இந்த விஷயத்தை விவாதிக்க நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.
இந்தியாவில் ஹிந்துக்களுக்கு மூன்று வகையான மாதக் கணக்குகள் வழக்கத்தில் இருக்கின்றன.
1. பௌர்ணமாந்திர சாந்திரமானம். அதாவது பௌர்ணமி அன்று முடியும் மாதம். தேய்பிறை பிரதமையில் புதிய மாதம் துவங்கும்.பழைய காலத்தில் தமிழகம் உட்பட இதுவே வழக்கில் இருந்தது.
இன்றும் பண்டிகைகள் இந்தக் கணக்கின்படியே கொண்டாடப்படுகின்றன.
தமிழ்மாதங்களைத் திங்கள் என்பதும், மாதங்களின் பெயர் சித்திரை, வைகாசி என்று வருவதும் இதனால்தான்.
2. அமாவாஸாந்திர சந்திரமானம்.
இது வளர்பிறை பிரதமையில் இருந்து துவங்கும் மாதம். இது இப்பொழுதும் ஆந்திரா,கர்நாடகா, மகாராஷ்டிரா வில் கடைபாபிடிக்கப்படுகிறது.
இந்த இரண்டுமே சந்திரனைக் கொண்டு கணக்கிடப்படும் மாதங்கள். உத்தேசமாக 360 நாட்கள் கொண்ட வருடங்கள்.
ஆகவே லீப் வருடம் போல லீப் மாதமாக அதி மாசம் என்று சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாதத்தை அதிகமாக சேர்த்துக் கொள்வார்கள்.
3. மூன்றாவது சௌரமானம் எனப்படும் துல்லியமான சூரிய மாதம். இதுவே இப்பொழுது தமிழகத்தில் வழக்கில் உள்ளது.
தமிழகத்தில் ( சேரநாடு) உட்பட சிறப்பாக வழக்கில் இருப்பதால் ஹிந்து சௌரமான மாதத்திற்கு தமிழ் வருடம் என்றே குறிப்பிடப்படுகிறது.
இந்தப் பின்ணணியில் பரிபாடலில் வரும் தைநீராடல் என்ற பாடலைக் காணலாம்.
இந்த தை நீராடல் வரும் பரிபாடல்தான் ஒரு முக்கியமான தகவலை நமக்கு தருகிறது. இந்தப்பாடல் தரும் காட்சி.
அந்தப்பாடலின் ஆசிரியர் ஒரு வானியல் குறிப்பைத் தருகிறார். அன்று சூரியன் பூராட நட்சத்திரத்தில் இருக்கிறது. (அதாவது சூரியன் தனுர் ராசியில் இருக்கும்போது) பெண்கள் அம்பா ஆடல் என்னும் அம்பிகையை வழிபாட்டு தை நீராடல் ஆடுகிறார்கள்.
இந்லப்பாடலில் சூரியன் குளம் என்று தமிழர் கூறும் பூராட நட்சத்திரத்தில் இருந்ததைக் குறிப்பிடுகிறது. பூராட நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுமே தனுசு இராசியில் அமைகின்றன.ஆகவே பரிபாடலின் தைநீராடல் பாடல் தெளிவாக அந்த மாதம் சௌரமான தனுசில் ( தற்போதைய மார்கழியில்) திருவாதிரை நாளில் என்பதால் அந்த மார்கழி மாதம் மிருகசீர்ஷத்தில் முடிந்ததும், தை மாதம் திருவாதிரை அன்று துவங்குவதும் புரிகிறது. ஆகவே இதில் குறிப்பிடப்படும் தை மாதம் பௌர்ணமாந்திர சந்திரமாதம் என்பதையும் உணர்த்துகிறது..
இப்படித் தற்போதைய மார்கழித் திருவாதிரையில் துவங்கிய பழைய தை மாதம், பூச நட்சத்திரத்தில் முடிந்தது. இப்போதைய துலாமாதக் கடைமுழுக்குப் போல தைநீராடலின் கடைமுழுக்காகத் தைப்பூச நீராட்டு இருந்திருக்கிறது. இன்றும் திருவிடைமருதூர் தலத்தில் தைப்பூச காவேரி நீராட்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இப்படி தைமுதல் நாளாக இருந்தத் திருவாதிரை, மார்கழித் திருவாதிரை என்று சம்பந்தர் தேவாரத்தில் குறிப்பிடப்படுவதால் பரிபாடலின் காலத்திற்கும் , திருஞானசம்பந்தர் காலமான ஏழாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பௌர்ணமாந்திர சந்திரமான மாதத்திலிருந்து சௌரமானம் என்னும் சூரியமாதத்திற்கு தமிழகம் மாறியிருக்கிறது.
ஆகவே பரிபாடலின் காலம் திருஞானசம்பந்தர் காலமான ஏழாம் நூற்றாண்டிற்க்கு, சரியாக சொல்வதானால் பொ.யு 620 களுக்கு முன்பு.
மொழியியல் அறிஞரான கமில் ஸ்வபில் பரிபாடல் ஐந்தாம் நூற்றாண்டு என்று சொல்வதம், இந்த வானிலைக் குறிப்பும் ஒத்து வருகிறது.
கீழேயுள்ள இணைப்பில் சென்று அந்தப் பாடலை விளக்கத்துடன் படிக்கலாம்
பதினோராம் பாடல்
வையை
கோள்கள் மழைபெய்தற்குரியநிலையில் அமையக் கார்காலத்தில் சையமலைக்கண்மழைபெய்தது. வையையில் வெள்ளம் மிக்கது.மலையிலுள்ள புன்னையும் கரைகளிலுள்ள சுரபுன்னையும்சண்பகமும் தேற்றாமரமும் வில்வமும் வேங்கைமரமும்காந்தளும் தோன்றியும் நீலமலரும் ஆகிய இவற்றைஅருவியானது கொண்டுவந்து சொரிய அவற்றை அலைகள்தள்ளிக் கொண்டுவந்து திருமருதந்துறைக்கண்ணேதந்தன : அதனால் அத்துறையைப் பூப்பறிக்கும்மக்கள் பல நிறங்கொண்ட மலர்களைக் கொணர்ந்துகுவிக்கும் மலர்மண்டபமென்பேனோ? வையையாகியஅரிவையது ஆடையென்பேனோ? கள்ளைப் பருகும்நிலமகளது மிடறென்பேனோ? இவற்றுள் யாதென்றுஅதனைச் சொல்லுவேன்!
''''பிறை பூர்வபட்சந்தில் வளரஅதன் நிலவு எங்கும் பரந்ததைப் போல வையை நதிஎங்கும் நீரைப் பரப்பி உலகிற்குப் பயன்பட்டது:ஆனால் அபரபக்கத்துச் சந்திரனைப் போலவையையானது வற்றியகாலத்திலும் அஷ்டமிசந்திரனைப்போல ஒரு பகுதி குறைவதையன்றிஅமாவாசையைப்போல முற்றுங் குறைபடுதலைக்காண்பாரில்லை. நெடுந்தூரத்தைக் கடந்துவந்தவையையே! நீ வெள்ளத்தைப்பெற்ற நாளின்புதுவருவாயை இந்த உலகம் பெறுவதோடு வற்றின நாளின்புது வருவாயையும் பெறும்படி இந்நீர் மிகுதி தணிந்துஏகுவாயாக!
''''வையையே! மந்தணமாக இன்புற்றமைந்தரும் மகளிரும் காமச்சிறப்புடையஅக்களவொழுக்கத்தைக் கைவிட்டுத் தாழ்வுடையகற்பொழுக்கத்தை மேற்கொண்டாற்போல நீ நின்பிறந்தகமாகிய மலையைக் கைவிட்டுக் கடலாகியதலைவனது இல்லத்துக்குத் தனியே செல்லுதல்இழிவாகும்; ஆதலின் அங்கே செல்லற்க'''' என்றுகண்டார் சொல்ல வையை நதி வந்தது. தலைவியைக்கைக்கொண்டு படையொடும் சென்ற தலைவனைஅத்தலைவியின் சுற்றத்தார் சுரத்திடையிற்சென்று மறித்துப் பொருதாற்போல மதுரையிலுள்ளமக்கள் இடையே தடை செய்து புகுந்துநீராடுவதற்குரியதாயிற்று அவ்வையைநதி.
அவர்களுட் சிலர்நெட்டியினாலாகிய வாளைச் சுழற்றுவார்: அதனாலாகியஈட்டியை ஏந்துவார்; கொள்ளுவதற்குரியார்கோல்கொள்ளச் சிலர் தேரில் ஏறுவார்:
இளவேனிற் காலத்தில்அவ்வையையகம் தேவருலகத்தில் திரியும்விமானங்களைக் காட்டும் தெளிந்தநீரோட்டத்தையுடையது; அக்காலத்தில்நீராடற்கமைந்த அணிகளை அணிந்த ஆடவர்;மகளிரோடு இன்புறும்பொருட்டுப் பாகோடுகூடியஇளமதுவை நுகர்ந்து களிப்புமிக்குச் செவிநிறையப்பாட்டைக் கேட்டு இன்புறுவர்; அழகாகிய மதுவைஒருவரினொருவர் கண்ணாலுண்பர்.
வையையே! இங்ஙனம் கார்காலத்துக்கலங்கி வேனிற்காலத்துத் தெளிதலால் உன் நிலைமைஎப்பொழுதும் ஒருபடியாயிருப்பதில்லை.
கார்வானம் அதிர்குரல் நீங்கப்பனி மிகுதலாற் குளிரால் நடுங்குதலையுடைய முன்பனிப்பருவத்தில் மார்கழி மாதத்தில் திருவாதிரைநட்சத்திரத்தில் ஆகமங்களை யுணர்ந்த பூசகர்அத்திருவாதிரைக்குத் தெய்வமாகியசிவபெருமானுக்குரிய விழாவைச் செய்யத்தொடங்கினர்; அந்தணர் பொற்கலத்தையேந்தினர்; உலகம் மழையாற் குளிர்வதாக வென்றுஅம்பா வாடலைச் செய்யும் கன்னியர் முதியஅந்தணமகளிர் நோன்பு செய்யும் முறைமையைக்காட்டப் பனியையுடைய விடியற் காலத்தே நீராடினர்;அங்ஙனம் ஆடிய பின்னர் குளிர்வாடை வீசுவதால்அம்மகளிர் கரையில் அந்தணர்வேதமந்திரங்களால் வளர்த்த அக்கினியினருகிற்சென்று தம் ஈர ஆடைகளை உலர்த்தினர். அவ்வந்தணர்அந்த அக்கினியினிடம் கொடுக்கும் அவியானதுவையையே! நினக்கு வாய்த்ததாக இருந்தது.
மையோலை பிடித்த இளையபிள்ளைகளின் விளையாட்டிற்கு மாறாக எழுந்துகாமக்குறிப்பில்லாத விளையாட்டைச் செய்கின்றஆயத்தினையுடைய அக்கன்னிமகளிர் தம்புலன்களையடக்கித் தவத்தைப் பலகாற் செய்தோ தம்தாய்மார்க்கருகில் நின்று தைந்நீராடலாகியதவத்தை நின்பாற் செய்யப் பெற்றனர்?சொல்வாயாக.