ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட அநேக தாண்டவமூர்த்தி சிற்பங்களில் பெரும்பாலும் நான்கு கரங்களுக்கு மேல்தான் காண்பிக்கப்பட்டுள்ளன. கவி காளிதாசர் இதைப்பற்றி "புஜதாருவனம்" என்ற பதத்தினால் வர்ணிக்கிறார். புஜம் என்றால் தோள். தாருவனம் என்றால் மரங்கள் நிறைந்த காடு. என்ன ஒரு சொல்வளமிக்க கற்பனை !! நமது தென்னகக் கோயில்களில் கோபுர சிற்பங்களில் அநேக கரங்களுடன் மஹாஸதாசிவமூர்த்தி வடிக்கப்பட்டுள்ளதை இங்கே உணர்வில் கொள்ளலாமே.
அடுத்தாகஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட அநேக தாண்டவமூர்த்தி சிற்பங்களில் பெரும்பாலும் நான்கு கரங்களுக்கு மேல்தான் காண்பிக்கப்பட்டுள்ளன. கவி காளிதாசர் இதைப்பற்றி "புஜதாருவனம்" என்ற பதத்தினால் வர்ணிக்கிறார். புஜம் என்றால் தோள். தாருவனம் என்றால் மரங்கள் நிறைந்த காடு. என்ன ஒரு சொல்வளமிக்க கற்பனை !! நமது தென்னகக் கோயில்களில் கோபுர சிற்பங்களில் அநேக கரங்களுடன் மஹாஸதாசிவமூர்த்தி வடிக்கப்பட்டுள்ளதை இங்கே உணர்வில் கொள்ளலாமே.
அடுத்தாக சிர்பூர் என்ற தலத்திலுள்ள கண்டேஸ்வர மஹாதேவ் ஆலயத்தில் வழிபாட்டில் உள்ள குப்தர்கால ஆடல்வல்லானைப்பற்றி பார்ப்போம். சிர்பூர் தற்போதைய சட்டிஸ்கர் ( சத்தீஸ்கர் ) மாநிலத்தில் மகாநதிக்கரையினில் உள்ள ஒரு பண்மையான நகரம். குபேர நகரம் என்ற பொருளைத்தரும் 'ஷீ(ர்)பூர்' என்ற ஆதிப்பெயரால் இது அழைக்கப்பட்டிருக்கிறது. இங்கு கிடைத்திருக்கும் ஏராளமான தொல்லியல் சான்றுகள் மற்றும் இங்கு காணப்படும் தனித்தன்மையான கலாச்சார பாரம்பரிய அம்சங்கள் போன்றவை அதற்கான ஆதாரங்களாக விளங்குகின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரமான ராய்பூரிலிருந்து 80 கி.மீ தூரத்தில், மஹாநதியின் கரைப்பகுதியில் அமைந்து பல்வேறு மதங்களையும் அரவணைத்து ஆதரவளித்து ஆண்ட சோமவன்ஷி ஹிந்து மன்னர்களின் மஹோன்னத ராஜ்யமாக இது ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது. வழிபாட்டில் உள்ள குப்தர்கால ஆடல்வல்லானைப்பற்றி பார்ப்போம். சிர்பூர் தற்போதைய சட்டிஸ்கர் ( சத்தீஸ்கர் ) மாநிலத்தில் மகாநதிக்கரையினில் உள்ள ஒரு பண்மையான நகரம். குபேர நகரம் என்ற பொருளைத்தரும் 'ஷீ(ர்)பூர்' என்ற ஆதிப்பெயரால் இது அழைக்கப்பட்டிருக்கிறது. இங்கு கிடைத்திருக்கும் ஏராளமான தொல்லியல் சான்றுகள் மற்றும் இங்கு காணப்படும் தனித்தன்மையான கலாச்சார பாரம்பரிய அம்சங்கள் போன்றவை அதற்கான ஆதாரங்களாக விளங்குகின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரமான ராய்பூரிலிருந்து 80 கி.மீ தூரத்தில், மஹாநதியின் கரைப்பகுதியில் அமைந்து பல்வேறு மதங்களையும் அரவணைத்து ஆதரவளித்து ஆண்ட சோமவன்ஷி ஹிந்து மன்னர்களின் மஹோன்னத ராஜ்யமாக இது ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது.