தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே


Guru

Status: Offline
Posts: 1049
Date:
நின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே
Permalink  
 


 புறநானூறு - 6. தண்ணிலவும் வெங்கதிரும்!

பாடியவர்:காரிகிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை: பாடாண். துறை :செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சிறப்பு :பாண்டியனின் மறமாண்பு.
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்
கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற்கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழு மேல
தானிலை யுலகத் தானு மானா
துருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோன் ஞமன்ன் போல வொருதிறம்
பற்ற லிலியரோ நிற்றிறஞ்சிறக்க
செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி யடர்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதி னேவிப்
பாசவற் படப்பை யாரெயில் பலதந்
தவ்வெயிற் கொண்ட செய்வுறுநன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே
வாடுக விறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே
செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை
மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே
ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய
தண்டா வீகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெருமநீ நிலமிசை யானே.
பொருளுரை:
வடக்கில் பனி மிகுந்த உயரமான இமயமலைக்கு வடக்கும், தெற்கில் குமரி மலையினின்று ஊற்றெடுத்துப் பாயும் குமரி ஆற்றிற்குத் தெற்கும், கிழக்கில் கரையை மோதுகின்ற, சகரரால் (சகரனின் மகன்கள் அறுபதினாயிரம் பேர்) தோண்டப்பட்ட சமுத்திரத்திற்கு கிழக்கும், மேற்கில் மிகப் பழமையான ஆழமான கடலுக்கு மேற்கும், கீழே நிலம், ஆகாயம், சுவர்க்கம் என மூன்றும் இணைந்து அடுக்கிய அமைப்பின் முதற்கட்டாகிய நீர்நிலை நிறைந்த நிலத்தின் கீழும், மேலே அமைந்துள்ள கோ லோகத்திலும் மட்டுமல்லாது உனது படை, குடி முதலிய திறங்கள் பெற்று பேரும் புகழுடன் சிறக்கட்டும்!
பரந்த சிறப்பான பொருட்களை ஆராயும் துலாக்கோலில் உள்ள சமமாகக் காட்டும் கருவி போல, ஒரு பக்கம் வளைந்து கொடுக்காமல் இருப்பாயாக!
போர் செய்வதற்கு மாறுபட்ட தேசத்தின் மீது உனது கடல் போலும் படை உள்ளே மிகுதியாகச் சென்று அடர்ந்த நிறத்தையும் சிறிய கண்களையும் உடைய யானைகளைத் தடையின்றி ஏவி பசுமையான விளைநிலங்களுடைய அரிய மதிலரண் பலவற்றையும் தனதாக்கிக் கொண்டு அந்த அரணிலிருந்து பெறப்பட்ட அழகிய நல்ல அணிகலன்களை பரிசு பெற வருவோர்க்கு அவரவர் தகுதிக்கேற்ப வழங்கி உனது கொற்றக்குடை முனிவரால் போற்றப்படும் முக்கட் செல்வனாகிய சிவபெருமான் கோயிலை வலம் வருவதற்கு தாழ்க!
உனது தலை, நான்கு வேதத்தினை அறிந்து சிறந்த அந்தணர் உன்னை நீடு வாழ்க என வாழ்த்தும் கையின் முன்னே வணங்குக பெருமானே!
இறைவனே! நீ அணிந்திருக்கும் மாலை உன் பகைவரது நாட்டைச் சுடுவதால் ஏற்படும், இனிய மணமுடைய புகையால் வாடட்டும்!
உனது சினம், சிறந்த ஆபரணங்கள் அணிந்த உன் தேவியரின் ஒளியுடைய முகத்தின் முன் செல்லாது தணிக! போரில் வென்று, வெற்றி முழுவதையும் உன் மனத்தினில் அடக்கி தணியாத வள்ளன்மையுடைய தகுதியால் மாட்சிமைப்பட்ட குடுமி!
குளிர்ந்த கதிர்களையுடைய நிலவைப் போல குளிர்ச்சியுடனும், மிக்க ஒளி பொருந்திய சுடுகின்ற கிரணங்களையுடைய சூரியனை போல ஒளியுடனும் இந்த நிலமாகிய உலகத்தில் நீ நிலைபெறுவாயாக, பெருமானே!
Description:
In the north there is snow covered high Himalaya.
In the south there is frightening Kumari river.
In the east there is the sea with waves dashing against the shore.
In the west there is ancient sea.
You are the king of the vast country. Your fame is spread to the world which is below the earth and which is rich in water.
It is spread to the world which is above the Heaven.
You are like the balancing point of the weighing balance and never support one side. Let your people and army be well.
Your warriors will enter into the enemies' country like sea. They ride elephants with dots on their faces and having small eyes.
They seize forts surrounded by green fields. You give the ornaments seized in the forts to those who come to get gifts.
Let your umbrella be lowered only when it goes round the temple of Shiva who is worshiper by sage, who have learned four vedas.
Oh lord! Let your crown dry by the smoke raised by burning your enemy's country.
Let your anger go away before the shining faces of the ladies who have worn shining ornaments.
Oh Mudhukudumip Peruvazhudhi! You have success which has conquered all successes. You have endless giving quality and many noble qualities.
You live stable in this world like the moon which spreads cold rays and like the sun which gives shining rays. -Kaarikizhaar
முலம்:
eluthu.com/kavithai/121894.html
thamizhanna.blogspot.in/2010/05/purananooru-first-15-songs-english.html



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
RE: நின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே
Permalink  
 


Puranānūru 6, Poet Kari Kizhār sang to Pandiyan Palyākasālai Muthukudumi Peruvazhuthi, Thinai: Pādān, Thurai: Seviyarivurūu, Vālthiyal
May your great glory and endless fame spread to the north
of the lofty northern Himalayas with snow, south of the fierce
Kumari river of the south, east of the eastern ocean dug out of
the earth that has waves that attack the shores, west of the very
ancient western ocean, in the earth, the lowest tier that rose out
of the ocean, below the land and in the upper world with cows!
May you be without bias, like the perfect pointer of a balance
that measures large quantities! May your abilities flourish!
You entered the countries of those who opposed you
in battles, goaded your elephants with dense spots and small
eyes to charge, took many guarded forts with green fields, and
distributed the fine ornaments you seized, according to rank.
May your umbrella bow down when it circumambulates
the temple of Sivan with three eyes who is praised by sages!
May your head bend down when the Brahmins of the four
Vedas praise you! May your garland wilt, assaulted by
the smoke of flames you lit in the lands of your enemies!
May your anger vanish when you see your women wearing
pure jewels, their faces bright with the anger of lovers’ quarrels!
O Great Kudumi who gives without limits! You who have won
everything and never boasts about your victories!
May you live long on this earth forever, like the moon with
cool rays and the glowing sun with bright rays!

Notes: Puranānūru poems 6, 9, 12, 15 and 64 were written for this king. This is the only poem written by this poet who came from a town named Kāriyāru.
Meanings: வடாஅது – in the north, வடக்கின்கண் (அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), பனிபடு நெடுவரை வடக்கும் – and north of the tall Himalayas with snow, தெனாஅது – in the south, தெற்கின்கண் (அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), உருகெழு குமரியின் தெற்கும் – and south of fierce Kumari river in the south, குணாஅது – on the east side (அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), கரை பொரு தொடு கடல் – dug ocean whose waves attack its shores (dug up by the mythological Sakarars – சகரர்), குணக்கும் – also in the east, குடாஅது – in the west, மேற்கில் (அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் – and in the west of the ancient ocean, கீழது – கீழதாகிய, what is below, முப்புணர் அடுக்கிய – three arranged levels of earth, sky and heaven, முறை முதற் கட்டின் – the first one in the levels, நீர்நிலை நிவப்பின் கீழும் – and below the earth rising out of a body of water, மேலது – above, ஆனிலை உலகத்தானும் – and to the upper world with cows, ஆனாது – not satisfied, உருவும் – causing others to fear, புகழும் ஆகி – and attaining great fame, விரி சீர் – large amounts of material, தெரிகோல் ஞமன் போல – like the perfect pointer stick of a balance (துலாக்கோலின் நாக்கு), ஒரு திறம் பற்றல் இலியரோ – may you not lean on one side (இலியரோ – ஓகாரம் அசைநிலை, an expletive), நிற்றிறம் (நின் திறம், நின்றிறம் நிற்றிறம் என வலிந்து நின்றது) சிறக்க – may your abilities flourish (சிறக்க – வியங்கோள் வினைமுற்று), செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து – in the nations of enemies who opposed you in campaigns (தேஎத்து – அளபெடை), கடற்படை குளிப்ப மண்டி – entered rapidly with your ocean-like army, அடர்ப் புகர் – dense spots, சிறுகண் யானை – small-eyed elephants, செவ்விதின் ஏவி – ordered them perfectly to attack, ordered them to attack at the right time, பாசவல் படப்பை – fields with green leaves (பாசவல் – பசிய விளைநிலம்), ஆர் எயில் பல தந்து – took many difficult forts, அவ் எயில் கொண்ட செய்வுறு நன்கலம் பரிசின் – the beautifully created precious ornaments that you seized from those forts, மாக்கட்கு வரிசையின் நல்கி – gave to people according to rank, பணியியர் அத்தை நின் குடையே – may you royal umbrella bow down (அத்தை – அசைநிலை, an expletive), முனிவர் முக்கண் செல்வர் நகர் வலஞ்செயற்கே – to go around the temple of god with three eyes who is praised by the sages – Sivan, இறைஞ்சுக பெரும – may it bend down O lord, நின் சென்னி – your head, சிறந்த – great, நான்மறை முனிவர் – Brahmins with their four Vedas, ஏந்து கை எதிரே – in front of their lifted hands, வாடுக இறைவ நின் கண்ணி – may your garland wilt O my lord, ஒன்னார் நாடு சுடு கமழ் புகை எறித்தலானே – due to burning the land of your enemies and causing smoke to spread (எறித்தலானே – ஏகாரம் அசைநிலை, an expletive), செலியர் அத்தை – may it leave (அத்தை – அசைநிலை, an expletive), நின் வெகுளி – your rage, வால் இழை மங்கையர் – women with pure jewels, women with white pearls, துனித்த – with anger, வாள் முகத்து எதிரே – on seeing their bright faces, ஆங்க – அசைநிலை, an expletive, வென்றி எல்லாம் வென்று – won everything, அகத்து அடக்கிய – kept inside, தண்டா ஈகைத் தகை மாண் குடுமி – great Kudumi who gives without limits, தண் கதிர் மதியம் போலவும் – like the moon with cool rays, தெறு சுடர் – hot rays, ஒண் கதிர் ஞாயிறு போலவும் – like the sun with bright rays, மன்னிய – stable, பெரும – O lord, நீ – you, நிலமிசையானே – on this earth (நிலமிசையானே – ஏகாரம் அசைநிலை, an expletive)



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

புறநானூறு 2, பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகனார், பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், திணை: பாடாண், துறை: செவியறிவுறூஉ, வாழ்த்தியல்
மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும் என்றாங்கு 5
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்,
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்,
வலியும் தெறலும் அளியும் உடையோய்!
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின்
வெண்தலைப் புணரிக் குட கடல் குளிக்கும் 10
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந!
வானவரம்பனை! நீயோ பெரும!
அலங்கு உளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை
ஈரைம்பதின்மரும் பொருது களத்து ஒழியப், 15
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச் 20
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்,
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே.
Puranānūru 2, Poet Muranjiyur Mudinākanār sang to Cheraman Perunchōtru Uthiyan Cheralathan, Thinai: Pādān, Thurai: Seviyarivurūu, Vālthiyal
Your nature is like the five elements – the earth filled with sand,
the sky raised above the earth, wind that blows in the sky, fire that
sweeps up the wind, and water that differs from that fire.
You tolerate your enemies and your deliberation is broad. You are
strong, destructive and merciful. The sun rises from your ocean
and descends into your ocean in the west with waves topped with
white surf.
You are king of a country with prosperous towns! The sky is your limit!
O Greatness who gave unlimited food, until those hundred men wearing
golden thumpai flower garlands had seized the land and perished in the
field fighting furiously against the five whose horses wore swaying plumes!
Even if milk turns sour, the sun darkens, or the four Vedas swerve from
the truth, may you totally glow, with your unswerving ministers!
May you never be shaken like Mount Pothiyam, like the Himalayas with its
golden summits, where long-eyed does sleep on the slopes near their fawns
with tiny heads, at dusk, in the light of three fires lit by the Brahmins
who perform difficult rituals!
Notes: This is the only poem written for this king. This is the only poem written by this poet. ஐவரோடு (13) – பாண்டவர்களுடன், ஈரைம்பதின்மரும் (15) – நூறு கௌரவர்களும். முத்தீ (23) – ஒளவை துரைசாமி உரை – ஆகவனீயம், காருகபத்தியம், தென்றிசையங்கி. பரிபாடல் பாடல் 5 பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆகவநீயம், காருகபத்தியம், தக்கணாக்கினி என்பன. யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).
Meanings: மண் திணிந்த நிலனும் – the earth dense with sand, the earth filled with sand (நிலன் – நிலம் என்பதன் போலி), நிலம் ஏந்திய விசும்பும் – the sky raised above the earth, விசும்பு தைவரு வளியும் – the wind that blows in the sky, வளித் தலைஇய தீயும் – the fire with the wind, the fire sweeping up the wind (தலைஇய – அளபெடை), தீ முரணிய நீரும் – the water that differs from fire, என்று ஆங்கு – என ஆங்கு, in this manner (ஆங்கு – அசைநிலை, an expletive), ஐம் பெரும் பூதத்து இயற்கை போல – like the five great elements of nature, போற்றார்ப் பொறுத்தலும் – tolerating enemies, சூழ்ச்சியது அகலமும் – broad thinking, வலியும் தெறலும் அளியும் உடையோய் – you have strength, destructive power and pity, நின் கடல் பிறந்த ஞாயிறு – the sun that rises from your ocean, பெயர்த்து – moving, நின் வெண்தலைப் புணரிக் குட கடல் குளிக்கும் – it enters on the west your ocean with waves with white tops (குளிக்கும் – பெயரெச்ச வினை, ஞாயிற்றின் வினை), யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந – O king of a fine country with prosperous towns, வானவரம்பனை நீயோ – O Chera king whose limit is the sky (வானவரம்பனை- ஐகாரம் முன்னிலை விளக்கி நின்றது), நீயோ – you (ஓகாரம் அசைநிலை, an expletive), பெரும – O lord, அலங்கு உளைப் புரவி ஐவரோடு – with the five with horses with swaying plumes, the Pāndavars, சினைஇ – with rage (சினைஇ – அளபெடை), நிலந்தலைக் கொண்ட – took to the land, பொலம் பூந்தும்பை – golden thumpai flowers, White dead nettle, Leucas aspera, ஈரைம்பதின்மரும் – and the hundred people (50×2), Thuriyothanan and others, Kauravas, பொருது களத்து ஒழிய – ruined in the battlefield, பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் – you gave abundant rice without limits, you gave abundant food without limits, பாஅல் புளிப்பினும் – if milk turns sour (பாஅல் – அளபெடை), பகல் இருளினும் – even if daytime becomes dark, நாஅல் வேத நெறி திரியினும் – even if the four Vedas swerve from truth (நாஅல் – அளபெடை), திரியாச் சுற்றமொடு – with unswerving relatives, with unswerving ministers, முழுது சேண் விளங்கி – totally shine greatly, நடுக்கின்றி நிலியரோ – may you stand without trembling (ஓகாரம் அசைநிலை, an expletive), அத்தை – அசைநிலை, an expletive, அடுக்கத்து – on the mountain ranges, சிறுதலை நவ்வி – young deer with small heads, பெருங்கண் மாப் பிணை – female deer with large eyes, அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கில் துஞ்சும் – they sleep in the light of three fires of the Brahmins who perform difficult/rare/precious twilight rituals, பொன் கோட்டு – with golden peaks, இமயமும் பொதியமும் போன்றே – like Mount Himalayas and Pothiyam Mountain (போன்றே – ஏகாரம் அசைநிலை, an expletive)



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

புறநானூறு - 55. மூன்று அறங்கள்

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். துறை: செவியறிவுறூஉ.

ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற,
கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்என
நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்;
அதனால், நமரெனக் கோல்கோ டாது,
பிறர்எனக் குணங் கொல்லாது,
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,
வானத்து அன்ன வண்மையும் மூன்றும்
உடையை ஆகி இல்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக்
கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!

பொருளுரை:
உயர்ந்த மலையைப் பெரிய வில்லாகவும் பாம்பை நாணாகவும் கொண்டு,
ஒரே அம்பில் முப்புரங்களையும் (மூன்று அசுரர்களின் பறக்கும் கோட்டைகளையும்) அழித்து,
பெரிய வலிமையுடைய தேவர்களுக்கு வெற்றியைக் கொடுத்த, கரிய நிறமுடைய கழுத்தையுடைய சிவபெருமானின்
அழகிய திருமுடியின் பக்கத்தில் உள்ள பிறையணிந்த நெற்றியில் உள்ள கண்போல்
மூவேந்தர்களிலும் மேம்பட்ட மாலையணிந்த நன்மாறனே!
கடிய சினத்தையுடைய கொல்லும் யானைப்படை,
விரைந்து செல்லும் செருக்குடைய குதிரைப்படை,
உயர்ந்த கொடிகளுடைய தேர்ப்படை,
நெஞ்சில் வலிமையுடன் போரை விரும்பும் காலாட்படை ஆகிய நான்கு படைகளும் உன்னிடம் சிறப்பாக இருந்தாலும்,
பெருமைமிக்க அறநெறிதான் உன் ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படையாகும்.
அதனால், இவர் நம்மவர் என்று நடுவுநிலைமையிலிருந்து தவறாமல்,
இவர் நமக்கு அயலார் என்று அவர் நற்குணங்களை ஒதுக்கித் தள்ளாமல்,
கதிரவனைப் போன்ற வீரம், திங்களைப் போன்ற குளிர்ந்த மென்மை,
மழையைப் போன்ற வண்மை ஆகிய மூன்றையும் உடையவனாகி,
இல்லை என்பார் இல்லை என்னும்படி நீ நெடுங்காலம் வாழ்க! பெருந்தகையே!
ஆழமான நீரையுடைய கடலின் மேல் உள்ள வெண்ணிற அலைகள் மோதும் திருச்செந்தூரில் முருகக் கடவுள் நிலை பெற்றிருக்கும்
அழகிய அகன்ற துறையில் பெருங்காற்றால் திரட்டப்பட்ட கருமணலினும், நீ பலகாலம் வாழ்வாயாக.

Description: (A Song About Paandiyan Ilavandhigaippalli Thunjchiya Nanmaaran)
Lord Siva has a sapphire like throat. He made the big , high Meru mountain as a bow and Vaasuhi snake as a chord.
He destroyed the three forts with a single arrow.
He has worn the crescent moon on his hair.
On his beautiful face, there is an eye on the forehead.
You are like that forehead eye of Lord Siva and you are above all kings.
Oh Maaraa wearing garland and having fame ! The kingdom which has the big four army is a good kingdom.
The four armies are: 1.Fighting elephants which have much anger
2.Horses which run fast
3.Big chariots which have long flags
4.Warriors who have strong will.
The greatness of the kingdom depends upon its righteous rule.
The king should not bend the scepter to hide the crime of one who is his favorite .
He should not think to punish one without considering his good qualities as he is a stranger.
Oh king ! You shine like the red sun which gives light commonly.
You give cold light like the white moon. You give gifts like the rain.
You give those who come to you saying that they have nothing, without saying “No”.
Oh great king! You live long. In the Thiruchendur town white waves are destroying again the seashore.
Oh king! You live billions of years than the spread sand.
-Madurai Marudhan Ilanaahanaar.
முலம்:
puram1to69.blogspot.ie/2011/03/55.html
thamizhanna.blogspot.in/2010/08/purananooru-51-to-55-english.html



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard