தமிழ் இலக்கியங்களில் திருக்குறள் ஒரே நூலிற்கு பல புலவர்கள் செய்த திறனாய்வு பாடல்கள் கொண்டதே திருவள்ளுவமாலை, இதைத் வேறு எந்த நூலிற்குமே இல்லை எனும்போது வள்ளுவத்தின் பெருமையை மேலும் உயர்த்தும்
பண்டைத் தமிழ் சங்க இலக்கிய நூல்களில் யாப்பு வளர்ச்சி இல்லாத தொடை அமைப்பு இல்லாமல் இருப்பதை அறிஞர்கள் சுட்டி உள்ளனர். பக்திக் காலத்தை ஒட்டிய பரிபாடல், கலித்தொகை மற்றும் திருமுருகாற்றுப்படை மூன்றுமே பதினெண்மேல்கணக்கு எனும் பாட்டுத்தொகை தொகுப்பில் உள்ளவையே.
எட்டுத்தொகை நூல்களின் கடவுள் வாழ்த்துகள் 9- 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த பார்தம் பாடிய பெருந்தேவனாரால் இயற்றயது சேர்த்த பின்னர் இன்றைய வடிவில் தொகுப்பு முழுமை ஆனது.
இதிலுள்ள ஒவ்வொரு பாடலும் குறளை அணுகிய முறை வெவ்வேறாக உள்ளது. இப்பாடல்கள் வள்ளுவரை,
தெய்வ வாக்கு கொண்டவர் என்று வாழ்த்தும்; குறள் மறைநூலுக்கு மேலானது, இணையானது எனவும் வடமொழியின் சிறப்பிற்கு மறைநூல்; தமிழ்மொழியின் பெருமைக்குக் குறள்,
முப்பாலில் நாற்பால் மொழியப்பட்டது எனவும் ஒப்பாய்வு செய்யும்; பால், இயல், அதிகாரத் தொகுப்பு இவற்றைக் கூறி குறளின் சொற்பொருள், யாப்பின் அமைப்பு ஆகியவற்றின் சிறப்புபற்றிப் பேசும்; உள்ளத்து இருளை நீக்கும் வாழ்வியல் நூல் என்றும் இருவினை நீக்கும் மாமருந்தாகிய ஆன்மநூல் இது என்றும் போற்றும். இவ்வாறு பல்வேறு நிலைகளில் திருக்குறளின் பாடுபொருளும் பாடுமுறையும் ஆராயப்பட்டுள்ளன.
வடமொழியில் தோன்றிய வேதம் மூலநூல், குறள் அதன் வழிநூல் என்று ஒரு பாடல் கருத்து உரைக்க அதற்கு மாறாகத் திருக்குறள் மூலநூலே, திருக்குறளோடு எந்த நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தல் பொருத்தமாகாது என்பதை வேறு ஒரு பாடல் உணர்த்துகிறது.
வடமொழிநூல்களோடு திருக்குறளை ஒப்பிட்டுப் பேசுதல் ஒவ்வாது என்பதனை வலியுறுத்தும் போக்கு அக்காலச் சூழலிலேயே தோன்றியமையும், திருக்குறள் தமிழில் எழுந்த மூலநூல் என்பதனை வள்ளுவமாலை மூலமும் நிறுவப் பெற்றமையையும் காணலாம்.
வள்ளுவமாலை எழுந்த காலத்தில் மாந்தர் பெரிதாக மதித்து வந்ததாகக் கருதப்படும் வைதீக நூல்களுடன் திருக்குறளை ஒப்பிட்டுப் பாராட்டிக் கூறியதன் நோக்கம் தமிழின் ஆற்றலை மற்றவரும் உணர வேண்டும் என்பதே என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால் காலப்போக்கில் இந்த ஒப்பீடே பிறழ உணரப்பட்டுப் பின்னையோர் திருக்குறள் கருத்துகள் வடநூற் கருத்துக்களின் பிழிவாகக் கருதத் தொடங்கி விட்டனர்; பின்வந்த உரையாசிரியர்களின் வெவ்வேறு அணுகுமுறைக்கு மாலைப்பாடல்கள் அடித்தளமாக அமைந்து விட்டன என்பதும் தெளிவாகும் என்பர் ஆய்வாளர்கள்.
வள்ளுவமாலை தரும் பாராட்டுரைகளே வள்ளுவத்திற்கு வேறுபொருள் காணத்தூண்டியிருக்கலாம்; அல்லது குறள் தோன்றிய காலத்திலிருந்து பின்னர் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு கருத்துகள் அதில் ஏற்றியுரைக்கப்பட்ட பின் அக்கருத்துரைகளே வள்ளுவமாலை தரும் கருத்துரைகளாக மாறின எனவும் கொள்ளலாம்.
எவ்வாறாயினும் மூலம் கொண்டிருந்த கருத்துகள் காலப்போக்கில் வள்ளுவமாலையாலும், உரைகளாலும் மாறிப்போயின என்பது உண்மை.
வள்ளுவம் பெற்ற திரிபிற்கு வள்ளுவமாலையும் அடிப்படை என்னும் நிலையில் பல காரணங்களைக் காட்டுவார் கு ச ஆனந்தன். திருக்குறளின் உண்மைப் பொருளையும் உள்ளுறை நோக்கையும் அமைப்பையும் மூலத்திலிருந்து மாற்றியமைத்து வேறுவிளக்கம் தரும் பல பாட்டுகள் வள்ளுவமாலையில் இடம் பெற்றுள்ளன;
தொன்மை நூலாகிய தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள் முதலியவற்றில் ‘வீடு’ பற்றிப் பேசும் நான்காம் உறுதிப்பொருள் இல்லை;
அறம், பொருள், காமம் என்ற மூன்று மட்டுமே பேசப்படுகின்றன; ஆனால் வள்ளுவமாலையின் பல பாடல்களில் (7,8,20,22,33,38,40,50) திருக்குறளில் இல்லாத நாற்பால் வலியுறுத்திச் சொல்லப்பட்டுத் திருக்குறளின் ஆராய்ச்சிப் போக்கை அல்லது திருக்குறள் உணரும் நெறியை மாற்றிவிட்டது என்பார் இவர்.
அடுத்து வள்ளுவமாலை திருக்குறளுக்குத் தரும் இன்னொரு மதிப்பீட்டுரை வேதப்பொருளும் குறட்பொருளும் ஒன்றேயாம் என்பது.
இது தவறான ஒப்பீடு. ஏனென்றால் வேதங்கள் இயற்கை சக்திகளையும் தெய்வங்களையும், யாகம்-சடங்குகள் செய்யும் முறைகளையும் விளக்குபவை;
குறள் போல வாழ்வியல் நெறி; காதல் நெறிகளை விளக்குவன அல்ல. மேலும் குறளை இராமாயணம் போன்ற காப்பியங்களோடு ஒப்பிட்டதும் பொருத்தம் இல்லை.
30 பாரதம் பாடிய பெருந்தேவனார் \ பாரதமும், இராம கதையும் திருக்குறளுக்கு இணை ஆகா.
இயற்கையோடு ஒப்பிட்டு மேன்மை கூறல்
52 மதுரைப் பாலாசிரியனார் \ வெள்ளி, வியாழம், ஞாயிறு, திங்கள் ஆகியவை புறவிருள் போக்கும். திருக்குறள் அகவிருள் போக்கும்.
46 அக்காரக் கனி நச்சுமனார் \ கலை நிரம்பல், இனிதாதல், நீர்மைத்து ஆதல் ஆகியவற்றால் திங்களும், திருக்குறளும் சமம் என்றாலும் திருக்குறளீன் நயம் திங்களுக்கு இல்லை. வேற்றுமை அணி
47 நப்பாலத்தனார் \ திருக்குறள் அக இருள் நீக்கும் விளக்கு. அறம் - அகல். பொருள் - திரி. இன்பம் - நெய். செஞ்சொல் - தீ. குறட்பா - விளக்குத் தண்டு. உருவக அணி
48 குலபதி நாயனார் \ ஞாயிறு கமலம் மலர்த்தும். திருக்குறள் உள்ளக் கமலம் மலர்த்தும். ஞாயிறு புறத்திருள் போக்கும். திருக்குறள் அகத்திருள் போக்கும். இரண்டும் ஒப்பு எனினும் திருக்குறள் உயர்ந்தது. வேற்றுமை அணி
13 அரிசில் கிழார் \ வள்ளுவர் பொருள் விரியும் சுருங்கிய சொல்லை வைத்துப் பாடியுள்ளார்.
17 முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் \ உள்ளுதல், உள்ளி உரைத்தல், உரைத்தவற்றைத் தெள்ளி எடுத்தல் என்கிற முறையில் திருவள்ளுவர் தம் பாடல்களை உருவாக்கியுள்ளார்.
அணிநலத்துடன் பாராட்டு
5 கபிலர் \ பனித்துளி பனைமரத்தைக் காட்டுவது போல்த் திருக்குறளில் பொருள் செறிந்துள்ளது.
10 சீத்தலைச்சாத்தனார் \ 3 வேந்தர், 3 மலை, 3 நாடு, 3 ந்தி, 3 பது, 3 முரசு, 3 தமிழ், 3 கொடி, 3 மா, - போல 3 பால் கொண்ட நூல் முப்பால் மூவேந்தர்களும் தலையில் சூடிக்கொள்ளும் மணிமுடியாகும். | விரிவு காண்க; மூவேந்தர்களின் தனியுடைமை
12 நாகன் தேவனார் \ நன்னீர்ப் பொய்கையில் நீராடுவோர் பருகும் நீருக்காக வேறு குறத்துக்குச் செல்லார். அதுபோல வள்ளுவரின் முப்பால் படிப்படிப்பவர் வேறு நூல் தேடி அலைய வேண்டுவதில்லை.
18 ஆசிரியர் நல்லந்துவனார் \ மக்களின் கலையையும், வேதப் பொருளையும் இணைத்துப் பாடியுள்ளார்.
19 கீரந்தையார் \ திருக்குறளின் முதல் பாடலிலேயே மூன்று பால்களில் சொல்லப்பட்ட செய்திகளும், நாற்பொருள் செய்திகளும் அடக்கம்.
31 உருத்திர சன்ம கண்ணர் \ கடல் மணல் தோண்டத் தோண்ட நீர் ஊறும். குழந்தை சுவைக்கச் சுவைக்கத் தாய்க்குப் பால் ஊறும். திருக்குறள் ஆய ஆய அறிவு ஊறும்.
34 மதுரைத் தமிழாசிரியர் செங்கஃன்றார் கிழார் \ வள்ளுவர் புலவர். அவர் காலைப்பொழுது. மற்றவர்களும் புலவர். அவர்கள் மாலைப் பொழுது.