செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து . . . .[40] அவ்விதழ் அவிழ் பத கமழப் பொழுது அறிந்து இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ, நெல்லும் மலரும் தூஉய், கைதொழுது, மல்லல் ஆவணம் மாலை அயர . . . .[ 44] மனை உறை புறவின் செங்கால் சேவல் . . . .[45] (மலரும்)பக்குவத்திலுள்ள மொட்டுக்களின் பசிய காலினையுடைய பிச்சியின் 40 அழகிய இதழ்கள் கூம்புவிடும் நிலையில் மணக்கையினால், (அந்திப்)பொழுது (என)அறிந்து, இரும்பினால் செய்த (அகல்)விளக்குகளில் (நெய் தோய்ந்த)ஈரமான திரியைக் கொளுத்தி, நெல்லையும் மலரையும் சிதறி, (இல்லுறை தெய்வத்தை)கைகூப்பி(வணங்கி), -- வளப்பமுள்ள அங்காடித் தெரு(வெல்லாம்) மாலைக் காலத்தைக் கொண்டாட - வீட்டில் வாழும் புறாவின் சிவந்த காலினையுடைய சேவல் 45 வெள்ளைச் சங்கு வளையல்களையும், இறுகின முன்கையையும், மூங்கில் போலும் தோளையும், மென்மையான சாயலையும், முத்தைப் போன்ற பற்களையும், அழகிய காதணிக்கு ஒப்ப உயர்ந்த அழகிய ஈரக்கண்களையும் மடப்பத்தையும் உடைய பெண்கள், பூந்தட்டிலே இட்டு வைத்த மலரும் பருவம் அமைந்த பச்சைக் காம்பைக் கொண்ட பிச்சி மலர்களின் அழகிய இதழ்கள் மலர்ந்து நறுமணம் கமழ, நேரத்தை அறிந்து, இரும்பினால் செய்த விளக்கின் எண்ணையைக் கொண்ட திரியைக் கொளுத்தி, நெல்லும் மலரும் தூவி, கையால் தொழுது, வளப்பமான கடைவீதியில், மாலை நேரத்தில் கொண்டாட; இல்லத்தில் வாழும் புறாவின் சிவப்புக் காலையுடைய ஆண் புறா தன்னுடைய இன்பம் நுகரும் பெண் புறாவுடன் ஊர் மன்றத்திற்குச் சென்று
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து 75 நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு தேஎம் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின் பரு இரும்பு பிணித்துச் செவ்வரக்கு உரீஇத் 80 விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிறு, (நாட்டப்பட்ட)இரண்டு கோல்களின் நிழல்கள் ஒன்றும்வகையில், (கிழக்கிலிருந்து)மேற்கே செல்வதற்காக, ஒரு பக்கத்தைச் சாராத (உச்சியில் இருக்கும்)நண்பகல் நேரத்தில், 75 (கட்டிடக்கலை)நூலை அறிந்த கலைஞர் மிகச்சரியாக நூலை நேரே பிடித்து, திசைகளைக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை (ஏறிட்டுப்)பார்த்து(த் தொழுது), பெரும் புகழ்பெற்ற அரசர்க்குத் தகுந்தவகையில் (அரண்)மனையின் பாகங்களைப் பகுத்துக்கொண்டு - ஒரு சேர இவ்விடங்களையெல்லாம் வளைத்து, உயர்ந்த நிலையையுடைய மதிலின்(உள்ளே), பெரிய (ஆணிகளும் பட்டங்களுமாகிய)இரும்பால் கட்டி, சாதிலிங்கத்தைப் பூசி வழித்து, 80 ஒருசேர இடங்களையெல்லாம் வளைத்து, உயர்ந்த நிலையையுடைய மதில் அருகில், பருத்த ஆணியால் கட்டி, சிவப்பு அரக்கைத் தடவி, மாட்சிமைப்பட்ட கதவுகளைச் சேர்த்து, சிறப்பாக இணைத்து, உத்திரம் என்னும் விண்மீனின் பெயர் பெற்ற மரத்தின் பலகையைக் கதவுக்கு மேலே வைத்து (உத்தரக்கட்டை), மலரும் குவளை பூப் போன்ற புதிய கைப்பிடியை அமைத்து, தாழொடு சேர்த்த, பொருந்துவதாய் அமைந்த, கைத்தொழிலில் வல்லமை உடையவன் இணைத்ததால் இடைவெளி இல்லாது இருந்தது கதவு. அதில் வெண்கடுகின் சாந்தும் நெய்யும் தடவப்பட்டது. போரில் வெற்றி பெற்று வரும் உயர்த்திய கொடியுடன் யானைகள் புகுமாறு, மலையில் குடைந்தது போல் உயர்ந்து இருந்தது, அரண்மனையின் வாயில். திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக 160 விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப் பனி செ விரல் கடைக்கண் சேர்த்திச் சில தெறியா 165 திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசியை முதலாகக்கொண்டு, 160 விண்ணில் ஊர்ந்து திரிதலைச்செய்யும் மிகுந்த ஓட்டத்தையுடைய ஞாயிற்றோடு மாறுபாடு மிகுந்த சிறப்பைக்கொண்ட திங்களொடு நிலைநின்ற உரோகிணியை நினைத்தவளாய்(அவற்றைப்) பார்த்து நெடு மூச்சு விட்டு, கறுத்த கண்ணிமைகள் சுமந்த, (அவ்விமைகள்)நிரம்பி வழியும் நிலையிலுள்ள முத்து(ப்போன்ற) நீரை, (தன்)சிவந்த விரலால் கடைக்கண்ணில் கொண்டு சேர்த்து (விரலில் மீந்த)சிலவற்றைச் சுண்டிவிட்டு, 165 புதிதாக இயற்றிய, மெழுகு தேய்த்த மேல் பகுதியில் வலிமையான கொம்புடன் மேட ராசி (ஆடு) முதலாக விண்ணில் ஊர்ந்து திரியும் ஓவியம் இருந்தது. கதிரவனிடமிருந்து மாறுபாடு மிகுந்த சிறப்புடைய நிலவோடு நிலையாக நின்ற உரோகிணியை நினைத்து, உரோகிணியைப் போல் பிரிவின்றித் தான் இல்லையே என்று வருந்தினாள். பெருமூச்சு விட்டாள். கருமையான இதழ்கள் கொண்ட அவளுடைய கண்களிலிருந்து மிகுந்த மென்மையான கண்ணீர்த் துளிகள் விழுந்தன. தன்னுடைய சிவந்த விரல்களைக் கடைக் கண்ணிடத்தில் சேர்த்து கண்ணீர்த் துளிகளைத் தெறித்தாள். தனிமையில் வசிக்கும்,