திருக்குறளிற்கு பொருள் காணும் முறை திருக்குறளிற்கு பொருள் காணும் முறை 1.திருவள்ளூவர் தன் முதல் அதிகாரம் முதல் கடைசி அதிகாரம் வரும் சொல்லும் அனைத்தின்அடிப்படையை கசடு இன்றி கற்று உணர வேண்டும். 2.திருவள்ளுவரின் உள்ளக் கிடக்கினை உணர வேண்டும். 3.அதிகாரத் தலைப்பை ஒட்டி வள்ளுவரின் உள்ளத்தை உணர வேண்டும். 4. தமிழ் இலக்கண முறைப்படி பொருள் காண வேண்டும் = உதாரணமாக உவமை அணியில் ஒரு உயர்வான பொருளோடு அவர் கூறும் அறத்த்னை ஒத்துக் காட்டினால் அந்த உவமைப் பொருளை வள்ளுவர் உயர்வாக கருதினார் என்பதாலே தான் அதைப் பயன்படுத்தினார் 5. வள்ளுவர் கால் சொல்லாட்சியின் பொருள் உணர வேண்டும், அருஞ்சொற்களாக இருந்தால் வள்ளுவர் அதே சொல்லை பிற இடப் பயனோடு ஒத்துப் பார்க்க வேண்டும் 6.திருக்குறள் சங்க இலக்கியங்கள்- பத்துப்பாட்டு &எட்டுத் தொகை நூல்கள், அதன் பின்பு எழுந்த தொல்காப்பியம் அடுத்து இயற்றப்பட்டது, இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறளிற்கு பின்பானது. வள்ளுவர் காலத்திற்கு முந்தைய நூல்களில் உள்ள சொல்லை அதே பொருளில் மட்டுமே வள்ளுவர் கையாண்டு இருப்பார், வேறு மாற்று பொருளில் எழுதுவது இலக்கிய- இலக்கண மரபு அன்று. 7. வள்ளுவத்தின் அடிப்படையான மெய்பொருள் கண்டு மீண்டும் பிறவா நிலை அடையும் வழியை முழுமையாய் மனதார ஏற்று பொருள் காண வேண்டும் 8. கல்வி கற்பதே இறைவனின் திருவடி பற்றவே, அறிவு என்பதே மீண்டும் மீண்டும் பிறக்கும் அறியாமை எனும் பேதைமையை விலக்கிட இறை எனும் செம்பொருளும், உலகின் உச்சமான பிறப்பற்ற வீட்டையும் அடைய முயல்வதே, கசடு இன்றி கற்று மெய்யறிவு- மீண்டும் பிறவாதிருக்கும் நெறியை அடையவே 9.வள்ளுவரின் நடை அமைவு -மரபு இவற்றை மேல் சொன்னவையோடு ஒத்து அமைக்க வேண்டும். 10.மேற்கத்திய சுய-நல நுகர்ச்சி தன்மை நம்பிக்கைகளையோ, நீங்கள் முற்போக்கு என நம்புவபற்றை மற்றும் 20ம் நூற்றாண்டின் அறிவியல் அடிப்படை 1200 வருடம் முன்பான வள்ளுவரின் மீது திணிக்கக் கூடாது.
நாம் எளிமையாக முதல் அதிகாரத்தில் உள்ள "முதல்" சொல்லை எப்படி எல்லாம் வள்ளுவர் பயன்படுத்தி உள்ளார் எனப் பார்ப்போம்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - குறள் 1 கடவுள் வாழ்த்து நாம் முதல் குறளில் வரும் முதல என்பதை தொடக்கம், இந்த உலகம் இறைவனிடம் இருந்து தொடங்கியது, பிரம்மம் எனும் இறைமை இவ்வுலகைப் படைத்தார் வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை வியாபாரத்தில் போடும் மூலதனம் என பயன்படுத்தி உள்ளார். முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம் சார்பு இலார்க்கு இல்லை நிலை - குறள் 449 பெரியாரைத் துணைக்கோடல் ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை ஊக்கார் அறிவுடையார் - குறள் 463 தெரிந்துசெயல்வகை
வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை. நோய் வரும் காரணம் என்ன எனும் பொருளில் பயன்படுத்தி உள்ளார். நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல் - குறள் 948 மருந்து
வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை-கொடியில் அடியிலே என செடியின் தொடக்கம் எனும் பொருளில் ஊடியவரை உணராமை வாடிய வள்ளி முதல் அரிந்து அற்று - குறள் 1304 புலவி
வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை-முதலான எண்ணப்பட்ட மூன்றும் எனும் பொருளில் மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 941 - மருந்து
அருஞ் சொற்கள்- திருக்குறளிற்கு பொருள் திருக்குறள் உள்ளேயே பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972: பெருமை) பிறப்பு தன்மையில், ஈன்றாள் தன் கர்ப்பப் பையில் சுமந்து நம்மை பெற்றுடுக்கும் முறையில் பிறப்பு ஒரே மாதிரியாக அமைகிறது. செய்யும் தொழில்களின் வேற்றுமைகளால் பெருமை ஒன்றாக ஒத்து இருக்காது.
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும். செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா.
எளிமையான இந்தக் குறளை வைத்து நவீன தமிழ் மெய்யியல் மரபை ஏற்காத நவீன புலவர்கள் பிரிவினை மூட்டி திருக்குறளை சிறுமை செய்வதால் நாம் விரிவாகக் காண வேண்டி உள்ளது. பிறப்பொக்கும் பதவுரை: பிறப்பு-தோற்றம்; ஒக்கும்-ஒத்து அமைகிறது; எல்லா-அனைத்து; உயிர்க்கும்-உயிருக்கும். சிறப்பு- பெருமை ஒவ்வா- ஒப்பாகாது - ஈடாகாது- இணையாகாது; செய்-செய்யும்; தொழில்-தொழில்; வேற்றுமையான்-வேறுபாட்டினால். எல்லா உயிர்க்கும் -எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் -
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. குறள் 327 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251 உயிர் என்கையில் எல்லாவித உயிரையும் வள்ளுவர் பல்வேறு குறளில் சொல்லி உள்ளார்.
செய்தொழில் வேற்றுமையான் என அடுத்த அடியில் உள்ளதால் இது மனிதர்களை மட்டுமே குறிக்கும்
ஒக்கும் & ஒவ்வா - அருஞ்சொல் - இவற்றை வள்ளுவர் வேறு குறட்பாவில் என்ன பொருளில் பயன் படுத்தி உள்ளார்
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூ ஒக்கும் என்று. குறள் 1112 நலம்புனைந்துரைத்தல் நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்து இருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய். (தலைவியின் கண்ணையும் பூவின் மலரையும் ஒப்பீடு, ஆனால் இரண்டு வேறு; எனவே பார்வைக்கு ஒன்று போலே ஆனால் வெவ்வேறு எனவே அமைந்துள்ளது). எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் எனில் பிறப்பு தன்மையில், ஈன்றாள் தன் கர்ப்பப் பையில் சுமந்து நம்மை பெற்றுடுக்கும் முறையில் பிறப்பு ஒரே மாதிரியாக அமைகிறது.எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் – பிறப்பு இயல்பு என்பது ஒரே மாதிரியாக அமைகிறது. சமம் என்பது பொருள் இல்லவே இல்லை
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண் ஒவ்வேம் என்று. குறள் 1114: நலம்புனைந்துரைத்தல் குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், தலைவியின் கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும். ஒவ்வேம் என்பது ஒவ்வா என மேலுள்ள குறள் போலே எதிர்மறையிலே தான் வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார் ஒவ்வேம் -தலைவியின் கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் கிடைக்கும் பெருமை ஒன்றாக இருக்காது என்பது இப்பகுதியின் பொருள்.
செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா எனில் செய்யும் தொழிலால் பெருமைகள் ஒன்று போல அமைவதில்லை எனப் பொருள் பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (அதிகாரம்:பெருமை குறள்:972) எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற வேறுவேறு தொழில்களால் கிடைக்கும் பெருமை ஒத்து இருப்பதில்லை