தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,


Guru

Status: Offline
Posts: 1049
Date:
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
Permalink  
 


புறநானூறு 6, பாடியவர்: காரிகிழார்பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிதிணை: பாடாண்துறை: செவியறிவுறூஉவாழ்த்தியல்
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்,
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்,
கீழது முப்புணர் அடுக்கிய முறை முதற் கட்டின்  5
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத்தானும், ஆனாது
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த்
தெரிகோல் ஞமன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க!  10
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்,
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து,
அவ் எயில் கொண்ட செய்வுறு நன்கலம் 15
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்,
பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே,
இறைஞ்சுக பெரும நின் சென்னி! சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே,  20
வாடுக இறைவ நின் கண்ணி! ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே,
செலியர் அத்தை நின் வெகுளி! வால் இழை
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே,
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய 25
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி,
தண்கதிர் மதியம் போலவும், தெறு சுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய பெரும, நீ நிலமிசையானே!

வடக்கிலிருக்கும் பனி தங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்,
தெற்கிலிருக்கும் அச்சந்தரும் குமரியாற்றின் தெற்கும்,
கிழக்கிலிருக்கும் கரையை மோதுகின்ற சகரரால் தோண்டப்பட்ட கடலின் கிழக்கும்,
மேற்கிலிருக்கும் பழையதாய் முதிர்ந்த பெருங்கடலின் மேற்கும்,
கீழேயிருக்கும், நிலம், வான், சுவர்க்கம் என்ற மூன்றும் சேர்ந்து அடுக்கிய முறையில் முதலாவதான
நீர்நிலையிலிருந்து உயர்ந்து தோன்றும் நிலத்திற்குக் கீழேயும், மேலேயிருக்கும்
ஆனிலையுலகம் எனப்படும் கோ லோகத்திலும் அடங்காத
அச்சமும் புகழும் உன்னுடையதாகி, பெரிய அளவில்
சமமாக ஆராயும் துலாக்கோலின் நடுவூசி போல ஒரு பக்கத்தில்
சாயாது இருப்பாயாக; உன் படை, குடி முதலியன சிறந்துவிளங்கட்டும்;
போர் செய்ய எதிர்த்துவந்த பகைவரின் நாடுகளில்
உனது கடல் போன்ற படை உள்ளே புகுந்து முன்செல்ல, அடர்ந்த புள்ளிகளையும்
சிறிய கண்களையும் உடைய யானைப்படையை தடையின்றி நேரே ஏவி,
பசுமையான விளைநிலப் பக்கத்தையுடைய பல அரிய அரண்களைக் கைப்பற்றி
அந்த அரண்களில் கொள்ளப்பட்ட அழகுபடச் செய்த அணிகலன்களைப்
பரிசிலர்க்கு முறையாக வழங்கி,
தாழ்வதாக நின் வெண்கொற்றக்குடை, முனிவர்களால் துதிக்கப்படும்
முக்கண் செல்வரான சிவபெருமான் கோயிலை வலம்வருவதற்கு;
வணங்குக, பெருமானே உன் மணிமுடி, சிறந்த
வேதங்களை ஓதும் அந்தணர்கள் உன்னை வாழ்த்த எடுத்த கைகளின் முன்னே;
வாடிப்போகட்டும் இறைவனே, உன் தலைமாலை, பகைவரின்
நாடுகளை எரிக்கின்ற மணக்கின்ற புகை தடவிச்செல்வதால்;
தணியட்டும் உன் கோபம், வெண்மையான முத்தாரத்தையுடைய
உன் தேவியரின் சிறுசினம் சேர்ந்த ஒளிமிகு முகத்தின் முன்னே;
இதுவரை வென்ற வெற்றியினால் எழும் இறுமாப்பை வென்று, அவற்றை உன் மனத்துள் அடக்கிய,
குறைவுபடாத கொடைக்குணம் கொண்டு தகுதி மிகுதியும் பெற்ற குடுமியே!
குளிர்ந்த கதிர்களைக் கொண்ட திங்கள் போலவும், சுடுகின்ற தீச்சுவாலைகளைக் கொண்ட
ஒளி பொருந்திய கதிர்களைக் கொண்ட ஞாயிறு போலவும்
நிலைபெறுவாயாக, பெருமானே! நீ இந்த நிலத்தின் மேல்.

Puranānūru 6, Poet Kari Kizhār sang to Pandiyan Palyākasālai Muthukudumi Peruvazhuthi, Thinai: Pādān, Thurai: Seviyarivurūu, Vālthiyal
May your great glory and endless fame spread to the north
of the lofty northern Himalayas with snow, south of the fierce
Kumari river of the south, east of the eastern ocean dug out of
the earth that has waves that attack the shores, west of the very
ancient western ocean, in the earth, the lowest tier that rose out
of the ocean, below the land and in the upper world with cows!

May you be without bias, like the perfect pointer of a balance
that measures large quantities!  May your abilities flourish!
You entered the countries of those who opposed you
in battles, goaded your elephants with dense spots and small
eyes to charge, took many guarded forts with green fields, and
distributed the fine ornaments you seized, according to rank.

May your umbrella bow down when it circumambulates
the temple of Sivan with three eyes who is praised by sages!
May your head bend down when the Brahmins of the four
Vedas praise you!  May your garland wilt, assaulted by
the smoke of flames you lit in the lands of your enemies!

May your anger vanish when you see your women wearing
pure jewels, their faces bright with the anger of lovers’ quarrels!
O Great Kudumi who gives without limits!  You who have won
everything and never boasts about your victories!
May you live long on this earth forever, like the moon with
cool rays and the glowing sun with bright rays!

Notes:  Puranānūru poems 6, 9, 12, 15 and 64 were written for this king.   This is the only poem written by this poet who came from a town named Kāriyāru.

Meanings:  வடாஅது – in the north, வடக்கின்கண் (அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), பனிபடு நெடுவரை வடக்கும் – and north of the tall Himalayas with snow, தெனாஅது – in the south, தெற்கின்கண் (அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), உருகெழு குமரியின் தெற்கும் – and south of fierce Kumari river in the south, குணாஅது – on the east side (அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), கரை பொரு தொடு கடல் – dug ocean whose waves attack its shores (dug up by the mythological Sakarars – சகரர்), குணக்கும் – also in the east, குடாஅது – in the west, மேற்கில் (அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் – and in the west of the ancient ocean, கீழது – கீழதாகிய, what is below, முப்புணர் அடுக்கிய – three arranged levels of earth, sky and heaven, முறை முதற் கட்டின் – the first one in the levels, நீர்நிலை நிவப்பின் கீழும் – and below the earth rising out of a body of water, மேலது – above, ஆனிலை உலகத்தானும் – and to the upper world with cows, ஆனாது – not satisfied, உருவும் – causing others to fear, புகழும் ஆகி – and attaining great fame, விரி சீர் – large amounts of material, தெரிகோல் ஞமன் போல – like the perfect pointer stick of a balance (துலாக்கோலின் நாக்கு), ஒரு திறம் பற்றல் இலியரோ – may you not lean on one side (இலியரோ – ஓகாரம் அசைநிலை, an expletive), நிற்றிறம் (நின் திறம், நின்றிறம் நிற்றிறம் என வலிந்து நின்றது) சிறக்க – may your abilities flourish (சிறக்க – வியங்கோள் வினைமுற்று), செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து – in the nations of enemies who opposed you in campaigns (தேஎத்து – அளபெடை), கடற்படை குளிப்ப மண்டி – entered rapidly with your ocean-like army, அடர்ப் புகர் – dense spots, சிறுகண் யானை – small-eyed elephants, செவ்விதின் ஏவி – ordered them perfectly to attack, ordered them to attack at the right time, பாசவல் படப்பை – fields with green leaves (பாசவல் – பசிய விளைநிலம்), ஆர் எயில் பல தந்து – took many difficult forts, அவ் எயில் கொண்ட செய்வுறு நன்கலம் பரிசின் – the beautifully created precious ornaments that you seized from those forts, மாக்கட்கு வரிசையின் நல்கி – gave to people according to rank, பணியியர் அத்தை நின் குடையே – may you royal umbrella bow down (அத்தை – அசைநிலை, an expletive), முனிவர் முக்கண் செல்வர் நகர் வலஞ்செயற்கே – to go around the temple of god with three eyes who is praised by the sages – Sivan, இறைஞ்சுக பெரும – may it bend down O lord, நின் சென்னி – your head, சிறந்த – great, நான்மறை முனிவர் – Brahmins with their four Vedas, ஏந்து கை எதிரே – in front of their lifted hands, வாடுக இறைவ நின் கண்ணி – may your garland wilt O my lord, ஒன்னார் நாடு சுடு கமழ் புகை எறித்தலானே – due to burning the land of your enemies and causing smoke to spread (எறித்தலானே – ஏகாரம் அசைநிலை, an expletive), செலியர் அத்தை – may it leave (அத்தை – அசைநிலை, an expletive), நின் வெகுளி – your rage, வால் இழை மங்கையர் – women with pure jewels, women with white pearls, துனித்த – with anger, வாள் முகத்து எதிரே – on seeing their bright faces, ஆங்க – அசைநிலை, an expletive, வென்றி எல்லாம் வென்று – won everything, அகத்து அடக்கிய – kept inside, தண்டா ஈகைத் தகை மாண் குடுமி – great Kudumi who gives without limits, தண் கதிர் மதியம் போலவும் – like the moon with cool rays, தெறு சுடர் – hot rays, ஒண் கதிர் ஞாயிறு போலவும் – like the sun with bright rays, மன்னிய – stable, பெரும – O lord, நீ – you, நிலமிசையானே – on this earth (நிலமிசையானே – ஏகாரம் அசைநிலை, an expletive)



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
RE: வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
Permalink  
 


வடக்கில் பனி மிகுந்த உயரமான இமயமலைக்கு வடக்கும், தெற்கில் குமரி மலையினின்று ஊற்றெடுத்துப் பாயும் குமரி ஆற்றிற்குத் தெற்கும், கிழக்கில் கரையை மோதுகின்ற, சகரரால் (சகரனின் மகன்கள் அறுபதினாயிரம் பேர்) தோண்டப்பட்ட சமுத்திரத்திற்கு கிழக்கும், மேற்கில் மிகப் பழமையான ஆழமான கடலுக்கு மேற்கும், கீழே நிலம், ஆகாயம், சுவர்க்கம் என மூன்றும் இணைந்து அடுக்கிய அமைப்பின் முதற்கட்டாகிய நீர்நிலை நிறைந்த நிலத்தின் கீழும், மேலே அமைந்துள்ள கோ லோகத்திலும் மட்டுமல்லாது உனது படை, குடி முதலிய திறங்கள் பெற்று பேரும் புகழுடன் சிறக்கட்டும்! 

பரந்த சிறப்பான பொருட்களை ஆராயும் துலாக்கோலில் உள்ள சமமாகக் காட்டும் கருவி போல, ஒரு பக்கம் வளைந்து கொடுக்காமல் இருப்பாயாக! 

போர் செய்வதற்கு மாறுபட்ட தேசத்தின் மீது உனது கடல் போலும் படை உள்ளே மிகுதியாகச் சென்று அடர்ந்த நிறத்தையும் சிறிய கண்களையும் உடைய யானைகளைத் தடையின்றி ஏவி பசுமையான விளைநிலங்களுடைய அரிய மதிலரண் பலவற்றையும் தனதாக்கிக் கொண்டு அந்த அரணிலிருந்து பெறப்பட்ட அழகிய நல்ல அணிகலன்களை பரிசு பெற வருவோர்க்கு அவரவர் தகுதிக்கேற்ப வழங்கி உனது கொற்றக்குடை முனிவரால் போற்றப்படும் முக்கட் செல்வனாகிய சிவபெருமான் கோயிலை வலம் வருவதற்கு தாழ்க! 

உனது தலை, நான்கு வேதத்தினை அறிந்து சிறந்த அந்தணர் உன்னை நீடு வாழ்க என வாழ்த்தும் கையின் முன்னே வணங்குக பெருமானே! 

இறைவனே! நீ அணிந்திருக்கும் மாலை உன் பகைவரது நாட்டைச் சுடுவதால் ஏற்படும், இனிய மணமுடைய புகையால் வாடட்டும்! 

உனது சினம், சிறந்த ஆபரணங்கள் அணிந்த உன் தேவியரின் ஒளியுடைய முகத்தின் முன் செல்லாது தணிக! போரில் வென்று, வெற்றி முழுவதையும் உன் மனத்தினில் அடக்கி தணியாத வள்ளன்மையுடைய தகுதியால் மாட்சிமைப்பட்ட குடுமி! 

குளிர்ந்த கதிர்களையுடைய நிலவைப் போல குளிர்ச்சியுடனும், மிக்க ஒளி பொருந்திய சுடுகின்ற கிரணங்களையுடைய சூரியனை போல ஒளியுடனும் இந்த நிலமாகிய உலகத்தில் நீ நிலைபெறுவாயாக, பெருமானே! 


Description:

In the north there is snow covered high Himalaya. 
In the south there is frightening Kumari river. 
In the east there is the sea with waves dashing against the shore. 
In the west there is ancient sea. 

You are the king of the vast country. Your fame is spread to the world which is below the earth and which is rich in water. 
It is spread to the world which is above the Heaven. 

You are like the balancing point of the weighing balance and never support one side. Let your people and army be well. 

Your warriors will enter into the enemies' country like sea. They ride elephants with dots on their faces and having small eyes. 
They seize forts surrounded by green fields. You give the ornaments seized in the forts to those who come to get gifts. 

Let your umbrella be lowered only when it goes round the temple of Shiva who is worshiper by sage, who have learned four vedas. 
Oh lord! Let your crown dry by the smoke raised by burning your enemy's country. 

Let your anger go away before the shining faces of the ladies who have worn shining ornaments. 

Oh Mudhukudumip Peruvazhudhi! You have success which has conquered all successes. You have endless giving quality and many noble qualities. 

You live stable in this world like the moon which spreads cold rays and like the sun which gives shining rays. -Kaarikizhaar

முலம்:
http://eluthu.com/kavithai/121894.html
http://thamizhanna.blogspot.in/2010/05/purananooru-first-15-songs-english.html



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

பாடலின் பிண்ணணி: இப்பாடலில், காரிகிழார் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியின் வெற்றியையும் புகழையும் சிறப்பித்துக் கூறுவது மட்டுமல்லாமல் சிறந்த உறுதிப் பொருள்களை அவனுக்கு அறிவுரையாகக் கூறுகிறார்.

அருஞ்சொற்பொருள்:
1. வடாஅது = வடக்கின் கண்ணது; படுத்தல் = நிலைபெறச் செய்தல்; படு = நிலைபெற்ற (தங்கிய); நெடு = நீண்ட; வரை = எல்லை. 2. தெனாஅது = தெற்கின் கண்ணது; உரு = அச்சம்; கெழு = பொருந்திய. 3. குணாஅது = கிழக்கின் கண்ணது; பொருதல் = முட்டுதல்; தொடல் = தோண்டல்; குணக்கு = கிழக்கு. 4. குடாஅது = மேற்கின் கண்ணது; தொன்று = பழமை; முதிர் = முதிர்ச்சி; பெளவம் = கடல்; குடக்கு = மேற்கு. 5. புணர் = சேர்க்கை; முறை = ஒழுங்கு; கட்டு = வகுப்பு. 6. நிவத்தல் = உயர்தல். 7. ஆனிலை உலகம் = பசுக்களின் உலகம் (சுவர்க்கலோகம்); ஆனாது = அமையாது. 8. உரு = அச்சம்; சீர் = அளவு. 9. தெரிதல் = ஆராய்தல்; கோல் = துலாக்கோல்; ஞமன் = துலாக்கோலின் முள்முனை; திறம் = பக்கம், கூறுபாடு, வலிமை, குலம். 10. பற்றல் = பிடித்தல்; திறம் = குலம். 11. வினை = போர்; எதிர்ந்த = மாறுபட்ட; தெவ்வர் = பகைவர்; தேஎம் =தேயம், நாடு. 12. குளித்தல் = மூழ்குதல்; மண்டல் = நெருங்கல்; அடர் = அடர்ந்த; புகர் = புள்ளி. 13. செவ்விதின் = செம்மையாக (நேரே); ஏவி = செலுத்தி. 14. பாசவல் = பசுமையான விளை நிலம்; படப்பை = ஊர்ப்புறம்; ஆர் = அரிய; எயில் = மதில்; தந்து = அழித்து. 15. உறுதல் = நன்மையாதல், பயன்படல்; உறு = மிக்க. 16. மாக்கள் = மக்கள்; வரிசையின் = தரமறிந்து; நல்கி = அளித்து. 17. பணியியர் = தாழ்க. 18. செல்வம் = செல்வர்; நகர் = கோயில். 19. இறைஞ்சுதல் = வணங்குதல்; பெருமன் = அரசன்; சென்னி = தலை. 20. ஏந்துதல் = கை நீட்டுதல். 21. கண்ணி = தலையில் அணியும் மாலை; ஒன்னார் = பகைவர். 22. கமழ் = மணக்கும். 23. செலீஇயர் = செல்வதாக (தணிவதாக);அத்தை - அசைச் சொல்; வால் = தூய, வெண்மையான; இழை = அணிகலன். 24. துனித்த = ஊடிய; வாள் = ஒளி. 25. வென்றி = வெற்றி. 26. தண்டா = தணியாத (நீங்காத); தகை = தகுதி; மாண் = மாட்சிமை பெற்ற. 27. தண் = குளிர்ந்த; தெறு = சுடுகை. 29. மன்னுதல் = நிலைபெறுதல்; மிசை = மேல்பக்கம்.

கொண்டு கூட்டு: குடுமி, பெரும, உருவும் புகழும் ஆக; ஒரு திறம் பற்றாது ஒழிக; நின் திறம் சிறக்க; பணிக; இறைஞ்சுக; வாடுக; செல்லுக; பரிசில் மாக்கட்கு நல்கி மதியம் போலவும் ஞாயிறு போலவும், பெரும நீ நிலத்தின் மிசை மன்னுக எனக் கூட்டுக.

உரை: வடக்கே பனி நிலைபெற்றிருக்கும் நெடிய மலைக்கு (இமய மலைக்கு) வடக்கிலும், தெற்கே அச்சம் பொருந்திய குமரி ஆற்றுக்குத் தெற்கிலும், கிழக்கே கரையை முட்டும் ஆழமான (தோண்டப்பட்ட) கடலுக்கு கிழக்கிலும், மேற்கே மிகப் பழமையான கடலுக்கு மேற்கிலும், நிலம், ஆகாயம், சுவர்க்கம் என்று சேர்ந்துள்ள மூன்றில், நிலத்திற்குக் கீழும், சுவர்க்கத்திற்கு மேலேயும் அடங்காது உன்னைப்பற்றிய அச்சமும் உன் புகழும் பெருகி, பெரிய பொருள்களைச் சமமாக ஆராயும் துலாக்கோல் (தராசு) போல் ஒரு பக்கம் சாயாது இருப்பாயாக. உன் படை, குடி முதலியன சிறப்பதாக.

உன் செயலை எதிர்த்த உன் பகைவர் நாட்டில் கடல் புகுந்தது போல் பெருமளவில் உன் படையையும், சிறிய கண்களையுடைய யானைகளையும் செலுத்தி, அடர்ந்த பசுமையான விளைநிலம் மற்றும் ஊர்ப்புறங்களையும், பாதுகாக்கும் கடத்தற்கரிய அரண்களையும் அழித்து, அவற்றுள் அடங்கிய அழகுடன் செய்யப்பட்ட அணிகலன்களைப் பரிசிலர்க்கு அவர்கள் தகுதிக்கேற்ப அளிப்பாயாக. சடைமுடி தரித்த, மூன்று கண்களையுடைய சிவபெருமான் கோயிலை வலம்வரும் பொழுது மட்டும் உன் கொற்றக்குடை தாழட்டும். சிறந்த நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்கள் தங்கள் கைகளை உயர்த்தி உன்னை வாழ்த்தும் பொழுது மட்டும் உன் தலை வணங்கட்டும். பகைவர்களின் நாட்டில் (உன்னால் போரில்) மூட்டப்பட்ட தீயினால் மட்டும் உன் தலையில் உள்ள மாலை வாடட்டும். தூய வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்கள் அணிந்த மகளிர் உன்னோடு ஊடும் பொழுது மட்டும் அவர்கள் எதிரில் உன் கோபம் தணியட்டும்.

அடையவேண்டிய வெற்றிகளை எல்லம் அடைந்தும் மனத்தில் அடக்கத்தோடும் குறையாத ஈகைக் குணத்தோடும் உள்ள மாட்சிமை பொருந்திய குடுமி!

தலைவா!, நீ குளிர்ந்த சுடருடைய திங்களைப் போலவும், வெப்பமான சுடருடைய கதிரவனைப் போலவும் இந்நிலத்தில் நிலைபெற்று வாழ்வாயாக!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard