadu); Three rivers (Cherar Anborunai, Cholar Cauvery, Pandyar Vaikai); have 3 Capitals (Cherar Vanji, Cholar-Uraiyur, Pandyar Madurai); have 3 Drums (Mangala murasu, Vetri murasu, Kodai murasu);  Use 3 varieties of Tamil (Iyal Music Drama) have 3-flags (Cherar Bow flag, Chola Tiger flag, Pandiyar Fish flag); have 3horses. (Sherar-Kanavattam, Cholar-Padalam, Pandiyar-Koram). With such distinct features (Mummalai, Munnadu, Munnadi, Mupadhi, Mummurasu, Muthamil, Mukkodi, Mumma) Chera Chola Pandiyar all theree wears the garland of Muppal (Aram, Artha, Kamam) with pride.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard