தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிறுபாணாற்றுப்படை


Guru

Status: Offline
Posts: 1049
Date:
சிறுபாணாற்றுப்படை
Permalink  
 


சிறுபாணாற்றுப்படை மூன்றிடங்களில் சமயக் குறிப்புடையதாகின்றது."”? வள்ளல்களுள் ஒருவனாகிய ஆய், ஆலமர் செல்வனரகிய சிவபெருமானுக்குப் பாம்புரியை ஆடையாக நல்கிய செய்தி இப்பாட்டில் இடம் பெறுகின்றது.

திறல்வேல் நுதியிற் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூர்... 4
என்ற அடிகளுக்கு நச்சினார்க்கினியர் *' நல்லியக்கோடன் தன்பகை மிசுதிக்கு அஞ்சி, முருகனை வழிபட்டவழி அவன் இக்சேணியிற் பூவை வாங்கிப் பசைஉரை எதிமென்று கனவிற் கூறி . அதிற்பூவைத்தன் தன் 'வேலாக நிருமித்ததொரு கதை கூறிற்று 1 என்பர். முருககைக் சு.றித்த எப்புராணத்திலும் நல்லியக்கோடன் இடம்பெற்றிலன். இதுபோன்ற கதைக் கூறுகளே பிற்காலத் தலபுராண உருவாக்கத்திற்குத் துணை புரிந்துள்ளன. நல்லியக்கோடனின் அரண்மனை வாயில் கடவுள்

மால்வரை கண்விடுத்தன்ன பெருமையுடையது. இ௰யமலையைக் கடவுள் மால்வரை என எண்டுக் சூ.றிக்கின் றார் -புலவர் .**



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்,
ஓடாப் புட்கை உறந்தையும் வறிதே, அதாஅன்று . . . .[81 - 83]
தூங்கு எயில் (81) - திரிபுர அசுரர்கள் தெய்வத்தன்மை உடைய மூன்று மதில்களை வரத்தால் பெற்று, அவற்றுள் பாதுகாப்போடு இருந்து கொண்டு, தாங்கள் நினைத்தவாறு பறந்து சென்று பல இடங்களைப் பாழ்படுத்தி, தேவர்களை வருத்தியதால், சிவபெருமான் அம்மதில்களை எரித்து அழித்தான்.
..................................நிழல் திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்
ஆர்வ நன் மொழி ஆயும் . . . .[95 - 99]

ஒளியுடன் விளங்கும் நீல மணியையும், பாம்பு கொடுத்த ஆடையையும், ஆல மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவனுக்கு விருப்பத்துடன் கொடுத்தவனும், வில்லைத் தாங்கிய சந்தனம் உலர்ந்த தோளினை உடையவனும், ஆர்வத்துடன் நல்ல சொற்களைக் கூறுபவனுமான ஆயும்,
..................................மால் வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி . . . .[100]
அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த,
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும் . . . .[99 - 103]
..................................மால்வரைக்
கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி . . . .[100]
யமிழ்துவிளை தீங்கனி யௌவைக் கீந்த
வுரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடுவே
லரவக்கடற் றானை யதிகனுங் கரவாது
பொருளுரை:
உயர்ந்த மலையின் கமழும் பூக்களையுடைய மலைச் சரிவில் உள்ள அழகான அமிர்தமாகிய, விளைந்த இனிய நெல்லிக்கனியை, ஒளவைக்குக் கொடுத்தவனும், சினம் பொருந்திய பெரிய வேலையும் கடலைப் போன்ற படையை உடையவனுமாகிய அதிகனும்,

விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச் . . . .[170]
சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்
திறல்வே னுதியிற் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி
அருவிகளையுடைய பெரிய மலையில் ஞாயிறு மூழ்கிய நேரத்தில் வானை நோக்கி, வலிமை மிக்க வேலின் நுனியைப் போல உள்ள மலர்கள் பூத்த குளங்களையுடைய வெற்றியுடைய வேலால் வெற்றி பொருந்திய , வேலூரை நீங்கள் அடைந்தால்,
பொருநர்க்கு ஆயினும், புலவர்க்கு ஆயினும்,
அருமறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்,
கடவுள் மால் வரை கண்விடுத்தன்ன, . . . .[205]
அடையா வாயில் அவன் அருங்கடை குறுகி, . . . . - 206
பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும் அருமறை நாவின் அந்தணர்க்கு என்றாலும் - கிணைப் பறையைக் கொட்டுவார்கள் ஆயினும் புலவர்கள் ஆயினும் அரிய மறையை இசைக்கும் நாவினையுடைய அந்தணர் ஆயினும், கடவுள் மால் வரை கண்விடுத்தன்ன - கடவுள்கள் உடைய உயர்ந்த மேரு மலை ஒரு கண்ணை விழித்துப் பார்ப்பதுபோல், அடையா வாயில் அவன் அருங்கடை குறுகி - அடைக்கப்படாத வாசலையுடைய அவனது அரிய காவலுடைய தலைவாயிலை நெருங்கி



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard