திருக்குறளின் மெய்யியல் மரபை மிஅக்த் தெளிவாக இந்த ஔவையாரின் நலவழி பாடல் உறுதியாகக் கூறுகிறது
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். (40) 14ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய நல்வழி
திருவள்ளுவத் தேவர் இயற்றிய திருக்குறளும், திரு நான்மறை எனப் போற்றப்படும், ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களின் முடிபும், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரத் தமிழும், மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார், திருவாசகம் ஆகியனவும், திருமூலர் வாக்காகிய திருமந்திரமும் சொல்லும் கருத்துக்கள் எல்லாமே ஒரே கருத்தைத்தான் என்று உணர்ந்துகொள்ள வேண்டும்.
தேவர் குறளும், திரு நான்மறை முடிவும், மூவர் தமிழும், முனிமொழியும், கோவை, திருவாசகமும், திருமூலர் சொல்லும், ஒருவாசகம் என்று உணர்.
தமிழ் மொழியியல், சொல்- புது சொற்கள், யாப்பு வளர்ச்சி அடிப்படையில் திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் எழுந்ததே -தமிழ் சமணர் மணக்குடவர் உரை மற்றும் பெரும்பாலான திருவள்ளுவமாலைப் பாடல்கள்.
எட்டுத்தொகைஐ நுல்களிற்கு கடவுள் வாழ்த்து பாடல் இயற்றிய பாரதம் பாடிய பெருந்தேவனார் உட்பட பலர் பெயரில் திருவள்ளுவமாலைப் பாடல்கள் அமைந்துள்ளன
திருவள்ளுவர் திருக்குறளை முழுமையாக கற்றவர்கள்- அது ஒரு சனாதன நூல் என்பதை ஏற்கின்றனர். மிகச் சில அறிஞர்கள் அறத்துப் பாலில் உள்ள கொல்லாமை, புலால் மறுத்தல் அதிகாரங்களை மிகைப் படுத்தியும், நிகண்டுகளை தன்னிச்சையாக எடுத்து வள்ளுவம் சமண நூல் என்பதும் தொடர்கிறது. தமிழ் சமணர் மணக்குடவர் திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டின் உரையில் திருக்குறள் கடவுள் வாழ்த்து உலகைப் படைத்த கடவுளைக் குறிக்கிறது என்ற நிலையில் காலனி ஆதிக்க மதமாற்ற நச்சு வழி பொய்களில் ஆழ்ந்த 20ம் நூற்றாண்டு உரைகளால் பயன் இல்லை