அகம், புறம் என்ற பாகுபாடும், அடிஅளவில் வேறுபாடும் கொண்ட எட்டுத்தொகை நூல்கள் சமயச் சார்பில் இந்நூல்களில் பெரிய வேறுபாடில்லை. சங்க காலத்தொடக்கத்தில் பாடப்பட்ட பாடலாயின் அதில் தமிழக வழிபாட்டு நெறி புலப்படும், சங்ககாலப் பிற்பகுதிக்குரிய பாடலாயின் சமண, பெளத்த, வைதிக ஆசீவக நெறிகளின் கோட்பாடுகள் காணப்பெறும், சங்கப் பனுவல்களை வரிசையுறுத்த இவ்வலகும் பயன்படும்.
நானூறு பாடல்கள் கொண்ட நற்றிணையில் ஐம்பத்திரண்டு பாக்கள் சமயக் குறிப்புடையன. இவற்றுள்ளும் பன்னிரண்டு பாடல்கள் முருகக் கடவுளையும் வேலனையும் வெறியயர் களத்தை யும் குறிப்பன, 10! வழிபடு தெய்வம்! கண்கண்டாங்கு என்பது தற்றிணை உவமை. 10% தமக்கென ஒரு 'குடிமினர் ஒரு தெய்வத்தை வரையறுத்து வணங்குதற் பழக்கத்தை இத்தொடர் சுட்டுகின்றது. குழத்தையைப் 6 பமிடம் கொடுத்தாற்போல என்றோர் உவமைச் செய்தி பேய் நம்பிக்கையைக் காட்டுகிற து,150
மரத்திலும் மலையிலும் தெய்வம் உறைவதாக அமைந்த நம்பிக்கை இத்நூற்பனுவல்களிலும் காணப்பெறுகின்றது. 6 மாயோன் போல மலையும் வாலியோன் போல அருவியும் அமைந்தன என இயற்கையைச் சமயக் கண்கொண்டு பாடுவர், 11 காடுறை தேநோன்பியர் கையில் ஊன்வாங்கி உண்ணும் இயல்பினர் என்பதை ஒருபாடல் காட்டுகின்றது.!!5 தவசியர் நீடிய சடையும் ஆடாப் படிவமும், குன்றுறை வாழ்க்கையும் கொண்டவர் என விளக்கப் பெறுகின்றனர்.!!0 வருத்துகின்ற இயல்புடைய கடவுளை இசையால் மகிழ்விக்கலாம் என்றொரு குறிப்புப் புலனாகின்றது.!*! தலைமகள் 4 உமிர்நீத்ததற்கு யான் அஞ்சேன் பிறப்புப் பிறிதாயின் என்னாகுவது என்றே அஞ்சுகிறேன் '*? என்று மறுபிறப்புப் குறித்துப் பேசுகிறாள், இத்தகைய பாடல்கள் இரண்டு இந்நூலகத்துள்ளன.!!? விண்மீனைத் தொழுதல், கடவுட்குப் பலியிடுதல், காக்கைப் பலியிடுதல், மன்றத்தே உறையும் தெய்வத்திற்கு முதுகுயவன் பலி தருதல், ஆகியன அக்காலத் தெய்வக் கொள்கைகளாக இருந்திருக்கின் றன. !3 தீண்டித் தீண்டித் துன்புறுத்தும் சூர் மலையிடத்தது என மக்கள் நம்பியிருக்கின்றனர்.!!! மலையின்கண் தேவதச்சன் ஆக்கி வைத்த வினைமாண்பாவை கண்டார் உயிருண்ணும் இயல்புடையது எனக் கூறப்பெறும்,!!” அணங்கு கட்புலனாக இயங்கும் தன்மைத்தூ என்பது அக்கால நம்பிக்கைகளுள் ஒன்றாம், பெரும்புண் உற்றாரைப் பேய் நச்சிச்சூழூம் இயல்புடையது என்பது பனுவலோன்று காட்டும் உவமையாகும்.!1? காதலர் வழியே சென்றமையின் நெஞ்சு நல்வினைப் பக்கத்தது என வினைக்கோட்பாடு உரைக்கப் பெறுகின்ற்து,118 வறுமையாற் பொழுது மறுத்துண்ணுதற்கும் நோன்புக்கும் ஒப்புமை காணப்படுகிறது,!13 படிவ மகளிர் கடற்கரையிலுள்ள கொடிகளைக் கொய்து அவற்றின் மேலிருந்து தம் கடனாற்றுவர்.140 அருந்துயர் அவலம் தீர்க்கும் மருந்து” என்று பூதங்கண்ண னாரின் காதற்றலைவன் கூறுவது காதலைக் குறித்தது எனினும், புத்தரின் அறவுரை போலத் தோன்றக்காணலாம்.'*! கடலின் மீதுதோன்றும் ஞாயிற்றைக் கைதொழும் வழக்கமுண்டென்பதை ஒரு பாடல் காட்டுகின் றது.1”* பெருந்தெய்வத்து யாண்டு என்னும் தொடரால் காலக்கூறாகிய யாண்டும் ஒரு தெய்வமாக மதிக்கப் பெற்றமை அறியப்படுகிறது.!:* *ஐதேதகு அம்ம இவ்வுலகு படைத்தோனே”? என்ற. நத்றினைத்தொடர் உலகைப் படைத்த இறைவனை நொத்து கொள்ளும் வகையில் அமைகின்றது.!:* “இல்கலபடைத்த காலை” என்ற தொடரும், உயிரினங்கள் வாழ்தற்கிடனாகிய இவ்வையம் தெய்வத்தின் படைப்பு என்ற கருத்து190 அளிக்கின்றது.!:? பிற்காலத்துச் சமய அறம் என்று எண்ணப்பெற்ற பல கருத்துகளை. நற்றிணை வழங்குகின் றது.
புணரிற் புணராது பொருளே பொருள்வயிற்
பிரியிற் புணராது புணர்வே!:!
இவ்வகைச் சிந்தனையின் வளர்ச்சியே பொருள் நிலையாமை இன்ப நிலையாமை ஆகிய கருத்துகளை உருவாக்கியிருக்கின்றன . பொருளைத் தேடுதலும், இன்பத்தைத் துய்த்தலுமாகிய இருநெறிகளைக் கண்ணெனப் போற்றிய சங்கச் சமூகம் ஒன்றன் இழப்பில் ஒன்றுவந்தெய்வதை எண்ணிக் கவன்றிருக்கிறது. இதுவே கால வளர்ச்சியில் சமயஞ்சார்த்த நிலையாமைக் கருக்தாகியிருக்கிறது.
வைகல்தோறும் இன்பமும் இளமையும்
எய்கணை நிழலிற் கழியுமில் வுலகத்து! *
தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாமறிந் துணர்க என்ப மாதோ !:5
தீயும் வளியும் விசும்புபயந் தாங்கு
தோயும் இன்பமும் ஆகின்ற மாதோ !31
முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தார்
வாழ்நாள் வகையளவு அறிஞரும் இல்லை !30
சாதலும் இனிதே காதலந் தோழி
அந்நிலை அல்ல ஆயினும் சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலரென்று உடனமர்ந்து
உலகங் கூறுவது உண்டு !1!
கவறுபெயர்த் தன்ன நில்லா வாழ்க்கை ! :
என்பன போலும் கருத்துகள் சமயஞ் சார்ந்தவனாகப் பிற்காலத் ஆயின. சங்க காலத்தில் இவை சமயக் கண்டார் பறிலுலமமி பொதுநோக்கான் உரைக்கப்பட்டன. “அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாது மருந்தாய்ந்து- கொடுத்த அறவோன் * என மருத்துவ நெறி கூறியாங்கு வாழ்வியற்கு உறுதி தருவனவற்றை அக்காலச் சான்றவருலகம் வழங்கிற்று.” நற்றிணையில் இளம்போதியாரின் பாடல் அவர் பெயர்க்கேற்பப் பெளத்த சமயக் கருத்தை நுவலாவிடினும் 'பெரியோரெனப்படுவார் பேணத்தக்கனவற்றை பேணுதல் வேண்டும். என் : செய்தியை எடுத்துரைக்கக் காணலாம்.!3* வாய்மை நெறியை வற்பறுக்துவதாக இதனைக் கருத இடனுண்டு. சங்க இலக்கியத்தில் அகநெறி பிற்காலச் சமயத்துறைதொறும் புகுந்து சுவைமிகுந்த கற்பனைக்கும், பாடுதெறிக்கும் வளமை செய்திருக்கின்றது. ்
ஒருமகள் உடையேன் மன்னே அவளும்
செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள்
இனியே தாங்குநின் அவலம் என்றிர் அதுமற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடை யீரே
உள்ளின் உள்ளம் வவேமே உண்கண்
மணிவாழ் பாவை நடைகற் றன்ன என்
மணியேர் தொச்சியுந் தெற்றியுங் கண்டே 134
என மகட்போக்கிய நிலையில் தாய் கூறுமாறு அமைமந்த நற்றிணைப் பாட்டு **ஒரு மகள் தன்னை உடையேன் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான்? * எனப் பெரியாழ்வாரிடத்து மறுபதிப்புக் கொண்டுள்ளது. 134
குறுந்தொகையில் முப்பத்தொன்பது பாக்களில் சமயச் சார்புடைய நம்பிக்கைகள், மரபுவழிப்பட்ட வழிபாடுகள் ஆகியன காணக்கிடைக்கின்றன, இவற்றுள் ஐந்து முருக வழிபாட்டைக் குறிக்கின்றன,!57
செங்களம் படக்கொள் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட் டியானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டேட.””*
திப்புத் தோளாரின் இப்பாடற்குத் கையுறை மறுத்தது எனவும். தோழி , தலைவியை இடத்துய்த்து நீங்கியது எனவும் துறை கற்பிப்பர். கற்பிக்கப்பட்டாலன் நி அகத்துறைப் பொருண்மை ஏதும் இப்பாடலில் நேரே தோன்றுமாறில்லை. எல்லாவற்றையும் சிவப்பாகக் காணும் நெஞ்சம் முருகுறையும் குன்றத்தைப் போற்று வதாக அமைந்துள்ளது இப்பாடல், ஏனை நான்கு பாடல்கலில், வேலனை அழைத்து வெறியயர்தலும், மறியறுத்து வணங்கலுமாய செயல்கள் கூறப்பெறும். முருகனைப் “பெருந்தெய்வம்” என்று குறிப்பது நினைக்கத் தக்கதாகும், இருவர்தம் பார்வை யாலும் உணர்ச்சியாலும் மன்மொன்றிக் கா்தற்படுவதற்கும். இருவர் திருமணந்தான் இயைவதற்கும் முன்னரே அமைந்த ஊழ் காரணமெனப் பழந்தமிழர் நம்பினர். வாழும் பிறப்பிலன்றி வரும் பிறப்புகளிலும் இன்னோரே கணவனும் மனைவியுமாவதாகவும் நினைத்தனர், ்
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயாகியர் என்கணவனை
யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே !!
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல !10
நல்லைமன் றம்ம பாலே மெல்லியல்
துணைமலர்ப் பிணைய லன்னவிவர்
மனமகிழ் இயற்கை காட்டி யோயே!!!
பால்வரைந் தமைத்த லல்லது அவர்வயின்
சால்பளந் தறிதற் கியா௮ம் யாரோ
என்று பல விடங்களில் ஊழினை வற்புறுத்தக் காணலாம். இக்கருத்து எச்சமயத்திற்கும் உரியநிலையிலிருந்து பெறப்பட்டதன்று. தொன்று தொட்டுவரும் தமிழ்க்குடி இல்லறப்பிணைப்பை அழுத்தமானதாகவும் விலக்கவியலாததாகவும் அைமத்துக் கொண்டதே இந் நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கிறது எனலாம். தமிழ்ச் சமூகம் குடும்ப அமைப்பை உறுதிமிக்கதாகச் சமைத்துக்கொண்டது என்பதற்கு இந்தம்பிக்கை எடுத்துக் காட்டாகும். மறுமையுலகு, உயர்நிலையுலகு, புத்தேள் நாடு. எனப் பிறப்பு மாறி எய்தும் பெருநிலை குறித்த சிந்தனைகள் பல பாடல்களில் உள்ளன.,!13 வான நாடு பற்றி எண்ணியவர் அமிழ்தம் பற்றியும் எண்ணியுள்ளனர்.!!! துறக்கத்திற்கு மறுதலையாகிய நிரயம் பற்றியும் கருதியுள்ளனர்,!!3 மரங்களிலும் மலைகளிலும் தெறுகின்ற பண்புமிக்க தெய்வம் உண்டென்பது பண்டையோர் நம்பிக்கை.!16 தினைப்புனத்தே முதலில் விளையுங் கதிர்களைத் தெய்வத்திற்கென விடுதல் மரபென்பது ஒரு பனுவலால் அறியப்பெறும்.111 முருகனைப் பற்றிப் பண்டைப்பனுவல்கள் பரவுவது போலக் கொற்றவையையும் பரவுகின்றன.
விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாம் கைந்நால் யாவான்
புள்ளும் ஓராம் விரிச்சியு நில்லாம்
உள்ளலு முள்ளா மன்றே தோழி18
என அத்தெய்வத்திற்கு நேருங் கடவுரைப்பர், சூர்; அணங்கு பற்றிய குறிப்புகளும் சிலபாடல்களிற்் காணப்பெறும்,1:3 பிறை தொழுதலும், அது வளர்தல் போலப் பெருகியது காமம் என 'உரை.த்.தலும், மிறை வளர்ந்து பெருகிய காலத்து அதனை அரவு நுங்கித்று எனக்காணலும் அற்றைத் தமிழக வழக்கங்களாகும்,160 கூதிர் உழுவின் கூற்றம், கூற்றதது அறனில் கோள் என்று கூற்றுவர் அச்சமிகுக்கும் செதெய்வமாகக் கருதப்பட்டமை அறியலாம். நில்லாப் பொருள் எனவும் வாழ்க்கையில் திலையாமையே நிலையிற்று எனவும் கருதிய கருத்துக்கள் உள்ளன,!5? காக்கை.விருந்துவரக் கரையும் என்பது பண்டைக்கால நம்பிக்கைகளுள் ஒன்று,!:3॥ கொழுநனின் பிழைபொறுக்கும் பண்பு கடவுட் கற்பெனப் போத்றப்பட்டிருக்கிற து,!54 பொருள் நிலையாமை கூறினும், அஃதில்வழி அறமுதலாகிய நற்செயலும் நிகழாமையறிந்து உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர், இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு ''என வாழ்க்கை நடப்பியற்் கொத்த நல்லறம் வகுத்தனர்.!56 காமங்கரழ்க் கொண்ட நிலையர் எருக்கங்கண்ணி சூடி மறுகில் ஆர்ப்பரென்பர்; எருக்குச் சூடுதல் சிவபெருமான் செயலென்பர்.165 :புல்லிலையெருக்க மாயினும் கடவுட் பேணாம் என்னா” எனப் புறநானூற்றிலும் கூறுவர்.157 காமனின் கணைக்கு ஆளானவன், இடுகாட்டுறைபவன் என்ற நிலையில் அவனோடு தன்னையும் மடலேறுவோன் ஒப்புமை கொண்டு எருக்கணிந்திருக்கலாம் ,758 குறுந்தொகைப் பாடல்களுள் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் பாடிய பாடல் தமிழக மக்கள் வைதிக சமய நெறிக்கு மாறான நெெறியர் என்பதைத் தெளிவுபடக் காட்டுகின்றது.
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின்சொல் லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
. மருத்தும் உண்டோ மயலோ விதுவே 154
வைதிக தெறியினரின் துறவொழுக்கையும் அகப்பொருள் தெறி நுவலா பகேதக்கல்வியையும் தெளிவுற இப்பாட்டு எடுத்துரைக்கின்றது. குறுந்தொகை அகதூலாயினும், அதில் சமயக் கருத்துகள் சிற்சில வேறுவடிவில் இடம்பெத்றிருக்கக் கூடும். பெளத்த சமண கமய... இதறிகளின் சிறந்த கூறுகள்; எவையேனும் தமிழ்ச் சான்றவரைக் சவர்த்திருக்கலாம், நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறரர் விலங்கிரு முத்நீர் காலிற் செல்லார்'' என்பன புத்தரைக் குறித்தன என்பர் அறிஞர்...
ஐங்குறுநூற்றிள் நாற்பத்திரண்டு இடங்களில் சமயஞ்சார் கருத்துகள் காணப்படுகின்றன . இவற்றுள் பன்னிரண்டு பாடல்கள் மூருகனைக் குறித்தன.) வெறிப்பத்து முழுமையும் 6வலனை அழைத்து வெறியாடல் குறித்துக் கூறும்.
மூருகு என மொழியு மாயின்
அருவரை நாடன் பெயர்கொலோ அதுவே 18
என்று கூறுவதுகொண்டு காதற் செயற்குரிய தலைமகன் பெயர் முருகன் என்பது பெறப்படும். அகப்பாட்டுள் இயற்பெயர் "தோன்றாதாகவே பெயர் கொலோ இதுவே என்றனர். *மலையுறை கடவுள் குலமுதல்' என்ற பாத்தொடர்கொண்டு முருகன் குறவர்களின் குலமுதலாக் கருதப்பட்டான் என்பதறியப் ப்டும்.193 மேவட்கைப்பத்து முழுமையும் தலைமகனின் அறம் சமைந்த நெஞ்சை இனிது விளக்குகின்றது. தலைமகன் : புறத்தொழுக்கத்தானாக, அக்கால் தலைவி ஒழுகிய நெறியினை இப்பத்துப் பாக்களும் இயம்புகின்றன. நெற்பொலியவும் பொன்சிறப்பவும் வயல் விளையவும், இரவலர் வரவும், பிணி நீங்கவும், வந்து பகை தணியவும், வேந்தற்கு யாண்டு பல பெருகவும், அறம் சிறக்கவும், பால்உறவும், பகடு சிறக்கவுழ் பகைவர் ஒடுங்கவும், பார்ப்பார் ஓதவும் அறம் சிறக்கவும் அல்லது கெடவும், அரசு முறைசெய்யவும், -களவு இல்லாதாகவும் நன்று சிறக்கவும், தீதழியவும் மாரிவாய்க்கவும், வளம்பெருகவும் என வியங்கோள் செய்கிறது இப்பத்து, 1*₹* சமயத் தொழுகையுள் பிற்காலத்தில் இவையெல்லாம் வருதல் உண்டு. இரவலர் வருக என வேட்டுநிற்பது விருந்தோம்பலை நாட்கடமையாக நினைந்த சமூக அறனாகும், தாக்கணங்கு, உண்துறை அணங்கு, சூர், அந்தரமகளிர், பெருந்துறைத் தெய்வம், வரையரமகளிர், ஆகிய தெய்வமும், தெய்வஞ்சார்ந்தனவும் பற்றிய குறிப்புகள் இந்நூலகத்தே உள்ளன.!*5 பார்ப்பனக் குறுமகன் குடுமி வைத்துக் கொள்ளுதலை ஒருபாடல் ”-.குறிக்கின்றது.18 மகட் போகிய நிலையில் அவளைச் செவிலி தேடிச் : செல்லுதலும், வழியிடை எதிர்ப்படும் அந்தணரை வினாவுதலும் ம்ரபு. அந்தணர் தூரிய நாட்டிற்குச் செலவு மேற்கொள்வதையும், அருமறை நவின்றதாவினையும் கற்றாங்கு ஒழுகும் ஒழுக்கத்தையும் பெற்றவர் என்பதையும் இரு பாடல்கள் விளக்குகின்றன. 38 களத்தில் வழிபடுதல் பண்டை வழக்கமாகும்,1₹8 வலிமை மிக்க ஆடவனுக்கு உவமையாகக் கூற்றுவனைக் கூறுவதும் வழக்கழென் ஐறியப் படுகிறது, 188 காக்கை கரைய விருந்து வருமெனக் கருதிய வழக்கத்தை இந்நூலும் குறிக்கின்றது.!*? தந்ைதயின் பெயரை ஒருவன் தன் மகனுக்கிடுதல், மனைக்கு விளக்கு என மகளிரைப் போற்றுதல், அருத்ததி அனைய கற்பினள் எனத்: தலைலியைப் போற்றுதல் ஆகியனவும் இந்நூல் வழி அறியப்பெறும் 171
।நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும்
எம்மனை வதுவை நன்மணங் கழிகஎன! 178
என மணத்திற்கு முன் சிலம்பைக் கழற்றுதல் ஒரு சடங்கென்பது கூறப்படும். உரையாசிரியர் சோமசுந்தரனார், பசிலம்புகழீஇ என்பது மணவினைச்கண் ஒரு சடங்கு, மணமகள் இளம்பருவத்தே தொடங்கி அணிந்துள்ள சிலம்பினைக் கழற்றுதலாகிய ஒரு சடங்கு, இச்சடங்கு நாத்தூணங்கையரால் தநிகழ்த்தப்படுதலும் காண்க. சிலம்பு கழீஇயும் வதுவை மணமும் தலைவியின் பிறத்தை (பிறந்த வீடு) யில் நிகழ்த்தூதலே சிறப்பாகும், ஒரே வழி உடன்போக்கு நிகழின் இச்சடங்குகளைத் தலைவன் மனைக் கண்ணும் நிகழ்த்துதலும் உண்டு. சிலம்பு கழீஇச் சடங்கிற்கு மணமகள் உண்ணா நோன்பிருத்தல் மரபு ஆகலின் இதனைச் சிலம்புகழீஇ நோன்பு என்றும் கூறுப!'!*3 என இந்தோன்பு குறித்த செய்திகளைக் கூறுதல் கருதத்தக்கதாகும். உடன்போக்கு மேற்கொண்ட தலைளி ஒருத்தியின் செயலை அன்பில் அறன்' என அவள் தாய் சுட்டுவது அக்கால ஒழுகலாற்றினை நன்கு கரட்டுகின்றது.!!* பொய்படுகிளவி கூறுதற்கு நாணுதல் வேண்டும் என்பது அக்கால நல்லோர் எதிர்ப்பார்ப்பாகும்;!7*
பதிற்றுப்பத்தில் கிடைக்கும் எண்பது பாடல்களுள் முப்பத் தைந்து: சமயக்; ' குறிப்புடைய செய்திகளை அளிக்கின்றன. எட்டுப்பாடல்களில் கடவுள் என்ற - சொல்லாட்சி பெற்றுள்ளது எண்ணத்தக்கது. பொதுவாகச் சங்க இலக்கியங்களில். தெய்வம் என்ற சொல் வணங்கக்கொள்ளும் உருவையும். கடவுள் என்பது உள்.நிறை ஆற்றலையும் குறிப்பனவாகச் கருதுமாறு: உள்ளத, :
காடே கடவுள் மேன
உருகெழு மரபிற் கடவுள்
நிலைபெறு கடவுள்
அருந்திறல் மரபின் கடவுள்
கைவல் இளையர் கடவுட் பழிச்ச
கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை
காமர் கடவுளும் ஆளும் கற்பின்
கடவுள் வாகைத் துய்வீ ஏய்ப்ப
பவேள்வியற் கடவுள் அருந்திணை
அஞ்சுவகு மரபிற் கடவுள்
கடவுட் பெயரிய கானம் எனக் காட்டிலும், கல்லிலும், மலையிலும், மரத்திலும், வானமீனினும் வேள்வித்தீயினும் கடவுள் பொருந்தியிருப்பதாகப் பாடுவர். மாற்றருந் தெய்வம், என்பதையும் உருகெழு மரபின் அமிரை என்பதையும், துர்க்கையைக் குறிக்கும் தொடர்களாகக் கொள்ளுவர் பழைய உரையாசிரியர். பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தில் முருகன் மா வடிவமாக நின்ற சூரனைக் கொன்ற செய்தி கூறப்படுகிறது. பொருநராற்றுப்படடயைப் போலவே இந்நாலும் முருகனைச் சீற்றமுடைய கடவுளாகக் காண்கின் ஐது.1₹? சூர், பேய் அணங்கு, திங்கள், கூற்று, கூளி, வடவைத்தீ ஆகியனவும் அச்சத்தோடும் மதிப்போடும் குறிக்கப்பெறுகின்றன,!₹8 வெள்ளியாகிய சுக்கிரனும் அழலாகிய செவ்வாயும் சேர்ந்தால் மழையிலாதாகும் என்ற சோதிட நூற் குறிப்பைக் குமட்டூர்க் கண்ணனார் தன் பாட்டிற் காட்டுவர், 1893 வெள்ளிக்கோள் மழைக்குக் காரணமென்பதை மேலிரு பாடல்கள் குறிக்கின் றன. கடவுளுக்குப் பலியிடுதல், முரசிற்குப் பலிமிடுதல், ஆகியனவும் இத்நூலிற் காணப்படுகின்றன. 150
அருந்திறல் மரபிற் கடவுட் பேணியர்
உயர்ந்தோ ரேந்திய வரும்பெறற் பிண்டம்
கருங்கட் பேய்மகள் கைபுடையூ௨ நடுங்க
நெய்த்தோர் துரஉய நிறைமகி ழிரும்பலி197
என மூரசிற்கிடப்பெறும் பலியைப் டேய் கொள்ளமாட்டாது .கை நடுங்குமென்பர். பலிகொண்டு பெயரும் பாசம்* எனப் 'டபய் தனக்கிடும் பலி வாங்கிச் செல்வதாகக் "கூறுவர்.18: ஐம்பூதம், வானுறை மகளிர், ஆகியோரை ஏஎனைத்தொகை நூல்களிற் போலவே குறிப்பிடக் காணலாம், 128 தண்ணீரையே அமிர்து
எனக்கூறும் கு.றிப்புண்டு.104 : உயர் நிலையுலகம் பற்றி மூன்றிடங்களிற். செய்தி உள்ளது.!0₹ பார்ப்பார் பற்றியும் அந்தணர் பற்றியும் இத்தூல் முற்றவும் பெருமையுறச் சொல்வதனைக் குறுந்தொகை கலித்தொகை ஆகிய இரண்டின் கூற்றுகளிலிருத்து வேறுபடுத்திக் காணலாம். ஆரியர் இம௰ய மலையில் நிறைந்திருத்தல், வேள்விச் செயல், அந்தணர் அறுதொதழில் புரிதல், உரைசால் வேள்வி முடித்த கேள்வியதிவுடையரோக அந்தணர் விளங்குதல் ஆகிய செய்திகளை, இந்நூல் வழங்குவதிலிருத்து சேர நாட்டில் வவேத வேள்வி நம்பிக்கை மிக்கிருந்தமையினை உணரலரம்,!33 டேவத மத்திரங்களைப் பொருளுணர்ந்து சொல்ல பேண்டுமென்ற நினைவும், வேள்விகணளப் பலவாக :இயற்ற வேண்டுமென்ற ஆர்வமும், பார்ப்பாரை' வணங்கிப். போற்ற பேண்டுமென்ற கருத்தும் சேர வேந்தர்க்கிருந்தமையினைப் பாடல்கள் காட்டுகின்றன, தேவருக்கஞ்சி விசும்பீடத்தேதே அவுணர் தூங்கெயிலமைத்த செய்தியை ஒரு பாடல் குறிப்.பிடுகின்றது.!47
பரிபாடலிற் கிடைக்கின்ற இருபத்து நரன்கு பாடல்களுள் திருமாலுக்கு ஏழும், முருகனுக்கு எட்டும், வையைக்கு ஒன்பதும் உரியன. இவையனைத்தும் பாண்டி நாட்டையே சார்ந்தன இப்பாடல்களுள் உவமை வகையில் மூன்றிடங்களில் பாண்டியன் போற்றப்படுகின்றான்; ஆறிடங்களில் தென்னவன் கூடல் என்றும், பஞ்சவன் கூடல் என்றும் தென்னவன் வையை என்றும் புலமாண்வழுதி என்றும் பெரலம்சொரி வழுதி என்றும் வீங்குதோள் மாறன் என்றும் போற்றப்படக் காணலாம். அரசரைப் போற்றி வழிபாடு செய்து கொண்டிருந்த நிலையிலிருந்து தெய்வத்தைப் போற்றிப் பரவும் நிலையை இந்நூலும்,முருகாற்றுப்படையும் தெளிவுறக் காட்டுகின்றன. சமய நிலைக்காலம் தோக்கி இலக்கியப்புனைவு நகர்தலை இம்மாற்றம் காட்டுகின்றத;. உலகத் தோற்றம், தெய்வத்தேதேோரற்றம் பற்றிய புராணக் கதைகள், தேவர் அசுரர் பற்றிய பல் வேறு செய்திகள் வேதநூல்களில் உள்ள தொழுகைப் பகுதிகள் போன்ற பராவற்பகுதிகள், தெய்வங்களின் உருவவிளக்கங்கள் ஆகியன பரிபாடவிற் கூறப்பெறுகின்றன. இவை வேதங்களை நோக்கி அவைபோலச் செயல்வேண்டும் என்ற நோக்கில் தமக்கேயுரிய பரிபாடல் யாப்பில் செய்தனவாகலாம்.
-அகவிகை கல்லுருவானமை, அமரர்க்கமுதருத்தியது, ்: அவுணர் கடவிற் பரய்ந்தத. அன்னச்சேவலாகித் திருமால்: மழையை” வற்றச் செய்தது. இந்திரன் இமயத்தைக். காத்தல், இந்திரன் சாபமேற்றது, "இஜைற்வன். திரிபுர்த்தைச். செற்றது, உருப்பசி குதின்ர்ப் ்!' பெட்டையானமை, கடல் கடைந்தது. கருடன் வினதை சிறையீட்டது. திருமால் கருடன் செருக்கை அடக்கியது, தேவமருத்துவரின் பிறப்பு வரலாறு, பிரமன் கங்கையைப் பூமிக்கு அளித்தது” 55 ஆகிய கதைகள் இந்நூலில் காணப்படுகின்றன என்பர் உ. வே.சாமிநாதையரவர்கள், திருமாலின் உருவம், உணவு வெளிப்பாடு பற்றிக் கூறுகையில்,
மகேள்வியுட் கிளந்த ஆசான் உரையும்
படிநிலை வேள்வியுட் பற்றியாடு கொளலும்
புகழியைந் திசைமறை யுறுகனல் முறைமுட்டித்
திகழொளி ஒண்சுடர் வளப்பாடு கொளலும்
நின்னுருபு உடனுண்டி
பிறருடன் படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு
என்பர் கீரந்தையார். பரிமேலழகர் இப்பகுதிக்கு வரையும் உரை காணத்தக்கது. “* வேள்விக்கிறைவனை: “ஆசான்” என்றார் தலைமை பற்றி, அவனுரையாவது வேதத்துள் நான்காம் வேற்றுமையை ஈறாகவுடைய தெய்வப்பெயர்ச்சொல். அதனை வைதிகர் உத்தேசத் தியாகமென்ப. அச்செொல்லே கடவுட்கு உருவென்பது சயிமினியாற் செய்யப்பட்ட வைதிக நூற்றுணி பாகலின் அதனை * உருபு! என்றும் யூபமாவது மாயோனாகச் சொல்லப்படுதலால் பசுக்களைப் பிணித்துக்கொள்கின்ற அதனை உண்டி” என்றும் ஊன்கணாரர்க்குப் படிமையினும் அந்தணர்க்கு வேள்வித்தீயினும் யோகிகட்கு உள்ளத்திலும் ஞானிகட்கு எவ்விடத்தும் வெளிப்படுதலால் ௬டர்வளப்பாடு கோடலை *அத்தணர் காணும் வரவு! என்றும் கூறினார் என்பது அவர்தம் உரை” வைதிக சமயத்தாக்கம் தமிழகத்தில் எந்த அளவு ஊடுரு வியிருந்தது என்பதை இப்பகுதி விளக்கும். மூன்றாம் பரிபர்ட்டில் சாமலேதக் கருத்துகளைத் தொகுத்துக் கூறுதலைக் காணலாம்.₹0: வேதத்தை இந்நூல் வாய்மொழி யோடை” என்றும் நான்முகனை வாய்மொழிமகன் ' என்றும் குறிக்கின்றது.?03
திருமாலைப் பரவும் ஏழு பாடல்களில் நல்லெழுனியார் பாட்டும் இளம்பெருவழுதியார் பாட்டும் [வத தெறி தழுவாது தமிழ்நெறியமையப் , பாடப்பெற்றுள்ளன.. முருகனைக் கு.றித்ந கடுவன் இளவெயினனார் பாட்டு முருகனின் பிறப்பை முற்றிலும் புராணத்தைத் தழுவியுரைக்கின்றது.:04 இப் பாட்டின் கண்
வேல னேத்தும் வெறியு முளவே
அவை வாயு மல்ல பொய்யு மல்ல
நீயே வரம்பிற்றிவ் வுலக மாதலின்
சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை
சிறப்பினுள் உயர்பாகலும்
பிறப்பினுள் இழிபாகலும்
ஏனோர் நின் வலத்தினதே :05
என்று கூறும் கருத்துகள், நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் வேவேலனைக் குறித்துக் கூறியதற்கு மாறானவை. வேலனை அழைத்து வெறியயர்தலும், முருகு மெய்த்நிறுவிய நிலையில் வேலன் தலைவி நிலை குறித்துக் கூறத் தாய் கேட்டலும் பண்டைச் சங்கச் சமூக நம்பிக்கை வழக்குகளாகும். இஃதன்றி இறைறைவன் அருள்காரணமாக உயர்பிறப்பினன் ஆதலும், அவனருள் பெறாமையின் இழிபிறப்பினன் ஆதலும் கூடுமென இந்நூல் உரைப்பதும் நினையத்தக்கன.:06 மறுபிறப்பு இல்லையென்று கூறும் மட வோர் நின்தாள் சேரார் எனக்கூறுவதினின்றும் மறு பிறப்பில் எயினனார் கொண்டியிந்த நம்பிக்கை யறியப்படும். எவ்வளவு வைதிக நெநறிக்கருத்துகள் விரலியிருப்பினும், தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை நிலையைப் புலவர் கைநெகிழ்த் திலர் என்பதற்குக் குன்றம் பூதனாரின் பாடற்பகுதி சான்றாகும்.
கான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர் - கேண்மின் சிறந்தது
காதற் காமம் காமத்துச் சிறந்தது
விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி
புலத்திலிற் சிறந்தது கற்பே யதுதான்
இரத்தலும் ஈதலும் இவையுள் எளீடாப்
பர்த்தை யுள்ளதுவே .பண்புறு கழறல்.
.. தோள்புதி துண்ட பரத்தையிற். சிவப்புற
. நாளணிந் துலக்கும் சுணங்கறை யதுவே
டுகளணங் குறமனைக் கிளந்துள சுணங்கறை
சுணங்கறைப் பயனும். ஊடலுள். ளதுவே: அதனால்
நல்லார் அணியிழை அறியாுகறல்தவறிலர் இத்
இகறலைக் கொண்டு துனிக்குந்
தள்ளாப் பொருளியல்பிற் தண்டமிழாய் வந்திலர்
கொள்ளாரிக்குன்று
பயன்.:0* களவுப் புணர்ச்சியின் தனிச்சிறப்பை வையையாறு பார்ப்பாரும் அந்தணரும் எனக் எடுத்துரைப்பர். நீராடற்கேற்றதாக இல்லாமல், மைந்தரும் மகளிரும் ஆடித்துய்க்குமாறு அமைந்த தெனப் பாடுவர். 15 வாழ்க்கைப் பற்றிலாத துறவையும் முனிவை குறித்த முருகனைக் ஊக்கியதில்லை சமூகம் யும் சங்கச் பேரழகே இயற்கைப் பரங்குன்றின் பரிபாடல் பலவற்றிலும், பாடிற்றிலர் புராணம் புலவரும் எல்லாப் புனையப்படுகின் றது. வெள் பெருகி வரும் வையை என்பது நோக்கத் தக்கதாகும். காக்குமாறு நெஞ்சிற் ளைத்தைக் கரைகோலிக் காக்கும் ளத்தை நிறைகோலிக் பற்றித் தோழி ஒருத்தி கூறுவது திறத்தைக் காட்டுவதாகும் இன்ன பண்பின் கதுவும் காம வெள் தைந்நீராடல் நோன்பு மகளிர் தமிழர்களின் மணவாழ்க்கைத் இன்தைந் நீராடல் மின்னிழை கன்னிமை நறுநுதல் மகள் மேம் பட்ட கனியாக் கைக்கிளைக் காமம இன்னியல் மாண்டூதர்ச்சியிசை பரிபாடல் முன்முறை செய்தவத்தின் இம்முறை இயைந்தேம் மறுமுறை அமையத்தும் இயைக நயத்தகு நிறையே 201, நறுநீர் வையை என மறுமைக்கும் காதலிணைபிரியா வாழ்க்கை வேணடும் பரிபாடல் தமிழரின் காதற் சமயத்தைக் காட்டுவது, தெய்வமும் இக்காதல் நெறியே பூண்டது கொள்கையைப் பாடுகின்றனர். தமிழ்க் என அழுத்தமுற மொழிவது.
கலித்தொகையின் மொழி அழகு பேச்சுமொழிக் கிளவிகளை யும் உட்கொண்டது. இக்காரணம் கொண்டு அதனை. ஏனை இலக்கியங்களிலும் குறைவாக மதிப்பிடக் கூடாது. அரிய கருத்துக்களையும் உயர்ந்த பண்பாட்டு நெறிகளையும் கூறுவதில்இத்தொகை மாசறு நூல் பின்னிடவில்லை. பெருந்திணைப் பாட்டும் அன்பின் பெருக்கத்தாற் பிறந்ததன்நி ௮ன்பு வறுமைப்பட்ட பருவக் கிளர்ச்சியை தொன்பது மொழிவதில்லை. பாடல்களில் சமயஞ்சார் கலித்தொகையில் ஐம்பத் எண்ணங்கள் மொழியப்படுகின்றன, அந்தணர் குறித்து ஆறு பாடல்.கள் செம்தி கூறுகின் றன! 1௦ அறுதொழில் புரிதல், தமக்குரிய உடையும்ஒழுக்கமும் பேணல், எரிவலம் வருதல், இறவினைபுரிய இன்புறுதல், அந்திமாலை எதிர்கொளல், வேத மத்திரங்களைக்கண்மூடி நினைதல் ஆகியன கலித்தொகையிற் பெறப்படுகின்றன
'எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடை நிழல்
உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்
நெ.றிப்படச் சுவலைசைஇ. வேறொரா நெஞ்சத்துக்
, கு.றிப்பேவல் செயன்மாலைக் கெலளைரடை யந்தணீர் 31!
என அந்தணரின் உயர் ஒழுக்கநெறி கூறும் கலித்தொகை பார்ப் பான் ஒருவனின் ஒழுக்கக் கட்டையும் நுவல்கிறது, “1” வேதொரா நெஞ்சத்தோடு தாயள் ஒருத்திக்கு இதுகாண் சமுதாய அறம் எனக் கற்பிக்கும் அறவழி அந்தண்மை களவைப் போற்றுகிறது, ஆகவே இவ்வந்தணர் தமிழ் ஒழுக்கம் சான்ற அறவோரரவர். தலைவனை இரவுக் குறிக்கண் காண நின்ற தலைமகளைத் தொழுநோய் கொண்ட பார்ப்பனன் காதல்மொழி பேசியும், பெண் பேயெனக் கருதியும் அல்லற்படுத்திய தன்மையினைக் குறிஞ்சிக் கலியிற் காணலாம். கலித்தொகை காமனைக் குறித்து எட்டுப் பாடல்களிற் கூறுகின்றது. 1“ காமனுக்கு வேனிற் காலத்து விழாவெடுத்தல், விருந்தயர்தல், மகரக்கொடியை ஏத்துதல், காமன் படைவிடுதல், காமனுக்குக் கோயில் இருந்தமை, ஆகியன இப்பாடல்களால் அறியப்படுகின்றன , *74 பலராமன், கண்ணன் திருமால் சிவபெருமான், முருகன் ஆகிய தெய்வங்கள் நிதம் குறித்துப் பலவிடங்களில் உவமையாகின்றனர். முருகனைக் குறித்து ஐந்து பாடல்களிலும், காலனைக் குறித்து ஐந்து. பாடல்களிலும் செய்திகள் உள்ளன. “15 வரையுழை தெய்வமென்றும். கொடிச்சியர் கைத்தொழுகுன் றமென்றும் வென்வேலான் மலையென்றும் சூர்கொன்ற செவ்வேலான் என்றும் கூறும் கலித்தொகை ஏனை நூல்களைப் போல வெறியாட்டை விளக்கமுறக் கூறாமை எண்ணத்தக்கதாகும். காமனை வண ங்குைக அயல் தெெறியென்ப.து. சிலப்பதிகாரக்களாத் திறமுரைத்த காதையால.றியப்படும். ஆகவே வழிபாட்டுதெதியில், சிலப்பதிகாரத்தூக்குச் ,சற்று முற்பட்டபடி நிலையில்: கலித்தொகை அமைந்தது எனக் கருதலாம், அத்தணார்க் கருமை. ச்கர்ந்தது மூவெயிலுடன் ஐது, இராவணன். மலையெடுக்கச் சேவடிக் கொழுந்தால் ஊன்றியது., கணிச்சியாகிய. படை கொண்டது. குழவித்திங்கள் சூடியது. முக்கண் பெற்றிருப்பது, படைத்த உயிர்களைத் தொகுப்பது: த்ட்சிணா மூர்த்தியென' அமர்ந்திருப்பது, ஆதிரையான் ள்ன் வழங்கப்பெற்றது ஆகிய பல்வேறு செய்திகள் சிவபெருமானைக் குறித்து இந்நூலில் கூறப்பெறுகின்றன. திருமால் பாட்டும் யாழும் கேட்டுப் பள்ளி கொண்டமை போலக் கடலும் ஒலியவிந்த ஜதெதென நெய்தற்கலி உவமிக்கும் *1₹ ஞாலத்தைமூன்றடியால் அளந்த திருமாற்கு மூத்த பலராமனது உடைபோலக் கடல் நிறங் காட்டிற்றென்னும். '* திருமாலின் தோளாரம் போலக் கடற்கரை அறலிடத்து மலர்கள் விளங்கின என்னும். £*1* மல்லரை மறஞ்சாய்த்த கண்ணனின் செயலும் உவமையாக்கப்பெறுகின்றது .
பாரதக்கதைக் கூறுகளை இந்நாலே மிகுதியும் எடுத்துக் கூறுகிறது எனலாம், அரக்குமாளிகையை தீயுறுத்தியபோது வீமன் தன் உடன் பிறந்தோரை அதனின்றும் காத்தது. துரியோதனின் தொடையைப் பிளந்த வீமன் விறல், நூற்றுவர் மடங்க ஐவர் அட்டது. கன்னன் ஞாயிற்றுப்புத்ததள் மகனென்பது, திட்டத்துய்மனை அசுவத் தாமா கொன்றது, துச்சாதனன் நெஞ்சை வீமன் பிளந்தது, ஆகியன அக்கால மக்களுக்குப் பாரதக் கத முழுவதும் அறிமுகமாகியிருத்தமையினைக் காட்டும். :1* சிவன் மறலியை வதைத்தது கண்ணன் கேசியைக் கொன்றது ஆகிய புராணச் செய்திகளும், இந்நூலிற் கூறப்படுகின்றன . **: திருமகளின் மார்பு முத்தாரம், தவஞ்செய்தார் நுகர்ச்சி, கொல்லிப்பாவையின் வனப்பு, அமிழ்தத்தின் சுவை, பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் கைநொடித்துச் செய்தி கூறல், மாயவன் மார்பில் திருமகள் உறைதல், தவம்புரிந்தோர் உடம்பொழித்து உயர் நிலையுலகம் எய்தல், அருந்தவமுதல்வன் பொய்கூறாமை, வழிபடுதெய்வமே தோய்செய்தல் ஆகியன உவமையாகக் கையாளப்பெறுகின் றன .3!
“அறிந்தன ராயின் சான்றவிர் தான்தவம்
ஒரீசித் துறக்கத்தின் வழீஇ ஆன்தநோர்
உள்ளிடப்பட்ட அரசனைப் பெயர்த்தவர்
உயர்திலை யுலகம் உறீஇ யாங்கென்
துயர்நிலை தீர்த்தல் நுந்தலைக்" கடே 253
என் நெய்தற் கலியில். திரிசங்கு பற்றிய செய்தி உவமையாக்கப்படக் காணலாம். கடவுள் நிலையுயர்த்தும் என நம்புதல், புத்தேளிர் கோட்டம் வலம்செய்தல், தெய்வத்தைச்' சுட்டிச் -சூளூரைத்தல், நல்வினை செய்யின் தூறக்கம் பெறலாமெனக் கருதல் . ஆகியன அக்காலச் சமூகத்தின் தெய்வம் பற்றியவும் மறுமை பற்றியவுமான் கருத்துகளாகும்.*?4 கடைநாள் யாவராலும் அறியவொண்ணாதென்றும், கல்வி இளமையை மீட்டுத் தராதென்றும்;, யாற்றுநீர் கூபர்லக் கழியும் இயல்பிற்று இளமையென்றும், கிளையழிய் வாழ்பவன் ஆக்கம் நில்லாதென்றும், பல்வகை நிலையாமையும் இந்நூலில் தெளிவிக்கப்படுகின் நன , 31 தேவர் கள்ளருந்தாதவர் என்றும், அசுரர் கள்ளருந்துபவர் என்றும் இந்நூல் கருதுகிறது. வியாழன் செய்த பாருகற்பத்திய சூத்திரத்தையும் வெள்ளி செய்த சுக்கிர நீதியையும் கலித்தொகை குறிப்பாற் காட்டுவது எண்ணுதற்குரியது.*?5 :*இடைதெரிய ஏஎர் இருவர்” என்பது உருப்பசி, திலோத்தமையைக்குறிப்பதென்பது நச்சினார்க்கினியர் உரையால் விளங்குகிறது,*₹0 இம்மை மறுமை நம்பிக்கை பழஞ்சமூகத்தில் வேரூன்றியிருந்தது என்பதை முல்லைக்கலி தெளிவறுத்துகின்றது.*27 .
புறநானூறு பல்வவறு சமய நாகரிகக் கலவையாக அமைந்தது. தமிழர்க்கேயுரிய நாகரிக, சமயக் கூறுகளை மீட்டுருவாக்கம் செய்தற்கு அதிலுள்ள பழம்பாடல்களைக் கண்ட றிதல் வேண்டும். ஐந்து அல்வது ஆறு நூற்றாண்கிக்காலப் பாடல்களிடையே நாகரிக இடைவெளிஇருத்தல் இயற்கையே, முந்நாற்றுத் தொண்னூத்றெட்டுப் ராடல்கள் கிடைக்கும் இந்நாலகந்து நூற்று நாற்பத்து மூன்று பாடல்களில் சமயந்திற்குரியன என எண்ணத்தகும் செயல்களைக் குறித்த செய்திகளைக் காணலாம். இவற்றுள் பதினெட்டுப் பாடல்களில் கூற்றுவனுடைய மாற்றரிய ஆற்றல் கூறப்பெறும். “19 மருந்தில் கூற்றம், அறனில் கூற்றம். நயனில் கூற்றம், காலன் எனும் கண்ணிலி எனக் கூற்றுவனின் உயிர்கவரும் ஆற்றலைப் பலவாறு குறிப்பிடுவர். *கணிச்சிக் கூர்ம்படைக் கருந்திறலொருவன்' எனச் சிவபெருமானை ஒப்பவும் கூற்றுவனைப் பாடுவர். இறப்பு பண்டைக் சங்க சமுதாயத்தில் பல்வேறு சிந்தனை அலைகளை உருவாக்கியிருக்கிறது. ஐம்பந்தைந்து பாடல்களில், இம்மை மறுமை, இறப்பு, ஈமச்சடங்குகள், கைம்மை, உடனுயிர், துறத்தல், ஊழ், உயர் நிலையுலகம், வானவுலகம், இந்திரன் அமிழ்தம், கீழ்மேல் உலகங்கள், தென்புலம், வாள்போழ்ந் தடக்குதல், உலகநிலையாமை, நல்வினை போன்ற பல்வேறு செய்திகள் கூறப்ப்டுகின்றன.?!! இடுதல் சுடுதல் ஆகிய இருவகையும் பிணத்தைப் போக்குவதில் இருந்தன. இம்மை வினை மறுமைக்குக் காரணமாகும் என்னும் கருத்து அச்சமூகத்தில் ஆழப். பதிந்திருந்தாகக் காணப்படுகிறது. நல்வினை ஆற்றியோர் துறக்கம் செல்வர் என்பதில் அசையாத. நம்பிக்கையிருந்திருக்கிறது.
ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென் றுணீஇயர்
உயர்த்தோ ர௬ுலகத்துப் பெயர்ந்தன வாகலின் *43
என்று மலையமான் சோ.ழியவேனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார் பாடுவர். உறையூர் முதுகண்ணன் சாத்தனார் உலகப்பிறப்பை மிக அருமையாக உணர்த்துவர்.
கோடியுர், நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியுமிவ் வுலகத்து.. .. 48
என நிலையாமைத் தன்மையை அவர் காட்டுவர், புத்தேள் உலகு குறித்தும், தேலரது அமிழ்த உணவு ஆகியன குறித்தும், நிரயம் குறித்தும், மாறிப் பிறப்பது குறித்தும், “உடம்பை உயிர் நீங்குவது குறித்தும் அற்றைத் தமிழர் மிக ஆழ்ந்து எண்ணியுள் எனர், இல்லற வாழ்வைக் கடந்து செல்லும் துறவந நெறியைக் குதித்த சிந்தனைகளும் அறியப்படுகின்றன. வாழ்க் ை கப் பிணைப்பு நீங்குவானின் உளத்திண்மையை 'மாற்பித்தியார் இரு பாடற்களிற் பாடுவர். ₹*8 இல்லறத்தான் மகப்பிறந்த பின் மது உலகச் சிந்தளனைக்குரியன் என்பதைப் பொத்தியார் புலப்படுத்துவர், 714 இறந்தவர்க்குப் புல்மேல் பிண்டம் வைத்தல், உப்பிலா அவிப்புழுக்கலை இழிபிறப்பினோன் பலியாக அளித்தல், இறத்தவர்க்குக் கல்லெடுத்தல், கல்லைப் பரவுதல், ஆகியன இச்சமூகம் இறந்தபின்னுள்ள வாழ்க்கையினை எண்ணியிருப்பதைக் காட்டுகின்றன,
களரி பரந்து கள்ளி போகிப்
பகலுங் கூவுங் கூகையொடு பிறழ்பல்
ஈம விளக்கிற் பேய் மகளிரொடு
அஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு
இநெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீ றவிப்ப
எல்லர்ர் புறமுந் தான்க௧ண் டுலகத்து
-மன்பதைக் கெல்லர்ந் தானாய்த்
தன்புறங் காண்யோர்க் காண்பறி யாதே ***
எனத் தாயங்கண்ண்னார் இறப்பின் வலிமையை எண்ணுவர். இறப்பிற்குப் மின் யாது என்பதே ' சமயங்களின் இன்றியமையாக் கூறாக அமையச் காண்கிறோம். புறநானூற்றில் சிஷியங்ருமான் முர்கன்: பலராமள், கண்ணன், ஆகிய நான்கு தென்னங்கள் ஒரு
பாடலில் சமநிலைமிற் கூறப்பெறுகின்றன. திருமாலையும் பல ராமனையும் இரு பெருந்தெய்வெென இத்நாற் பனுவல்கள் போற்றுகின்றன. மாயோன், நேமியோன் எனத் திருமாலையும், அருந்திறல், கடவுள், செருமிகு சேய், உயர்மலைத் திருத்தகு சேஎய் என முருகனையும் இந்நூல் குறிக்கின்றது. இந்திரன், ஐந்தலை நாகம், ஐம்பெரும் பூதம், ஆகிய தெய்வங்களும் அணங்கு. பேய், பேய்ப் பெண்டிர் ஆகியன வும் இந்நூலிற் குறிக்கப்பெறும். வேத பேவள்விகளும் யூபத் தூண்களும், அந்தணர் பெற்றிருந்த மதிப்பைக் காட்டுகின்றன . பறவை எதிர்வரல் குறித்த நம்பிக்கை, கழுவாய் இயற்றுதல், கணவனை இழந்தார் மலர் சூடாமை,கைம்மை நோற்பார் கூந்தல் கொய்தல், வடக்கிருந்து உயிர்நீத்தல், கணவனை நீத்தபெண்டிர் தொடி கழித்தல், மகளிர் கலந்தொடாக் காலம், புலைத்தி இழிசினன் என மக்களுள் சில தொழிலரைக் குறைவுபட வழங்குதல், சிறுவர் ஐம்படைத்தாலி அணிதல், எருக்கம் பூவாமினும் இறைவனுக்குக் சூடுதல் ஆகியன சமூக நிலைகளைக் காட்டுவன ;549 விண்மீன் கோள் நிலைகொண்டு மழை நிலையையும் மன்னவன் நிலையையும் ஆய்த்துரைக்கும் கணிவர் அக்காலத்திருந்தனர், புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் பாட்டு தமிழரின் வானியற் கணிப்பறிவை மட்டுமன்றிச் சமூகத்தின் அழுத்தமான நம்பிக்கையை அக்கணிப்புக்கலை பெற்றிருத்ததையும் காட்டுகின்றது. சிவபெருமான் திரிபுரம் எரித்தது, வானரப் படைஞர் சீதையின் அணிகலன்களைக் கண்டெடுத்த செய்தி எல்லாம், அத்நூற் பனுவல் உவமையாக ஆள்கின்றது., 7