திருக்குறளும் வீடுபேறும்- திருக்குறள் போற்றும் சமயம் -நுழைவாயில்
திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் முதலாக அது ஒரு தனி சிறப்பு இடம் பெற்று அதற்கு பண்டைய காலத்திலேயே பத்து உரைகள் இருந்தன என்று ஒரு பாடல் கூறுவதில் ஐந்து மட்டுமே கிடைத்துள்ளன. இந்தியாவை ஆக்கிரமித்து அடிமை செய்த ஆங்கிலேய கிறிஸ்தவர்களும் திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அது உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஆகும்
சங்க இலக்கியத்தில் உள்ள யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்று இலக்கிய செறிவு அதிகமாகி பல புதிய சொற்கள் பயன்படுத்திம் இலக்கண மாற்றங்கள் அடைந்த பின்பு இடைக்காலத்தில் குறள் வெண்பாவில் இயற்றப்பட்ட நூல் திருக்குறள் ஆகும். திருக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியுள்ள உவமைகள், மொழிநடை, சொல்லாட்சி போன்றவை தமிழ் மீது காதல் உள்ள அனைவரையும் ஈர்க்கும்.
திருவள்ளுவர் மிகவும் ஆழமான கருத்துக்களை எளிமையாக அனைவரும் புரியும் வழியில் எடுத்துக்காட்டியுள்ளார்.
திருவள்ளுவர் நாம் தூங்க செல்வது போன்று தான் நம் இறப்பு மீண்டும் தூங்கியபின் எழுவது போல தான் பிறப்பு என்கிறார்; நாம் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இந்த உலகில் வாழ்ந்து வருகிறோம்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். குறள் 10: கடவுள் வாழ்த்து
இந்தப் பிறவிப் பெருங்கடலை கடப்பது இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்வதால் மட்டுமே முடியும் என தெளிவாக கூறுகிறார்
வாழ்வின் அடிப்படையான மெய்ப்பொருளை நாடாது மற்றவர்கள் மற்றவற்றை முக்கியம் என வாழ்வதால் தான் துன்பம் உள்ள பிறவிகள் உண்டாகிறது
திருவள்ளுவர் இறைவன் மறுப்பை முழுமையாக நிராகரிக்கிறார்
தமிழ் மரபில் இருந்து விலகிய இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த கிறிஸ்தவ காலனி ஆதிக்க சக்திகளின் போதனைகளால் பிறப்பு மீண்டும் மீண்டும் என்பது கிடையாது கடவுள் என்பது கற்பிதம் என மெய்யறிவு மாறான கோட்பாடு உடையவர்கள் திருக்குறளை தங்கள் வழியில் அர்த்தம் செய்து சிறுமை செய்ய எளிதாக "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்ற குறளை கூறுவார்கள்.
வள்ளுவர் மிகத் தெளிவாக கூறுவது என்ன
எண்குணத்தான் எனும் இறைவன் திருவடிகளை தன் தலையால் வணங்காதவர் தலைகளில் உள்ள கண் காது மூக்கு என் போன்ற ஐம்பொறிகளால் பயனில்லை என்கிறார்.
மீண்டும் மீண்டும் மிதக்கும் வழியினை அடைவதே வாழ்க்கையின் நெறியாகக் கொண்டு வாழ்வதே கல்வியறிவின் பையன் என்கிறார்
இவற்றையெல்லாம் ஒருவர் ஏற்காவிடில் மிகத்தெளிவாக மெய்யுணர்வை அறிவை ஏற்காதவர்கள் ஐம்புலன்களை கட்டுப் படுத்தினாலும் பயனில்லை என மிகத் தெளிவாக இறை நம்பிக்கைக்கு மாறான நாத்திகத்தை உலகத்தையும் அவர் மிகவும் தெளிவாக மறுக்கிறார்
இவற்றை நாம் மேலும் விரிவாக பல்வேறு அதிகாரங்களின் பிற குறட்பாக்களில் மூலம் மற்ற தலைப்புகளின் போது பார்க்கலாம்.
திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், குறள் வெண்பா மற்றும் யாப்பு போன்றவை இது திருக்குறள் ஆக்கப்பட்டு ஒரு நூறு ஆண்டுகளுக்கு உள்ளாக எழுந்ததே தமிழ் சமணர் மணக்குடவர் உரை. அவர் அங்கங்கே சமண கருத்துக்களை சுட்டிக்காட்டி இருந்தாலும் மிகத்தெளிவாக திருவள்ளுவர் சுட்டிக்காட்டுவது உலகை படைத்த கடவுள் தான் என காட்டுகின்றார். எனவே தமிழ் மரபை ஒட்டி மணக்குடவரின் உரையைப் அடிப்படையிலேயே நம் ஆய்வு தொடர்கிறது.
திருக்குறளின் மெய்யறிவை ஏற்காத திருக்குறள் போற்றும் இந்திய ஞானமரபின் மெய்யறிவு சிந்தனை இருந்து விலகி நாத்திக கருத்துக்களை வைத்துக்கொண்டு திருக்குறளை உரை செய்வது என்பது அந்நிய கிறிஸ்தவ மத மாற்ற சக்திகளுக்கு உதவுவதற்காக தான் என்பது அறிஞர்கள் ஏற்பதாகும்.
திருக்குறள் 1330 குறட்பாக்களையும் உணர்ந்து; வள்ளுவர் வழியில் இறை நம்பிக்கை, மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறைவன் திருவடி உருவ வழிபாட்டை அடிப்படையில் நாம் இந்த ஆய்வினை தொடர்வோம்.
திருக்குறள் கடவுள் வாழ்த்து காட்டும் திருவள்ளுவர் போற்றும் கடவுள் நம்பிக்கை
ஆதி பகவன் முதற்றே உலகு இந்த உலகம் இறைமை எனும் பிரம்மத்திலிருந்து தொடங்குகிறது எனத் தொடங்கிய திருவள்ளுவர் இறைவன் திருவடியைப் பற்றிக் கொண்டால் மட்டுமே மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியும் என அந்த அதிகாரத்தை முடிக்கிறார்.
கடவுள் வாழ்த்து அதிகாரப் பாடல்களின் சாரம்:
#
குறட்பாவில் வள்ளுவர் சொல்லி உள்ளது
1
எழுத்துக்கள்எல்லாம்அகரத்தைமுதலாககொண்டிருக்கின்றன. அதுபோல்உலகம்இறைவனில் இருந்து தொடங்கியது
2
அனைத்து அறிவும் ஆகி இருக்கும் இறைவன் நல்ல திருவடிகளைத் தொழுவதே, கற்ற கல்வியின் முழு பயன்.
3
அன்பரின்அகமாகியமலரில்வீற்றிருக்கும்.கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வர்.
4
விருப்பும்வெறுப்புமற்றகடவுளின் திருவடிகளைமறவாமல்நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை
5
கடவுளின்பெருமைஅறிந்துபோற்றி வணங்குவோருக்குநல்வினைதீவினைஆகிய இரு வினைகளும் வந்து சேர்வதில்லை
6
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளை பக்குவப்படுத்திய கடவுளின் பொய்யற்ற ஒழிக்க நெறியில் நின்றவர், நிலைபெற்ற நல்வாழ்கை வாழ்வர்.
7
தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத்சேர்ந்தவரேஅல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது
8
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே பிற பொருள் இன்பம் கடலை நீந்திக் கடப்பர்
9
எண்குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவர்ளின் தலைகளில்உடல், கண், காது, மூக்கு, வாய்எனும்ஐம்பொறிகள்இருந்தும்பயனற்றவையாகும்
10
கடவுளின் திருவடிகளை அடைந்தவர், மட்டுமே மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் பிறவி பெருங் கடலை கடப்பார். கடவுளின் திருவடிகளை அடையாதவர் அதனைக் கடக்க இயலாது..
திருக்குறள் வாழ்வியல் வழிகாட்டி நூல், துதிப்பாடல் நூல் அல்ல, எனவே கடவுள் வணக்கத்தின் அவசியத்தையும் அதன் பயனையும் மிகத் தெளிவாக வலியுறுத்தி உள்ளார். திருவடி பற்றுதல் என்பதில் இறைவனை மனதில் நிலை நிறுத்த உருவ வழிபாட்டினை ஏற்று போற்றுவதும் தெளிவாகும்.
கல்வி கற்பதன் பயன் இறைவன் திருவடிகளைப் பற்றிக் கொள்வதற்கே என்கிறார் இந்த அதிகாரத்தில் திருவள்ளுவர் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்வதால் கிடைக்கும் பயனையும் கிடைக்காதவர்கள் அந்த பயனை அடைய முடியாது என்று கூறுவதாலும் கடவுளை மறுக்கும் சிந்தனையை அவர் சிறிதும் ஏற்க வில்லை என்பதை நாம் தெளிவாக உணரலாம்.
10. பிறவிப் பெருங்கடல் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
வள்ளுவர் உலகைப் படைத்த இறைவன் ஏற்கிறார் என்றும் இறை நம்பிக்கைக்கும் இயல்புக்கு மாறான அவற்றை முழுமையாக நிராகரிக்கிறார்,
இறைவன் திருவடிகளைப் பற்றிக் கொள்வதால் மட்டுமே பிறவிப் பெருங்கடலைக் கடக்க இயலும்; பிறவாழி கடக்க இயலும் என்று மீண்டும் மீண்டும் வள்ளுவர் கூறுகிறார்.வேண்டுதல் வேண்டாமை இலான் மற்றும் தனக்குவமை இல்லாதான் என்றவை எல்லாமே திருவள்ளுவர் உலகைப் படைத்த கடவுளை மட்டுமே இங்கு கூறுகிறார் எந்த ஒரு மனிதனையும் குறிப்பிடவில்லை என்பது தமிழர் மரபில் அறிஞர்கள் ஏற்கின்றனர்
திருவள்ளுவர் கடவுள் என்ற சொல்லை இந்த அதிகாரத்தில் பயன்படுத்தவில்லை. இறைவன் என்ற சொல்லை இருமுறை பயன்படுத்தியுள்ளார்; ஆனால் இறைவன் என்ற சொல்லை பலமுறை அரசன் பொருளிலும்; இறை என்ற சொல்லை கை மணிக்கட்டு என ஒரு குறள் கூறியுள்ளதால் கடவுள் வாழ்த்து உலகைப் படைத்த கடவுளை குறிக்கிறது என வள்ளுவரே பெயரிட்டார் என அறிஞர்கள் ஏற்கின்றனர்.
இறைவனைப் பொருள் புரிந்து பாட கூறும் நூல்கள் என்ன என அவரே போற்றும் நூல்கள் - "அந்தணர் நூற்கும் அறத்திற்கும்; பார்ப்பான் ஓத்து, அறுதொழிலாளர் நூல், நிறைமொழி மாந்தர் பெருமை கூறும் மறைமொழி என்றும் கூறுவது எல்லாமே வேதங்களை குறிப்பதுதான் என்பது தமிழர் மரபு ஆகும்.
நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது. திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது. திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும்.
நிலம் நீர் தீக்காற் றென நால் வகையின
மலைமரம் உடம்பெனத் திரள்வதுஞ் செய்யும்
வெவ்வே றாகி விரிவதுஞ் செய்யும்
அவ்வகை யறிவது உயிர் எனப்படுமே மணிமேகலை ஆசிவகம் (27: சமயக்.112 - 119)
ஆசீவக மதக்கொள்கைகளைக் கூறும் நூலுக்கு 'நவகதிர்' என்பது பெயர். இந்த நூலில் நில அணு, நீர் அணு, தீ அணு, வளி அணு, உயிர் அணு என்னும் ஐம்பொருளைப் பற்றிக் கூறியுள்ளதென்பர். கருமை, நீலம், செம்மை, பொன்மை, வெண்மை, தூயவெண்மை என்னும் ஆறுவகைப் பிறப்பு உண்டென்பதும், தூய வெண்மைப் பிறப்புத்தான் மிக உயர்நிலைப் பிறப்பென்பதும், இப்பிறப்பினை அடைந்தவர் தாம் வீட்டுலகம் சேர்வர் என்பதும் இந்த மதக்கொள்கை.
திருவள்ளுவர் கடவுள் வழிபாட்டை மனிதன் கல்வியின் அடித்தளம் என்கிறார்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
மனிதனின் அறிவை மேம்படுத்துவது கல்வி. கருவியின் மூலம் இறைவனை காட்டும் வழி. மனிதன் இந்த உலகில் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இறந்து ஏனோ வாழும் பிறவிப் பெருங்கடலில் இருந்து நீந்தி கடக்க தன்னிகர் இல்லாத படைத்த கடவுளை பற்றி கொள்ள வேண்டும் என்கிறார்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இறைவனை அறிவும் ஞானமும் மூலமாக அடைவதே வழி என்பது பாரத தத்துவஞானம் - வேதம் என்ற சொல்லே அறிவு-வித்தை எனும் சொல்லின் மூலத்தில் இருந்து வந்தது தான்.
வள்ளுவர் இந்த உலகமே இவனால் இறைவனிடமிருந்து தொடங்குகிறது என்பதை அகரமுதல என்று அதிலும் அறிவுபூர்வமாக விளக்குவார்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
உலகத்தில் உள்ள சகல அறிவும் அவனிடம் இருந்து வந்தது என்பதை சொல்ல வாலறிவன் சர்வக்ஞர் என்ற சொல்லினை பயன்படுத்தியுள்ளார்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
இவன் அனைவரையும் சமமாக பார்ப்பவன், விருப்பு வெறுப்பு இன்றி எல்லோரும் சமம், ஆனால் மனிதக் கற்பனையில் எழுந்த மதங்கள் உருவாக்கிய பைபிள் போன்ற கதைகளில் அந்த ஊருக்கான தெய்வம் அந்த தெய்வத்திற்கு விருப்பமான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்றெல்லாம் கதை இதை வள்ளுவர் மிக அழகாக வேண்டுதல் வேண்டாமை இலான் என ஒரே வரியில் மறுத்துவிடுவார்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
சமணம் பௌத்தம் போன்ற மதங்கள் உலகைப் படைத்த இறைவனை ஏற்பதில்லை, ஆனால் வள்ளுவர் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற பொழுது உலகை உலகமே அவனிடம் தொடங்குகிறது விளக்குகையில் உலகாயுதம் எனும் இந்த இரு மதங்களும் விழுந்துவிடும்.
இந்த உயிர் நிலையானது என்பதை பௌத்தம் ஏற்பதில்லை. வள்ளுவர் பல இடங்களில் மன்னுயிர் எனும் சொல்லில் இந்த உயிர் நிலையானது உடல்தான் மரணமடைகிறது என்பார்.
திருவள்ளுவர் அறிவை சாதாரணமான அறிவு, ஐயறிவு, தெளிவு பெற்ற மெய்யறிவு மிகத் தெளிவாக உரைக்கிறார். மெய்யறிவு கண்டோர் மீண்டும் இப்பிறவியில் இப்பூமியில் பிறக்கும் நிலையை தவிர்க்கவே முயல்வர் என்கிறார்.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (மெய்யுணர்தல் :356)
இந்த உலகில் நாம் பிறந்த இந்த உடல் இருக்கிறது ஆனால் உயிர் எங்கே இருக்கிறது மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது என்பதை வள்ளுவர்
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு (:நிலையாமை :339)
இந்த உலகில் நாம் இறைவனை வேண்டும் பொழுது ஆசைகள் எதை கேட்டாலும் கிடைக்கும் ஆனால் மனிதன் கேட்க வேண்டியது பிறவாமை என்னும் நிலை என்பார் வள்ளுவர்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். (அவாவறுத்தல் :362)
தமிழகத்தில் நுழைந்த கிறிஸ்துவ மதமாற்ற வியாபாரிகள் வேசித்தனம் செய்ய - திருக்குறளை எடுத்து தவறான உரைகள் எழுத தூண்டியும், கிறிஸ்துவ மதவெறி தேவநேயன் நச்சுப் பொய்களோடு உரையும் எழுதினர்.
தமிழ் சனியன் தமிழை அழிக்கவே திராவிடம் எனப் பேசி திருக்குறளை இழிவு செய்த திராவிட இயக்க நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமி வழிக் ஊட்டம் சார்ந்த பலரும் இன்றும் திருக்குறளிற்கு உரை என இழிவு செய்வது தொடர்கிறது.
திருக்குறள் நுழைவாயில்
திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல் சங்க இலக்கியத்தில் உள்ள யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்று இலக்கிய செறிவு அதிகமாகி பல புதிய சொற்கள் பயன்படுத்திம் இலக்கண மாற்றங்கள் அடைந்த பின்பு இடைக்காலத்தில் குறள் வெண்பாவின் இயற்றப்பட்ட நூல் திருக்குறள் ஆகும்
திருக்குறளும் கடவுள் நம்பிக்கையும்
ஆதி பகவன் முதற்றே உலகு; இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்ட இறைவனிடம் இருந்து தொடங்குகிறது என்று வள்ளுவர் ஆரம்பிக்கிறார். அதற்கு உவமையாக அகரமுதல, அகரத்தை எழுதி தொடங்கி அறிவு உலகத்தில் நுழைகிறான் அதுபோல இந்த உலகம் கல்வி கற்பதின் உச்சம் என்பதை கற்றதனால் ஆயபயன் இறைவன் திருவடிகளை தொழுவதற்கு என்கிறார்.
கடவுள் வணக்கத்தின் ஆல் என்ன பயன் என்று இந்த அதிகாரம் முழுமையாக கூறுகையில் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் பிறவி பெருங்கடலை கடப்பது இறைவன் திருவடியை பற்றினால் என்று முடிக்கிறார் இந்த அதிகாரம் முழுக்க இறைவனை ஒருமையில் கூறுவதால் இது பிரம்மம் - இறைமை - பரம்பொருளைக் குறிக்கிறது என்பது மரபு தமிழர் மரபு ஆகும்
திருக்குறளும் தமிழர் மெய்யியல் மரபும்
திருவள்ளுவர் கல்வி அதிகாரத்தில் கற்க என்றவுடனேயே கசடற கற்க பின் அந்த கற்ற கல்வி மெய்மையில் நிற்க வேண்டும் என்று மிகத் தெளிவாக கூறுவார்.
திருவள்ளுவர் கல்வி-அறிவு முன்னேற்றத்தை முழுமையாக வலியுறுத்துவார் இந்த அறிவின் பயன்பாடு என்ன என்பதை
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு என்பார்
கல்வி கற்பதன் பயன் இறைவனின் திருவடியைப் பற்ற என்று கூறியது மட்டுமின்றி அந்த அதிகாரம் முழுவதுமாக இறைவன் திருவடி பற்றுதல் என்பதை வள்ளுவர் தெளிவாக எடுத்துக் காட்டி இருப்பார்.
இதற்கு அடுத்த அதிகாரத்தில் அவர் சிறப்புடன் பூஜை என்னும் பொழுது இறைவனை உருவ வழிபாடாக பூஜை செல்வதை போற்றி வலியுறுத்துகிறார்.
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். 720
வள்ளுவர் அவையறிதல் அதிகாரத்தில் கூறியுள்ள அங்கணத்துள் அமிர்தம் என்ற என்ற உவமையில் இறைவன் திருமேனி அபிஷேக நீரை முற்றத்தில் வீண் செய்வது என கோவில் அபிஷேக வழிபாட்டை கூறுகிறது என அறிஞர்கள் கூறுகின்றனர்
"ஹரப்பன் மதம் இன்னும் சிறப்பான இந்திய இந்து மதத்திலிருந்து வேறுபடுவதைப் போலவே இல்லை .... மொஹென்ஜோ-தாரோ மற்றும் ஹரப்பா ஆகிய இரண்டிலும் தனித்து நிற்கும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு இடங்களில் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட நாகரிகம் ஒரு ஆரம்ப நாகரிகம் அல்ல, ஆனால் இந்திய மண்ணில் ஏற்கனவே வயதான மற்றும் ஒரே மாதிரியான, பல ஆயிரக்கணக்கான மனித முயற்சிகள் பின்னால் ... " ஜான் மார்ஷல், மொஹென்ஜோ-டாரோ மற்றும் சிந்து நாகரிகம் (லண்டன், 1931, 3 தொகுதிகள்.), தொகுதி. நான், ப. வி-வீஇ.
“The [Harappan] religion is so characteristically Indian as hardly to be distinguished from still living Hinduism.... One thing that stands out both at Mohenjo-daro and Harappa is that the civilization hitherto revealed at these two places is not an incipient civilization, but one already age-old and stereotyped on Indian soil, with many millennia of human endeavour behind it...” John Marshall, Mohenjo-daro and the Indus Civilization (London, 1931, 3 vols.), vol. I, p. vi-viii.
திருக்குறள் போற்றும் சமயம் என்ன என்பதை வள்ளுவம் முழுமையாக ஆராய வேண்டும். ஒரு அதிகாரத்தில் அந்த அதிகாரத் தலைப்பை ஒட்டி கூறியதைக் கொண்டோ அவர் கூறாததைக் கூறியதாகவோ பரப்பும் கயமை தமிழகத்தில் தொடர்கிறது.
இந்த உலகம் இறைவனில் இருந்து தொடங்குகிறது என்பதை -"அகர முதல் எழுத்து எல்லா" என்ற உவமை மூலம் கூறுகையில் நாம் கற்கும் கல்வியின் தொடக்கம் அகரம் கற்று தொடங்கும், கற்ற அனைத்தும்(எழுத்து எல்லாம்) நாம் உலகின் எங்கே எந்த நிலைமையில் இருந்தாலும் நம்மோடு இருப்பது போலே உலகைப் படைத்த கடவுள் வியாபித்து உள்ளார் என்பதும் இக்குறளில் அடங்கி உள்ளது.
அடுத்த குறளிலேயே கல்வி கற்றதன் பயனே அனைத்து அறிவிற்குமான பரம்பொருள் திருவடிகளை வணங்கி தொழுவதற்கே என்கிறார்.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. குறள் 9: கடவுள் வாழ்த்து
தான் கற்ற கல்வி வழியாக மெய்யறிவை ஏற்று முழுமையாக இறைவன் திருவடியை வணங்காதவர் தலைகளில் உள்ள உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருப்பதால் பயன் இல்லை இந்தக் குறளிலும் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவன் திருவடி வணக்கத்தினால் பலன்களை நேரடியாக சில குறளிஉம்; சில குறளில் எதிர்மறையாக கூறி உள்ளார்.
செங்கோன்மை அதிகாரத்தில் ஒரு நல்ல நாடு என்பதற்கும்; அடுத்து மோசமான ஆட்சியின் விளைவு என கொடுங்கோன்மை அதிகாரத்தில் கூறியதைக் கொண்டே காணவேண்டும்.
# 31 பாட்டு 31 பதிற்றுப்பத்து குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்த மண் கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்கு கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென 5 உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து கண் பொரு திகிரி கமழ் குரல் துழாஅய் அலங்கல் செல்வன் சேவடி பரவி நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர 10 மணி நிற மை இருள் அகல நிலா விரிபு கோடு கூடு மதியம் இயல்-உற்று ஆங்கு துளங்கு குடி விழு திணை திருத்தி முரசு கொண்டு ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு கருவி வானம் தண் தளி தலைஇய 15
# 31 பாட்டு 31
குன்றுகள் திரளாக நெருங்கி நிற்க, பல பொருட்களும் திரண்டுள்ள கடலினை ஆடையாக உடுத்திய
மண் செறிந்த உலகத்து மாந்தர் எல்லாம் ஒரேநேரத்தில்
கைகளைத் தலைக்குமேல் கூப்பி உரத்த ஒலி எழுப்பும் ஆரவாரம், திசைகளின்
நால்வேறான அகன்ற பக்கங்களில் ஒன்றாக எழுந்து ஒலிக்க,
திருக்குறள் 1330 குறட்பாவையும் கற்று அறிந்து, வள்ளுவர் தான் எடுத்த ஒரு அதிகாரத்தின் அறம்/பொருளை உயர்த்தி இயற்றிய எழுத்துலக வழியான மிகைப் படுத்தலான ஒரீரு குறட்பா கொண்டு தமிழர் மெய்யியல் மரபை சிறுமைப் படுத்துகின்றனர். சில குறட்பாக்களை முழுமையும் கூறாமலும், வள்ளுவர் கூறிய பொருளை மாற்றியும் காலனி ஆதிக்க கிறிஸ்துவ மதமாற்று சக்திகளின் வழி நச்சுப் பொய்களால் திராவிடியார் நவீன புலவர்கள் வள்ளுவத்தின் அடிப்படையையே மாற்றுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 60 - 70 ஆண்டுகளாய் கல்வி நிறுவனங்களை ஆக்கிரமித்து உள்ள தமிழர் மெய்யியல் விரோத இடதுசாரி மற்றும் திராவிடியார் புலவர்களால் பல்கலைக் கழக நூல்களிலும் இப்பொய்கள் பதிப்பாகி வந்துள்ளது.
நாம் திருக்குறள் மூலத்தையும், திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் எழுந்த தமிழ் சமணர் மணக்குடவர் முதலாக 18ம் நூற்றாண்டு வரை உரைகளின் ஒருமித்த உரை அடிப்படையில் ஆராய்வோம்
பழந் தமிழகத்தில் மனித வாழ்வினை- தனி மனிதனின் காதல்-குடும்ப வாழ்க்கைய்னை அகம் என்றும், அரசன் - வீரர்களின் போர் மற்றும் ஆட்சியை புறம் எனவும் அமைத்துப் பாடியதே சங்க இலக்கியப் பாட்டுத் தொகை நூல்கள் ஆகும். இவை பொமு 100 முதல் பொஆ 750 வரை பாடப்பட்டவை என தமிழ் மொழியியல் மற்றும் தொல்லியல் நிரூபிக்கின்றன.
திருக்குறள் இடைக் காலத்தில் - மெய்யியல் மரபில் மனித வாழ்வினை -அறம், பொருள் & இன்பம் என்ற பகுப்பு முறையில் முப்ப்பல் என இயற்றப்பட்ட நூல் ஆகும்
நாம் திருக்குறள் மூலத்தையும், திருக்குறள் இயற்றிய அடுத்ட நூற்றாண்டில் எழுந்த தமிழ் சமணர் மணக்குடவர் முதலாக 18ம் நூற்றாண்டு வரை உரைகளின் ஒருமித்த உரை அடிப்படையில் ஆராய்வோம்
பழந் தமிழகத்தில் மனித வாழ்வினை- தனி மனிதனின் காதல்-குடும்ப வாழ்க்கைய்னை அகம் என்றும், அரசன் - வீரர்களின் போர் மற்றும் ஆட்சியை புறம் எனவும் அமைத்துப் பாடியதே சங்க இலக்கியப் பாட்டுத் தொகை நூல்கள் ஆகும். இவை பொமு 100 முதல் பொஆ 750 வரை பாடப்பட்டவை என தமிழ் மொழியியல் மற்றும் தொல்லியல் நிரூபிக்கின்றன.
திருக்குறள் இடைக் காலத்தில் - மெய்யியல் மரபில் மனித வாழ்வினை -அறம், பொருள் & இன்பம் என்ற பகுப்பு முறையில் முப்ப்பல் என இயற்றப்பட்ட நூல் ஆகும்
வள்ளுவம் இயற்றப்படும் முந்தைய சங்க இலக்கியம் மற்றும் குறள் காலத்திற்கு பின்பான சிலப்பதிகாரம் & மணிமேகலையில் ஒரு சொல் எந்த பொருளில் பயன்படுத்தப்பட்டஒதோ அதே பொருளில் தான் திருவள்ளுவரும் பயன்படுத்தி உள்ளார். ஆனால் காலனி ஆதிக்க கிறிஸ்துவ மிஷநரிகள் தங்கள் மதவெறியாலும், காலனி ஆதிக்க நச்சு பொய்களின் அடிமைகளாக நவீன திராவிடியார் புலவர்களும் - கடந்த 40 - 50 ஆண்டுகளுள் எழுந்த முறையற்ற உரைகளை அடிப்படையாகக் கொண்டு வள்ளுவர் குறளின் மீது திராவிடிய நாசியக் கொள்கைகளைத் திணிப்பது திருக்குறளை சிறுமை செய்வதன் உச்சம்
சங்க இலக்கியத்தில் காணும் அதே வைதீக மரபைப் போற்றியே வள்ளுவம் உள்ளது. பண்டைய தமிழகத்தில் பரவலாக இருந்த கள்- சாராயம் குடிப்பதையும், பரத்தையர் தொடர்பையும் வள்ளுவர் ஏற்கவில்லை. பரவலாக இருந்த புலாம் - மாமிச உணவு உண்பதைக் கண்டித்து உள்ளார். திருவள்ளுவர் சீர்திருத்தக் கருத்து கண்ணோட்ட்த்தில் புலால் மறுத்தலில் கூறிய அவி சொரிந்து ஆயிரம் வேட்டல் குறள், வைதீக மறுப்பு அல்ல, அது வேள்வியைப் போற்றியதாலே தான், ஆயிரம் வேள்வி செய்து கிடைக்கும் புண்ணியம் விட ஒரு உயிரைக் கொல்லாமல் இருப்பதன் புண்ணியம் அதிகம் என வேள்வியின் பயனோடு பொறுத்தி கூறி உள்ளார்.