கோவை செம்மொழி மாநாட்டில் 26.6.2010 அன்று திரு.கிருஷ்ணமூர்த்தி படித்த கட்டுரையில் சேரர் காசுகள் ரோமன் அகஸ்டஸ் சீசர்(ஆட்சி பொமு27-பொஆ14) காசுகளை பின்பற்றி உருவானவை, ஒரு காசு ரோமன் அகஸ்டஸ் சீசர் காசின் மேல் மாக்கோதை அச்சு வைக்கப்பட்டதையும் கூறி உள்ளார். அகஸ்டஸ் சீசர் படம் தாங்கிய காசுகள் 4ம் நூற்றாண்டு இறுதி வரை வெளியுட்டுள்ளனர்.
இந்த மூன்று காசுகளுமே ரோமன் அகஸ்டஸ் சீசர் காசை பின்பற்றி; ஒரு பக்கம் ஆட்சியின் சின்னம் அதாவது வில்லும் மறு பக்கம் அரசன் தலை அமைந்துள்ளது எனப் பழங்காசுகள் ஆய்வு பேரறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். எனவே இவை பொ.ஆ.2-4ம் நூற்றாண்டு என்பது மிகச்சரியாக பொருந்தும்