மலைபடு கடாத்தில் பன்னிரு சமயக் குறிப்புகள் காணப் படுகின்றன. நன்னனது மலையகச் சிறப்புக்கூறுங்கால் புலவர் ஆண்டுறையும் தெய்வம் பற்றியும் கூறுவர். "பேரிசை நவிரம் மேஎய் உறையும் காரி யுண்டிக் கடவுளது இயற்கையும் ?3 எனக்குறிப்பது 4 வபெருமான் கோயிலென்பது தெளிவாகின்றது, காரியுண்டிக் கடவுள் என்பதற்கு நச்சினார்க்கினியர் நஞ்சையுண்ட கடவுள் என்பர், சிவா என்ற பெயரால் சங்க இலக்கியங்களில் இத்தெய்வம் குறிக்கப்படாமல் பிறபிற பெயர்களாற் குறிக்கப் பெறக் காணலாம். நீலமணிமிடற்று ஒருவன் என்பதை ஒளவையார் புறநானுற்றில் இதே பொருளில் வழங்கக் காணலாம். பட்டினப் பாலையிலும். இப்பாட்டிலும் தருக்கம் செய்வாரைக் குறித்த செய்திகள் கூறப்படுகின்றன. இவை சமயம் குறித்தனவாகலாம். தருக்கஞ் செய்வார் கைவிரல் களைப் போல இரட்டித்த வரகுக் கதிர்கள் விளங்கின என்பது இந்நூற்பா உவமையாம். கானவர் வெறிக்களம் சமைத்து வெறியயர்தல் உண்டென்பது உவமையால் இத் நூலிற் . புலனாகும்.:6 மலையகத்தே வரையா மகளிர் இருக்கை காணுதலால் உண்டாம் நடுக்கம், பயம்புகளில் ஒடுங்கும் பாம்பு குறித்த தொழுகை, கடவுட்கோயிலில் இன்னியம் இயம்பாது கைதொழுது மேற்கொள்ளும் செலவு, சூர்புகல் அடுக்கத்தில் ஜெரேீரென நோக்கக் கூடாமை, ஆகியன மலையக வழிகளைக் குறித்த அச்ச அடிப்படையில் தேதரன்றிய நம்பிக்கையால் விளைவன.!* வானர மகளிர் அருவியாடல், முருகற்குக் குறவர் குரவையயர்தல், மலைவழிபடுவார் குறிஞ்சி பாடிக் கைதொழுது! பரவிச் செல்லுதல் ஆகிய செயல்களும் இப்பனுவலில் உரைக்க பெறுகின்றன .98 ர
தன்னாத் தெவ்வர் உலைவிடத் தார்த்தென நல்வழிக் கொடுத்த நாணிடை மறவர் செல்லா தல்.லிசைப் பெய்ரொடு நட்ட - கல்லேசு கவலை எண்ணுமிகப் பலவே 15 188 என முதுகிடுதலை நாணி உமிர்விட்ட மறவர்களின் பெயர் பொறிகற்கள் காணப்படுதலைக் கூறுவர். இக்கற்களுக்கு நும் யாழிடத்தே இசையெழுப்பிப் பரவுக என்பது ஆற்றுப்படுத்தும் கூத்தர் ஆறிவுரை, அரச அமைப்புத் தோன்றுதற்கு முற்பட இவ்வகை வழிபாடு தோன்றிவிட்டது என்பதனைத் தொல்காப்பிய வெட்சித்திணை நூற்பாவைக் கொண்டு அறியலாம். இன்புறு முரற்கை நும்பாட்டு விருப்பாகத் தொன்றொழுகு மரபின்தும் மருப்பிகுத்துத் துணைமின்!96
எனத் தொன்றொழுகு மரபாக இறைவனை வழிபடற்கு இசையே சிறந்தது என்பது கூறப்பட்டது, பாடலும் ஆடலுமாக இறைவனை வழிபட்ட பண்டைத் தமிழ் முறைமை இதனால் விளங்கும். பொருது பட்டலீரர்க்கு நடுகல் சமைக்குங்கால் அதனை மரநிழலில் அமைத்தல் மரபென்பது இப்பனுவலால் அறியப்பெறும்.'?* பரிசில் நல்கும் தலைவனைக் காணுங்கால் முதலில் தெய்வத்தை வாழ்த்தி அதன்பின் அத்தலைவனைப் போற்ற வேண்டுமெனப் பெருங்கெளசிகளார் கூறுவர்.10: இறைதொழுகையும் பல்வேறு நம்பிக்கைகளும் சடங்குகளும், அச்சச் செயல்களுமாக இப்பத்துப் பனுவல்களிற்் கூறியனவே சமய உருவாக்கத்திற்கு அடித்தனமாக அமைந்தன எனலாம்.
மலைப்படுகடாம் நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் 80 நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடும் திறல் பேர் இசை நவிரம் மேஎய் உறையும் காரி உண்டிக் கடவுளது இயற்கையும் பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும் ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும் 85 இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம் நுகம் படக் கடந்து நூழிலாட்டிப் நன்றாக நடத்தும் அவனுடைய அவைமக்களின் சீலத்தையும், 80 நீர் (சூழ்ந்த)இவ்வுலகம் நடுங்கும்படி அச்சம் தரும் பேரளவிலான வலிமையையுடைய, பெரும் புகழ்கொண்ட நவிரம் என்னும் மலையில் நிலைகொண்டு வாழுகின்ற, நஞ்சை உணவாகக் கொண்ட இறைவனது இயல்பையும், பரந்துகிடக்கும் இருள் நீங்கும்படி பகற்பொழுதைச் செய்து உதிக்கும் ஞாயிற்றைப் போன்ற அவனது பழிச்சொல் அற்ற மேன்மையையும், 85 வெகுதூரத்தில் உள்ளனவாயினும், பகைவர் நாட்டின் (வண்டிக்கு நுகத்தடி போன்ற)முன்னணிப்படை வீழுமாறு மேற்சென்று (படையினரைக்)கொன்று குவித்து,
குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை 110 மேதி அன்ன கல் பிறங்கு இயவின் வாதி கை அன்ன கவைக் கதிர் இறைஞ்சி இரும்பு கவர்வுற்றன பெரும் புன வரகே பால் வார்பு கெழீஇப் பல் கவர் வளி போழ்பு வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் 115 வேல் ஈண்டு தொழுதி இரிவுற்று என்னக் கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சிக்
அரிவாள் போன்ற வளைந்த காய்களைக் கொண்டன அவரை; 110 எருமையைப் போன்ற பாறைகள் மிகுந்திருக்கும் வழியில், வாதிடுபவனின் கைகளைப் போன்று கிளைத்துப்பிரிந்த கதிர்கள் (முற்றியதால்)தலைவணங்கி, (இரும்பாலாகிய)அரிவாள் வசப்பட்டன(=அரிதலுற்றன) பெரிய கொல்லைக்காட்டின் வரகுகள்; பால் பிடித்து முற்றி, பலவிதமாய்க் கிளைத்து (அடிக்கும்)காற்றால் ஊடறுக்கப்பட்டு, மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்; 115 வேல்களோடு நெருக்கமாக (வந்த வேற்படையாகிய)கூட்டம் தோற்றோடியதைப் போன்று, காற்று மிகவும் அடித்து மோதுகையினால், சாய்ந்து ஆரவாரமாக ஒலித்து, தலைவணங்கி,
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய் வெறிக்களம் கடுக்கும் வியல் அறை-தோறும் 150 மண இல் கமழும் மா மலைச் சாரல் தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர் சிறு கண் பன்றிப் பழுதுளிப் போக்கிப்
நெருப்பைப் போன்ற பல இதழ்கள் பரந்து, வெறியாடுகின்ற களத்தை ஒக்கும் அகன்ற பாறைகள்தோறும் 150 மண வீடு (போன்று) மணக்கும் பெரிய மலைப்பக்கத்தே கிடைக்கும் தேனுடையராய், கிழங்குடையராய், தசை நிறைந்த நார்க்கூடையராய், சிறிய கண்ணையுடைய பன்றியின் (தசைகளில்)பழுதுள்ளவற்றை நீக்கி, முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில் கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே குறிக்கொண்டு மரம் கொட்டி நோக்கிச் 200 செறி தொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச
சரளைமேடுகளில் மேற்பரப்பு வெடித்து(உண்டான),கூழாங்கல்(நிறைந்த) ஆழமற்ற பள்ளங்கள்(உள்ள)பிளவுகளில் மறைந்து பாம்புகள் சுருண்டுகிடக்கும் குழிகளும் உள்ளன; (அவ்விடங்களை மனத்தில்)குறித்துவைத்துக்கொண்டு, (மற்ற விலங்குகளுக்காக)மரத்தில் ஏறிக் கைதட்டிப் பார்த்து, 200 நெருக்கமாக வளையல் (அணிந்த) விறலியர் கைகூப்பி வாழ்த்த,
சூழியின் பொலிந்த சுடர்ப் பூ இலஞ்சி ஓர் யாற்று இயவின் மூத்த புரிசைப் பராவு அரு மரபின் கடவுள் காணின் 230 தொழாநிர் கழியின் அல்லது வறிது நும் இயம் தொடுதல் ஓம்பு-மின் மயங்கு துளி முகபடாம் போன்று பொலிவுற்ற, தீச்சுடர் (போன்ற)பூக்களையுடைய, சுற்றிலும் கரை அமைந்த மடுக்களையுடைய, ஓர் ஆற்றின் போக்கில் உள்ள பழைய கோட்டைமதிலையுடைய மிகவும் அரிதாகப் போற்றி வணங்கப்படும் வழக்கினையுடைய கடவுளைப் பார்த்தால், 230 வணங்கி நீங்கள் சென்றுவிடுங்கள், அவ்வாறில்லாமல் கொஞ்சமேனும் உம்முடைய இசைக்கருவிகளைத் தொடுதலைத் தவிருங்கள், (ஏனெனில்)நெருக்கமான துளிகளைக்கொண்ட
நேர்கொள் நெடு வரை நேமியின் தொடுத்த சூர் புகல் அடுக்கத்துப் பிரசம் காணினும் ஞெரேரென நோக்கல் ஓம்பு-மின் உரித்து அன்று 240 நிரை செலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர் செங்குத்தைக் கொண்ட(=செங்குத்தான) உயர்ந்த மலையில், தேர்ச்சக்கரம் போன்று (தேனீக்கள்)கட்டிய, தெய்வமகளிர் விரும்பும் அடுக்கடுக்காய் அமைந்த சரிவுகளில், தேனடையைக் கண்டாலும், ‘படக்'என்று (அவற்றைத் திரும்பிப்) பார்ப்பதைத் தவிருங்கள், (அது உமக்கு)உரித்தான செயல் அன்று, 240 (ஏனெனில்)ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக எட்டெடுத்துவைக்கும் காலடிகள் வழி மாறிப் போகலாவீர் -
மலை முழுதும் கமழும் மாதிரம்-தோறும் அருவி நுகரும் வான் அர_மகளிர் வரு விசை தவிராது வாங்குபு குடை-தொறும் 295 தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை மலை முழுதும் மணம்கமழும் திசைகள்தோறும், அருவி(யில் குளித்து அதன் பயனை) நுகரும் வானத்துத் தெய்வ மகளிர், (அருவிநீர்)விழும் வேகத்தைத் தவிர்க்காமல் (தம் முதுகில்)வாங்கி (நீரைக்) குடையும்போதெல்லாம் 295 கேட்கும் இமிழும் ஒலியைக் கொண்ட உமது இசைக்கருவி (எழுப்புவதைப்)போன்ற இனிய ஓசையும்;
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆகப் பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என நறவு நாள்_செய்த குறவர் தம் பெண்டிரொடு 320 மான் தோல் சிறு பறை கறங்கக் கல்லென வான் தோய் மீமிசை அயரும் குரவை நல் எழில் நெடும் தேர் இயவு வந்து அன்ன உறுதியாக நட்டுச் சார்த்திய கணுக்களைக்கொண்ட மூங்கிலே வழியாகக்கொண்டு, பெரும் பலனாக எடுத்துச்சேர்த்த இனிய (தேன் கூட்டினின்றும்)கொள்ளையாகக் கொண்ட பொருட்காக, எளிதாய்க் கிட்டமுடியாத (தேனுக்குக் காவலரண் போன்ற)தேனடைகளை அழித்த கானவர் மகிழ்ச்சிக்கூச்சலும்; திருத்தமாகச்செய்யப்பட்ட வேலையுடைய தலைவனுக்கு(நன்னனுக்கு) புதிய குடியிறையாக அமையும் என்று கள்ளை (அரசனுக்கு) நாள்செய்வதற்காகச் செய்த குறவர்கள் தம் பெண்களோடு 320 மான் தோலால் செய்யப்பட்ட சிறுபறையைச் சுழற்ற கல கல என்னும் ஓசையுடன், விண்ணைத் தொடும் மலையுச்சியில் வழிபாடுசெய்ய எழுப்பும் குலவை ஒலியும்; நல்ல தோற்றப்பொலிவையுடைய நெடும் தேர் தன் வழித்தடத்தில் வந்ததைப் போன்ற
தொன் முறை மரபினிர் ஆகி பன் மாண் 355 செரு மிக்குப் புகலும் திரு ஆர் மார்பன் உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர் நறும் கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடிக் கைதொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழி-மின் 360 மை படு மா மலைப் பனுவலின் பொங்கிக் கை தோய்வு அன்ன கார் மழைத் தொழுதி தூஉ அன்ன துவலை துவற்றலின் நீண்டகால உறவுள்ள (ஒரே)வம்சத்தினர்(போல்) ஆகி, பல்வித சிறப்புக்கொண்ட 355 போரிடுவதை(ப்பற்றியே) பெருமையுடன் (எந்நேரமும்)பேசும் சிறப்பு நிறைந்த மார்பினன்(ஆன நன்னனின்) இடி முழங்கும் மேகக்கூட்டத்தினையுடைய பெரிய மலைகள் (உமக்குப்)பின்னாகப்போக, (புதிய இடங்களைக்கண்ட)வியப்பு மேலிட்ட, இனிய குரலையுடைய விறலியர் மணமிக்க கரிய மலைத்தொடரில் குறிஞ்சிப்பண்ணைப் பாடி, (தெய்வங்களைக்)கைகூப்பித்தொழுது வணங்கிப் புகழ்ந்து செல்வீர் - 360 கருமை பரந்த பெரிய மலையில், பஞ்சு போலப் பொங்கியெழுந்து, கையால் எட்டித்தொடமுடியும் என்பதைப் போன்ற கார்காலத்து மேகக் கூட்டம், தூவுவதைப் போன்று நீர்த் திவலைகளை வீசியடிப்பதால்,
தளி பொழி கானம் தலை தவப் பலவே 385 ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்து என நல் வழிக் கொடுத்த நாண் உடை மறவர் செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆகத் 390 தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனை-மின் மழைத்துளிகள் நிறைய விழும் காடுகளும் கூட(அத்துடன்)மிகப் பலவாம்; 385 (தன்னுடன்)ஒத்துப்போகாத பகைவரின் தோல்வியின்போது (ஆயுதங்களை மேலே தூக்கி)ஆரவாரித்ததைப் போன்று, (வெற்றியாகிய)நல்ல தீர்வைக் கொடுத்த (இறந்துபட்ட)மான உணர்வு உள்ள வீரர்களின் அழியாத நல்ல புகழையுடைய பெயர்களோடு நட்ட (நடு)கற்கள் நிறைய நிற்கின்ற கிளைத்துச்செல்லும் வழிகள் எண்ணிக்கையில் மிகப் பலவாம்; (கேட்போர்)மகிழ்ச்சி அடையும் தாளக்கட்டுடைய உம்முடைய பாட்டு (நடுகல் வீரருக்கு)விருப்பமாய் அமைய, 390 தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும் வழக்கத்தில் உம்முடைய கொம்பை(யும்) வாசித்து விரைவீராக -
செல்லும் தேஎத்துப் பெயர் மருங்கு அறிமார் கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த 395 கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர் சுட்டினும் பனிக்கும் சுரம் தவப் பலவே போகும் இடத்தின் பெயரும் எல்லையும் அறியும்படி, கல்லைக் கொத்தி எழுதிய, நல்ல அடிப்பகுதியையுடைய மரா மரத்தடிகளில் 395 கடவுள்(படிமங்கள்) ஓங்கிநிற்கும் காடுகள் நிறைந்த கிளைவழிகளில், (நன்னனை)ஒட்டிப்பழகாமல் பிரிந்துபோன (அவனுடன்)ஒத்துப்போகாத பகைவர்கள் (இந்தப்பக்கம் இருப்பர் என்று)சுட்டிக்காட்டினும் நடுக்கம்வரும் கடினமான வழிகள் மிகப் பலவாம்; ‘தேன் சொரிகின்ற தலையிற் சூடும் மாலையினையும், தேர்களை (அள்ளி)வீசும் கவிந்த கையினையும்
மருதம் பண்ணிய கரும் கோட்டுச் சீறியாழ் நரம்பு மீது இறவாது உடன்புணர்ந்து ஒன்றிக் 535 கடவது அறிந்த இன் குரல் விறலியர் தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை விருந்தின் பாணி கழிப்பி நீள்மொழிக் குன்றா நல் இசைச் சென்றோர் உம்பல் 540 மருதம் பண்ணிய கரும் கோட்டுச் சீறியாழ் நரம்பு மீது இறவாது உடன்புணர்ந்து ஒன்றிக் 535 கடவது அறிந்த இன் குரல் விறலியர் தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை விருந்தின் பாணி கழிப்பி நீள்மொழிக் குன்றா நல் இசைச் சென்றோர் உம்பல் 540