தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குறிஞ்சிப்பாட்டு -பத்துப்பாட்டில் சமயம்


Guru

Status: Offline
Posts: 1049
Date:
குறிஞ்சிப்பாட்டு -பத்துப்பாட்டில் சமயம்
Permalink  
 


குறிஞ்சிப்பாட்டு ஐம்து இடங்களிற் சமயம் பற்றிய செய்தி
களைக் காட்டுகின்றது, குறிஞ்சிப்பாட்டு தமிழரின் களவொழுக்கச் சிறப்பை அதனுள் அயலரசன்
ஒருவனுக்குக் கற்பிக்கப் பிறந்தது.
ஆகவே தூய குறிஞ்சி. மணமே கமழ்கின்றது.
அயல்நாகரிகச் சுவடோ, புராண ஜெறிமையைக்
நுழைப்போ இல்லாமல் பழந்தமிழ் விறல் இழை
நெகிழ்த்த வீவருங் ஆங்கண் பரவியும் தொழுதும்
விரவுமலர் வேறுபல் நறையும் உருவின்
விரையும்கடவுட் பேணி ஓச்சி...?3
பண்டை அறியுநர் கடுதோய் அகலுள் என்பதாகப். வழிபாட்டு காட்டுகின்றது இப்பனுவல், வழிபாட்டு வினாயும் முறை தூயும் கூறப் பெறும். மகளுற்ற தோய் தீரத் தாய் பலவேறு உருவின் இயன்ற தெய்வங்களைத் தொழுதனள்; கட்டும் கழங்கும் கொண்டு குறிகூறுவாரைக் கேட்டனள் என்பர். குறிகேட்டலும், வெறியாட்டு நிகழ்த்தலும் எனப் பண்டைத் தமிழ்வழக்கங்கள் இந்நூலிற் புலனாகக் காரணம் இப்பனுவல் குறிஞ்சி நிலச் சிற்றூர் ஒன்றின் ஒருகுடிக்கண் உறையும் பெண்ணின் களவு பற்றியது என்பதேயாகும். ஏனைப் பாடல் களைப் போல அரசப் புகழ்ச்சியாக இது பாடப்பட்டிருப்பின் இவ்வண்ணம் குலைந்திருக்கும். வானிடத்தே மின்னல் முருகனது வேல் போல் தோன்றியது உவமையாகும்.?* என்பது அணங்குறு இப்பாடலில் மகளிர் இப்பனுவலிற் குறிப்புண்டு, தெப்வந்தீண்டி வரையர கபிலர் கூறும் மகளிர் பற்றி வருத்தமுற்ற மகளிர் 186 என்ற வெறியாடினர் மறியறுத்து வருத்தந்தீர்த்தற் பொருட்டு களவுக் பண்டை வழக்கு உவமையாற்காட்டப் பெறுகின்றது." நிணம் ன்றான், சூளுரைக்கி தலைவியிடம் காதலில் தலைவன் அயர்ந்தபின் வருவிருந்து அடிசிலை நெய்மிக்க ஒழுகும் மலை எனக்கூறி நமக்குரியது நின்னொடு உண்கின்ற இல்லறம் கடையாளமாக இச்சூளிற் முருகனை வாழ்த்தி யிடத்துறையும் விருந்தற தெய்வமும்
மலைத் அருவி நீரைக்குடிக்கின்றான்.1?
சமய பண்டைச் சொல்லுமெனப் வாய்மைச் மும், அருவிநீரும் வாழ்க்கை அழகுறக் கபிலர் புலவர் தன்மையைப் அமைந்த கருதத்தகும். காட்டியுள்ளமை



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

குறிஞ்சிப்பாட்டு
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்
பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும் 5
வேறு பல் உருவின் கடவுள் பேணி
நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று
எய்யா மையலை நீயும் வருந்துதி
நல் கவின் தொலையவும் நறும் தோள் நெகிழவும்
புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும் 10
தனிச்சிறப்புக் கொண்ட நகைகள் கழன்று விழப்பண்ணின, குணப்படுத்த முடியாத கொடிய நோய்(பற்றி)
அகன்ற உட்புறங்களையுடைய ஊரில் (அந் நோய்பற்றி)அறிந்தோரைக் கேட்டும்,
(கடவுளரை)வாயால் வாழ்த்தியும், வணங்கியும், பலவித பூக்களைத் தூவியும், 5
வேறுபட்ட பல வடிவங்களையுடைய தெய்வங்களை மனத்தில் எண்ணி,
நறுமணப்புகையும் சந்தனமும் படைத்தும், மனம்கலங்கி,
குறையாத மயக்கத்தையுடையளாய் நீயும் வருந்துகிறாய்;
(அவளுடைய)நல்ல அழகு கெடவும், நறுமணமிக்க தோள்கள் மெலியவும்,
வளை (கழலுதலைப்)பிறர் அறியவும், தனிமைத் துயர் (அவள் உள்ளத்தில்)தோன்றி வருத்தவும், 10

அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின்
முரசு அதிர்ந்து அன்ன இன் குரல் ஏற்றொடு
நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி 50
இன் இசை முரசின் சுடர் பூண் சேஎய்
ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின்
மின் மயங்கு கருவிய கல் மிசைப் பொழிந்து என
அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர்
அவிர் துகில் புரையும் அம் வெள் அருவித் 55

அகன்ற கரிய ஆகாயத்திடத்தில் வீசுகின்ற காற்று ஒன்றுசேர்வதினால்,
முரசு முழங்கினாற் போன்ற இனிய குரலையுடைய இடியோடு,
வரிசையாகச் செல்லுதலையுடைய உயர்ச்சியைக்கொண்ட மேகம் கலங்கி, 50
இனிய ஓசை (உடைய)முரசினையும், ஒளிவிடும் அணிகலன்(களையும் உடைய) முருகன்
(தன்)பகைவர்க்காகத் தூக்கிய ஒளிர்கின்ற இலை (போன்ற அமைப்புகொண்ட)வேல் போல,
மின்னல்கள் நெருக்கமாய் மின்னும் தொகுதிகளையுடையவாய் மலை மேல் பெய்தவாக,
தலைவனின் உயரமான மலைச் சிகரத்திலிருந்து கீழிறங்கும் தெளிந்த நீரையுடைய --
ஒளிவிடும் (வெண்மையான)ஆடையைப் போலிருக்கும் -- அழகிய வெண்ணிற அருவியில், 55

புள்ளி வரி நுதல் சிதைய நில்லாது
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் நெடுவேள்
அணங்குறு மகளிர் ஆடுகளம் கடுப்ப 175
திணி நிலைக் கடம்பின் திரள் அரை வளைஇய
துணை அறை மாலையின் கை பிணி விடேஎம்
நுரை உடைக் கலுழி பாய்தலின் உரவுத் திரை
அடும் கரை வாழையின் நடுங்கப் பெருந்தகை

அம்_சில்_ஓதி அசையல் யாவதும் 180
அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என
மாசறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்து
என் முகம் நோக்கி நக்கனன் அ நிலை
நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர
ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ 185
ஆகம் அடைய முயங்கலின் அ வழிப்
பழு மிளகு உக்க பாறை நெடும் சுனை
முழுமுதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்து எனப்
புள் எறி பிரசமொடு ஈண்டிப் பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல் 190
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்
சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரி கூட்டு இன்னியம் கறங்க ஆடு_மகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல்
வரை_அர_மகளிரின் சாஅய் விழைதக 195
விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய் நன் பல
வம்பு விரி களத்தின் கவின் பெறப் பொலிந்த
குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல்
உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு 200
புள்ளிபுள்ளியானதும் வரிகளையுடையதுமான நெற்றியின் (அழகு)அழிந்து, (அங்கே)நிற்கமாட்டாமல்,
(அக் களிறு)தளர்ந்து திரும்பி ஓடிய பின்னர் - முருகக்கடவுளான
தெய்வம்தீண்டிய(சாமியாடும்) மகளிர் வெறியாட்டயரும் களத்தைப்போன்று(அவ்விடம் தோன்றிநிற்க), 175
உறுதியாக நிற்கும் கடப்பமரத்தின் திரண்ட அடிப்பகுதியைச் சுற்றிவளைத்து
இறுக்கக் கட்டிச் சார்த்தப்பட்ட மாலையைப் போன்று, (நாங்கள்)கைகோத்தலை விடாதவர்களாய்,
நுரையையுடைய (ஆற்றுப்)பெருக்கில் குதிப்பதினால், உயர்ந்தெழும் அலைகள்
மோதும் கரையின் (நின்ற)வாழைபோலே நடுங்க, உயர்குணமுள்ள தலைவன்

“அழகிய நுண்மையான கூந்தலையுடையவளே, கலங்கவேண்டாம், சிறிதளவுகூட 180
அஞ்சுவதை விலக்கவும், (நான்)உன் பேரழகைக் கண்டுமகிழ்வேன்” என்று சொல்லி,
களங்கமில்லாமல் ஒளிரும் (தலைவியின்)நெற்றியைத் துடைத்து, நீண்டநேரம் சிந்தித்து,
என் முகத்தைப் பார்த்து முறுவல்பூத்தான் - அந்த நிலையில்,
நாணமும் அச்சமும் (எய்துதற்குரிய இடம்பெற்று)அவ்வழி (வந்து)தோன்றியதால்,
சட்டென்று (அவள்)விட்டுவிலகவும் விடாதானாய், (தன் கைகளால்)அணைத்து, 185
(இவள்)மார்பு (தன் மார்பில்)ஒடுங்குமாறு தழுவுதலினால், அப்பொழுது,
பழுத்த மிளகு சிந்திக்கிடக்கின்ற கற்பாறை(சூழ்ந்த) நீண்ட சுனையில்,
பருத்த அடிமரத்தைக்கொண்ட மாமரத்தின் இனிய பழங்கள் உதிர்ந்தனவாக,
(அது கேட்ட)வண்டுகள் (திடுக்கிட்டுப் பறக்க, அதனால்)சிதறிய தேன் கலந்த, பலாமரத்தின்
(நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை 190
நீரென்று கருதிப் பருகிய மயில் -- அகன்ற ஊர்களில்
விழாக் கொள்ளுதற்குரிய அவ்விடங்களில் விழாக்களத்தில் மிகுதியாக
அரித்தெழும் ஓசையைக் கூட்டி ஒலிக்கும் இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, (கழைக்கூத்து)ஆடுகின்ற பெண்
கயிற்றில் நடக்கும் செயற்பாங்கைப் போல் -- தளர்ந்த நடை நடக்கும் மலைச்சாரல்களில்
மலைவாழ் தெய்வப்பெண்டிர் ஆடுதலால் தம் நலம் சிறிது கெட்டு, கண்டோர் விரும்பும்படி 195
விசும்பைத் தீண்டுகின்ற சிகரங்களில் கிளைத்த செங்காந்தளின்
குளிர்ந்த மணம் கமழ்கின்ற பூக்கள் உதிர்ந்து பரவி, நன்றாகிய பற்பல
அரைக்கச்சை விரிந்த களம் போல அழகு மிக்குப் பொலிவுற்ற
மலைபொருந்தியதுமான நாட்டையுடையவன், எம்மை விரும்புகின்ற பெரிய வெற்றியையுடையவன் -
(இவள்)உள்ளத்தின் தன்மையை ஆய்ந்தவனாய் (அதனை)உட்கொண்டு, 200

வருநர்க்கு வரையா வள நகர் பொற்ப
மலரத் திறந்த வாயில் பலர் உணப்
பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசை இல் வான் திணைப் புரையோர் கடும்பொடு 205
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு
அறம் புணை ஆகத் தேற்றிப் பிறங்கு மலை
மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி 210
அம் தீம் தெண் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து
அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்
வருவார்க்கெல்லாம் வரைவின்றிப் படைக்கும், செல்வத்தையுடைய இல்லம் பொலிவுபெற,
அகலத் திறந்துகிடக்கின்ற வாயிலில் (வந்து)பலரும் உண்ணும்படி,
இளம் (மாமிசத்தைச் சேர்ந்த)கொழுப்பு ஒழுகுகின்ற நெய் மிக்க சோற்றை
குற்றமில்லாத உயர்குடிப்பிறந்த உயர்ந்தோர் (தம்)சுற்றத்தோடு 205
விருந்தினராக உண்டு மீந்துபோன உணவை, உயர்ந்த குணநலமுடைய பெண்ணே,
உன்னோடு (நான்)உண்பதும் உயர்ந்ததேயாம்”, என்று கூறி, அப்பொழுது
(சிறந்த)இல்லறமே (நல்ல)வாழ்க்கைப் படகாகும் என்று தெளிவித்து, நெருக்கமான மலைகளில்
மிக உயர்ந்த உச்சியின் (உறைகின்ற)இறையை வாழ்த்தி, கைகளைக் குவித்துத் தொழுது,
(இவள்)இன்பமுறும்படி உறுதிமொழிகளை உண்மையெனத் தெளிவித்து, 210
அழகிய இனிய தெளிந்த அருவி நீரைக் குடித்ததினால், மனம் அமைதியடைந்து,
பயங்கரமான பிளவுகள் நிறைந்த மலையில் நேர்ந்த களிறு தந்த (இந்த)இணைப்பு,
விசும்பில் தமக்குரிய இருப்பிடத்தையுடைய பொலிவு பெற்ற தேவர்களும் விரும்பும்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard