தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவமாலை 01-10


Guru

Status: Offline
Posts: 1049
Date:
திருவள்ளுவமாலை 01-10
Permalink  
 


  Asareeri அசரீரி  திருவள்ளுவமாலை - அசரீரி - 1
திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு
உருத்தகு நற்பலகை ஒக்க – இருக்க
உருத்திர சன்மர் எனஉரைத்து வானில்
ஒருக்கஓ என்றதுஓர் சொல்

Thiruvalluva Maalai - Asareeri - 1
thiruththaku theivath thiruval luvaroadu
uruththaku natrpalakai okka – irukka
uruththira chanmar yenauraiththu vaanil
orukkaoa yenrathuoar sol

உடம்பிலி (அசரீரி) - விளக்கம்  (பொழிப்புரை) உருத்திரசர்மன் கழகப் பலகையிடத்துத் திருவள்ளுவருடன் ஒக்கவிருக்க வென்று வானில் ஓர் உரையெழுந்த்து.

Freehand Translation*
Auspicious divine thiruval luvar
comparable to almighty himself -
so said a voice thundering
from the sky * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Asareeri, yet !

More from Wikisource
பல இடர்ப்பாடுகள், எதிர்ப்புகளுக்கிடையே மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் தம் முப்பாலை(திருக்குறளுக்கு ஆசிரியர் இட்டபெயர்) அரங்கேற்றினார். அரங்கேற்றத்தின் முடிவில் வானத்திலிருந்து ஓர் அசரீரிச்சொல் பாராட்டி எழுந்தது. அதுகுறித்து எழுந்த பாடலே இது.
பதப்பிரிப்பு
திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு
உருத்தகு நல்பலகை ஒக்க - இருக்க
உருத்திரசன்மர் என உரைத்து வானில்
ஒருக்க ஓ என்றது ஓர் சொல்
கருத்துரை
‘அருள்திரு’ என்று அழைக்கப்படும் தகுதியுடைய (அதாவது தெய்வம் என்பதாம்) தெய்வத் திருவள்ளுவரோடு, சங்கப்பலகையில் உருத்திரசன்மர் ஒருவரே ஏறியிருந்திடுக என்று ஓர் சொல், வானத்திலிருந்து ‘ஓ’ என்று இரைத்து (ஆரவாரத்தோடு) எழுந்து ஒலித்தது.

தெய்வ அருள் பெற்ற திருவள்ளுவர் தன் குறளை சங்கப் பலகையில் அமர்ந்து அரங்கேற்றம் செய்ய அவருக்கு சமமாக உருத்திரசன்மர்( மதுரை உப்பூரிகுடி கிழார் மகன்பிறப்பாக் பேச்சுத் திறன் இல்லாமல் இருந்து பிறகு முருகன் அருளால் பெசத் தொடங்கியவர் - அகநானூறு தொகுத்தவர்) என்றபடியாக ஓர் வான் குரல் எழுந்து ஒலித்தது.

தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் 4-வது தலம் எருக்கத்தம்புலியூர் நீலகண்டேஸ்வரர் திருக்கோயில். சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலம் இது. தற்போது ராஜேந்திரப் பட்டினம் என அழைக்கப்படும் இவ்வூர், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது.

ஈசன் வேதாகமத்தை உபதேசித்தபோது, அதைக் கவனிக்கத் தவறியதால் ஈசன் சக்தியைச் சபித்தார். இதனால் கோபித்த முருகப்பெருமான், தன் அன்னை சபிக்கப்பட காரணமாக இருந்த வேதாகமங்களைக் கடலில் வீசினார். ஈசன் அவரையும் சபித்தார். அதன் விளைவாக வணிகர் ஒருவருக்கு ஊமைப் பிள்ளையாகப் பிறந்தார் கந்தன். ‘உருத்திரசன்மர்’ என்ற பெயரில் அவதரித்த முருகன் சாபம் நீங்க, பல்வேறு தலங்களுக்குச் சென்று வழிபட்டார்.

நிறைவில் எருக்கத்தம் புலியூருக்கு வந்து வழிபட்டு பேசும் திறன் பெற்றார். உருத்திரசன்மர் வழிபட்டதால் ஈசன் ‘குமார ஸ்வாமி’ ஆனார். இன்றும் உருத்திரசன்மரின் உருவம் மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. பேச்சுத் திறன் குறைந்தவர்கள், இங்கு வந்து வழிபட்டால் நலம் பெறுவர் என்பது நம்பிக்கை.

திருத்தக்க தெய்வத்த திருவள்ளுவரோடு அருட்செல்வத்தையும் அதற்குத் தக்க தெய்வத்தன்மையும் உடைய திருவள்ளுவரோடு ஒருத்தகு நல்பலகை உருத்திர சம்மர் ஒ*** இருக்க என உரைத்து அவர் இருப்பதற்கு தனது உருவத்தினாலே தக்க நல்ல சங்கப் பலகை எடுத்து உருத்திர சதன் ஒருவரே ஒப்ப ஏறி இருக்க எனக்கூறி வானில் உருக்க ஒரு சொல் ஓ என்றது ஆகாசத்தில் இருந்து அவ்விடத்து புலவர் கருத்தை எல்லாம் ஒற்றுமை செய்யும் படி ஒரு வாக்கியம் ஓ என்று இறைந்து எழுந்தது என்வாறு
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் என்ப ஆகலின் திரு என்பதற்கு அப்பொருள் உரைக்கப்பட்டது தெய்வத்தன்மை தெய்வத்தின் அவதாரமாய் விளங்குக தெய்வத்தன்மை இல்லார்க்கு அருள் உளதாயினும் அதனாலே பெரும் பையன் விளையாமையும் தகுதி சொல்லப்பட்டது திருவள்ளுவர் என்னும் பொருள் திரு என்னும் உயர்வையும் வள்ளுவர் என்பது வன்மையை உடையவர் என்பதையும் விளக்கி நின்றன ஆகலின் அது வேதத்தின் வேதத்தில் இலை மறை காய்கள் போல பல இடங்களில் மறைந்து வெளிப்படாது இருந்த மெய்ப்பொருளை எல்லாம் தொகுத்து உலகத்தார்க்கு கொடுத்தருளச் செய்தவர் என்னும் காரணம் பற்றி வந்த பெயர் ஆயிற்று முதல் நிலை உசாரியை முதல் நிலைக்குப் பொருள் ஈகை உருத்திரச் உருத்திரனால் அடைந்த சன்மத்தை உடையவர் என விதியும் அவர் முருகக்கடவுள்ளது அவர் திரு அவதாரமாய் வணிகர் மரபில் தோன்றிய மூங்கை பிள்ளையார் அசரீதி
அருவமாய் எங்கும் நிறைந்துள்ள முதல் தெய்வம் அரங்கேற்ற தொடங்கிய காலத்து தெய்வப்புலவரோடு ஒப்ப இருந்து கேட்டதற்கு தகுதி உடையோர் யார் என யாவரும் எண்ணமுற்று நின்ற வழி அசரீரி பாக்கியம் பிறந்தது என்றது என படர்க்கை வினையின் வினையாக கூறலின் ஆண்டு நின்று கேட்ட புலவருள் ஒருவர் இதனை இங்கனம் பாடலாகச் செய்தார் என்று அறிக



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

Naamagal (Goddess Saraswathi) நாமகள்  திருவள்ளுவமாலை - நாமகள் - 2
நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் – கூடாரை
எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு

Thiruvalluva Maalai - Naamagal - 2
naataa muthalnaan marainaan mukannaavil
paataa itaippaa rathampakarndhthaen – kootaarai
yelliya vaenri ilangkilaivael maarapin
valluvan vaayathuyen vaakku

நாமகள் - விளக்கம்
(பொழிப்புரை) பாண்டிய வேந்தே!நான் படைப்புக் காலத்தில் நான்முகன் நாவிலிருந்து நான்மறை பாடினேன்; இடைக்காலத்திற் பாரதம் பாடினேன்;இன்று வள்ளுவன் வாயது என் பாட்டு.
Freehand Translation*
Hey pandya ever victorious over foes; Before, I
manifested as Brahman mouthed Vedas
Then I came down as Bharatham
Here stand I, as Valluvan’s work
Pandya king is regarded as someone who could laugh at his foes strength - implying his prowess
* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Naamagal, yet!

More from Wikisource
நாமகள் என்பது சரசுவதியைக்குறிக்கும். அந்த நாமகளே- சரசுவதியே- கல்விக்கடவுளே திருக்குறளின் சிறப்பை உரைக்கின்றாள்.
மூலம்
நாடா முதனான் மறைநான் முகனாவிற் பாடா விடைப்பார தம்பகர்ந்தேன்- கூடாரை யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின் வள்ளுவன் வாயதென் வாக்கு (02)
பதப்பிரிப்பு
நாடா முதல் நான்மறை நான்முகன் நாவில்
பாடா இடைப் பாரதம் பகர்ந்தேன் - கூடாரை
எள்ளிய வென்றி இலங்கு இலை வேல் மாற பின்
வள்ளுவன் வாயது என் வாக்கு
கருத்துரை மாறனே(பாண்டிய மன்னனே) படைப்புக்கால முதலிலே நான், நான்முகனுடைய நாவில் இருந்து நான்மறைகளை- நான்குவேதங்களை- பாடினேன். பின் இடைக்காலத்திலே பாரதம் எனும் ஐந்தாம் வேதத்தினை அருளினேன். அதன்பின் கடைசியாக இப்பொழுது தமிழ்வேதமாகிய திருக்குறளை வள்ளுவனின் வாய்மொழி மூலம் என்வாக்காக (வேதவாக்காக) உலகுக்கு நான் உரைத்தேன்.
இதுவே இறுதிவேதம் என்பதுகுறிப்பு; அதாவது இதுவே முழுமைபெற்ற வேதம் என்பதாம். முதல், இடை என்பதை நோக்குக.

கூடார எளிய வென்றி இலங்கு இலை வேல் மாற பகைவரை புறம் கொடுத்து செய்து இகழ்ந்த வெற்றியை உண்டாக்கி விளங்கா நின்ற இலை போலும் வேர் படையை உண்டைய பாண்டிய அரசனே
நாடா உலகத்தார் விதிவிலக்குகளை அறிந்து உய்யும் வழியை நாடி முதல் நான்முகன் நாவில் நான் வரை படைப்பு காலத்தில் பிரம்மனது நாவிலிருந்து இருக்கு முதலிய நான்கு வேதங்களை பாடி இடைபாரதம் பகர்ந்தேன் நடுவான காலத்தில் பாரதமாகிய வேதத்தை கூறினேன். பின் என் வாக்கு வள்ளுவன் வயது அதற்கு பிற்பட்ட இக்காலத்திலே என் வாக்கு திருடு திருக்குறளாகிய வேதத்தை சொல்லி வள்ளுவன் வாயின் கண்டதாயிற்று
தன் கணவனாகளின் நான்முகன் நாவில் என்றும் அவன் அவதாரமாகலின் வள்ளுவன் வாய் வாய் தென வாக்கு என்றும் கூறினாள் பாரதம் யாசரை கொண்டு சொல்லப்பட்டது இதனால் நான்மறை பூர்வ வேதமும் பாரதம் மதிய வேதமும் திருக்குறள் உத்தரவேதம் என்று ஆயிற்று வேதம் மூவகைத்து என்பதும் இவற்றது தோற்ற முறையால் இது வாக்கிய பிரமாணத்தில் சிறைப்படைத்து என்பதும் சொல்லியபடி



-- Edited by Admin on Thursday 4th of May 2023 09:47:46 AM

__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

Iraiyanar (Lord Shiva)  இறையனார்   திருவள்ளுவமாலை - இறையனார் - 3
என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்- குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்

Thiruvalluva Maalai - Iraiyanar - 3
yenrum pularaa thiyaanarnaat sellukinum
ninralarndhthu thaenpilitrrum neermaiyathaaik- kunraatha
sendhthalirk katrpakaththin raeivath thirumalarponm
manpulavan valluvanvaaich sol

இறையனார் - விளக்கம்
(பொ-ரை.) திருவள்ளுவரின் திருக்குறள் நெடுங்காலஞ்செல்லினும் தேன் சொரியுந்தன்மையதான விண்ணக மலர்போலும்.

Freehand Translation*
Ever untainted, with fleeting time an
eternal superflous blossom - alike
unfallen flower from the tree of elixir
is poet valuvan’s words.
* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Iraiyanar, yet!

More from Wikisource
மூலம்
என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்- குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல் (03)
பதப்பிரிப்பு
என்றும் புலராது யாணர் நாள் செல்லுகினும்
நின்று அலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மையதாய்க் - குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன் புலவன் வள்ளுவன் வாய்ச் சொல்
கருத்துரை இறையனார் (சிவபெருமான்) கூறிய பாடல்.
இங்குத் தெய்வப்புலவரின் பாடலைக் கற்பகமரத்தின் தெய்வமலர் என்று அதனுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றார்.
கற்பகப்பூ என்றும் வாடாதது;அதுபோல் அவர் வாய்ச்சொல்லான திருக்குறளும் என்றும் வாடாதது,அதாவது புதியது, புத்தழகு உடையது.
நெடுங்காலம் சென்றாலும் கற்பகப்பூ தன்னழகு கெடாது நின்று மலர்ந்து தேன் சொரியும் தன்மையை உடையது. திருக்குறளும் காலத்தால் அழியாதது; தன்னழகு கெடாதது என்றும் பொருந்தும் கருத்துக்களை உடையது; இனிய சுவையான மருந்தனைய கருத்துக்களைத்தரும் தன்மைகொண்டது.
குறையில்லாத சிவந்த தளி்ர்களை(கொழுந்துகளை) உடையது கற்பகத்தரு (தரு=மரம்)அதுபோல் செஞ்சொற்களைக்கொண்டது திருக்குறள்.
கற்பகமலர் தெய்வத்திருமலர். திருக்குறளும் தெய்வத் திருக்குறள். மிகஅழகான ஒப்புமை.


மண்புலவன் வள்ளுவன் வாய் சொல் புலவர்க்கு அரசனாகிய வள்ளுவன் வாயில் பிறந்த திருக்குறளானது என்றும் யானைப் புலராது நாள் செல்லுகினும் நின்று அலைந்து தேன் பிழிக்கும் நீர்மயதாய் எக்காலத்தும் தன் அழகு கெடாது நெடுங்காலம் கழியினும் நிலைபெற்று மலர்ந்த தேனை தெரிகின்ற குணம் உடையதாய் விளங்கும் ஆதலால் குன்றாத செந்தளிர் கற்பகத்தின் தெய்வத்திருமலர் போன்ற குறைவு படாத செய்யத் தளிர்களை உடைய கற்பகத்தினது தெய்வத்தன்மை பொருந்திய உயர்வாகிய மலர் போலும்
திருக்குறளுக்கு அழகு சொல் முடிவுப்பொருள் முடிவின் குணங்களும் அலர்தல் எங்கும் பரவுதலும் தேன் பிலித்தல் இருமை இன்பங்களும் விளைத்தலாம் சொல் ஆகுபெயர் இறையனார் கடவுள் ஆதலினால் இனி இதில் சிறப்பது ஒன்று உலதாவது இன்று என்னும் துணிவு தோன்ற என்றும் பின்னும் அதனை வலியுறுத்த நாள் செல்லுதினும் நின்று என்றும் வாழ்த்துப் பொருட்படை இவ்வாறு கூறினார் இது அழியாது நின்று பெருகிப் பயன்படுமாறு சொல்லியபடி




__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

Ukkira Peruvaluthiyar உக்கிரப் பெருவழுதியார்  திருவள்ளுவமாலை - உக்கிரப் பெருவழுதியார் - 4
நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி

Thiruvalluva Maalai - Ukkira Peruvaluthiyar - 4
naanmaraiyin meipporulai mupporulaa naanmukaththon
thaanmaraindhthu valluvanaaith thandhthuraiththa – noolmuraiyai
vandhthikka sennivaai vaalththukanal naenjcham
sindhthikka kaetka sevi

இறையனார் - விளக்கம்
(பொ-ரை) நான்முகன் வள்ளுவனாகத் தோன்றிக் கூறிய முப்பால் நூலை , என்தலை வணங்குக; வாய்வழுத்துக; மனம் ஊழ்குக (தியானிக்க) செவி கேட்க.

Freehand Translation*
‘Fourfaced One’ cloaking himself as Valluvan gave
the four vedas in under three Cantos - Let that thirukkural
Be Workshipped, praised through mouths, contemplated
with good minds and heard with ears
* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Ukkira Peruvaluthiyar, yet!
The lord himself is saying what the best can the senses do; the reason to have the eyes, ears and mouth remains to be contemplating on thirukkural, for thirukkural is the essense of everthing.

More from Wikisource
மூலம்
நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் றான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த- நூன்முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ் சிந்திக்க கேட்க செவி (04)
பதப்பிரிப்பு
நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூல்முறையை
வந்திக்க சென்னி வாய் வாழ்த்துக நல் நெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி
கருத்துரை இங்கு வள்ளுவப்பெருமானைப் படைப்புக்கடவுளான பிரம்மனாகக் கூறுகின்றார் உக்கிரப் பெருவழுதியார். நான்முகத்தோனாகிய பிரம்மதேவனே தன்னை மறைத்துக்கொண்டு இவ்வுலகில் வள்ளுவனாய்த்தோன்றி நான்கு வேதங்களின் பொரு்ள்களை அறம், பொருள் இன்பம் எனும் மூன்றுபொருள்களாக இவ்வுலகுக்குத் தந்தான். இந்த நூலாகிய திருமுறையை என் தலைவணங்கட்டும்; என் வாய் வாழ்த்தட்டும்; என் நெஞ்சம் சிந்திக்க அதாவது, தியானிக்கட்டும்; என் செவியானது கேட்டுக்கொண்டே இருக்கட்டும்.
The Four-faced (Brahma), disguising himself as Valluvar, has imparted the truths of the four Vēdas in the three parts of the Cural, which is therefore to be adored by the head, praised by the mouth, pondered by the mind, and heard by the ears. [Emphasis in original]

நான்முகத்தோன் தான் மறைந்து வள்ளுவனாய் நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா தந்துரைத்த நூல் முறையை நான்முகன் தான் தன் உரு மறைத்து திருவள்ளுவனாய் அவதரித்து நான்கு வேதங்களின் உண்மை பொருளை அறம் பொருள் இன்பம் என்று என்னும் முட்டாள் பொருளாக தமிழில் தந்து கூறிய திருக்குறள் எழுதிய திருமுறையை சென்னிவத்திக்க என் தலை வணங்குக வாய் வாழ்த்துக வாய் துதிக்க நல்லெஞ்சம் சிந்திக்க நல்ல மனம் தியானிக்க செவி கேட்க காது கேட்க முப்பொருள் ஆகுபெயர் இவ்வேத பொருள் ஆதியிலே வேதம் சொல்லியோனாலையே சொல்லப்பட்ட பயான் உலகத்து சமய ஆசிரியர்களாலும் பிறராலும் ஒன்றுக்கு ஒன்று மாறாக கள்ள கொல்லப்பட்ட பொருள்கள் கொள்வது அன்று என்பது தோன்ற மெய்ப்பொருள் என்றார் கலை உணர் புலமையின் தலைமையோ ஆகி விதிமுறை வராது முதுநிலம்
புரக்கம்
பெருந்தகை உக்கிர பெருவழுதி இன்னும் தண்ணிகரில்லா மன்னர் பெருமான் தான் மேற்கொண்ட சிறப்பை பலரும் அறிந்து மேற்கொள்ள இவ்வாறு வழிபாடு கூறினான் மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி ஆதலின் இப்புத்தகத்தை முன்னே பூஜித்து மெய்மொழி மனங்களால் வணங்கச் செய்து பின் கேட்க வேண்டும் என்று சொல்லியபடி




-- Edited by Admin on Thursday 4th of May 2023 09:49:54 AM

__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
RE: திருவள்ளுவமாலை
Permalink  
 


https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
திருவள்ளுவமாலை 01-10
Permalink  
 


Kapilar  கபிலர் திருவள்ளுவமாலை - கபிலர் - 5
தினையளவு போதாச் சிறுபுன் னீர்நீண்ட
பனையளவு காட்டும் படிததான்- மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி

Thiruvalluva Maalai - Kapilar - 5
thinaiyalavu pothaachiirupun neerneenda
panaiyalavu kaatdum patithathaan- manaiyalaku
vallaik kurangkum valanaada valluvanaar
vaellaik kuratpaa viri

கபிலர் - விளக்கம்
(பொ-ரை) வீட்டுப் பறவைகள் வள்ளைப்பாட்டிற் குறங்கும் வளநாட்டரசே! திருவள்ளுவர் திருக்குறளின் சொற்சுருக்கப் பொருட்பெருக்கம். புல்நுனிப் பனித்துளி பனைவடிவைத் தன்னுள்ளடக்கிக் காட்டினாற் போலும்.

Freehand Translation*
Just as the droplet on a blade of grass
houses the reflection of tall palm - Hey king, hailing from
kingdom where pet birds doze upon the maiden’s lullaby;
So is Valluvan’s Kural pa upon decompression
Implying that the mere two stanzas work the magic of holding greater truths
So fertile was the land and agriculture that the maids of the palaces and places used work in processing the crops and produce through manual methods using machinary like ulakkai which creates an unintermittent tune to which the household birds retire into slumber.
* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Kapilar, yet!
மூலம்
தினையளவு போதாச் சிறுபுன் னீர்நீண்ட பனையளவு காட்டும் படிததான்- மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (05)
பதப்பிரிப்பு
தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி (௫)
(அளகு= பறவை; வள்ளை= பெண்கள், நெல் குற்றும்போது பாடும் உலக்கைப்பாட்டு வள்ளைப்பாட்டு; வெள்ளை- வெண்பா)
கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது? என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோலாம் என்க.

மனை அழகு வள்ளைக்கு உறங்கும் வளநாட மனையில் வளர்க்கப்படுகின்ற பறவை பேடுகள் உலகை உலகை உலக்கை பார்த்தால் கண் உறங்குகின்ற வலம்புரிந்திய நாட்டை உடைய அரசாணி வள்ளுவனார் வெள்ளை குரல் பாவிரி திருவள்ளுவரால் அருளிச் செய்யப்பட்ட குரல் வெண்பா மிகப்பெரிய பொருளை தண்ணீர் கொண்டு காட்டுதல் திணை அளவு போதா சிறுமி சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படிந்து திணை அரிசியின் அளவுக்கு போதாத சிறிய புள்ளினது நுனியின் கண் உள்ள பனி நீர் உயர்ந்த பனையின் அளவான அதன் சாயையை தன்னுள் கொண்டு காட்டும் குணம் போலும் குணத்தை உடைத்து பனை ஆகுபெயர் ஆல் அசை பறவை கிளி முதலியவை உலக்கை பாட்டு மகளிர் பரிமல பொடி இடிக்கின்ற போது பாடும் பாட்டு விரி விரித்தல் எப்படி மிகச்சிறிய பனித்துளையில் மிகப்பெரிய பனைமரத்தின் சாயையை அடங்கி விளங்குகின்றதோ
அப்படியே மிகச்சிறிய இக்குரல் வெண்பாவில் மிகப்பெரிய பொருள் அடங்கி விளங்குகின்றது என்பதாம் இது சுருங்கி இருந்தும் விரிவான பொருள் விளங்குமாறு சொல்லியபடி இது முதலியன சங்கத்து புலவராலேயே பாடப்பட்டன





__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

Paranar பரணர் திருவள்ளுவமாலை - பரணர் - 6

மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து

Thiruvalluva Maalai - Paranar - 6
maalum kuralaai valarndhthuirandu maanatiyaal
gnyaalam muluthum nayandhthalandhthaan – vaalarivin
valluvarum thamkuralvaen paavatiyaal vaiyaththaar
ulluvavellaam alandhthaar oarndhthu

பரணர் - விளக்கம்
(பொ-ரை ) திருமால் குறளாய்த் தோன்றித்தன் இருபேரடியால் உலகனைத்தையும் அளந்தான்; ஆனால் திருவள்ளுவர் தம்குறளின் இரு சிற்றடியால் மாந்தர் கருத்தனைத்தையும் அளந்தார்.

Freehand Translation*
Growing into a dwarf Maal(Thirumaal) came; with two steps
measured the entire world - Knowledgeous
Valluvan with his two stanzas measured
the thoughts of the masses(upon research).
* note: the above translation will do no justice to the original thiruvalluva maalai work from Paranar, yet!

Māl (Vishnu) in his Cural (or dwarfish incarnation) measured the whole earth with his two expanded feet; but Valluvar has measured the thoughts of all mankind with his (stanza of) two short feet.
More from Wikisource
மூலம்
மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால் ஞால முழுதும் நயந்தளந்தான்- வாலறிவின் வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா ருள்ளுவவெல் லாமளந்தா ரோர்ந்து (06)

பதப்பிரிப்பு
மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண் அடியால்
ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் - வால் அறிவின்
வள்ளுவரும் தம் குறள் வெண்பா அடியால் வையத்தார்
உள்ளுவ எல்லாம் அளந்தார் ஓர்ந்து
கருத்துரை இப்பாடலில் வள்ளுவப்பெருமானைக் காக்குங்கடவுளாகிய திருமால் எனக்கூறுகின்றார் பரணர். திருமால் வாமனாவதாரத்தில், திரிவிக்கிரமாவதாரத்தில் குறளனாய்த் தோன்றிப் பின் வளர்ந்து தன்னுடைய திருவடிகள் இரண்டால், இந்த உலகம் எல்லாவற்றையும் அளந்தான். அதேபோல் வள்ளுவரும் தன்னுடைய மெய்யறிவினால், தம் குறள்வெண்பா அடிகள் இரண்டைக்கொண்டு இந்த உலகத்தாரால் நினைக்கப் பட்டவற்றையெல்லாம் ஆராய்ந்து அளந்தார்; அதாவது அதுபற்றித்தெளிவான கருத்தை விளக்கமாகக் கூறியருளினார் என்பதாம்.

இங்கு வள்ளுவப்பெருமானைக் காக்கும் கடவுளாகிய திருமால் என்றும், அவரை அவதாரம் என்றும் கூறுகின்றார்.

 

மாலும் குரலாய் வளர்ந்து இரண்டு மான் அடியால் நியாயம் முழுதும் நயந்து அளந்தான் திருமாலும் குரலாய் பிறந்து வளர்ந்து இரண்டு பெரிய அடிகளால் உலகம் அனைத்தையும் விரும்பி அளந்தான் வால் அறிவின் வள்ளுவரும் தம் குரல் வெண்பா அடியாள் வையத்தார் உள்ளுவது எல்லாம் ஓர்ந்து அளந்தார் மெய்வ மெய் அறிவினை உடைய திருவள்ளுவரும் தம்மிற் தம்மனின் தோன்றி அந்நிலை நிற்கின்ற வெண்பா குரலின் இரண்டு சிறிய அடிகளால் அவ்வுலகம் அனைத்தையும் உள்ளோரால் நினைக்கப்பட்டவற்றையெல்லாம் ஆராய்ந்து அளந்தார் உண்மை இரண்டும் முறையே தேவரின் பெரியோன் ஆகிய மனிதரில் சிறியராய் காணப்பட்ட என்றும் பொருள்பட நின்றன ஓ மானத்திலே வளர்ந்ததும் பெருமையை சொல்லுதலால் அவற்றுக்கு முரணாகிய நிலை நிகழும் சிறுமையும் வருவிக்கப்பட்டன மாலுக்கு தானே குரல் ஆதலும் பின்பு அந்நிலை நில்லா
வளர்தலும் பேரடிகளால் அழகு பட்ட உலகத்தை அழுத்தலும் திருவள்ளுவருக்கு தன்னின் தம்மில் என்றும் குரலை உண்டாக்குதலும் அது தன்னிலை நற்றலும் அதன் சிற்று அடிகளால் அலகுபடைய அளவுபடாத நினைப்பின் விஷயங்கள் அழைத்தலும் சொல்லப்படுதலாலும் வேற்றுமை அறிக நினைக்கப்பட்டன எல்லாம் இதனகத்து அளவு செய்யப்பட்டமை சொல்லியபடி

Nakkeerar நக்கீரர் திருவள்ளுவமாலை - நக்கீரர் - 7

தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா
லானா வறமுதலா வந்நான்கு- மேனோர்க்
கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும்
வாழியுல கென்னாற்று மற்று

Thiruvalluva Maalai - Nakkeerar - 7
thaanae muluthunarndhthu thanthamilin vaenkuralaal
aanaa arammuthalaa andhnaankum – yaenorkku
oolin uraiththaatrkum onneer mukilukkum
vaaliulaku yenaatrrum matrru

நக்கீரர் - விளக்கம்
(பொ-ரை) தாமே எல்லாவற்றையும் அறிந்து நாற்பொருளையுங் குறள் வெண்பாவால் எல்லார்க்கும் எளிதாயறிவித்த திருவள்ளுவர்க்கும் மழைபொழியும் முகிலுக்கும் உலகம் என்ன கைம்மாறு செய்யவல்லதாம் ?

Freehand Translation*
He realized and gave with soothing venbas,
‘the Four’ inclusive of virtue - Even for layman
‘The kural’; and the spectral clouds
showering rain; Hail thee both unparalleled.
* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Nakkeerar, yet!

More from Wikisource

தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா லானா வறமுதலா வந்நான்கு- மேனோர்க் கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும் வாழியுல கென்னாற்று மற்று (07)

தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறம்முதலா அந்நான்கும் - ஏனோர்க்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என்ஆற்றும் மற்று

(தண்=குளிர்ச்சி; வெண்குறள்=குறள்வெண்பா; ஆனா=நீங்காத/விட்டுப் பிரியாத; நான்கு= அறம் பொருள் இன்பம் வீடு; ஏனோர்=அறியாத பிறர்; ஊழ்=முறை; ஒண்ணீர்= ஒள்ளிய நீரை; முகில்= மேகம்; என்ஆற்றும்= என்ன செய்யும், பிரதியுபகாரமாக.)
கருத்துரை: தாமே எல்லாவற்றையும் அறிந்து, குளிர்ந்த தமிழால் ஆன குறள் வெண்பாவினால் நீங்காத அறம் முதலான நான்கினையும்- அதாவது, அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கினையும்- அதனை அறியாதார்க்கு முறையாக உரைத்த வள்ளுவப் பேராசானுக்கும், உயிர்காக்கும் நீரை மழையாகப் பொழியும் மேகத்திற்கும் இந்த உலகம் என்ன கைம்மாறினைச் செய்யமுடியும், எதுவும் செய்ய முடியாது. ஆகையால், அவரும் அம்மேகமும் இந்த உலகும் வாழ்க எனவாழ்த்தி வணங்குவோம்!

தானே முழுதுணர்ந்து தானே வேதப்பொருள் அனைத்தையும் அறிந்து தன் தமிழில் வெண்குரலால் ஆன அறம் முதலாகும் 700க்கு ஊலின் உரைத்து ஆர்க்கும் தண்ணியே தமிழில் கண் குரல் வெண்பாக்களில் விட்டு நீங்குதல் கூடாத அறம் முதலாகிய நான்கு பொருள்களையும் அவற்றை அறியாதவர்களுக்கு அவர் எளிதின் அறியமுறையால் சொல்லி அருளிய திருவள்ளுவருக்கும் உள்நீர் முகிலிக்கும் உள்ளியே நீரை தந்த மேகத்துக்கும் உலகம் அற்று என ஆற்றும் இவ்வுலகம் எதிர் நன்றி யாது செய்யும் கிடந்தது ஒன்றுமில்லை வாழி அவரும் அது வாழ்க ஆனாமை நீங்காமல் தானே முழுதுணர்ந்து எனவே ஆச்சாரியாராய் இருந்து பிறர் அறிவிக்க அறிந்திலர் என்றதாயிற்று முழுதும் என்னும் உண்மை தொக்க தொக்கது உண்மை இனிமை மேல் நின்றது முறை நூலின் முப்பொருள் முப்பொருளின கிடக்கை ஒழுங்கு
நாயனார் கொடை சிறப்பு சொல்லியபடி


Mamulanar மாமூலனார்  திருவள்ளுவமாலை - மாமூலனார் - 8
அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின்
திறந்தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடையார்

Thiruvalluva Maalai - Mamulanar - 8
aramporul inpamvee taennumandh naankin
thirandhtherindhthu seppiya thaevai – marandhthaeyum
valluvan yenpaan oarpaethai avanvaaichol
kollaar arivutaiyaar

மாமூலனார் - விளக்கம்  (பொ-ரை) அறமுதலிய நான்கையும் உள்ளவா றுலகிற் குணர்த்திய தெய்வப் புலவரை , மறந்தேனும் மாந்தனாகக் கொள்ளும் அறிவிலியின் கூற்றை அறிவுடையோர் கொள்ளார்.

Freehand Translation*
The essense of virtue, Porul(wealth), Inbam(Happiness), Veedu(Abode)
delivered he, the Divine - the deluded,
forgetfully even if, call him ‘just’ Valluvan
are resented by the wise.

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Mamulanar, yet!
Valluvar is in reality a god; and if any shall say that he is a mere mortal, not only will the learned reject his saying, but take him for an ignorant man.

More from Wikisource
அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின் றிறந்தெரிந்து செப்பிய தேவை- மறந்தேயும் வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற் கொள்ளா ரறிவுடை யார். (08)

பதப்பிரிப்பு
அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அந்நான்கின்
திறம் தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன் வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடையார்
கருத்துரை: அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அந்த நான்கு உறுதிப்பொருள்களின் தன்மையைத் தெரிந்து தெளிவாகச் சொல்லியருளிய தெய்வத்தை, மறந்துபோயாகிலும் அவரை மனிதனாகக் கருதி, வள்ளுவன் என்று கூறினால் அவ்வாறு கூறுபவன் ஒரு பேதை (முட்டாள்) ஆவான். அறிவுடையார் அவன் கூற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். (வள்ளுவர் தெய்வப்பிறவி கீதை உரைத்த ‘கண்ணன்’ போன்று ஓர்அவதாரம்! மூடர்கள் வேண்டுமானால் அவரை ‘மனிதன்’ என்று பெயரிட்டு அழைக்கலாம் என்பது கருத்து.)

தானே முழுதுணர்ந்து தானே வேதப்பொருள் அனைத்தையும் அறிந்து தன் தமிழில் வெண்குரலால் ஆன அறம் முதலாகும் 700க்கு ஊலின் உரைத்து ஆர்க்கும் தண்ணியே தமிழில் கண் குரல் வெண்பாக்களில் விட்டு நீங்குதல் கூடாத அறம் முதலாகிய நான்கு பொருள்களையும் அவற்றை அறியாதவர்களுக்கு அவர் எளிதின் அறியமுறையால் சொல்லி அருளிய திருவள்ளுவருக்கும் உள்நீர் முகிலிக்கும் உள்ளியே நீரை தந்த மேகத்துக்கும் உலகம் அற்று என ஆற்றும் இவ்வுலகம் எதிர் நன்றி யாது செய்யும் கிடந்தது ஒன்றுமில்லை வாழி அவரும் அது வாழ்க ஆனாமை நீங்காமல் தானே முழுதுணர்ந்து எனவே ஆச்சாரியாராய் இருந்து பிறர் அறிவிக்க அறிந்திலர் என்றதாயிற்று முழுதும் என்னும் உண்மை தொக்க தொக்கது உண்மை இனிமை மேல் நின்றது முறை நூலின் முப்பொருள் முப்பொருளின கிடக்கை ஒழுங்கு
நாயனார் கொடை சிறப்பு சொல்லியபடி




__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

Kalladar கல்லாடர் திருவள்ளுவமாலை - கல்லாடர் - 9

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி
னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென
வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி

Thiruvalluva Maalai - Kalladar - 9
onrae porulaenin vaeraenpa vaeruyenin
anraenpa aaru chamayaththaar – nanruyena
yeppaa lavarum iyaipavae valluvanaar
muppaal molindhtha moli

கல்லாடர் - விளக்கம்
(பொ-ரை) அறுவகை மதத்தாரும் ஒருபொருளின் இயல்பை இன்னதென்று ஒருமதத்தார் கூறின், அதைமறுத்து வேறாகக் காட்டுவர் ஏனை மதத்தாரெல்லாரும் , ஆனால் திருவள்ளுவர் தம் முப்பாலிற் சொன்னவற்றையோ உண்மையென்று எல்லாரும் ஒத்துக்கொள்வர்.

Freehand Translation*
‘This’ say some, ‘not this’ say others
‘Nope’ utter the six set of sects
-‘Good’ accept they all, the valluvan’s
threefold words spoken
* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Kalladar, yet!
Of the six sects, one will condemn the system of the other; but none of them will condemn the system propounded by Valluvar in his Cural: it has the merit of harmonizing the opinions of them all, so that each sect would admit it to be its own.
Edward Jewitt Robinson (2001). Tamil Wisdom: Traditions Concerning Hindu Sages and Selections from Their Writings. New Delhi: Asian Educational Services.

More from Wikisource
ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி (௯)
ஒன்றே பொருள் எனின் வேறு என்ப வேறு எனின் நன்று என்ப ஆறு சமயத்தார் - நன்று என எப்பாலவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் பொழிந்த மொழி. (09)

‘கருத்துரை: உலகில் உள்ளவை ஆறு சமயங்கள். அவ்வறுவகை மதத்தினரும், பொருள் ஒன்று என ஒருவர் கூறினால், மற்றொருவர் அதனை மறுத்து, ஒன்று இல்லை வேறு என்று கூறுவார்கள். பிறிதொருவர் வேறு என்று கூறினால், இல்லை அதுவன்று என்பார்கள்! இவ்வாறு தாம் கூறும் கருத்தில் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு நிற்பர் ஆறுவகைச்சமயத்தார். ஆனால், எவ்வகைச் சமயத்தாரும் வள்ளுவனார் முப்பாலில் மொழிந்தவற்றை, முரண்படாமல், நன்று என மனமிசைந்து ஒத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட சிறப்புடையது அருங்குறள் என்பதாம். அதாவது, அனைத்துச் சமயத்தினரும் ஏற்றுப் போற்றுவது திருக்குறள் என்பதாம்.

ஆறு சமயத்தார் ஒன்றே பொருள் எனின் வேறு என்ப அறுவகை மதத் தோறும் ஒரு மதத்தார் தமது நூலில் உலகமும் உயிரும் கடவுளும் ஆகிய பொருட்கள் ஒன்றே என்று நாட்டுவார் ஆயின் மற்றொரு மதத்தார் தனது நூலின் அதனை மறுத்து அவை வேரான் என்று நாட்டுவார் வேறு எண்ணின் அன்று என்ப அப்படி வேறு என்று நாட்டுபவர் பின் ஒரு மதத்தார் அதனை அன்று என்று மறப்ப மறப்பர் ஆதலால் சமய நூல்கள் எல்லாம் இவ்வாறு மறுக்கப்படுகின்றன வள்ளுவனார் முப்பால் முடிந்த மொழி நன்று என எப்பாளரும் இயைப திருவள்ளுவராலே முப்பாலாக சொல்லப்பட்ட நூலை நன்று என்று கொள்வதற்கு எவ்வகை பட்ட பகுதியோரம் முற்படுவர் மொழி ஆகுபெயர் ஆறு மதம் ஆவண வியாச மதம் சைமினி மதம் பதஞ்சலி மதம் கபில மதம் காணாத மதம், கணாத மதம்
அக்சபாத மதம் அன்றி சைவம் வைணவம் முதலியவற்றை கூறினும் ஆம் எச்சமயத்தாலும் என்பது எப்பவாளரும் என்பதனால் வேதத்துக்கு உட்பட்ட சமயத்தாரே அன்றி புறப்பட்ட சைனம் பௌத்தியை பௌத்தம் முதலிய மதத்தரும் பலகு வகைப்பட்ட சாதிய யாரும் தேசத்தாலும் காலத்தாலும் பிறரும் தழுவப்படுதல் அறிக இதுவே பொது வேதம் என்ற படி

seethalai saathanaar சீத்தலைச் சாத்தனார் திருவள்ளுவமாலை - சீத்தலைச் சாத்தனார் - 10

மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் – மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்

Thiruvalluva Maalai - Chithalai Chathanar - 10
mummalaiyum mundhnaadum mundhnathiyum muppathiyum
mummurasum muththamilum mukkotiyum – mummaavum
thaamutaiya mannar thadamutimael thaaranno
paamuraithaer valluvarmup paal

சீத்தலைச் சாத்தனார் - விளக்கம்
(பொ-ரை) திருவள்ளுவரின் முப்பால் , மலை , நாடு ஆறு நகர் , முரசு, கொடி , குதிரை, தமிழ் ஆகியவற்றை மும்மூன்றாகக் கொண்ட மூவேந்தரின் முடிமாலை போல்வதாம்.
Freehand Translation*
3 Mountain Ranges 3 Countries 3 Rivers 3 capitals
3 Drums 3 Tamils 3 Flags - 3 Horses
Own they, the Kings; O’r their crown as a garland
is the poetry of The Valluvan’s Muppaal

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Chithalai Chathanar, yet!
3 Mountains = Kolli Hills (Cheran), Neri (Cholan), Podigai (Pandyas)

3 Countries = Cheran Country, Cholan Country, Paaniyan Country
3 Rivers = Amaravati (Cheran), Kaveri (Cholan), Vaigai (Paandiyan)
3 Capitals = Vanji (Cheran), Uraiyur (Cholan), Madurai (Paandiyan)
3 Drums = Aupecious, Victory, Charity
3 Tamils = Iyal(Literary), Isai(Music), Naadagam(Drama)
3 Flags = Bow (Cheran), Tiger (Cholas), Fish (Paandiyas)
3 Horses = Kanavattam (Chera); Puravi, Padalam (Chola); Pari, Koaram (Paandiya)

Chera Chola Paandiya
Thrukkural is also known as Muppaal
More from Wikisource
மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியு மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவுந் தாமுடைய மன்னர் தடமுடிமேற் றாரன்றோ பாமுறைதேர் வள்ளுவர்முப் பால். (௰)
மும் மலையும் முந் நாடும் முந்நதியும் முப் பதியும் மும் முரசும் முத் தமிழும் முக் கொடியும் - மும் மாவும் தாம் உடைய மன்னர் தட முடி மேல் தார் அன்றோ பா முறை தேர் வள்ளுவர் முப் பால். (10)

கருத்துரை: சேர, சோழ, பாண்டியர்கள் மூன்று மலைகளைக் கொண்டவர்கள். (அவை சேரனுக்குக் கொல்லிமலையும், சோழனுக்கு நேரிமலையும், பாண்டியனுக்குப் பொதிகை மலையும் ஆம்) அவர்கள் முந்நாடு உடையவர்கள். (சேரனுக்குச்சேரநாடு சோழனுக்குச் சோணாடு, பாண்டியனுக்குப் பாண்டிநாடு) அவர்கள் மூன்று ஆறு உடையவர்கள்.(சேரனது ஆன்பொருநை, சோழனது காவிரி, பாண்டியனது வையை). அவர்கள் மூன்று தலைநகரங்கள் கொண்டவர்கள். சேரருக்குக் கருவூராம் வஞ்சி, சோழருக்கு உறையூர், பாண்டியருக்கு மதுரை) அவர்கள் மூன்று முரசுகளை உடையவர்கள்.(அவை மங்கல முரசு, வெற்றி முரசு, கொடை முரசு). அவர்கள் மூன்று தமிழ் உடையவர்கள். (அவை இயல் இசை நாடகம் என்பனவாம்.) அவர்கள் முக்கொடி உடையவர்கள் (சேரனுக்கு விற்கொடி, சோழனுக்குப் புலிக்கொடி, பாண்டியருக்கு மீன் கொடி). அவர்கள் மூன்று குதிரைகள் கொண்டவர்கள். (சேரனின் குதிரை, கனவட்டம், சோழனின் புரவி, பாடலம், பாண்டியர் பரி, கோரம் என்பனவாம்). இத்தகைய சிறப்புகளைக் கொண்ட(மும்மலை, முந்நாடு, முந்நதி, முப்பதி, மும்முரசு, முத்தமிழ், முக்கொடி, மும்மா) சேர சோழ பாண்டியர் ஆகிய மூன்று மன்னர்களின் பெருமை மிக்கமுடிமேல் அணிகின்ற மாலை எது தெரியுமா? அதுதான் மூன்று பால்களையுடைய(அறம், பொருள், காமம்) திருக்குறள் எனும் தமிழ்ப் பாமாலை என்கின்றார், மூன்றுமன்னர்களையும் நன்குஅறிந்த சீத்தலைச் சாத்தனார்.


வள்ளுவர் பாமுறை தேர் முப்பால் திருவள்ளுவர் வாக்களின் முன்பின் முறை தெரிவதற்கு இடமாகிய திருக்குறளானது மும்மலையும் கொல்லிமலை மேரிமலை புதிய மலை எனப்படுகின்ற மூன்று மலைகளையும் முன்னாடும் குடநாடு புனல் நாடு தென்னாடு எனப்படுகின்ற மூன்று நாடுகளையும் முன்னதி பொருளை நதி காவிரி நதி வைகை நதி எனப்படுகின்ற மூன்று நதிகளையும் முப்பதியும் கருவூர் உறையூர் மதுரை எனப்படுகின்ற 3 பதிகளையும் மும்முரசும் மங்களமுரசு வெற்றி முரசு கொடைமுரசு எனப்படுகின்ற மூன்று முரசுகளையும் முத்தமிழும் இயர் தமிழ் இசைத்தமிழ் நாடகத் தமிழ் என்கின்ற மூன்று தமிழ்களையும் முக்கோணியும் விரிக்கொடி மீன் கொடி எனப்படுகின்ற மூன்று கொடிகளையும் மும்மாவும் கணவட்டம் பாடலம் கோரம் எனப்படுகின்ற மூன்று குதிரைகளையும் தம் உடைய மன்னர் தலைமுடி மேல் தார் அன்றோர் தாம் முறையே உடைய சேர சோழ பாண்டியர் எனப்படுகின்ற
மூவரசர்கள்
உடைய பெரிய முடிகளின் மேலும் கொல்லப்பட்ட மாலை அன்றோ அன்றோ என்பது பலர் அரிதேற்றம் முப்பால் ஆகுபெயர் மும்முரசும் முத்தமிழும் மூவரசருக்கும் பொதுமையா வழியிலும் இம்முறை மெய் அவர் குடி மரபிற்கு ஏந்தன போலும் அரசர் மூவரும் மேற்கொண்ட சிறப்பு சொல்லியபடி



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard