திருவள்ளுவமாலை - 26:போக்கியார் - 26 Pokkiyaar அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து உருவல் அரண் இரண்டு ஒன்றொறொண் கூழ் இரு இயல் திண்படை நட்புப் பதினேழ் குடி பதின்மூன்று எண்பொருள் ஏழாம் இவை.
திருக்குறளின் பொருட்பால் இயல் பிரிப்பை, அரசியல் 25 அதிகாரமும், அமைச்சியல் 10 அதிகாரமும், அரணியல் 2 அதிகாரமும் பொருளியல் 1 அதிகாரமும், படையியல் 2 அதிகாரமும்; நட்பியல் 17 அதிகாரமும்; குடியியல் 13 அதிகாரமுமாக ஏழு இயல் பகுதிகளை உடையதாம்.
திருவள்ளுவமாலை - 27:மோசிகீரனார் - Mosikeeranar ஆண்பாலே ஏழ் ஆறிரண்டு பெண்பால் அடுத்தன்பு பூண்பால் இருபாலோர் ஆறாக - மாண்பாய காமத்தின் பக்கம் ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார் நாமத்தின் வள்ளுவனார் நன்கு. இன்பத்துப் பாலை ஆண்பாற்கூற்று 7 அதிகாரமும் பெண்பாற் கூற்று 12 அதிகாரமும் இருபாற் கூற்று 6 அதிகாரமுமாக, இன்பத்துப்பாலை மூன்று இயலாக புகழ் வாய்ந்த திருவள்ளுவர் வகுத்து உரைத்தார்.
நாம் தற்போது வரும் திருக்குறளில் கற்பியல், களவியல் என்ற அமைப்பை காண்கிறோம். முதலில் 5 திணைக்கு 5 என பழைய பிரிப்பு இருந்தது எனவும் பழைய உரை ஒன்றில் குறிப்பு உள்ளது
திருவள்ளுவமாலை -28:காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் - Kaveripoompattinathu Kaarikkannanaar ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமா மெய்யாய வேதப் பொருள் விளங்கப் பொய்யாது தந்தான் உலகிற்குத் தான் வள்ளுவனாகி அந்தாமரை மேல் அயன்
ஐஆறும், நூறும் அதிகாரம் மூன்றுமாய்- நூற்று முப்பத்துமூன்று அதிகாரங்களாய். ‘அம்தா மரைமேல் அயன் வள்ளுவன் ஆகி- அழகிய தாமரை மலர் மேல் வீற்றிருக்கும்நான்முக கடவுள் பிரம்மா
அழகிய தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் நான்முக கடவுள் பிரம்மா தானே பூமியில் திருவள்ளுவனாக வந்து வடமொழியில் இருந்த வாழ்வியல் மெய்யாகிய வேதப் பொருளை அப்படியே பொய்மை கலவாது விளங்குவதாக உலக மக்களுக்கு தமிழில் செய்து அருளினான்.
The four-faced god Brahma himself, sitting on a beautiful lotus flower, came to the earth as Thiruvalluvar and blessed the people of the world in Tamil to explain the truth of life as given in Vedas as it is without falsehood.
திருவள்ளுவமாலை - 29:மதுரைத் தமிழ் நாகனார் - 29 Madurai Tamil Naganar
எல்லாப் பொருளும் இதன்பால் உளவிதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால் பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார் சுரந்த பா வையத்துணை.
எல்லாப் பொருளும்- பலவகை நூல்களில் சொல்லப் படும் எல்லாப் பொருள்களும். வள்ளுவனார் சுரந்தபா- திருக்குறளே. வையத் துணை- உலகினர்க்குத் துணையாகும்.
மனித குல மேம்பாட்டிற்கு பலவகை நூல்களாலும் சொல்லப்பட்ட எல்லா பொருளும் திருக்குறளிள் அடங்கி இருக்கின்றன இதன் இடத்தில் இல்லாத ஒரு பொருளும் எந்த நூல்களிலும் இல்லை. பெரிய நூல்கள் பல சொற்க்ளால் நிறைந்தவைகளீல் ஆராய்ந்தும் உரிய பயன் இல்லை என்கையில் வள்ளுவனார் இயற்றிய இந்த ஒரு நூலே மக்கள் உலக வாழ்விற்கு ஏற்ற துணை ஆகும்.
All the things that have been said by various books for the development of mankind are included in Thirukkuralil. Many big books are full of words and there is no proper use in examining them, but this one book composed by ThiruValluvar is a suitable companion for people's worldly life.
எல்லாப்பொருளையும் எல்லாரும் உள்ளதை உள்ளபடியே அறியுமாறு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை மகாபாரதம், இராமாயணம் மனுதருமசாத்திரம், நால் வேதம் ஆகிய நான்குக்கு மட்டுமே ஒப்பாக கருதலாம்; மற்று வேறு நிகரான நூல்கள் கிடையாது
Thirukkural by Thiruvalluvar has all things required for development of Mankind and only which can be considered as equivalent are Four Vedas, Mahabharata and Manusmrithi and no other books
-- Edited by Admin on Saturday 20th of May 2023 10:03:59 PM