தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இமயம் கங்கை


Guru

Status: Offline
Posts: 1049
Date:
இமயம் கங்கை
Permalink  
 


 இமய (4)
பரங்குன்று இமய குன்றம் நிகர்க்கும் - பரி 8/11
இமய குன்றினில் சிறந்து - பரி 8/12
உன்னை வழிபடும் பொருட்டு,
இந்தத் திருப்பரங்குன்றம்; எனவே இது இமயத்தை நிகர்க்கும்;
அந்த இமய மலையினும் சிறந்து,
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகி - பரி 23/83
மணி புரை மா மலை ஞாறிய ஞாலம்		80
அணி போல் பொறுத்தாரும் தாஅம் பணிபு இல் சீர்ச்
செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகித்
தொல் புகழ் தந்தாரும் தாம்
அணங்கு உடை அரும் தலை ஆயிரம் விரித்த
நீலமணி போன்ற பெரிய மலைகள் தோன்றிய இந்த மண்ணுலகத்தையே
அணிகலன்களைத் தாங்குவதுபோல் எளிதாகத் தாங்கியிருப்பவரும் ஆதிசேடனே! பிறரைப் பணிதல் இல்லாத புகழையுடைய,
விரைந்து செல்லும் எருதாகிய ஊர்தியையுடையோன் முப்புரத்தை அழித்தபோது
மலைகளிலேயே உயர்ந்த சிகரத்தையுடைய இமயத்தை வில்லாகக் கொள்ள, அதற்கு நாண் ஆகி
தொன்மையான புகழினைத் தந்தவரும் ஆதிசேடனே!
இமய செ வரை மானும்-கொல்லோ - அகம் 265/3 
புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து
பனி ஊர் அழல் கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ் வரை மானும்-கொல்லோ
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலி குழீஇக் கங்கை		5
நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ
எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி
புகை போல மிகுந்து பரந்து, அகன்ற வானத்தில் உயர்ந்து
பனி படர்ந்த நெருப்புப் பிழம்பு போலக் காணப்படும்
இமயம் என்னும் செம்மையான மலையினைப் போன்றதோ?
பல்வேறு புகழ்களால் நிறைந்த, வெல்லும் பேராற்றல் உடைய நந்தர் என்னும் அரசமரபினர்
சிறப்பு மிக்க பாடலிபுரத்தில் கூடி, கங்கை ஆற்றின்
நீரின் அடியில் மறைத்துவைத்து மறைந்துபோன செல்வமோ?
இவ்விரண்டும் இல்லையென்றால் பின்னர் வேறு எத்தகையதோ? வாழ்க, தோழியே!, பிரகாசமான ஒளிவாய்ந்த
 இமயத்து (5) வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்த - சிறு 48
குளவிப் பள்ளிப் பாயல்கொள்ளும்
குடபுலம் காவலர் மருமான் ஒன்னார்
வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர்க் குட்டுவன்

காட்டு மல்லிகையாகிய பள்ளியில் துயில்கொள்ளும் மேற்றிசைக்கண்ணுள்ள நிலத்தைக் காக்கும் சேரர் குடியிலுள்ளோன் - பகைவருடைய வட நாட்டு இமயமலையின் மேல் வளைந்த வில்(சின்னத்தைப்) பொறித்த கணையத்திற்கு மாற்றான திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவனுடைய
பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி - நற் 356/3
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவிச் செம் கால் அன்னம்
பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும்
நிலத்தின் தாழ்ந்த பக்கத்தில் இருக்கும் தெளிந்த கடலில் இரைய அருந்திய,
ஒன்றற்கொன்று விலகிய மென்மையான இறகினையும், சிவந்த கால்களையுமுடைய அன்னங்கள்,
பொன்னாய் மின்னும் நெடிய சிகரங்களைக் கொண்ட இமயத்து உச்சியில்
தேவருலகத்துத் தெய்வ மகளிர்க்கு மிகவும் விருப்பமாக இருக்கும்
நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனை - பரி 5/48
சாலார் தானே தரிக்க என அவர் அவி		40
உடன் பெய்தோரே அழல் வேட்டு அவ் அவித்
தடவு நிமிர் முத்தீப் பேணிய மன் எச்சில்
வட வயின் விளங்கு ஆல் உறை எழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய
அறுவர் மற்றையோரும் அ நிலை அயின்றனர்		45
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறை-வயின் வழாஅது நின் சூலினரே
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைம் சுனைப்
பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்
பெரும் பெயர் முருக நின் பயந்த ஞான்றே		50
அமைவுடையவராகமாட்டார் என்று எண்ணி, 'தீயே அவற்றைத் தாங்குவதாக' என்று அந்த முனிவர்கள் வேள்வியுணவாக,
ஒன்றாகச் சேர்த்துப் போட்டார் தீயினால் வேள்வி செய்து; அந்த வேள்வி அவியைக்
குண்டங்களில் எழுந்த முத்தீயும் உண்ணுவதால் சேர்ந்த பெருமைக்குரிய எச்சத்தை,
வானத்தில் வடக்குத்திசையில் ஒளிவிட்டுத் திகழும் கார்த்திகை மீனாய் இருக்கும் ஏழு மகளிருள்
கடவுள் கற்பினையுடைய ஒரு மீனாகிய அருந்ததி ஒழிய
அறுவராகிய ஏனையோரும் அப்பொழுதே உண்டனர்;
குற்றமற்ற கற்பினையுடைய அந்த முனிவர்களின் மனைவியர்
தம் கற்பில் குறைவுபடாது உன்னைக் கருக்கொண்டனர்;
உயர்ந்து ஓங்கிய இமயத்திலுள்ள நீலப்பூக்களைக் கொண்ட பசிய சரவணம் என்ற சுனையில்
உன்னைப் பெற்றெடுத்தனர் என்பர், தாமரைப்பூவாகிய படுக்கையில்,
பெரிய புகழினை உடைய முருகனே! உன்னை இவ்வாறு பெற்ற பொழுதே
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து - அகம் 127/4,5
வலம் படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து		5
நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நல் கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
வெற்றி தங்கிய முரசினையுடைய சேரலாதன் என்னும் அரசன்
தனது மரக்கலத்தைக் கடலில் செலுத்தி, பகைவரின் காவல்மரமாகிய கடம்பமரத்தை வெட்டி, இமயமலையில்
தனது முன்னோரைப் போன்று வளைந்த வில்லாகிய முத்திரையைப் பொறித்து
நல்ல நகரமாகிய மாந்தை என்னும் ஊரிலுள்ள தன் அரண்மனையின் முற்றத்தில், பகைவர்
பணிந்து திறையாகக் கொடுத்த பெருமை மிக்க அழகிய அணிகலன்களையும்,
பொன்னால் செய்த பாவையினையும் வயிரங்களையும், ஆம்பல்
மாறி பிறவார் ஆயினும் இமயத்து கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டு - புறம் 214/11,12
செய்குவம்-கொல்லோ நல்வினை எனவே
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே		5
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்		10
மாறிப் பிறவார் ஆயினும் இமயத்துக்
கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டுத்
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே
”உன்னைப்பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறானே தவிர, சிறுபொழுதுகூட
நேரில் கண்டதில்லை. இவ்வாறு பல ஆண்டுகள் கழிய
தவறாமல் கூடிக் கலந்து பழகிய உரிமையுடைய நண்பராக இருப்பினும்,
அவன் அம்முறைப்படி நடத்தல் அரிது, தலைவனே!” என்று
சந்தேகப்படாதீர்கள். அறிவு நிறைந்தவர்களே!
அவன் என்னை ஒருபொழுதும் இகழாதவன்; இனியவன்; பிணிப்புண்ட நட்புக் கொண்டவன்;
புகழ் கெடும்படி வரும் பொய்யை விரும்பாதவன்.
தன் பெயர் என்னவென்று சொல்லும்போதுகூட, “என் பெயர் 
களங்கமில்லாத சோழன்” என்று கூறும் சிறந்த
அன்பும் உரிமையும் உடையவன். அதற்கும் மேலே,
இத்தகைய நிலையில் அவன் வராமல் இருக்க மாட்டான்;
அவன் இப்பொழுதே வருவான்; அவனுக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

இமயம் (4)
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
  தென்னம் குமரியொடு ஆயிடை - பதி 11/23,24
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென்னம் குமரியொடு ஆயிடை
மன் மீக்கூறுநர் மறம் தபக் கடந்தே			25
பரந்து விளங்கும் அருவியோடு, நரந்தம் புற்களைக் கனவில் காணும்
ஆரியர் குழுமியுள்ள பெரும் புகழைக் கொண்ட இமயமலை,
தெற்கில் உள்ள அழகிய குமரி முனை ஆகியவற்றுக்கு இடையில் உள்ள
பெருமை பேசித் திரியும் மன்னர்களின் வீரம் எல்லாம் கெட்டொழியுமாறு -
வடதிசை எல்லை இமயம் ஆக - பதி 43/7
கவரி முச்சிக் கார் விரி கூந்தல்
ஊசல் மேவல் சே இழை மகளிர்
உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின்
பெரும் கை மத_மாப் புகுதரின் அவற்றுள்
விருந்தின் வீழ் பிடி எண்ணுமுறை பெறாஅக்		5
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை
வடதிசை எல்லை இமயம் ஆகத்
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர்
முரசு உடைப் பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழச்
சொல் பல நாட்டைத் தொல் கவின் அழித்த		10
போர் அடு தானைப் பொலம் தார்க் குட்டுவ
கவரிமானின் மயிர் சேர்த்த உச்சிக் கொண்டையினையும், மேகத்தைப் போன்ற விரிந்த கூந்தலையும்,
ஊஞ்சலாடுவதின் மேல் விருப்பத்தையும் கொண்ட செம்மையான இழை அணிந்த மகளிர்,
உரல் போன்ற பெரிய கால்களையும், ஒளிருகின்ற கூர்மையான கொம்புகளையும்,
பெரிய துதிக்கையையும் கொண்ட யானைகள் தமது காட்டினுள் புகுந்தால், அவற்றுக்குள்
தமக்குப் புதுமையாகத் தோன்றித் தாம் விரும்பும் பெண்யானைகள் எண்ணிப்பார்க்கும் எண்ணிக்கையில் அடங்கப் பெறாத,
தெய்வங்கள் நிலைபெற்றிருக்கும், பெரும் பாறைகள் உயர்ந்து நிற்கும் மலையான
வடதிசையிலுள்ள இமயம் வடக்கு எல்லையாக,
தெற்கில் உள்ள குமரியோடு, இவற்றுக்கிடையே உள்ள அரசர்களின்
முரசுகளையுடைய பெரிய போர் அழிந்துபோக, அதனால் ஆரவாரம் மிகுந்து எழ,
புகழ் பெற்ற பல நாடுகளின் பழமையான அழகினை அழித்த,
போரில் பகைவரைக் கொல்லும் சேனைகளையுடைய, பொன்னால் செய்யப்பட்ட மாலையினை அணிந்த குட்டுவனே!
வடதிசையதுவே வான் தோய் இமயம் தென்திசை ஆஅய் குடி இன்று ஆயின் - புறம் 132/7,8
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி
குவளை பைம் சுனை பருகி அயல		5
தகர தண் நிழல் பிணையொடு வதியும்
வடதிசையதுவே வான் தோய் இமயம்
தென்திசை ஆஅய் குடி இன்று ஆயின்
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே
கேட்டதேயன்றி அவனை நேரில் கண்டு அறியமாட்டாய்,
அவனைக் காண விரும்பினால் சிறந்த உன்
நறுமணம் கமழும் கூந்தலை மலையிலிருந்து வரும் காற்று கோதிவிட
பீலியையுடைய மயிலைப் போல கண்ணுக்கினியதாக நடந்து
மழை போன்ற கொடைத்தன்மையுள்ள
தேரினையுடைய வேள் ஆயைக் காணச் செல்வாயாக.
கழை வளர் இமயம் போல - புறம் 166/33
பூ விரி புது நீர்க் காவிரி புரக்கும்
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண்
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்		30
செல்வல் அத்தை யானே செல்லாது
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரைக்
கழை வளர் இமயம் போல
நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானே
பூக்கள் பரந்த புது நீரையுடைய காவிரி காக்கும்
குளிர்ந்த நீருடைய விளைநிலம் கொண்ட எங்கள் ஊரில் 
உண்பன உண்டும், தின்பன தின்றும், ஏறுவனவற்றில் ஏறியும் கொண்டாடுவதற்காகச்
செல்கிறேன் நான், நீ இறவாதிருந்து
மேகங்கள் அண்ணாந்துபார்க்கும் உயர்ந்த நீண்ட மலையான
மூங்கில் வளரும் இமயம் போல
நீ நிலைபெற்று வாழ்வாயாக, இந்த நிலத்தின் மேல்
இமயமும் (3) இமயமும் துளக்கும் பண்பினை - குறு 158/5
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமம் சூல் மா மழை
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை		5
துணையிலர் அளியர் பெண்டிர் இஃது எவனே
உயர்ந்த மலையின் பக்கத்திலுள்ள பாம்புகள் இறந்துபடும்படி இடிக்கும்
மிகுந்த வேகத்தையுடைய பேரிடியின் இடிக்கும் முழக்கத்தோடு கலந்து
காற்றோடு வந்த நிறைந்த கருக்கொண்ட பெரிய மழையே!
நிறைந்த இரக்கத்தை நீ பெறவில்லையோ? பெரும் புகழ்கொண்ட
இமயமலையையும் அசைக்கின்ற தன்மையையுடையாய்!
துணையின்றி இருக்கின்றனர், இரங்கத்தக்கவர், பெண்டிர், இது எதற்காக?
நிலனும் நீடிய இமயமும் நீ - பரி 1/51
வலன் உயர் எழிலியும் மாக விசும்பும்		50
நிலனும் நீடிய இமயமும் நீ
அதனால்
இன்னோர் அனையை இனையையால் என
அன்னோர் யாம் இவண் காணாமையின்
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய		55
மன் உயிர் முதல்வனை ஆதலின்
வலமாக உயர்ந்தெழும் மேகமும், மேலிடமாகிய விசும்பும்,
இந்த நிலவுலகும், அதில் நெடிதுயர்ந்து நிற்கும் இமயமும் நீ!
அதனால்
இப்படிப்பட்டவரைப் போன்றவன், இன்ன தன்மையினன் என்று கூறும்படியாக
அப்படிப்பட்டவரை நாம் இங்கு காணாததால்,
பொன்னால் செய்யப்பட்ட அழகிய சக்கரப்படையை வலது கையில் தாங்கிக்கொண்டவனாய்,
உலகத்து உயிர்களுக்கு முதல்வனாக இருப்பதனால்
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே - புறம் 2/24
நிலம் தலைக்கொண்ட பொலம் பூம் தும்பை
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழியப்		15
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்
பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச்		20
சிறு தலை நவ்வி பெரும் கண் மாப் பிணை
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே
அவரின் நிலத்தைத் தம்மிடம் எடுத்துக்கொண்ட பொன்னாலான தும்பைப் பூவினையுடைய
கௌரவர் நூற்றுவரும் போரிட்டுப் போர்க்களத்தில் மடியுமட்டும்
பெரும் சோறாகிய மிக்க உணவை இரு படைக்கும் குறைவின்றிக் கொடுத்தவனே!
பால் புளித்துப்போனாலும், சூரியன் இருண்டுபோனாலும்,
நான்கு வேதத்தினது ஒழுக்கம் மாறுபட்டுப்போனாலும்,
மாறுபடாத அமைச்சர், படைத்தலைவர் முதலிய சுற்றத்துடன் குறைவின்றி நெடுங்காலம் புகழுடன் விளங்கி
மனக்கலக்கம் இன்றி நிற்பாயாக, பக்க மலையில்
சிறிய தலையையுடைய குட்டிகளுடன் பெரிய கண்களைக் கொண்ட பெண்மான்கள்
மாலையில் அந்தணர் தம் அரிய கடனாகிய ஆவுதியைப் பண்ணும்
முத்தீயாகிய விளக்கின்கண்ணே தூங்கும்
பொற்சிகரங்களைக் கொண்ட இமயமலையும் பொதிகை மலையும் போன்றே.


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

கங்கை (8)
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
  பெரு நீர் போகும் இரியல் மாக்கள் - பெரும் 431,432
வெண்மையான (நீருள்ள)ஓடைகள் கிழித்தோடுதலால் பளபளக்கும் ஒளியுடைய நெடிய கரத்தினின்றும்	430
பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு - மது 696
நாள் தர வந்த விழுக் கலம் அனைத்தும்		695
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு
புத்தேள்_உலகம் கவினிக் காண்வர
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரைச்
நாட்காலத்தே (திறையாகக் கொண்டு)வந்த சீரிய கலங்களும், பிறவும்				695
கங்கையாகிய அழகிய பெரிய யாறு கடலுள் படர்ந்து சென்றாற் போல,
அளந்து முடிவு அறியாத வளப்பம் பொருந்தின பண்டங்களோடு,
தேவருலகம் போன்று பொலிவெய்தி, காட்சிக்கு இனிமையுண்டாக,
மிகுத்துப் புகழைப் பெற்ற பெரிய சிறப்பயுடைய மதுரையின்கண் -
கங்கை வாரியும் காவிரி பயனும் - பட் 190
செல் கதிர் நுழையாச் செழு நகர் வரைப்பின்
செல்லா நல் இசை அமரர் காப்பின்
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்		185
காலின் வந்த கரும் கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிp பயனும்		190
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின்
நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிது துஞ்சிக்			195
கிளை கலித்துப் பகை பேணாது
வலைஞர் முன்றில் மீன் பிறழவும்
விலைஞர் குரம்பை மா ஈண்டவும்
கொலை கடிந்தும் களவு நீக்கியும்
செல்கின்ற (ஞாயிற்றின்)கிரணங்கள் நுழையமுடியாத வளமையான ஊர் எல்லையில்,
குன்றாத நல்ல புகழையுடைய தேவர்களின் காவலால்,
கடலில் (மரக்கலங்களில்)வந்த நிமிர்ந்த நடையினையுடைய குதிரைகளும்,			185
(நிலத்தில்)வண்டிகளில் வந்த கரிய மிளகுப் பொதிகளும்,
இமயமலையில் பிறந்த மாணிக்கமும், பொன்னும்,
பொதிகை மலையில் பிறந்த சந்தனமும், அகிலும்,
தென்திசைக் கடலில் (பிறந்த)முத்தும், கீழ்த்திசைக் கடலில் (பிறந்த)பவளமும்,

கங்கையாற்றின் விளைச்சலும், காவிரியாற்றின் செல்வங்களும்,					190
ஈழத்தின் உணவுப்பொருளும், கடாரத்தின் ஈட்டமும்,
அரிதானவும், பெரிதானவும், (நிலத்தின் முதுகு)நெளியும்படி திரண்டு,
செல்வங்கள் (ஒன்றோடொன்று)கலந்துகிடக்கும் அகன்ற இடங்களுடைய தெருக்களும் - (கொண்ட பட்டினம்), 
(மீன் பிடிப்போர்)கடல்நீர் நடுவிடத்தும், (ஏனையோர்)கரையினிடத்தும்
மகிழ்ச்சியுடன் இனிதாகத் தூங்கி,								195
(தம்)சுற்றம் தழைக்க (தம் உயிர்க்கு வரும்)பகையைப் பற்றிக்கவலைப்படாமல்,
வலைஞர் முற்றத்தில் மீன் பிறழ்ந்து திரியும்படியாகவும்,
விலைஞர் குடிலில் விலங்குகள் கிடக்கும்படியாகவும்,
கொலைத் தொழிலை விலக்கியும், களவுத் தொழிலைப் போக்கியும்,
தேவர்களைப் போற்றியும், வேள்வியைச் செய்வித்தும்						200
நல்ல பசுக்களோடு எருதுகளைப் பாதுகாத்தும்,							
அந்தணர்க்குள்ள புகழை அவர்க்கு நிலைநிறுத்தியும்,
(பல)பண்டங்களை ஆக்கியிட்டும், புதிய நல்லுணவு கொடுத்தும்,
கங்கை வங்கம் போகுவர்-கொல்லோ - நற் 189/5
தெறல் அரும் கடவுள் முன்னர்ச் சீறியாழ்
நரம்பு இசைத்து அன்ன இன் குரல் குருகின்
கங்கை வங்கம் போகுவர்-கொல்லோ		5
எவ் வினை செய்வர்-கொல் தாமே வெவ் வினைக்
சினம் தணிவதற்கரிய தெய்வத்துக்கு முன்னர், சீறியாழின்
நரம்புகளை இசைக்கும் இசையைப்போல இனிய குரலையுடைய குருகினங்களையுடைய
கங்கையாற்று மரக்கலத்தில் ஏறிச் சென்றிருப்பார் போலும்; 
வேறு எந்தச் செயலையேனும் செய்கிறாரோ அவர்; கொடிய செயலாகிய
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் - நற் 369/9
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கை அம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன என்		10
நிறை அடு காமம் நீந்தும் ஆறே
வானிலிருந்து இறங்கும் ஒளிரும் வெள்ளிய அருவியையுடைய
கங்கை எனும் பெரிய ஆற்றின் கரையைக் கடந்து இறங்கிவரும்
அணையை உடைத்துச் செல்லும் விரைவான வெள்ளப்பெருக்கைப் போல என்
மனவுறுதியை உடைத்துச் செல்லும் காமவெள்ளத்தை நீந்திக்கடக்கும் வழி -
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய - பரி 16/36
மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ் தாஅய்		35
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல் எஞ்ஞான்றும்
தேன் இமிர் வையைக்கு இயல்பு
புள்ளே புனலே புலவி இ மூன்றினும்
அகலமான மார்பிலிருந்து உதிர்ந்து விழுந்த மலரிதழ்களும் கலந்து பரவி,
விண்மீன்கள் முத்தாரமாய்ப் பூத்துக்கிடக்கும் அகன்ற ஆகாய கங்கை பெருக்கெடுத்தோடும்
வானம் பெயர்ந்து இங்கே பக்கத்தில் வந்தது போன்றிருப்பது எந்நாளுமே
வண்டுகள் மொய்த்து ஆரவாரிக்கும் வையை ஆற்றின் இயல்பு;
கள்ளுண்டதாலும், நீராடியதாலும், கணவருடன் ஊடியதாலும் ஆகிய மூன்று காரணங்களினால்
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ - அகம் 265/5,6
புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து
பனி ஊர் அழல் கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ் வரை மானும்-கொல்லோ
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலி குழீஇக் கங்கை		5
நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ
எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி
நிழல்-பால் அறலின் நெறித்த கூந்தல்
குழல் குரல் பாவை இரங்க நம் துறந்து
ஒண் தொடி நெகிழச் சாஅய்ச் செல்லலொடு		10
புகை போல மிகுந்து பரந்து, அகன்ற வானத்தில் உயர்ந்து
பனி படர்ந்த நெருப்புப் பிழம்பு போலக் காணப்படும்
இமயம் என்னும் செம்மையான மலையினைப் போன்றதோ?
பல்வேறு புகழ்களால் நிறைந்த, வெல்லும் பேராற்றல் உடைய நந்தர் என்னும் அரசமரபினர்
சிறப்பு மிக்க பாடலிபுரத்தில் கூடி, கங்கை ஆற்றின்
நீரின் அடியில் மறைத்துவைத்து மறைந்துபோன செல்வமோ?
இவ்விரண்டும் இல்லையென்றால் பின்னர் வேறு எத்தகையதோ? வாழ்க, தோழியே!, பிரகாசமான ஒளிவாய்ந்த
நிழலில் கிடந்த கருமணல் போன்று அலையலையான கூந்தலினையும்
குழலோசை போன்ற குரலினையும் உடைய பாவை போன்ற நீ வருத்தமுற, நம்மைத் துறந்து
நமது ஒளிவிடும் வளையல்கள் நெகிழ்ந்து வீழ மெலிந்து, துன்பத்துடன்
மன்பதை எல்லாம் சென்று உண கங்கை கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு - புறம் 161/6,7
பெரு மலை அன்ன தோன்றல சூல் முதிர்பு
உரும் உரறு கருவியொடு பெயல் கடன் இறுத்து
வள மலை மாறிய என்றூழ்க் காலை		5
மன்பதை எல்லாம் சென்று உணக் கங்கைக்
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு
எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின்
அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவரச்
சென்று தலைவருந அல்ல அன்பு இன்று		10
பெரிய மலையைப் போன்ற தோற்றத்தையுடையனவாய், கருக்கொண்டு கறுத்து
இடி முழக்கத்துடன் மின்னலும் சேர்ந்த தொகுதியுடன் மழையை முறையாகப் பெய்து
வளத்தைத்தரும் மழை நீங்கிய கோடைக்காலத்தில்,
உலகத்து உயிர்கள் எல்லாம் சென்று நீர் பருக கங்கையின்
கரையை மோதும் பெரு வெள்ளம் நிறைந்து தோன்றுவது போல
எங்களுக்கும் மற்றவர்க்கும் நீதான் தலைவனாக இருப்பதினால்
அன்பு இல்லாத கள்வர்கள் கொன்று வழியில் பறித்துக்கொள்வதால்
போய்வரக் கூடியவை அல்ல காட்டுவழிகள், தம் உயிர் மீது அன்பு இல்லாமல், 
வலிய கலைமான் அசைபோட்டுக்கிடக்கும் செல்வதற்கரிய அவ்வழியில் சென்றவர்க்கு
இன்றுடன் வாழ்நாள் முடிந்தது என்று சொல்லி
கண்பார்வை மறையும்படி நீர் கசிந்து, மனதிடம் அழிந்து
பொறுக்கமுடியாத துன்பத்தில் வருந்திக்கிடக்கும் பெரும் வறுமையில் ஆழ்ந்துள்ள என் மனைவி, உன்

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

சங்க இலக்கியங்களில் இடம்பிடித்த தனித்துவம் மிகுந்த இமயமலை

 

இமயமலை மேற்கு - வடமேற்கு பகுதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு பகுதிவரை 2400 கிலோ மீற்றர் வட்டவில்லாக அமைந்துள்ளது. இதன் மேற்கில் உயர்ந்த சிகரமான நங்கா பர்பத் சிந்து நதியின் வடக்கு வளைவில் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் உயர்ந்த சிகரமான நம்சா பர்வா பரம்ஹபுத்ராவின் பெரிய வளைவில் மேற்கே அமைந்துள்ளது. மலைத்தொடரின் அகலம் மேற்கில் 400 கிலோ மீற்றரும் கிழக்கில் 150 கிலோ மீற்றரும் ஆகும்.

இமயமலையின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியன காலநிலை, மழை, உயரம், மற்றும் மண் கொண்டு மாறுபடும். மலை அடிரவாரத்தில் வெப்ப மண்டல காலநிலையும் மிக உயர்ந்த இடத்தில் பனிக்கட்டி மற்றும் உறைபனியாகவும் காணப்படுகிறது.

கடக ரேகையின் அருகே உள்ளதால் இதன் பனி வரி 5500 மீற்றர் ஆகும். இது உலகிலேயே உயர்ந்தவற்றில் ஒன்று. ஆண்டு மழை அளவு தெற்கு முகப்பில் மேற்கிலிருந்து கிழக்கு வரை அதிகரிக்கும் இத்தகைய உயர் மாறுபாடு, மழை அளவு, மண்ணின் நிலை மற்றும் மிக அதிக பனி வரி காரணமாக நிறைய தாவரங்களும் விலங்குகளும் உயிர் வாழ உதவுகிறது. உதாரணமாக தீவிர குளிர் மற்றும் அதிக உயரம் (குறைந்த காற்றழுத்தம்) காரணமாக உச்சவிரும்பிகள் உயிர் வாழுகின்றன.

இமயமலையின் தனித்துவமான தாவர மற்றும் விலங்கு வளங்களில் காலநிலை மாற்றம் காரணமாக கட்டமைப்பு மற்றும் இயைபு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக பல இனங்கள் உயரமான இடங்களுக்கு சென்று உயிர் வாழ்கின்றன. கர்வால் இமயமலை பகுதியில் கருவாலி மரங்கள் இருந்த இடத்தில் தேவதாரு மரங்கள் வளர்கின்றன. சில மர இனங்களில் குறைந்த காலத்திலேயே பூத்தலும் பழுத்தலும் நிகழ்கின்றன.

நவீன கொள்கையின்படி இமயமலை இந்திய - அவுஸ்திரேலிய தட்டு மற்றும் யூரேசியன் கண்டங்களிடையே நிகழ்ந்த மோதலால் உருவாகியது. இதனையே மடிப்பு மலை என்று கூறுகிறோம்.

Himalaya.jpgவடக்கு நோக்கி நகர்ந்த இந்திய - அவுஸ்திரேலிய தகடுக்கும் யுரேசியன் தகடுக்கும் 7 கோடி ஆண்டுகள் முன்பு இந்த மோதல் தொடங்கியது. 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த வேகமாக நகரும் இந்திய - அவுஸ்திரேலிய தகடு முழுமையாக தெதைஸ் பெருங்கடலை மூடிவிட்டது. இதன் இருப்பு அங்குள்ள படிவப் பாறைகள் மற்றும் எரிமலைகள் மூலம் அறியப்படுகின்றது.

இந்த படிவுகள் அடர்த்தி குறைவாக இருந்ததால் அவை கடலின் கீழே போகாமல் ஒன்றுசேர்ந்து மலையை உருவாக்கின. இந்திய - அவுஸ்திரேலிய தட்டு கிடைமட்டமாக நகர்வதால் திபெத்திய பீடபூமி உயர்ந்து வருகிறது. மியன்மரில் உள்ள அரகான் யோமா உயர்நிலங்கள் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்த மோதலால் உருவாகியவையாகும்.

இன்றும் இந்திய அவுஸ்திரேலிய தட்டு வருடத்திற்கு 67 மி.மீ. நகர்ந்து வருகிறது. மற்றும் அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளில் இது ஆசியாவினுள் 1,500 கி.மீ. நகரும் இந்திய ஆசிய குவிதல் ஆண்டிற்கு 20 மி.மீ. தெற்கு இமாலய முகப்பின் அழுத்தத்தால் உறுஞ்சப்படுகிறது. இதனால் இமயமலை ஆண்டுக்கு 5 மி.மீ. உயர்கிறது. இந்திய தகடு ஆசிய தகடுகள் நுழைவதால் இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றது.

இமயமலைப் பகுதி 15000 பனியாறுகளைக் கொண்டுள்ளது. அதில் 12000 கன கிலோ மீற்றர் தண்ணீர் உள்ளது. அதன் பனிப்பாறைகள் கங்கோத்ரி மற்றும் யமுனோதிரி (உத்தரகண்ட்) மற்றும் க்ஹும்பு பனிப்பாறைகள் (எவரெஸ்ட் பகுதியில்) மற்றும் சேமு (சிக்கிம்) ஆகியவை அடங்கும். இமயமலை வெப்ப மண்டலத்திற்கு அருகே இருந்தாலும் அதன் உயர் பகுதிக்குள் ஆண்டு முழுவதும் பனி நிறைந்து காணப்படுகிறது. இது பல வற்றாத ஆறுகளின் ஊற்றாகத் திகழ்கிறது. இவை இரண்டு பெரிய ஆறு அமைப்புகளாக உள்ளன.

மேற்கு ஆறுகள் சிந்து படுக்கையில் இணைகின்றன. இவற்றில சிந்து நதிதான் பெரிய நதி. சிந்து நதி திபெத்தில் உருவாகி தென்மேற்காகப் பாய்ந்து இந்தியா, பாகிஸ்தான் வழியாக அரபிக் கடலில் செல்கிறது. இந்நதி ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆறுகளால் ஊட்டப்படுகிறது.

Himalaya2.jpgமற்றையது இமாலய நதிகளின் காங்கா - பிரம்மபுத்ரா படுகைக்கு செல்கிறது. இதன் முக்கிய நதிகள் கங்கை, பிரம்மபுத்ரா மற்றும் யமுனை பிரம்மபுத்ரா மேற்கு திபெத்தில் யார்லுங் டசன்கபோ நதியாக உருவாகி கிழக்கு திபெத் மற்றும் அசாம் சமவெளி வழியாக பாய்கிறது.

கங்கை மற்றும் பிரம்மபுத்திரா பங்களாதேசத்தில் சேர்ந்து உலகின் மிகப்பெரிய ஆற்றுப் படுகை வழியே சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

சல்வீன், மீகாங், யாங்சே மற்றும் ஹுவாங் ஹி (மஞ்சள் ஆறு) திபெத்திய பீடபூமியில் உருவாகின்றன. ஆகையால் இவை உண்மையான இமயமலை ஆறு அல்ல. சில புவியியலாளர்கள் இந்த ஆறுகளை 'வெளிச்சுற்று இமாலய ஆறுகள்' என்று அழைக்கின்றனர். சமீபத்திய ஆண்டுகளில் விஞ்ஞானிகள் உலக காலநிலை மாற்றத்தின் விளைவாக அப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் குறைவு விகிதம் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கண்டுள்ளனர்.

எடுத்துக்காட்டாக, பனிப்படல ஏரிகள் கடந்த சில தசாப்தங்களில் பூட்டான் இமயமலை பகுதியில் குப்பைகள் உள்ளடங்கிய பனிப் பாறைகளின் மேற்பரப்பில் வேகமாக உருவாகி வருகின்றன. இந்த விளைவு பல ஆண்டுகளாக உணரப்படாது என்றாலும், உலர் பருவங்களில் பனிப்பாறைகளால் உருவாகும் ஆறுகளை சார்ந்து இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு பேரிழப்பு ஏற்படும்.

இமயமலை பகுதியில் நூற்றுக்கணக்கான ஏரிகள் உள்ளன. பெரும்பாலான ஏரிகள் 5,000 மீற்றர் உயரத்திற்கு கீழே உள்ளன. அதன் பரப்பு உயரத்திற்கு ஏற்றவாறு குறைந்துள்ளது.

இமயமலை இந்திய துணைக் கண்டம் திபெத்திய பீடபூமி பகுதியில் உள்ள காலநிலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவை பருவக்காற்றை வடக்கு நோக்கி செல்வதைத் தடுத்து டேராய் பகுதிகளில் கன மழை பெய்ய உதவுகிறது.

இந்து மதத்தில் இமயமலை ஹிமவட் கடவுளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. (பனிக்கடவுள்) இது மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பார்வதி கங்கா மற்றும் சரஸ்வதியின் தந்தை ஆவார்.

இமயமலையில் உள்ள பல இடங்கள் இந்து சமண, சீக்கிய மற்றும் பெளத்த மதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இமய மலையின் உயரமான பரவலினால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அம்மவை இந்தியாவின் இயற்கை அரணாக விளங்குகிறது. இந்திய துணைக் கண்டத்தினை மங்கோலிய, சீன மக்களின் நாகரிகத்திலிருந்து பிரிக்கின்றது. உதாரணமாக செங்கிஸ்கானின் படையின் இந்தியாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தியதில் இமயமலைக்கு பங்கு உண்டு.

தமிழ் சங்க இலக்கியங்களிலும் இமயம் இடம்பெற்றுள்ளது.

அதுபற்றிய விபரங்கள் வருமாறு:

சேரலாதன் கடம்ப மரத்தை வெட்டிக் கடம்பரை ஓட்டிய பின்னர் இமயத்தில் வில்லைப் பொறித்தான்.

* வஞ்சி நகருக்குப் பெருமை அதன் அரசன் வானவன் இமயத்தில் வில்லைப் பொறித்தது.

* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் தன் முத்திரையாகிய வில்லைப் பொறித்தான்.

இந்தியாவில் இமயப் பகுதி அரசர்கள் குமரிமுனை வரையில் கைப்பற்றக் கனவு கண்டனர்.

* கொண்டல் மழை இமயத்தைத் தீண்டிப் பொழியும்.

* தலைவி ஒருத்தி இமயம் ஆடினாலும் தன் காதலனின் பண்பு ஆட்டங்கூடக் காணாது என்கிறாள்.

அரவணையான் புகழ் இமயத் துக்கு அப்பாலும் பரவ வேண்டும் என்று புலவர் திருமாலை வாழ்த் துகிறார்.

* பொன்னுடை நெடுங்கோட்டு இமயம் போன்ற வேழம் பரிசாகத் தருக என்கிறார் ஒரு புலவர்.

* சிவன் திரிபுரம் எரித்த போது இமயம் அவனுக்கு வில்லாயிற்று.

அந்தி வந்ததும் அந்தணர் தம் கடமையாக முத்தீ வளர்க்கும் இடங்களுள் ஒன்று இமயம்.

* திருபரங்குன்றம் புகழால் இமயக் குன்றுக்கு ஒப்பானது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard