பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண்.
துறை :இயன்மொழி. குறிப்பு : இதனுடன் காரிகிழாரின் ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து,இப் பாண்டியனின் சிறப்பைக் காண்க.
ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின் என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே!
பொருளுரை: பசுக்களும், பசுக்களின் இயல்பையுடைய பார்ப்பன இனத்தவர்களும் மகளிரையும், நோய் உடையோரையும் பாதுகாத்து தென் திசையில் வாழும் அவரவர் குடியில் இறந்தோர்க்குச் செய்ய வேண்டிய பிண்டோதகக் (பிண்டம் – சோறு, உதகம் – நீர்) கிரியை செய்யும் பொன்போன்ற தங்கமான பிள்ளையைப் பெறாத மணமக்களும் எம்முடைய அம்பை விரைவாகச் செலுத்தும் போது நீங்கள் உங்களுக்குப் பாதுகாப்பான இடம் தேடிச் செல்லுங்கள் என்று அறநெறியைச் சொல்லும் கொள்கையுடையவன்.
அதைச் செயல்படுத்துவதற்குத் தேவையான உறுதியான குணமும் கொல்லும் தன்மையுள்ள யானை மேலே எடுத்துச் செல்லப்பட்ட வானுயர்ந்த கொடிகள் ஆகாயத்தையே மறைத்து நிழல் தரும்படி ஆட்சி செய்பவனாகிய எங்கள் அரசே! குடுமி! நீ வாழ்க!
.
தனது அரசாட்சியின் செம்மையான சிறந்த நேர்மையான ஆட்சியில் செய்த சுத்தத் தங்கத்தை தன் அரசவையில் மகிழச் செய்யும் கூத்து நடிப்போர்க்கும், நடனக் கலைஞர்களுக்கும் வழங்கியவன் உன் முன்னோன் நெடியோன்.
நிலத்திற்கும், ஆற்று நீர், ஊற்று நீருக்கும் முன் தோன்றிய கடல் தெய்வத்திற்கு குடுமியின் முன்னோராகிய நெடியோன் விழா நடத்திய நல்ல நீரையுடைய பஃருளி என்னும் ஆற்று மணலினும் பல ஆண்டு காலம் எங்கள் அரசன் குடுமி நீடூழி வாழியவே! என்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாராட்டிப் பாடியிருக்கிறார்.
Description:
Let the cows, cow like brahmins, ladies, sicks and those who do not have gold like child to give offerings to the dead ones who are in the south, go to safe places as we are going to send arrows from our bows.
Oh our king Kudumi! You have righteousness and braveness with strong will. You long live than the sand of Pahruli river which has sweet water and which is created by Pandiyan Nediyon, who gave new gold coins to the dances who arranges festival for the sea god. -Nettimaiyaar
முலம்:
http://eluthu.com/kavithai/122659.html