தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளில் இடைச்செருகல்


Guru

Status: Offline
Posts: 898
Date:
திருக்குறளில் இடைச்செருகல்
Permalink  
 


திருக்குறளின் மெய்யியல் மரபை மிஅக்த் தெளிவாக இந்த ஔவையாரின் நலவழி பாடல் உறுதியாகக் கூறுகிறது

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். (40) 14ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய நல்வழி
திருவள்ளுவத் தேவர் இயற்றிய திருக்குறளும், திரு நான்மறை எனப் போற்றப்படும், ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களின் முடிபும், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரத் தமிழும், மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார், திருவாசகம் ஆகியனவும், திருமூலர் வாக்காகிய திருமந்திரமும் சொல்லும் கருத்துக்கள் எல்லாமே ஒரே கருத்தைத்தான் என்று உணர்ந்துகொள்ள வேண்டும்.
 
தேவர் குறளும், திரு நான்மறை முடிவும், மூவர் தமிழும், முனிமொழியும், கோவை, திருவாசகமும், திருமூலர் சொல்லும், ஒருவாசகம் என்று உணர்.
 

தமிழ் மொழியியல், சொல்- புது சொற்கள், யாப்பு வளர்ச்சி அடிப்படையில் திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் எழுந்ததே -தமிழ் சமணர் மணக்குடவர் உரை மற்றும் பெரும்பாலான திருவள்ளுவமாலைப் பாடல்கள்.

எட்டுத்தொகைஐ நுல்களிற்கு கடவுள் வாழ்த்து பாடல் இயற்றிய பாரதம் பாடிய பெருந்தேவனார் உட்பட பலர் பெயரில் திருவள்ளுவமாலைப் பாடல்கள் அமைந்துள்ளன

பாரதம் பாடிய பெருந்தேவனார்.

எப்பொருளும் யாரு மியல்பி னறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பவரு-முப்பாற்குப்
பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்.

இ-ள். பாரதம் சீ ராம கதை மனுப் பண்டை மறை நேர்வன - பாரதம் பழைய சீ ராம கதையையும், மனு மிருதி பழைய வேதத்தையும் ஒப்பன வாகும்; எப் பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச் செப்பிய வள்ளுவர் செப்ப வரும் முப்பாற்கு நிகர் இல்லை - எவ் வகைப்பட்ட பொருள்களையும் எவ்வகையோரும் அவற்றின் தன்மையோடு அறிய அவர்க்குச் சொல்லும் படிக்குத் திருவள்ளுவர் சொல்லலால் வந்த திருக்குறளுக்கு உவமானமாகத் தக்கது ஒன்றில்லை.

'மற்று' அசை. அறிதற் கரிய வேதாந்தப் பொருளு மென்றற்கு எப் பொருளு மென்றும், உயர் குலத்தாரேயன்றி ஏனையோரு மென்றற்கு யாரு மென்றும், ஐயந் திரி பின்றி அறிய வென்றற்கு இயல்பி னறிவுற வென்றும், இதுவே சுருதி குரு விரண்டு மா மென்றற்குச் செப்பிய வென்றும் கூறினார். பண்டை யென்பது சீ ராம கதைக்குங் கூட்டுக. கதா ரூபமா யிருந்து பாரத ராமாயணமெனவும், விதி ரூபமா யிருந்து சுருதி மிருதி யெனவும் கூட்டிச் சொல்லப்படுதலால், உவமான உவமேயங்க ளாதல் அறிக. எப் பொருளும் யாரு மியல்பி னறிவுறச் செப்புதல் வேதத்திற் கின்மையால், முன் முப்பாலின் மிக்க மொழி யென்ற அதனாற் பெறப்பட்ட வேதத்தி னொப்புமையை மறுத்தபடி.

எல்லாப்பொருளையும் எல்லாரும் உள்ளவாறறியுமாறு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்குப், பாரதம், இராமாயணம் மனுதருமசாத்திரம், நால் வேதம் ஆகிய நான்கே ஒப்பாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருவள்ளுவர் திருக்குறளை முழுமையாக கற்றவர்கள்- அது ஒரு சனாதன நூல் என்பதை ஏற்கின்றனர். மிகச் சில அறிஞர்கள் அறத்துப் பாலில் உள்ள கொல்லாமை, புலால் மறுத்தல் அதிகாரங்களை மிகைப் படுத்தியும், நிகண்டுகளை தன்னிச்சையாக எடுத்து வள்ளுவம் சமண நூல் என்பதும் தொடர்கிறது. தமிழ் சமணர் மணக்குடவர் திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டின் உரையில் திருக்குறள் கடவுள் வாழ்த்து உலகைப் படைத்த கடவுளைக் குறிக்கிறது என்ற நிலையில் காலனி ஆதிக்க மதமாற்ற நச்சு வழி பொய்களில் ஆழ்ந்த 20ம் நூற்றாண்டு உரைகளால் பயன் இல்லை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard