தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவமாலை 16 -20


Guru

Status: Offline
Posts: 1049
Date:
திருவள்ளுவமாலை 16 -20
Permalink  
 


திருவள்ளுவமாலை 16: இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் - Nallur Naththathanar

 ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்

பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் – போய் ஒருத்தர்

வாய்கேட்க நூல் உளவோ மன்னுதமிழ்ப் புலவர்

அய்க்கேட்க வீற்று இர்ருக்க லாம்

 பகர்ந்ததன்பின்-கூறியபின். கேட்க- பிறர் தம்மிடம் வந்து கேட்க. 

ஒருவர் திருக்குறளின் முப்பாலையும் 1,330 குறட்பாக்கள் முழுவதையுங் கற்றபின், பிறருக்கு ஆசிரியராகிக் கற்பிக்கலாம். ஆனால், ஒருவரிடம் மாணவராக அமர்ந்து கற்க இனி இதற்கு இணையாக வேறு நூல் கிடையாது

 Once one has learned the Muppal of Thirukkural and all the 1,330 Kuratpas, one can teach others as a teacher. But there is no other book comparable to this one to sit with as a student

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை -17: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் - Mugaiyalur Sirukarunthumbiyar
உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
தெள்ளுதல் அன்றே செயற்பால – வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்
எப்பா வலரினும் இல்

உள்ளுதல்- நினைத்தல். உள்ளி உரைத்தல்-நினைத்துப் பிறர்க்குக் கூறுதல். உரைத்ததனைத் தெள்ளுதல்-பிறர் கூறியதை ஆராய்தல். மிக்க- சிறந்த. எப்பாவலரினும்-எவ்வகைப்பட்ட புலவரிலும

வாழ்வின் வழிகாட்டியான வாழ்வின் உறுதிப் பொருட்களான அறம்-பொருள்-இன்பம் என முப்பால்-திருக்குறளினும் சிறந்த நூல் ஒன்று உண்டு என்று எந்தப் புலவருஞ் சொல்ல மாட்டார். எனவே நாம் செய்ய வேண்டியது அந்த திருக்குறளை கற்றி உள்ளத்தால் சிந்த்திது அறிந்து அதை மற்றவர்களுக்கும் உரைத்துத் தெளிதலே.

 

No scholar would say that there is a great book on than muppaal (tripartite) Trukurul, which is the guide of life, the 3 Enduring things of life, virtue, Wealth and pleasure. So what we have to do is to read, learn and understand it and explain it to others.

 



-- Edited by Admin on Saturday 20th of May 2023 02:00:20 AM

__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை -18 ஆசிரியர் நல்லந்துவனார் - Madurai Aasiriyar Nallanthuvanar
சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள் எல்லாம் – தோற்றவே
முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினும் இல்

சாற்றிய பல் கலையுந் தப்பா அரு மறையும் போற்றி உரைத்த பொரு ளெல்லாம் தோற்ற - அறிவுடையோராற் சொல்லப்பட்ட பல நூல்களாலும் தப்பாத அரிய வேதத்தினாலும் காப்பாற்றி வைத்திருந்து உலகத்தார்க்குச் சொல்லப்பட்ட விடயங்களெல்லாம் தன்னிடத்தே காட்டும்படி, முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப் பாவலரினும் இல் - திருக்குறளைச் சொல்லிய திருவள்ளுவரை யொப்பவர் எவ்வகைப்பட்ட பாவலருள்ளும் இல்லை.

Thiruvalluvar is the first poet of Tamil who has said all the things that are said for the upliftment of the people in many books written by the knowledgeable poets of various arts and in the Error less Vedas, Valluvar must be called first Tamil poet and none equivalent to him.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 திருவள்ளுவமாலை -19: கீரந்தையார் - Keerandhaiyar

தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால்
முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் – எப்பாலும்
வைவைத்த கூர்வேல் வழுதி மனம்மகிழத்
தெய்வத் திருவள் ளுவர்

வைவைத்த- கூர்மையாகச் செய்து வைத்த. வழுதி- பாண்டியன். முதற்பா- குறள்வெண்பா. முப்பாலின்- மூன்று பகுதியில். நாற்பால்- நான்கு பகுதிகளையும். மூன்று: அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால். நான்கு பகுதி- அறம், பொருள், இன்பம், வீடு.

எல்லா பக்கத்திலும் கூர்மை வைத்த சிறப்பு பொருந்திய வேலை உடைய பாண்டியராஜன் வழுதி மனம் மகிழ, சொல்லப்பட்ட பொருள் வழுவாமல் முதன்மை உடைய குறட்பாவினால் முப்பால் என அறம், பொருள் & காமம என்ற அமைப்பில் மோட்சம் எனும் வீட்டையும் பெரும் வகையில் நாற்பால் அருளினார் தெய்வத் தன்மையையுடைய திருவள்ளுவர்

Pandiyarajan, who has Swords that is sharp on all sides, can enjoy his mind, With Thirukural which without any slip in the meaning and reveals all four definite products of Life (Virtue, wealth, Pleasure and Moksha)  through his Muppal book

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை -20: நன்பலூர் சிறு மேதாவியார் - 20 Nanpalur Sirumedhaviyar

வீடு ஒன்று பாயிரம் நான்கு விளங்க அறம்

நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ் – கூடுபொருள்

எள்ளில் எழுபது இருபதிற்று ஐந்து இன்பம்

வள்ளுவர் சொன்ன வகை

திருவள்ளுவராலே சொல்லப்பட்ட திருக்குறளின் அதிகார வகை பிரிப்பு முறையை -பாயிரம் நான்கு அதிகாரம் உடையது, அறத்துப் பால் 33 அதிகாரத்தை உடையது, ஊழ் -ஒரு அதிகாரம் உடையது: பொருட் பால்ள் 70 அதிகாரங்களை உடையது, இன்பத்துப் பால் 25 அதிகாரத்தை உடையது - என திருக்குறல் 133 அதிகாரம் கொண்டது

Thiruvalluvar Poem has Divisions as follows ; Introduction has 4 chapters, Virtue  has 33 chapters, Salvation - has one chapter: Wealth has 70 chapters, Pleasure milk has 25 chapters - Thirukkural has 133 chapters.



-- Edited by Admin on Saturday 20th of May 2023 02:30:27 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard