எல்லா உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருளை மேற்கொண்டு ஒழுகுவோரே அறவோர் எனும் துறவிகள் (அந்தணர்) எனப்படுவோர்
இந்தக் குறட்பா நீத்தார் பெருமை அதிகாரத்தில் உள்ளபடியான பொருளே நாம் கண்டது.அந்தணர் எனும் சொல் வள்ளுவத்தில் மேலும் இரண்டு குறட்பாக்களில் வந்து உள்ளது, அவை முறையே - கடவுள் வாழ்த்து மற்றும் செங்கோன்மை அதிகாரத்தில் உள்ளவை.
அறக்கடலான கடவுளின்(அந்தணன்) திருவடிகளைப் வணங்கி தொழுபவர்கள் தவிர ம்மற்றவர்களால் இவ்வுலக வாழ்க்கையின் பொருள் மற்றும் இன்பம் ஆகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.
நல்ல அரசாட்சியின் செங்கோல் என்பது அந்தணர் போற்றும் வேதங்களிற்கும் அவற்றின் எழுத நீதி நூல்களுக்கும் அடிப்படையாய் நின்று நாட்டைக் காக்க வேண்டும்.
திருவள்ள்வர் 3 வெவ்வேறு அதிகாரத்தில் 3 முறையும் வெவ்வேறு பொருளில் பயன் படுத்தி உள்ளார்.
முதலில் அறவாழி அந்தணன் எனக் கடவுளை - இது தமிழரின் சங்க இலக்கிய மரபே
பரிபாடல் 5ம் பாடலில் ஆதி அந்தணன் என பிரம்மாவையும், வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான் என புலவர் பாடி உள்ளார். கலித்தொகை 38ம் பாடலில் இமயமலையை வில்லாக வளைத்து, தன் தலையின் கங்க்யைக் கொண்டதால் ஈரமான தலையை உடைய அந்தணன் என சிவபெருமானைக் கூறுகிறது
நீத்தார் பெருமை - அதிகாரத்தில்; அந்தணர் என்பதை துறவி எனும் பொருளில் வள்ளுவர் ஆண்டுள்ளதை, அந்தணர் குல மரபை ஏற்க வில்லை என தமிழர் மரபை மீறி பொருள் கூறுவர். அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தால் தான் பிறப்பு கடலைக் கடக்க இயலும் என உள்ளதை - எந்த தமிழ் அறிஞரும் சுட்டுவதே இல்லை; கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எனும் சொல் அந்தணர் கடவுளைக் குறிக்கும், ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ, வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து, ..............அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான் - பரிபாடல் 5ல் -இவை முறையே பிரம்மாவையும், சிவ பெருமானையும் குறிக்கும்
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக
திருவள்ளுவர் தமிழர் மெய்யியல் மரபில் அந்தணர் என்பதை கடவுள் என கடவுள் வாழ்த்து அதிகாரத்திலும், நீத்தார் பெருமை துறவியர் அதிகாரத்திலும் என பயன்படுத்தி உள்ளதை சரியாய் சொல்ல வேண்டும்
திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும். “கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை; வடமொழி வாசகம் செய்த நல்லேடு
நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர். தமிழ் பகைவர்களான கிறிஸ்துவ பாதிர்கள், மற்றும் அவரோடு பொருள் பெற்று துணை நின்ற திராவிட அரசியல்வாதிகளின் விஷபோதனையாலும் பல உரைகள் பிதற்றலாய் எழுதப்பட்டுள்ளன, அதில் அறு தொழிலார் என்பதை ஆறு தொழில் என மட்டுமின்றி நூல் என்பதைக் கொண்டு நெசவு, அறுக்கும் நூல் என்றெல்லாம் வள்ளுவரையும், தமிழர் மெய்யியலையும் பழித்து உரைகள் வந்துள்ளன.
நாம் அறுதொழிலோர் எனில் சங்க இலக்கிய நடைமுறையில் காண்போம்.
பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.
ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6 ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204 புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் புறம் -126-11 கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு புறம் 361/4,5 அறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2 நல்ல அரசன் அந்தணர்களின் வேத அற நூல்களை உறுதுணையாய் ஆட்சி செய்ய வேண்டும், அரசன் மோசமான ஆட்சி செய்தால் அந்தணர் வேதம் மறப்பர் என வள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி கூறுகிறார். வள்ளுவர் பார்ப்பனர் வேதம் ஓதுதலை மறந்தாலும் குடி பிறப்பால் உள்ள ஒழுக்கம் பேண வேண்டும் என்கிறார். மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (-134 ஒழுக்கமுடைமை) பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான். ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில் வேதம் பிராமணர்களை தான் குறிக்கிறது. ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5 ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை - சிலப்பதிகாரம் 15-70 ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25 ஓத்து இலாப் பார்ப்பான் உரை இன்னா நாற்பது 21இல்வாழ்க்கை. குறள் 49:
அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது மனைவி குழந்தையோடு ஆன குடும்ப வாழ்க்கையே ஆகும்; அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
தமிழர் மெய்யியல் மரபை ஏற்காத நவீன திராவிடியார் திருக்குறளை சிறுமை ச்நெய்ய பெருமளவில் கூறும் குறள் "அந்தணர் என்போர் அறவோர்"; இதை தாண்டி பிற குறளிற்கு தவறான உரை கூறவும் இதை பயன்படுத்துவதும் தொடர்கிறது.
பிராமணர் என்பதன் தமிழே அந்தணர்; அஃதாவது
அந்தணர்- அந்தம் + அணர்.
உலகின் இறுதிப் பொருளான பிரம்மத்தை (வேதங்களினை கொண்டு இறைவ்னை) நாடுபவர் எனப் பொருள் படும்.
வள்ளுவத்தில் இறைவனை அறவாழி அந்தணன்(08) என்கையில் அந்தமே ஆன இறைவன் என்கிறார்; அந்தணர் என்போர் அறவோர்(30) என்கையில் அந்தமோடு இணைந்திட்ட துறவிகளைக் கூறி உள்ளார். அந்தணர்(543) நூற்கும் எனக் கூறுகையில் பிராமணர்களையும் வேதங்களையும் குறிப்பிடுகிறார். திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் தமிழ் சமணரான மணக்குடவர் உரையே தொன்மையானது.
தமிழில் இலக்கணம் செய்த தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பார்ப்பனர்களே என்பது தமிழ் பாரம்பரிய வரலாறு. வள்ளுவரை - பஞ்சாங்கம் செய்யும் வள்ளுவர் சாதி எனச் சொல்வோரும் உண்டு.
நெடு-வயின் ஒளிறு மின்னு பரந்து ஆங்கு
புலி_உறை கழித்த புலவு வாய் எஃகம்
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி
ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின்
பீடு கொள் மாலை பெரும் படை தலைவ 5
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி
ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று
நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை 10
திருந்திய இயல் மொழி திருந்து இழை கணவ
நீண்ட விசும்பில் ஒளிறுகின்ற மின்னல் பரந்தாற் போலப்
புலித்தோலால் செய்த உறையிலிருந்து உருவப்பட்ட புலால் நாறும் வாளை
உன் ஏவலுக்கு உட்பட்ட மறவர் வலக்கையில் உயர்த்திப் பிடித்து,
கடத்தற்கரிய அரண்களை அழித்துச் செல்லும் முன்னணிப்படையின் அரிய அணிவகுப்பினையுடைய
பெருமை கொள்ளும் இயல்பினையுடைய பெரும் படைக்குத் தலைவனே!
மறையோதல், வேள்விசெய்தல், இவை ஒவ்வொன்றையும் பிறரைச் செய்வித்தல்
ஈதல், ஏற்றுக்கொள்ளுதல் என்று ஆறினையும் செய்து ஒழுகும்
அறச்செயல்களை விரும்பும் அந்தணர்களை வழிபட்டு நடந்து,
உலகமோ உன் வழியில் நடக்க, புலவர் பாடும் புகழைப் பெற்று
நாடு முழுவதும் விளங்கும் நீ நாடிப்பெறாத நல்ல புகழைக் கொண்ட -
மேன்மையான இயல்புள்ள மொழியினையுடைய திருத்தமான அணிகலன்கள் அணிந்தவளுக்குக் கணவனே!
பாட்டு 64
வலம் படு முரசின் வாய் வாள் கொற்றத்து
பொலம் பூண் வேந்தர் பலர் தில் அம்ம
அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
உரை சால் வேள்வி முடித்த கேள்வி
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு 5
இரும் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து
களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின்
புறஞ்சிறை வயிரியர் காணின் வல்லே
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என
# 64 பாட்டு 64
வெற்றியுண்டாக முழங்கும் முரசினையும், குறி தப்பாமல் வாய்க்கின்ற வாளினால் பெறும் அரசாண்மையையும்
பொன்னாற் செய்த பூண்களையும் உடைய வேந்தர் பலர் இருக்கின்றனர்;
அறநூல்களை ஓதியதால் தெளிவான நாவினையுடைய, உயர்ந்த
புகழ் நிறைந்த வேள்விகள் செய்து முடித்த கேள்வியறிவையுடைய
அந்தணர்கள் அரிய கலன்களை நீர் வார்க்க ஏற்றுக்கொள்வதால், நீர் ஒழுகி ஏற்பட்ட
மிகுந்த சேற்றினில் கால்பதித்த, மணல் நிறைந்த முற்றத்தில்,
களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய
அரண்மனையின் வெளிப்புறத்தில் கூத்தர்கள் வரக் காணும்போது, விரைந்து
வேற்படையைக் கொன்று கொணரப்பட்ட, கொய்யப்பட்ட பிடரியினைக் கொண்ட குதிரைகளையும்,
அசைகின்ற தேர்களையும், அவற்றுக்குரிய அணிகளை அணிந்து கொடுங்கள் என்று கூறும்
பதிற்றுப்பத்து
21 பாட்டு 21
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை
காலை அன்ன சீர் சால் வாய்மொழி
உரு கெழு மரபின் கடவுள் பேணியர் 5
கொண்ட தீயின் சுடர் எழு-தோறும்
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி
வருநர் வரையார் வார வேண்டி
விருந்து கண்மாறாது உணீஇய பாசவர்
ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை 10
குய் இடு-தோறும் ஆனாது ஆர்ப்ப
கடல் ஒலி கொண்டு செழு நகர் வரைப்பின்
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி
இரண்டு உடன் கமழும் நாற்றமொடு வானத்து
நிலை பெறு கடவுளும் விழை_தக பேணி 15
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின்
மாரி அம் கள்ளின் போர் வல் யானை
போர்ப்பு-உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து
நன் கலம் தரூஉம் மண் படு மார்ப
முல்லை கண்ணி பல் ஆன் கோவலர் 20
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி
கல் உயர் கடத்து இடை கதிர் மணி பெறூஉம்
மிதி அல் செருப்பின் பூழியர் கோவே
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை
பல் பயம் தழீஇய பயம் கெழு நெடும் கோட்டு 25
நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடி
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா
சீர் உடை தேஎத்த முனை கெட விலங்கிய
நேர் உயர் நெடு வரை அயிரை பொருந
யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து 30
நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக
மண்ணா ஆயின் மணம் கமழ் கொண்டு
கார் மலர் கமழும் தாழ் இரும் கூந்தல்
ஒரீஇயின போல இரவு மலர் நின்று
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் 35
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
வேய் உறழ் பணை தோள் இவளோடு
ஆயிர வெள்ளம் வாழிய பலவே
சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய
ஐந்தினையும் சேர்ந்து கற்று, அவையே துணையாக,
எவ்வுயிருக்கும் துன்பம் சூழாமல் விளங்கும் கொள்கையுடன்,
ஞாயிற்றைப் போன்ற சிறப்புப் பொருந்திய, வாய்மை உரையால்,
அச்சம் பொருந்திய முறைமையினையுடைய கடவுளைப் போற்றுவதற்காக
மேற்கொண்ட வேள்வித்தீயின் சுடர் மேலெழும்போதெல்லாம்,
உள்ளத்து விருப்பம் உடலிலும் பரவும் பெரும் புகழ் கொண்ட ஆவுதிப்புகையும்;
பரிசில் பெற வருபவர்கள் அளவில்லாமல் தாமே வாரி எடுத்துக்கொள்ளவேண்டியும்,
விருந்தினர் வேறு இடங்களுக்கு மாறிப்போகாமல் உண்ணவேண்டியும், இறைச்சி விற்போர்
இறைச்சி கொத்தும் பட்டைமரத்தில் வைத்துக் கொத்திய வெள்ளை நிற நிணத்தோடு சேர்ந்த கொழுத்த இறைச்சியை
தாளிக்கும்போதெல்லாம் இடைவிடாமல் ஒலிக்க -
கடல் ஒலியைப் போல, செழுமையான இல்லங்களின் மதில்களின்
நடுவில் எழுந்த சமைக்கும் நெய்யால் எழுந்த ஆவுதிப்புகையும்;
இரண்டும் சேர்ந்து கமழும் மணத்தோடு, வானுலகத்தில்
நிலைபெற்ற கடவுளும் விரும்புமாறு வழிபட்டு,
குறையாத வளம் நிறைந்த, குற்றம் நீங்கிய சிறப்பினையுடைய -
மழையாய்ச் சொரியும் கள்ளினையுடைய - போரில் வல்ல யானையின் மேலிருக்கும்
தோலினால் போர்த்தப்பட்ட போர்முரசம் முழங்க, ஆரவாரம் மிகுந்து
பகைவர் திறையாகத் தரும் பெருஞ் செல்வத்தைக் கொண்டுவருகின்ற - சாந்து அணிந்த மார்பினனே!
முல்லைப்பூவால் கட்டப்பட்ட தலைமாலையையுடைய பல பசுக்களையுடைய கோவலர்
புல் நிறைய உடைய அகன்ற வெளியில் அந்தப் பசுக்களை மேயவிட்டு,
கற்கள் உயர்ந்த காட்டுவெளியில் கதிர்விடும் மணிகளைப் பொறுக்கியெடுக்கின்ற
மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே!
குவியலான தலைமாலைகளை அணிந்த மழவரின் கவசம் போன்றவனே!
பலவகைப் பயன்களைத் தரும் காடுகளைக் கொண்ட, தானும் பயன்களை அளிக்கும் நெடிய உச்சியையுடைய,
நீர் ஒழுகும் பக்கத்தில் செல்லாமல், நீண்ட தொலைவிலிருந்து
உன்னிப்பாகப் பார்க்கும் கொக்கின் விரைவான கொத்தலுக்கு அஞ்சாத,
புகழ் படைத்த நாட்டினிடையே பகைவர் போரிடாதவாறு குறுக்கிட்டுக்கிடக்கும்
நேராக உயர்ந்த நெடிய மலையான அயிரை என்னும் மலைக்குத் தலைவனே!
ஆண்டுதோறும் பொய்க்காமல் பயனைத் தரும் மழை நிறையப்பெய்து,
நோய் இல்லாமல், மக்களுக்கு, நல்ல காலமாகக் கழிய,
நறுநெய் பூசப்படாவிட்டாலும் கமழ்கின்ற மணத்தைக் கொண்டு,
கார்காலத்து மலரின் மணம் கமழும் தாழ இறங்கிய கரிய கூந்தலையும்,
குளத்திலிருந்து நீங்கி வந்ததைப் போல, இரவிலும் மலர்ந்து நின்று,
அழகிய முகத்தினில் சுழல்கின்ற பெரிய அமைதியான குளிர்ச்சியான கண்களையும்,
அசைகின்ற காந்தள் ஒளிவிடும் நீர்ப்பரப்பின் கரையில் நிற்கும்
மூங்கிலைப் போன்ற பெரிய தோள்களையும் உடைய இவளோடு
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்க!
# 24 பாட்டு 24
நெடு-வயின் ஒளிறு மின்னு பரந்து ஆங்கு
புலி_உறை கழித்த புலவு வாய் எஃகம்
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி
ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின்
பீடு கொள் மாலை பெரும் படை தலைவ 5
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி
ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று
நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை 10
திருந்திய இயல் மொழி திருந்து இழை கணவ
குலை இழிபு அறியா சாபத்து வயவர்
அம்பு களைவு அறியா தூங்கு துளங்கு இருக்கை
இடாஅ ஏணி இயல் அறை குருசில்
நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும் 15
அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின்
வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே
உண்மரும் தின்மரும் வரை கோள் அறியாது
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு
அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின் 20
எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும்
கண்டு மதி மருளும் வாடா சொன்றி
வயங்கு கதிர் விரிந்து வான்_அகம் சுடர்வர
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப 25
கலிழும் கருவியொடு கை உற வணங்கி
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்
கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை
கார் எதிர் பருவம் மறப்பினும்
பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனே 30
# 24 பாட்டு 24
நீண்ட விசும்பில் ஒளிறுகின்ற மின்னல் பரந்தாற் போலப்
புலித்தோலால் செய்த உறையிலிருந்து உருவப்பட்ட புலால் நாறும் வாளை
உன் ஏவலுக்கு உட்பட்ட மறவர் வலக்கையில் உயர்த்திப் பிடித்து,
கடத்தற்கரிய அரண்களை அழித்துச் செல்லும் முன்னணிப்படையின் அரிய அணிவகுப்பினையுடைய
பெருமை கொள்ளும் இயல்பினையுடைய பெரும் படைக்குத் தலைவனே!
மறையோதல், வேள்விசெய்தல், இவை ஒவ்வொன்றையும் பிறரைச் செய்வித்தல்
ஈதல், ஏற்றுக்கொள்ளுதல் என்று ஆறினையும் செய்து ஒழுகும்
அறச்செயல்களை விரும்பும் அந்தணர்களை வழிபட்டு நடந்து,
உலகமோ உன் வழியில் நடக்க, புலவர் பாடும் புகழைப் பெற்று
நாடு முழுவதும் விளங்கும் நீ நாடிப்பெறாத நல்ல புகழைக் கொண்ட -
மேன்மையான இயல்புள்ள மொழியினையுடைய திருத்தமான அணிகலன்கள் அணிந்தவளுக்குக் கணவனே!
நாணைக் கழற்றி அறியாத வில்லைக்கொண்ட வீரர்கள்,
அம்பினைக் கீழே போடமுடியாத அளவுக்கு நெருக்கமாக இருப்பதால் அசைகின்ற இருக்கைகளைக் கொண்ட
அளவிடமுடியாத எல்லையைக் கொண்ட இயல்பினையுடைய பாசறையையுடைய குருசிலே!
நீர், நிலம், நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய ஐந்தனையும்
அளந்து அவற்றின் எல்லையை அறிந்தாலும், உனது அறிவு, ஆற்றல் ஆகியவற்றை அளக்க முடியாது; உன்
செல்வம் பெருகிய வளத்தை இனிதே கண்டறிந்தோம்;
உண்பாரும், தின்பாருமாய் கணக்கில் அடங்காதவாறு உண்டும் -
ஒலிக்கின்ற பூண் மழுங்கிப்போன உலக்கை இருக்கும் இடங்கள்தோறும்
இலையையுடைய சேம்பினைப் போன்ற அடுப்பிலிடப்பட்ட பெரிய பானையினையும்,
வாளால் இறைச்சியை வெட்டும்போது சிவந்துபோன வெட்டுமரத்தையும் யாவரும்
கண்டு வியக்கும் - குறையாத சோறு -
ஒளிரும் கதிர்கள் பரந்து வானகம் ஒளிபெற்றுவிளங்க,
சிறிதே வடக்குப்பக்கம் சாய்ந்துள்ள சிறப்பமைந்த வெள்ளியாகிய கோள்மீன்
பயன் தரும் பிற கோள்களோடு நல்லநாள் காட்டி நிற்க,
ஒளிரும் இடிமின்னலோடு நாற்புறமும் கவிந்து
உலகத்து உயிர்களைக் காக்கும்பொருட்டு வலப்பக்கமாய் எழுந்து முழங்கும்
கீழ்க்காற்றால் கொணரப்பட்ட குளிர்ச்சியான நீர்த்துளிகளைக் கொண்ட நிறைசூலைக்கொண்ட கரிய மேகங்கள்
கார்காலம் எதிர்ப்படுகின்ற தன் பருவத்தை மறந்துபோனாலும் -
நீங்காத புதுமையையுடையது, வாழ்க! உன் வளம்!
# 64 பாட்டு 64 பதிற்றுப்பத்து
வலம் படு முரசின் வாய் வாள் கொற்றத்து
பொலம் பூண் வேந்தர் பலர் தில் அம்ம
அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
உரை சால் வேள்வி முடித்த கேள்வி
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு 5
இரும் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து
களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின்
புறஞ்சிறை வயிரியர் காணின் வல்லே
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என 10
ஆனா கொள்கையை ஆதலின் அ-வயின்
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட
ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார்
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி
காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல் 15
மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல்
இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு உயர்ந்த
மழையினும் பெரும் பயம் பொழிதி அதனால்
பசி உடை ஒக்கலை ஒரீஇய
இசை மேம் தோன்றல் நின் பாசறையானே 20
# 64 பாட்டு 64
வெற்றியுண்டாக முழங்கும் முரசினையும், குறி தப்பாமல் வாய்க்கின்ற வாளினால் பெறும் அரசாண்மையையும்
பொன்னாற் செய்த பூண்களையும் உடைய வேந்தர் பலர் இருக்கின்றனர்;
அறநூல்களை ஓதியதால் தெளிவான நாவினையுடைய, உயர்ந்த
புகழ் நிறைந்த வேள்விகள் செய்து முடித்த கேள்வியறிவையுடைய
அந்தணர்கள் அரிய கலன்களை நீர் வார்க்க ஏற்றுக்கொள்வதால், நீர் ஒழுகி ஏற்பட்ட
மிகுந்த சேற்றினில் கால்பதித்த, மணல் நிறைந்த முற்றத்தில்,
களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய
அரண்மனையின் வெளிப்புறத்தில் கூத்தர்கள் வரக் காணும்போது, விரைந்து
வேற்படையைக் கொன்று கொணரப்பட்ட, கொய்யப்பட்ட பிடரியினைக் கொண்ட குதிரைகளையும்,
அசைகின்ற தேர்களையும், அவற்றுக்குரிய அணிகளை அணிந்து கொடுங்கள் என்று கூறும்
குறைவுபடாத கொள்கையை உடையவனாதலின், அவ்விடத்தில் -
கரிய பெரிய ஆகாயத்தில் பல விண்மீன்களின் ஒளி குன்றும்படி,
ஞாயிறு உதிப்பதைப்போல், பகைவரின்
மிகுந்த பகையைச் சிதைத்த உன் வலிய கால்களை வாழ்த்திக்
- காண்பதற்கு வந்திருக்கிறேன் - காலில் கழலையும், தோளில் தொடியையும் அணிந்திருக்கும் அண்ணலே!
கரிய நிறம் உண்டாகின்ற மலர்களையுடைய கழியில் மலர்ந்த நெய்தல் பூவின்
இதழின் வனப்பைக் கொண்ட தோற்றத்தோடு, உயர்ந்த
மழையைக் காட்டிலும் பெரிதான பயனைப் பொழிகிறாய், அதனால்
பசித்திருக்கும் சுற்றத்தாரை அப் பசி நீங்கும்படி செய்ய
புகழ் மேம்பட்ட தோன்றலே! உன் பாசறையினில் -
290
அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய
பூ கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும் அவள் ஒப்பவும் படுமே
290
அறத்தைப் புரியும் செங்கோல் ஆட்சியையுடைய மன்னனைக் காட்டிலும், தாம் மிகவும்
சிறந்தன போலும் இந்தக் கிளிகள், சுடர்விடும்
பூக்கள் மணக்கும் கூந்தலையுடைய இந்தக் குறிஞ்சிப்பெண்ணால்
கனிவுடன் பார்க்கவும் படும், அவளால் கடிந்து ஓட்டவும் படுமே!
* 30 மஞ்ஞை பத்து
# 387
அறம் புரி அரு மறை நவின்ற நாவில்
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று
ஒண்_தொடி வினவும் பேதை அம் பெண்டே
கண்டனெம் அம்ம சுரத்து இடை அவளை
இன் துணை இனிது பாராட்ட 5
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே
387
அறத்தைச் சொல்லும் அரிய மறைகளைப் பலமுறை ஓதிப்பயின்ற நாவினையும்,
அந்த வேத முறைகளைக் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களையும் உடைய அந்தணர்களே! உங்களைத் தொழுகிறேன் என்று
ஒளிரும் தோள்வளைகளை அணிந்த உன் மகள் பற்றிக் கேட்கும் பேதையாகிய பெண்ணே!
கண்டோம், வரும் வழியிடையே அவளை,
தனது இனிய துணையானவன் இனிமையுடன் பாராட்ட,
குன்றுகள் உயர்ந்துநிற்கும், வெயிலில் ஒளிவிடும் மலைகளைக் கடந்து சென்றாள்.
பட்டினப்பாலை
நெல்லொடு வந்த வல் வாய் பஃறி 30
பணை நிலை புரவியின் அணை முதல் பிணிக்கும்
கழி சூழ் படப்பை கலி யாணர்
பொழில் புறவின் பூ தண்டலை
மழை நீங்கிய மா விசும்பின்
மதி சேர்ந்த மக வெண் மீன் 35
உரு கெழு திறல் உயர் கோட்டத்து
முருகு அமர் பூ முரண் கிடக்கை
வரி அணி சுடர் வான் பொய்கை
இரு காமத்து இணை ஏரி
புலி பொறி போர் கதவின் 40
திரு துஞ்சும் திண் காப்பின்
புகழ் நிலைஇய மொழி வளர
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழும் கஞ்சி
யாறு போல பரந்து ஒழுகி 45
ஏறு பொர சேறு ஆகி
தேர் ஓட துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல
வேறுபட்ட வினை ஓவத்து
நெல்லைக் கொண்டுவந்த, கெட்டியான விளிம்புகளையுடைய படகுகளை -- 30
கொட்டில் பந்தியில் நிறுத்தப்படும் குதிரைகளை(க் கட்டிவைப்பதை)ப் போன்று -- கட்டுத்தறிகளில் கட்டிவைக்கும்
உப்பங்கழி சூழ்ந்த ஊர்ப்புறங்களையும், மனமகிழ்ச்சி தரும் புதுவருவாயையுடைய
தோப்புக்களை அடுத்து இருக்கும் பூஞ்சோலைகளையும்,
மழை(பெய்து) விட்டுப்போன அகன்ற ஆகாயத்தில்
சந்திரனைச் சேர்ந்த மகம் என்னும் வெள்ளிய மீனின் 35
வடிவத்தில் அமைந்த வலிமையுள்ள உயர்ந்த கரையையுடைய,
மணம்பொருந்திய பூக்கள் நிறத்தால் தம்முள் மாறுபட்டுக் கிடப்பதினால்
பல நிறங்களைக் கொண்டு ஒளிரும் அழகிய பொய்கைகளையும்,
(இம்மையிலும் மறுமையிலும் உண்டாகிய) இரண்டுவிதக் காம இன்பம் (கொடுக்கும்) இணைந்த ஏரிகளையும்;
புலிச் சின்னத்தையும் (பலகைகள் தம்மில் நன்கு)பொருதும் (இரட்டைக்)கதவுகளையும் (உடைய), 40
செல்வம் தங்கும் திண்மையான மதிலையும்(உடைய),
(இம்மையில்)புகழ் நிலைபெற்ற சொல் எங்கும் பரவிநிற்க,
(மறுமைக்கு)அறம் நிலைபெற்ற, அகன்ற சமையற்கூடத்தில்
சோற்றை வடித்து வார்த்த கொழுமையான கஞ்சி
ஆற்றுநீர் போல (எங்கும்)பரவி ஓடி, 45
(அதைக் குடிக்க வந்த)காளைகள் தம்மில் பொருவதால் சேறாய் ஆகி,
(அச் சேற்றின் மீது)(பல)தேர்கள் ஓடுவதால் துகள்களாய் (மதில்கள் மீது)தெறித்து,
புழுதியில் விளையாண்ட (அதனை மேலே அப்பிக்கொண்ட) ஆண்யானையைப் போல,
பல்வேறுவிதமாக வரையப்பட்ட சித்திரங்களையுடைய
202 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
புலி பொர சிவந்த புலால் அம் செம் கோட்டு
ஒலி பன் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து
வன் சுவல் பராரை முருக்கி கன்றொடு
மட பிடி தழீஇய தட கை வேழம்
தேன் செய் பெரும் கிளை இரிய வேங்கை 5
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடர்_அகம் கவைஇ காண்வர
கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தை
அறு_மீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடும் கொடி போல 10
பல் பூ கோங்கம் அணிந்த காடே
# 202 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
புலியுடன் போரிட்டதால் சிவந்துபோன புலால் நாறும் அழகிய செம்மையான கொம்புகளில்
உண்டாயிருக்கும் பலவான முத்துக்கள் ஒலிக்க, வலிமை மிக்கு,
கட்டாந்தரையான மேட்டுநிலத்தில் உள்ள பருத்த அடியினைக் கொண்ட வேங்கையை முறித்து, கன்றோடு
தன் இளைய பெண்யானைத் தழுவிக்கொண்ட நீண்ட கைகளையுடைய ஆண்யானை,
தேனைச் செய்யும் பெரிய வண்டுக்கூட்டம் சிதறிப்பறந்தோட, வேங்கை மரத்தின்
பொன்னைப் போன்ற பூங்கொத்துக்களைக் கவளங்களாகப் பேணி ஊட்டும்
பெரிய மலையின் பிளவிடங்களைத் தன்னகத்தே கொண்டு மிக்க அழகாகத் தோன்றுவதைக்
காண்பாயாக! வாழ்க சிறுபெண்ணே! உன் தந்தைக்குரிய,
கார்த்திகை மீன்களோடு கூடிய அறம்செய்வதற்கான முழுத்திங்கள் நாளில்
வரிசையாகச் செல்லும் சுடர்களைக் கொண்ட நீண்ட கொடி போன்ற விளக்குகளைப் போல
பலவான பூக்களைக் கொண்ட கோங்க மரங்கள் அழகுசெய்யும் காடு -
பரிபாடல்
மறவியில் சிறப்பின் மாயம்-மார் அனையை 70
முதல் முறை இடை முறை கடை முறை தொழிலில்
பிறவா பிறப்பு இலை பிறப்பித்தோர் இலையே
பறவா பூவை பூவினோயே
அருள் குடை ஆக அறம் கோல் ஆக
இரு நிழல் படாமை மூ_ஏழ் உலகமும் 75
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ
பாழ் என கால் என பாகு என ஒன்று என
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என
நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை 80
செம் கண் காரி கரும் கண் வெள்ளை
பொன் கண் பச்சை பைம் கண் மாஅல்
இட வல குட அல கோவல காவல
காணா மரப நீயா நினைவ
மாயா மன்ன உலகு ஆள் மன்னவ 85
தொல் இயல் புலவ நல் யாழ் பாண
மாலை செல்வ தோலா கோட்ட
பொலம் புரி ஆடை வலம்புரி வண்ண
பருதி வலவ பொரு திறல் மல்ல
திருவின் கணவ பெரு விறல் மள்ள 90
மா நிலம் இயலா முதல் முறை அமையத்து
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரை பொகுட்டு நின் நேமி நிழலே
மறதியுடையார் உன்னைச் சிறப்பித்துக் கூறியவை பொய்யுரைகள், நீ அப்படிப்பட்டவன்!
முதலிலும், இடையிலும், இறுதியிலும், முறையே படைப்பு, காத்தல், அழித்தல் என்ற தொழில்களைச் செய்யும்பொருட்டு
நீ பிறவாத பிறப்பு இல்லை, உன்னைப் பிறப்பிக்கும்படி செய்தோரும் இல்லை;
பறக்காத பூவாகிய காயாம்பூவின் நிறத்தவனே!
உன் திருவருளே வெண்கொற்றக்குடையாக, அறமே செங்கோலாக,
வேறு இரண்டாவதான குடைநிழல் படாதபடி, மூன்று கூறுகளான இருபத்தியொரு உலகங்களும்
உனது ஒரு குடை நிழலின் கீழ் ஆக்கிய இனிய காவலினை உடையவன் நீ!
பாழ் என்ற புருடதத்துவமும், கால் என்ற ஐந்து பூதங்களும், பாகு என்ற தொழிற்கருவிகள் ஐந்தும், ஒன்றாவதான ஓசையும்,
இரண்டாவதான தொடுவுணர்ச்சியாகிய ஊறும், மூன்றாவதான ஒளியும், நான்காவதான சுவையும், ஐந்தாவதான நாற்றமும்,
ஆறாவதான மனத்தைச் சேர்த்த அறிகருவிகள் ஆறும், ஏழாவதான ஆணவமும், எட்டாவதான புத்தியும், ஒன்பதாவதான மூலப்பகுதியும்,
நால்வகை ஊழியின்போதும், இந்த எண்களால் கூறப்படும் பெருமையினையுடையவனே!
சிவந்த கண்ணும் கரிய மேனியும் உடைய வாசுதேவனே! கரிய கண்ணும் வெள்ளை உடம்பும் உடைய பலதேவனே!
பொன்னிறக் கண்ணையும் பச்சைமேனியும் உடைய பிரத்தியும்நனே! பசிய கண்ணையுடைய திருமாலே!
ஆய்ச்சியர்க்கு இடமும் வலமும் ஆடியவனே! குடக் கூத்தாடுபவனே! கலப்பைப் படை உள்ளவனே! கோவலனே காவலனே!
காணப்படாத இயல்பினனே! அன்பரின் நீங்காத நினைவிலுள்ளவனே!
அழியாத நிலைபேறுடையவனே! உலகினை ஆளும் மன்னவனே!
தொன்மை இயல்புகளை அறிந்தவனே! நல்ல முறையில் யாழிசைக்கும் பாணனே!
துளசி மாலை அணிந்த செல்வனே! தோல்வியினை அறியாத சங்கினை உடையவனே!
பொன்னாற் செய்த ஆடையினையும், வலம்புரிச் சங்கைப் போன்ற நிறத்தையும் கொண்டவனே!
சக்கரத்தை வலக்கையில் ஏந்தியிருப்பவனே! மற்போரில் ஆற்றலுள்ள மல்லனே!
திருமகளின் கணவனே! பேராற்றல் கொண்ட மள்ளனே!
இந்தப் பெரிய உலகம் இயங்காத ஆதி ஊழியின் காலத்தின்
அச்சந்தரும் அந்த வெள்ளத்து நடுவில் தோன்றிய,
வேதத்தை உரைக்கும் மகனாகிய பிரம்மனைக் கொண்டு மலர்ந்த,
உந்தித் தாமரைப் பொகுட்டை உடையவனே! உன் சக்கரப்படையே உலகுக்கு நிழல் ஆவது.
மறு இல் துறக்கத்து அமரர்_செல்வன்-தன்
பொறி வரி கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய் 70 நின் குணம் எதிர்கொண்டோர்
397
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும் புள்ளும்
உயர் சினை குடம்பை குரல் தோற்றினவே
பொய்கையும் போது கண் விழித்தன பைபய
சுடரும் சுருங்கின்று ஒளியே பாடு எழுந்து
இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப 5
இரவு புறங்கண்ட காலை தோன்றி
எஃகு இருள் அகற்றும் ஏம பாசறை
வைகறை அரவம் கேளியர் பல கோள்
செய் தார் மார்ப எழு-மதி துயில் என
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி 10
நெடும் கடை தோன்றியேனே அது நயந்து
உள்ளி வந்த பரிசிலன் இவன் என
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு
மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல்
பாம்பு உரித்து அன்ன வான் பூ கலிங்கமொடு 15
மாரி அன்ன வண்மையின் சொரிந்து
வேனில் அன்ன என் வெப்பு நீங்க
அரும் கலம் நல்கியோனே என்றும்
செறுவில் பூத்த சே இதழ் தாமரை
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த 20
தீயொடு விளங்கும் நாடன் வாய் வாள்
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்
எறி திரை பெரும் கடல் இறுதி கண் செலினும்
தெறு கதிர் கனலி தென் திசை தோன்றினும்
என் என்று அஞ்சலம் யாமே வென் வெல் 25
அரும் சமம் கடக்கும் ஆற்றல் அவன்
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே
# 397
வெள்ளி என்னும் கோளும் பெரிய வானத்தில் எழுந்தது; பறவைகளும்
மரங்களின் உயர்ந்த கிளைகளில் இருந்த தங்கள் கூடுகளிலிருந்து குரல் எழுப்பி ஒலித்தன;
நீர்நிலைகளில் குவிந்திருந்த தாமரை மொட்டுகள் கண் விழிப்பது போல் மலர்ந்தன; மெல்லமெல்ல
திங்களின் ஒளி குறையத் தொடங்கியது; ஒலித்தலுக்குத் தயாராகி,
முழங்குகின்ற ஓசையையுடைய முரசுகளுடன், வலம்புரிச் சங்குகள் ஒலிக்க,
இரவுப் பொழுதை விரட்டியடித்த காலைப் பொழுது தோன்றும் நேரத்தில்,
எஞ்சி இருந்த குறைவான இருளைப் போக்கும் காவலுள்ள பாசறையில் எழும்
விடியற்கால ஒலிகளைக் கேட்பாயாக; பலவகையான பூங்கொத்துக்களால்
தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த மார்பையுடையவனே, துயிலெழுவாயாக என்று
தெளிந்த கண்ணையுடைய பெரிய தடாரிப் பறையை ஒலிக்குமாறு அறைந்து
அரண்மனையின் நெடிய முற்றத்தில் நின்றேன்; நான் வந்ததை விரும்பி,
'என்னை நினைத்து வந்த பரிசிலன் இவன்' என்று கூறி,
நெய்யில் பொரித்ததும் தாளிப்பும் உடையதுமான பெரிய சூட்டிறைச்சித் துண்டுகளையும்,
மணி பதித்த பாத்திரத்தில் மணம் கமழும் கள்ளின் தெளிவையும் அளித்தான்;
பாம்பின் தோல் போன்ற மென்மையானதும் சிறந்த பூ வேலைப்பாடு அமைந்ததுமான உடையுடன்
மழை போன்ற ஈகைத்திறத்தால் வாரி வழங்கி,
வேனில் போன்ற என் வறுமைத் துன்பம் நீங்குமாறு,
அரிய அணிகலன்களை அளித்தான்; எப்போதும்
வயல்களில் பூத்த சிவந்த இதழ்களைக் கொண்ட தாமரை மலரானது,
அறுவகைத் தொழில்களைச் செய்யும் அந்தணர்கள் அறத்தை விரும்பி வளர்க்கும்
தீப்போல விளங்கும் நாட்டையுடைவனும், குறிதவறாத வாட்படையோடு சென்று
வெற்றி பெற்ற தீவுகளிலிருந்து பெற்ற பொன்னாலான அணிகலன்களை உடையவனுமாகிய வளவன்,
மோதும் அலைகளையுடைய பெரிய கடல் வறட்சியுறும் முடிவுக் காலமே வந்தாலும்,
வெப்பத்தைத் தரும் கதிரவன் கிழக்குத் திசை மாறித் தெற்கே தோன்றினாலும்,
'என்ன செய்வது?' என்று நாங்கள் அஞ்ச மாட்டோம்; வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி,
அரிய போர் செய்யும் ஆற்றல் உடையவனின்
நன்கு செய்யப்பட்ட கழல்களை அணிந்த வலிமைமிக்க அடிகளின் குளிர்ந்த நிழலில் இருப்பதால்,
362 சிறுவெண்டேரையார்
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த
மதி உறழ் ஆரம் மார்பில் புரள
பலி பெறு முரசம் பாசறை சிலைப்ப
பொழில்_அகம் பரந்த பெரும் செய் ஆடவர்
செரு புகன்று எடுக்கும் விசய வெண் கொடி 5
அணங்கு உருத்து அன்ன கணம்_கொள் தானை
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின்
ஆ குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின்
அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின் 10
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ
கை பெய்த நீர் கடல் பரப்ப
ஆம் இருந்த அடை நல்கி
சோறு கொடுத்து மிக பெரிதும்
வீறு சால் நன் கலம் வீசி நன்றும் 15
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின்
வாய் வன் காக்கை கூகையொடு கூடி
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல் என்று இல் வயின் பெயர மெல்ல 20
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் செல்-மார் உயர்ந்தோர் நாட்டே
# 362 சிறுவெண்டேரையார்
கதிரவனைப்போல் ஒளியுடன் திகழும் ஆராய்ந்தெடுத்த மணிகள் பதித்த,
பிறைமதி போன்ற வளைந்த மாலை மார்பில் தவழ,
பலியூட்டப்பட்ட முரசு பாசறையில் ஒலிக்க,
பொழிலின் இடமெல்லாம் பரந்து நின்று, பெரிய வீரச் செயல்களைச் செய்யும் ஆடவர்,
போரை விரும்பி, உயர்த்திய வெற்றியையுடைய வெண்மையான கொடியை ஏந்தி,
வருத்தும் தெய்வம் உருவெடுத்து வந்தது போலக் கூட்டமாக வந்த சேனை
கூற்றுவனைப்போல் எவராலும் எதிர்த்தற்கு அரிய வலிமையுடன்,
பகைவரைத் தாக்குதற்கு அவர்கள் எழுப்பும் ஒலியைக் கேட்பீராக. அந்தணர்களே!
நான்மறைகளில் இதைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை, இப்போர் அருளின் அடிப்படையில் செய்யப்படாததால்;
அறநூல்களிலும் கூறப்படவில்லை, இது பொருள்பற்றிய செயலாகையால்;
நிலையாமையைப் பற்றிய தெளிவின்மை நீங்கி, தெளிவின்மை காரணமான மயக்கத்தையும் போக்கி
அந்தணர்களுக்குக் கொடையளிக்கும் பொழுது அவர்கள் கையில் வார்த்த நீர், கடல்வரை ஓட,
நீர்வளம் மிகுந்த மருதநிலத்து ஊர்களைக் கொடுத்து,
இரவலர்களுக்கு மிகப் பெரிதும் சோறு வழங்கி,
பரிசிலர்களுக்குப் பெருமைக்குரிய நல்ல அணிகலன்களைப் பெருமளவில் கொடுத்து,
சிறிய வெண்ணிற எலும்புகள் கிடக்கும் நெடிய வெண்மையான களர் நிலத்தில்
வலிய வாயையுடைய காக்கை கூகையுடன் கூடிப்
பகற்பொழுதிலும் கூவும் அகன்ற இடத்தில்,
சுடுகாடு இருக்குமிடம் தெரியாதபடி செறிந்த ஆரவாரம் மிக்க சுற்றத்தார் நிறைந்திருக்க,
இனி அங்குத் தனக்கு இடமில்லை என்று வீட்டிலிருந்து மெல்ல நீங்கக் கருதி,
உலகம் சிறிதாதலால் இங்கு இனி இயங்குவதற்கு அஞ்சி,
விண்ணுலகுக்குத் தன் புகழுடம்புடன் செல்வதற்காகப் போரிடுகின்றனர்.
224 கருங்குழல் ஆதனார்
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி
இரும் பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்
அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து
முறை நற்கு அறியுநர் முன் உற புகழ்ந்த 5
தூ இயல் கொள்கை துகள் அறு மகளிரொடு
பருதி உருவின் பல் படை புரிசைஎருவை நுகர்ச்சி யூப நெடும் தூண்
வேத வேள்வி தொழில் முடித்ததூஉம்
அறிந்தோன் மன்ற அறிவு உடையாளன் 10
இறந்தோன் தானே அளித்து இ உலகம்
அருவி மாறி அஞ்சுவர கருகி
பெரு வறம் கூர்ந்த வேனில் காலை
பசித்த ஆயத்து பயன் நிரை தரும்-மார்
பூ வாள் கோவலர் பூ உடன் உதிர 15
கொய்து கட்டு அழித்த வேங்கையின்
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே
224 கருங்குழல் ஆதனார்
பகைவர்களின் அரண்களை மதியாது, அவற்றைப் போரில் அழித்ததுவும்,
துணையாகக் கூடிய இனத்துடன் சேர்ந்து, குடிப்பதற்கு மதுவைக் குடம் குடமாக அளித்து,
பாணர்களின் பெரிய சுற்றமாகிய கூட்டத்தைப் பாதுகாத்ததுவும்,
அறத்தை முழுமையாகக் கற்ற சான்றோர்களின் சிறந்த அவையில்
வழிமுறைளை நன்கு அறிந்தவர்கள் முன்னின்று பாராட்டிய
தூய்மையான இயல்பும், கற்பொழுக்கமாகிய கொள்கையுமுடைய குற்றமற்ற குல மகளிரோடு
வட்டவடிவமான பல மதில்களால் சூழப்பட்ட வேள்விச் சாலையுள்,
பருந்து விழுங்குவதுபோல் செய்யப்பட்ட இடத்து நாட்டிய வேள்வித் தூணாகிய நீண்ட கம்பத்து,
வேதத்தால் சொல்லப்பட்ட வேள்வியைச் செய்து முடித்ததுவுமாகிய.
இத்தகைய செயல்களின் பயனை நிச்சயமாக அறிந்த அறிவுடையோன்
இறந்தான்; ஆகவே இவ்வுலகம் இரங்கத் தக்கது;
அருவியில் நீர் குறைந்து, உலகத்தார் அஞ்சும்படி தீய்ந்து
பெரும் வறட்சி மிகுந்த வேனிற்காலத்தில்
பசியால் வாடும் பசுக்களாகிய பயன்தரும் கூட்டத்தைப் பாதுகாப்பதற்காக,
கூர்மையான கொடுவாளால் இடையர்கள் இலைகளும் பூக்களும் உதிரக்
கொய்து தழைச்செறிவை அழித்த வேங்கை மரத்தைப் போல்
மெல்லிய இயல்புடைய மனைவியர் தங்கள் அணிகலன்களைக் களைந்தனர்.
166 ஆவூர் மூலம் கிழார்
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை
முது முதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈர்_இரண்டின்
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்
இகல் கண்டோர் மிகல் சாய்-மார் 5
மெய் அன்ன பொய் உணர்ந்து
பொய் ஓராது மெய் கொளீஇ
மூ_ஏழ் துறையும் முட்டு இன்று போகிய
உரை சால் சிறப்பின் உரவோர் மருக
வினைக்கு வேண்டி நீ பூண்ட 10
புல புல்வாய் கலை பச்சை
சுவல் பூண் ஞான் மிசை பொலிய
மறம் கடிந்த அரும் கற்பின்
அறம் புகழ்ந்த வலை சூடி
சிறு நுதல் பேர் அகல் அல்குல் 15
சில சொல்லின் பல கூந்தல் நின்
நிலைக்கு ஒத்த நின் துணை துணைவியர்
தமக்கு அமைந்த தொழில் கேட்ப
காடு என்றா நாடு என்று ஆங்கு
ஈர்_ஏழின் இடம் முட்டாது 20
நீர் நாண நெய் வழங்கியும்
எண் நாண பல வேட்டும்
மண் நாண புகழ் பரப்பியும்
அரும் கடி பெரும் காலை
விருந்து உற்ற நின் திருந்து ஏந்து நிலை 25
என்றும் காண்க தில் அம்ம யாமே குடாஅது
பொன் படு நெடு வரை புயல்_ஏறு சிலைப்பின்
பூ விரி புது நீர் காவிரி புரக்கும்
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண்
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம் 30
செல்வல் அத்தை யானே செல்லாது
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை
கழை வளர் இமயம் போல
நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானே
# 166 ஆவூர் மூலம் கிழார்
நன்கு ஆராயப்பட்ட மிக நீண்ட சடையினையுடைய
முதிய இறைவனது வார்த்தைகளைவிட்டு விலகாமல்
அறம் ஒன்றையே சார்ந்து, நான்கு பகுதி உடையதாகி
ஆறு அங்கங்களாலும் உணரப்பட்ட ஒரு பழைய நூலாகிய வேதத்துக்கு
மாறுபட்டவைகளைக் கண்டோரின் செருக்கை அழிக்க விரும்பி
அவரது உண்மை போன்ற பொய்யை உணர்ந்து
அப்பொய்யை உண்மை என்று கருதாமல் உண்மைப் பொருளை அவர்களுக்கு ஏற்பச் சொல்லி
இருபத்தொரு வேள்வித்துறைகளையும் குறையில்லாமல் செய்து முடித்த
புகழ் நிறைந்த சிறப்பையுடைய அறிவுடையோர் மரபில் வந்தவனே!
வேள்வித் தொழிலுக்காக நீ போர்த்த
காட்டில் வாழும் கலைமானின் தோல்
நீ தோளின் மேல் அணிந்திருக்கும் பூணூலின் மேல் பொலிவுற்று விளங்க,
அறமற்றவைகளைக் கடிந்து நீக்கிய பெறுவதற்கரிய கற்பினையும்
அறநூல்கள் புகழ்கின்ற, யாகபத்தினிகள் நெற்றியில் அணியும் அணியான சாலகத்தைச் சூடி
சிறிய நெற்றியினையும், பெரிய அகன்ற அல்குலையும்
சிறிதளவான பேச்சையும், நிறைந்த கூந்தலினையும் உடைய உன்
நிலைக்கு மனமொத்த உன் துணையாகிய மனைவிமார்
தத்தமக்கு அமைந்த ஏவல் தொழிலைக் கேட்டுச் செய்ய,
காடோ, நாடோ அந்த அந்த இடத்தில்
காடென்றால் காட்டுப்பசு ஏழுடனும், நாடென்றால் நாட்டுப்பசு ஏழுடனும் குறையே இல்லாமல்
தண்ணீரைப்போல நெய்யை வழங்கியும்,
எண்ணிறந்த பல வேள்விகளைச் செய்தும்
மண் தாங்காத புகழ் பரப்பியும்
பெறுதற்கரிய விளக்கமுற்ற வேள்வி முடிந்த காலத்தில்
விருந்தினர்க்கு விருந்து செய்த உன் திருத்தமான மேம்பட்ட நிலையை
யாம் இன்றுபோல் எந்நாளும் காண்போமாக, மேற்கில்
பொன் விளையும் உயர்ந்த குடகு மலையில் மேகங்களின் இடி முழங்கினால்
பூக்கள் பரந்த புது நீரையுடைய காவிரி காக்கும்
குளிர்ந்த நீருடைய விளைநிலம் கொண்ட எங்கள் ஊரில்
உண்பன உண்டும், தின்பன தின்றும், ஏறுவனவற்றில் ஏறியும் கொண்டாடுவதற்காகச்
செல்கிறேன் நான், நீ இறவாதிருந்து
மேகங்கள் அண்ணாந்துபார்க்கும் உயர்ந்த நீண்ட மலையான
மூங்கில் வளரும் இமயம் போல
நீ நிலைபெற்று வாழ்வாயாக, இந்த நிலத்தின் மேல்
93 ஔவையார்புறநானூறு
திண் பிணி முரசம் இழுமென முழங்க
சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்
தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர்
நோய்_பால் விளிந்த யாக்கை தழீஇ 5
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார்
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி
மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த
நீள் கழல் மறவர் செல்வு_உழி செல்க என 10
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து
அண்ணல் யானை அடு_களத்து ஒழிய
அரும் சமம் ததைய நூறி நீ
பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே 15
# 93 ஔவையார்
திண்ணிதாகப் பிணிக்கப்பட்ட முரசம் ‘திடும்' என முழங்கப்
புறப்பட்டுப்போய் போரில் வெற்றிபெறுவதற்கு இனிப் பகைவர் ஏது? உன்னை எதிர்த்து வந்தவர்கள்
உனது முன்னணிப்படையினையும் தாங்கமாட்டாதவராய், சிதறி
ஓடத்தொடங்கிய பெருமை இல்லாத மன்னர்கள்,
நோயினால் இறக்கும் உடம்பைப் பெற்று
தமது ஆசையை மறந்து, அவர்கள் வாளால் மடியாத குற்றம் அவர்களை விட்டு நீங்குமாறு
அறத்தை விரும்பிய கொள்கைகளையுடைய நான்கு வேதங்களையுடைய அந்தணர்
நன்கு வளர்ந்த தருப்பைப்புல்லைப் பரப்பி, அதில் அவரைக் கிடத்தி,
தனது வீரமே பற்றுக்கோடாக நல்ல போரில் மடிந்த
சிறந்த வீரக்கழலை அணிந்த மறவர் செல்லும் உலகத்திற்குச் செல்க என்று
வாளால் அறுக்கப்பட்டு அடக்கம்செய்யப்படுவதிலிருந்து தப்பித்தனர்,
வரியையுடைய வண்டுகள் ஒலிக்கும் வாய்க்குள் வந்து புகுகின்ற மதத்தினையுடைய
தலைமை பொருந்திய யானை போர்க்களத்தில் மடிய
தாங்குவதற்கு அரிய போரில் சிதறி ஓடும்படி வெட்டிக்கொன்று நீ
பெருந்தகையே! விழுப்புண் பட்டு நின்றதால் - (போரில் வெற்றிபெறுவதற்கு இனிப் பகைவர் ஏது?)
58 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
நீயே தண் புனல் காவிரி கிழவனை இவனே
முழு_முதல் தொலைந்த கோளி ஆலத்து
கொழு நிழல் நெடும் சினை வீழ் பொறுத்து ஆங்கு
தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாது
நல் இசை முது குடி நடுக்கு அற தழீஇ 5
இளையது ஆயினும் கிளை அரா எறியும்
அரு நரை உருமின் பொருநரை பொறாஅ
செரு மாண் பஞ்சவர் ஏறே நீயே
அறம் துஞ்சு உறந்தை பொருநனை இவனே
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என 10
வரைய சாந்தமும் திரைய முத்தமும்
இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும்
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே
பால் நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல் நிற உருவின் நேமியோனும் என்று 15
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இ நீர் ஆகலின் இனியவும் உளவோ
இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவே
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும் 20
உடன் நிலை திரியீர் ஆயின் இமிழ் திரை
பௌவம் உடுத்த இ பயம் கெழு மா நிலம்
கையகப்படுவது பொய் ஆகாதே
அதனால் நல்ல போலவும் நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறியர் போலவும் 25
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில்_மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்க நும் புணர்ச்சி வென்று_வென்று
அடு_களத்து உயர்க நும் வேலே கொடு_வரி
கோள்_மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி 30
நெடு நீர் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடே
# 58 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
சோழனாகிய நீதான், குளிர்ந்த நீரையுடைய காவிரிக்கு உரியவன், பாண்டியனாகிய இவனோ
பருத்த அடிமரம் இற்றுப்போன கோளி என்னும் ஆலமரத்தின்
அடர்ந்த நிழல் தரும் நெடிய கிளைகளை விழுதுகள் தாங்கிக்கொள்வது போன்று
தனக்கு முன்னுள்ளோர் இறந்துபட, தான் சோர்ந்துபோகாமல்
நல்ல புகழ்பெற்ற தன் பழைய குடி தடுமாறாதபடி அணைத்து,
தான் சிறியதாய் இருந்தாலும் கூட்டத்துடன் பாம்பைக் கொல்லும்
பொறுப்பதற்கு அரிய வெண்மையுருக்கொண்ட இடியினைப் போல, பகைவரைக் காணப் பொறுக்காத
போரில் சிறந்த பாண்டியர் குடியில் காளை போன்றவன்; நீதான்
அறம் வாழும் உறையூர் அரசன்; இவனோ
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிதில் கிடைக்கூடியது என்று எண்ணி,
எளிதில் கிடைப்பதல்லாத மலையின் சந்தனமும், கடலின் முத்தும் என்ற இவற்றின்
பெருமையை ஒலிக்கும் குரலையுடைய முரசம் மூன்றுடனே ஆளுகின்ற
தமிழ் நிலவும் மதுரையின் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன்;
பால் போன்ற நிறத்தையுடைய பனைக்கொடியோனாகிய பலராமனும்,
நீல நிற மேனியைக்கொண்ட சக்கரத்தையுடைய திருமாலும் என்ற
இரண்டு பெரும் தெய்வங்களும் ஒன்றாகச் சேர்ந்து நின்றதைப் போல
அச்சம் விளைவிக்கும் உங்களின் பெருமை மிக்க தோற்றத்துடன், உள்ளத்தை நடுக்கும் அச்சம் வர விளங்கி
இத்தன்மையுடையவராக நீங்கள் விளங்கினால் இதைக்காட்டிலும் இனியது வேறு உண்டோ?
இன்னமும் கேளுங்கள், உம் புகழ் நெடுங்காலம் வாழ்ந்திருக்கட்டும்,
உமக்குள் ஒருவர் ஒருவர்க்கு உதவிசெய்யுங்கள், இருவரும்
ஒன்றுபட்டிருக்கும் இந்நிலையிலிருந்து மாறுபடாமல் இருப்பீர்களென்றால் ஒலிக்கும் அலைகளையுடைய
பெருங்கடல்கள் சூழ்ந்த இந்தப் பயன் பொருந்திய பெரிய நிலவுலகம்
உங்கள் கைவசமிருக்கும் என்பது பொய்யாகாது;
அதனால், நல்லவை போன்றும், நியாயமானவை போன்றும்,
முன்னோர் காட்டிச்சென்ற முறைகளில் நடப்பவர் போன்றும்,
அன்புகொண்ட உள்ளங்களையுடைய உமக்கு இடையே புகுந்து பிளவை ஏற்படுத்த அல்லாந்துதிரியும்
அயலாருடைய அற்பமொழிகளை ஏற்றுக்கொள்ளாமல்
இன்று இருப்பதைப் போலவே இருக்கட்டும் உங்கள் நட்பு, மேலும் மேலும் வென்று
போர்க்களத்தில் உயர்ந்துவிளங்கட்டும் உமது வேல்கள், வளைந்த கோடுகளையுடைய
புலிச் சின்னத்தைச் செதுக்கிய தொலைவிடத்துக்கும் தெரியுமாறு கட்டிவைக்கப்பட்ட இலாஞ்சனை
நெடிய நீரில் வாழும் கெண்டைமீன் சின்னத்துடன் பொறிக்கப்பட்ட
சிகரங்களை உடையன ஆகுக பிறர் குன்றுகள் பொருந்திய நாடுகள்.
__________________
Page 1 of 1 sorted by
தமிழர் சமயம் -> திருவள்ளுவமாலை -> அந்தணர் என்போர் அறவோர் என்பதில் வள்ளுவர் கருத்தும்; நவீனர் வள்ளுவத்தை சிறுமை செய்யும் மோசடிக