தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 05. ஏசு சீடர்கள் யார்5


Guru

Status: Offline
Posts: 898
Date:
05. ஏசு சீடர்கள் யார்5
Permalink  
 


06. ஏசு சீடர்கள் யார்



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

அப்போஸ்தலர்கள் யார் யார் ? தெரியாது?

 

images?q=tbn:ANd9GcRCfvChKdCcfwXxqkBOXcD images?q=tbn:ANd9GcR79reS0zD6kLLJsY30Pin
மாற்கு3:7 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். 
  மாற்கு3:13 அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.14 தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்;15 அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.16 அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்,17 செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் ' இடியைப் போன்றோர் ' எனப் பொருள்படும் பொவனேர்க்கேசு என்று அவர் பெயரிட்டார். -18அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன்,19 இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.  

images?q=tbn:ANd9GcQZUS5gXc4jYH8v_zqNsv3


 மாற்கு
 மத்தேயு
 லூக்கா 
 பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்
 பேதுரு என்னும் சீமோன் 
 பேதுரு என்று அவர் பெயரிட்ட  சீமோன் 
 செபதேயுவின் மகன் யாக்கோபு
 சீமோன் சகோதரர் அந்திரேயா
 சீமோன் சகோதரர் அந்திரேயா
 யாக்கோபின் சகோதரரான யோவான்
 செபதேயுவின் மகன் யாக்கோபு
 யாக்கோபு,  ,  
 அந்திரேயா 
 யாக்கோபுசகோதரர் யோவான்
 யோவான்
 பிலிப்பு 
 பிலிப்பு
 பிலிப்பு
 பர்த்தலமேயு 
 பர்த்தலமேயு
 பர்த்தலமேயு
 மத்தேயு 
 தோமா
 மத்தேயு
 தோமா
  வரி தண்டினவராகிய மத்தேயு
 தோமா
 அல்பேயுவின் மகன் யாக்கோபு
 அல்பேயுவின் மகன் யாக்கோபு
 அல்பேயுவின் மகன் யாக்கோபு,
 ததேயு
 ததேயு
  தீவிரவாதி எனப்பட்ட சீமோன்
 தீவிரவாதியாய் இருந்த சீமோன்
 தீவிரவாதியாய் இருந்த சீமோன்
 யாக்கோபின் மகன் யூதா
  இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து
இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து
 துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து 
 
  


__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 



லூக்கா 5: 1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.2 அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.4 அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ' ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் ' என்றார்.5 சீமோன் மறுமொழியாக, ' ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் ' என்றார்.6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே,7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ' ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் ' என்றார்.9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ' அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் ' என்று சொன்னார்.11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

 

யோவான்1: 28 இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
35 மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.36இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி ' என்றார்.37 அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.
40 யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.41 அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, ' மெசியாவைக் கண்டோம் ' என்றார். ' மெசியா ' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.42 பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய்'என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள்.

முதல்- முக்கியமான சீடரான பேதுரு


லூக்கா -கலிலேயா ஏரிக்கரையில் மீன் பிடித்த பேதுருவிற்கு நிறைய மீன் கிடைக்கும் மாஜிக் செய்ததால் சேர்ந்தார் எனக் கதை. 
யோவான் சுவியோ யோர்தான் ஆற்றங்கரையில் ஞானஸ்நானி யோவான் சொன்னதால் சேர்ந்ததாகக் கதை.
பேதுரு இயேசுவிடம் சேர்ந்தவிதமே தெரியாது. இரண்டில் ஒன்று பொய்? அல்லது இரண்டுமே பொய்? ஏன் மாற்றினார் எதோ ஒரு சுவிசேஷக்-கதாசிரியர்?

யோவான் 21:  இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு:2 சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்,3 அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ' நான் மீன்பிடிக்கப் போகிறேன் ' என்றார். அவர்கள், ' நாங்களும் உம்மோடு வருகிறோம் ' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.4ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை.5 இயேசு அவர்களிடம், ' பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இல்லை ' என்றார்கள்.6 அவர், ' படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.



ஏரிக்கரையில் மீன் பிடித்த பேதுருவிற்கு நிறைய மீன் கிடைக்கும் மாஜிக் இயேசு செய்தல்  யோவான் சுவிசேஷத்தில் இயேசு உயிர்த்து எழுந்தபின்னர் எனப் புனையப் படுகின்றது
யோவான் சுவிசேஷத்தில் நத்தனியேல் என ஒரு சீஷர்.
வரிவசுலிக்கும் மத்தேயு என மாற்கு - லுக்கா சுவிசேஷங்களில் கிடையாது. 

மத்தேயு9:9 இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், ' என்னைப் பின்பற்றி வா ' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.


நத்தனியேல் யார் தெரியாது? பர்த்தலமேயு  அவர் தான் என்பதற்கு ஆதாரமே கிடையாது
லூக்கா -யாக்கோபின் மகன் யூதா- யார் தெரியாது?
மாற்கு-மத்தேயுவின் ததேயு- லூக்காவின் யாக்கோபின் மகன் யூதா என்பதற்கு ஆதாரமே கிடையாது

பிற்பாடு உள்ள கடிதங்கள் இரண்டு
 யாக்கோபு பெயரில் ஒரு கடிதம்
http://arulvakku.com/biblecontent.php?book=Jas&Cn=1
 பின் யூதா பெயரில் ஒரு கடிதம்
http://arulvakku.com/biblecontent.php?book=Jude&Cn=1
யூதா1:1 இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் யாக்கோபின் சகோதரனுமாகிய யூதா எழுதுவது:

இரண்டு கடிதத்தையும் இயேசுவின் உடன்பிறந்த சகோதரர்கள் (கிழே) எழுதியது என்பது சர்ச் 

மாற்கு6:3  3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
மத்தேயு 13:55 54 தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், ' எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்?55 இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானேயாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?56 இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? ' என்றார்கள்


சிடர்களாக இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் இருக்க முடியுமா?

யோவான்7:2 யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.3 இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, ' நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்.4ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே! ' என்றனர்.5ஏனெனில் அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை


 யூதா என்னும் பெயரில் மூவர் உள்ளனர்.
1.யூதாசு இஸ்காரியோத்து
http://www.answering-christianity.com/abdullah_smith/crucifixion_of_judas.htm
இஸ்லாமியர்படி யூதாசு இஸ்காரியோத்து இயேசு போல தோற்றம் உள்ளவர். இவர் தான் சிலுவையில் அறையப்பட்டார். இயேசு இல்லை.
2. யூதா என்னும்  ததேயு
http://en.wikipedia.org/wiki/Jude_the_Apostle
sometimes identified with Jude, "brother of Jesus"
http://www.catholiccompany.com/blog/saint-jude-thaddeus-surprisingly-popular-saint
As you know Saint Jude Thaddeus, according to tradition, looked like Jesus Christ! 
3.மூன்றாவது நபர் தோமா என்பவர்- இவர் முழுப்பெயர்  யூதா தோமா, ஏசுவோடு ஒரே பிரவசத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்கிறது,  தோமா நடபடிகள் கதை, இக்கதைப்படி உயிர்த்த ஏசு அடிமை வியாபாரியாக மாறி கோந்தபோரஸ் என்ற மன்னனின் ஆளிடம் 30 வெள்ளிக் காசிற்கு விற்றார். யூதா தோமா அவர் பக்கத்து நாடான மன்னன் மசடாய் பாலைவன நாட்டில் அரச வீரர்களால் கொல்லப்பட்டார்.
images?q=tbn:ANd9GcSLx2pa3bUv_tYB63plyoE images?q=tbn:ANd9GcTcutI1iCWmcGtcFmIvzz9  images?q=tbn:ANd9GcTMNIo-LzuuOOFZ7dLX4rp

//..The Very name of the Apostle who is known as Thomas remains obscure. Thomas is the Greek form of the Aramic Teoma whose Greek Translation is Didymus, meaning – “Twin”, most probably his original name was Judas, and the Parentheses and the version variants could have been scribal clarification.How could an Apostle be known by an Epithet or adjective such as “Twin”-// ”PERSON AND FAITH OF Apostle Thomas in the Gospels, Fr.George Kaniarakath,CMI
Many Theolgians say Judas Thomas -Jude -Judas Iscariot could all be one and the same person a Twin brother by birth for Mary along with Jesus. As Thomas of Acts was look alike of Jesus and Jude is so, and as per tradition of Arabia – Judas Iscariout look alike of Jesus was actually the person Crucified.
 
 
ஏசு சீடரோடு இருந்த காலம் ஒரு வருடமோ சற்று அதிகமோ, அதனால் 
புதிய ஏற்பாடு எழுதிய கதாசிரியர்களுக்கு இயேசுவைத் தெரியாது.அதனால் தான் கதை இவ்வாறு உள்ளது
 
 மத்தேயு   விருப்பப்படியான         சுவிசேஷம்     லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம்
 தந்தை பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்- ஆபிரஹாமிலிருந்து 40வது தலைமுறை  ; தாய் மனைவி  மேரி தந்தை நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்- ஆபிரஹாமிலிருந்து 56வது தலைமுறை  ;. தாய் மனைவி  மேரி
 
சீடர்கள் 30 -  40 வருடம் சேர்ந்து இருந்து மதம் பரப்பியதாகக் கதை. ஆனால்  12 பேரில் முதல் சீடர் பேதுரு வரை ஒருவர் பற்றியும் சர்ச்சிற்குத் தெரியாது.
பின் எப்படி புதிய ஏற்பாட்டில் எந்த ஒரு சம்ப்வத்தையும் நம்ப இயலும். வெறும் கட்டுக்கதை.


__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

அப்போஸ்தலர் 4:13 பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டனர்.

அப்போஸ்தலர் 2:1 பெந்தெகோஸ்தே நாளில் அப்போஸ்தலர் அனைவரும் ஓரிடத்தில் கூடியிருந்தனர்.2 திடீரென வானிலிருந்து ஓசை ஒன்று எழுந்தது. பெருங்காற்று அடித்தாற்போல அது ஒலித்தது. அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதையும் அவ்வொலி நிரப்பிற்று. நெருப்புக் கொழுந்து போன்றவற்றை அவர்கள் கண்டனர். அக்கொழுந்துகள் பிரிந்து சென்று அங்கிருந்த ஒவ்வொருவர் மேலும் நின்றன. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். பல்வேறு மொழிகளில் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட வல்லமையை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்.அக்காலத்தில் எருசலேமில் மிக பக்திமான்களாகிய யூதர்கள் சிலர் தங்கியிருந்தனர். உலகத்தின் எல்லா தேசத்தையும் சார்ந்தவர்களாக இந்த மனிதர்கள் இருந்தனர். ஒலியைக் கேட்டு இம்மனிதர்கள் பெருங்கூட்டமாக அங்கு வந்தனர். அப்போஸ்தலர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த மொழியில் கேட்டதால் அம்மனிதர்கள் வியப்புற்றனர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

அப்போஸ்தலர் 18:  24 அப்பொல்லோ என்னும் பெயருள்ள யூதன் எபேசுவிற்கு வந்தான். அப்பொல்லோ, அலெக்ஸாண்டிரியா நகரத்தில் பிறந்தவன். அவன் கல்வியில் தேர்ந்தவன். அவன் வேத வாக்கியங்களை வல்லமையுடன் பயன்படுத்தினான். 25 கர்த்தரைப் பற்றி அவன் கற்றிருந்தான். அப்பொல்லோ ஆன்மீக உற்சாகம் நிரம்பியிருந்தான். இயேசுவைக் குறித்து மக்களிடம் பேசிக்கொண்டிருந்தான். இயேசுவைக் குறித்து சரியான கருத்துக்களையே அப்பொல்லோ கற்பித்தான். அவனுக்குத் தெரிந்தது யோவானின் ஞானஸ்நானம் மட்டுமே. 26 அப்பொல்லோ ஜெப ஆலயங்களில் துணிவாகப் பேசத் தொடங்கினான். ஒவ்வொரு முறையும் அவன் துணிவுடன் அதைச் செய்தான். அவன் பேசுவதைப் பிரிசில்லாவும் ஆக்கில்லாவும் கேட்டனர். அவர்கள் அவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று தேவனுடைய வழியை இன்னும் துல்லியமாக அறிய உதவினார்கள். 27 அகாயா நாட்டிற்குப் போவதற்கு அப்பொல்லோ விரும்பினான். அதற்கு எபேசுவின் சகோதரர்கள் அவனுக்கு உதவினர். அகாயாவிலுள்ள இயேசுவின் சீஷர்களுக்கு அவர்கள் ஒரு கடிதம் எழுதினர். அக்கடிதத்தில் அப்பொல்லோவை இச்சீஷர்கள் வரவேற்குமாறு அவர்கள் கேட்டனர். அகாயாவில் உள்ள இந்தச் சீஷர்கள் தேவனுடைய கிருபையின் மூலமாக இயேசுவில் விசுவாசம் வைத்திருந்தார்கள். அப்பொல்லோ அங்கு வந்து சேர்ந்தபொழுது அவன் அவர்களுக்கு மிகவும் உதவினான். 28 அவன் எல்லா மக்களுக்கும் முன்பாக யூதர்களுக்கு எதிராக மிக வன்மையாக வாதிட்டான். யூதர்கள் தவறான போதனைகளைப் பெற்றிருந்தார்கள் என்பதை நிரூபித்தான். அவன் வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி இயேசுவே கிறிஸ்து என்று காட்டினான்.

அப்போஸ்தலர் 19: 1அப்பொல்லோ கொரிந்து நகரில் இருந்தபோது எபேசு நகருக்குச் செல்லும் வழியில் பவுல் சில உள்பகுதிகளின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். பவுல் எபேசுவில் சீஷர்கள் சிலரைக் கண்டுபிடித்தான். பவுல் அவர்களை நோக்கி, “நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா?” என்று கேட்டான்.இந்தச் சீஷர்கள் அவனுக்கு, “நாங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிக் கேள்விப்படவே இல்லை” என்றனர்.எனவே பவுல் அவர்களை நோக்கி, “பின் நீங்கள் எத்தகைய ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான்.அவர்கள், “யோவான் கற்பித்த ஞானஸ்நானம் அது” என்றார்கள்.பவுல், “மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புவதைக் காட்டுவதற்கு யோவான் அவர்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான். அவனுக்குப் பின் வருகிற ஒருவரை நம்பும்படியாக யோவான் மக்களுக்குக் கூறினான். அவர் இயேசுவே” என்றான்.அவர்கள் இதனைக் கேட்டபோது கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றார்கள். அப்போது பவுல் அவனது கைகளை அவர்கள்மீது வைத்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது வந்தார். அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசவும் தீர்க்கதரிசனம் சொல்லவும் ஆரம்பித்தனர். இக்குழுவில் சுமார் பன்னிரண்டு மனிதர்கள் இருந்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

அப்போஸ்தலர் 8:14அப்போஸ்தலர்கள் இன்னும் எருசலேமில் இருந்தனர். தேவனுடைய வார்த்தையை சமாரியாவின் மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டார்கள்.15 ஆகவே பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பினார்கள். பேதுருவும் யோவானும் வந்தபோது சமாரிய விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டுமென்று அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.16 இந்த மக்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றிருந்தார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் ஒருவர்மீதும் இறங்கி வரவில்லை. இந்த நோக்கத்திற்காகப் பேதுருவும் யோவானும் பிரார்த்தனை செய்தனர்.17 இரண்டு அப்போஸ்தலர்களும் அவர்கள் கைகளை மக்கள் மீது வைத்தார்கள். அப்போது அம்மக்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றனர்.

அப்போஸ்தலர் 20:   கர்த்தரின் திருவிருந்தை [a] உண்பதற்காக நாங்கள் அனைவரும் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிறு அன்று கூடினோம். பவுல் கூட்டத்தில் பேசினான். மறுநாள் அங்கிருந்து செல்லத் திட்டமிட்டான். நள்ளிரவு வரைக்கும் பவுல் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான். 8 நாங்கள் எல்லோரும் மாடியிலுள்ள அறையில் கூடியிருந்தோம். அறையில் பல விளக்குகள் ஒளி வீசிக்கொண்டிருந்தன. 9 ஐத்தீகு என்னப்பட்ட இளைஞன் ஜன்னலில் அமர்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தான். ஐத்தீகு மிக, மிக தூக்க கலக்கமுற்றான். கடைசியில் அவன் தூங்கி, ஜன்னலிலிருந்து விழுந்தான். மூன்றாம் மாடியிலிருந்து அவன் கீழே விழுந்தான். மக்கள் சென்று அவனைத் தூக்கியபோது அவன் இறந்து விட்டிருந்தான். 10 பவுல் ஐத்தீகுவிடம் இறங்கிச் சென்றான். அவன் முழங்காலிட்டு ஐத்தீகுவை கட்டித் தழுவினான். பவுல் பிற விசுவாசிகளை நோக்கி, “கவலைப்படாதீர்கள். அவன் இப்போது உயிரோடிருக்கிறான்” என்றான். 11 பவுல் மீண்டும் மாடிக்குச் சென்றான். அவன் அவர்களோடு அப்பத்தைப் பிட்டு உண்டான். பவுல் அவர்களோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவன் பேசி முடித்தபோது அதிகாலைப் பொழுதாகியிருந்தது. பின் பவுல் புறப்பட்டுப் போனான். 12 மக்கள் இளைஞனை வீட்டிற்குள் எடுத்துச்சென்றனர். அவன் உயிரோடிருந்தான். மக்கள் மிகவும் ஆறுதல் அடைந்தனர்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard