தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவமாலை-1-5


Guru

Status: Offline
Posts: 1049
Date:
திருவள்ளுவமாலை-1-5
Permalink  
 


திருவள்ளுவமாலை-1: அசரீரி -Asareeri
திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு
உருத்தகு நல்பலகை ஒக்க - இருக்க
உருத்திரசன்மர் என உரைத்து வானில்
ஒருக்க ஓ என்றது ஓர் சொல்

உருத்தகு- உருவிலே சிறந்த:  நல்பலகை-நல்ல சங்கப்பலகையிலே. “உருத்திர சன்மர் ஒக்க இருக்க” உருத்திரசன்மர் -முருகன் அவதாரமாகிய (மதுரை உப்பூரிகுடி கிழார் மகன்-தொன்மங்கள்படி சிவபெருமான் சாபத்தால் முருகப் பெருமானே வணிகர் ஒருவருக்கு ஊமைப் பிள்ளையாகப் பிறந்து பிறகு முருகன் அருளால் பேசத் தொடங்கியவர்) - அகநானூறு தொகுத்தவர்) ; ஒரு புலவர். ஒருக்க-ஒன்றுபடும்படி. ஓஎன்றது-ஓவென்று ஒலித்தது.

தெய்வ அருள் பெற்ற திருவள்ளுவர் தன் குறளை சங்கப் பலகையில் அமர்ந்து அரங்கேற்றம் செய்ய அவருக்கு சமமாக உருவிலே சிறப்பான அழகு கொண்ட முருகன் அவதாரமாகிய புலவர் உருத்திரசன்மர் ஒருவரே சமமானவர் என்றபடியாக ஓர் வான் குரல் எழுந்து ஒலித்தது.

Thiruvalluvar, who had the grace of God, sat on his Tamil Sangam board to present his Thirukkural  'A heavenly voice' said only Poet Urithira sanmanar (who was the avatar of Lord Murugan), equal to him,who was equally beautiful in appearance.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை - நாமகள் - 2 (Goddess Saraswathi)
நாடா முதல் நான்மறை நான்முகன் நாவில்
பாடா இடைப் பாரதம் பகர்ந்தேன் - கூடாரை
எள்ளிய வென்றி இலங்கு இலை வேல் மாற பின்
வள்ளுவன் வாயது என் வாக்கு

கூடார்-பகைவர். இலங்கு- விளங்குகின்ற. மாற- பாண்டியனே. நாடா-நாடி; ஆராய்ந்து. நாவில்- நாவிலிருந்துகொண்டு. பாடா- பாடி. இடை- இடைக்காலத்தில்.
பாண்டிய அரசனிடம் கல்விக்கான இறைவி சரஸ்வதி (நாமகள்) கூறுயது; உன்னை எதிர்த்து வரும் பகைவர்களை எல்லாம் வெற்றி கொண்டு புறம் காட்டி ஓட வைக்கும் வேல் படை கொண்ட அரசன் மாறனே - ஆரம்ப காலத்தில் நான், நான்முகனுடைய (கணவர் பிரம்மா) நாவில் இருந்து நான்கு வேதங்களை பாடினேன். பின் இடைக்காலத்திலே மகா பாரதம் எனும் ஐந்தாம் வேதத்தினை (வியாசர் மூலமாக) அருளினேன். அதன்பின் கடைசியாக இப்பொழுது தமிழில் திருக்குறளை வள்ளுவனின் வாய்மொழி மூலம் என் வாக்காக உலகுக்கு நான் உரைத்தேன்.

Goddess Saraswati (names) of education told the Pandya king; Mara, king with a mighty army of swords, who defeats all enemies who come against you - In the beginning, I chanted the four Vedas from the tongue of Four headed Brahmma Nanmuga (husband); Later in the Middle Ages - Mahabharata the fifth Veda   (through Vyasa)  was revealed. And then finally now I addressed the world as my voice through the Thirukkural by Valluvan in Tamil.



-- Edited by Admin on Sunday 14th of May 2023 04:45:43 AM

__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை -3: இறையனார்-I raiyanar (Lord Shiva)

என்றும் புலராது யாணர் நாள் செல்லுகினும்
நின்று அலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மையதாய்க் - குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன் புலவன் வள்ளுவன் வாய்ச் சொல்

 என்றும் புலராது- எக்காலத்திலும் வாடாமல். யாணர் நாள்- நெடுங் காலம். பிலிற்றும்- சிந்தும். போன்ம்- போலும்.

இறைவன் சிவபெருமான் கூறுவது- தேவர் உலக கற்பக மரம் என்றும் இளம் தளிர் இலைகள் கொண்டும் என்றுமே வாடாத அழகாக காட்சி தரும் கற்பகமலர் பூத்தும் தொடர்ந்து தேனை தரும் தன்மை உடையது போலவே வள்ளுவர் இயற்றிய குறள் என்றும் நிலைத்து மக்களுக்கு பலன் தரும் நூல்

Lord Shiva Says - In the World of Celestials we have Campour Tree and the Karpaka flower which never fades with its young shoots leaves and the beautiful Karpaka malar flower constantly gives honey and in the similar way Valluvar's Kural is a book that will benefit the people forever



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை -4: உக்கிரப் பெருவழுதியார் - Ukkira Peruvaluthiyar

நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூல்முறையை
வந்திக்க சென்னி வாய் வாழ்த்துக நல் நெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி

(கு- உ) முப்பொருள் - அறம், பொருள், இன்பம். நூல் முறையை- நூலின் சிறப்பை. வந்திக்க- வணங்குக. சென்னி- தலை
பாண்டிய மன்னர் உக்கிரப் பெருவழுதி பாடியதாக உள்ள பாடல் -நான்முகத்தோனாகிய பிரம்மதேவனே தன்னை மறைத்துக்கொண்டு இவ்வுலகில் வள்ளுவராகப் பிறந்து நான்கு வேதங்கள் காட்டும் மனித வாழ்வின் மூன்று உறுதி பொரு்ள்களான அறம், பொருள் இன்பம் எனும் இந்
 நூலினைத் உலகுக்குத் தந்தான். இந்த திருமுறை நூலை என் தலை வணங்கட்டும்; என் வாய் வாழ்த்தட்டும்; என் நெஞ்சம் சிந்திக்க அதாவது, தியானிக்கட்டும்; என் செவியானது கேட்டுக்கொண்டே இருக்கட்டும்.

The song by the Pandya king Ukra Peruvaluthi - The four headedd Lord Brahma, hiding himself, took birth in this world as Thorivalluvar and gave this book to the world, namely, virtue and Wealth and Pleasure, the three principles of human life shown in the four Vedas. Let my head bow down to this sacred book; Let my mouth praise and sing; Let my heart think, that is, meditate; Let my ears listen.

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை -5: கபிலர் - Kapilar

தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி (௫)
மனை அளகு- மனையில் உள்ள பறவைகள். வள்ளைக்கு- உலக்கைப் பாட்டைக் கேட்டு. வெள்ளைக் குறள்பா- வெண்பாவாகிய குறள் பாட்டில் உள்ள. விரி- விரிந்த பொருள். சிறு புல் நீர்- சிறிய புல் நுனியில் உள்ள நீர். பனை அளவு- பனையின் உருவை. படித்து ஆல்- தன்மையை உடையது.
வளம் மிக்க நாட்டையுடைய மன்னனே.- உன் நாட்டில் வீடுகளில் நெல் குத்த உலக்கை இடிக்கும் பாட்டை கேட்டு உறங்கும் பறவைகள் உள்ளன; தினை அரிசியின் உள்ளே போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனை மரத்தின் தோற்றத்தைத் தன்னுள் அடக்கிக் காட்டுவது போல்; வள்ளுவனார் இயற்றி உள்ள குறள் வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கி உள்ள பொருளோ படிப்பவருக்கு விரிந்து பொருள் தரும்

 O king of a prosperous country.- There are birds in your country who sleep listening to the song of rice threshing in the houses; As a drop of dew on the tip of a small blade of grass, which does not fit inside a millet rice, suppresses within itself the appearance of a nearby tall palm tree; Kural Venpa composed by Valluvanar is small in size and the material contained in it expands and gives meaning to the reader.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard