தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளில் கடவுள் வழிபாடு கோட்பாடு


Guru

Status: Offline
Posts: 898
Date:
திருக்குறளில் கடவுள் வழிபாடு கோட்பாடு
Permalink  
 


திருக்குறளில் தேவர் உலகம்-வள்ளுவரும் வானவரும்! -By ச.நாகராஜன்
பாரத நாடெங்கும் தொன்று தொட்டு இருந்து வ்ரும் பண்பாடு ஒன்றே தான்!
மிகப் பழைய சங்க இலக்கிய நூலான திருக்குறளில் இந்தப் பண்பாட்டை விளக்கும் நூற்றுக் கணக்கான குறட்பாக்களைக் காணலாம்.
தேவர் அல்லது வானவரைப் பற்றிய ஏராளமான செய்திகளை பாரத நாடெங்கும் உள்ள மக்கள் அறிவர். ஹிந்துப் பண்பாட்டை விளக்கும் ஏராளமான கதைகளும் அதைச் சார்ந்த சடங்குகளும், விழாக்களும், நம்பிக்கைகளும் தொன்மங்களும் வான உலகில் –விண்ணுலகில் – இருக்கும் வானவரைச் சார்ந்தே உள்ளன.
திருக்குறளை இயற்றிய வள்ளுவருக்கே தேவர் என்ற பெயரும் உண்டு. அவருக்குரிய பத்துப் பெயர்களும் அவரது உயரிய பண்பையும் அருமையையும் எண்ணி, போற்றித் தரப்பட்டு வழிவழியாக வழங்கப்பட்டு வருகின்றன.
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர் –என்ற ஔவையாரின் பாடலில் தமிழ்ம்றையும் நான்மறையும் ஒன்றே என்று அறுதியிட்டு உறுதி கூறப்படுகிறது!
இனி, வள்ளுவரின் கிண்டல் குறள்கள் அவரது அரிய மேதைத் தனமையையும் அதில் இழைந்து ஊடாடி விளங்கும் நகைச்சுவையையும் காட்டுவன.
இந்த நகைச்சுவைக் குறள்களில் முக்கியமான குறள் ஒன்று தேவர் குறள்.
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுகலான் – குறள் 1073
“தேவர் அனையர் கயவர்”-தேவரும் கயவரும் ஒன்று போலத் தான் என்று வள்ளுவர் கூறியதைக் கேட்டவுடன் திடுக்கிடுகிறோம். தூக்கிவாரிப் போடுகிறது.
ஆனால் அவர் அடுத்து அதற்கான காரணத்தை விளக்கும் போது சிரிக்கிறோம். இருவரும் தம் மனம் போன போக்கிலேயே அனைத்தையும் செய்யும் தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் தேவர் அனையர் கயவர்!!
வையத்துள் புண்ணியச் செயல்களைச் செய்பவரே வானுறையும் பேறு பெற்றவர்கள். அவர்கள் மனம் போன போக்கில் நல்லதையே செய்வர்.
ஆனால் பூமியில் மனம் போன போக்கைச் செய்யும் கயவர் தீயவற்றையே செய்வர். உயர்ச்சியும் இழிவுமாகிய காரண வேறுபாட்டால் நகைச்சுவையை ஊட்டி நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் வள்ளுவர். நகைச்சுவையுடன் கூடிய கருத்தால் மிகவும் ஈர்க்கப்படுகிறோம்.
அடுத்து வான் நாட்டை புத்தேள் நாடு என்றும் வானவரை புத்தேளிர் என்றும் வள்ளுவர் கூறி இருக்கும் குறட்பாக்கள் சுவையானவை.
இப்படி வரும் ஆறு குறள்களைப் பார்ப்போம்.
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற – குறள் 213
பிறர்க்கு உதவி செய்யும் நல்ல பிரதிபலன் பாராத உதவி செய்யும் தன்மை தேவர் உலகத்திலும் பூவுலகத்திலும் காண்பது அரிதாகும்.
ஈவாரும் இல்லை, ஏற்பாரும் இல்லை என்பதால் தேவருலகில் ஒப்புரவு அரிது. யாவருக்கும் ஒப்பது இது போல வேறு ஒன்று இல்லாமையால் பூவுலகில் இது அரிது.
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு – குறள் 234
ஒருவன் நிலவுலகில் பொன்றாத புகழைச் செய்வானாயின் வான் உலகம் அவனை வரவேற்குமேயல்லால் தன்னை எய்தி இருக்கும் ஞானிகளைப் போற்றாது.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு குறள் 290
களவினைச் செய்வார்க்கு உடம்பில் உள்ள உயிர் தவறும். அந்தக் களவினைச் செய்யாதவர்க்கு வானுலகம் வாய்த்தல் தவறாது.
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார் பின் சென்று நிலை குறள் 966
மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பவர்கள் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை அவனுக்கு இவ்வுலகப் புகழைத் தராது. தேவர் உலகத்திலும் கொண்டு சேர்க்காது. இப்படி அவமதிப்பார் பின் செல்வதால் அவனுக்குப் பின் என்ன தான் பயன்?
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீர் இயைந்து அன்னார் அகத்து குறள் 1323
நிலத்தில் நீர் கலந்தாற் போல ஒன்று ப்ட்ட நெஞ்சம் உடைய காதலரிடத்தில் ஊடலில் காணப்படுவது போன்ற இன்பம் தேவருலகில் உண்டா?
பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு குறள் 58
பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுவாராயின் தேவருலகில் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.
அடுத்து வரும் மூன்று குறள்களில் அமரர் என்ற வார்த்தையையும், வானவர் என்ற வார்த்தையையும் தேவர் பயன்படுத்துகிறார்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் குறள் 121
ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவர் உலகத்து உய்க்கும். அடங்காமையோ ஆர் இருள் கொண்ட நரகத்தில் செலுத்தும்.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (குறள் 18)
வானம் வறண்டு மழை இல்லாது போனால் இவ்வுலகில் வானவர்க்குச் செய்யும் பூஜை, திருவிழா எதுவும் நடைபெறாது.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு (குறள் 86)
தேவர்கள் விரும்பி வரவேற்கும் விருந்தினர் யார் தெரியுமா? பூவுலகில் வந்திருந்த விருந்தினரை நன்கு உபசரித்து அனுப்பி விட்டு அடுத்து வரும் விருந்தினருக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றானே அந்த உத்தமன், அவனைத் தம் விருந்தினராக ஆவலோடு வரவேற்பார்களாம் தேவர்கள்!
இன்னும் ஒரு குறளில் வானோர்க்கும் மேலான உலகத்தைப் பற்றிப் பேசுகிறார்.
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் (குறள் 346)
யான் எனது என்ற மயக்கத்தை அறுப்பார்க்கு வானோரும் எய்தற்கு அரிதான வீட்டுலகம் கிடைக்கும்.
தேவர் உலகத்தைச் சேர்ந்தோர் இமைக்க மாட்டார்கள் என்பதை ஒரு குறள் சுட்டிக் காட்டுகிறது.
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லான்
அமையார்தோள் அஞ்சு பவர் (குறள் 906)
மனைவியின் அழகிய தோளுக்கு அஞ்சி நடக்கின்றவர் தேவரைப் போல இந்த உலகில் வாழ்ந்தாலும் கூட ஆண்மை இல்லாதவரே ஆவர்.
ஹிந்துக்களின் வேதம், உபநிடதம், புராணம் ஆகியவை கூறும் பெரும்பாலான செய்திகளை சங்க இலக்கியத்தில் பரக்கக் காணலாம்.
பாரதம் முழுவதற்குமான ஒரே பண்பாட்டைச் சேர்ந்தவரே வள்ளுவர் என்பதும் அதைத் தன் குறள் நெடுகிலும் சுட்டிக் காட்டுகிறார் என்பதற்கும் வேறு என்ன சான்றுகள் வேண்டும்.
கடைசியாக் ஒன்று. இமையவர் கோமானான இந்திரனையும் அவர் விட்டு விடவில்லை.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி (குறள் 25)
ஐந்து புலன்களின் ஆசையை ஒழித்தவர்க்குச் சான்று கூற விசும்புளார் கோமானான இந்திரனே வருவான்
ஆஹா, பதிமூன்று குறள்களில் பண்பாட்டைத் தெள்ளென விளக்கும அனைத்தையும் வள்ளுவர் தரும் பாங்கிற்கு ஈடு இணை உண்டோ!
ஏராளமான செய்திகளைப் பெறுகிறோம்.
வானவர் உலகம் உண்டு.  அதற்கும் மேலான உலகமும் உண்டு. வானவர்க்கு பூவுலகினர் பூஜையும் திருவிழாவும் எடுப்பர். மழை இல்லையேல் அவை நடைபெறா. (இந்திரவிழா உள்ளிட்ட பழைய செய்திகளையும், மழை தரும் பொறுப்பு இந்திரனுக்கு உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.)
அடக்கம் தேவ லோகத்தையும் அடங்காமை நரகத்தையும் தரும். மனைவி கணவனைப் போற்றல் வேண்டும். அது அரிய வானுலக வரத்தைத் தரும்.
தாம்பத்ய இன்ப உறவில் ஏற்படும் இன்பம் தேவலோகத்திலும் கிடைக்காது.
புகழுடைச் செயல்களைப் புரிபவன் பொன்னுலகம் போவான்.
களவுத் தொழில் செய்தலும், தன்னை அவமதிப்போரின் பின்னால் செல்லுதலும் தேவர் உலகை அடைய முடியாமல் தடுக்கும் தீமைகளாகும்
இன்னும் தேவாமிர்தத்தைச் சொல்லாமல் வள்ளுவரால் சும்மா இருக்க முடியுமா?
நான்கு குறள்களில் சாவா மருந்தான தேவாமிர்தத்தையும் குறிப்பிட்டு விடுகிறார்.
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று – (குறள் 11)
மழையை உலகம் அமிழ்தம் எனப் போற்றுவதை இங்கு வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ் (குறள் 64)
தன் குழந்தையின் சிறுகை அளாவிய கூழை விட தேவாமிர்தம் சிறந்ததா, என்ன? இல்லை என்று ஓங்கிச் சொல்வோம் நாம். உலகியல்பு இது!
நம் முகத்தைச் சுளிக்க வைக்கும் ஒரு உவமையையும் அவர் தந்து விடுகிறார்.ஏனெனில் அப்படிச் சொன்னால் தான் அவர் சொல்ல வரும் பொருளுக்கு வலிமை சேரும்! அதனால் தான்!
நல்ல கற்றறிந்தோர் கூடிப் பேசும் அவையில் ஒன்றுமே படிக்காத ஒரு முட்டாள் உளற ஆரம்பித்தால், ஐயகோ, அது தூய்மை இல்லாத முற்றத்தில் படைக்கப்பட்ட நல்ல அமிர்ததிற்கு ஒப்பாகும். (‘அசுத்தம்’ உள்ள இலையில் அமிழ்தம் வைக்கப்பட்டால்….?!)
அங்கணத்துள் உக்க அமிழ்தத்தால் தங்கணத்தார் அல்லார் முன் கோட்டி கொளல் (குறள் 720)
இன்னும் ஒரு குறள்- தலைவியின் தோள் அமிர்தத்தினால் ஆனது!
உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் (குறள் 1106)
தலைவியின் தோளைத் தீண்டும் போதெல்லாம் (போக இருக்கும்) உயிர் தளிர்ப்பதால் இவள் தோள் அமிர்தத்தினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்!
எப்படி இருக்கிறது நான்கு குறள்கள்.
1330 குறள்களில் சுமார் 17 குறள்களில் தேவலோகத்தைக் காட்டுகிறார் தேவர்! அதாவது ஒரு சதவிகிதத்திற்கும் மேலாக!
இதுவே அவர் தன் கருத்துக்களுக்கு வானுலகைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
என்ன இருந்தாலும் அவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வான் உறையும் தெய்வத்துள் சேர்ந்தவர் தானே ‘தனது இனத்தை’ விட்டுக் கொடுப்பாரா என்ன?



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - திருவள்ளுவர் கூறுவது என்ன?

 

tvm%2013ba.png

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50: இல்வாழ்க்கை.
நீதிநூல்கள் காட்டும் வழியில் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் அதில் வழிகாட்டி பூமியில் நெறியோடு வாழ்பவன் - அவனோடு வாழும் மக்களால் வானுலகில் வாழும் தேவர்களுக்கு சமமாக போற்றப் படுவான்.
photo_2023-05-21_15-44-40.jpg

"வைக்கப்படும்" என்ற இதே வழியில் மேலும் மூன்று குறட்பாக்கள் உள்ளது
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் - குறள் 214: ஒப்புரவறிதல்.
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் - குறள் 388: இறைமாட்சி.
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் அரசனை மக்களைக் காக்கும் தெய்வம் என அவர் குடிமக்கள் போற்றுவர்

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் - குறள் 850: புல்லறிவாண்மை.
இருக்கிறது என்று நீதி நூல் வழி வாழும் உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், உடன் இருப்பவர்களால் இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.

நம் மேலே பார்த்த நான்கு குறட்பாக்களிலும் உடன் வாழும் மக்கள் அவரை செத்தாருள், ஈறை, பேய் எனக் கருதுவர், என்பது போலே வாழ்வாங்கு வாழ்பவர் நிலையும், அவர் தெய்வம் ஆகிவிட்டாதாக் வள்ளுவர் கூறினார் என்பது திருவள்ளுவர் உள்ளத்தின் வழி அல்ல, தவறான (உங்கள்) கருத்து வள்ளுவம் மீது திணிக்கப் படுகிறது.

தமிழ் இலக்கிய மரபில் - கடவுள், இறைவன் & தெய்வம்
மூன்று சொற்களையும் பயன் படுத்துவது உள்ளது. 3 சொற்களுமே முழு முதற் கடவுளை, தேவர்களை, ஊழ் மற்றும் அரசனைக் குறிக்கவும் வரும்.

ஊழ்வினைக்கு ஏற்றபடி பயனை ஊட்டும் ஒரு பொருள் இருக்க வேண்டும். அப்பொருளே பரம் பொருளாகிய கடவுள். ஊழின்படியே நுகர்ச்சியை வரையறை செய்வதால்தல கடவுளையே பால் வரை தெய்வம் என்று குறிப்பதுண்டு.
'பால்வரை தெய்வம் வினேயே பூதம்
ஞாயிறு திங்கள்’ (கிளவியாக்கம், 57) தொல்காப்பியச் சூத்திரம் வினையைத் தனியாகவும், பாலாகிய அதனே வரையறை செய்யும் தெய்வத்தை வேறாகவும் கூறுகிறது.

திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் எழுந்த தமிழ் சமணர் மணக்குடவர் உரை இதை உறுதி செய்யும்
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. குறள் 377: ஊழ்.
மணக்குடவர் உரை: விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து. இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.
திருக்குறளில் தெய்வம் என்ற சொல் ஆறு முறை உள்ளதில் - ஊழ் எனும் பொருளில் 2 முறை
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்த கூலி தரும் - குறள் 62:9
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடி தற்று தான் முந்துறும் - குறள் 103:3
திருக்குறளில் தெய்வம் என்ற சொல் தேவர் எனும் பொருளில் 2 முறை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை
தெய்வத்தொடு ஒப்ப கொளல் - குறள் 702
திருக்குறளில் தெய்வம் என்ற சொல் முழு முதற் கடவுள் எனும் பொருளில் 2 முறை
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள் 5:3
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் என பெய்யும் மழை - குறள் 6:5
வள்ளுவர் தென்புலத்தார் என முன்னோரையும் தெய்வம் என வேறாக் கூறி உள்ளதே பெரும் ஆதாரம் ஆகும் 

photo_2023-05-21_15-44-40%20(2).jpgtvm%2013ba.png
திராவிடியார் வழி நாத்தீகரும் தன்னை பயித்தறிவுவாதி எனக் கூறு மோகனராசுவின் கட்டூரைகள்/ நூல்கள்தேவநேயர்-அருளப்பா- தெய்வ நாயகம் மோசடி கிறிஸ்துவ உரையோடு திருக்குறள் ஓலைச் சுவடி தயாரிப்பின் அடிப்படை என்றால் கிறிஸ்துவ மதவெறி என்றால் மோகனராசு கட்டுரைகள் திராவிடியார் மதவெறி எனலாம்
நவீன திராவிடியார் புலவர்களும் அன்னிய கிறிஸ்துவ மதவெறியர்களும் தமிழர் மெய்யியல் சிதைக்க வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்பதை முனோர் வழிபாடு எனவும்; வள்ளுவம் மனிதன் தெய்வம் ஆக்குகிறது என்போர் வள்ளுவத்தை சிறுமை செய்யும் கயமை செய்பவரே



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

 திருக்குறளில் வள்ளுவர் ஒரு முழுமையான ஆஸ்தீகராய், மெய்ப்பொருளை ஏற்றவராய் விளங்குகிறார்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (குறள்- 2 கடவுள் வாழ்த்து)
ஒருவன் கல்வி கற்றலின் பயன் என்னவென்றால், முழுமையான அறிவன் - ஆகிய இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழுது பற்றிக் கொள்ளுதல் ஆகும்.
பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் (குறள்- 10 கடவுள் வாழ்த்து)
திருவள்ளுவர் இறைவன் திருவடியை சேராதார்- பிறந்த், இறந்து மீண்டும் பிறந்து எனத் தொடரும் பிறவிப் பெருங்க்டலை நீந்திக் கடக்க முடியாது என்பது அப்படியே சங்க இலக்கியத்தின் பரிபாடலில் மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி என்ற அதே மெய்யியல் நெறியே ஆகும்.

திருவள்ளுவர் அடி அளந்தான் என - திருமால் எனும் விஷ்ணு தன் மூன்று கால் அடிகளால் மூன்று உலகம் அளந்ததை குறல் 610ல் கூறி உள்ளார்
இறைவன் திருமேனி- உருவ வணக்கம்
ஒரு நிலைப் படுத்த இறைவன் திருமேனி- உருவ வணக்கம் மெய்யியல் மரபில் எளிமையான வழியாக ஏற்கப் பட்டு உள்ளதை, சங்க இலக்கியம் முழுவதும் உள்ள கோவில் இறை பற்றிய பாடல் குறிப்புகள் உறுதி செய்கின்றன.
இறைவன் வெளிப்பாடாக இயறகையையும் பஞ்ச பூதங்களையும் போற்றி வணங்கும் முறையில் வான் சிறப்பு என அதிகாரம் வைத்துள்ளார். பஞ்ச பூதங்கள் நம் உள்ளேயும் உள்ளது என்கிறார்.
மழையைப் போற்றுகையில் திருவள்ளுவர் நீர் இன்று அமையாது உலகு என நீரின் முக்கியத்துவத்தைக் கூறும் முன்பாக தமிழர் மெய்யியல் வாழ்வின் முக்கிய அம்சங்களைச் சுட்டி உள்ளார்.
மழை இல்லாது போனால் தமிழர் இறைவன் திருக்கோவிலில் அன்றாட நடத்தும் பூஜை வழிபாடும் (பூசனை என வடசொல் தமிழில் முதல் முறை வந்து உள்ளது; பரிபாடலில் பூசை என பூனைச் சுட்டும் சொல் உள்ளது), பண்டிகை என விழாக்களும் நடவாது போகும் என்கிறார்
மழை இல்லை என்றால் -மனித வாழ்வில் திருமணம் செய்து பொருள் இட்டும் 'மனைவி, பிள்ளை, பெற்றோர் உடன் இல் வாழ்வான்'; மற்றும் துறவு வாழ்க்கை. இல்வாழ்வான் தானங்களும், துறவி தவமும் இல்லாது போகும் என தமிழர் வாழ்நிலையைக் காட்டி உள்ளார்.
சங்க இலக்கியத்தில் இறைவன் திருவடி
அலங்கல் செல்வன் சேவடி பரவி - பதிற்றிப்பத்து 31/9
மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி -பரிபாடல் 3:2
சேவடி தொழாரும் உளரோ அவற்றுள் - பரிபாடல் 3:19
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு - திருமுருகாற்றுப்படை 62
எட்டுத் தொகை கடவுள் வாழ்த்து பாடல்கள் திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியவை
மா நிலம் சேவடி ஆக தூ நீர் - நற்றிணை கடவுள் வாழ்த்து
தாமரை புரையும் காமர் சேவடி - குறுந்தொகை கடவுள் வாழ்த்து
குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்த
மண் கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்கு
கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென 5
உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி
வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து
கண் பொரு திகிரி கமழ் குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர 10
உண்ணாநோன்பிருக்கும் மக்கள்கூட்டம் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி,
வண்டுகள் சுற்றிவரும் பொலிவுள்ள மாலையணிந்த, திருமகள் நிறைந்த மார்பினையும், கண்ணைக் கூசவைக்கும் சக்கரப்படையினையும், கமழ்கின்ற துளசிக் கொத்தினைக்கொண்ட மாலையினையும் உடைய திருமாலின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கி, நெஞ்சில் நிறைந்த உவகையினராய், தாம் வாழும் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வர்;
earth, and bright, tall, loud bells are rung. Those who have
made fasting vows, go to the cool water shores and bathe before praying.
They pray to Thirumāl carrying a bright, shining discus that
awes eyes and donning large, fragrant garlands made with
clusters of basil swarmed by bees. They bow down worshipping
his perfect feet and return to their towns with joy in their hearts.

மாஅயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி,
O Thirumāl! O Thirumāl! O Lord
with faultless, fine feet that rids future births of your devotees!
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; 20
Is there anybody who does not adore your divine feet,
one of which measured the seven worlds with a single stride?
எய்யா நல் இசை செ வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு 62 திருமுருகாற்றுப்படை
அளந்தறியமுடியாத நல்ல புகழினையும், செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுளின் - திருவடியில் செல்லுதற்குரிய பெருமைகொண்ட உள்ளத்தோடு,
நற்றிணை கடவுள் வாழ்த்து
மா நிலம் சேவடி ஆக தூ நீர் -
மா நிலம் சேவடி ஆக தூ நீர்பெரிய நிலமே தன் செம்மையான அடியாகவும்,
குறுந்தொகை கடவுள் வாழ்த்து
தெளிந்த நீர் நிறைந்ததாமரை புரையும் காமர் சேவடி
தாமரை மலரைப் போன்ற அழகிய சிவந்த திருவடிகளையும்,
நாம் ஆங்கில மொழிபெயர்ப்பை பேராசிரியர் வைதேகி லேம்பர்ட் இணையத்திலும், எளிய தமிழ் மாற்றம் பேராசிரியர் பாண்டியராஜன் இணையத்தில் இருந்து தந்து உள்ளேன்
இறைவனை வணங்க நம் மனம், மெய், மொழி என மூன்றாலும் ஒருநிலைப் படுத்தி முழுமையாகப் பணிய வேண்டும். மனிதன் அலைப்பாயும் மனதை
தாள் அடி வணங்குதல் & நாத்திக- உலகாயுதத்தை நிராகரிக்கும் வள்ளுவம்
வள்ளுவர் உலகைப் படைத்த பரம்பொருள் என்பதை ஆதி பகவன் முதற்றே உலகு என்றவர் அந்த கடவுள் வாழ்த்து அதிகாரத்தில்
1. 'நல் தாள் தொழாஅர் எனின்’ கல்வியினால் பயன் இல்லை
2. ‘மாண்அடி சேர்ந்தார்’ பூமியில் புகழோடு வாழ்வர்
3. ‘வேண்டாமை இலான்அடி’ துன்பங்கள் நீங்கும்
4. ‘உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்'-’ மனக்கவலகைகள் நீங்கும்.
5. ‘அற ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்’ - பிற பொருள் இன்பக் கடல் கடக்க இயலும்
6. ‘ எண்_குணத்தான் தாளை வணங்கா தலை’- வணங்காதவனிடம் உள்ள ஐம்பொறிகளால் பயன் இல்லை.
7. ‘நீந்தார் இறைவன் அடி சேராதார்’ - பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க முடியாது
என ஏழு குறள்களில் இறிவன் திருவடிகளை அடிபணிய வேண்டும் என வலியுறுத்திக் கூறுகிறார். அடிபணிதல் என்றால் அது தன்னை முழுமையாக ஒப்புவித்தலாகும்.
நான்கு குறட்பாக்களில் இறைவன் திருவடியைப் பணியாதவர்களால் முடியாது என்கையில் -நாத்திகம் பேசுவாரோ; உலகாயுதம் எனும் சமண, பௌத்த, ஆஜிவிக மதங்களிற்கும் தொடர்பே இல்லை, அவை உலகைப் படைத்த கடவுளை ஏற்பதில்லை. இன்று மதமாற்ற அன்னிய காலனி ஆதிக்க நச்சுக் கருத்து அடிமைப் புலவர்கள் ஆத்தீக- நாத்தீகர் இடையே என்ற மோசடி வேடம் - வள்ளுவத்தை தமிழர் மெய்யியல் வழியினை மடை மாற்றவே

திருவள்ளுவர் போற்றும் மெய்யியல் நெறி
திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் எழுந்த தமிழ் சமணர் மணக்குடவர் உரை கடவுள் வாழ்த்து மற்றும் மேலும் பல குறட்பாக்களில் தமிழ் மரபு படி வள்ளுவர் கூறி உள்ளது உலகைப் படைத்த பரம்பொருளை என உரை செய்து உள்ளார்.
5.இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு
6.பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (குறள் 356: மெய்யுணர்தல்)
நல்ல நூல்களையும் படித்து, பெரியோர்களிடமும் கற்று மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள் இந்த பூவுலகில் பிறக்காமல் இருக்கும் வழியை அடைவர்.
பரிமேலழகர் உரை: ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர், மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர். ('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி: வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று: அவை கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை: இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. (குறள் 36: அறன்வலியுறுத்தல்)
அறம் செய்ய-பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறம் செய்ய வேண்டும் அது ஒருவர் இறந்தபின்னும் அதன் புண்ணியங்கள் பின் எழும் பிறவிகளில் துணையாய் நிற்கும் (தமிழர் மெய் மரபுரை)
பரிமேலழகர் உரை: அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.
மணக்குடவர் உரை:பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.
திருவள்ளுவர் இறைவனை அடைய என்ன வழி என்கிறார்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (குறள் 5: கடவுள் வாழ்த்து)
இறைவனுடைய மெய்யான புகழைப் புரிந்து அதன்படி போற்றுவாருக்கு அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும் சேர்வதில்லை (தமிழர் மெய் மரபுரை)



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருக்குறள் போற்றும் சமயம் -நுழைவாயில்

திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் முதலாக அது ஒரு தனி சிறப்பு இடம் பெற்றது. பண்டைய காலத்திலேயே பத்து உரைகள் இருந்தன என்று ஒரு பாடல் கூறுவதில் ஐந்து மட்டுமே கிடைத்துள்ளன. இந்தியாவை ஆக்கிரமித்து அடிமை செய்த ஆங்கிலேய கிறிஸ்தவர்களும் திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அது உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஆகும்.

சங்க இலக்கியத்தில் உள்ள யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்று இலக்கிய செறிவு அதிகமாகி பல புதிய சொற்கள் பயன்படுத்தி, இலக்கண மாற்றங்கள் அடைந்த பின்பு இடைக்காலத்தில் குறள் வெண்பாவில் இயற்றப்பட்ட நூல் திருக்குறள் ஆகும். திருக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியுள்ள உவமைகள், மொழிநடை, சொல்லாட்சி போன்றவை தமிழ் மீது காதல் உள்ள அனைவரையும் ஈர்க்கும்.

 

முப்பால்: குறளாசிரியர் - நூலிற்கு வைத்த பெயர் முப்பால் ஆகும். சங்க இலக்கியம் மனித வாழ்க்கையை - அகம் - இல்லத்தின் உள்ளே - காதல், மண வாழ்க்கையையும்; புறம் -  இல்லத்தின் வெளியே - அரசு, ஆட்சி போர், வீரம் என்ற அமைப்பில் இயற்றப்பட்டவை. இந்திய மெய்யியல் ஞான மரபு - வாழ்வின் உறுதிப் பொருட்கள் என அறம், பொருள், இன்பம் என திரிவர்க்கம் என்ற அமைப்பில் வள்ளுவர் அமைத்து உள்ளார். 

திருக்குறளும் ஆன்மீகமும்

'ஆதி பகவன் முதற்றே உலகு'- இந்த உல்கம் பரம்பொருள் இடம் இருந்து தொடங்குகிறது என்றார். அதற்கு உவமையாக 'அகர முதல் எழுத்து எல்லாம்' என- நாம் கல்வி கற்கும்போது முதலில் "அ" எழுதி கற்று தொடங்கி அனைத்து இலக்கியமும் கற்கிறோம். எழுத்து எல்லாம் என்பது அனைத்து இலக்கியம் எனப் (எண் என்ப, ஏனை எழுத்து என்ப குறள்- 392 )  பொருள் தரும். நாம் கற்ற கல்வி நாம் உலகின் எங்கே இருந்தாலும் நம்மோடு உள்ளது போல இறைவனும் எங்கும் வியாபித்து உள்ளார் என்பதே வள்ளுவர் கோட்பாடு



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard