மணல் கிளைக்க நீர் ஊறும் மைந்தர்கள் வாய்வைத்து உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் - பிணக்கிலா வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு ஆய்தொறும் ஊறும் அறிவு.
பிணக்கு இலா- வெறுப்பு தூண்டும் பிரிவினைக்கு இடமில்லாத.
இந்த பூமியில் மணலைத் தோண்டுந்தோறும் நீர் ஊறும்; பசியில் குழந்தை தன் தாயின் முலையில் வாய் வைத்து உறிய உறிய மேலும் பால் சுரக்கும். அதுபோல், மொழி, இனம் என்ற பிரிவினை இல்லாத திருக்குறளை ஆராயுந்தோறும் அறிவு பெருகும்.
திருவள்ளுவமாலை - 32:பெருஞ்சித்திரனார் -Perunchithiranaar ஏதமில் வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால் ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால் தாதுஅவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே ஏதக் கன.
தாது- மகரந்தம். தார்- மாலை, ஏதம்- குற்றம். ஓதிய- வேதங்களில் சொல்லப் பட்ட
புதிய பூமாலை (மகரந்தப் பொடியோடு விரிந்த) அணிந்த பாண்டிய வேந்தே! குற்றம் எதுவும் இல்லாத திருவள்ளுவர் நம் வாழ்வியல் வழிகாட்டியான நான்கு வேதங்களின் சிறந்த பொருளை எல்லாம் குறள் வெண்பாவாற் கூறிவிட்டமையால், இவற்றுள் எவை மேம்பட்டவை எனக் கூறலாகாது
மனித வாழ்க்கையின் உறுதிப் பொருட்களான அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் மக்கட்கு அறிவிக்கும்படி அருளப்பட்ட தொன்மையான் வடமொழி நால் வேதங்கள் உணர்தற்கு அரியதாக இருந்ததனால், அவற்றை எளிதாக உணருமாறு திருவள்ளுவர் தமிழில் திருக்குறளை இயற்றினார்.
புலவர் திருவருள்ளுவர் அன்றிப் பூமேல் சிலவர் புலவர் எனச் செப்பல் - நிலவு பிறங்கு ஒளி மாலைக்கும் பெயர்மாலை மற்றும் கறங்க்கு இருள் மாலைக்கும் பெயர். மனித வாழ்வின் மேம்பாட்டிற்காய் திருக்குறள் அருளீய திருவள்ளுவரையும் பிற புலவரையும் புலவர் என ஒரே சொல்லால் கூறுவது, பௌர்ணமி முழுமதி மாலையையும், நிலவே இல்லாத அமாவாசை கார் இருள் கொண்டு மாலையையும் மாலையென்றே ஒரே சொல்லால் குறிப்பது போல ஆகும்.
-- Edited by Admin on Saturday 20th of May 2023 10:33:13 PM
திருவள்ளுவமாலை - 35:மதுரை யறுவை வாணிகன் இளவேட்டனார் - Madurai Aruvai Vanigar Izlavaettanaar இன்பமும் துன்பமும் என்னுன் இவை இரண்டு மன்பதைக்கு எல்லாம் மனமகிழ- அன்பு ஒழியா
உள்ளி உணர உரைத்தாரே ஓதுசீர் வள்ளுவர் வாயுறை வாழ்த்து.
மக்கள் அனைவரும் தம் வாழ்வில் ஏற்படும் இன்பம் துன்பம் என்ற இரண்டிற்கும் ஏற்படக் காரணங்களை அறிந்து துன்பத்தை தடுத்து விலக்கி இன்பம் அதிகம் பெறும் பொருட்டு, திருவள்ளுவர் திருக்குறளை வாயுறை (தொடக்கத்தில் கசப்பாகத் தெரியும் மருந்து நீண்ட நாள் பலன் தரும் மருந்து ஆக அமையுமாறு) வாழ்த்தாகப் பாடினார்.