தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவரும் அந்தணரும் வேதங்களும்


Guru

Status: Offline
Posts: 1049
Date:
திருவள்ளுவரும் அந்தணரும் வேதங்களும்
Permalink  
 


 

திருவள்ளுவரும் வேதங்களும் - பார்ப்பனர்களும்

 
தமிழில் இலக்கணம் செய்த தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பார்ப்பனர்களே என்பது தமிழ் பாரம்பரிய வரலாறு. வள்ளுவரை - பஞ்சாங்கம் செய்யும் வள்ளுவர் சாதி எனச் சொல்வோரும் உண்டு.
 

thiruvalluvar.png
                                   திருவள்ளுவரின் 14ம் நூற்றாண்டு சிலை
தமிழர்களின் மூத்த தொல்குடி அந்தணர்கள் அல்லது பார்ப்பனர்கள் என மிகத் தெளிவாய் சிலப்பதிகாரம் கூறுகிறது.
 பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து  சிலம்பு 7. வரந்தரு காதை

திருக்குறளில் வள்ளுவர் வேதங்களையும், பார்ப்பனர்களையும் போற்றியே குறளில் கூறி உள்ளார்.
                                              download.jpg

திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்
ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
   
“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை
மோசமான ஆட்சியினால் வரும் கேடு  கொடுங்கோன்மை
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
தமிழ் பகைவர்களான கிறிஸ்துவ பாதிர்கள், மற்றும் அவரோடு பொருள் பெற்று துணை நின்ற திராவிட அரசியல்வாதிகளின் விஷபோதனையாலும் பல உரைகள் பிதற்றலாய் எழுதப்பட்டுள்ளன, அதில் அறு தொழிலார் என்பதை ஆறு தொழில் என மட்டுமின்றி நூல் என்பதைக் கொண்டு நெசவு, அறுக்கும் நூல் என்றெல்லாம் வள்ளுவரையும், தமிழர் மெய்யியலையும் பழித்து உரைகள் வந்துள்ளன.

நாம் அறுதொழிலோர் எனில் சங்க இலக்கிய நடைமுறையில் காண்போம்.
 
பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.


 ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
 ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்”                      – பதிற்றுப்பத்து 24)
 கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்   (பதிற்றுப்பத்து  பாட்டு - 74
 அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் புறம்  -126-11
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு புறம் 361/4,5
அறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2

நல்ல அரசன் அந்தணர்களின் வேத அற நூல்களை உறுதுணையாய் ஆட்சி செய்ய வேண்டும், அரசன் மோசமான ஆட்சி செய்தால் அந்தணர் வேதம் மறப்பர் என வள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி கூறுகிறார்.

வள்ளுவர் பார்ப்பனர் வேதம் ஓதுதலை மறந்தாலும் குடி பிறப்பால் உள்ள ஒழுக்கம் பேண வேண்டும் என்கிறார்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (-134 ஒழுக்கமுடைமை)
 பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

 ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில்  வேதம்  பிராமணர்ளை தான் குறிக்கிறது.
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை  - சிலப்பதிகாரம் 15-70
ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25
ஓத்து இலாப் பார்ப்பான் உரை      இன்னா நாற்பது 21

வள்ளுவர் குறளின் அந்தணர் எனும் சொல்லை மேலும் இரண்டு குறளில் கூறி உள்ளார்.
 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.                                   (8-கடவுள் வாழ்த்து)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.                   (30-நீத்தார் பெருமை)
இதில் "அந்தணர் என்போர் அறவோர்" எனும் குறளை தமிழ் மெய்யியல் பகைவர்கள் திரித்து வள்ளுவர் கூறியதை விட்டு கூறாததை சொன்னதாய் கேவலமாய் பயன்படுத்துவர்
நீத்தார் பெருமை - அதிகாரத்தில்; அந்தணர் என்பதை   துறவி எனும் பொருளில் வள்ளுவர்  ஆண்டுள்ளதை,  அந்தணர் குல மரபை  ஏற்க வில்லை என தமிழர் மரபை மீறி பொருள் கூறுவர்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தால் தான் பிறப்பு கடலைக் கடக்க இயலும் என உள்ளதை - எந்த தமிழ் அறிஞரும் சுட்டுவதே இல்லைகடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எனும் சொல் அந்தணர் கடவுளைக் குறிக்கும், 
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,

                ..............அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்  - பரிபாடல் 5ல் -இவை முறையே பிரம்மாவையும், சிவ பெருமானையும் குறிக்கும்
 திருவள்ளுவர் தமிழர் மெய்யியல் மரபில் அந்தணர் என்பதை கடவுள் என கடவுள் வாழ்த்து  அதிகாரத்திலும், நீத்தார் பெருமை  துறவியர் அதிகாரத்திலும் என பயன்படுத்தி உள்ளதை சரியாய் சொல்ல வேண்டும்

திருவள்ளுவர் வேததை பார்ப்பான் ஓத்து, அறுதொழிலார் நூல் எனச் சொன்னது போலவே மறை எனவும் பயன் படுத்தி உள்ளார்.

 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.                  (28-நீத்தார் பெருமை)

தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.

வடமொழி வேதங்கள் முனிவர்களால் இயற்கையிலிருந்து கேட்டு பெற்றவை, இப்பொருளிலேயே ஸ்ருதி என அழைக்கப்படும்.
வேதங்களிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் எழுந்த பாணினியின் இலக்கண வரைமுறையினுள் வாராதமையால் எழுத்தில் வடிக்க மாட்டார்கள், குரு மூலமாய் ஒத்து கூற ஓதிக் கொள்வதால் ஓத்து. எழுதாமையால் மறை, எழுதாக் கற்பு எனும் பெயரில் சங்க இலக்கியத்தில் காணலாம்.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 5
எழுதாக் கற்பினின் சொல்லுள்ளும் குறுந்தொகை 156

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப.   தொல்காப்பியம்-செய் 480

 மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,  திருமுருகாற்றுப்படை2.

 பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.    தொல் -பொருள-கற் 4
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் - தொல்  பொருள். கற்:5/29


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் (251)
உயிர் -
உடம்பு 73, 80,77, 501, 338, 131, 258- 667, 402 , 618உடல் சுவை -253 65 ,1101 330, 627 1029 3, 943
- பிறப்பு 339 340 361 338 -340 10
656, 923
யாக்கை - 79
மன்னுயிர் 68244, 268, 315. 457
மறுமை 98 459 904, 1042
இம்மை 96 1042
குறள் 1315:
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
ஆருயிர் 73, 1141 இன்னுயிர் 327 1209
மாயா உயிர் 1230
1122 73 1132 1070 334 16 1020

உடம்பின் (3)
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லா தீ வாழ்க்கையவர் - குறள் 33:10
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என்
நோனா உடம்பின் அகத்து - குறள் 117:3
உடம்பினுள் (1)
புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு - குறள் 34:10
உடம்பு (4)
அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு - குறள் 8:10
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை
கையாறா கொள்ளாதாம் மேல் - குறள் 63:7
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு - குறள் 95:3
இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை
குற்றம் மறைப்பான் உடம்பு - குறள் 103:9
உடம்பும் (2)
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை - குறள் 35:5
நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து - குறள் 114:2
உடம்பொடு (2)
குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே
உடம்பொடு உயிர்-இடை நட்பு - குறள் 34:8
உடம்பொடு உயிர்-இடை என்ன மற்று அன்ன
மடந்தையொடு எம்-இடை நட்பு - குறள் 113:2
உடல் (1)
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம் - குறள் 26:3
உடற்கு (1)
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு - குறள் 7:5
உயிர் (34)
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று - குறள் 8:8
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும் - குறள் 19:3
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் - குறள் 22:4
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை - குறள் 25:4
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று - குறள் 26:9
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும் - குறள் 27:8
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 33:2
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிர் உண்ணும் கூற்று - குறள் 33:6
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை - குறள் 33:7
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லா தீ வாழ்க்கையவர் - குறள் 33:10
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
வாளாது உணர்வார் பெறின் - குறள் 34:4
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும் - குறள் 51:1
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர் குன்றல் இலர் - குறள் 78:8
ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர்
போஒம் அளவும் ஓர் நோய் - குறள் 85:8
இழ-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
உழ-தொறூஉம் காது அற்று உயிர் - குறள் 94:10
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் - குறள் 97:9
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும்
நன்மை குறித்தது சால்பு - குறள் 102:3
நாணால் உயிரை துறப்பர் உயிர் பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர் - குறள் 102:7
நாண் அகத்து இல்லார் இயக்கம் மர_பாவை
நாணால் உயிர் மருட்டி அற்று - குறள் 102:10
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான் - குறள் 107:2
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர்
சொல்லாட போஒம் உயிர் - குறள் 107:10
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
பேதைக்கு அமர்த்தன கண் - குறள் 109:4
உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் - குறள் 111:6
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை
பலர் அறியார் பாக்கியத்தால் - குறள் 115:1
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என்
நோனா உடம்பின் அகத்து - குறள் 117:3
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என் அல்லது இல்லை துணை - குறள் 117:8
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
அளி இன்மை ஆற்ற நினைந்து - குறள் 121:9
நனவினான் நல்காதவரை கனவினான்
காண்டலின் உண்டு என் உயிர் - குறள் 122:3
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ வாழி பொழுது - குறள் 123:1
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
மாயும் என் மாயா உயிர் - குறள் 123:10
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம்
உள்ளும் உயிர் காதல் நெஞ்சு - குறள் 130:8

உயிர்-இடை (2)
குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே
உடம்பொடு உயிர்-இடை நட்பு - குறள் 34:8
உடம்பொடு உயிர்-இடை என்ன மற்று அன்ன
மடந்தையொடு எம்-இடை நட்பு - குறள் 113:2
உயிர்க்கு (17)
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு - குறள் 4:1
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள் 7:8
அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
என்பொடு இயைந்த தொடர்பு - குறள் 8:3
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊங்கி இல்லை உயிர்க்கு - குறள் 13:2
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு - குறள் 19:10
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு - குறள் 24:1
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு - குறள் 27:1
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல் - குறள் 32:8
புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு - குறள் 34:10
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு - குறள் 40:2
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் - குறள் 46:7
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - குறள் 48:6
துளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
அளி இன்மை வாழும் உயிர்க்கு - குறள் 56:7
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு - குறள் 95:5
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
நாண் உடைமை மாந்தர் சிறப்பு - குறள் 102:2
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து - குறள் 113:4

உயிர்க்கும் (4)
அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்
செம் தண்மை பூண்டு ஒழுகலான் - குறள் 3:10
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 37:1
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்பு இன்மை பாரிக்கும் நோய் - குறள் 86:1
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய் தொழில் வேற்றுமையான் - குறள் 98:2

உயிர்த்து (1)
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்_தொடி கண்ணே உள - குறள் 111:1

உயிர்நிலை (3)
அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு - குறள் 8:10
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு - குறள் 26:5
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10

உயிர்ப்ப (2)
ஒலித்த-கால் என் ஆம் உவரி எலி பகை
நாகம் உயிர்ப்ப கெடும் - குறள் 77:3
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலாதார் - குறள் 88:10
உயிரார் (1)
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
கழல் யாப்பு காரிகை நீர்த்து - குறள் 78:7
உயிரின் (1)
செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன் - குறள் 26:8

உயிரினும் (1)
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும் - குறள் 14:1

உயிரும் (2)
கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் - குறள் 26:10
நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து - குறள் 114:2

உயிரை (1)
நாணால் உயிரை துறப்பர் உயிர் பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர் - குறள் 102:7

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை. 
மணக்குடவர் உரை: அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.
பரிமேலழகர் உரை: அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது, மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல். (அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி அந்தணர் நூல் என்றார். 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்' (மணி. 22 208 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப் பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை: அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
மு. கருணாநிதி உரை: ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை: அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.
Translation:  Learning and virtue of the sages spring,From all-controlling sceptre of the king.
Explanation:The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 திருவள்ளுவர் போற்றும் சனாதன வேதங்களும் அந்தணர் மரபும்

வள்ளுவர் நல்ல நாடு என்பதற்கு செங்கோன்மை அதிகாரத்தில் கூறுவது

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை. 

நல்ல அரசனின் செங்கோல் என்பது அந்தணர்களின் வேதங்களிற்கும் அதனில் எழுந்த அற நூல்களிற்கும் அடிப்படையாய் இருக்க வேண்டும்.
நாம் பண்டைத் தமிழரின் வாழ்வியலைக் காட்டும் சங்க இலக்கியத்தில் பார்த்தால்
ஒதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறுபுரிந்து ஒழுகும்
அறம்புரி அந்தணர் -பதிற்றுப்பத்து, 24 : 6– 8
என்று பதிற்றுப்பத்து, அந்தணர் தம் கடப்பாட்டினை வலுகின்றது. நாற்பத்தெட்டு ஆண்டுகள் நல்ல பிரமசரிய விரதம் காத்தவர்கள்; இளமை இன்பத்தை துய்க்காமல் பிய மசரிய நோன்பு இயற்றிய பேராண்மையாளராய், அயங்கூறும் கோட்பாடுடையவராய் முத்தி வேட்கின்றனர். புறநானுாற்றின் இரண்டாவது பாடலிலேயே ‘அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தி பேசப் படுகின்றது. ‘ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்தி என்று மேலும் புறப்பாடல் கூறுகின்றது. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ வடிகள் அந்தணர்தம் செயல்களைப் பின்வருமாறு கூறு கின்றார்:
ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில்
ஒம்பும் அறுதொழில் அந்தணர். -சிலப்பதிகாரம் : 23 : 67- 70



-- Edited by Admin on Wednesday 2nd of August 2023 06:18:56 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard