ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 126 ஒருமை-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 398 புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - குறள் 538 ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - குறள் 835
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 62 எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண் விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 107 ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார் வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு - குறள் 1269 நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும் எழு நாளேம் மேனி பசந்து - குறள் 1278
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா கண் நிறை நீர் கொண்டனள் - குறள் 1315 சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - குறள் 98 இன்மை என ஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும் - குறள் 1042
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும் இன நலத்தின் ஏமாப்பு உடைத்து - குறள் 459 மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - குறள் 904
சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - குறள் 98 இன்மை என ஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும் - குறள் 1042
பொருளுரை: மக்கட் பிறப்பில் கண்ணில்லாத குருடும், கருவில் கை, கால் முதலிய உறுப்புக்கள் தோன்றும் பருவத்தில் ஏற்படும் குறைபாட்டால் அமையும் முறையான வடிவில்லாத உடல் உறுப்புகளின் அமைப்பும், கூனும், குறுகிய வளர்ச்சியுடைய நிலையும், ஊமை, செவிடும், விலங்கு வடிவமான பிறப்பும், புத்தி பேதலித்த அறிவு மயக்கமும் ஆகிய எட்டு வகையான பெரிய குறைபாடுகள் என்று சொல்லப்பட்ட இவையெல்லாம் பயனற்ற பிறப்பேயன்றி வேறு அறம், பொருள், இன்பம் பயக்காது என்று முக்காலமும் அறிந்த அறிஞர்கள் சொன்னார்கள். அதனால் பயனுள்ள செயல் எது என நான் சொல்கிறேன். உன் பகைவர்கள் வட்ட வடிவமான வரிகளையும், சிவந்த புள்ளிகளையும் உடைய காட்டுக் கோழிச் சேவல் தினைப்புனம் காப்பவர்களைத் துயில் எழுப்பக் கூவும் காட்டில் உள்ளனர். நீயோ, உனது நாட்டில் வேலிக்கு அப்புறம் உள்ள மக்களுக்கு அறத்தைக் கருதி வேலிக்கு உள்ளே உன் இடத்தில் உள்ளவர்கள் பிடுங்கி எறியும் கரும்பின் வீணான கட்டைப் பகுதிகள் அங்கிருக்கும் குளங்களிலுள்ள தாமரை அரும்புகளின் மீது விழுந்து அவ்வரும்புகள் சிதறிக் கிடப்பது, கழைக் கூத்தர்கள் ஆடும் களத்தில் பூக்கள் சிதறிக் கிடப்பது போல் தோன்றும் வளமான நாட்டை உடையவன். ஆதலால், உன் செல்வம் நீ அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் அடைவதற்குப் பயன்படட்டும் பெருமானே! அவ்வாறு பயன்படாது போனால், நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறியவனாவாய்.
மனிதப் பிறப்பில், சிறப்புகள் இல்லாத பார்வையற்றோரும், உருவமாக அமையாத தசைத்திரளும் கூனர்களும், குட்டைவடிவினரும், பேசமுடியாதோரும், காதுகேளாதோரும், விலங்கு வடிவம் கொண்டவரும், புத்தி பேதலித்தவர்களும் என்று உலகத்தில் உயிர்வாழ்வார்க்கு எட்டுவகைப்பட்ட எச்சங்கள் எனப்படும் குறைவுகள் ஆகியவை எல்லாம் பேதைத்தன்மையுடைய பிறப்புக்களேயன்றி, அவற்றால் பயன் எதுவும் இல்லை என்று முற்காலத்திலும் அறிந்தவர்கள் சொல்லிப்போனார்கள், மேலும் அந்தப் பயன்களின் கூறுபாடுகளே நான் உரைக்க வந்தது, வட்டமான வரிகளையும், சிவந்த புள்ளிகளையும் கொண்ட காட்டுக்கோழிச்சேவல் தினைப்புனம் காப்போரைத் துயிலெழுப்பக் கூவும் காட்டிலுள்ளோர் உன் பகைவர், நீயோ கரும்புக் காட்டுக்கு வெளியேநின்று கேட்கும் மக்களுக்கு, அறம் கருதி, உள்ளே இருப்போர் பிடுங்கி எறிகின்ற கரும்பின் தூக்கியெறியப்பட்ட கழை, தாமரையின் அழகிய பூக்கும் நிலையிலுள்ள மொட்டுக்களைச் சிதைத்து விழுந்ததாக, கூத்தர்களின் ஆடுகளம் போன்று காட்சியளிக்கும் உள்நாட்டில் இருக்கிறாய், அதனால் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் செய்வதற்குப் பயன்படும் உன் செல்வம், பெருமானே! பயன்படாதென்றால் அது உன்னைக் காக்காததே!