தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் கிறிஸ்துவ நூலா- தொடர்பே இல்லை. பேராசிரியர் P.S.ஏசுதாசன்


Guru

Status: Offline
Posts: 898
Date:
திருக்குறள் கிறிஸ்துவ நூலா- தொடர்பே இல்லை. பேராசிரியர் P.S.ஏசுதாசன்
Permalink  
 


 திருக்குறள் கிறிஸ்துவ நூலா- தொடர்பே இல்லை. பேராசிரியர் P.S.ஏசுதாசன்

 
பேராசிரியர்-  முனைவர் ப.ச. ஏசுதாசன் - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி  தமிழாய்வுத்துறை தலைவர் (ஓய்வு) எழுதிய நூல்-
IMG_20180227_142449.jpg
திருக்குறள் கடவுள் வாழ்த்தில் உள்ள எல்லப் பட்டங்களும் ஏசுவின் பைபிள் கதைகளுக்கு சற்றும் பொருந்தாமை இங்கு காணலாம்

IMG_20180227_142501.jpg

IMG_20180227_142513.jpg
 
திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”
பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

IMG_20180227_142542.jpg

IMG_20180227_142553.jpg

IMG_20180227_142603.jpg
  முடிவாக –
“திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”
பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

That is New Testament – the books of Christianity has nothing in common with KuraL
 

IMG_20180227_142638.jpg
திருவள்ளுவ்ர் எழுதிய திருக்குறளை கிறிஸ்துவர்கள் எவ்வளவு தூரம் அவமானப் படுத்த இயலுமோ அவ்வளவு செய்துள்ளனர், திருக்குறளிற்கு 20ம் நூற்றாண்டில் பொருந்தாத பல உரைகளை எழுதியதை வைத்து - திருவள்ளுவர் திருக்குறள் -தமிழர் பண்பாட்டு  நூல் இல்லை - கிறிஸ்துவ பைபிள் கதை நூலின் தழுவல் என புனைந்தனர்.
 சர்ச் 100% காசில் தமிழ் கிறிஸ்துவத் துறை என ஆரம்பித்து பைபிள் போதனையால் தான் திருக்குறள் வந்தது, அதன் எழுச்சியே சைவம், வைணவம் என பல பிதற்றல் முனைவர் பட்டக் குப்பைகள் வழங்கப் பட்டுள்ளன.
எனவே தான் திருக்குறள் மீது மதிப்பு கொண்டு நேர்மையான ஆய்வாளர் நூலை இங்கு தந்துள்ளோம்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard