தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான்மறை


Guru

Status: Offline
Posts: 1049
Date:
நான்மறை
Permalink  
 


நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் - புறம் 362/9
# 362 சிறுவெண்டேரையார்
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த
மதி உறழ் ஆரம் மார்பில் புரள
பலி பெறு முரசம் பாசறை சிலைப்ப
பொழில்_அகம் பரந்த பெரும் செய் ஆடவர்
செரு புகன்று எடுக்கும் விசய வெண் கொடி		5
அணங்கு உருத்து அன்ன கணம்_கொள் தானை
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின்
ஆ குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின்
அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின்		10
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ
கை பெய்த நீர் கடல் பரப்ப
ஆம் இருந்த அடை நல்கி
சோறு கொடுத்து மிக பெரிதும்
வீறு சால் நன் கலம் வீசி நன்றும்			15
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின்
வாய் வன் காக்கை கூகையொடு கூடி
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல் என்று இல் வயின் பெயர மெல்ல		20
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் செல்-மார் உயர்ந்தோர் நாட்டே
62 சிறுவெண்டேரையார்
கதிரவனைப்போல் ஒளியுடன் திகழும் ஆராய்ந்தெடுத்த மணிகள் பதித்த,
பிறைமதி போன்ற வளைந்த மாலை மார்பில் தவழ,
பலியூட்டப்பட்ட முரசு பாசறையில் ஒலிக்க,
பொழிலின் இடமெல்லாம் பரந்து நின்று, பெரிய வீரச் செயல்களைச் செய்யும் ஆடவர்,
போரை விரும்பி, உயர்த்திய வெற்றியையுடைய வெண்மையான கொடியை ஏந்தி,
வருத்தும் தெய்வம் உருவெடுத்து வந்தது போலக் கூட்டமாக வந்த சேனை
கூற்றுவனைப்போல் எவராலும் எதிர்த்தற்கு அரிய வலிமையுடன்,
பகைவரைத் தாக்குதற்கு அவர்கள் எழுப்பும் ஒலியைக் கேட்பீராக. அந்தணர்களே!
நான்மறைகளில் இதைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை, இப்போர் அருளின் அடிப்படையில் செய்யப்படாததால்;
அறநூல்களிலும் கூறப்படவில்லை, இது பொருள்பற்றிய செயலாகையால்;
நிலையாமையைப் பற்றிய தெளிவின்மை நீங்கி, தெளிவின்மை காரணமான மயக்கத்தையும் போக்கி
அந்தணர்களுக்குக் கொடையளிக்கும் பொழுது அவர்கள் கையில் வார்த்த நீர், கடல்வரை ஓட,
நீர்வளம் மிகுந்த மருதநிலத்து ஊர்களைக் கொடுத்து, 
இரவலர்களுக்கு மிகப் பெரிதும் சோறு வழங்கி,
பரிசிலர்களுக்குப் பெருமைக்குரிய நல்ல அணிகலன்களைப் பெருமளவில் கொடுத்து,
சிறிய வெண்ணிற எலும்புகள் கிடக்கும் நெடிய வெண்மையான களர் நிலத்தில்
வலிய வாயையுடைய காக்கை கூகையுடன் கூடிப்
பகற்பொழுதிலும் கூவும் அகன்ற இடத்தில்,
சுடுகாடு இருக்குமிடம் தெரியாதபடி செறிந்த ஆரவாரம் மிக்க சுற்றத்தார் நிறைந்திருக்க,
இனி அங்குத் தனக்கு இடமில்லை என்று வீட்டிலிருந்து மெல்ல நீங்கக் கருதி,
உலகம் சிறிதாதலால் இங்கு இனி இயங்குவதற்கு அஞ்சி,
விண்ணுலகுக்குத் தன் புகழுடம்புடன் செல்வதற்காகப் போரிடுகின்றனர்.

புறநானூறு 362, பாடியவர்: சிறுவெண்தேரையார்திணை: பொதுவியல்துறை: பெருங்காஞ்சி
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த
மதி உறழ் ஆரம் மார்பில் புரளப்,
பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்பப்,
பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி  5
அணங்கு உருத்தன்ன கணங்கொள் தானை,
கூற்றத்து அன்ன மாற்றரு முன்பின்,
தாக் குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறை குறித்தன்று அருளாகாமையின்
அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின்  10
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக்,
கை பெய்த நீர் கடற்பரப்ப
ஆம் இருந்த அடை நல்கிச்
சோறு கொடுத்து மிகப் பெரிதும்
வீறு சால் நன்கலம் வீசி நன்றும்  15
சிறு வெள் என்பின் நெடுவெண்களரின்,
வாய் வன் காக்கை கூகையொடு கூடிப்
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்,
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு,
இல் என்று இல் வயின் பெயர, மெல்ல  20
இடஞ் சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே.

Puranānūru 362, Poet: Siruventhēraiyār, Thinai: Pothuviyal, Thurai: Perunkānji
On his chest sways a garland that looks
like the moon, made with fine gems that resemble
the sun.  Drums that had offerings roar in the war
camp.  Warriors who do great deeds and desire war
have spread around the country, carrying
victorious white flags, looking like fierce gods.

Brahmins!  Listen to the attacking voices, rising
from huge armies, which is like Kootruvan himself,
with strength that cannot be destroyed!
This is not in your four Vedas, since it is not
about righteousness.  It is not in your Vedas since
it is about materialism.  Bewilderment and confusion
ended, he pours water when he hands gifts to Brahmins
and it runs to the sea.  He gave fertile lands, cooked
rice and precious fine gifts.  Since his house is
filled with noisy relatives who hide the existence
of the cremation ground where harsh-mouthed crows
and owls shriek even in broad daylight and small
white bones are spread, he desires to leave from there,
and thinking that there is too little place in this earth,
he fights so that he can reach the world of the higher ones.

Notes:   This is the only poem written by this poet.  It was the tradition for the donor to pour water when giving alms to Brahmins.  Puranānūru 361, 362, 367 and Pathitruppathu 64 have references to this.

Meanings:  ஞாயிற்று அன்ன- like the sun, ஆய் மணி மிடைந்த – set with fine gems, மதி உறழ் – like the moon (உறழ் – உவம உருபு, a comparison word), ஆரம் மார்பில் புரள – a garland swaying/moving on his chest, பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்ப – drums that have had offerings roar in the war camp, பொழிலகம் பரந்த – spread all over the country, பெருஞ் செய் ஆடவர் – men who do great deeds, செருப் புகன்று எடுக்கும் – carry desiring war, விசய வெண்கொடி – victorious white flags, அணங்கு உருத்தன்ன – like fearsome gods with great rage, கணங்கொள் தானை – huge army, கூற்றத்து அன்ன – like Kootruvan who is the god of death (கூற்றத்து – கூற்றம், அத்து சாரியை), மாற்றரு முன்பின் – with strength that cannot be ruined, தாக் குரல் – the attacking voices (தாக்குதற்குச் செய்யும் முழக்கம்), காண்பின் அந்தணாளர் – see O Brahmins, நான்மறை குறித்தன்று – this is not mentioned in your four Vedas, அருளாகாமையின் – since it is without grace, அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின் – it is not mentioned since it is about material wealth, மருள் தீர்ந்து – bewilderment ending, மயக்கு ஒரீஇ – confusion ending (ஒரீஇ – சொல்லிசை அளபெடை), கை பெய்த நீர் – water poured on your hands, கடற் பரப்ப – spread to the sea, ஆம் இருந்த அடை நல்கி – gave fertile agricultural lands with water, சோறு கொடுத்து – gave rice/food, மிகப் பெரிதும் – giving very abundantly, வீறு சால் நன்கலம் நன்றும் வீசி – gave greatly precious fine gifts, சிறு வெள் என்பின் – with small white bones, நெடுவெண்களரின் – in the vast white saline wasteland, வாய் வன் காக்கை – crows with harsh mouths, கூகையொடு – with owls, கூடிப் பகலும் கூவும் – together cry even during the day, அகலுள் ஆங்கண் – there, காடு கண் மறைத்த – hiding the cremation grounds, கல்லென் சுற்றமொடு – with loud relatives, இல் என்று இல் வயின் பெயர – considering leaving since there is no place, மெல்ல – slowly, இடஞ் சிறிது ஒதுங்கல் அஞ்சி – fearing to stay since there is little space, உடம்பொடும் – with his body, சென்மார் உயர்ந்தோர் நாட்டே – he fights to go to the land of those who are superior – brave warriors (நாட்டே – ஏகாரம் அசைநிலை, an expletive)

 நான்மறையோர் புகழ் பரப்பியும் - பட் 202


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

நான்மறை முது நூல் முக்கண்_செல்வன் - அகம் 181/16
#181 பாலை பரணர் துன் அரும் கானமும் துணிதல் ஆற்றாய் பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின் என் நிலை உரைமோ நெஞ்சே ஒன்னார் ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ 5 முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு வம்ப புள்ளின் கம்பலை பெரும் தோடு விசும்பு இடை தூர ஆடி மொசிந்து உடன் 10 பூ விரி அகன் துறை கணை விசை கடு நீர் காவிரி பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி எக்கர் இட்ட குப்பை வெண் மணல் வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை 15 நான்மறை முது நூல் முக்கண்_செல்வன் ஆலமுற்றம் கவின் பெற தைஇய பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் கை செய் பாவை துறை-கண் இறுக்கும் மகர நெற்றி வான் தோய் புரிசை 20 சிகரம் தோன்றா சேண் உயர் நல் இல் புகாஅர் நன் நாட்டதுவே பகாஅர் பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் பணை தகை தடைஇய காண்பு இன் மென் தோள் அணங்கு சால் அரிவை இருந்த 25 மணம் கமழ் மறுகின் மணல் பெரும் குன்றே
#181 பாலை பரணர்
செல்லுவதற்குக் கடினமான காட்டையும் கடக்கத் துணியமாட்டாய்!
எனக்குப் பின்னே நின்று வீட்டுக்குத் திரும்பிச் செல்ல நினைத்தாயென்றால்
நீ மட்டும் போய் அவளிடம் எனது இந்த நிலைமையைக் கூறு! நெஞ்சமே! பகைவர்
பாதுகாக்கும் அரண்களை வென்று கடந்த மிகுந்த பெரிய சேனையையுடைய
போரில் கொல்வதில் வல்ல மிஞிலி என்பவனுடன், போர்க்களத்தில் வேலைச் செலுத்தி,
முருகனைப் போன்ற வலிமையுடன் குருதியால் போர்க்களம் சிவக்கப் போரிட்டு
ஆய் எயினன் என்பவன் இறந்துபட, ஞாயிற்றின்
ஒளிவிடும் கதிர்களின் வெப்பம் அவன் உடலில்படாதபடி மறைய, ஒரே தன்மையாக
புதிய பறவைகளின் ஒலிமிகுந்த பெரும் கூட்டம்
விசும்பிடம் மறையும்படி வட்டமிட்டு ஒன்றுகூடி -
பூக்கள் விரிந்த அகன்ற துறையினில் அம்பு போன்ற விசையுடன் விரைந்து வரும் நீரானது
காவிரியாகிய பெரிய ஆற்றின் நுண்மணலை வாரிக் கொணர்ந்து வந்து குவித்து
மேடாக்கிய குவியலான வெண் மணலையும்,
புது வருவாயை உடைய ஊர்களையும் உடைய செல்வம் மிக்க சோழ வேந்தரால் பாதுகாக்கப்படும்,
உலகமெல்லாம் பரவும் நன்மை பொருந்திய நற்புகழையுடைய
நான்கு வேதங்களான பழைய நூலை அருளிய முக்கண்ணையுடைய பரமனின்
ஆலமுற்றம் என்னுமிடத்தில் அழகுபெற உருவாக்கப்பட்ட
பொய்கையைச் சூழ்ந்த பொழிலினில், இல்லத்திலுள்ள பேதை மகளிர்
கையாலே செய்த மணல்பொம்மையையுடைய துறையினில் வந்து தங்குகின்ற -
மகரக் கொடியினை உச்சியில் கொண்ட, வானை உரசிக்கொண்டு நிற்கும் கோட்டை மதிலையும்,
உச்சிப்பகுதி அறியப்படாதபடி மிகவும் தூரமாக உயர்ந்து நிற்கும் நல்ல மாடங்களையும்
புகார் என்னும் பட்டினத்தையுடைய நல்ல சோழநாட்டில் உள்ளதாகும் - விற்பவர்களின்
நறுமணப் பண்டங்களின் மணங்கள் மணக்கின்ற, வண்டுகள் மொய்க்கும் கூந்தலினையும்
மூங்கிலைப் போன்ற அழகையுடையதாய் வளைந்த, காண்பதற்கு இனிய மெல்லிய தோளினையும் உடைய
நம்மைப் பிரிந்ததால் துன்பம் மிக்கு இருக்கும் நம் காதலி அமர்ந்திருந்த
மலர் மணம் கமழும் தெருக்களையுடைய மணலையுடைய பெரிய குன்றம் - (புகார் நன் நாட்டதுவே)


துன் அருங்கானமும் துணிதல் ஆற்றாய்,
பின் நின்று பெயரச் சூழ்ந்தனை ஆயின்,
என் நிலை உரைமோ நெஞ்சே, ஒன்னார்
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந்தானை
அடு போர் மிஞிலி செருவிற்கு உடைஇ,  5
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு
விசும்பிடை தூர ஆடி மொசிந்து உடன், 10
பூவிரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க்
காவிரிப் பேர்யாற்று அயிர் கொண்டு ஈண்டி,
எக்கர் இட்ட குப்பை வெண்மணல்
வைப்பின் யாணர் வளங்கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை  15
நான்மறை முதுநூல் முக்கண் செல்வன்
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கை செய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகர நெற்றி வான் தோய் புரிசைச் 20
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
புகாஅர் நல் நாட்டதுவே, பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்,
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென்தோள்,
அணங்கு சால் அரிவை இருந்த  25
மணம் கமழ் மறுகின் மணல் பெருங்குன்றே.

Akanānūru 181, Paranar, Pālai Thinai – What the hero said to his heart
You are not strong enough to go through this
difficult forest!  If you are thinking of leaving,
go and tell her about my situation, my heart!

The very elegant young woman with a five-part
braid that has fragrances of aromatic things sold
by merchants and swarmed by bees, and delicate
curved, bamboo-like arms,
is waiting on a sand hill in Kāviripoompattinam
with streets with forts that touch the sky that
appears like the top side of a fish,
fine houses are tall and their tops cannot be seen,
girls make little sand dolls on the shores of the
huge Kāviri river at nearby Ālamutram of Sivan
with three eyes who gave the ancient four Vedas
that are famous all over the world, where groves
are surrounded by ponds that are beautifully
created, and the Kāviri river rushes like swift
arrows, bringing fine white sand and creating sand
dunes, protected by the mighty Chozha king who
owns rich towns,
and flocks of birds come to rest on the flower-dense,
wide shores, after collectively hovering over, and
protecting with uproar, from the sun, the body of
Āy Eyinan with Murukan-like strength, who fell
battling Mignili who was skilled in battle, who had
a large army, who seized protected forts of enemies,
and the battlefields turned red.

Notes:   வினைமேல் செல்லும் தலைவன் இடைவழியில் தலைவியை நினைத்து மீளக் கருதிய தன் நெஞ்சை இடித்துரைத்து.  மகர நெற்றி (20) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மகர மீனின் முதுகு போன்ற உச்சியையுடைய, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மகரக் கொடியினை உச்சியிற் கொண்ட.  வரலாறு:  மிஞிலி, ஆஅய் எயினன், ஆலமுற்றம், புகாஅர் (காவிரிப்பூம்பட்டினம்), பேர்யாறு (காவிரி).   Akanānūru poems 142, 148, 181 and 208, all written by Paranar, describe a battle where Mignili killed Āy Eyinan, and birds laced their wings together and hovered over his dead body, protecting it.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:   துன் அருங்கானமும் – forest that is difficult to pass (கானமும் – உம் எச்சப்பொருட்டு, அசைநிலையுமாம்), துணிதல் ஆற்றாய் – you are not bold, you are not strong, பின் நின்று – standing behind, பெயரச் சூழ்ந்தனை ஆயின் – if you are thinking about leaving, என் நிலை – my situation, உரைமோ – you tell (மோ – முன்னிலையசை, an expletive of the second person), நெஞ்சே – oh my heart, ஒன்னார் – enemies, ஓம்பு அரண் கடந்த – ruined and won fortresses that are protected, வீங்கு – large, பெருந்தானை – large army, அடு போர் மிஞிலி – Mignili of murderous battles, செருவிற்கு உடைஇ – ruined in battle (உடைஇ – சொல்லிசை அளபெடை), முருகு உறழ் – like Murukan (உறழ் – உவம உருபு, a comparison word), முன்பொடு பொருது – fighting with bravery, களம் சிவப்ப – battlefield becoming red, ஆஅய் எயினன் வீழ்ந்தென – since Āy Eyinan dropped dead (ஆஅய் – இசைநிறை அளபெடை), ஞாயிற்று ஒண் கதிர் – the sun’s bright rays, உருப்பம் புதைய – hiding his body from the heat (உருப்பம் – வெப்பம்), ஓராங்கு – together (ஓராங்கு – ஒருசேர), வம்பப் புள்ளின் கம்பலை – the uproar of new birds, பெருந்தோடு – big flocks, விசும்பிடை – in the sky, தூர ஆடி – flew high, மொசிந்து உடன் – combined together, பூ விரி – flowers blossomed, அகன் துறை – wide shore, கணை விசை – speed of arrows, கடு நீர் – rapidly flowing water, காவிரிப் பேர்யாற்று – of the large Kāviri river, அயிர் கொண்டு – with fine sand, ஈண்டி-  collected, heaped, எக்கர் இட்ட – formed by sand, குப்பை – heaps, வெண்மணல் வைப்பின் – with towns with white sand, யாணர் – wealthy, வளம் கெழு வேந்தர் – king who is prosperous, ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை – fine fame that has spread all over the world, fine fame that has spread all over the land, நான்மறை – the Vedas, முதுநூல் – ancient text, முக்கண் செல்வன் – Sivan with three eyes, ஆலமுற்றம் கவின் பெற – Ālamutram to become beautiful, தைஇய – created (செய்யுளிசை அளபெடை), பொய்கை சூழ்ந்த பொழில் – groves surrounded by ponds, மனை மகளிர் கை செய் பாவை – dolls made by young women at home, துறைக் கண் இறுக்கும் – they stay on the shores, மகர – with fish, நெற்றி – top parts, வான் தோய் – sky touching, புரிசை – fort walls, சிகரம் தோன்றா – unable to see the top, சேண் – far away, உயர் நல் இல் – tall fine houses, புகாஅர் – Kavirpoompattinam (இசை நிறை அளபெடை), நல் நாட்டதுவே – in the fine country, பகாஅர் – merchants (இசைநிறை அளபெடை), பண்டம் நாறும் – fragrance of the things that they sell, வண்டு அடர் ஐம்பால் – five-part braid swarmed by bees, பணைத் தகை – pretty like bamboo, தடைஇய – curved (தட என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை, செய்யுளிசை அளபெடை), காண்பு – to see, இன் மென் தோள் – sweet delicate arms, அணங்கு சால் அரிவை இருந்த – where our greatly beautiful young woman is, மணம் கமழ் மறுகின் – with streets with fragrances, மணல் பெருங்குன்றே – big sand hills (பெருங்குன்றே – ஏகாரம் அசைநிலை, an expletive)



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

# 6 காரிகிழார்
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்
கீழது மு புணர் அடுக்கிய முறை முதல் கட்டின்	5
நீர் நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை_உலகத்தானும் ஆனாது
உருவும் புகழும் ஆகி விரி சீர்
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம்
பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க		10
செய்_வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து
கடல் படை குளிப்ப மண்டி அடர் புகர்
சிறு கண் யானை செவ்விதின் ஏவி
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து
அ எயில் கொண்ட செய்வு_உறு நன் கலம்		15
பரிசில்_மாக்கட்கு வரிசையின் நல்கி
பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே		20
வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே
செலியர் அத்தை நின் வெகுளி வால் இழை
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய	25
தண்டா ஈகை தகை மாண் குடுமி
தண் கதிர் மதியம் போலவும் தெறு சுடர்
ஒண் கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெரும நீ நில மிசையானே

# 6 காரிகிழார்
வடக்கிலிருக்கும் பனி தங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்,
தெற்கிலிருக்கும் அச்சந்தரும் குமரியாற்றின் தெற்கும்,
கிழக்கிலிருக்கும் கரையை மோதுகின்ற சகரரால் தோண்டப்பட்ட கடலின் கிழக்கும்,
மேற்கிலிருக்கும் பழையதாய் முதிர்ந்த பெருங்கடலின் மேற்கும்,
கீழேயிருக்கும், நிலம், வான், சுவர்க்கம் என்ற மூன்றும் சேர்ந்து அடுக்கிய முறையில் முதலாவதான
நீர்நிலையிலிருந்து உயர்ந்து தோன்றும் நிலத்திற்குக் கீழேயும், மேலேயிருக்கும்
ஆனிலையுலகம் எனப்படும் கோ லோகத்திலும் அடங்காத
அச்சமும் புகழும் உன்னுடையதாகி, பெரிய அளவில்
சமமாக ஆராயும் துலாக்கோலின் நடுவூசி போல ஒரு பக்கத்தில்
சாயாது இருப்பாயாக; உன் படை, குடி முதலியன சிறந்துவிளங்கட்டும்;
போர் செய்ய எதிர்த்துவந்த பகைவரின் நாடுகளில்
உனது கடல் போன்ற படை உள்ளே புகுந்து முன்செல்ல, அடர்ந்த புள்ளிகளையும்
சிறிய கண்களையும் உடைய யானைப்படையை தடையின்றி நேரே ஏவி,
பசுமையான விளைநிலப் பக்கத்தையுடைய பல அரிய அரண்களைக் கைப்பற்றி
அந்த அரண்களில் கொள்ளப்பட்ட அழகுபடச் செய்த அணிகலன்களைப்
பரிசிலர்க்கு முறையாக வழங்கி,
தாழ்வதாக நின் வெண்கொற்றக்குடை, முனிவர்களால் துதிக்கப்படும்
முக்கண் செல்வரான சிவபெருமான் கோயிலை வலம்வருவதற்கு;
வணங்குக, பெருமானே உன் மணிமுடி, சிறந்த
வேதங்களை ஓதும் அந்தணர்கள் உன்னை வாழ்த்த எடுத்த கைகளின் முன்னே;
வாடிப்போகட்டும் இறைவனே, உன் தலைமாலை, பகைவரின்
நாடுகளை எரிக்கின்ற மணக்கின்ற புகை தடவிச்செல்வதால்;
தணியட்டும் உன் கோபம், வெண்மையான முத்தாரத்தையுடைய
உன் தேவியரின் சிறுசினம் சேர்ந்த ஒளிமிகு முகத்தின் முன்னே;
இதுவரை வென்ற வெற்றியினால் எழும் இறுமாப்பை வென்று, அவற்றை உன் மனத்துள் அடக்கிய,
குறைவுபடாத கொடைக்குணம் கொண்டு தகுதி மிகுதியும் பெற்ற குடுமியே!
குளிர்ந்த கதிர்களைக் கொண்ட திங்கள் போலவும், சுடுகின்ற தீச்சுவாலைகளைக் கொண்ட
ஒளி பொருந்திய கதிர்களைக் கொண்ட ஞாயிறு போலவும்
நிலைபெறுவாயாக, பெருமானே! நீ இந்த நிலத்தின் மேல்.

புறநானூறு 6, பாடியவர்: காரிகிழார்பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிதிணை: பாடாண்துறை: செவியறிவுறூஉவாழ்த்தியல்
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்,
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்,
கீழது முப்புணர் அடுக்கிய முறை முதற் கட்டின்  5
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத்தானும், ஆனாது
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த்
தெரிகோல் ஞமன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ நிற்றிறம் சிறக்க!  10
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்,
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து,
அவ் எயில் கொண்ட செய்வுறு நன்கலம் 15
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்,
பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே,
இறைஞ்சுக பெரும நின் சென்னி! சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே,  20
வாடுக இறைவ நின் கண்ணி! ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே,
செலியர் அத்தை நின் வெகுளி! வால் இழை
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே,
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய 25
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி,
தண்கதிர் மதியம் போலவும், தெறு சுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய பெரும, நீ நிலமிசையானே!

Puranānūru 6, Poet Kari Kizhār sang to Pandiyan Palyākasālai Muthukudumi Peruvazhuthi, Thinai: Pādān, Thurai: Seviyarivurūu, Vālthiyal
May your great glory and endless fame spread to the north
of the lofty northern Himalayas with snow, south of the fierce
Kumari river of the south, east of the eastern ocean dug out of
the earth that has waves that attack the shores, west of the very
ancient western ocean, in the earth, the lowest tier that rose out
of the ocean, below the land and in the upper world with cows!       

May you be without bias, like the perfect pointer of a balance
that measures large quantities!  May your abilities flourish!
You entered the countries of those who opposed you
in battles, goaded your elephants with dense spots and small
eyes to charge, took many guarded forts with green fields, and
distributed the fine ornaments you seized, according to rank.

May your umbrella bow down when it circumambulates
the temple of Sivan with three eyes who is praised by sages! 
May your head bend down when the Brahmins of the four
Vedas praise you!  May your garland wilt, assaulted by
the smoke of flames you lit in the lands of your enemies!

May your anger vanish when you see your women wearing
pure jewels, their faces bright with the anger of lovers’ quarrels!
O Great Kudumi who gives without limits!  You who have won
everything and never boasts about your victories!
May you live long on this earth forever, like the moon with
cool rays and the glowing sun with bright rays!

Notes:  Puranānūru poems 6, 9, 12, 15 and 64 were written for this king.   This is the only poem written by this poet who came from a town named Kāriyāru.

Meanings:  வடாஅது – in the north, வடக்கின்கண் (இசை நிறை அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), பனிபடு நெடுவரை வடக்கும் – and north of the tall Himalayas with snow, தெனாஅது – in the south, தெற்கின்கண் (இசை நிறை அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), உருகெழு குமரியின் தெற்கும் – and south of fierce Kumari river in the south, குணாஅது – on the east side (இசை நிறை அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), கரை பொரு தொடு கடல் – dug ocean whose waves attack its shores (dug up by the mythological Sakarars – சகரர்), குணக்கும் – also in the east, குடாஅது – in the west, மேற்கில் (இசை நிறை அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் – and in the west of the ancient ocean, கீழது – கீழதாகிய, what is below, முப்புணர் அடுக்கிய – three arranged levels of earth, sky and heaven, முறை முதற் கட்டின் – the first one in the levels, நீர்நிலை நிவப்பின் கீழும் – and below the earth rising out of a body of water, மேலது – above, ஆனிலை உலகத்தானும் – and to the upper world with cows, ஆனாது – not satisfied, உருவும் – causing others to fear, புகழும் ஆகி – and attaining great fame, விரி சீர் – large amounts of material, தெரிகோல் ஞமன் போல – like the perfect pointer stick of a balance (துலாக்கோலின் நாக்கு), ஒரு திறம் பற்றல் இலியரோ – may you not lean on one side (இலியரோ – ஓகாரம் அசைநிலை, an expletive), நிற்றிறம் (நின் திறம், நின்றிறம் நிற்றிறம் என வலிந்து நின்றது) சிறக்க – may your abilities flourish (சிறக்க – வியங்கோள் வினைமுற்று), செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து – in the nations of enemies who opposed you in campaigns (தேஎத்து – இன்னிசை அளபெடை), கடற்படை குளிப்ப மண்டி – entered rapidly with your ocean-like army, அடர்ப் புகர் – dense spots, சிறுகண் யானை – small-eyed elephants, செவ்விதின் ஏவி – ordered them perfectly to attack, ordered them to attack at the right time, பாசவல் படப்பை – fields with green leaves (பாசவல் – பசிய விளைநிலம்), ஆர் எயில் பல தந்து – took many difficult forts, அவ் எயில் கொண்ட செய்வுறு நன்கலம் பரிசின் – the beautifully created precious ornaments that you seized from those forts, மாக்கட்கு வரிசையின் நல்கி – gave to people according to rank, பணியியர் அத்தை நின் குடையே – may you royal umbrella bow down (அத்தை – அசைநிலை, an expletive), முனிவர் முக்கண் செல்வர் நகர் வலஞ்செயற்கே – to go around the temple of god with three eyes who is praised by the sages – Sivan, இறைஞ்சுக பெரும – may it bend down O lord, நின் சென்னி – your head, சிறந்த – great, நான்மறை முனிவர் – Brahmins with their four Vedas, ஏந்து கை எதிரே – in front of their lifted hands, வாடுக இறைவ நின் கண்ணி – may your garland wilt O my lord, ஒன்னார் நாடு சுடு கமழ் புகை எறித்தலானே – due to burning the land of your enemies and causing smoke to spread (எறித்தலானே – ஏகாரம் அசைநிலை, an expletive), செலியர் அத்தை – may it leave (அத்தை – அசைநிலை, an expletive), நின் வெகுளி – your rage, வால் இழை மங்கையர் – women with pure jewels, women with white pearls, துனித்த – with anger, வாள் முகத்து எதிரே – on seeing their bright faces, ஆங்க – அசைநிலை, an expletive, வென்றி எல்லாம் வென்று – won everything, அகத்து அடக்கிய – kept inside, தண்டா ஈகைத் தகை மாண் குடுமி – great Kudumi who gives without limits, தண் கதிர் மதியம் போலவும் – like the moon with cool rays, தெறு சுடர் – hot rays, ஒண் கதிர் ஞாயிறு போலவும் – like the sun with bright rays, மன்னிய – stable, பெரும – O lord, நீ – you, நிலமிசையானே – on this earth (நிலமிசையானே – ஏகாரம் அசைநிலை, an expletive)



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

புறநானூறு 26, பாடியவர்: மாங்குடி மருதனார்
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்திணை: வாகைதுறை: அரச வாகை

# 26 மாங்குடி மருதனார் நளி கடல் இரும் குட்டத்து வளி புடைத்த கலம் போல களிறு சென்று களன் அகற்றவும் களன் அகற்றிய வியல் ஆங்கண் ஒளிறு இலைய எஃகு ஏந்தி 5 அரைசு பட அமர் உழக்கி உரை செல முரசு வௌவி முடி தலை அடுப்பு ஆக புனல் குருதி உலை கொளீஇ தொடி தோள் துடுப்பின் துழந்த வல்சியின் 10 அடு_களம் வேட்ட அடு போர் செழிய ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்றம் ஆக மன்னர் ஏவல் செய்ய மன்னிய வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே 15 நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு மாற்றார் என்னும் பெயர் பெற்று ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே
# 26 மாங்குடி மருதனார்
பெரிய கடலின் மிக ஆழமான இடத்தில்
காற்றால் தள்ளப்பட்ட மரக்கலம் (நீரினைக் கிழித்துக்கொண்டு செல்வது) போல
களிறு உட்புகுந்து (போர்வீரர் சிதறி ஓடுவதால்) போர்க்களத்தை அகலமாக்க,
அவ்வாறு களத்தை அகலச்செய்த பரந்த இடத்தில்
ஒளிர்கின்ற இலையையுடைய வேலை ஏந்தி,
மன்னர் மடிய போரில் கலக்கி,
புகழ் மிகும்படி பகைவரின் முரசுகளைக் கைப்பற்றி,
மணிமுடிதரித்த மன்னர் தலையை அடுப்பாகக் கொண்டு,
நீராய் ஓடும் குருதியை உலைநீராகக் கொண்டு
வீரவளை அணிந்த வீரரின் வெட்டுண்ட தோளையே துடுப்பாகக் கொண்டு துழாவிச் சமைத்த உணவால்
போர்க்களத்தில் களவேள்வி செய்த கொல்லும் போரையுடைய செழியனே!
விசாலமான அறிவையும், ஐம்புலனும் அடங்கிய விரதங்களையும்
நான்கு வேதங்களையும் உடைய அந்தணர் சுற்றியிருக்க
மன்னர்கள் ஏவல் செய்ய. நிலைத்த
வேள்வியைச் செய்துமுடித்த தப்பாத வாளினையுடைய வேந்தனே!
தவம் செய்தவர் உன் பகைவர், உனக்கு
எதிரிகள் என்னும் பெயரினைப் பெற்று
உன்னுடன் போரிட இயலாதவராய் இருந்தாலும் மேலுலகத்தில் சென்று வாழ்கின்றவர் - (தவம் செய்தவர்)

புறநானூறு 26, பாடியவர்: மாங்குடி மருதனார்

பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

திணை: வாகைதுறை: அரச வாகை
நளி கடல் இருங்குட்டத்து
வளி புடைத்த கலம் போலக்,
களிறு சென்று களன் அகற்றவும்,
களன் அகற்றிய வியல் ஆங்கண்
ஒளிறு இலைய எஃகு ஏந்தி,  5
அரைசு பட அமர் உழக்கி,
உரை செல முரசு வெளவி
முடித்தலை அடுப்பாகப்,
புனல் குருதி உலைக் கொளீஇத்,
தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின்  10
அடு களம் வேட்ட அடு போர்ச் செழிய!
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றமாக,
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே!  15
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே.

Puranānūru 26, Poet Mānkudi Maruthanār sang to Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan, Thinai: Vākai, Thurai: Arasa Vākai
Lifting your spear with shining blade, you went
on your elephant, splitting the enemy army like
a ship driven by the wind in the huge, ocean with
great depths, attacked and killed your enemy kings,
and with fame, seized their royal drums.

Using crowned heads as stoves, you boiled their blood,
stirring it with their braceleted hands you used as ladles.
O Chezhiyan of murderous battles!  You did perfect ritual   
offerings in battlefields, surrounded by Brahmins of
the four Vedas, calm with the breadth of their knowledge.

O Ruler whose sword never fails!  Your enemies have
certainly performed penances, for once they have won the
fame of being your enemies, even though they are not
victorious, they will live forever. 

Notes:  Puranānūru 18, 19, 23, 24, 25, 26, 76, 77, 78, 79, 371 and 372 were written for this king, who wrote poem 72.  He defeated the Chera and Chozha kings along with five Vēlir kings in a battle at Thalaiyālankānam in the Chozha country.  Puranānūru 24, 26, 313, 335, 372 and 396 were written by this poet, who goes by the names Mānkudi Maruthanār, Mathurai Kānchi Pulavar and Mānkudi Kizhār.  மேற்கோள்:  புறநானூறு 372 – அருந்தலை அடுப்பின் கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்க ஆனா மண்டை வன்னியந் துடுப்பின், மதுரைக்காஞ்சி 26-32 – அஞ்சு வந்த போர்க் களத்தான் ஆண்தலை அணங்கு அடுப்பின் வயவேந்தர் ஒண் குருதி சினத்தீயின் பெயர்பு பொங்க தெறல் அருங் கடுந்துப்பின் விறல் விளங்கிய விழுச்சூர்ப்பின் தொடித் தோட்கை துடுப்பு ஆக.  களவேள்வி -புறநானூறு 26 – மன்னிய வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே, புறநானூறு 372 – புலவுக் களம் பொலிய வேட்டோய், மதுரைக்காஞ்சி 128-130 – களம்வேட்ட அடு திறல் உயர் புகழ் வேந்தே, திருமுருகாற்றுப்படை 100 – களம் வேட்டன்றே ஒரு முகம்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  நளி கடல் இருங்குட்டத்து – in the huge ocean with great depths, வளி புடைத்த கலம் போல – like a ship that is driven by the wind, களிறு சென்று – elephant went, களன் அகற்றவும் – widening the battlefield, creating a path (களன் – களம் என்பதன் போலி, அகற்றவும் – உம்மை அசைநிலை), களன் அகற்றிய வியல் ஆங்கண் – in that wide field (களன் – களம் என்பதன் போலி), ஒளிறு இலைய எஃகு ஏந்தி – carrying spears with bright blades, அரைசு பட அமர் உழக்கி – ruined your enemy kings, உரை செல – for fame to spread (செல – இடைக்குறை), முரசு வெளவி – seized their drums, முடித்தலை அடுப்பாக – their heads with crowns as stoves, புனல் குருதி உலைக் கொளீஇ – boiled their flowing blood (சொல்லிசை அளபெடை), தொடித் தோள் துடுப்பின் –  with their arms with bracelets as ladles, துழந்த – stirred, வல்சியின் – with food, அடு களம் வேட்ட – performed rituals in the battlefield, அடு போர்ச் செழிய – O Chezhiyan of murderous battles, ஆன்ற கேள்வி – esteemed Vedas, அடங்கிய கொள்கை – controlled principles, contained principles, நான்மறை முதல்வர் சுற்றமாக – surrounded by Brahmins who know the four Vedas, மன்னர் ஏவல் செய்ய – enemy kings work at your command, மன்னிய வேள்வி முற்றிய – performing stable rituals, வாய்வாள் வேந்தே – O king whose sword never fails, நோற்றோர் மன்ற நின் பகைவர் – certainly your enemies have done penances, clearly your enemies have done penances, நின்னொடு மாற்றார் என்னும் – even though they were not agreeable to you, பெயர் பெற்று – attained fame, ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே – even though they were not able to fight with you they will live forever (வாழ்வோரே – ஏகாரம் அசைநிலை, an expletive)



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

புறநானூறு 93, பாடியவர்: ஔவையார்பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சிதிணை: வாகைதுறை: அரச வாகை
# 93 ஔவையார் திண் பிணி முரசம் இழுமென முழங்க சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர் தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் நோய்_பால் விளிந்த யாக்கை தழீஇ 5 காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார் அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த நீள் கழல் மறவர் செல்வு_உழி செல்க என 10 வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து அண்ணல் யானை அடு_களத்து ஒழிய அரும் சமம் ததைய நூறி நீ பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே 15

# 93 ஔவையார்
திண்ணிதாகப் பிணிக்கப்பட்ட முரசம் ‘திடும்' என முழங்கப்
புறப்பட்டுப்போய் போரில் வெற்றிபெறுவதற்கு இனிப் பகைவர் ஏது? உன்னை எதிர்த்து வந்தவர்கள்
உனது முன்னணிப்படையினையும் தாங்கமாட்டாதவராய், சிதறி
ஓடத்தொடங்கிய பெருமை இல்லாத மன்னர்கள்,
நோயினால் இறக்கும் உடம்பைப் பெற்று
தமது ஆசையை மறந்து, அவர்கள் வாளால் மடியாத குற்றம் அவர்களை விட்டு நீங்குமாறு
அறத்தை விரும்பிய கொள்கைகளையுடைய நான்கு வேதங்களையுடைய அந்தணர்
நன்கு வளர்ந்த தருப்பைப்புல்லைப் பரப்பி, அதில் அவரைக் கிடத்தி,
தனது வீரமே பற்றுக்கோடாக நல்ல போரில் மடிந்த
சிறந்த வீரக்கழலை அணிந்த மறவர் செல்லும் உலகத்திற்குச் செல்க என்று
வாளால் அறுக்கப்பட்டு அடக்கம்செய்யப்படுவதிலிருந்து தப்பித்தனர்,
வரியையுடைய வண்டுகள் ஒலிக்கும் வாய்க்குள் வந்து புகுகின்ற மதத்தினையுடைய
தலைமை பொருந்திய யானை போர்க்களத்தில் மடிய
தாங்குவதற்கு அரிய போரில் சிதறி ஓடும்படி வெட்டிக்கொன்று நீ
பெருந்தகையே! விழுப்புண் பட்டு நின்றதால் - (போரில் வெற்றிபெறுவதற்கு இனிப் பகைவர் ஏது?)

புறநானூறு 93, பாடியவர்: ஔவையார்பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சிதிணை: வாகைதுறை: அரச வாகை
திண்பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்று அமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார் தாங்குதலும் ஆற்றார், வெடிபட்டு,
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர்
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்,  5
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறுமார்,
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி,
“மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த
நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க” என  10
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ,
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து
அண்ணல் யானை அடு களத்து ஒழிய,
அருஞ்சமம் ததைய நூறி, நீ
பெருந்தகை விழுப்புண் பட்டமாறே.  15

Puranānūru 93, Poet Avvaiyār sang to Athiyamān Nedumān Anji, Thinai: Vākai, Thurai: Arasa Vākai
With tightly strapped battle drums roaring,
how can there be more victories to be won?
Enemy kings who came could not stand against
your foot soldiers.  They scattered and ran.

The kings without pride killed by you
avoided what would have been done to
them, had they died naturally of disease,
their bodies laid out on fine green grass
by Brahmins who desire righteousness, who
know the four Vedas, who chant, “Go where
the great warriors with splendid war anklets
go, those who have died in battles with bravery
as their crutch,” and forgetting any love
they had for them,
they would have cut their bodies with swords
to escape the dishonor of being buried.

But you are a great man who fights harsh
battles, shattering the battlefield around you,
as noble elephants fall down, the juices of
their musth flowing into their mouths where
bees hum, and you have good battle wounds!

Notes:  புறநானூறு 74 – குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும் ஆள் அன்று என்று வாளின் தப்பார்.  Puranānūru 87-95, 97-101, 103, 104, 206, 208, 230 (his name is this poem is from his defeat in Thakadur), 231, 232, 235, 315 and 390 were written for this king.  Except for 208, which was written by Perunchithiranār, and 230 by Arisil Kizhār, the rest were written by the poet Avvaiyār.  Avvaiyār and King Athiyamān Nedumān Anji were great friends.  Avvaiyār wrote Puranānūru poems 87-104, 140, 187, 206, 230, 231, 232, 235, 269, 286, 290, 295, 311, 315, 367, 390 and 392.  There was only one Avvaiyār in the entire Sangam literature.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).  விழுப்புண் – ஒளவை துரைசாமி உரை – சீரிய புண். சீரிய = சிறந்த.

Meanings:  திண்பிணி முரசம் இழுமென முழங்க – as drums that are tightly strapped roar, சென்று அமர் கடத்தல் யாவது – how can there be any more battle victories left to be won, வந்தோர் – those who have come to attack, enemy kings, தார் தாங்குதலும் ஆற்றார் – they could not stand against your foot soldiers, வெடிபட்டு ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் – such kings with no pride who scattered and ran away (மரீஇய – செய்யுளிசை அளபெடை), நோய்ப்பால் விளிந்த யாக்கை – bodies  of those who died due to disease, தழீஇ – holding, embracing, காதல் மறந்து – forgetting love, அவர் தீது மருங்கு அறுமார் – to remove their blemish, to give them a warrior’s death, அறம் புரி கொள்கை – desiring the principle of righteousness, with the principle of righteousness, நான்மறை முதல்வர் – Brahmins who know the four Vedas, திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி – laid on fine green grass, மறம் கந்து ஆக – bravery as the support, அமர் வீழ்ந்த – fallen in battle, நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க – go to where great warriors with large warrior anklets go (செல்வுழி =  செல் + உழி, உழி = ஏழாம் வேற்றுமை உருபு), என – saying so, thus, வாள் போழ்ந்து – cut them up with swords, அடக்கலும் உய்ந்தனர் – they escape the dishonor of being buried, மாதோ – மாது, ஓ அசைநிலைகள், expletives, வரி ஞிமிறு ஆர்க்கும் – bees with stripes hum, வாய் புகு கடாஅத்து – with musth entering the mouth (கடாஅத்து – இசை நிறை அளபெடை, அத்து சாரியை), அண்ணல் யானை அடு களத்து ஒழிய – noble elephants died in the battlefield, அருஞ்சமம் – difficult battle, harsh battle, ததைய – shattered, நூறி – cutting, நீ பெருந்தகை – you are a great person, you are a noble man, விழுப்புண் பட்டமாறே – since you have good/honorable battle wounds, since you have deep battle wounds (விழுப்புண் – சீரிய புண், பட்டமாறே – ஏகாரம் அசைநிலை, an expletive, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்)



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

நான்மறையோர் புகழ் பரப்பியும் - பட் 202
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் 200 
நல் ஆனொடு பகடு ஓம்பியும்
நான்மறையோர் புகழ் பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும்
புண்ணியம் முட்டா தண் நிழல் வாழ்க்கை

கொடு மேழி நசை உழவர் 205
நெடு நுகத்து பகல் போல
நடுவு நின்ற நன் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி

தேவர்களைப் போற்றியும், வேள்வியைச் செய்வித்தும்						200
நல்ல பசுக்களோடு எருதுகளைப் பாதுகாத்தும்,							
அந்தணர்க்குள்ள புகழை அவர்க்கு நிலைநிறுத்தியும்,
(பல)பண்டங்களை ஆக்கியிட்டும், புதிய நல்லுணவு கொடுத்தும்,
அறத்தொழில்கள் முட்டுப்படாத குளிர்ந்த அருளுடனே வாழும் இல்வாழ்க்கையையுடைய,
வளைந்த மேழி(யால் உழவுத்தொழிலை) விரும்பும் உழவரும் -					205
நீண்ட நுகத்தடியில் (தைத்த) பகலாணி போல,
நடுவுநிலையென்னும் குணம் நிலைபெற்ற நல்ல நெஞ்சினையுடையோர்,
(தம் குடிக்கு)பழிச்சொல் அஞ்சி மெய்யே சொல்லி,
தம்முடையவற்றையும் பிறருடையவற்றையும் ஒன்றாக எண்ணி,

பட்டினப்பாலை

எளிய உரை: வைதேகி

பாடியவர்               –   கடியலூர் உருத்திரங்கண்ணனார்
பாடப்பட்டோன்    –    திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான், கரிகாலன்)
திணை                    –    பாலை
துறை                       –    செலவழுங்குதல்
பா வகை                  –   ஆசிரியப்பா, வஞ்சிப்பா 
மொத்த அடிகள்   –    301

காவிரிப்பூம்பட்டினத்து உழவர்களின் நல் இயல்புகள்

நீர் நாப்பண்ணும், நிலத்தின் மேலும்,
ஏமாப்ப இனிது துஞ்சிக்   195
கிளை கலித்துப் பகை பேணாது,
வலைஞர் முன்றில் மீன் பிறழவும்,
விலைஞர் குரம்பை மா ஈண்டவும்,
கொலை கடிந்தும், களவு நீக்கியும்,
அமரர் பேணியும், ஆவுதி அருத்தியும்,   200
நல் ஆனொடு பகடு ஓம்பியும்,
நான்மறையோர் புகழ் பரப்பியும்,
பண்ணியம் அட்டியும், பசும் பதம் கொடுத்தும்,
புண்ணியம் முட்டா தண்ணிழல் வாழ்க்கைக்
கொடும் மேழி நசை உழவர் (194- 205)

பொருளுரை:  விலங்குகளும் மீன்களும் நீரின் நடுவிலும் நிலத்தின் மேலும் மகிழ்ந்து இனிமையாகத் துயின்று, இனம் தழைத்து, இவர்கள் நம் பகைவர்கள் எனக் கருதாமல் மீன் பிடிப்பவர்களின் முற்றத்தில் மீன்கள் பாயவும், ஊன் விற்பவர்கள் குடிசைகளின் முன் விலங்குகள் திரண்டு இருக்கவும், கொலையையும் களவையும் நீக்கியும், தேவரைப் போற்றியும், வேள்விகள் செய்து படைக்கப்பட்ட உணவை உண்டும், நல்ல பசுக்களுடன் எருதுகளைப் பாதுகாத்தும், நான்மறை ஓதுபவர்களின் புகழைப் பரப்பியும், பண்டங்களைச் செய்து வருவோர்க்குக் கொடுத்ததும், சமைக்காத அரிசி போன்ற உணவைக் கொடுத்ததும், அறம் குறையாது, குளிர்ந்த நிழல் போன்ற வாழ்க்கையையுடைய, வளைந்த கலப்பையை விரும்பும் உழவர்களும்,

சொற்பொருள்:  நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் – விலங்குகளும் மீன்களும் நீரின் நடுவிலும் நிலத்தின் மேலும், ஏமாப்ப – மகிழ்ந்து, இனிது துஞ்சி – இனிமையாகத் துயின்று, கிளை கலித்து – இனம் தழைத்து, பகை பேணாது – பகைமையை கருதாமல், வலைஞர் முன்றில் மீன் பிறழவும் – மீன் பிடிப்பவர்களின் முற்றத்தில் மீன்கள் பாயவும் (முன்றில் – இல் முன்), விலைஞர் குரம்பை மா ஈண்டவும் – ஊன் விற்பவர்கள் குடிசைகளின் முன் விலங்குகள் திரண்டு இருக்கவும், கொலை கடிந்தும் – கொலையை நீக்கியும், களவு நீக்கியும் – களவை நீக்கியும், அமரர்ப் பேணியும் – தேவரைப் போற்றியும், ஆவுதி அருத்தியும் – வேள்விகள் செய்து படைக்கப்பட்ட உணவை உண்டும், நல் ஆனொடு பகடு ஓம்பியும் – நல்ல பசுக்களுடன் எருதுகளைப் பாதுகாத்தும், நான்மறையோர் புகழ் பரப்பியும் – நான்மறை ஓதுபவர்களின் புகழைப் பரப்பியும், பண்ணியம் அட்டியும் – பண்டங்களைச் செய்தும், பசும் பதம் கொடுத்தும் – சமைக்காத உணவைக் கொடுத்ததும், புண்ணியம் முட்டா – அறம் குறையாது, தண் நிழல் வாழ்க்கை – குளிர்ந்த நிழல் போன்ற வாழ்க்கையையுடைய, கொடும் மேழி – வளைந்த கலப்பை, நசை உழவர் – விரும்பும் உழவர்கள்

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

நான்மறை விரித்து நல் இசை விளக்கும் - பரி 9/12
ஐ_இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண்

மணி மழை தலைஇ என மா வேனில் கார் ஏற்று	10	
தணி மழை தலையின்று தண் பரங்குன்று
நான்மறை விரித்து நல் இசை விளக்கும்
வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்தது
காதல் காமம் காமத்து சிறந்தது
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி		15
புலத்தலின் சிறந்தது கற்பே அது தான்
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடா
பரத்தை உள்ளதுவே பண்புறு கழறல்
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்பு-உற

ஆயிரம் கண்களை உடலில் கொண்ட இந்திரனின் மகளாகிய தேவயானியின் மலர் போன்ற மையுண்ட கண்கள் 

மணி போன்ற கண்ணீர் மழையைச் சொரிந்தனவாக, முதிர்ந்த வேனிற்காலத்திலும் கார்கால மேகங்கள் திரண்டெழுந்து,
மிகுந்த மழையினைப் பெய்யத்தொடங்கிற்று தண்ணிய பரங்குன்றத்தில்;
வேதங்களை விரித்துரைத்து அவற்றின் நல்ல புகழை உலகுக்கு விளக்கும்
மெய்யான மொழியினையுடைய புலவர்களே! கேளுங்கள் சிறந்ததொன்றை;
காதலோடு கூடிப் பெறுகின்ற காம இன்பமே, காம இன்பங்களுள் சிறந்தது,

9.   Murukan

Poet:  Kundrampoothanār, Composer:  Maruthuvan Nallachuthanār, Melody:  Pālai Yāzhl

முருகவேளை வாழ்த்துதல் 

இரு நிலம் துளங்காமை வட வயின் நிவந்து ஓங்கி,
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலைகாக்கும்,
உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட,
எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடைப் பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப, 5

தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று,
ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்,
மணி மழை தலைஇ என, மா வேனில் கார் ஏற்று, 10

தணி மழை தலையின்று தண் பரங்குன்று.

Praising Murukan 

On the lofty northern mountain that maintains

the stability of the vast earth, its tall peaks difficult to

scale, surrounded by thunder, protected by Indiran,

the lord of fierce deities with divine nature, Brahman

who appeared on a flame-like lotus blossom sent

down the huge mountain stream that was borne by Sivan

on his matted, spread hair to slow down, appearing like

bright flowers that mature and drop down.

O Lord!  You were born to the noble lord Sivan who was

called Salathāri, the one with a sapphire colored neck,

through six respected Karthikai women upon acceptance

by their husbands who were sages.

On the day you united with Valli with dark eyes decorated

with powdered kohl, daughter of a deer, Thēvasēnai, the

daughter of Indiran with a thousand eyes, shed tears from

her flower-like, kohl-lined eyes that appeared like rains

from sapphire-colored clouds,

and clouds surrounding cool Thirupparankundram came

down as rains even though it was summer, to pacify her.

Notes:  மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி (9) – மையாகிய கரிய துகளால் அணியப்பட்ட உண்கண்.  நூறு நுண்ணிதாக நறுக்கிய துகள்.  மானிட மகள் என்பது தோன்ற ‘இமை உண்கண்’ என்றும் வள்ளிக்கிழங்கு அகழ்ந்த குழியில் மானாலே ஈயப்பட்ட மகள் என்பது தோன்ற ‘மான்மறி ‘ என்றார்.  ‘மான்குட்டி’ என்றவாறு.   ஐ இருநூற்று (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஐ இருநூறு என மாற்றுக.  இலக்கணம்:  மழை – ஆகுபெயர் முகிலுக்கு.  தலைஇ – சொல்லிசை அளபெடை.

Meanings:  இரு நிலம் – vast land, துளங்காமை – with stability, not moving, வட வயின் நிவந்து – high on the north, ஓங்கி – tall, அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும்– protected by the lord (leader) of the fierce deities in the tall difficult mountain – Indiran, உருமுச் சூழ் சேண் சிமை– lofty mountain peaks surrounded by thunder, உயர்ந்தவர் உடம்பட – there are superior people who accept, எரி மலர்த் தாமரை இறை – the god who appeared on the flame-like lotus flower – Brahman, வீழ்த்த பெரு வாரி– brought down the large river (Gangai), விரி சடைப் பொறை – appearing  on Sivan’s matted/spread hair with the burden (of the river), ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப– like bright flowers that mature and fall down, தணிவுற – causing it to slow down, தாங்கிய தனி நிலைச் சலதாரி – the one who was called Salathāri who bore the river (on his head), மணி மிடற்று அண்ணற்கு – to the noble one with sapphire color neck, மதி ஆரல் பிறந்தோய் – you were born to the respected Karthikai women, நீ மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று – on the day when you embraced the shoulders of Valli (united with her in kalavu) who is the daughter of a deer, who has dark eyes with lids, that are decorated with kohl that was powdered finely (நூறு – நுண்ணிதாக நறுக்கிய துகள்), ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் – daughter of the one with a thousand eyes on his body- Indiran (நயனம் – கண்), மலர் உண்கண் மணி மழை தலைஇ என– since she shed tears with her flower-like kohl-lined eyes like rain from sapphire-colored clouds, மா வேனில் கார் ஏற்று – like rain in intense summer, தணி மழை தலையின்று தண் பரங்குன்று – cool clouds came down as rains on your cool Thirupparankundram

தமிழது சிறப்பிற்குக் காரணம் 

நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர்! கேண்மின் சிறந்தது!
காதற் காமம், காமத்துச் சிறந்தது;
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி  15

புலத்தலின் சிறந்தது, கற்பே; அது தான்
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்
பரத்தை உள்ளதுவே; பண்புறு கழறல்,
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற
நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே;    20

கேள் அணங்குற மனைக் கிளந்து உள சுணங்கறை
சுணங்கறைப் பயனும் ஊடலுள்ளதுவே
அதனால், அகறல் அறியா அணியிழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத்
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய் வந்திலார் 25

கொள்ளார், இக்குன்று பயன்.

Greatness of Secret Love of the Thamizh people

O scholars with fine tongues who recite and

explain the fine fame of the four Vēdās!  Listen

to this truth!  Passion with mutual love is the best

love!  The physical passion that follows love is the

greatest!

Virtue of married love is pleading and giving in

after sulking, when the husband returns to the marital

house from his concubine.

The friend wears red garments and gives the husband

the firm news that his wife is ready for union when he

is in the house of his new paramour whose arms he enjoys.  

He rushes back to his house and enjoys making love

to his wife, their union called sunangarai.  The concubine,

upset, slanders the couple in her house, as the friends of

the heroine get distressed.

Sulking gives the benefit of sexual union.  So pretty

women in secret love, whose lovers don’t leave them, do

not make the mistake of getting upset.   Of the two kinds

of love, secret love and married love, the former is

superior by the ancient Thamizh texts.  Only those who have

not analyzed cool Thamizh grammar of love, will not accept

this secret love of the mountains.

Notes:  இலக்கணம்:  கேண்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person.  உள்ளதுவே – ஏகாரம் அசைநிலை, an expletive.  சுணங்கறையதுவே – ஏகாரம் அசைநிலை, an expletive.  ஊடலுள்ளதுவே – ஏகாரம் அசைநிலை, an expletive.

Meanings:  நான்மறை விரித்து நல் இசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் – scholars with fine tongues who recite and explain the four Vēdās, கேண்மின் சிறந்தது – listen to the best/the truth, காதற் காமம் காமத்துச் சிறந்தது – love passion is the best passion, விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி – when lovers unite with mutual love, புலத்தலின் சிறந்தது – best due to sulking, கற்பே அது தான் – that is virtue, இரத்தலும் ஈதலும் – pleading and giving in, இவை உள்ளீடாப் பரத்தை உள்ளதுவே – this is because of him going to a concubine, பண்புறு கழறல்– utters the firm news (கழறல் – அறத்தொடு பொருந்திய உறுதிச் சொல்), தோள் புதிது உண்ட பரத்தை இல் – enjoys newly the arms of a concubine in her house, சிவப்புற நாள் அணிந்து– wearing red ornaments/garments in the morning, உவக்கும் சுணங்கறையதுவே  – he enjoys sexual union with her, கேள் அணங்குற – making her friends sad, மனைக் கிளந்து உள சுணங்கறை– the concubine slanders the couple in her house, சுணங்கறைப் பயனும் ஊடலுள்ளதுவே – sulking gives the benefit of sexual union, அதனால் – so, அகறல் அறியா – not knowing leaving of their lovers, அணி இழை நல்லார் – fine women who wear pretty jewels, இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்– they don’t make the mistake of being angry, இத் தள்ளாப் பொருள் இயல்பின் – with the nature of the not reduced convention (that praises secret love as being better than married love), தண் தமிழ் ஆய் வந்திலார்– those who have not analyzed cool Thamizh, கொள்ளார் இக்குன்று பயன் – they do not accept this mountain/kurinji conventions



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப - பரி 30/8

30.8 எட்டாம் பாடல்
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள்		5
தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர்
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை

வாழிய வஞ்சியும் கோழியும் போல		10
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே

# 30.8 எட்டாம் பாடல்
திருமாலின் தொப்புளில் தோன்றி மலர்ந்த தாமரைப்
பூவோடு ஒத்தது அழகிய ஊர், அந்தப் பூவின்
அக இதழ்களை ஒத்தன தெருக்கள்; அந்த இதழ்களின் நடுவே உள்ள
அரிய பொகுட்டினை ஒத்ததே பாண்டியனின் அரண்மனை;
அந்தப் பூவின் பூந்தாதுக்களைப் போன்றவர் இனிய தமிழ்க்குடி மக்கள்;
அந்தத் தாதுக்களை உண்ணும் பறவைகளைப் போன்றவர் பரிசில் பெற்று வாழ்பவர்;
அந்தத் தாமரைப் பூவில் தோன்றிய பிரமதேவனுடைய நாவில் பிறந்த
நான்கு வேதங்களையும் கேள்வியால் கற்றவர்கள் ஓதுகின்ற குரலால் எழுப்ப,
மிக்க இன்பமான துயிலிலிருந்து எழுதலன்றி,

வாழ்த்துப்பெற்ற வஞ்சியும் உறைந்தையும் போல
கோழி கூவ எழாது எமது பெரிய ஊர்மக்களின் துயில்;

7.  Koodal

(These lines are from Purathirattu)

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்டு அனைத்தே, அண்ணல் கோயில்;
தாதின் அனையர் தண் தமிழ்க் குடிகள்; 5
தாது உண் பறவை அனையர் பரிசில் வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன்துயில் எழுதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக் 10
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.

Our beautiful city is like the lotus flower

on the navel of Thirumāl.  Its streets are like the

petals of the flower.  Its temple built for God is

like the seed vessel that is at the center of the lotus

blossom.

The cool Thamizh people are like flower pollen, and

The poets, bards and artists are like bees that eat

the pollen.

The people of our city wake up from their sweet

sleep to the chants of brahmins who chant the Vēdās

that were born on the tongue of Brahman.  They do

not wake up to crowing roosters like those in Vanji

and Kōzhi.

Notes:  இலக்கணம்:  புரை – உவம உருபு.  ஏம இன் துயில் – ஒருபொருட் பன்மொழி.  வாழிய – நெடுது வாழ்க, அசைநிலையுமாம்.  துயிலே – ஏகாரம் அசைநிலை, an expletive.  

Meanings:  மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீர் ஊர் – beautiful town is like the lotus flower on the navel of Thirumāl,  பூவின் இதழ் அகத்து அனைய தெருவம் – the streets are like the petals of the lotus, இதழ் அகத்து அரும் பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில் – the temple of the lord is like the seed vessel in the center the lotus flower petals, தாதின் அனையர் தண் தமிழ்க் குடிகள் – the cool Thamizh people are like the pollen (தாதின் – தாது,  இன் சாரியை), தாது உண் பறவை அனையர் பரிசில் வாழ்நர் – those receiving gifts are like the bees that eat pollen, பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த – appeared on the tongue of Brahman who was born in a flower, நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப – the sounds of chanting the Vēdās, ஏம இன் துயில் எழுதல் அல்லதை – not just waking up from their sweet sleep, வாழிய – may it live long, வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாது – roosters don’t wake up like those in Chēran’s Vanji (வஞ்சி – இன்றைய கரூர்) and Chōzhan’s Kōzhi (உறந்தை, உறையூர்) cities, எம் பேர் ஊர் துயிலே – those who sleep in our great town



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard