தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் போற்றும் முந்தைய நூல்கள்


Guru

Status: Offline
Posts: 898
Date:
திருவள்ளுவர் போற்றும் முந்தைய நூல்கள்
Permalink  
 


திருக்குறள் அமைப்பும் முறையும் -இரண்டாம் பகுதி

நுவலும் முறை -1. முன்னோர் மொழி போற்றுதல்

எல்லாப் பொருளும் . இதன்பால்உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் ( திருவள்ளுவமாலை , 29
என்று வள்ளுவர் தந்த திருமறையைப் போற்றுகிறார் மதுரைத் தமிழ் நாகனார். " பலவகை நூல்களாலும் சொல்லப்பட்ட எல்லாப் பொருளும் இந் நூலகத்து அடங்கி இருக்கின்றன. இதனிடத்தில் இல்லாத யாதொரு பொருளும் எந் நூலகத்தும் இல்லை " என்பது இப் போற்று ரையின் கருத்து . இதனால் வள்ளுவரின் பொதுமறையுள் முன்னோர் செய்த நூல்களில் உள்ள சாரங்கள் எல்லாம் பொதிந்துள்ளன என்பது தெளிவாம் . அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள் பயக்கும் நூல்களையும் நன்கு ஓதித் தம் உலகியல் அறிவோடு ஒட்டித் தெளிந்து எல்லார்க்கும் ஏற்ற பொது நல்லறங்களை மட்டும் சிறப்பாக எடுத்துக் கூறுதலே இவர்தம் நூலின் தனிச்சிறப்பு .

( குறிப்பிட்ட ஒரு சமயத்தாருக்கு மட்டும் உரிய தனியறங்களை வள்ளுவர் தம் நூலுள் எடுத்து ஓதவில்லை . எல்லார்க்கும் உரிய பொதுக் கடமைகளையே எங்கும் வகுத்துரைக்கின்றார் .

சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருள் இது என்ற
வள்ளுவன் ( கல்லாடம் , 14 )
என்று கல்லாடர் இவர்தம் உலகியல் உலகியல் பொது நோக்கினைப் பாராட்டுகின்றார் . )
உரைகாரர் பரிமேலழகரோ வள்ளுவப் பெருந்தகை வடநூற் கடலையும் நிலைகண்டு உணர்ந்து , அம்மொழி நூல்களில் கண்ட சாரங்களையும் தம் நூலுள் பயன்படுத்தியுள்ளார் என்னும் கருத்துகளை ஒரு சில இடங்களில் சுட்டியுள்ளார் .!
வடநூற் கருத்துகளுக்கும் இவர்தம் வாய்மொழிக்கும் உள்ள ஒப்புமை கருதி இவ்வகை முடிவிற்கு இவர் வருகின்றார் . இதில் ஓரளவு உண்மை

216
யிருப்பது போல் தோன்றினாலும் முற்றும் அவ் வடநூல் வழிகளையே மேற்கொண்டார் என்று கூறுவதற்கு இல்லை . தமிழிலும் எத்தனையோ துறைகளில் அருமையான பல நூல்கள் முன்னர் வழங்கிப் பின்னாளில் போற்றுவாரின்றிக் காலவெள்ளத்தில் மாய்ந்து போன குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன . ஆதலால் , இவர் வடநூலாரை நோக்கியே உரைத்தார் என்று ஒருதலையாகத் துணிய இடமில்லை ..

வள்ளுவர் தமது நூலுள் சிற்சில இடங்களில் , நூல் உரைக்கும் , ( 743 ) , பனுவல் துணிவு ( 21 ) , நூலோர் ( 322 ; 533 ) என்று பொதுப்படக் கூறுகின்றாரேயின்றி இன்ன நூல் என்று சுட்டிப் பேச வில்லை . இங்ஙனமாக , முந்திய நூலோர் கருத்து இது என்றும், நூலோர் இவ்வாறு சொல்லுவர் என்றும் கூறிய இடங்கள் சில வற்றைத் திருக்குறளில் காணலாம் . என்றாலும் , இவர் எவ் வகைப் பொருளைச் சுட்டி , எப்பகுதியில் கூறுகின்றாரோ அதைக் கொண்டு அக் கருத்துகள் அவ்வத்துறை பற்றிய நூல்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம் .

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு ( குறள் 21 )
என்னும் இக் குறளில் நூல்கள் என்னும் பொருளில் பனுவல் என்று கூறியுள்ளார் . உரைகாரர் பரிமேலழகர் , " பனுவல் எனப் பொதுப்படக் கூறியவதனான் , ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லா வற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றும் என்று விளக்கவுரை தருதலும் நோக்கத்தக்கது . இது கொண்டு நூல் அல்லது நூலோர் என வள்ளுவர் ஆளுமிடங்கள் வெவ்வேறு கொள்கையுடையார் கூறும் நூல்களை எல்லாம் குறிக்கும் என்று கொள்வது பொருத்தமாகும் . மேலும் , இக் குறட்பாப் பாயிரப் பகுதியைச் சார்ந்ததாதலின் எல்லா நூல்களையும் குறித்துப் பொதுப் படக் கூறினார் என்றும் கொள்ளலாம் . அன்றியும் , இஃது அறத்துப் பாலின் பகுதியாதலின் அறநூல்களைக் குறித்துக் கூறினார் என்றும் கருதலாம் .

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும் . ( குறள் 183 )
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை . ( குறள் 322 )
இவ்விரண்டும் அற நூல்களைச் சுட்டி உரைத்தனவே . அறம் கூறும் என்பதற்கு அற நூல்கள் சொல்லும் என்றும் , நூலோர் ( குறள் 7 ) என்பதற்கு அற நூலுடையார் என்றும் பரிமேலழகர் உரை வரைதலும் இக் கருத்தினை அரண்செய்வதாக உள்ளது .

217
பிறன் பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல் ( குறள் 141 )
எனவரும் இக் குறளில் அறம் பொருள் கண்டார் என்பது அற நூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்தார் என்று கருதப்படும் .
இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இ
தீயொழுக்கத்தையும் ‘ பரகீயம் என்று கூறுவாராகலின், அறம்பொருள் கண்டார்கண் இல் என்றார் எனப் பரிமேலழகர் இக் குறளுக்கு எழுதியுள்ள விளக்கவுரையானும் இது தெளிவுறும். இங்ஙனமே வள்ளுவர் பொருட்பாலுள் நூல் குறித்து எடுத்துக் காட்டும் கருத்துகள் எல்லாம் பெரும்பாலும் அரசுமுறை நூல்களிலிருந்து ஆசிரியர் கண்டு கூறியவை என்று கொள்ளலாம் .

ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்
தெற்றென்க மன்னவன் கண் . ( குறள் 581 )
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன் நிற் பவை . ( குறள் 636 )
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு : ( குறள் 683 )
உயர்வகலம் திண்மை அருமை இந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல் .
( இவ்வாறு அறம் , பொருள் முதலியவை உரைக்கும் நூல்களின் கொள்கைகளைக் காட்டித் தாம் கூறும் பொருள்கள் முன்னோர் மொழி பொருள்களே உறுதிப்படுத்தி உரைப்பதும் வள்ளுவர்
பொருளுணர்த்தும் முறையில் ஒரு திறனாகும் . ) பின்வரும் பாடல்கள் பல துறை நூல்களையும் சுட்டிக் கூறுவனவாக அமைந்துள்ளன :

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும் . ( குறள் 373 )
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல் . ( குறள் 401 )
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர் . ( குறள் 410 )
பொச்சாப் பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு . ( குறள் 533 ) என

218
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு . ( குறள் 726 )
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல் . ( குறள் 727 )
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு . ( குறள் 783 )
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று . ( குறள் 941 )
மேலே சுட்டியது போன்ற நுண்ணிய பொருள் உரைக்கும் இலங்கு நூல்கள் பலவற்றையும் வள்ளுவர் ஐயம் திரிபு அற நன்கு உணர்ந்து தெளிந்தவர் . ஆகவே , விழுமிய நூலோர் பலர் தத்தம் நூல்களில் உரைத்த கருத்துகளுள் சிலவற்றை அந் நூலோர் கூற்றாகவே கொண்டு உரைக்கின்றார் . என்ப , என்பர் என்று வள்ளுவர் தம் பாடல்களில் கூறும் பொருளுரைகள் எல்லாம் முன்னூலாரும் அறிஞர் பெருமக்களும் உரைத்தனவாம் .. இவ்வகையில் வள்ளுவர் உரைத்த குறட்பாக்கள் பின்வருவன :
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு . ( குறள் 60 )
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும் . ( குறள் 63 )
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு . ( குறள் 73 )
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு . ( குறள் 75 )
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல் . ( குறள் 203 )
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின் . ( குறள் 238 )
மன்னுயிர் ஓம்பி அருளாள் வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை . ( குறள் 244 )
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர் . ( குறள் 330 )
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவா அப் பிறப்பீனும் வித்து . ( குறள் 361 )
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
"கண்ணென்ப வாழும் உயிர்க்கு , ( குறள் 392 )

219
மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள் . ( குறள் 617 ) |
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார் . ( குறள் 729 )
கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை . ( குறள் 736 )
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து . ( குறள் 738 )
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு, ( குறள் 739 )
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு . ( குறள் 773 )
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய் . ( குறள் 851 )
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. ( குறள் 918 )
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு . ( குறள் 953 )
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு . ( குறள் 981.)
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு . ( குறள் 991 )
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார் . ( குறள் 246 )
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் . ( குறள் 662 )
இங்கு எடுத்துக்காட்டிய குறள்களில் வரும் என்ப , என்பர் என்பன அறிவுடைய நல்லாரையும் சிறந்த நூல்களை ஆக்கிய நூலாசிரியர்களையும் குறிப்பனவாம் என்பது அவ்வப் பாடல்களைப் படித்தவுடனேயே விளங்கும் . இவைதவிர ஏனைய பாடல்களில் வரும் கருத்துகளுள் பலவும் ஆசிரியர் தம் நுண்ணுணர்வால் அனுபவ வாயிலாக அறிந்து கூறியதோடு பிற பேரறிஞர்களுடைய கருத்துகளையும் , அவர்தம் நூலுரைகளையும் தழுவியனவாகவும் இருத்தல் இயல்பே என்பதை ஊகித்து அறியலாம் . என்றாலும், திட்டவட்டமாக ஆசிரியர் பிறர் கருத்துகள் என எடுத்தாண்டவை

220
இப் பகுதியில் காட்டிய குறட்பாக்களில் வருவனவே . இங்ஙனமாக முன்னோர் மொழி பொருள்களை வள்ளுவர் தம் நூலுள் கொண்டு கூறுதலும் பொருளுணர்த்தும் முறையில் ஒரு சீரிய முறையே யாகும் .
1. அ . ஈ .
குறிப்புகள்
இவர் பொருட் பாகுபாட்டினை அறம் பொருள் இன்பம் என வடநூல் வழக்குப்பற்றி ஓதுதலான் . " ( காமத்துப்பால் முகவுரை )
அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம் . ” ( உரைப்பாயிரம் )
தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ வெள்ளிகள் துணிபு தொகுத்துப்பின் நீதி நூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின் . ” ( குறள் 662 உரை )
" ஈண்டுப் பிரிவினை வடநூல் மதம் பற்றிச் செலவு , ஆற்றாமை , விதுப்பு , புலவி என நால்வகைத்தாக்கிக் கூறினார் . ( குற 1330 உரை )
உ . இவ் வட நூற் பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதிய அறியாது பிறரெல்லாம் இதனை உயிரெச்சம் எனப் பாடந்திரி தமக்குத் தோன்றியவாறே உரைத்தார் . ” ( குறள் 501 உரை )
2. என்ப என்பதற்குப் பரிமேலழகர் தரும் உரைக் குறிப்பும் இக்கருத்தினை நன்கு விளக்குகின்றது
என்ப - என்று சொல்லுவர் ( 729 )
என்ப - என்று சொல்லுவர் அறிந்தோர் ( 60 , 63 , 73 , 75,244 , 330 , 392,617 )
‘ என்ப -- என்று சொல்லுவர் நல்லோர் ( 203 , 238 )
என்ப - என்று சொல்லுவர் நூலோர் ( 361 , 736 , 738 , 739 , 773 , 851 , 918 , 953 , 981 , 991 )



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

2. உலகின்மேலிட்டு உரைத்தல்

உலகு அல்லது உலகம் என்பது இடத்தைக் குறிக்கும் பெயராய்ப் பொதுவகையால் மண்ணுலகம் , விண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களையும் உணர்த்தும் ஒரு சொல் . என்றாலும் , சிறப்பு வகையால் இச்சொல் நில உலகத்தையும் அதன்கண் வாழும் உயிர்த் தொகுதிகளையும் , குறிப்பாக நன்மக்களையும் , உலகியல் நடைமுறை களையும் தெரிவிக்கப் பயன்படும். இவ்வகைப் பொருள்களில் நிலம், ஞாலம் , எவயகம் என்னும் சொற்களும் வருவது உண்டு. எனினும், உலகு எனக் குறிப்பிட்டு, உலக வழக்கம் இது என எடுத்துக் ஈட்டுதலே பெருவழக்கு .

திருவள்ளுவரின் திருக்குறள் பாடல்களிலும் நிலம், ஞாலம், வையம், உலகம் என்பன அங்கங்கே எடுத்தாளப்பட்ட போதிலும் உலகம் என்பதே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருத்தல் காணலாம் .
ஆதிபகவன் முதற்றே உலகு ( குறள் 1 )
வானின் றுலகம் வழங்கி வருதலான் ( குறள் 11 )
மாரிமாட்டு என்னாற்றும் கொல்லோ உலகு ( குறள் 211 ) என்றாற்போல பல இடங்களில் உலகு என்பது உலகத்து வாழும் உயிர்த்தொகுதிகளைப் பொதுவகையாகச் சுட்டும் முறையில் வந்துள்ளது .
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு . ( குறள் 425 )
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு . ( குறள் 426
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்தது விடின் . ( குறள் 280

222
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு . ( குறள் 117 )
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு . ( குறள் 470 )
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு . ( குறள் 670 )
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு . ( குறள் 809 )
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு . ( குறள் 841 )
இப் பாடல்களில் உலகம் , உலகு என வள்ளுவர் காட்டும் சொற்பொருள் ஊன்றிக் கவனிக்கத்தகும் . இங்கெல்லாம் உலகில் வாழும் உயர்ந்தாராகிய சான்றோர் கருத்து இதுவாகும் என்றும் , அவர்கள் வழிநின்று ஒழுகுதலே அறிவுடைமையாகும் என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன . உரைகாரர்களும் ஆசிரியர் கருத்தறிந்து ,, உலகம் என்பது உயர்ந்தோரை ( 117 , 280 , 425 உரை ) உயர்ந்தோராகிய நல்லினத்தார் ( 470 , காளிங் . உரை ) என்று சுட்டிக்காட்டி விளக்கம் தருகின்றனர் . உலகத்து உயர்ந்தோராகிய சான்றோரால் மதிக்கப்படும் நல்லறங்களே ஒருவன் போற்றிச் செய்யத் தக்கது என்பதும் , அறவழியிலிருந்து தவறி நடப்போரை ஆன்றோர் பழிப்பர் என்பதும் எடுத்துச் சொல்லி நல்வழி நடக்க அறிவுறுத்துகிறார் ஆசிரியர் திருவள்ளுவர் . ஒழுக்கத்தின் மேன் மையை வற்புறுத்தி உரைத்த வள்ளுவர் முடிந்த முடிபாக ,
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் . ( குறள் 140 )
என்று ஒழுக்கமுடைமை அதிகாரத்தின் இறுதிக் குறளில் எடுத்துக் காட்டுகின்றார் . எவ்வளவு கற்றவரானாலும் உலகத்தோடு பொருந்தி நடக்கத் தெரியாதவர் கல்லாதவரே என்பது கருத்தாம் . இக் குறளின் உரையில் பரிமேலழகர் ,

“ உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது உயர்ந்தோர் பலரும் ஒழுகியவாற்றான் ஒழுகுதல் . அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதனவொழிந்து சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையுமடங்க உலகத்தோடு ஒட்ட என்றும் , கல்விக்குப் பயன் அறிவும் ஒழுக்கமும் ஆதலின் அவ்வொழுகுதலைக் கல்லார் பலகற்றும் அறிவிலாதார் என்றும் கூறினார் "

223
என்று தரும் விளக்கப் பகுதியும் படித்து இன்புறத்தக்கது . உயர்ந்தோர் பலரும் ஒழுகும் ஒழுக்கமே ‘ உலகியல் என்றும் ‘உலகநடை என்றும் போற்றும் பெருமைக்குரியதாகும் .
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும் . ( குறள் 214 )
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு . ( குறள் 215 )
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை . ( குறள் 572 )
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு : ( குறள் 874 )
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அஃதின்றேல்
மண்புக்கு மாய்வது மன் . ( குறள் 996 )
செய்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல் . ( குறள் 637 )
இக் குறள்களில் வள்ளுவர் உலகநடை பண்புடைய ஆன்றோர் வழிப்பட்டது என்றும் அவ்வுலக நடையினை மேற்கொண்டு ஒழுகுதலே பேரறம் என்றும் எடுத்துக்காட்டுதல் காணலாம் .
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் . ( குறள் 294 )
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் . ( குறள் 850 )
இங்கெல்லாம் வள்ளுவர் உலகத்தார் என்று கூறுவது உயர்ந்தோர்களையே குறிப்பதாகும் .
உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்
வழக்கு வழிப்படுதல் செய்யுட்குக் கடனே . ( தொல் . பொருள் . பொருளி. 21 )
வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான . ( தொல் . பொருள் . மரபு 94 )
இத் தொல்காப்பியச் சூத்திரங்கள் உயர்ந்தோர் கூற்றே கொள்ளத் தக்கது என்று அறிவுறுத்துகின்றன . இப் பழமையான கருத்தினை விளக்குவது போல ,
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே ( திவா. மக்கட்பெயர் )
224
என்னும் திவாகர சூத்திரம் அமைந்துள்ளது . மேலும் , உலகம் என்னும் சொல்லிற்கு இத்திவாகர நிகண்டு தரும் பொருளும் நாம் இங்குக் கருதத் தகும் . அறிவுடையோர் பெயர்களுள் ஒன்றாக உலகம் என்பதனையும் இந் நிகண்டு குறிப்பிடுகிறது .

சான்றோர் மிக்கோர் நல்லவர் மேலவர்
ஆய்ந்தோர் உயர்ந்தோர் ஆரியர் உலகு என
வாய்ந்த ஆன்றோர் அறிவுடையோரே . ( திவா . மக்கட் பெயர் )
இதில் தரப்பட்டுள்ள ஒன்பது பெயர்களும் அறிவுடை மாந்தராம் உலகத்து உயர்ந்த பண்பாளரைக் குறிக்க வழங்கப்படுவன வாகும் .
ஆகவே , வள்ளுவர் அறிவுடையார், அறிவுடையார், காட்சியவர், காட்சியார், சான்றோர் முதலிய பெயர்களால் எடுத்துக் கூறுவனவும் உலகின் மேலிட்டுக் கூறிய கருத்துகளாகவே கொள்ளத்தகும் . காட்சியவர், காட்சியார் என்றால் அறிவுடையவர் என்பது பொருளாம் .

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர் . ( குறள் 218 )
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன் . ( குறள் 258 )
கொளப்பட்டோம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர் . ( குறள் 699 )
இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர் . ( குறள் 654 )
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர் . ( குறள் 174 )
பொருள் தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள் தீர்ந்த
மாசறு காட்சி யவர் . ( குறள் 199 )
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு . ( குறள் . 352 )
இப் பாடல்களில் அறிவுடையாரைக் குறிப்பிடும் காட்சியவர் என் பதற்கு வரும் அடைமொழித் தொடர்களால் அவர் உலகிற்கு வழி காட்டியாய் விளங்கும் தகுதியையும் பான்மையையும் மேன்மை யையும் உணரலாகும் . கடனறி காட்சி யவர் ( 218 ) என்பது அவர் உலகிற்கு ஆற்றி வரும் தொண்டுக் கடப்பாட்டைக் குறிப்ப தாகும் . துளக்கற்ற காட்சியவர் ( 699 ) , நடுக்கற்ற காட்சியவர் (654 ) என்பன அவர் அச்சம் இன்றிக் கருத்துரைக்கும் பான்மை யையும் , செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் தலைப்பிரிந்த காட்சியார் ( 258 ) என்பது உலகின்மேலிட்டு உரைத்தல்

225
அவரிடம் விருப்பு வெறுப்பு இன்றி அமைந்த நடுவு நிலைமைப் பண்பையும் உணர்த்துவனவாம் . இத்தகையாரிடம் திரிபுணர்ச்சி களோ , புலனாசைக்கு அடிமையாகும் இழி செயல்களோ , எதுவும் அணுகுவதே இல்லை . ஆதலால் இவர் ‘ புலம் வென்ற புன்மையில் காட்சியவர் (174 ) என்று புகழப்படுகின்றனர் . தவிரவும் இத்தகையாரை மாசறு காட்சியவர் ( 199 , 352 ) எனப் போற்றியும் வள்ளுவப் பெருந்தகை புகழ்ந்துரைக்கின்றார் .
அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னிலாத சொல் . ( குறள் 798 )
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் . ( குறள் 580 )
என்பனவும் உலகிடை அறிவால் மிக்க சான்றோரின் சீர்மைகளை எடுத்துரைக்கின்றன .

எல்லாவற்றிற்கும் மேலாக வள்ளுவர் சான்றோர் என்னும் பெயரைச் சுட்டி உரைத்த பொருள்களும் உலகின் மேலிட்டுக் கூறிய பொருள்களாகவே கொள்ளத்தக்கன . ஆன்றோர்க்குக் கூறிய அறநெறி உலகினர் அனைவர்க்கும் உரியனவாம் அன்றோ ?
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி . ( குறள் 115 )
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி ( குறள் 118 )
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு ( குறள் 148 )
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று ( குறள் 197 )
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு . ( குறள் 299 )
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை . ( குறள் 328 )
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து . ( குறள் 458 )
பழிமலைந் தெய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை . ( குறள் 657 )
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன் . ( குறள் 802 )
226
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று ( குறள் 982 )
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை . ( குறள் 985 )
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை . குறள் 1014 )
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் . ( குறள் 1078 )
களால்
இக் குறள்களில் சான்றோரை முன்னிட்டுக் கூறியனவெல்லாம் உலகம் எனப்படும் உயர்ந்தாரை முன்னிட்டுக் கூறியனவாம் . இத்தகு சான்றோர் போற்றும் பண்புகளைக் கடைப்பிடித்து அவர் பழிக்கப்பட்டன விலக்கப்பட்டன எல்லாவற்றையும் தவிர்த்தல் வேண்டும் .

ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை ( குறள் 656 )
என்னும் குறட்பா குற்றம் கடிந்து குணம் பயப்பனவற்றைச் செய்தலே முறைமையாம் என அறிவுறுத்துகின்றது .

இவ்வாறாக உலகத்து உயர்ந்த சான்றோரை முன்னிட்டு அறப் பொருளைக் காட்டும் மரபும் குறளகத்துப் பலவாக உள்ளமை தெரிய வரும் . சான்றோர் அருளிய கொள்கைகளையும் நூல் துணிபுகளையும் எடுத்துக் கூறும் பகுதிகளும் இதனோடு சார்த்தி உணரத்தகுவனவாம் .



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

121.jpg122.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

123.jpg124.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

125.jpg127.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

128.jpg 129.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

130.jpg131.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

141.jpg142.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

143.jpg145.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

 146.jpg147.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

 148.jpg149.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

150.jpg151.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

152.jpg153.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

 154.jpg155.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

 156.jpg157.jpg



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard