தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அந்தணர் வாழ்க்கை


Guru

Status: Offline
Posts: 1049
Date:
அந்தணர் வாழ்க்கை
Permalink  
 


அந்தணர் , பார்ப்பார் , ஐயர் ஆகிய சொற்கள் இக்காலத்தில் பிராமண சமூகத்தினரைச் சுட்டும் சொற்கள் எனப் பொதுவாகக் கருதப்படுகின்றன . ஆனால் , சங்க பிராமணர் என்னும் சொல் வழக்கில் இல்லை . அந்தணர் , பார்ப்பார், ஐயர் என்னும் சொற்களால் சுட்டப்பட்டோர் அக்காலத்தில் எவ்வாறு வாழ்ந்து வந்தனர் என்பது இப் பகுதியில் விளக்கப்படுகிறது . பண்டைத்தமிழ் மக்களுள் ஒழுக்கத்தாலும் பண்பாட்டாலும் சிறப்புற்று விளங்கியவரை அந்தணர் என்று அழைத்தனர் . அவர்கள் எத்தகையவர் என்பது திருக்குறளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது . எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான நிலம்போல ஈர நெஞ்சம் ( அன்பு ) உடையவர்களாய் வாழ்ந்த அந்தணரை அறவோர் என்கிறோம். 350 மனமாசுஇன்மையே 351 அறம் ஆகும் . அது இல்வாழ்க்கை , 35 : துறவு என்னும் இருவகையான வாழ்க்கைப் பகுப்பைக் கொண்டது . இந்த நெறியில் வாழ்ந்தோர் அந்தணர் எனப் பட்டனர் . இவர்கள் ஐம்புலன்களை வகைதெரிந்து ஆள்பவர்கள் ; பண்புக் குன்றின்மேல் ஏறி நிற்பவர்கள் ; நிறை மொழி மாந்தர் என்போரும் இவர்களே .354 பூணல் 353

நூல் , கரகம் , முக்கோல் , மணை ஆகியவை அந்தணர்களுக்கு உரியவை .355 ( அரசர்களுக்கும் இவை உரியனவாய் அமை தல் உண்டு . ) 356 புறத்திணைகளில் வரும் பாடாண்டிணைத் துறைகளில் இவர்கள் உரிமைப் பெயரால் குறிப்பிடப்படுதலோ, நெடுந்தகை, செம்மல் என்னும் சிறப்புகளைப் பெறுதலோ இல்லை .357 ஊரின் பெயர் , பொதுப்பெயர் , தொழிலாற்றும் கருவியின் பெயர் முதலானவற்றைச் சார்த்தியே இவர்களது பெயர் குறிப்பிடப்பெறும் .358 பண்புச் சொற்களாலும் இவர்கள் குறிப்பிடப் பெறுவர் .359 போர்ப்படையில் இவர்கள் இடம்பெறுதல் இல்லை . 360

மதுரை , 361 புகார் , 36 ஆமூர் 363 முதலான நகரங்களில் அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர் . அவர்களுக்கு அரண்மனையின் கதவு எப்பொழுதும் திறந்திருந்தது . 364 வேள்வித் தூண் நட்டு இவர்கள் தங்களது கடமைகளைச் செய்தனர் .365 குன்றுகளைக் குடைந்தாற்போன்ற பெரிய வீடுகளில் இவர்களுள் சிலர் வாழ்ந்தனர் . மாலையில்ல் பொருள் விளங்கும்படியும் , காலையில் வண்டுகள் ஒலிப்பது போலவும் தங்களது மறை நூல்களை இவர் கள் ஓதினர் .366 பொழுது போன பின் வளமனையில் வாழ்ந்த தம் மனைவியர் விளக்கு ஏற்றி வைக்க , இவர்கள் தமது வீட்டில் இருந்துகொண்டே மாலைக்காலத்தில் வழிபாடு செய்தனர் .367 இமய மலைச்சாரலில் வாழ்ந்துவந்த அந்தணர் மாலைக்காலத்தில் முத்தீ வளர்த்து வழிபாடு செய்தனர் .368 வேள்விசெய்யும் அந்தணர்களுக்குப் பெறுதற்குரிய பொருளை , அவர்கள் ஏந்தும் கையில் நீர் ஊற்றும் சடங்கோடு கொடுப்பது உண்டு .369 சிலர் புலன் அழுக்கு அற்றவர்களாயும் , பரிசில் பெற்று வாழும் புலவர் களாயும் வாழ்ந்தனர் .370

B50 குறள் . 30
351 ஷ 34
352 ஷ 49
353 க்ஷ 23

354 குறள் . 27-29
355 தொல் . பொருள் . மரபு . 615
356 ஷை 617
357 ஷ 618
358 க்ஷ 619
359 ஷை 620
360 ஷை 621
361 மதுரைக் . 468-474 ; 654-656
362 பட்டினப் .202 ( நான்மறை
363 சிறுபாண் . 188 யோர் )
364 ஷை 204-206
365 பெரும்பாண் . 315-316
366 மதுரைக் . 468-474 , 654-656 ; சிலப் . 13 : 141 ( சிலப் .13 : 142 அந்தணர் நான் மறையை நவின்றனர் . மாதவர் ஓதினர்
367 குறிஞ்சிப் . 223-225
368 புறம் . 367 : 13
369 ஷ 361 : 4-5 , 362 : 12
370 ஷை 126 : 11 , 200 : 11-12 , 201 : 7



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

 

 ஒரு மொழியின் இருப்பு எல்லாக்காலத்திலும் ஒன்றுபோல இருப்பதில்லை. சில மொழிகளின் தோற்றக்காரணிகளைப் பொருத்து அவற்றின் இயல்பும் இருப்பும் மாறிக்கொண்டே இருக்கும். உலகில் உள்ள எல்லா மொழிகளையும் இயற்கைமொழி என்று சொல்லிவிட முடியாது.

மிகக்குறைவான மொழிகள் செயற்கைமொழிகளாகவும் இருக்கின்றன. இயற்கைமொழிகள் என்பன தொடக்க நிலையில் மக்களின் பேச்சுமொழியாக இருந்து பின்னர் தேவையையொட்டிச் சொற்களையும் சொற்றொடர்களையும் பொருண்மைகளையும் உருவாக்கிச் செயற்கைத்தன்மையைக் கூட்டுவார்கள். அச்செயற்கைத் தன்மை கலை, இலக்கியம் போன்ற பயன்பாட்டு நோக்கில் அமையும்போது செயற்கைத் தன்மை அதிகம் தோன்றாமல் இயற்கைத் தன்மையோடு இயங்கும். ஆனால் சட்டம், விதிகள், அறிவியல்,சடங்குகள் போன்ற பயன்பாட்டு நிலைக்காக ஒரு மொழியை உருவாக்கும்போது  செயற்கைத் தன்மையே மிகுதியாகி நிற்கும். சம்ஸ்க்ருதம் அப்படியொரு செயற்கை மொழி. இந்தியாவில் சம்ஸ்க்ருதத்தைத் தங்கள் மொழியாக நினைப்பவர்கள் அதன் செயற்கைத் தன்மையைக் கற்பதின் வழியாகவே புலமையாளர்களாக இருக்கிறார்கள். அம்மொழியில் இருக்கும் பனுவல்களான வேதங்கள், உபநிஷத்துகள், ஆகமங்கள், மட்டுமல்லாமல் இலக்கணங்கள், காவ்யங்கள் போன்றன கூடப் பேச்சுமொழிக்குப் பக்கமாக இல்லாமல், செவ்வியல் சட்டகங்களோடும், சட்ட வரையறைகளின் தன்மையோடும் தான் இருக்கின்றன. அதன் வரலாற்றை நோக்கினால் அதன் இருப்பு வெவ்வேறு காலகட்டத்தில் விதிகளை உருவாக்கி நிலைநிறுத்தும் நோக்கத்தோடு வளர்ந்து வந்துள்ளதை அறியலாம். அதனைப் பயன்படுத்தியவர்கள், அதன் வழியாகத் தங்களுக்குக் கிடைத்த புனிதத்தன்மை, அதிகாரம் போன்றவற்றிற்காகவே கற்றுத் தேர்ந்தார்கள். அதனாலேயே சம்ஸ்க்ருதம்  தொடர்ந்து செவ்வியல் மொழியாகவே நின்றுகொண்டிருக்கிறது. அப்படி இருப்பதை அதற்கு உரிமைகொண்டாடுகிறவர்கள் விரும்புகிறார்கள். மற்றவர்களுக்குக் கற்கும் உரிமையை மறுப்பதின் மூலம், அதற்குப் பேச்சுமொழியின் இயல்பை உருவாக்க மறுக்கிறார்கள்.

 

*******

இரண்டு ஆண்டுகள் போலந்து மாணாக்கர்களுக்குத் தமிழ்மொழி கற்பிக்கச் சென்றபோது, போலந்து நாட்டில் கஷுபியன் மொழி என்றொரு மொழி வட்டார மொழியாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அம்மொழி பேசும் மக்கள் எண்ணிக்கை ஒரு லட்சம் அளவில் இருக்கிறார்கள். குறிப்பிட்ட வட்டாரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காகத் தனியாகத் தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.

ஒரு நாட்டின் எல்லா மொழியையும் சமமாக மதிப்பதும், நவீனத்தொழில் நுட்பத்தில் கிடைக்கக் கூடிய அனைத்துச் சாத்தியங்களையும் அந்த மொழிகளுக்கு வழங்குவது அந்த நாட்டு அரசாங்கத்தின் கடமை. உலக நாடுகள் பலவற்றில் வரி வடிவம் இல்லாத -சிறுபான்மையினரிடம் பேச்சு மொழியாக இருக்கும், மொழிகளுக்குக் கூடச் சம வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் அலுவல் மொழியின் வரிவடிவத்தை அளித்துப் பயன்பாட்டில் இருக்கச் செய்கிறார்கள். வானொலி, தொலைக்காட்சி போன்ற நவீனத்தொழில்நுட்பக் கருவிகளில் அதன் பயன்பாட்டை உறுதி செய்கிறார்கள்.

இந்தியாவில் சம்ஸ்க்ருதமும் ஒரு சிறுபான்மை வட்டார மொழி என்ற தன்மையோடு அதற்கான அனைத்து உரிமைகளையும் வாய்ப்புகளையும் பெறும் தகுதியுடைய மொழி என்பதை யாரும் மறுக்க வேண்டியதில்லை. சம்ஸ்க்ருதம் பேசும் மக்கள் வாழும் பகுதியில் தனியான தொலைக்காட்சி அலைவரிசையை உருவாக்கித் தொடர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றோடு காலை, நண்பகல், மாலை, இரவு என நான்குநேரமும் செய்திகளையும் வழங்கலாம். இப்போது உருவாகியிருக்கும் வையக வலை வாய்ப்பைப் பயன்படுத்தி 24 மணி அலைவரிசையாகவும் உலக அளவுப் பரவல்கொண்ட அலைவரிசையாகவும் தரம் உயர்த்தித் தரும் வாய்ப்பை இந்திய நாட்டின் அரசாங்கமே உருவாக்கித் தரலாம். இந்த வசதியை இந்திய நாட்டின் அலுவல் மொழியாகப் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகளுக்கும் பட்டியலிடப்படாத மொழிகளுக்கும் அந்த வாய்ப்பைத் தரவேண்டும்.

இந்தியநாட்டின் தேசிய அரசு, சம்ஸ்க்ருதத்தைச் சிறுபான்மை மொழி என்ற வகைப்பாட்டில் வைத்து வளர்த்தெடுக்க நினைக்கவில்லை. அந்த மொழி, இந்திய மொழிகள் அனைத்திலும் மூத்தமொழி; செவ்வியல் மொழி என நினைக்கிறது.அதன் வளமான இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை மற்ற மொழிகளுக்குக் கடத்தவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும்; அறிந்துகொள்ள வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கருதுகிறது. அந்த நோக்கத்தோடு தான் அனைத்து மக்களும் அந்த மொழிச் செய்திகளைக் கேட்க வேண்டும் என்று இந்தத்திணிப்பைச் செய்கிறது. ஆதிக்க நோக்கத்தோடு உருவாக்கி அனைத்து மாநில மக்களும் வட்டாரச் சிறுபான்மை மொழி பேசுபவர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் வலியுறுத்துகிறது.

சம்ஸ்க்ருதம் மூத்தமொழி; செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட தொன்மை மொழி என்பதை மறுப்பதற்கில்லை. அதனால் இந்தியப் பரப்பு முழுவதும் அறியப்பட வேண்டிய மொழி என்று ஒரு அரசாங்கம் நினைப்பதில் தவறில்லை என்று வாதிடப்படலாம். அந்த வாதம் ஏற்கப்படக்கூடிய வாதம் தான்.அந்த வாதத்தை ஏற்கும் நிலையில் இந்திய அரசுக்கு இன்னொரு கடமையும் முன்னே வந்து நிற்கும். இந்தியப்பரப்பில் சம்ஸ்க்ருதம் மட்டுமே தொன்மையான செவ்வியல் மொழி அல்ல. சம்ஸ்க்ருத்ததிற்கு இணையான தொன்மையுடன் செவ்வியல் மொழியாகத் தமிழும் இருக்கிறது. அம்மொழியிலும் வளமான இலக்கியங்கள் எழுதப்பெற்றுள்ளன. செவ்வியல் கவிதைகள் தொடங்கி தொடர்நிலைச்செய்யுள்களால் கதைசொன்ன சிலம்பும் மணிமேகலையும் போல இன்னொன்றை இந்திய மொழிகள் எதிலும் காட்ட முடியாது. தொல்காப்பியம் போல இலக்கண, இலக்கிய வரையறைகளைச் சொன்ன பனுவல்கள் சம்ஸ்க்ருதத்தில் தான் உண்டு.

தொல்காப்பியத்தின் நீட்சியாகத் தமிழில் இலக்கணப்பாரம்பரியம் நீண்டு கொண்டே இருக்கிறது. இந்தியச் சமயவியலுக்குத் தமிழின் பக்தி இலக்கியங்களும் சித்தர்மரபும் பெரும்பங்களிப்புச் செய்துள்ளன. கணியன் பூங்குன்றன் தொடங்கி வாழ்க்கையைத் தத்துவ நோக்கோடு விவரித்த கவிகள் பலர் இருக்கிறார்கள். சைவ சித்தாந்ததிதின் அடிப்படை நூல்கள் தமிழில் தான் இருக்கின்றன. பௌத்தத் தத்துவத்தை மணிமேகலை விரிவாக விளக்கியிருக்கிறது. அரச நீதிகளை குடும்ப நீதிகளையும் சொல்லும் மனுஸ்மிருதி, அர்த்த சாஸ்திரம் போன்றவற்றிற்கிணையாகத் திருக்குறளும் நீதி நூல்களும் தமிழில் தோன்றியுள்ளன. எனவே இந்தியாவின் இரண்டு தொன்மையான செவ்வியல் மொழிகளிலும் செய்திகள் மட்டுமல்லாது பல்வேறு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் அரசு தொலைக்காட்சிகளின் வழியே ஒளிபரப்பப் பட வேண்டும் என்பதுதானே சரியாக இருக்கும். அதற்குப் பதிலாகச் சம்ஸ்க்ருதத்தில் மட்டும் ஏன் அனைத்து இந்தியாவிற்கும் செய்தி அறிக்கை?

இது எல்லா வகையிலும் ஆதிக்கம் செலுத்துதலே. மக்களாட்சிக் காலகட்டத்தில் சிறுபான்மை மொழி ஒன்று அனைத்துப் பெரும்பான்மை மக்களின் மொழியையும் பண்பாட்டையும் ஊடுருவிக் கலந்து சிதைக்கும் வண்ணம் இந்த உத்தரவும் செயல்பாடும் இருக்கிறது. பன்முகப்பண்பாடும் மொழி அமைப்புகளும் கொண்ட ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் ஒன்று. கண்டிக்க வேண்டிய இந்த அறிவிப்பை மத்திய அரசு விலக்கிக்கொள்ள வேண்டும்.

==================================================

இந்த நேரத்தில் இந்தியவியல் அறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் இவ்விரு மொழிகளையும் பற்றி எழுதிய குறிப்பொன்றை இங்கே வாசித்துப்பாருங்கள். அக்குறிப்பு தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் இணைவைத்துப் பேசும் குறிப்பு.
 
 
இந்தியச் செவ்வியல் மொழிகள் இரண்டு: தமிழும் சமஸ்கிருதமும்
முன்குறிப்பு:
இந்தியவியல் அறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட் இந்தியச் செவ்வியல் மொழிகள் பற்றிச் சொன்ன ஒரு குறிப்பை ரவிக்குமார் தனது நிறப்பிரிகை என்னும் வலைப்பூவில் ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ளார். அதன் தமிழ் வடிவம் பலருக்கும் படிக்கக் கிடைத்தால் நல்லது என்பதால் தமிழாக்கிப் பதிவு செய்துள்ளேன்.

சம்ஸ்க்ருதம் தமிழோடு எப்போதும் போட்டி போட்டுக் கொண்டே இருப்பதாக நினைக்கும் ஒரு போக்கு நவீன காலத் தமிழர்களிடையே இருக்கிறது. இரண்டு மொழிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தம் போல வளர்த்தெடுக்கப் படுவதையும் பார்க்கிறேன். தமிழைக் கணிணியில் எழுதப் பயன்படும் ஒருங்குகுறி அமைப்புகளை (யுனிகோட்) உருவாக்கும் போதும் அந்த மனநிலை வெளிப்பட்டதைப் பார்த்துத் தான் நான் அப்படிச் சொல்கிறேன். தமிழில் இன்றும் பயன்பாட்டில் இருக்கும் கிரந்த எழுத்துக்களுக்காகவும் யுனிகோட் குறிகளை உருவாக்கலாம் என்றவுடன் அதை எதிர்க்கக் கிளம்பி விட்டனர். தமிழுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அந்தக் குறிகளைச் சேர்க்கக் கூடாது என வாதிடுகின்றனர். என்னைக் கேட்டால் கிரந்த எழுத்துக்கள் என்பன தமிழர்களுக்குரியது; அதனைச் சம்ஸ்க்ருதத்தை எழுதப்பயன்படுத்த முடியும் என்றால் தமிழர்கள் அதற்கு அனுமதித்து வளம்பெறச் செய்ய வேண்டும் என்பேன். சம்ஸ்க்ருதத்தை எழுதுவதற்கென்று கிரந்த எழுத்துக்கள் இருக்க, இப்போதெல்லாம் சம்ஸ்க்ருதப் படைப்புகள் தேவநாகரி வடிவில் தான் எழுதப்படுகின்றன. அப்படி எழுதுவதை ஒரு துயரமான நிகழ்வாகவே கருதுகிறேன். அதன் மூலம் அதன் நீண்ட வரலாறு அழிந்து போகும் வாய்ப்புகளே அதிகம். கிரந்த வரிவடிவில் எழுதுவது தமிழர்களின் ஆகப் பழைய மரபு. அதனை வட இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றாகப் பார்ப்பது மிகவும் தவறான –நியாயமற்ற- ஒரு போக்காகும்

கிறிஸ்து பிறப்பிற்கு முந்திய ஆயிரம் ஆண்டுகளில் பொல்லாக் சொல்வதுபோல ” சம்ஸ்க்ருதம் வளர்ச்சி அடைந்த மொழி” யாக இருந்தது. அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் இருந்த பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தான் அவர் வளர்ச்சி அடைந்த மொழி எனக் குறிப்பிடுகிறார். ஆனால் அதை விடவும் கூடுதல் தளங்களில் சம்ஸ்க்ருதம் இருந்தது. காஷ்மீர் முதல் இந்தோனேஷியா, கம்போடியா வரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் புழக்கத்தில் இருந்த போதிலும் சம்ஸ்க்ருதம் அங்கெல்லாம் முக்கியமான தொடர்பு மொழியாக இருந்தது. அம்மொழியை இந்துக்களை விடவும் பௌத்தர்களே அதிகம் பயன்படுத்தினர். ஒருவர் புத்தமதம் மற்றும் அதன் கொள்கைகள் பற்றிப் படிக்க விரும்பினால் கட்டாயம் சம்ஸ்க்ருதம் படித்தாக வேண்டும். சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டுள்ளவற்றின் அகலமும் வீச்சும்- இலக்கியம், இலக்கியக் கொள்கைகள், பௌத்தத் தத்துவம், அளவையியல், உடற் காட்சித் திளைப்பியல், இசை, நடனம், மருத்துவம், வானியல், கணிதம், வேதங்கள் என- நீளமானது. சம்ஸ்க்ருதம் பிராமண மேலாண்மையை உறுதி செய்த மொழி மட்டுமே என ஒருவர் நினைப்பது ஆகப் பெரும் தவறு. பிராமணர்களைக் கேலிக்குரியவர்களாகச் சித்திரித்த படைப்புகளும் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டுள்ளன. சம்ஸ்க்ருத மொழி என்பது ஒரு பெருங்கடல், அதில் எழுதப்பட்டுள்ள அனைத்துவகை எழுத்துகளையும் கற்றுத் துறைபோகியவராக ஒருவர் முயற்சிப்பது இயலாத ஒன்று. ஏனெனில் சம்ஸ்க்ருதத்தில் கற்கக் கற்க வளர்ந்து கொண்டே இருக்கும். அதல்லாமல் இந்துக்களிலேயும் கூட சம்ஸ்க்ருதத்தில் எழுதியவர்கள் அத்தனை பேரும் பிராமணர்கள் அல்ல. அதில் காவியங்களை எழுதியவர்களில் சூதர்களும் மகதர்களும் உண்டு. சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டுள்ள நாடகங்கள் பிராமணரல்லாத பலரும் சமஸ்கிருதத்தில் விற்பன்னர்களாக இருந்தனர் என்பதைக் காட்டுகின்றன. இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளும் ஒருவரால் தான் சம்ஸ்க்ருதம் மற்ற மொழிகளுக்கு எவ்வளவு வளத்தைச் சேர்த்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரைக் கன்னடத்திலும் தெலுங்கிலும் பெரிய அளவில் எதுவும் எழுதப்படவில்லை. கன்னடத்தில் இருந்த வாகனா போன்றன மிகக் குறைவானவை; விதிவிலக்குகள். அதேநேரத்தில் இவ்விரண்டு மொழிகளுமே பேச்சு மொழியாகப் பரந்துபட்ட இடங்களில் இருந்தன என்பதையும் மறந்து விடக் கூடாது. அவ்விரு மொழிகளும் தங்கள் மொழியில் இலக்கிய வளத்தை உருவாக்க நினைத்தபோது ஏறத்தாழ சமஸ்கிருதத்திலிருந்துதான் எல்லாவற்றையும் கடன் பெற்று உள்வாங்கிக் கொண்டு வளர்ந்தன. அதே நேரத்தில் அந்த மொழிகளில் இருந்த .பேச்சு வழக்கில் இருந்து எதனையும் உள் வாங்கிக் கொள்ளவே இல்லை பேச்சுமொழி இலக்கியங்கள் அவற்றில் தாக்கம் செய்யவே இல்லை என்பதை நாம் காணமுடியும். சம்ஸ்க்ருதத்தைப் போலச் செய்வதன் வழியாகவே புலவர்கள் தகுதி பெற்றனர். ஒரு தெலுங்குக் கவி தனது மொழியில் தானே எழுதிய ஒரு பிரதியைச் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பெற்ற பிரதியின் தெலுங்கு வடிவம் எனச் சொல்லிக் கொள்வதையே விரும்பினார். அதனைச் சம்ஸ்க்ருத வேதத்தோடு தொடர்பு படுத்துவதற்காக அனுவேதம் எனச் சொல்லிக் கொண்டதையும் பார்க்கிறோம்.

சரி இப்போது தமிழுக்கு வருவோம். அது சமஸ்கிருத இலக்கிய உத்திகள், வடிவங்கள் வந்து சேர்வதற்கு முன்பே விரிவான இலக்கியங்களைக் கொண்டிருந்தது. தமிழில் எழுதப்பட்டுள்ள தொடக்க கால இலக்கியங்களுக்கும் சமஸ்கிருதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவை அனைத்தும் அந்தந்தப் பகுதியின் வாய்மொழி இலக்கியத்திலிருந்து உருவானவை. இந்த உருவாக்கத்திற்குத் தமிழ் மொழி பேசப்படும் இன்றைய பகுதிகள் மட்டுமல்லாமல் வட இந்தியாவின் பகுதிகளும் பங்களிப்புச் செய்திருக்கும் என்றே தோன்றுகிறது. உலக இலக்கியங்கள் பலவற்றையும் பார்க்கும்போது தமிழின் சங்க இலக்கியம் மிகுந்த மதிப்புடையதாகவும் பாதுகாக்கப்பட வேண்டியனவாகவும் இருக்கின்றன எனச் சொல்வேன். ஏனென்றால் அவை பழங்காலத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டைக் காட்டுவதோடு சம்ஸ்க்ருத மூலங்களால் சிதைக்கப்படாத. பனுவல்களாக இருக்கின்றன.. அந்தக் காலகட்டத்தில் இருந்த எந்தப் பண்பாட்டோடும் இலக்கியப் போக்கோடும் ஒத்தத் தன்மையுடையனவாக இல்லை. தனக்கெனத் தனித்துவம் கொண்ட மரபாக இருக்கிறது.

இந்துக்கள் எழுதியனவாக இருந்தாலும் சரி, பௌத்தர்கள் எழுதியனவாக இருந்தாலும் சரி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட எல்லாம் ஒருவித மேட்டிமைத் தனத்தோடு– வட்டார மக்களின் பண்பாட்டு வளர்ச்சியிலிருந்து விலகிய தன்மையுடன் தான் இருக்கின்றன. ஆனால் தமிழ் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. தமிழின் சங்கக் கவிதைகளை வாசிக்கும் ஒருவர் தமிழ் மொழி பேசும் மக்களின் பல்வேறுபட்ட பிரிவுகளோடும், அவர்களின் வாழ்க்கை முறைகளோடும், நில வெளியோடும் அவை தொடர்பு கொண்டனவாக இருந்தன என்பதை அறிய முடியும். ஏனென்றால் தமிழ், சம்ஸ்க்ருதத்தின் தாக்கம் ஆரம்பிப்பதற்கு முன்பே தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டதாக இருந்தது. இலக்கியத்தில் மட்டுமல்லாமல் மொழியின் கூறுகளான எழுத்து வடிவம், உச்சரிப்பு முறை ஆகியவற்றில் தனித்தன்மை கொண்டிருந்ததோடு தக்க வைத்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் மலையாளம் போன்றவை தனி வரிவடிவம் கொண்டனவாக இருந்தாலும் உச்சரிப்பில் சம்ஸ்க்ருதத்தன்மையை உள்வாங்கியனவாக இருந்தன. எடுத்துக்காட்டாக பு என்பதை புஹ் எனச் சொல்வதைக் குறிப்பிடலாம்.,

சம்ஸ்க்ருதம் எப்படிப்பட்ட மொழியாக இருந்தது என்பதை என் மனக்கண்ணால் காண்கிறேன். அது தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்த பண்பாடு மற்றும் தொழில் நுட்ப அறிவை உள்வாங்கிப் பதுக்கி வைத்திருக்கும் குளம் போன்றது எனக் கணிக்கிறேன். தனித்துவமான மேட்டிமைவாதக் கருத்தியல்கள் உருவாகப் பலவிதமான கற்பனைகளை உள்வாங்கியிருக்கிறது.அம்மொழிக்கு. ஏராளமான பௌத்த இலக்கியங்கள் கொடுத்ததைப் போல மலையாளத்தோடு கலந்து உருவான மணிப்பிரவாளமும் கொடுத்துள்ளது. சம்ஸ்க்ருதத்தோடு மலையாளம் –தமிழ் கலந்து உருவான மணிப்பிரவாளம் மூலம் வளர்ந்த இலக்கணத்தை நாம் பல வழிகளில் அறியலாம். தென்னாசிய மொழிகள் பலவும் அவ்வப்பகுதியில் இருந்த பேச்சு மொழியுடன் சம்ஸ்க்ருதம் கலந்ததால் உருவாகி நிலைத்திருப்பவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஹிந்தியைப் பொறுத்தவரையில் இது முழுமையான உண்மை. சம்ஸ்க்ருதம் பேச்சு மொழியாக இல்லாமல் போனதால் அதன் நவீன வடிவமாக ஹிந்தி நிலைபெற்று விட்டது.

தமிழ் மொழி தனக்கான வரி வடிவத்தையும் எழுத்துமுறையும் ஆரம்பத்திலேயே உருவாக்கிக் கொண்டதால் சம்ஸ்க்ருதத்தின் தாக்கத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துத் தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டது. பெரும்பாலான சம்ஸ்க்ருதச் சொற்களைத் தமிழில் துல்லியமாக எழுத முடியாது. ரிஷபம் என்பதை இடபம் என்று எழுதுவதை எடுத்து காட்டாகச் சொல்வேன். சம்ஸ்க்ருதச் சொற்களை ஒதுக்கி வைத்துத் தூய தமிழ்ச் சொற்களைப் பயன் படுத்துவதையே தமிழர்கள் விரும்புகிறார்கள் என்றாலும், தமிழ் மொழியில் சம்ஸ்க்ருதச் சொற்கள் ஏராளமாகக் கலந்திருப்பதை நாம் மறுக்க முடியாது. அதைப் போலச் சம்ஸ்க்ருதத்திலும் ஏராளமான திராவிடமொழிச் சொற்கள் கலந்துள்ளன என்பதும் உண்மைதான். ரிக் வேதத்தின் துதிப்பாடல்களைப் படித்துப் பார்த்தால் அவற்றின் பல சொற்கள் நவீனத் தமிழில் புழக்கத்தில் இருப்பதை உணர முடியும். ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் தமிழர்கள் இந்தியை விடவும் சம்ஸ்க்ருதச் சொற்களை அதிகம் பயன் படுத்துகிறார்கள் (புஸ்தகம் பயன்பாட்டில் இருக்கிற்து; இந்தியின் கிபாப் இல்லை) ஆனால் இந்தி, தெலுகு, கன்னடம், மலையாளம், மராத்தி, வங்காளி போன்ற மற்ற இந்திய மொழிகளில் சம்ஸ்க்ருதப் பயன்பாடு அதிகப் படியான ஒலிப்பு நிலையை அல்லது தொனியை உருவாக்கி உள்ளது. ஆனால் தமிழில் அப்படி உருவாக்கவில்லை. அதற்குப் பதிலாகச் சமஸ்கிருதச் சொற்கள் தமிழில் அன்றாடம் பயன்படும் ஒருவிதப் பேச்சு மொழித் தன்மையைப் பெற்று விட்டன. சிநேகஹிதன், சுத்தம், சத்தம், வர்ஷம் போன்ற சொற்கள் தமிழில் பயன்பாட்டில் இருந்தாலும் அவற்றிற்கீடான தூய திராவிட சொற்களான நண்பன், தூய்மை, ஒலி, ஆண்டு போன்றனவும் நடைமுறைப் பயன்பாட்டில் இருக்கின்றன. அவையே தமிழுக்கு நளினத்தை அளிக்கின்றன.


பேச்சு மொழியின் நளினத்தைக் கெடுக்காத தூய தமிழ்ச் சொற்கள் இல்லாத நிலையில் சமஸ்கிருதச் சொற்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கக் கூடாது; பயன்படுத்த வேண்டும். இங்கே சம்ஸ்க்ருதத்தைப் பயன்படுத்துவதை வலியுறுத்தியதைப் போலவே ஆங்கிலத்தின் பயன்பாட்டையும் தள்ளிவிடக் கூடாது என்றே சொல்வேன். தமிழை வளப்படுத்த ஆங்கிலமும் தேவை. முக்கியமான செய்திகளை- தகவல்களை- பதிவு செய்யத் தேவையான தூய தமிழ்ச் சொற்களால் முடியவில்லை என்றால் அதன் அருகிலேயே ஆங்கிலச் சொற்களையும் பயன்படுத்துவது தமிழின் நளினத்தைக் கெடுக்காது என்றே நினைக்கிறேன். முடிவாக நாம் இப்படிச் சொல்லலாம். தமிழின் தனித்த அடையாளம் என்பது முதன்மையானது;முக்கியமானது. ஆனால் அதே நேரத்தில் சொல்லும்போது நளினமாகவும் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். செந்தமிழ் என்பது இதயமும் ஆன்மாவும் போன்றது . அதேநேரத்தில் சம்ஸ்க்ருதமும் ஆங்கிலமும் அதன் வலிமையை உறுதி செய்யும் கவசம் போலப் பயன்படக்கூடியன. பயன்படுத்தலாம்

சம்ஸ்க்ருதத்தால் மட்டுமல்ல ஆங்கிலத்தால் கூடத் தமிழுக்கு ஆபத்தில்லை என்பதே என் கருத்து. அப்படியொரு ஆபத்து எப்போதும் இருந்ததுமில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் தன் தனி அடையாளத்தையும் பண்புகளையும் தொடக்கத்திலிருந்து இன்று வரை பாதுகாத்து வரும் மொழியாகத் தமிழ் இருக்கிறது. தமிழ் மீது தமிழர்கள் வைத்திருக்கும் மதிப்பும், காதலும் உண்மையானது. எனவே தொடர்ச்சியறுபடாமல் அவர்கள் பாதுகாக்க முனைவார்கள். அதே நேரத்தில் சம்ஸ்க்ருதத்திற்கு அத்தகைய மதிப்பும் காதலும் கொண்ட கூட்டம் இல்லை என்பதை நானே உணர்கிறேன்.

சம்ஸ்க்ருதத்தைக் கற்கும் திறமான அறிஞர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் இல்லை. மிகக் குறைவு. சம்ஸ்க்ருத மொழியில் கலந்து விட்ட ஹிந்தி மற்றும் மலையாளச் சொற்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது அம்மொழி செத்துக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இதனால் தெற்கு மற்றும் தென்கிழக்காசியப் பண்பாட்டு வரலாற்றை அறிய முடியாமல் போகும் ஆபத்தும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி கண்டு கொள்ளப்படாத மொழியாகிய சம்ஸ்க்ருதத்தால் தமிழுக்கு ஆபத்து என தமிழர்கள் நினைப்பது நகைப்புக்குரியது. ஏனென்றால் தமிழ் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழும், சம்ஸ்க்ருதமும். இந்தியாவில் –தென் ஆசியாவில் இருக்கும் செவ்வியல் மொழிகள். அதன் பாரம்பரியம் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொள்வதே முக்கியமான தேவை. அதனால் இவ்விரு மொழிகளையும் வளர்த்தெடுக்கத் தேவையான செயல்பாடுகளில் ஈடுபடும் போது முரண்பாடுகளோ, ஒன்று இன்னொன்றை அழித்து விடும் என்பதான அச்ச மனப்பான்மையோ கொள்ளத் தேவையில்லை.


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

பாட்டுத்தொகை நூல்கள் உலகியல் சார்பானவை. அவை  'அகம்' என தனி மனிதக்  காதல் ,இல் வாழ்க்கை பற்றிய உணர்வுகள், புறம் என 300க்கும் மேற்பட்ட சிறு/குறு அரசர் போர் ஆட்சி பற்றிய கருத்துக்கள், செயற்பாடுகள் உள்ள வகையில் இயற்றப்பட்டவை. ஆயினும் தமிழர் வாழ்வில் தெய்வ வழிபாடு, மெய்யியல் நம்பிக்கைகள் ஆங்காங்கே வ்ந்துள்ளது.

அன்னியரிடம் அடிமைப்பட்டு இந்தியா இருந்த 19ம் நூற்றாண்டில் மிஷநரிகள் தாங்கள் மதம் மாற்றிட பிரித்து ஆள மொழியியல் அடிப்படையில் சம்ஸ்கிருத மொழியை ஆரியக் குடும்பம் எனவும், தமிழ் சார்ந்த தென் இந்திய மொழிகளை திராவிடியார் மொழிக் குடும்பம் எனவும்; தமிழ் மொழியானது மத்திய ஆசிய ஸித்திய மொழிக் குடும்பம் சேர்ந்தது, தமிழ் பேசுவோர் கைபர்- போலன் கணவாய் வழியே வந்து குடியேறியவர்கள் என்பதே ஆகும். பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளுக்கு மூத்த சகோதரியாக உள்ளதும், உலகின் தலை சிறந்த இலக்கண அமைப்பையும் இந்தியரால் தர இயலாது, எனவே ஆரியர் வெளியிலிருந்து வந்தனர் எனவும் ஊகக் கதைகளை பரப்பினர்.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

தொல்காப்பியம்  கற்பியலில் திருமணத்துக்குப் பின்னர் கற்பு வாழ்க்கையில் மெய்ப்பாடுகளில் முதலாவதாக "தெய்வம் அஞ்சல்" கூறி உள்ளது 

இந்தியா முழுவதும் இறைவன் வழிபாடு, மெய்யியல் ஞானத்தில் அந்தணர்கள் ஈடுபட்டது அனைவரும் அறிந்தது. மதமாற்ற பிரிவினை தூண்டலில் அந்தணர்களை ஆரியர் என கீழ்த்தரமான பொய்கள் 20ம் நூற்றாண்டு நூல்களில் பெருமளவிலும், இன்று அறிவியல், மரபணு முழுமையாக நிராகரித்த பின்பும் தமிழர் மரபை ஏற்காமல் அன்னிய நச்சு பொய் அடிமைகளாக நவீன திராவிடியார் புலவர்கள் நூல்களில் இவை தொடர்கிறது. இவை பன்னாட்டு பல்கலைக் கழக தமிழ் பேராசிரியர்களால் முழுமையாக நிராகரிப்பட்டவை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard