தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் போற்றும் சனாதன தர்மம்


Guru

Status: Offline
Posts: 898
Date:
திருக்குறள் போற்றும் சனாதன தர்மம்
Permalink  
 


சனாதனம் என்றால் நிலையானது, என்றும் தொடர்வது என்பது பொருள்தர்மம் என்பதற்கு நல்ல வழிமுறை எனப் பொருள் எளிதாக அறம்.

சனாதன தர்மம் என்றால் எப்போதும் கடை பிடிக்க வேண்டிய அறக் கடமைகள், கோட்பாடுகள். இந்தியா முழுவதும் மக்கள் மெய்யியல் வழிமுறையைக் குறிக்கும் சொல்;. இந்து மதம் என்பது எளிதான பெயர்.https://pagadhu.blogspot.com/2022/04/blog-post_64.html287816043_10228007018907025_223190835382 

திருவள்ளுவர் இயற்றிய குறட்பா வழியிலேயே பார்ப்போம்


மனிதப் பிறவி என்பது குற்கிய காலம் வாழ்வது; ஆனால் உயிர் என்பது நிலையானது, பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து மீண்டும் எனும் தொடர்சியானது. இதை வள்ளுவர் மன்னுயிர் எனக் கூறுவார்

இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு தூங்குவது போன்றதுபிறப்பு எனப் படுவது  தூக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து மீண்டும் எனும் தொடர்சியானது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள்:10 -கடவுள் வாழ்த்து

பிறவி- பிறந்து இறந்து  மீண்டும் மீண்டும் பிறந்து என வாழும் பெரிய கடலைக் கடக்க உலகினைப் படைத்த தெய்வத்தின் திருவடியைப் பற்றிக் கொண்டு பின்பற்றினால் மட்டுமே, மற்றவரால் இயலாது.
 
நிலையான மனித உயிர்- ஆன்மா இறைவனை அடைய அற்ம் செய்து கொண்டே இருக்க வேண்டும், அது மரணத்திற்குப் பின்பும் தொடரும்     
 
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.              குறள் 335:
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.                                                                                                                                                                       
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. குறள் 36: அறன்வலியுறுத்தல்.
என்றும் நிலைப்பெற்று வாழும் உயிர் முக்தி பெற்று மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் விலக செய்யும் அறம் அடுத்து பிறக்கும் போது உதவும்
               
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். குறள் 38: அறன்வலியுறுத்தல்.
அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் மீண்டும் மீண்டும் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்
 
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.              குறள் 335:
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
 
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.  குறள் 2: கடவுள் வாழ்த்து.
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
 
 
திருக்குறள் வள்ளுவர் இயற்றியக் காரணம் என முன்னுரை தான் அறன் வலியுறுத்தல் அதில் அவர் தெளிவாக
 
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50 இல்வாழ்க்கை
மணக்குடவர் உரை: இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.
கலைஞர் உரை: தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்
 
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
        மற்றீண்டு வாரா நெறி.  356.                       மெய்யுணர்தல்
கற்க வேண்டிய முறையான நூல்களைக் வற்றைக் கற்று  மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.
 
தமிழர்  மரபு எனும்
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: நிலையாமை. 
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. பிறந்து இறந்து மீண்டும் பிறந்து  இறந்து மீண்டும் எனும் தொடர்சியானது.
 
திருக்குறளின் வேர்
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு                                                                                ஆக்கம் எவனோ உயிர்க்கு.   குறள் 31: அறன்வலியுறுத்தல்.
மணக்குடவர் உரை: முத்தியும் தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமும் உண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று
 
அறம், உயிருக்கு முக்தியை அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?
 
ஒருவர் தன் வாழ்வை ஒழுக்கமாகவும் நிறைவாகவும் வாழ உதவும் நற் செயல்களை வலியுறுத்துவதே  சனாதன தர்மம் எனலாம். இந்தக் கோட்பாடுகள் வழிகளே அன்றி விதிகள் அல்ல. 
 
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.        குறள் 38:  அறன்வலியுறுத்தல்
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் இல்லை என அறம் செய்தால், அந்த அறச் செயல்களே அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.              குறள் 335:
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
 
அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து.   குறள் 361. அவாவறுத்தல்
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் மீண்டும் மீண்டும்  வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.
 
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
 வேண்டாமை வேண்ட வரும்.  குறள் 362. அவாவறுத்தல்
பிறப்புத் துன்பத்தினை உணர்ந்தவன் ஒன்றினை விரும்பினால், அவன் பிறவாமை என்பதனையே விரும்புதல் வேண்டும். அவன் ஆசை இல்லாமையை விரும்ப, அவனுக்கு அப்பிறவாமை உண்டாகும்.
 
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.         குறள் 173: வெஃகாமை.
மணக்குடவர் உரை: சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர். இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.
 
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.                          குறள் 03 -கடவுள் வாழ்த்து
ஒருவர் கற்ற கல்வியினால் தூய அறிவு வடிவாக விளங்கும் உலகினைப் படைத்த தெய்வத்தின் நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், ஆகிய பயன்  என்ன?
.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். குறள் 370: அவாவறுத்தல்.
ஒருபோதும் தணியாத இயல்புடைய ஆசையை விட்டு விட்டால் அந்த நிலையே எப்போதும் மாறாதிருக்கும் (மீண்டும் பிறப்பு இல்லாத பேரா இயற்கை பேரின்ப) வாழ்வைத் தரும்.
 
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.   குறள் 358. மெய்யுணர்தல்
மீண்டும் மீண்டும் பிறப்பு எனும்  அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
 
மனிதன் அறிவு எதற்காக?
இந்த உலகியல் மெய்மையை பிறப்பு எனும் அறியாமைலிருந்து வெளியேறவே என மிகத் தெளிவாக உரைக்கிறார்
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358:
மு. வரதராசன் உரை:பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல்
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.    


__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

 திருக்குறள் காட்டும் சனாதன தர்மம்

 

இந்தியா முழுவதும் மக்கள் மெய்யியல் வழிமுறையைக் குறிக்கும் சொல் சனாதன தர்மம் என்றால் எப்போதும் கடை பிடிக்க வேண்டிய அறக் கடமைகள், கோட்பாடுகள்.  . இந்து மதம் என்பது எளிதான பெயர்.

 

145137844_3701805779900150_26235695326891.jpg

 

மனிதப் பிறவி என்பது குற்கிய காலம் வாழ்வது; ஆனால் உயிர் என்பது நிலையானது, பிறந்து இறந்து மீண்டும் பிறந்து  இறந்து மீண்டும் எனும் தொடர்சியானது. இதை வள்ளுவர் மன்னுயிர் எனக் கூற்வார் மேலும் எளிதாகப் புரிய‌

இந்துமதத்தின் புராதனப் பெயரே சனாதன தர்மம்.

 

திருக்குறள் உலகப் பொதுமறை, உலகப் பெருநூல். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உறுதியான கருத்துக்களைக் கூறுவதே திருக்குறளின் சிறப்பு.

திருவள்ளுவர் எந்த மதத்தையும் குறிப்பிட்டு உணர்த்தவில்லை என்றாலும், திருக்குறளின் உட்கிடையாகப் பெறப்படுவது சனாதன தர்மம் என்னும் இந்து மதமே.

திருக்குறளின் முதல் குறள் இறைவன் உண்டு என்பதை வலியுறுத்துகிறது. எனவே திருக்குறளில் நாத்திக வாதத்திற்கு இடமே இல்லை.

உடம்பிற்கு வேறாக உயிர் என ஒன்றுண்டு, மறுபிறப்பு உண்டு என்பது இந்துக்களின் நம்பிக்கை.
“குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே உடம்போ டுயிரிடை நட்பு”
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு”

 

இப்பாடல்கள் உடம்பிற்கு வேறாக உயிர் என ஒன்றில்லை ,மறுப்பிறப்பு இல்லை எனக் கூறும் கிருஸ்தவ, இஸ்லாம் மதங்களின் கருத்துகளுக்கு மாறானது.

 

“இருள்சேர் இருவினையும் சேரா
இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” என்ற குறள் வினைப்பயனே இல்லை என்பவர்களுக்கும், வினைப்பயனை வகுத்து வழங்க இறைவன் வேண்டாம் என்போருக்கும் மாறானது.

சுருங்கச் சொன்னால், இறைவனே நமது செயல்களின் பயனை தொகுத்து வழங்கிறான் என்ற இந்துமதக் கருத்தை இப்பாடலில் திருவள்ளுவர் கூறுகிறார்.
திருக்குறளில் கடவுள், ஏழுபிறவிகள், வினைப்பயன் , பாவப் புண்ணியங்களுக்கேற்ற மறுபிறப்பு ஊழிக்காலம் ( யுகம்) என்ற இந்துமதக் கருத்துக்களே நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. வானுலகம் ,தேவர்கள்,இந்திரவிழா போன்ற இந்துமதக் கருத்துக்களை திருவள்ளுவர் கூறுகிறார்.
“வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குத் துய்த்தல் அரிது” ஊழைத் தொகுத்து வழங்கும் இறைவனால் அன்றி முயன்று கோடிக்கணக்கான செல்வத்தைச் சேர்த்தவருக்கும் அவற்றை அனுபவிக்க முடியாது என்பதே இக்குறளின் பொருள்.

கோடிக்கணக்காகச் செல்வத்தைச் சேர்த்தாலும் அதை அனுபவிக்க உனது ஊழ்வினைப்பயனைத் தொகுத்து வழங்க இறைவன் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். ஊழ்வினை என்பதை இந்துக்களைத் தவிர வேறு யாரும்
கூறுவதில்லை. “ஊழ்” என்றே ஒரு அதிகாரம் அமைத்து பாடியுள்ளார் திருவள்ளுவர்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்”

 

ஊழ்வினையைவிட வலிமையானது வேறெதுவும் இல்லை. ஊழை விலக்கும் பொருட்டு இன்னொரு வழியைத் தேடினால் அங்கும் ஊழே முன்நிற்கும் _
என்பதே இப்பாடலின் பொருள்.

 

ஊழ்=பழவினை,தலைவிதி(பூர்வஜென்ம புண்ணியம்)
பூர்வ புண்ணியம் எனப் பேசுவது இந்துக்களின் மரபு எனச் சொல்லத் தேவையில்லை.
ஒருவன் தான் தேடிய செல்வத்தை அனுபவிக்கவும் இறைவனின் அருள் வேண்டும் என்ற திருவள்ளுவரின் கருத்து புத்தம், சமணம் போன்ற சமயங்களுக்கு மாறுபட்டது.
சமண முனிவரின் நாலடியார்
‘ வினைப்பயனை ,வினைசெய்தோருக்கு கொண்டு சேர்க்க இறைவன் என ஒரு முதல்வன் வேண்டாம் ‘ என்கிறது.எனவே திருக்குறள் புத்த,சமண மத நூலல்ல என்பது தெளிவு. எனவே
‘வகுத்தான் வகுத்த வகையல்லால்’
என்ற பாடல் கூறும் கருத்து இந்துக்களுடையதே என்பது உறுதி
இந்திரலோகம் ,வானோர்,அமரர் உலகு, இந்திரவிழா _ என திருக்குறளில் பலப்பாடல்களில் வருகின்றன. இவை இந்துமதக் கருத்துக்களே.
“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்
விசும்புளார் கோமகன்
இந்திரனே சாலுங் கரி”

“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு”
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் தேவர்களுக்காக நடைபெறும் விழாவும் நடைபெறாது என்பதே இப்பாடலின் பொருள்.
மழை பொழிய வேண்டுமென்று இந்திரனுக்கு விழா எடுப்பது இந்துக்களின் மரபு.
“நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு”
புத்தேள் உலகு= தேவர்கள் உலகு.
இதுவும் இந்துமதக் கருத்தே.

 

ஊழிபெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்

ஊழிபெயரினும் என வள்ளுவர் கூறுவது யுக வேறுபாடே. கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபரயுகம்,கலியுகம் என இந்துக்களின் வேதங்கள் கூறுவதையே திருவள்ளுவரும் கூறுகிறார். செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப ஆன்மா சொர்க்கத்திற்கோ, இருள் உலகமான நரகத்திற்கோ செல்கிறது என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதே கருத்தையே வள்ளுவர் தனது குறளில் கூறியுள்ளார். “அருள்சேர்ந்த நெஞ்சினார்கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்”

புண்ணியம் செய்தவர்கள் நரகத்திற்குச் செல்லமாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர்;திருமூலரின் திருமந்திரமும் இதையே உரைக்கிறது. கீதை கூறும் அத்வைதக் கருத்தைப் பல பாடல்களில் திருவள்ளுவரும் கூறுகிறார். “யானென தென்னுஞ் செறுக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்” __ யான்,எனது என்ற ஆணவம் இல்லாதவன் உயர்ந்த உலகத்தை அடைவான் என்கிறார் திருவள்ளுவர்.

கீதையில் கண்ணன் இதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
“ஒழுக்கத்து நீத்தார் பெருமை
விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிபு”
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைப் போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்_ என்பதே இப்பாடலின் பொருள்.
‘ ஒழுக்கத்தில் நின்று பற்று விடுவது என்பது பகவத் கீதை கூறும் வழியாகும்.

 

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையவர் அற்றாக அற்றது இலர் திருவள்ளுவர் கூறும் பற்றின்மை கீதையின் சாராம்சமே. “மடியில்லா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாவிய தெல்லாம் ஒருங்கு” சோம்பலில்லாத மன்னனுக்குத் திருமால் தாவி அளந்த உலகெல்லாம் கிட்டும் என்கிறார் வள்ளுவர்.

 

திருஞானசம்பந்தர் கோளறு பதிகத்தில் “மலர்மிசையோன்” எனப் பிரம்மாவைக் குறிப்பிடுகிறார். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மா என்பதே இதன் பொருள். திருவள்ளுவரும் “மலர்மிசை ஏகினான்” என்கிறார். “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்” “அறவாறி அந்தணன் ” என்கிறார்திருவள்ளுவர். இவ்வாறு பிரம்மாவையே கூறுவர். “அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீத்தல் அரிது” “பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்

இவ்வாறு பிறவியைப் பெருங்கடலாக இந்துக்கள் மட்டுமே கூறுவர். புத்த , சமண ,இஸ்லாமியரோ, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பின்வந்த கிருஸ்தவர்களோ இவ்வாறு கூறமாட்டார்கள். “எழுமையும் எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு”

“ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு டைத்து” “ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கு கழந்தும் அளறு” _ இவ்வாறு ஏழு பிறவிகள் உண்டென்பதை பலபாடல்களில் கூறுகிறார் திருவள்ளுவர். ஏழுபிறவிகள் உண்டென்பது இந்துக்கள் மட்டுமே நம்புவதாகும். அனைத்துயிர்க்கும் காவலாகிய தவநெறியை சிவனது நெறியாகக் கொண்டு வழிபடுவது தமிழ் நெறி வழக்கம். “தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோர்க்கே”(புறநானூறு_1) “அருந்தவ முதல்வன்”

(கலித்தொகை100 :7) “ஆல்கெழு கடவுள்(திருமுருகாற்றுப்படை) _ என பழந்தமிழ் இலக்கியங்கள் தவக் கோலம் கொள்வதைச் சிவபெருமானின் அடையாளமாகக் கொள்கின்றன.
திருவள்ளுவ நாயனாரும் சிவனின் தவக்கோலத்தைக் குறித்தே
“பொறிவாயில் ஐந்தவித்தான்” என்றார்
“கோளில் பொறியிற் குணமிலவே
எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”
இதில் இறைவனின் எட்டு குணங்கள் எவையென பரிமேலழகர் பொருள் எழுதும்போது சைவ ஆகமங்களின்படியே பொருள் கூறுகிறார்.

 

தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல்,
இயற்கை உணர்வினனாதல்,முற்றும் உணர்தல்,இயல்பாகவே பாவங்களை நீக்குதல்,பேரருளுடைமை,முடிவில்லா ஆற்றலுடைமை
_ என்பவையே அவை. இவை சிவனின் குணங்களாகும்.
” அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறுகிறார்.

திருவள்ளுவரோ “அடிசேர்தல்”,”தாள்தொழல்” என்றெல்லாம் கூறுகிறார். இவ்வாறான
சொல்லாட்சிகள் இந்துக்களுக்கே உரியது. எனவே திருக்குறளின் அடிநாதமாக விளங்குவது சனாதன தர்மம் என்னும் இந்து மதமேயாகும்.

 

 

-கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்

 

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.                        -ஔவையார், தனிப்பாடல் திரட்டு பா. 64

ஈதல் அறம் = மற்றவர்களுக்கு தருவது அறம்
தீவினைவிட்டு ஈட்டல்பொருள்  = தீய வழிகளை தவிர்த்து, நல்ல வழியில் உழைத்து சேர்ப்பது பொருள்
எஞ்ஞான்றும் = எப்போதும்
காதல் இருவர்  = காதலர் இருவர் (கணவன் மனைவி என்று சொல்லவில்லை)
கருத்து ஒருமித்து = ஒத்த கருத்துடன் (சண்டை போடாமல், வேண்டா வெறுப்பாகச் செய்யாமல்)
ஆதரவு  பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து ஆதரவு தருவதே இன்பம்
பரனை நினைந்து = இறைவனை நினைத்து
இம்மூன்றும் = இந்த மூன்றையும் (பேரின்பம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் சேர்த்து)
விட்டதே பேரின்ப வீடு. - = விடுவதே பெரிய இன்பம், வீடு பேறு



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். குறள் 349: துறவு.
மணக்குடவர் உரை:ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்: அதனை விடாதபோது நிலையாமை காணப்படும். இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது.
பரிமேலழகர் உரை:பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - ஒருவன் இருவகைப்பற்றும் அற்ற பொழுதே அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் - அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும். (காரணமாகிய பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார். ' அற்றது பற்றெனில், உற்றது வீடு' (திருவாய் 1-2-5)என்பதூஉம் அது பற்றி வந்தது. இவை இரண்டு பாட்டானும்அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.).
மு. வரதராசன் உரை:இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.
மு. கருணாநிதி உரை:பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை:ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.
Translation:When that which clings falls off, severed is being's tie;All else will then be seen as instability.
Explanation:At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. குறள் 350: துறவு.
மணக்குடவர் உரை:பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; அதனைப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக. பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை:பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறி என்று மனத்துக் கொள்க, அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு - கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தான் செய்க , விடாது வந்த பற்று விடுதற்கு. (கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையால் பற்றற்றான் என்றார். பற்று அற்றான் பற்று என்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. ஆண்டுப் பற்று என்றது, பற்றப்படுவதனை. அதன்கண் உபாயம் என்றது, தியான சமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்பது அநாதியாய் வரும் உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.
மு. கருணாநிதி உரை:எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை:ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.
Translation:Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,Cling to that bond, to get thee free from every clinging thing.
Explanation: Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard