தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பொருநராற்றுப்படை


Guru

Status: Offline
Posts: 1049
Date:
பொருநராற்றுப்படை
Permalink  
 


பொருதராற்றுப்படையில்நான்கிடங்களிற்சமயக்கூறிப்பு புலப்படுகின்றத:. பரிசிலர்காடுவழியாகச்செல்லுங்கால்ஆண்டுறையும்தேய்வத்திற்குச்செய்யும்‌ 'முழறைமைகளளச்செய்ய வேண்டுமென்டது கூறட்படுகின்றது. இததெம்லஉம்உலைஉலந்தன்ன மென்னிழல்மருங்கின்இருப்பதாகக்கூறப்பெறும்‌. இது கொற்றைலையாகலாம்‌. தலம்செய்வோர்உடம்பை உழுத்தித்தம்குறிக்கோளில்நிற்றலை இந்நூல்குறிக்கின்றது, சரிகாலன்முருகன்போலும்சீற்றத்தையுடையவன்எனச்சிறப்பித்துக்கூறப்பெறுவான்‌. வேந்தர்க்குக்களத்தில்சினமும்சிறப்புடைப்பண்பாகிறது. வேந்தன்நில்லா உலகத்து நிலை உணர்ந்தவன்ஆதலின்பொருநர்முதலான கலைஞரை எளிதில்போகவிடான்‌: நிலைத்த புகழைப்பெறும்பொருட்டு இன்னோர்க்கு அவன்பரிசில்நில நல்குவான்‌. செல்வதிலையாமையும்யாக்கை நிலையாமையும்வேந்தரால்சீர்தூக்கி ஆராயப்பெற்றுச்செல்லும்தேயத்துக்குறுதி தேடும்முயற்சி மேற்கொளப்பெறும்என்பதறியப்படுகின்றது. காடுகிழாளாகிய கொற்றவையும்‌, குறிஞ்சி நிலத்தெய்வமாகிய முருகனும்தமிழ்நிலத்தின்தொன்மைத்தெய்வங்கள்‌. பத்துப்பாட்டில்காலத்தால்முற்பட்டது பொருநராற்றுப்படை என்பர்அறிஞர்‌. 1 காலமுப்புமிக்க இப்பாடல்இத்தெய்வங்களைக்குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்‌. செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகிய கருத்துகள்வீர நிலைக்காலத்திலிருந்து பெறப்பட்டவையாகல்வேண்டும்‌.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

பொருநராற்றுப்படை
இலை இல் மராத்த எவ்வம் தாங்கி 50
வலை வலந்து அன்ன மெல் நிழல் மருங்கில்
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றைப்
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்
முரசு முழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல 55
இலையில்லாத மரத்தின் அடியில், (ஆறுசெல்) வருத்தம் தாங்கி, 50
வலையைப் போர்த்தியது போன்ற மெல்லிய நிழலில்,
காட்டில் தங்குகின்ற தெய்வத்திற்குச் செய்யும் முறைமைகளைச் செய்துவிட்ட பின்பு -
பெருமை பொருந்தின செல்வத்தையும், பெரும் புகழையும், வலிய முயற்சியினையும்,
முரசு முழங்கும் படையினையும் உடைய மூவேந்தர்களும் சேர்ந்து
(திருவோலக்க மண்டபத்தே)அரசு வீற்றிருக்கும் காட்சியைப் போல - 55

ஆர உண்டு பேர் அஞர் போக்கிச்
செருக்கொடு நின்ற காலை மற்று அவன்
திருக் கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கித் 90
தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
அதன் பயம் எய்திய அளவை மான
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து 95
நிறைய உண்டு, பெரிய வருத்தத்தைப் போக்கி,
மகிழ்ச்சியோடே (யான்)நின்ற போது - மேலும், அம் மன்னனுடைய

செல்வம் விளங்குகின்ற அரண்மனையில் ஒரு பக்கத்தில் தங்கியிருந்து, 90
(மிக்க)தவத்தைச் செய்யும் மக்கள் தம்முடைய (தவம் செய்த)உடம்பைப் பிரியாமல் இருந்தே
(இம்மை உடம்போடு)அத்தவத்தால் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப,
வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமல் போக்கி,
கள்ளின் செருக்காலுண்டான மெய்நடுக்கமல்லது வேறு
மனக்கவர்ச்சி (சிறிதும்)இல்லாமல், துயின்று (பின்னர் உணர்ந்து)எழுந்து, 95

இன்மை தீர வந்தனென் வென் வேல்
உருவப் பஃறேர் இளையோன் சிறுவன் 130
முருகன் சீற்றத்து உரு கெழு குரிசில்
தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப்
பவ்வம் மீமிசைப் பகல் கதிர் பரப்பி 135

(என்)இல்லாமை (முற்றிலும்)அற்றுப்போக வந்தேன், வென்ற வேலினையும்
அழகினையும் பல தேர்களையும் உடைய இளயவனான சிறுவன், 130
முருகனது (சீற்றம் போலும்)சீற்றத்தையுடைய அஞ்சுதல் பொருந்திய தலைவன்,
(தன்)தாய் வயிற்று இருந்த போதே அரசவுரிமை பெற்று(ப் பிறந்து),
(தன் வலிமை)அறியாத பகைவர் ஏவின தொழிலைச் செய்ய,
(ஏவல்)செய்யாத பகைவர் நாடு மனக்கவற்சி பெருக,
கடல் மேற்பரப்பு முழுக்கப் பகலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பி, 135

தரவிடைத் தங்கல் ஓவு இலனே வரவிடைப்
பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தித் தெற்றெனச்
செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து 175
நில்லா உலகத்து நிலைமை தூக்கிச்
செல்க என விடுக்குவன் அல்லன் ஒல்லெனத்
திரை பிறழிய இரும் பௌவத்துக்
கரை சூழ்ந்த அகன் கிடக்கை
மாமாவின் வயின்வயின் நெல் 180

(இவன் பிறர்க்குக் கொடை)தரும்போது(அதில்)நிலைகொள்ளலில் ஒழிதல் இலன், (உமக்கு வந்த)வரவின் போது
பெற்ற பொருளை மற்ற ஒவ்வொருவருக்கும் நிறையத் தந்து, விரைவாக
(உமது இந்த)பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவீராயின், பலமுறை வருத்தப்பட்டு, 175
(ஒன்றும் நிலைத்து)நில்லாத (இவ்)உலகத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்து,
‘(நீயிர்)செல்வீராக' என விடுவான் அல்லன், ஒல் எனும் ஓசையுண்டாகத்
திரை முரிந்த கரிய கடலின்
கரைகள் சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பில்,

ஒவ்வொரு மா அளவிலான சிறு நிலங்கள்தோறும், நெல்லின் - 180



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard